மன்னார்கோயில் வேதநாராயணன்
வெங்கண்திண்களிறுஅடர்த்தாய்
வித்துவக்கோட்டம்மானே!
எங்குப்போய்உய்கேன்உன்
இணைட்டியேஅடையல்அல்லால்
எங்கும்போய்கரைகாணாது
எறிகடல்வாய்மீண்டேயும்
வங்கத்தின்கூம்பேறும்
மாப்பறவைபோன்றேனே.
என்றுஒருபாசுரம். மிகஅருமையானபாசுரம். ஒருகப்பல்புறப்படுகிறதுகடலில், அக்கப்பலின்கொடிமரத்திலேஒருபறவைஇருக்கிறது. கப்பல்நடுக்கடலுக்குச்சென்றுவிடுகிறது. அப்போதுபறவைபறக்கஆரம்பிக்கிறது. நிலத்தைவிட்டுநெடுந்தூரம்கப்பல்வந்துவிட்டதால்பறவையால்திரும்பநிலத்துக்குச்செல்லமுடியவில்லை, கடலிலோபறவைசென்றுதங்கவேறுஇடமும்இல்லை. ஆதலால்பறந்தபறவைதிரும்பவும்கப்பலின்கொடிமரத்துக்கேவந்துசேருகிறது. நாமும்வாழ்வுஆகியகடலிலேஇறைவனாகியகப்பலின்கொடிமரத்தில்உள்ளபறவைபோன்றவர்கள்தாமே? எப்படிஎப்படிப்பறந்தாலும்கடைசியில்இறைவனிடத்துக்கேதிரும்பிஅவனதுதாள்களையேபற்றிக்கொள்வதைத்தவிரவேறுவழியேஇல்லையல்லவா? இந்தஅற்புதஉண்மையைத்தான்நல்லதோர்உவமையோடுபாடல்கூறுகிறது. இந்தப்பாடலைப்பாடியவர்குலசேகரர்.
ஆம்! பன்னிருஆழ்வார்களில்ஒருவரானகுலசேகரஆழ்வார்தான். சேரமன்னர்பரம்பரையைச்சேர்ந்தவர். கொல்லிகரைத்தலைநகராகக்கொண்டுசேரநாட்டைஆண்டுவருகிறார். எம்பெருமானிடம்தீராதகாதல்கொள்கிறார். அதுகாரணமாகஸ்ரீவைஷ்ணவர்களோடுநெருங்கிவாழ்கிறார். இதுமந்திரிபிராதானிகளுக்குப்பிடிக்கவில்லை. ஸ்ரீவைஷ்ணவர்களிடம்இருந்துபிரிக்கஒருசூழ்ச்சிசெய்கிறார்கள். பெருமான்திருஆபரணப்பெட்டியிலிருந்துஒருநவரத்தினஹாரத்தைஎடுத்துஒளித்துவெத்துவிட்டுஅதனைவைஷ்ணவர்களேஎடுத்திருக்கவேண்டுமென்றுமன்னரிடம்புகார்செய்கிறார்கள். மன்னருக்கோலைஷ்ணவர்களிடம்அளவுகடந்தநம்பிக்கை. அவர்கள்இதைச்செய்திருக்கமாட்டார்கள்என்பதைநிரூபிக்க, ஒருமண்குடத்தில்விஷப்பாம்புகளைப்போட்டுக்கொண்டுவந்துவைத்து. ‘அந்தஹாரத்தைவைஷ்ணவர்கள்தாம்எடுத்திருக்கிறார்கள்‘ என்றுசொல்கிறவுரை, குடத்தில்கைவிட்டுப்பிரமாணம்செய்யச்சொல்கிறார். மந்திரிபிரதானிகள்ஒருவரும்முன்வரவில்லை. உடனேமன்னராம்குலசேகரரே, ‘பரன்அன்பர்அக்காரியம்செய்யார்‘ என்றுசொல்லிக்கொண்டேபாண்டத்தில்கையைவிட்டுச்சத்தியம்செய்கிறார். பாண்டத்தில்உள்ளபாம்புஒன்றுஅவர்கைவழியாகஏறித்தலையில்வந்துஅவருக்குக்குடை. பிடிக்கவும், மற்றொன்றுவெளியேவந்துஹாரத்தைமறைத்தவர்களைச்சீறிவிரட்டவும்செய்கின்றது. மறைத்தவர்மன்னர்காலில்விழுந்துமன்னிப்புப்பெறுகிறார்கள். குலசேகரர்பரமபக்தராக, ஆழ்வாராகவாழ்கிறார். பரந்தாமன்மீதுபலபாடல்களைப்பாடுகிறார். இந்தத்தகவலையெல்லாம்.
ஆரம்கெடப், ‘பரன்அன்பர்
கொள்ளார்‘ என்றுஅவர்களுக்கே
வாரம்கொடுகுடப்பாம்பில்
கையிட்டவன்–மாற்றலரை
வீரம்கெடுத்தசெங்கோல்
கொல்லிகாவலன், வில்லவர்கோன்
சேரன்குலசேகரன்முடி
வேந்தர்சிகாமணியே
என்றபாடல்தெரிவிக்கிறது. இந்தக்குலசேகரர்பலதலங்களுக்கும்சென்று. கடைசிக்காலத்தில்வந்துதங்கியிருந்தஇடம்தான்வித்துவக்கோடு. இந்தவித்துவக்கோடுமலைநாட்டில்
குலசேகரர்
உள்ளதலம்என்றுகருதுபவர்கள்பலர். இல்லை, கரூரைஅடுத்தவித்துவக்கோட்டக்கிரகாரமேஎன்பார்சிலர், இன்னும்சிலர்இதுதிருநெல்வேலிமாவட்டத்திலுள்ளமன்னார்கோயிலேஎன்பர். எந்தத்தலமாகவேணும்இருக்கட்டும். வங்கத்தின்கூம்புஏறியமாப்பறவைபோல்பலதலங்களுக்கும்சென்றகுலசேகரர்கடைசியில்வந்துதங்கியஇடம்மன்னார்கோயில்என்பதில்விவாதம்இல்லை. அந்தமன்னார்கோயிலுக்கேசெல்கிறோம்நாம்இன்று.
மன்னார்கோயில், திருநெல்வேலிமாவட்டத்திலேஅம்பாசமுத்திரம்என்னும்ஊருக்குவடமேற்கேமூன்றுமைல்தூரத்தில்இருக்கிறது. அங்குசெல்லஅம்பாசமுத்திரம்ஸ்டேஷனில்இறங்கவேண்டும். அங்கிருந்துவண்டிவைத்துக்கொண்டுசெல்லவேணும். காரில்வந்தால்நேரேஊரில்போய்இறங்கலாம். அம்பாசமுத்திரம் – தென்காசிரோட்டில்பஸ்ஸில்வந்தால்அம்பாசமுத்திரத்துக்குமேற்கேஇரண்டுமைல்தூரத்தில்இறங்கிநடந்துஒருமைல்வடக்குநோக்கிச்செல்லவேணும். ஊரைஅடுத்துக்கருணைநதிஓடுகிறது. கோயில்வாயிலில்ஒருபெரியமண்டபம்இருக்கிறது. அதனைப்பந்தல்மண்டபம்என்பர். இம்மண்டபத்தில்முத்துகிருஷ்னநாயக்கருடையசிலையும்அவனுடையதளவாய்ராமப்பய்யனுடையசிலையும்இருக்கின்றன. பாண்டியர்கள்சின்னமாகமீன்கள்மண்டபமுகட்டில்காணப்படுகின்றன. ஆதலால்நாயக்கமன்னர்கள்ஆட்சியில்யாரோஒருபாண்டியன்கட்டியிருக்கவேணும்.
இதனைஅடுத்தேகோயிலின்பிரதானவாயில், அந்தவாயிலைஐந்துஅடுக்குகள்கொண்டகோபுரம்அணிசெய்கிறது. இதனைஅடுத்ததுஒருபெரியமண்டபம், இம்மண்டபத்தில்குமாரகிருஷ்னப்பநாயக்கர்சிலைஇருப்பதால்அவரேஇம்மண்பம்கட்டியிருக்கவேணும், இங்கேயேசெண்டலங்காரமாமுனிகள், பராங்குசர்முதவியோரதுசிலைகள் . இருக்கின்றன. மற்றமண்டபங்களையும்கடந்துஅந்தாரளம்சென்றால்அதைஅடுத்தகருவறையில்மூலவரானவேதநாராயணனைத்தரிசிக்கலாம். இவருக்குஇருபக்கத்திலும்ஸ்ரீதேவியும்பூதேவியும்நிற்கிறார்கள். வேதநாராயணனும்நின்றகோலத்திலேயேசேவைசாதிக்கிறான். பக்கத்திலேயேபிருகுமகரிஷியும்மார்க்கண்டேயரும்இருக்கிறார்கள்
ஒன்றுசொல்லமறந்துவிட்டேனே. இத்தலம்ஏற்பட்டதே, பிருகுமகரிஷியால்தான். பிருகுமகரிஷியின்பத்தினிகியாதிஎன்பவள்அசுரர்களுக்குஅடைக்கலம்கொடுக்கிறாள். இதனால்ஸ்ரீமந்நாராயணன்சக்ராயுதத்தால்கியாதியைச்சேதிக்கிறான். மனைவியைஇழந்தபிருகுகோபங்கொண்டு, ‘நான்மனைவியைஇழந்துதவிப்பதுபோல்இந்தப்பரந்தாமனும்மனைவியைஇழந்துதவிக்கட்டும்‘ என்றுசாபமிடுகிறார். கோபம்தெளிந்தபின், பரந்தாமனைச்சபித்துவிட்டோமேஎன்றுவருந்தி, தவம்கிடக்கிறார். ஆனால்பரந்தாமனோ, ‘மகரிஷியின்வாக்கும்பொய்க்கக்கூடாது‘ என்றுபின்னர்ராமனாகஅவதரித்துசீதையைப்பிரிந்துதுயர்உறுகிறார்இராவணவதம்முடித்துத்திரும்புகின்றபோது, பிருகுவேண்டிக்கொண்டபடி, அவருக்குச்சேவைசாதிக்கிறார். பிருகுவும்அந்தவேதநாராயணனைப்பொதியமலைச்சாரலிலேஇந்தஇடத்திலேபிரதிஷ்டைபண்ணுகிறார். தாமும்தம்கொள்ளுப்பேரனுமானமார்க்கண்டேயனுடன்அத்தலத்தில்தங்கி, வேதம்ஓதிக்கொண்டுவாழ்கிறார். அதனாலேவேதநாராயன்சந்நிதியில்பிருகுவம்மார்க்கண்டரும்இடம்பெற்றிருக்கின்றனர்.
மன்னார்கோயில்விஷ்வக்சேனர்
வேதநாராயணனும், வேதவல்லித்தாயாரும்புவனவல்லித்தாயாரும்உத்சவமூர்த்திகளாகஅமர்ந்திருக்கின்றனர். இத்தாயார்களுக்குத்தனிக்கோயில்கள்வேறேஇருக்கின்றன. அந்தமண்டபத்திலேகுலசேகரரதுதிருஆராதனைமூர்த்தியானராமன்சீதாலக்ஷ்மணசமேதனாகஎழுந்தருளியிருக்கிறான். இன்னும்இங்கேயேகாட்டுமன்னார், கண்ணன், சக்கரத்தாழ்வார், மற்றஆழ்வார்கள், ராமானுஜர். மணவாளமாமுனிகள்எல்லோரும்இருக்கின்றனர். இந்தமண்டபத்திலிருந்துவேதநாராயணனைச்சுற்றிஒருபிரதக்ஷிணம்இருக்கிறது. அதனைஅடைத்துவைத்திருக்கின்றனர். இதற்குஅடுத்தமண்டபமேமகாமண்டபம். இத்தலத்தில்இதனைக்குலசேகரன்மண்டபம்என்றுஅழைக்கின்றனர். இதில்ஓர்உள்மண்டபமும், வேதிகையும்இருக்கின்றன. இந்தவேதிகையைவிசுவநாதன்பீடம்என்கின்றனர். இந்தவேதிகையில்ராஜகோபாலன். ஆண்டாள், கருடன்எல்லோரும்எழுந்தருளியிருக்கின்றனர். இந்தராஜகோபாலன்பக்கத்திலேகுலசேகராழ்வார்உத்சவமூர்த்தியாகஎழுந்தருளியிருக்கிறார்.
இதற்குவெளியேஉள்ளகிளிக்குறடும்மண்டபமும்மணிமண்டபம்என்றுபெயர்பெறும். இக்குறட்டிலிருந்துதென்பக்கத்துப்படிகள்வழியாகமாடிக்குஏறிச்சென்றால்அங்குபரமபதநாதன்வீற்றிருந்ததிருக்கோலத்தில்காட்சிகொடுக்கிறார். இவரைச்சுற்றியுள்ளபிரதட்சிணமேயானைமுடுக்குஎன்றுசொல்லப்படுகிறது. அதன்பின்அந்தமண்டபத்தின்கீழ்ப்புறமுள்ளபடியாகமேலும்ஏறிச்சென்றால்அரங்கநாதன்போல்பள்ளிக்கொண்டபெருமானைக்காணலாம். இப்படி, வேதநாராயணனாகநின்று, இருந்துகிடந்தகோலத்தில்எல்லாம்சேவைசாதிக்கிறான். இந்தப்பள்ளிக்கொண்டபெருமானைச்சுற்றியுள்ளபிரதட்சிணத்தைப்பூனைமுடுக்குஎன்கின்றனர், இனிபடிகளின்வழியாகக்கீழேஇறங்கிவந்துவடபக்கத்துக்குச்சென்றால்அங்குபுவனவல்லித்தாயாரைக்கண்டுவணங்கலாம். அங்கேயேவிஷ்வக்சேனரையும்தரிசிக்கலாம். அதன்பின்அங்குள்ளசின்னக்கோபுரவாயில்வழியாகக்கொடிமண்டபத்துக்குவந்தால்வடக்குவெளிட்டபிராகாரத்தில்குலசேசுராழ்வார்சந்நிதிக்குவரலாம். இவருக்குத்தனிக்கோயில், கொடிமரம், தேர்எல்லாம்ஏற்பட்டிருக்கும்சிறப்பைப்பார்த்தால்இவர்இத்தலத்தில்சிறப்பாகக்கொண்டாடப்படுவதின்அருமைதெரியும். இங்குகருவறையில்ஆழ்வார்கூப்பியகையோடுஎழுந்தருளியிருக்கிறார்.
குலசேகரர்இத்தலத்துக்குவந்துதங்கியிருந்ததைப்பற்றிஎத்தனையோகதைகள். இங்குஇவர்வந்துதங்கியிருந்தகாலத்தில்தன்ஆராதனைமூர்த்திகளானசக்கரவர்த்தித்திருமகனையும், ராஜகோபாலனையும்இக்கோயிலில்எழுந்தருளச்செய்யவேண்டும்என்றுகூறியிருக்கிறார். அங்குள்ளஅர்ச்சகர்கள்அதற்குஒத்துக்கொள்ளவில்லை. க்ஷத்திரியராம்குலசேகரரதுஆராதனைமூர்த்திகளைக்கோயிலுள்எழுந்தருளப்பண்ணஇயலாதுஎன்பதுஅவர்களதுவாதம், அன்றிரவுதிருவிசாகம்ஆனதும், கோயில்ஆழ்வாரைக்கொண்டுசந்நிதிமுன்வைத்துப்பெருமாளைப்பிராத்தித்துக்கொண்டேஇருந்திருக்கிறார்குலசேகரர். மறுநாள்விடியற்காலையில்கதவைத்திறந்தால்உள்ளே. சக்ரவர்த்தித்திருமகனும்ராஜகோபாலனும்எழுந்தருளியிருக்கிறார்கள். உடனேஎல்லோரும்குலசேகரர்திருவடிகளிலேவிழுந்துவணங்கிஅவர்பக்திப்பெருமையைஉணர்ந்திருக்கிறார்கள், குலசேகரர்பின்னர்அத்தலத்திலேயேதங்கித்தமது 87-வதுவயதில்திருநாட்டுக்குஎழுந்தருளியிருக்கிறார்.
ஆதியில்இத்தலம்வேதநாராயணபுரம்என்றேஅழைக்கப்பட்டிருக்கிறது. இக்கோயில்கல்வெட்டுக்களிலிருந்துகன்ணனுக்குஒருகோயில்இவ்வூரில்இருந்திருக்கவேணும்என்றுதெரிகிறது. அக்கோயில்இப்போதுஇல்லை. உடைந்தவேணுகோபாலன்கற்சிலையும், ருக்மணியின்கற்சிலையமேகிடைத்திருக்கின்றன. கோயிலுள்ஒருநவநீதகிருஷ்ணன்விக்கிரகம்மட்டும்இருக்கிறது. பிரம்மவித்துவான்கள்நிறைந்தஊராகையால், பிரம்மவித்துவான்களுக்குப்பாண்டியஅரசர்களால்தானமாகக்கொடுக்கப்பட்டஊராகையால், இதனைப்பிரமதேயம்என்றும்அழைத்திருக்கின்றனர்.
இந்தஊருக்குமன்னார்கோயில்என்றுஏன்பெயர்வந்ததுஎன்பதைச்சொல்லவில்லையேஎன்றுதானேகுறைப்படுகிறீர்கள்? குலசேகரருக்குராஜகோபாலன்என்றஅழகியமன்னனார்பேசும்தெய்வமாகஇருந்திருக்கிறார். அத்துடன்குலசேகரமன்ளன்பெயரையும்தொடர்புப்படுத்திமன்னனார்கோயில்என்றுமுதலில்வழங்கியிருக்கவேணும். பிறகுமன்னார்கோயில்என்றுகுறுகியிருக்கவேணும்.