சத்ய சாய் – 19

55. அதீத அற்புதங்கள்

னித சக்திக்கு அதீதமானவைதான் ஸ்வாமி புரியும் எந்த அற்புதமுமே. ஆயினும், “இயற்கைச் சக்திகளின் மேல், பஞ்ச பூதங்களின் மேல் இப்படியோர் ஆதிக்கமா?”, “சயன்ஸ் பதில் சொல்ல முடியாமல் வாயடைத்துப் போகும்படி இப்படியும் ஒரு சாஹஸமா?”, “தேவதைக் கதை போல இப்படியும் ஒரு விசித்ரமா?” என்று விசேஷமாக வியக்குமாறு சில ஸாயியற்புதங்கள் உள்ளன. நமக்கு விசேஷ வியப்பாயிருந்தாலும் அவர் என்னவோ லேசான விளையாட்டாகவே செய்து விடுகிறார்! ஏன், நமக்குக்கூட பிற்பாடு யோசிக்கையில் அவ்வத்புதங்கள் விசேஷ வியப்பாகத் தெரிந்தாலும், அவை நடக்கும்போது அப்படித் தெரியாதபடி கள்ளத்தனம் செய்து விடுகிறார்!

தோடா தோடாஸாம்பிள் பார்ப்போம்.

***

1983 வேனிற் பருவம். புட்டபர்த்தியில் நாளுக்கு நாள் வெயில் உக்ரமாகிக்கொண்டு வந்தது. கல்லூரியின் ஏனைய வகுப்புக்களுக்குப் பரீக்ஷை முடிந்து மாணவர்கள் ஊருக்குச் சென்றுவிட, பட்ட முதல் வகுப்பு, பி.ஜி. மாணவர்கள் மட்டும் பரீக்ஷையாகாமல் இருந்தனர்.

ஏப்ரல் கடைசியில் ஒரு நாள். இவர்களுக்கு இன்னும் பத்து நாட்களுக்கப்புறம் பரீக்ஷை. “நன்றாக வறுத்தெடுக்கப் போகிறது. எப்படி புத்தி வறளாமல், உடம்பும் தாக்குப் பிடித்துப் படித்துப் பரீக்ஷை எழுதப் போகிறோமோ?” என்று பசங்கள் பயந்தபடி மந்திர் வராந்தாவில் அமர்ந்திருந்தனர். மந்திரர் வந்தார்.

எப்போஎக்ஸாம்’?” என்று தம் குளு குளுகாட்ச்குரலில் கேட்டார்.

மே ஒன்பதிலிருந்து, ஸ்வாமி!”

! அப்போஜில்னு இருக்குமே!” – ஜில்லென நகர்ந்தார் ஸ்வாமி.

மே எட்டாந்தேதிவரை அவரதுஜோஸ்யம்பலிக்கும் தோது ஏதும் காணோம். எட்டாந்தேதி அந்த ஜில் ஸ்வரூபக் குளுகுளுக்காரரும்டாடாகாட்டி ஒய்ட்ஃபீல்ட் புறப்பட, பசங்களுக்குச் சுண்ணாம்புக் காளவாயில்தான் விழப்போகிறோமென்ற எண்ணம் உண்டாயிற்று.

ஆனால் அன்றே மாலை! கருமேகங்கள் திடுமெனப் புட்டபர்த்திக்கு விஜயம் புரியலாயின. அப்புறம் அடர்ந்தன. இரவு முழுதும் கொட்டின.

மறுநாள், 9-ந் தேதி, நிஜமாகவே ஒரே ஜில்!

பரீக்ஷை முடியும்வரை அப்படியே ஊர் முழுதையும் மித சீதமாக .ஸி. செய்து வைத்தார் தண்ணிதயர்! ஏரைஅவர் இன்னொரு விதத்தில்கன்டிஷன்செய்ததை அடுத்த அத்யாயமாகத் தனியே பார்ப்போம்.

***

எத்தனை பேருக்கு அவர்கள் வாழ்க்கையில் பல்லாண்டுகளுக்குப் பின் நடக்கப்போகும் நிகழ்ச்சியை அல்லது நிகழ்ச்சிகளைச் சின்ன விவரமும் விடாமல் கனவில் காட்டியிருக்கிறார்! இறந்த கால விஷயங்களை நன்கு கூறும் ஜ்யோதிஷர், நாடிக்காரர்களில் எவர் இப்படி எதிர்காலம் கூறியதுண்டு? இவரோ கூற மட்டுமா செய்கிறார்? ஸினிமாவாகக் கண்முன் காட்டுகிறார்! குறிப்பாக, சிலருக்கு நடக்கவிருக்கும் ஆபரேஷன்களைடீடெய்ல்தப்பாமல் முற்காட்டுவதைச் சொல்ல வேண்டும்.

***

மக்கு முன்னமே அறிமுகமான ஞானசோதியின் கணவர் குணசிங்கம் ஜாம்ஷெட்பூரில் ஸாயி பக்தர்களுக்கு வேலை கொடுத்து அவர்களைக் கொண்டே ஒரு பெரிய ஸைகிள் ஸ்டான்ட் நிர்மாணித்தார். அதில் கம்புகளைத் திருகாணி கொண்டுச் சொருக அடித்தளப் பட்டைகளில் 16 மில்லி மீட்டர் விட்டமுள்ள துளைகள் போட்டனர். அவசரமாக வேலை முடித்தாக வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அந்த கெடுபிடியில்தான் ஒரு மாலை நேரத்தில் துளைகளில் கம்புகளை முடுக்க வேண்டிய திருகாணிகள் வந்தன. ஆனால் அவை 19 மில்லி மீட்டர் பரிமாண முள்ளவையாக இருந்தன. 16 மி.மீ. துளைக்குள் 19 மி.மீ ஆணி எப்படிப் போகும்?

இதென்ன கஷ்டம்?’ என்று குணசிங்கம் வேதனை கொண்டார்.

அப்போது தொழிலாளர்கள் அங்கில்லை. மறுநாள் காலை அவர்களுக்குப்பிரச்னைப் பிரஸாதம்கொடுப்போமென்று எண்ணி குணசிங்கம் வீடு சென்றார்.

ஸாயியிடம் கசிந்து வேண்டினார். “உன்னடி யாருக்கு வேலை கொடுத்தே தொழில் ஏற்படுத்தினேன். கெடுவில் வேலை முடிக்காமல் அவமானப்பட விடாதே அப்பா!” என முறையிட்டவர், “இது உன் பணி. என்ன செய்வாயோ செய்துகொள்என்று உறங்கி விட்டார்.

உறக்கத்தில் அபயம் காட்டிக் கனாவோ, வேறு சங்கேதமோ வரவில்லை.

மறுநாள் காலை குணசிங்கம்ஸ்பாட்டுக்குக் கிளம்பினார். வழியில் பல தடங்கல்கள் ஏற்பட்டு, விரும்பியதற்கு மாறாக மிகவும் லேட்டாக அங்கு சென்றார்.

அங்கே அவர் கண்ட காட்சி!

கம்புகள் யாவும் திருகாணிகளால் அடித்தளப் பட்டைகளின் துளைகளில் கன கச்சிதமாகச் சொருகப்பட்டு ஸ்டாண்ட் கனகம்பீரமாக உருக்கொண்டிருந்தது.

தொழிலாளிகள் ஏதும் அற்புதம் நடப்பதாக அறியாமலே ஆணிகளைச் சொருகி முடுக்கியுள்ளனர்!

குணசிங்கம் அவ்வாணிகளை நன்றாகச் சோதித்துப் பார்த்தார். ஐயமேயில்லை! முன் மாலை வந்திறங்கிய 19 மி.மீ. விட்டமுள்ளவைதாம்!

பதினாறில் பத்தொன்பது எப்படிப் போகும்? கணித சாஸ்திரம் இங்கே என்ன பதில் சொல்கிறது நம் அகணித மஹிமனுக்கு?

***

ஸுதர்சன மந்திரத் தொடர்பாக நாம் கண்டுள்ள கர்னல் ஆர்.என். ஐயர் அதுபோன்ற ஆத்மாநுபவ அற்புதம் பல பாபாவிடம் கண்டிருப்பவர். அவர் விஷயமாக பௌதிக சாஸ்திரத்தை வாயடைக்கச் செய்யும் ஒன்று:

அவர் கிணற்றில் நீர் சேந்திக் கொண்டிருந்தார். திடுமென மார்பை வலித்தது. பக்கெட்டை இழுக்க முடியவில்லை. ஆயினும் தொப்பென விட்டுவிடாமல்ஸாயிராம்சொல்லிக்கொண்டு இழுத்துப் பார்த்தார். என்ன ஆச்சர்யம்! ‘பக்கெட்டிலிருந்த ஜலம் முழுதும் தானாகவே கொட்டிக்கொண்டு காலி பக்கெட் மட்டும் வருகிறதா? அல்லது பக்கெட்டுங்கூட நழுவி விழுந்து வெறும் கயிறு மட்டும் வருகிறதா?’ என அவர் வியக்கும் வண்ணம் லேசிலும் லேசாகி நொடியிலே நீர் நிறைந்த பக்கெட் கைக்கெட்ட வந்து விட்டது!

நீருக்குள் இழுபடும்போது ஒரு பண்டத்தின் கனம் குறைவதாகவே பௌதிக விதி. அதை விடவும் நீருக்கு வெளியே வந்த பிறகு கனம் குறைகிறதென்றால்?

பௌதிக விதியின் முறியடிப்புக்கு இன்னொரு அதீத சான்று ஓர் அத்தியாயம் தள்ளிப் பார்ப்போம்.

56. அருட்புயல்!

நாதன் என்றழைக்கப்படும் ஸ்ரீ வைத்யநாதன் பெரம்பூர் .ஸி. எஃப்ல் உயர் பதவியிலிருந்த சமயம். அதாவது, எழுபதுகளின் தொடக்க காலம். அவர்களுக்கு ப்ரெஸ்டீஜ் மிக்க ஒரு கான்ட்ராக்ட் வந்தது: ஜப்பானுக்கும் கொரியாவுக்கும் 130 ரயில் பெட்டிகள் உற்பத்தி செய்து அனுப்ப வேண்டும்.

பெருமையோடு கான்ட்ராக்டை ஏற்று வேலை தொடங்கினார் வைத்யநாதன். ஆனால் சோதனை போல் அடுத்தடுத்து எத்தனை தடைகள் ஏற்பட்டன? முதலில் இவர்களது ஃபாக்டரியிலேயே வேலை நிறுத்த பயமுறுத்தல் வந்து பணி தாமதமாயிற்று. அப்புறம் கல்கத்தாவிலிருந்து கப்பலில் இறக்குமதி செய்துகொள்ள வேண்டியவற்றைச் செய்துகொள்ள முடியாமல் அந்தத் துறைமுகத்தில் வேலை நிறுத்தம், வெளிநாடுகளிலிருந்து பகுதிகள் வரவழைப்பதிலும் என்னவெல்லாமோ இடையூறுகள். கொடுத்த கெடுவில் ஸப்ளை செய்ய முடியாது என்ற அவமான கரமான சூழ்நிலை கிட்டி முட்டி வந்து விட்டது. அவமானம் ஒரு தனி மனிதருக்கல்ல, பாரத அரசின் ஒரு பெரும் நிறுவனத்துக்காகும்.

ஜப்பானிலிருந்தோ எஞ்ஜீனியர், பெட்டி பெருமளவு தயாராயிருக்குமென்ற நம்பிக்கையில் அதன் தரத்தைப் பரீக்ஷிப்பதற்காக வந்து சேர்ந்து விட்டார். அவர் ஆலைக்குள் வந்து அவகதியைப் பாராமலிருக்க அதிகாரிகள் செய்த சாமர்த்தியமுண்டே! இந்தத் தனி மனிதரைச் சமாளித்தது போலச் செய்வதற்கின்றி அடுத்து வந்தது இன்னொரு செய்தி, உற்பத்தியான பெட்டிகளை ஜப்பானுக்கு எடுத்துச் செல்வதற்கான கப்பலே பம்பாயை விட்டுப் புறப்பட்டு விட்டதாம்! எட்டு நாளில் சென்னை வந்துவிடுமாம்! மாபெரும் பாரத அரசு நிறுவனங்களில் ஒன்று, அன்றுவரை தொழில் நேர்த்திக்குப் பெயரெடுத்த ஒன்று, உலக நாடுகளின் எதிரில் அவமானப்படவா?

மான ரக்ஷக ஸாயி மனம் வைத்தாலன்றி பிரச்னைக்குத் தீர்வில்லையென வைத்யநாதன் கருதினார். அன்பரொருவர் மூலம் ஸாயிக்கு முறையீட்டு மடல் அனுப்பினார்.

மகளிர் கல்லூரித் திறப்பையொட்டி ஸ்வாமி அப்போது, அதாவது 1971 மத்தியில், அனந்தப்பூரிலிருந்தார். மடலோடு சென்ற அன்பர், ஸ்வாமி தங்கியிருந்த இடத்தில் வேறு இறுபது இருபத்தைந்து பக்தரோடு நின்றிருந்தார்.

ஸ்வாமி வெளியே வந்தார். அவர் கையிலே ஒரு கைக்குட்டை இருந்தது. பார்க்கிறவர்களுக்கு விசித்ரமாக ஸ்வாமி அப்போது ஒன்று செய்தார்: அந்தக் கைக்குட்டையில் ஒன்று, இரண்டு, மூன்று என்று முடிச்சுகள் போட்டபடியே நடந்து வந்தார். நம் அன்பரின் நேரே வந்தபோது நான்காம் முடிச்சைப் போட்டார். காப்பு மாங்கல்யத்துக்கு மூன்று முடிச்சல்ல: நாலு போலும்!

அன்பரை நேரே பார்த்தார் அன்புருவர்.

நாதன் ஏன்ஒர்ரிபண்ணிக்கறாரு? அவரோடப்ராப்ளம்எல்லாம் இந்த மாதிரிஸால்வ்ஆயிடும்என்று அன்பரிடம் அன்புருவர் கூறி, “எந்த மாதிரிஎன்று காட்டினார். அதாவது, கைக்குட்டையின் இரு எதிர்முனைகளைப் பிடித்து எதிர்த் திசைகளில் இழுத்தார். க்ஷணத்தில் அத்தனை முடிச்சுக்களும் அவிழ்ந்தன!

என்ன கவிதா நாடகம் காட்டியிருக்கிறார்!

தொடர்ந்து சொன்னார்: “ஜப்பான்காரங்களோட ஷிப் பம்பாய்லே கௌம்பிடுத்தேன்னு நாதன் பயப்படறாரு. இல்லே? அவர்கிட்டே சொல்லுங்கோ, பெரம்பூர்லே கோச் எல்லாம் ரெடியான அப்பறந்தான் அந்தக் கப்பல் மெட்ராஸ் ஹார்பர் வந்து சேரும்னு.”

அதன்பின் நடந்த அற்புதம்!

கடல் வயிறு கலக்கினையே!” என்று க்ஷரஸாகரம் கடைந்த திருமாலை இளங்கோ பாடினார். பாரதத்தின் மானம் காப்பதற்காக நம் ஸ்வாமி லவண ஸாகரமான கடலை ஒரு புயற்காற்று கொண்டு கடைந்தார்! அதனால் கப்பலின் கதி தாமதமாயிற்று. கொச்சிக்கருகே அது புயலில் சிக்குண்டு ரிப்பேருக்காகக் கொழும்பு செல்ல நேர்ந்தது! ஒரு வழியாக ரிப்பேர் முடிந்து சென்னையடைந்தபோது, இங்கு துறைமுகத்தில் ஏராளமான கப்பல்கள் சேர்ந்து விட்டதால், அதற்குஎன்ட்ரிகொடுக்காமல் சில பல நாள்கள் நிறுத்தி வைத்தனர்.

இப்படியாகத்தானே, “பெரம்பூர்லே கோச் எல்லாம் ரெடியான அப்பறந்தான் அந்தக் கப்பல் மெட்ராஸ் ஹார்பர் வந்து சேர்ந்தது.”

சிறுமூர்த்தி ஸாயி இயற்கையை ஆளும் திறனால் காற்றுக் கடவுளை ஏவி அதாவது, சென்ற அத்தியாயத்தில் கூறியது போலஏரைக்கன்டிஷன்போட்டு இயக்கி, கடற் புயலை உருவாக்கிக் கப்பலைத் தாமதிக்க வைத்து, நம் மானம் காற்றிலே பறக்காமலும் கப்பலேறாமலும் காத்து அருளினார்!

57. சரிவிலும் சரியாத அருள்முட்டு!

வருஷங்களுக்கு முன்னால் கே.எஸ். ராம மூர்த்தி குண்டக்கல்லுக்கும் நந்தியாலுக்கும் இடையே உள்ள புக்கனபல்லியில் ஸ்டேஷன் மாஸ்டராயிருந்தார்.

ஒருநாள் அவருடைய மேஜையின் மேல் நம் பர்த்தி பாபாவைப் பற்றிய ஒரு புஸ்தகம் காணப்பட்டது. எவரோ மறந்து போய் விட்டுச் சென்ற புஸ்தகம் போலும்! ஏற்கெனவே ஷீர்டி பாபாவின் பக்தரான கே.எஸ்.ஆர், தானாக வந்த புஸ்தகத்தை ஆர்வமுடன் படித்தார். அதைப் படித்துக்கொண்டிருக்கும்போதே பர்த்தி பாபாவிடம் ஷீர்டி நாதரின் தெய்வ சக்திக்கு ஏதேனும் சான்று பிரத்யக்ஷமாய் கிடைக்க வேண்டுமென எண்ணினார்.

அப்போது ஒருநாள் ஷன்டிங்கின் போது ஒரு பயங்கரம் நிகழ்ந்தது. குட்ஸ் வாகன் ஒன்று எப்படியோ தானாக வண்டித் தொடரிலிருந்து பிய்த்துக்கொண்டு, செல்லக் கூடாத ஓர் இருப்புப் பாதையில் ஓட ஆரம்பித்தது. அந்த இடம் சரிவாகவுமிருந்ததால் வாகனுக்கு அஸுரத் தனமாக ஸ்பீட் எடுத்து விட்டது. அதை நிறுத்த ஒரு வழியும் கே.எஸ்.ஆர் காணவில்லை. வாகன் எவ்வளவு தூரம் சென்று எதிலே மோதி என்ன உத்பாதம் செய்து விடுமோ? கவனக் குறைவுக்காகக் கே.எஸ்.ஆருக்குச் சீட்டுக் கிழிக்கப்படும்சொந்தஉத்பாதமும் வேறு!

ஒருவழியும் காணவில்லையா? அப்படியில்லை. ‘ஒரு வேளை இது வழியாயிருந்தாலும் இருக்கட்டுமேஎன்று அப்போது கே.எஸ்.ஆர் ஒன்று செய்தார். தாம் படிக்கும் புஸ்தகத்தின் நாயகரிடம் வேண்டினார். “உங்களை நான் ஷீர்டியவதாரமாகவே உணர்ந்து பூர்ணமாக விச்வஸிப்பதற்காக உங்களது தெய்வ சக்திக்குச் சான்று கேட்டேனே! இப்போது இந்த வாகனை நிறுத்தி என்னை அப்படிப்பட்ட மெய்யடியாராக்கிக் கொள்வீர்களா?”

வேண்டுதல் நிறைவேறி விட்டது! ஷீர்டிநாதரின் தெய்வ சக்தியைப் பர்த்தியார் காட்டிவிட்டார்!

வாகன் நின்றே விட்டது, அதுவும் மிகச் சரிவான ஒரு பகுதியிலே!

ஸ்டேஷன் மாஸ்டர் சான்று பெற்றுவிட்டார். அதோடு பேராபத்திலிருந்து தப்பிய பெரு நிம்மதியும் பெற்றார்.

இன்ஸ்பெக்டர் மூக்கின் மேல் விரல் வைத்தார். “இந்த க்ரேடியண்டில் ஏதாவது பெரிய முட்டுக் கொடுத்தால்கூட அதை வாகன் அடித்துத் தள்ளிக் கொண்டுதான் ஓடும். அப்படியிருக்க கனவேகத்தில் வந்த அது எப்படித் தானாக இப்படிச் சாய்ந்து நின்றது?” என்று வியந்தார். அதுஸாய்ந்து நிற்பது அவருக்கெப்படித் தெரியும்?

பௌதிக சாஸ்திரம் எத்தனை முட்டிக் கொண்டாலும் எங்கள் அப்பன் பிரபாவம் அதற்குப் புரியாது. பௌதிகத்தையே மதமாக ஓதியவர்கள் எத்தனையோ முட்டுப் போடப் பார்த்தும், அந்த முட்டுக் கட்டை வாதங்களை அடித்துத் தள்ளிக்கொண்டு அவனது அருளற்புத ஆற்றல் க்ரேடியன்ட் வாகனாக வேகம் கூடிக் கொண்டேதானிருக்கிறது!