தீர்த்தபுரி ஒரு சிறிய ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. நாங்கள் அங்கு சென்ற போது ஆற்றில் நீர் மிகவும் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஆற்றின் கரையில் திபெத்தியர்கள் சிலர் சாஷ்டாங்கமாக விழுந்து, தங்கள் மத சம்பிரதாயத்தின்படி நமஸ்காரப் பிரதட்சணம் செய்து கொண்டிருந்தார்கள்.
இப்படிக் கயிலாய மலையைத்தான் திபெத்தியர்கள் வலம் வருவார்கள் என்று கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் அவர்கள் இப்படி தீர்த்தபுரியையும் நமஸ்காரப் பிரதட்சிணம் செய்து வலம் வந்தது எனக்குப் புதுமையாக இருந்தது. அவர்கள் அவ்விதம் தீர்த்தபுரியை வலம் வரும் காட்சியைப் பார்த்த போது, திபெத்திய மொழியிலுள்ள புராணத்தில் தீர்த்தபுரிக்கு, ஆன்மீக ரீதியில் மிகவும் பெரிய முக்கியத்துவ்ம இருக்க வேண்டும்! என்று நினைத்துக் கொண்டேன்.
திபெத்தியர்கள் சிலர், தீர்த்தபுரியில் ஓடிக் கொண்டிருந்த நதியின் கரையில் ஜபமாலைகளை உருட்டி ஜப்ம செய்தபடியே சென்றுகொண்டிருந்தார்கள். இன்னும் சில திபெத்தியர்கள், தங்கள் கையில் சிறிய பிரார்த்தனைச் சக்கரத்தை சுழற்றி ஜப்ம செய்தபடியே சென்றுகொண்டிருந்தார்கள்.
நாங்கள் சென்ற ஜீப்புகள் தீர்த்தபுரியை நெருங்கிய போதே, அங்கு சுற்றியிருந்த மலைகளில் சில பகுதிகள் சாம்பல் போன்று அல்லது விபூதி போன்று வெண்மையாக இருந்ததைப் பார்த்தோம். பஸ்மாசுரன் தீர்த்தபுரியில் எரிந்து சாம்பலானதால், அவன் எரிந்த சாம்பல், விபூதி போல் தீர்த்தபுரி மலைகளில் ஆங்காங்கே இருப்பதாக ஐதீகம்.
தீர்த்தபுரியை அடைந்ததும் அனைவரும் ஒரு குன்றின் மீது ஏறிச் செல்ல ஆரம்பித்தோம். நாங்கள் ஏறிச் சென்ற பாதை சற்று செங்குத்தாகவும், கற்கள் நிறைந்ததாகவும் இருந்தது. இப்படிப்பட்ட ஒரு பாதை வழியாக நாங்கள் செல்ல வேண்டியிருக்கும் என்று எங்களுக்கு முன்பெ தெரியாது! தெரிந்திருந்தால் குன்றின்மீது ஏறுவதற்கு வசதியாக நாங்கள் எங்களுடைய கைத்தடிகளைத் தார்ச்சனிலிருந்து எடுத்துச் சென்றிருப்போம். கையில் கைத்தடி எடுத்துச் செல்லாததால், குன்றின் மீது ஏறுவதற்கு எங்களில் பலரும் சிறிது சிரமப்பட்டோம்.
குன்றின் மீது ஒரு புத்தர் கோயில் இருக்கிறது. அந்த புத்தர் கோயிலுக்குச் சென்று எல்ளோரும் வழிபட்டோம். அங்குள்ள லாமாக்களைச் சந்தித்து அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். அவர்களுடன் இந்தியாவைச் சேர்ந்த பௌத்த துறவி ஒருவரும் இருந்தார். அவர் நன்கு கல்வி கற்றவர். நன்றாக ஆங்கிலம் பேசக் கூடியவர். அவர் இந்தியாவிலிருந்து வந்து அங்கு தங்கி கடந்த ஆறு மாதமாக ஜப்ம, தியானம் செய்து வருகிறாராம். அவர் அங்கிருக்கும் லாமாக்கள் தரும் சத்துமாவை உட்கொண்டு அவர்களுடன் தங்கி ஆன்மீக சாதனையில் ஈடுபட்டிருக்கிறார். அங்கிருந்த லாமாக்களும் தீர்த்தபுரி தொடர்புடைய பஸ்மாசுரன் கதையை எங்கலிட்ம கூறினார்கள்.
அதன் பின்பு நாங்கள் வேறொரு பாதை வழியாக குன்றின் மேலிருந்து தரை மட்டத்திற்குக் கீழே இறங்கி வந்தோம். இந்தப் பாதை செங்குத்தாக் ஐல்லாமல் ஒரு கார் கூட போக முடியும் என்பதுபோல் சற்ரு அகலமாக இருந்தது. எனவே, நாங்கள் குன்றிலிருந்து இறங்குவதில் ஒரு கஷ்டமும் இல்லாமல் சுலபமாகவே குன்றைவிட்டு சமதளத்திற்கு வந்தோம்.
குன்றின் அடிவாரத்திற்கு வந்ததும், அங்கு ஒரு பகுதியில் பாறையின் அடியில் ஒரு சிறிய வெந்நீர் ஊற்று இருந்தது. சில வழிகாட்டி அந்த வெந்நீர் ஊற்று இருந்த இடத்திற்கு எங்கலை அழைத்துச் சென்று காட்டினார். எங்களில் பலரும் அந்த வெந்நீர் ஊற்று வரும் இடத்தில் கை வைத்துப் பார்த்தனர். அங்கு வந்து கொண்டிருந்த சூடான நீரைத் தங்கள் தலைகளில் தெளித்துக் கொண்டனர்.
தீர்த்தபுரியில் ஆறு பாய்ந்து செல்லும் இடத்தைச் சுற்றிலும் பல குன்றுகள் உள்ளன. இந்தக் குன்றுகளில் திபெத்தியர்கள் தங்கல் வழிபாட்டின் ஓர் அங்கமாகப் பல வண்ணத் துணிகளைப் பெரிய தோரணங்கள் போல் கட்டியிருந்தார்கள். இவ்விதம் தீர்த்தபுரியில் நிறையத் தோரணங்கள் கட்டப்பட்டிருந்ததைப் பார்த்தோம். ஒரு குன்றையும், மற்றொரு குன்றையும் இணைத்தும் கூட நீளமான சில தோரணங்களைக் கட்டியிருந்தார்கள்.
தீர்த்தபுரியிலிருந்து எங்கள் ஜீப்புகள் புறப்பட்ட சுமார் பத்து நிமிடத்தில், “இங்குதான் வெந்நீர் ஊற்று இருக்கிறது, வண்டியை நிறுத்துங்கள்!” என்று அவசர அவசரமாக என்னுடன் இருந்த ஒருவர் கூறினார். அவர் அப்படி கூறிய இடத்தில் நீராவி புகைமண்டலம் மாதிரி வெகு வேகமாகக் கிளம்பி வந்து கொண்டிருந்தது. எங்கள் ஜீப் டிரைவர் வண்டியை நிறுத்தினார். அதைத் தொடர்ந்து வந்த மற்ற ஜீப்புகளும் நின்றன. நாங்கல் நீராவி வந்து கொண்டிருந்த இடத்தை அருகில் சென்று பார்த்தோம். “அங்கு அரிசி வைத்தால் வெந்து விடும்” என்று சொல்லத்தக்க வகையில், தொட்டுப் பார்க்கவே முடியாது என்று சொல்லும் வகையில் அவ்வளவு சூடான நீர் வந்து கொண்டிருந்தது. அதன் நீராவிதான் அங்கு புகைமண்டலம் போன்று குபு குபுவென்று வந்து கொண்டிருந்தது.
அதன்பிறகு தீர்த்தபுரியிலிருந்து புறப்பட்டோம். வழி முழுவதும் எங்களுக்குக் கயிலாயத்தின் காட்ச்சி கிடைத்தபடியே இருந்தது. அப்போது கயிலாயத்தில் அங்கும் இங்கும் பனி சூழ்ந்திருந்தது. அது ஒரு கோட்டையின் மீது கைலாஸ் இருப்பது போல் தோன்றியது. தமிழ்நாட்டில் பல கோயில்களில் மதில் சுவற்றில் பட்டை பட்டையாக நீண்ட சுண்ணாம்புக் கோடும், காவி நிறக்கோடும் அடித்திருப்பதைப் பார்க்கலாம். அது போல் தீர்த்தபுரியிலிருந்து நாங்கள் திரும்பி வந்து கொண்டிருந்த போது – கயிலையில் மிகவும் உயர்ந்த வானளாவிய மதில் சுவரில் வெல்ளைச் சுண்ணாம்புக் கோடுகளும், கருப்புக் கோடுகளும் அமைந்த கோயில் மீது கயிலாயத்தின் மேல் பகுதி தெரிவது போன்ற அரிய காட்சியைப் பார்த்தோம். இவற்றில் வெள்ளைக்கோடு என்பது பனி உறைந்திருந்ததாலும், கருப்புகோடு என்பது பனி இல்லாத கயிலாயத்தின் இயல்பான பாறையாலும் ஏற்பட்ட தோற்றமாகும்.
பின்னர் எங்கள் ஜீப் நாங்கள் தங்கிர்யிருந்த தார்ச்சன் விடுதிக்கு வந்து சேர்ந்தது. மறுநாள் காலையில் நாங்கள் கலாஸ் பரிக்ரமம் செய்ய ஆரம்பிப்பதாக இருந்தோம். அதன் பொருட்டு ஏற்கனவே எங்களை அழியத்துச் செல்ல வேண்டிய திபெத்திய வழிகாட்டியையும் உதவியாளர்களையும் “ரிசர்வ்” செய்திருந்தோம்.
இன்று தீர்த்தபுரி சென்று வந்ததைத் தொடர்ந்து மிகவும் களைத்திருந்தோம். அதனால் ஒருநால், அதாவது ஜூன் 5-ஆம் தேதி தார்ச்சனிலிலேயே தங்கி ஓய்வெடுத்துக் கொள்ள முடிவு செய்தோம். ஆனால் தேவையான போர்ட்டர்கள் கிடைக்காததால் 6-ம் தேதியும் பரிக்ரமாவை ஆரம்பிக்க முடியவில்லை. ஜூன் 7-ம் தேதி காலையில்தான் பரிக்ரமா மேற்கொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டது. எனவே இந்த நாட்களில் அருகிலுள்ள வேறு ஓரிரு இடங்களுக்குச் சென்று வர முடிவு செய்தோம்.
தேவர்களின் பள்ளத்தாக்கு
5.6.98 வெள்ளிக்கிழம தார்ச்சன் விடுதியிலிருந்து 12 கி.மீ தூரத்திலுள்ள தேவர்களின் பள்ளத்தாக்கு என்ற இடத்திற்குச் சென்று பூஜையும், ஹோமமும் செய்வது என்று திட்டமிட்டிருந்தோம். அன்றைய தினம் என் காலில் சுளுக்குப் பிடித்திருந்ததால், நான் தார்ச்சன் விடுதியில் தங்கி விட்டேன். எங்கள் குழுவினர் தேவர்களின் ப்ள்ளத்தாக்கிற்குப் புறப்பட்டுச் சென்றார்கள். பூஜையும், ஹோமமும் முடிந்த பிறகு, பகல் சுமார் ஒரு மணிக்கு தார்ச்சன் விடுதிக்குத் திரும்பி வந்தார்கள். அன்றைய தினம் தேவர்களின் பள்ளத்தாக்கில் நடந்ததைப் பற்றி சுருக்கமாக எங்கள் குழுவைச் சேர்ந்த ஒருவர் என்னிடம் பின்வருமஆறு கூறினார் :
“நாங்கள் இங்கிருந்து ஜீப்பில் புறப்பட்ட அரை மணி நேரத்தில் தேவர்களின் பள்ளத்தாக்கை சென்றடைந்தோம். அங்கு ஓர் இடத்தில் மிகவும் உயரமான ஒரு கம்பம் நடப்பட்டிருந்தது. அதைச் சுற்றிலும் திபெத்தியர்களின் பிரார்த்தனைக் கொடிகள் தோரணங்கள் போன்று பல நிறங்களில் கட்டப்பட்டிருந்தன. அங்கு சென்று கைலாச பரிக்ரமா பாதையில் செல்பவர்கள் அனைவரும் வணங்கி விட்டுச் சென்றார்கள். நாங்களும் அந்தக் கம்பத்தின் அருகில் சென்று வணங்கி விட்டு வந்தோம்.
அங்கு ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே ஹோமம் செய்தோம். நாங்கள் ஹோமம் செய்துகொண்டிருந்த போது அதைத் திபெத்தியர்கள் சிலரும், வெளிநாட்டுக்காரர்கள் சிலரும் ஆச்சரியமாகப் பார்த்தபடியே புகைப்படங்கள் எடுத்தார்கள்.
நாங்கள் அங்கு சென்றபோது ஆகாயத்தில் மேக மூட்டம் இருந்து கொண்டிருந்தது. அதனால் கயிலைநாதனின் மேனி முழுவதையும் மேகம் மூடியிருந்தது. ஆனால் ஹோமம் செய்து கொண்டிருந்த போது கயிலாயத்தில் மேகமூட்டம் விலகியது. அது கைலாஸ்பதி. பாதி கண்கள் மூடிய யோக நிலையிலிருந்து எங்களைப் பார்த்து ஆசீர்வதிப்பது போன்று இருந்தது. ஹோமம் முடிந்ததும் அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் வடை, பாயாசம், உலர்ந்த பழங்கள், விபூதி பிரசாதம் போன்றவற்ரை விநியோகித்தோம்.
6.6.1986 சனிக்கிழமை. மறுநாள் எங்கள் கைலாஸ் பரிக்ரமாவிற்கான சில ஏற்பாடுகளை நாங்கள் செய்து கொண்டோம்.
பொதுவாக கைலாச யாத்திரை வருபவர்களில் பலர் வாடகைக்கு யாக் என்னும் காட்டெருமையை வைத்துக் கொண்டு பரிக்ரமா செய்வது வழக்கம். ஆனால் விதி விலக்கான இந்த ஆண்டு இங்கு குளிர் வழக்கத்திற்கும் அதிகமாக இருந்தது. அதனால் இந்த ஆண்டு சில யாக்குகல் குலீர் – பனி காரணமாக இறந்தும் விட்டன. அவ்விதம் இறந்து போன யாக்குகளைச் சமீபத்தில் தொலைக்காட்சியிலும் காட்டினார்கள். இந்த ஆண்டு யாக் வைத்திருப்பவர்கள் யாக்கிற்கு ஏதாவது அடிபட்டால் அல்லது உயிர்சேதம் ஏற்பட்டால் யாக்கின் முழுத் தொகையையும் சம்பந்தப்பட்ட யாதிரிகர் கொடுக்க வெண்டும் என்று யாத்திரிகள் அக்ரிமெண்ட் போட்டுக் கொள்ள சம்மதித்தால், யாக் உரிமையாளர்கள் யாத்திரிகர்களுக்கு யாக்கை வாடகைக்குக் கொடுப்பார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டோம்.
இந்திய அரசு மூலம் கைலாச யாத்திரை செல்பவர்கல் நான்கு பக்கங்கள் கொண்ட பத்திரம் எழுதித்தர வேண்டும். மறுநாள் நாங்கள் கைலாஸ் பரிக்ரமம் செய்ய இருந்ததால், எங்கள் குழுவினர் ஒவ்வொருவரிடமும் பத்திரம் எழுதி வாங்கிக் கொள்வது எதற்கும் பாதுகாப்பானது என்று எனக்குத் தோன்றியது. அதற்கேற்ப எங்கள் குழுவைச் சேர்ந்த ஒவ்வொருவரும் அவரவர்களின் பெயர், ஊர் போன்ற வினாக்களுக்கு ஏற்ப ஒப்புதல் எழுதிக் கொடுத்தனர்.