தமிழ்நாடு – 104

குற்றாலத்துறை கூத்தன்

சென்னைகிறிஸ்தவகலாசாலையில்அன்றுஇருந்தபேராசிரியர்களில்பலர்ஸ்காட்லாந்துதேசத்தவர். அந்தக்கல்லூரியில்ஒருவிழா. விழாவுக்குகல்லூரியின்பழையமாணவரானரஸிகமணிடி. கே. சி. யைஅழைத்திருந்தார்கள்விழாநடக்கும்போதுடி. கே. சி. யின்பக்கத்தில்ஒருபேராசிரியர்உட்கர்ந்திருந்தார். இருவரும்அளவளாவிக்கொண்டிருந்தார்கள். பேராசியருக்குஇந்தியர்கள், அதிலும்தமிழர்கள்என்றால்என்னவோஏளனம். பேச்சோடுபேச்சாகக்கேட்டார்அவர்கே. சி. யிடம்: “நாங்கள்இயற்கையைமிகவும்மதிப்பவர்கள். மரங்கள்என்றால்எங்களுக்குமிகமிகப்பிரியம். நீங்கள்அப்படிஇல்லைதானே?” என்று. அதற்குடி. கே. சி. சொன்னபதில்இதுதான். “மரங்களிடம்எங்களுக்குப்பிரியம்கிடையாது. அதனிடம்நாங்கள்பக்தியேசெலுத்துகிறோம். எங்கள்கோயில்எல்லாம்ஒவ்வொருமரத்தைச்சுற்றியேஎழுந்திருக்கிறது. ஏன், மரத்தையேகடவுளாகப்பாவிக்கும்மனப்பக்குவம்பெற்றவர்கள்நாங்கள். நான்இருக்கும்குற்றாலத்திலேகோயிலுள்இருப்பதுஒருபலாமரம். மரத்தின்இலைபலாப்பழம், பழத்துக்குஉள்ளிருக்கும்சுளை, சுளைக்குள்ளிருக்கும்கொட்டைஎல்லாவற்றையுமேசிவலிங்கவடிவில், இறைவனதுவடிவில்கண்டுமகிழ்கிறவர்கள்நாங்கள்என்றெல்லாம்சொன்னார். மேற்கோளாக,

கிளைகளாய்க்கிளைத்தபலகொப்புஎலாம்

சதுர்வேதம், கிளைகள்ஈன்ற

களைஎலாம்சிவலிங்கம், கனிஎலாம்

சிவலிங்கம், கனிகள்ஈன்ற

சுளைஎலாம்சிவலிங்கம், வித்துஎலாம்

சிவலிங்கசொரூபமாக

விளையும்ஒருகுறும்பலாவின்முளைத்துஎழுந்த

சிவக்கொழுந்தைவேண்டுவோமே!

என்றபாடலையும்பாடிக்காட்டியிருக்கிறார். ஆம், மரங்களைவிரும்புவதோடுநிற்காமல்அவைகளையேசிவலிங்கசொரூபமாகவழிபடவேதெரிந்தவர்கள்தமிழர். அப்படிவழிபாடுஇயற்றுவதற்குஉரியவகையில்இருப்பதுதான்குறும்பலா. அந்தக்குறும்பலாஇருக்கும்தலம்தான்குற்றாலம். அந்தத்திருக்குற்றாலத்துக்கேசெல்கிறோம்நாம்இன்று.

திருக்குற்றலாம்எங்கிருக்கிறது. என்றுசாரல்காலசமயத்தில்நான்சொல்லித்தெரியவேண்டியவர்கள்அல்லநீங்கள், தென்காசிக்குஒருடிக்கெட்வாங்கிஅங்குபோய்இறங்கிமேற்குநோக்கிமூன்றுமைல்சென்றால்குற்றாலம்போய்ச்சேரலாம். இப்போதுதான்மதுரையிலிருந்தும், திருநெல்வேலியிலிருந்தும், தூத்துக்குடியிலிருந்தும்எக்ஸ்பிரஸ்பஸ்கள்வேறுவிடப்படுகின்றனவே. கோடைக்காலத்தில்உதகை, கோடைக்கானல்என்

குற்றாலம்அருவி

றெல்லாம்செல்லும்சுகவாசிகளைவிடஎண்ணிறந்தோர்ஆனி, ஆடி, ஆவணிமாதங்களில்குற்றாலம்நோக்கிச்செல்வார்கள். குற்றாலத்தின்பெருமைஎல்லாம்அதுஒருசுகவாசஸ்தலம்என்பதினால்மட்டும்அல்ல. அங்குள்ளஅருவியில்நீராடிமகிழலாம்என்பதினால்தான், உலகில்குற்றாலத்தைவிடப்பிரும்மாண்டமான, அழகியநீர்வீழ்ச்சிகள்எத்தனைஎத்தனையோதான். என்றாலும், இப்படிஉல்லாசமாகஅருவிக்குள்ளேயேநுழைந்துநீராடும்வசதியுடையதுஅதிகம்இல்லை. அப்படிக்குளிப்பதற்குவசதியாய், உடலுக்கும்உள்ளத்துக்குமேஒருமகிழ்ச்சிதருவதாய்அருவிஅமைந்திருப்பதினால்தான்இந்தத்தலத்துக்கேஒருசிறப்பு. ஆதலால்நாமும்குற்றாலம்சென்றதும்நேரேஅருவிக்கரைக்கேசென்றுவிடுவோம். பஸ்ஸ்டாண்டிலிருந்துகொஞ்சதூரம்சென்றதும்சிற்றாறுவரும். அதன்மேல்கட்டியிருக்கும்பாலத்தின்வழியாகக்கோயில்வாயில்வரைசென்றுஅதன்பின். அருவிக்கரைசெல்லலாம். இப்போதெல்லாம்சிற்றாறைக்கடக்காமலேயேநேரேயேஅருவிக்கரைசெல்லநல்லபாதைபோட்டிருக்கிறார்கள். நாம்அந்தவழியிலேயேசெல்லலாம்.

குற்றாலமலைஐயாயிரம்அடிஉயரமேஉள்ளமலை, இம்மலைமூன்றுசிகரங்களையுடையகாரணத்தால்திரிகூடமலைஎன்றுவழங்கப்படுகிறது. இச்சிகரங்களில்உயர்ந்தது 5135 அடிஉயரமுள்ளபஞ்சந்தாங்கி. இம்மலையில்உள்ளகாடுகளுக்குச்செண்பகக்காடுஎன்றுபெயர்உண்டு. மலைமுழுதும்நல்லமரங்களும்செடிகொடிகளும், வளர்ந்துநிற்கும்மூலிகைகளும்நிறைந்திருக்கின்றனஎன்பர். இந்தமலையிலிருந்துகுதித்துக்குதித்துவருகிறது. சிற்றாறு. மிக்கஉயரத்தில்இருப்பதுதேனருவி, அடுத்தபடியாக, செண்பகதேவிஅருவி. அதன்பின்தான்நாம்வந்துசேர்ந்திருக்கும்வடஅருவி. இங்குதான்இருநூறுஅடிஉயரமுள்ளமலையிலிருந்துஅருவிகுதிக்கிறது. இந்தஇருநூறுஅடியும்ஒரேவீழச்சியாகஇல்லாமல்இடையில்உள்ளபாறைகளில்விழுந்துவருவதால்வேகம்குறைந்துகுளிப்பதற்குஏற்றவாறுஇருக்கிறது. முதலில்இவ்வருவிபொங்குமாங்கடலில்விழுகிறது. அங்கிருந்தேபின்னர்கீழேநீர்வழிகிறது. குளிப்பதற்குவேண்டியவசதிகள்எல்லாம்செய்யப்பட்டிருக்கின்றன. அருலியாடும்அனுபவம்ஓர்அற்புதஅனுபவும். அதுசொல்லும்தரத்தன்று. ஆகவேஅருவியாடிதிளைத்துஅதன்பின்கோயில்வாயில்வந்துகோயிலுள்நுழையலாம். அருவிக்கரையிலிருந்துஅரைபர்லாங்குதூரம்தான்கோயில்வாயில், கோயில்வாயிலைஒருசிறுகோபுரம்அணிசெய்கிறது. கோயிலில்நுழைந்தால்விஸ்தாரமானமண்டபம்இருக்கிறதுமுதலில்இதனையே

கோயில்

திரிகூடமண்டபம்என்பர். இதனைக்கடந்தேநமஸ்காரமண்டபம், மணிமண்டபம்எல்லாம்செல்லவேணும். இதற்குஅடுத்தகருவறையில்தான்திருக்குற்றாலநாதர்லிங்கவடிவில்இருக்கிறார். இவர்ஆதியில்விஷ்ணுவாகஇருந்தவர். பின்னர்அகத்தியரால்சிவலிங்கமாகமாற்றப்பட்டார்என்பதுபுராணக்கதை.

இறைவன்இட்டகட்டளைப்படிவடநாடிருந்துஅகத்தியர்தென்திசைக்குவருகிறார். அப்போதுஇக்குற்றாலநாதர்கோயில்பெருமாள்கோயிலாகஇருந்திருக்கிறது. அகத்தியர்சிவனடியார்கோலத்தில்வந்திருந்தார்என்பதற்காகஅவரைக்கோயிலுள்செல்லஅர்ச்சகர்அனுமதிக்கவில்லை. ஆதலால்மனம்உடைந்துஅகத்தியர்திரும்பி, சிறிதுதொலைவில்உள்ளஇலஞ்சிசென்று, அங்குள்ளமுருகனைவணங்குகிறார். அந்தமுருகன்இந்தஅர்ச்சகர்களைவஞ்சனையால்வெல்லவழிசொல்லிக்கொடுக்கிறான். அவன்சொல்லிக்கொடுத்தவண்ணமேதுவாதசநாமம்தரித்து, பரமவைஷ்ணவராகமறுநாள்அகத்தியர்கோயிலுக்குவருகிறார். அர்ச்சகர்களும்ஏமாந்துஉள்ளேஅனுமதித்துவிடுகிறார்கள். உள்ளேசென்றவர்தாமேவிஷ்னுவுக்குப்பூசைசெய்வதாகச்சொல்லி, மற்றவர்களைவெளியேஅனுப்பிவிட்டு, கதவைச்சாத்திக்கொண்டு, நின்றகோலத்தில்இருந்தபெருமாளைதலையில்கைவைத்துஓர்அமுக்குஅமுக்கி, ‘குறுகிக்குறுகுகஎனக்கைலாயநாதனைநினைக்கிறார், அப்படியேஅவரும்குறுகிக்குற்றாலநாதார்ஆகிவிடுகிறார். அகத்தியரால்இப்படிமாற்றப்பெற்றஇறைவனைஅகஸ்தியரேபாடித்துதிக்கிறார். பாட்டுஇதுதான்.

முத்தனே! முவரிக்கண்ணா!

மூலம்என்றுஅழைத்தவேழப்

பத்தியின்எல்லைகாக்கும்

பகவனே! திகிரியாளா!

சுத்தனே! அருள்சூல்கொண்ட .

சுந்தரக்கதுப்பினானே!

நத்தணிசெவியகோல

நாடுதற்கரியநம்பி!

இந்தப்பாட்டைப்படித்தால்இதில்உள்ளதுதிவிஷ்ணுவுக்கும்சிவனுக்கும்பொருத்தமாயிருப்பதைப்பார்க்கலாம். இட்படிப்பாடிக்கொண்டுவந்ததினாலேதான்வைஷ்ணவஅர்ச்சகர்கள்ஏமாந்திருக்கிறார்கள். இப்படிஆதியில், விஷ்ணுவாகவும், பின்னர்சிவனாகவும்மாறியஇறைவனேதிருக்குற்றாலநாதன். நாமும்இரண்டுபெருமான்களையும்நினைத்தேவணங்கித்திரும்பலாம். குற்றாலநாதருக்குவலப்பக்கத்தில்தனிக்கோயிலில்குழல்வாய்மொழிஅம்மைகோயில்கொண்டிருக்கிறாள், நின்றகோலத்தில்அங்கிருந்துகாட்சிதருகிறாள். அம்மையின்கோயிலுக்குத்தென்புறத்தில்தான்தலவிருட்சமானகுறும்பலா. நான்குவேதங்களுமேதவம்செய்துஇப்படிப்பலாமரம்ஆயிற்றுஎன்பர். இப்பலாமரத்தடியிலேஒருலிங்கம். இம்மரத்தில்பழுக்கிறபலாப்பழத்தைஎவரும்பறிப்பதில்லை, குற்றாலத்திலேஉள்ளகுரங்குகளேகீறித்தின்னும்என்பர். இவ்விருகோயில்களையும்சுற்றியள்ளமேலப்பிராகாரத்திலேதான்நன்னகரப்பெருமாள், நெல்லையப்பர், மனக்கோலநாதர், நாறும்பூநாதர்முதலியோர்கோயில்கொண்டிருக்கின்றனர்

குற்றாலத்தில்இறைவன், குற்றாலம், கோவிதாஸ், சமருகம்என்றபெயருடையஆத்திமரநிழலிலேஎழுந்தருளியிருத்தலால்அம்மரத்தின்பெயரேதலத்தின்பெயர்ஆயிற்றுஎன்பர். குஎன்றால்பூமியாகியபிறவிப்பிணி, தாலம்என்றால்தீர்ப்பது. ஆகவேபிறவிப்பிணிதீர்க்கும்தலம்ஆனதால்குத்தாலம்ஆகிகுற்றாலம்என்றுதிரிந்ததுஎன்றும்கூறுவர். ஆதிசக்திமூவரைப்பயந்ததலமாதலால்இத்தலத்துக்குத்திரிகூடம்என்றபெயர்வந்ததுஎன்றும்தலபுராணம்கூறும். அதற்கேற்பவே, கோயிலுள்வடபக்கத்தில்பராசக்திக்குஒருசிறுகோயில்இருக்கிறது. இங்கேபராசக்தியோகத்தில்இருப்பதால்இதனையோகபீடம்என்றும், உலகம்எல்லாம்தோன்றுவதற்குமூலமாயிருத்தலால்தரணிபீடம்என்றும்அழைக்கப்படுகிறது. இப்பராசக்தியேஅரி, அயன், அரன்என்னும்மூவரையும்ஒவ்வொருகர்ப்பத்தில்பயந்தாள்என்பதைக்குறிக்கத்தானுமாலயன்பூந்தொட்டில்இச்சந்நிதியில்ஆடிக்கொண்டிருக்கிறது.

இத்தலத்துக்குஞானசம்பந்தர்வந்திருக்கிறார். குற்றாலத்துக்குஒருபதிகமும், குறும்பலாவுக்குஒருபதிகமும்பாடியிருக்கிறார்.

வம்பார்குன்றும்நீடுஉயர்

சாரல்வளர்வேங்கை

கொம்பார்சோலைக்கோலவண்டு

யாழ்செய்குற்றாலம்

என்றும்

மலையார்சாரல்மகவுடன்

வந்தமடமந்தி

குலையார்வாழைத்தீங்கனி

மாந்தும்குற்றாலம்

என்றும்குற்றாலத்தைப்பாடிப்பரவியவர்,

அரவின்அணையானும்நான்முகனும்

காண்பரியஅண்ணல்சென்னி

விரவிமதிஅணிந்தவிகிர்தருக்கு

இடம்போலும்விரிபூஞ்சாரல்

மரவம்இருக்கையும்மல்லிகையும்

சண்பகமும்மலர்ந்துமாந்தக்

குரவமுறுவல்செய்யும்குன்றிடம்

சூழ்தண்சாரல்குறும்பலாவே

என்றுகுறும்பலாவையும்பாடியிருக்கிறார். நாவுக்கரசர், ‘குற்றாலத்துறைகூத்தன்அல்லால்நமக்குஉற்றார்யாருளர்?’ என்றேகேட்கிறார்.

மணிவாசகரோ,

உற்றாரையான்வேண்டேன்

ஊர்வேண்டேன்பேர்வேண்டேன்

கற்றாரையான்வேண்டேன்

சுற்பனவும்இனிபமையும்

குற்றாலத்தமர்ந்துஉறையும்

கூத்தாஉன்குரைகழற்கே

கற்றாவின்மனம்போலக்

கசிந்துருகவேண்டுவனே

என்றுகசிந்துகசிந்துபாடியிருக்கிறார். கபிலரும்பட்டினத்தடிகளும்குற்றாலத்தானைநினைந்துபாடியபாடல்களும்உண்டு.

இத்தலத்தில்நிறையகல்வெட்டுகள்உண்டு. கி.பி. பத்தாம்நூற்றாண்டில்சோழநாட்டைஆண்டபரகேசரிவர்மன்என்னும்முதல்பராந்தகன்காலத்தில்பாண்டியநாடுசோழநாட்டுடன்இணைந்திருக்கிறது. இன்னும்மாறவர்மன்சுந்தரபாண்டியன், மாறவர்மன்விக்கிரமபாண்டியன்முதலியமன்னர்கள்காலத்தில்ஏற்படுத்தியநிபந்தங்களையெல்லாம்குறிக்கும்கல்வெட்டுகள்உண்டு. ஜடாவர்மன்சுந்தரபாண்டியன்பலதிருப்பணிகள்செய்திருக்கிறான். இப்படிச்சோழரும்பாண்டியருமாகக்கட்டியகோயிலை, சொக்கம்பட்டிகுறுநிலமன்னர்களும்விரிவுபடுத்திப்பலதிருப்பணிகள்செய்திருக்கிறார்கள். குழல்வாய்மொழிஅம்மைகோயிலைத்தேவகோட்டைகாசிவிசுவநாதன்செட்டியார்குடும்பத்தினர்திருப்பணிசெய்திருக்கின்றனர். கோயிலில்திருப்பணிவேலைகளைஇப்போதும்செவ்வனேசெய்துவருகின்றனர்.

இக்கோபிலைவிட்டுவெளியேவந்ததும்நேரேஊர்திரும்பமுடியாது. கோயிலுக்குவடபுறம்தான்இத்தலத்தில்பிரசித்திபெற்றசித்திரசபைஇருக்கிறது. அம்பலக்கூத்தன்ஐந்துதிருச்சபையில்அவள்கூத்தைஆடியிருக்கிறான். திருவாலங்காட்டில்ரத்னசபையிலும், சிதம்பரத்தில்பொன்னம்பலத்திலும், மதுரையில்வெள்ளியம்பலத்திலும், திருநெல்வேலியில்தாமிரசபையிலும்ஆடியபெருமான்இத்தலத்தில்சித்திரசபையில்நின்றுநிருத்தம்ஆடியிருக்கிறார். ஐந்தருவிக்குச்செல்லும்ரோட்டில், ரஸிகமணிடி. கே, சிநினைவுஇல்லத்துக்குக்கீழ்ப்புறமாகச்செல்லும்பாதையில்சென்றால்சித்திரசபைசென்றுசேரலாம். இச்சபையேதெப்பக்குளத்துடன்கூடியஒருபெரியகோயில். கோயில்முழுதும்சித்திரங்களால்நிறைந்திருக்கின்றன. பெருமானும்இங்கேசித்திரஉருவிலேயேஅமைந்துஆடும்காட்சிதருகிறார். ஆதலால்சித்திரசபையைக்காணாதுதிரும்பினால்திருக்குற்றாலத்தைப்பூரணமாகக்கண்டதாகக்கூறமுடியாது.

குற்றாலநாதர், குழல்வாய்மொழி, குற்றாலத்துக்கூத்தர்எல்லோரையும்பார்த்தபின்அவகாசமிருந்தால்வடக்கேஒன்றரைமைல்தூரத்தில்உள்ளஇலஞ்சிக்குமரனையும்காணலாம். இன்னும்நாலுமைல்கள்வடக்கேசென்றுதிருமலைசென்றுமலைஏறிஅங்குகோயில்கொண்டிருக்கும்முருகனையும்வணங்கலாம்.

குற்றாலம்செல்லும்இலக்கியரசிகர்கள், கையோடகையாகக்குற்றாலக்குறவஞ்சியைஎடுத்துப்போகமறக்கவேண்டாம். அத்தலத்தில்இருந்துகொண்டு,

வானரங்கள்கனிகொடுத்து

மந்தியோடுகொஞ்சும்

மந்திசிந்துகனிகளுக்கு

வான்கவிகள்கெஞ்சும்

தேனருவித்திரைஎழும்பி

வானின்வழிஒழுகும்

செங்கதிரோன்பரிக்காலும்

தேர்க்காலும்வழுகும்

என்றெல்லாம்பாடல்களைப்படித்துப்பாருங்களேன். ஒருபுதியஉலகமேஉங்கள்கண்முன்வராதாஎன்ன?