தமிழ்நாடு – 102

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள்

பக்திபண்ணுவதற்குப்பாவனைஅவசியம், அந்தப்பாவனைஎத்தனைஎத்தனையோவகையில்அமைதல்கூடும். அப்படிப்பாவனைசெய்வதில்நான்குபாவனைகள்முக்கியமானவை. இறைவனைத்தனயனாகப்பாவனைபண்ணிப்பக்திசெலுத்துவதுஒருமுறை. அதுவேவாத்சல்யபக்திஎனப்படும்இறைவனைஆண்டானாகப்பாவனைபண்ணிஅவனதுதாஸனாகமாறிச்சேவைசெய்வதுஒருமுறை. அதுவேதாஸ்யபக்தி. இறைவனைஅருமைத்தோழனாகவேகொண்டுஅவனோடுநெருங்கிஉறவாடிப்பக்திப்பண்ணுவதுஒருமுறை. இதனையேஸக்யபக்திஎன்பர். எல்லாவற்றுக்கும்மேலாகஇறைவனையேகாதலனாகப்பாவனைபண்ணிஅவனிடத்தில்காதலைச்செலுத்திவழிபடுவது, இதனையேமதுரபக்திஎன்பர். இந்தமதுரபக்தியிலேபலமாதர்கள்தமிழ்நாட்டில்திளைத்திருக்கிறார்கள். பாடல்கள்பாடித்தங்களதுபக்திஅனுபவத்தைஎல்லாம்வெளியிட்டிருக்கிறார்கள். என்றாலும்வெறும்பாவனையோடுநிற்காமல், இறைவனாம்பரந்தாமனையேகாதலனாகவரித்துஅவனையேமணாளனாகப்பெற்றுப்பெருமையுற்றவள்ஆண்டாள். அந்தஆண்டாள்பிறந்துவளர்ந்தஇடம்தான்ஸ்ரீவில்லிப்புத்தூர். அந்தஸ்ரீவில்லிப்புத்தூருக்கேசெல்கிறோம்நாம்இன்று.

ஸ்ரீவில்லிப்புத்தூர்தென்காசிவிருதுநகர்ரயில்பாதையில்உள்ளஊர். ஆதலால்ரயிலில்செல்வோர்எளிதாகஅவ்வூர்சென்றுசேரலாம், மோட்டாரில்மதுரையிலிருந்துதிருமங்கலம்வந்துஅங்கிருந்துராஜபாளையம்செல்லும்ரோட்டில்சென்றாலும்சென்றுசேரலாம். அந்தத்தலத்துக்குநான்குபக்கங்களிலிருந்தும்நல்லரோடும்பஸ்வசதியும்உண்டு. ஊர்சென்றுசேர்ந்ததும், கோயிலுக்குச்செல்லுமுன்இந்தஊருக்குவில்லிப்புத்தூர்என்றுபெயர்வருவானேன்என்பதைக்கொஞ்சம்தெரிந்துகொள்ளலாமே.

ஒருகாலத்தில்இந்தவட்டாரம்முழுதும்செண்பகவனமாகஇருந்திருக்கிறது. அங்குஇரண்டுமுனிவர்கள், இறைவனதுசாபத்தால்வேடர்களாகப்பிறந்துவாழ்கிறார்கள். இவர்களில்ஒருவன்பெயர்லில்லி, இன்னொருவன்பெயர்கண்டன். இளையவனானகண்டன்வேட்டைக்குச்சென்றஇடத்தில்ஒருபுலியால்கொல்லப்படுகிறான். இதனால்வில்லிமனம்உடைந்துவாழும்போது, பரந்தாமன்வில்லியினதுகனவில்தோன்றி, ‘நீஇந்தக்காட்டைஅழித்துஇதனைஒருநகரம்ஆக்கு. பாண்டீ, சோழநாடுகளிலுள்ளஅந்தணர்களைக்கொண்டுவந்துகுடியேற்றுஎன்றுசொல்கிறார். அதன்படியேவில்லிகாடுதிருத்திநாடாக்கியநகரம்தான்வில்லிப்புத்தூர்.

அந்தவில்லிப்புத்தூரில்கோயில்கொண்டிருப்பவர்தான்வடபத்திரசாயி, ஆண்டாள்முதலியோர். கோயில்அமைப்பிலேமுன்நிற்பதுவடபத்திரசயனர்கோயில்தான். பெரியகோபுரம்இருப்பதும்அந்தக்கோயிலுக்குத்தான்என்றாலும்இத்தலத்தில்முக்கியத்துவம்எல்லாம்ஆண்டாள்திருக்கோயிலுக்குத்தான். ஆதலால்நாமும்முதலில்ஆண்டாள்கோயிலுக்குச்சென்றுஆண்டாளைவணங்கிவிட்டுஅதன்பின்வடபத்திரசயனரைவணங்கலாம். ஆண்டாள்கோயில்ரோட்டைவிட்டுக்கொஞ்சம்உ.ள்ளடங்கியேஇருக்கும். அந்தக்கோயில்வாயிலில்முதன்முதல்இருப்பதுபந்தல்மண்டபம். இதனைக்கடந்துஉள்ளேசென்றால்இடதுகைப்பக்கம்கல்யாணமண்டபம். இதற்குஅடுத்தாற்போல்இடைநிலைக்கோபுரம், இதனைக்கடந்துதான்ஒருவெளிப்பிராகாரம்இருக்கும். இங்குதான். ராமனுக்கும்ஸ்ரீனிவாசனுக்கும்சந்நிதிகள்இருக்கின்றன, வேறுமுக்கியமாகப்பார்க்கவேண்டியவைஒன்றும்இல்னல, ஆதலால்இடைநிலைக்கோபுரத்தைஅடுத்ததுவஜஸ்தம்பத்தின்வழியாகவேகோயில்உட்பிராகாரத்தக்குச்செல்லலாம். இந்தத்துவஜஸ்தம்பமண்டபத்திலேதான்பலசிற்பவடிவங்கள்இருக்கின்றன. அவற்றையெல்லாம்பின்னால்பார்த்துக்கொள்ளலாம். உள்பிரகாரம்சென்றதும்நம்முன்இருப்பதுமாதவிப்பந்தல், அந்தப்பிராகாரத்தைச்சுற்றிலும்அங்குநூற்றெட்டுத்திருப்பதிகளில்உள்ளபெருமாள்நமக்குக்காட்சிகொடுப்பார். ஆம்! சுவரில்உள்ளசித்திரவடிவில்தான், ‘இரண்டுவருஷங்களுக்குமுன்அந்தச்சித்திரங்களைப்புதுப்பித்துஎழுதத்திட்டமிட்டுவேலைநடந்துகொண்டிருந்தது. பூர்த்தியாகிவிட்டதோஎன்னவோ?

மாதவிப்பந்தல், மணிமண்டபம், ஆண்டாள்சுக்கிரவாரக்குறடுஎல்லாம்கடந்துதான்அர்த்தமண்டடம்வரவேண்டும். அதற்குஅடுத்ததேகருவறை. அந்தக்கருவறையினுள்ளேதான்ஆண்டாள், ரங்கமன்னார், பெரியதிருவடிமூவரும்சேவைசாதிக்கிறார்கள். நடுவில்ரங்கமன்னார். அவரதுவலப்பக்கத்தில்ஆண்டாள். இடப்பக்கத்தில்பெரியதிருவடியாம்கருடாழ்வார்எழுந்தருளியிருக்கிறார்கள். ரங்கநாதர்திருமணக்கோலத்தோடுகூடியராஜகோலத்தில்ராஜகோபாலனாகக்கையில்செங்கோல்ஏந்திநிற்கிறார். ஆண்டாளோசர்வாலங்காரபூஷிதையாய்அவர்பக்கலில்நிற்கிறாள். மற்றக்கோயில்களில்எல்லாம்பெருமாளுக்குஎதிரேநின்றுசேவைசாதிக்கிறகருடாழ்வார்இங்குமட்டும்ரங்கநாதர்பக்கத்திலேயேஏகாங்கியாய்எழுந்தருளியிருப்பானேன்என்றுகேட்கத்தோன்றும்நமக்கு. ஆண்டாளைமணம்புரியவந்தரங்கநாதரைஅவசரம்அவசரமாகக்காற்றினும்கடுகிக்கொண்டுவந்துசேர்த்தவர்அல்லவாஅவர்! அதற்காகவேஇந்தநிலைவாய்த்திருக்கிறதுஅவருக்கும். மூலவிக்கிரகங்களுக்குமுன்னாலேதங்கஸ்தாபனகோபாலமஞ்சத்தில்உற்சவமூர்த்திகளாகவும்மூவரும்எழுந்தருளியிருக்கிறார்கள், இந்தமூர்த்திகளைத்தரிசிக்கும்போதே, ஆண்டாள்பிரபாவத்தையும்கொஞ்சம்தெரிந்துகொள்ளலாம்நாம்.

ஸ்ரீவில்லிப்புத்தூரில்விஷ்ணுசித்தர்என்னும்பெரியாழ்வார்திருத்துழாய்கைங்கரியம்செய்துவந்திருக்கிறார். ஒருநாள்அவர்நந்தவனத்தில்திருத்துழாய்மரத்தடியில்ஒருபெண்குழந்தைகிடப்பதைக்கண்டுஎடுத்துவந்துஅவரதுமனைவியான

ஸ்ரீவில்லிப்புத்தூர்ஆண்டாள்

விரலஜயிடம்கொடுக்கிறார். குழந்தைக்குக்கோதைஎன்னபெயரிட்டுஅன்போடுவளர்க்கின்றனர். கோதையும்தன்தோழியருடன்எல்லாம்களிப்புடன்லிளையாடிமகிழ்கிறாள். ஒருநாள்லிஷ்ணுசித்தர்பெருமாளுக்குஎன்றுதொடுத்திருந்தபூமாலையைத்தன்கூந்தலிலேசூட்டிஅழகுபார்க்கிறாள். பின்னர்மாலையைகளைந்துவைத்துவிடுகிறாள். அவள்சூடிக்களைந்தமாலைபின்னர்பெருமாளுக்குஅணியப்பட்டிருக்கிறது. இப்படியேநடக்கிறதுபலநாட்களும்.

ஒருநாள்விஷ்ணுசித்தர்கோதைமாலைசூடிஅழகுபார்க்கும்போதுகண்டுவிடுகிறார். இதற்காகமகளைக்கோபித்துவிட்டுஅன்றுபெருமாளுக்குமாலைசாத்தாமலேயேஇருந்துவிடுகிறார். ஆனால்பெருமாளோஇரவில்அவரதுகனவில்தோன்றி, கோதைசூடிக்கொடுத்தமாலைகளேஎனக்குஉகந்தமாலைகள், அவளேஎன்ஆண்டாள்என்றுசொல்கிறார். விஷ்ணுசித்தராம்பெரியாழ்வாருக்கோஒரேமகிழ்ச்சி. அதுமுதல்ஆண்டாள்சூடிக்கொடுத்தமாலைகளையேபெருமாளுக்குஅணிவிக்கிறார். இப்படிபூமாலைசூடிக்கொடுத்தசுடர்க்கொடிபாமாலைகள்சாத்தவும்முற்படுகிறாள். வளர்ந்துபருவமங்கையானதும்தன்காதலனாகபெருமாளையேவரிக்கிறாள். ‘மாலிருஞ்சோலைஎம்மாயற்குஅல்லால்மற்றொருவர்க்குஎன்னைப்பேசஒட்டேன்என்றுசாதிக்கிறாள், ‘மத்தளம்கொட்டவரிசங்கம்நின்றூதமுத்துடைத்தாமம்முறைதாழ்ந்தபந்தற்கீழ், மைத்துனன்நம்பிமதுசூதன்வந்துகைத்தலம்பற்றிமணமாலைசூட்டக்கனாக்காண்கிறாள்.

இப்படிஇவள்சொல்லிக்கொண்டிருக்கிறாளேஎன்றுபெரியாழ்வார்கவலையடைய, ஆழ்வாரதுகனவிலேதிருவரங்கச்செல்வனேவந்துகோதையைத்திருவரங்கம்அழைத்துவரவேண்டும்என்றும், அங்குதாமேஅவளைத்திருமணம்செய்துகொள்வதாகவும்கொல்கிறார். ஆண்டாளைமணிப்பல்லக்கிலேஏற்றிவாத்தியகோஷங்களுடன்திருவரங்கத்துக்குஅழைத்துச்செல்கிறார்பெரியாழ்வார். சூடிக்கொடுத்தசுடர்க்கொடிவந்தாள். சுரும்பார்குழல்கோதைவந்தாள், திருப்பாவைபாடியசெல்விவந்தாள், தென்னரங்கம்தொழுதேசியள்வந்தாள்என்றுஅவளைஎதிர்கொண்டுஅழைக்கின்றனர். சூடிக்கொடுத்தநாச்சியாரும்எல்லோரும்காணும்படிஅழகியமணவாளன்திருமுன்புசென்றுஅவன்திருவடிவருடிஅவனுடன்ஒன்றறக்கலக்கிறாள். இதைப்பார்த்தபெரியாழ்வார், ‘ஒருமகள்தன்னைஉடையேன். உலகம்நிறைந்தபுகழால்திருமகள்போலவளர்த்தேன்அவளைச்செங்கண்மால்தான்கொண்டுபோனான்என்றுதுக்கித்துப்பெருமாளிடம், கோதையைப்பலர்அறியஸ்ரீவில்லிப்புத்தூரிலேயேதிருமணம்செய்தருளவேண்டும்என்றுவேண்ட, அழகியமணவாளனும்அப்படியேசெய்கிறேன்என்றுபங்குனிஉத்திரத்தன்றுகருடாழ்வாரின்மீதுகோதையுடன்வந்துதிருமணம்செய்துகொள்கிறார்.

அன்றுமுதல்ரங்கமன்னார்கோதையுடனும்பெரியதிருவடியுடனும்ஸ்ரீவில்லிபுத்தூரிலேயேகோயில்கொண்டுவிடுகிறார். பெரியாழ்வாரும், ஆண்டாளும்பாடியபாசுரங்களேநாலாயிரப்பிரபந்தத்தில்முதலிடம்பெறுவன. ஆண்டாள்கோயில்விமானம்தங்கத்தகடுபோர்த்தப்பெற்றது. இதில்ஆண்டாள்திருப்பாவைப்பாடல்களைவிளக்கவல்லதிருஉருவங்கள்அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆண்டாளைத்தரிசித்துவிட்டுத்திரும்பும்போதுதுவஜஸ்தம்பமண்டபத்திலும், அதைஅடுத்தமண்டபத்திலும்உள்ளதூண்களில்ரதிமன்மதன், ராமன்லக்ஷமணன், சரஸ்வதிமுதலியோரதுசிலாவடிவங்களைக்காணலாம், நல்லநாயக்கர்காலத்துசிற்பவடிவங்கள்.

ஆண்டாள்கோயிலைவிட்டுவெளியேவந்துவடகிழக்குநோக்கிநடந்தேவடபத்திரசயனர்கோயிலுக்குவரவேணும். அங்குபோகும்வழியில்ஆண்டாள்பிறந்தநந்தவனம்இருக்கிறது. அங்குள்ளகோயிலில்ஆண்டாளதுதிருவுருவம்சிலைவடிவில்தளியேஇருக்கிறது. இங்குள்ளஆண்டானையும்தரிசித்துவிட்டுவடக்கேநோக்கிநடந்தால்வடபத்திரசயனர்கோயில்வருவோம். கோயில்வாயிலைப்பெரியதொருகோபுரம்அணிசெய்கிறது. இந்தக்கோபுரவாயிலைஅடுத்துவடபுறம்தெற்கேபார்க்கப்பெரியாழ்வார்சந்நிதிஇருக்கிறது. பெரியாழ்வார்அவதரித்தஇடம்ஆதலால்சாத்துமுறைசிறப்பாகநடக்கிறது.

இந்தச்சந்நிதியைஅடுத்துமேற்கேயுள்ளதுபெரியபெருமாள்சந்நிதி, இக்கோயிலில்இரண்டுதட்டுகள். கீழேநரசிங்கப்பெருமாள்சந்நிதி, இச்சந்நிதிக்குக்கிழக்கேவடபுறம்பன்னிருஆழ்வார்களும்தசாவதாரமூர்த்திகளும்எழுந்தருளியிருக்கிறார்கள். தென்பக்கமாகமேல்மாடிக்குப்போகப்படிகள்இருக்கின்றன. அவைகளில்ஏறிச்சென்றால்முதலில்நாம்சேர்வதுகோபாலவிலாசம். அதனைஅடுத்துவிமலஆகிருதிவிமானத்தின்கீழேஉள்ளகருவறையில்வடஆலவிருட்சத்துக்குஅடியில், ஆதிசேஷன்மீதுபூதேவியும்சீதேவியும்அடிவருடவடபத்திரசயனர்சயனித்திருக்கிறார். அருணன், பிருகு, மார்க்கண்டேயன்எல்லாம்அங்கேஇருக்கிறார்கள், இங்குள்ளஅர்த்தமண்டபத்தில்சக்கரத்தாழ்வார், கண்ணன்வீதியுளாவருவார், வில்லிப்புத்தூர்உறைவார், அல்லல்தவிர்த்தபிரான்முதலியோர்உற்சவமூர்த்திகளாகஎழுந்தருளியிருக்கிறார்கள். இந்தவடபத்திரசயனர்கோயில்தான்ஆதிக்கோயில், ஆண்டாள்கோயில்பின்னால்எழுந்ததே.

பெரியாழ்வாரும்ஆண்டாளும்பலப்பலபாசுரங்கள்பாடியிருந்தாலும்வில்லிப்புத்துரைப்பற்றிப்பாடியபாடல்கள்இரன்டேஇரண்டுதான்.

மந்றையஆழ்வார்கள்இந்தவடபத்திரசயனலனமங்களாசாஸனம்செய்ததாகத்தெரியவில்லை.

ஆண்டாள்திருக்கோயிலில்ஆடிப்பூரஉற்சவமேபெரியதிருவிழா. அதில்தான்தேரோட்டம்எல்லாம், பங்குனியில்நடக்கும்திருக்கல்யாணஉற்சவமும்சிறப்பானதே. இந்தநாச்சியார்கோயிலைச்சேர்ந்தசுற்றுக்கோயில்கள்ஒன்பது.

பெரியாழ்வாரும்ஆண்டாளும்கி.பி. எட்டாம்நூற்றாண்டில்வாழ்ந்தவர்கள். ஆண்டாள்கோயில்கருப்பக்கிரஹம், அர்த்தமண்டபம், மகாமண்டபம்முதலியவைகளைச்சுந்தரத்தோளுடையமாவலிவாணாதிராயர்கட்டினார்என்றுகோயிலின்தெற்குச்சுவரில்உள்ளகல்வெட்டுகூறுகிறது. இவரேசுந்தரத்தோளநல்லூர்என்றசொக்கனேந்தல்கிராமத்தைநாச்சியாருக்குமானியமாகவிட்டிருக்கிறார். இரண்டுகோயில்களும்பாண்டியமன்னர்களால்பரிபலிக்கப்பட்டுவந்திருக்கின்றன. வடபத்திரசயனர்கோயில்ஜடாவர்மன்என்றதிரிபுவனசக்கரவர்த்திகோனேரின்மைகொண்டான்குலசேகரன்என்பவரால்கட்டப்பட்டிருக்கிறது.

இராமானுஜருக்கும்இந்தக்கோயிலுக்கும்நெருங்கியசம்பந்தம்உண்டு. இராமானுஜர்இத்தலத்துக்குஎழுந்தருளியபோது, நூறுதடாநிறைந்தஅக்காரஅடிசிலைமாலிருஞ்சோலைசுந்தரராஜனுக்குப்படைக்கச்சொன்னபடிபடைத்ததன்அண்ணாவருகின்றார்என்றுஏழடிமுன்நடந்துஎதிர்கொண்டுஅழைத்திருக்கிறாள்ஆண்டாள். அதுமுதல்இராமானுஜரைக்கோயில்அண்ணன்என்றேஅழைத்திருக்கிறார்கள். கம்பர்இத்தலத்துக்குவந்திருக்கிறார். ஆண்டாளுக்குச்சூடகம்என்றதலைக்கணியைவழங்கியிருக்கிறார். திருமலைநாயக்கரும்இக்கோயில்திருப்பணியில்பங்குபெற்றிருக்கிறார். அவரதுசிலைஆண்டாள்கோயிலில்சுக்கிரவாரக்குறட்டில்ஒருகம்பத்தில்இருக்கிறது.

கோதையையும்பெரியாழ்வாரையும்பற்றிப்பின்வந்தவர்கள்பாடியபாடல்கள்அனந்தம். அவைகளில்கோதையைப்பற்றிஉய்யக்கொண்டார்பாடியபாடல்பிரசித்தம்.

அன்னவயல்புதுவை

ஆண்டாள்அரங்கற்கு

பன்னுதிருப்பாவை

பல்பதியம்,-இன்னிசையால்

பாடிக்கொடுத்தாள்

நற்பாமாலைபூமாலை

சூடிக்கொடுத்தாளைச்சொல்லு

என்பதுபாடல். நாமும்பெருமாளுக்குப்பூமாலையும், நமக்குப்பாமாலையும்பாடிக்கொடுத்தசூடிக்கொடுத்தசுடர்க்கொடியைவாழ்த்திவணங்கிஊர்திரும்பலாம்.