தமிழ்நாடு – 115

ஸ்ரீமுஷ்ணத்துபூவராகன்

பஞ்சபூதங்களில்ஒன்றாகக்கணக்கிடப்படுவதுநாம்வசிக்கும்மண். இந்தமண்ணிற்குள்புதைந்துகிடக்கும்சக்திதான்எவ்வளவுஆற்றல்வாய்ந்ததாகஇருக்கிறது. மண்ணைவெட்டி, அதற்குள்சிலவிதைகளைப்போட்டுத்தண்ணீர்ஊற்றினால், மண்ணிலிருந்துசெடியும், கொடியும், மரமும், மட்டையும், வெளிவருகிறது, உண்ணும்உணவுஅளிக்கநெல்விளைகிறது. இன்னும்சோளம், கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, என்றுஎண்ணற்றஉணவுதானியங்கள்எல்லாம்வந்துகுவிகின்றன. உடுக்கஉடைஉதவும்பஞ்சும்பருத்தியும்செடிகளில்காய்க்கிறது.

இவைமட்டுமா? பலப்பலவர்ணங்களில்மலர்கள், பலப்பலசுவையுடையகனிகள்எல்லாம்இந்தச்செடியிலும், கொடியிலும், மரத்திலும்பூத்துக்காய்த்துவிடுகின்றன. அத்துணைசக்தியைஉள்ளடக்கிக்கொண்டிருக்கிறதுஇந்தமண். அதனாலேயேமண்ணையும்தெய்வமாக்கி, பூமாதேவிஎன்றனர். காத்தற்கடவுளானவிஷ்ணுவின்பட்டமகிஷிஎன்றும்வணங்கினர்மக்கள்.

இந்தஅருமையைஎல்லாம்நன்குஉணர்ந்திருக்கிறான். கவிச்சக்ரவர்த்திகம்பன். பூமாதேவிஎனும்தெய்வம்தன்னைஉழுதுவழிபடுபவர்க்கெல்லாம்அருள்புரியவிரைந்துவருகிறாள். அவளதுஅழகானமேனியிலிருந்தேபச்சைப்பசுங்கதிர்கள்எழுந்துபிரகாசிக்கின்றன. அவள்தன்உண்மைஉருவைஏதோபூமிக்குள்ளேயேஒளித்துவைத்துக்கொண்டுவழிபடுபவர்களுக்குமட்டும்தன்உண்மைஉருவைகாட்டுகின்றாள். அப்பூமாதேவியின்அம்சமானசீதாதேவியும்உழுகின்றகொழுமுகத்தில்தானேஉதிக்கிறாள்? யாகம்ஒன்றுசெய்யஜனகமகாராஜன்நிலத்தைப்பண்படுத்திஅதனைஉழ, அங்குசீதாதேவிதோன்றினாள்என்பதுவரலாறு. இதைச்சொல்கிறான்கம்பன்.

உழுகின்றகொழுமுகத்தின்

உதிக்கின்றகதிரின்ஒளி

பொழிகின்றபுவிமடந்தை

உருவெளிப்பட்டெனப்புணரி

எழுகின்றதெள்ளமுதோடு

எழுந்தவளும்இழிந்துஒதுங்கி

தொழுகின்றநன்னலத்துப்

பெண்ணரசிதோன்றினாள்

என்பதுபாட்டு. இப்படிஅருமையினும்அருமையாகப்பாராட்டப்படுகின்றபூமாதேவியைஅழித்துச்சிதைத்துவிடச்செய்யும்அக்கிரமமும்நாட்டில்நடக்கத்தானேசெய்கிறது. ஒருகதிர்உதிக்கின்றஇடத்திலேஇரண்டுகதிர்உதிக்கச்செய்கின்றவன்உலகவளர்ச்சிக்குத்துணைபுரிகின்றவன்என்றுபாராட்டுகிறோம்.

ஆனால்இந்தஉலகத்தையேசிதைத்துவிடஅணுகுண்டுபரிசோதனைகளும், மற்றஅக்கிரமங்களும்செய்கின்றவர்களும்இருக்கத்தானேசெய்கிறார்கள்? இப்படிப்பட்டஅரக்கர்கள்இன்றுதான்இருக்கிறார்கள்என்றில்லை. அன்றும்இருந்திருக்கிறார்கள்.

ஹிரண்யாட்சன்என்றொருஅசுரன், பூமாதேவியையேஎடுத்துச்சென்றுகடலுக்குஅடியில்சிறைவைத்துவிடுகிறான். இந்தப்பூமகளைக்காக்கபரந்தாமன்பன்றிஉருவில்தோன்றிக்கடலுக்குள்பாய்ந்துஅரக்கனைக்கொன்றுபூமாதேவியைமீட்டுக்கொண்டுவருகிறான். பூமிதேவியைசிறைமீட்டுக்கொண்டுவந்தமூர்த்தியையேபூவராகமூர்த்திஎன்கிறோம். இந்தபூவராகமூர்த்தியின்அற்புதவடிவைக்காணநாம்அந்தஸ்ரீமுஷ்ணத்திற்கேசெல்லவேணும். அத்தலத்திற்கேசெல்கிறோம்இன்று.

ஸ்ரீமுஷ்ணம்தென்ஆர்க்காடுமாவட்டத்தின், சிதம்பரம்தாலுகாவில்ஒதுக்குப்புறமாகஉள்ளஊர்.

சிதம்பரத்திலிருந்துவிருத்தாசலம்செல்லும்வழியில், சேத்தியாத்தோப்புஎன்றஊர்வரைசென்றுஅதன்பின்தென்மேற்காகச்சென்றால்ஊர்போய்ச்சேரலாம். ரயில்வசதியெல்லாம்கிடையாது. சிதம்பரத்திலிருந்து 26 மைல்தூரத்தில்உள்ளது. சொந்தகார். உள்ளவர்கள்காரிலேயேசெல்லலாம். இல்லாவிட்டால்இந்தஊருக்குநல்லபஸ்வசதியும்இருக்கிறகாரணத்தால்பஸ்ஸிலேயேசிரமம்இல்லாமல்போகலாம். ஊருக்குவடபுறத்தில்மேற்கேபார்த்தகோயிலில்தான்இந்தபூவராகர்இருக்கிறார்.

வைணவத்தலங்களுக்குள்இத்தலம்சிறப்பானது. சுயம்புலிங்கம்என்பதுபோல, சிற்றுளிகொண்டுபொழியப்படாதுதானாகவேதோன்றியதலங்கள்எட்டுஎன்பர். அவைஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், ஸாளக்கிராமம், நைமி, சாரண்யம், வானவாமலை, புஷ்கரம், நாராயணம்என்றும்கூறுவர். இவற்றையேவடமொழியில்ஸ்வயம்வியக்தக்ஷேத்திரம்என்பர். இக்கோயில்பிரும்மாண்டமானகோயில். மூன்றுமதில்களால்சூழப்பட்டிருக்கின்றது. இன்றுஇருப்பதுஇரண்டுமதில்களே. மூன்றாவதுமதில்சிதைந்துஅதன்அடையாளங்கள்மட்டுமேஇருக்கின்றன. கோயில்வாயிலை 150 அடிஉயரமுள்ளஒருராஜகோபுரம்அழகுசெய்கிறது. இக்கோபுரவாயிலிலேதுழைத்தஉடனேகோபுரத்தின்மேலேகிழக்குநோக்கியவராய்வேங்கடவாணன்இருப்பதைக்காட்டுவர்.

வடவேங்கடம்சென்றவர்கள்அறிவார்கள். அங்குள்ளபுஷ்கரணியின்மேல்கூரையில்உள்ளஆழ்வார்களைதரிசித்தபின்னரேவேங்கடவனைதரிசிக்கவேண்டும்என்பதை. அதுபோலஇத்தலத்தில்கோபுரத்தில்உள்ளவேங்கடவனைமுதலில்தரிசித்தபின்னரேபூவராகனைசேவிக்கவேண்டும்என்பதுசம்பிரதாயம், ஆதலால்நாமும்படிகள்ஏறிவேங்கடவனைத்தரிசித்தபின்பேமேல்நடக்கலாம். ராஜகோபுரத்தைக்கடந்ததும்நாம்சேர்வதுநூற்றுக்கால்மண்டபம்.

இம்மண்டபத்தின்அடிப்பாகம்நல்லவிரிந்துபரந்திருக்கிறது. இத்தனைஅகலமாககல்லாலேயேமண்டபம்அமைந்திருப்பதுஅழகாகஇருப்பதுடன்ஆச்சர்யப்படத்தக்கதாகவும்இருக்கிறது. இந்நூற்றுக்கால்மண்டபத்திலேநம்மாழ்வார்சந்நிதிஇருக்கிறது. ஞானமுத்திரைதாங்கிநம்மாழ்வாரதுசெப்புச்சிலைசிறிதேயானாலும்அழகானது. அவரைத்தரிசித்தபின்னரே, இக்கோயிலின்சிறந்தசிற்பவேலைகள்கொண்டபதினாறுகால்மண்டபம்வந்துசேருவோம். அதனையேபுருஷசூக்தமண்டபம்என்கிறார்கள்.

நல்லநுணுக்கவேலைப்பாடுகள்நிறைந்ததூண்கள்இம்மண்டபத்தைத்தாங்கிநிற்கின்றன. இக்கோயிலைக்கட்டியநாயக்கமன்னர்கள், அவர்கள்துணைவியர்சிலைஎல்லாம்கற்றூண்களில்அமைக்கப்பட்டிருக்கின்றன.

இம்மண்டபத்திற்குவடபுறம்வேணுகோபாலன்சந்நிதிஇருக்கிறது. அங்குவேணுகோபாலன்ருக்மணிசத்யபாமாசகிதம்சிலைஉருவில்நிற்கிறான். பக்கத்திலேநர்த்தனகோபாலனும்நடனம்ஆடிக்கொண்டேஇருப்பான். பதினாறுகால்மண்டபத்தைக்கடந்தேபிரதானகோயிலுள்நுழையவேணும். அங்குள்ளமகாமண்டபத்தைக்கடந்து, அர்த்தமண்டபம்சென்று, அதன்பின்கருவறையில்உள்ளபூவராகனைத்தரிசிக்கவேணும். கருவறையின்நடுவிலேபூவராகர்சிலைஉருவில்நிற்கிறார்.

இந்தமூர்த்திசுமார்மூன்றடிஉயரமேஉள்ளவர். சாளக்கிராமம்என்னும்உயர்ந்தசிலைவடிவினர். இரண்டேதிருக்கரங்களுடன்கம்பீரமாகஇடுப்பிலேகைவைத்துக்கொண்டுமிடுக்காகவேநிற்கிறார். அப்படிவைத்திருக்கும்கைகளிலேசங்கையும்சக்கரத்தையும்ஏந்தியிருக்கிறார். உடல்முழுவதும்மேற்குநோக்கிஇருந்தாலும், தெற்குநோக்கிநிமிர்ந்தேநிற்கிறார். அவர்காலடியிலேஸ்ரீதேவியும்பூதேவியும்சிறியவடிவிலேயேஎழுந்தருளியிருக்கின்றனர்.

இங்குஒருசௌகரியம், இங்குள்ளஉற்சவமூர்த்தி, மற்றகோயில்களில்இருப்பதுபோல்கருவறையில்இருந்துமூலவர்திருவடிதரிசனத்துக்குஇடையூறுசெய்யமாட்டார். பூவராகமூர்த்தியின்வடிவுமுழுவதையும்கண்ணாரக்கண்டுமகிழலாம். இம்மூர்த்தியின்சிரஸில்ஒருதங்கக்கீரிடம்இருக்கிறது. சேவார்த்திகள்விரும்பினால்அதனைஎடுத்துக்காட்டுவர். அது, கீழேவிழுந்துவிடாதபடிஒருதங்கச்சங்கிலியால்பிணைக்கப்பட்டிருக்கிறதுஎன்பதையும்காணலாம்.

இக்கோயிலில்உள்ளஉற்சவர்யக்ஞவராகர். இவர்யக்ஞவராகர்என்றுபெயர்பெற்றதற்குஒருவரலாறுஉண்டு. நெய்வேலிக்குஅடுத்தவளையமாதேவியில்கார்த்தியாயனமகரிஷிஎன்றுஒருவர்இருந்திருக்கிறார். அவருக்குஒருமகள்அம்புஜவல்லிஎன்றபெயரோடு. இவளைமணக்கபூவராகன்விரும்புகிறான். அப்போதுமகரிஷிபூவராகனைஅவரதுசுயஉருவில்வந்துமணந்துகொள்ளும்படிவேண்டுகிறார். அந்தமுனிவர்நடத்தியவக்ஞத்திலிருந்துதன்சுயஉருவோடுஎழுந்திருக்கிறார்.

அப்படிப்பரந்தாமன்பூதேவிஸ்ரீதேவிசகிதனாகஎழுந்தவரேயக்ஞவராகன்என்றதிருதாமத்தோடுஅங்குகருவறையைஅடுத்தஅந்தராளத்தில்இருக்கிறார். அணிகளும், பணிகளும்பட்டாடையும்அணிந்துமேனியழகுமுழுவதையும்காட்டாதகோலத்திலேயேதான்அவரைத்தரிசிக்கவேணும், அவர்பக்கலிலேயேசுமார்முக்கால்அடிஉயரத்தில், செப்புச்சிலைவடிவத்தில், பூவராகன்வேறேஎழுந்தருளியிருக்கிறார். அச்சிறுவடிவினுக்கும்கவசம்அணிவித்துவைத்திருப்பார்கள்.

இந்தயக்ஞவராகர்எனும்உற்சவரேஉற்சவகாலங்களில்உலாப்புறப்படுவார். மாசிமாதம்நடக்கும்உற்சவத்தில்தேரோட்டம்முடிந்ததும்கிள்ளைஎன்றகிராமத்துக்குஎழுந்தருளிஅங்குதீர்த்தமாடுவார். இந்ததீர்த்தோத்சவத்தைஒருமகம்மதியப்பெரியார்ஏற்படுத்திவைத்திருக்கும்மூலதனத்தைக்கொண்டு, உப்புவேங்கடராயர்என்றராயர்வம்சத்தவர்கள்நடத்திவருகின்றனர்.

ஒருநவாப்தனக்கிருந்தநோய்நீங்கயக்ஞவராகரைவேண்டிக்கொள்ள, அப்படியேநோய்நீங்க, அதன்பின்அந்தநவாப்பூவராகசாஹேப்என்றபெயருடன்வாழ்ந்தார்என்றுஒருகர்ணபரம்பரைவரலாறுகூறுகிறது. அவர்ஏற்படுத்தியமானியம்இன்றும்இருக்கிறது, இந்தக்கிள்ளையிலே. சமுத்திரதீரத்திற்குச்செல்லுமுன்யக்ஞவராகர்மகம்மதியர்பிரார்த்தனைஸ்தலமானமசூதிபக்கம்போய்அவர்கள்செய்யும்மரியாதைகளையும்ஏற்றுக்கொள்கிறார். இன்றும்இப்படிசர்வசமயசமரசவாதியாகயக்ஞவராகர்எழுந்தருளுவதுமிகமிகச்சிறப்பானதல்லவா?

இந்தயக்ஞவராகர்ஒருகாலத்தில்திப்புசுல்தானால்களவாடப்பட்டுமறைந்திருக்கிறார். அப்போதுபுதிதாகச்செய்யப்பட்டமூர்த்தியேஅபிஷேகஆராதனைஏற்றிருக்கிறார். யக்ஞவராகர்திரும்பவும்தன்யதாஸ்தானத்துக்குவந்தபோது, புதிதாகநிர்மாணிக்கப்பட்டவர்போகநாராயணன்என்றபெயரோடுகொஞ்சம்ஒதுங்கிக்கொள்கிறார். இந்தபோகநாராயணனே, சாதாரணநாட்களில்பஞ்சபர்வஉற்சவங்களைஏற்றுக்கொள்கிறார்.

பூவராகனை, யக்ஞவராகனை, போகநாராயணனைஎல்லாம்தரிசித்துவெளியேவந்து, தென்பக்கம்கிழக்கேபார்த்ததனிக்கோயிலில்இருக்கும்தாயாரையும்வணங்கலாம். அவள்அருளையும்பெற்று, கோவில்பிராகாரத்தில்ஒருசுற்றுசுற்றினால்அங்குவடபுறம்ஒருசிறுசந்நிதிஇருக்கும். அச்சந்நிதியில்சப்தமாதர்கள்புடைசூழஅம்பிகைஎழுந்தருளியிருக்கிறாள். அவளேஅம்புஜவல்லியின்அம்சம். பிள்ளைஇல்லாதவர்கள்வேண்டிக்கொண்டால், அவர்களுக்குஅருள்பாலிக்கிறாள். அவளையேகுழந்தையம்மாள்என்றுகூறுகிறார்கள். இவளுக்குஆராதனையெல்லாம்செங்குந்தமுதலியார்கள்செய்கிறார்கள். அவளையும்வணங்கிவிட்டேநாம்கோயிலுக்குவரலாம்.

வெளியேவருகிறபோதுகோயிலில்ராமர்சந்நிதியைக்காணோமேஎன்றுகேட்கத்தோன்றும். அப்படிக்கேட்டால்! இருக்கிறதேஎன்றுகோவிலுக்குவடமேற்குதிசையில்உள்ளநந்தவனத்தில்உள்ளஒருகோயிலுக்குஅழைத்துச்செல்வர். அங்குராமர்பட்டாபிஷேகக்கோலத்தில்இருப்பார். பரதன்வெண்குடைகவிக்க, சத்ருக்னன்கவரிவீசக்காட்சிகொடுப்பார், அனுமார்அங்கேராமாயணபாராயணமேசெய்துகொண்டிருப்பார்.

இவர்கள்பக்கத்திலேயேதசாவதாரக்கோலங்களில்முதல்இரண்டுஅவதாரங்களானமச்சவடிவும்கூர்மவடிவையும்காணலாம். கொஞ்சம்ராமர்சீதைதிருவடியைக்கூர்ந்துநோக்கினால், இருவரும்அவரவர்வலதுகாலில்மட்டும்பாதரட்சைஅணிந்திருப்பதுதெரியும். இருவரதுஇடதுகால்பாதரட்சைகள்என்னஆயிற்றுஎன்றுகேட்போம். அர்ச்சகர்களுக்குஅதற்குசமாதானம்சொல்லத்தெரியாதுஎன்றுநான்நினைக்கிறேன். சித்ரகூடத்தில்பரதன்வந்துராமரதுபாதரட்சைகளில்இரண்டைவாங்கிப்போனதாகராமாயணம்கூறுகிறதுஅல்லவா? ஆனால்ராமர்அவனிடம்கொடுத்ததுஅவரதுபாதரட்சைகள்தானா? அவர்அறிவார், சீதாதேவிதன்னுடையபட்டமகிஷி, சஹதர்மிணி. ஆதலால்தன்னுடன்அரியாசனத்திலிருந்துஆட்சிபுரியும்பாத்தியதைபெற்றவள்என்று. ஆதலால்பரதனிடம்தன்பாதரட்சைஒன்றும்தன்துணைவிசீதையின்பாதரட்சைஒன்றையுமேகொடுத்திருக்கிறார்.

இதைவால்மீகி, கம்பர், துளசிஎல்லோருக்கும்தெரியாமலேயேமறைத்தும்வைத்திருந்திருக்கிறார்என்றாலும்ஸ்ரீமுஷ்ணத்துபட்டாபிஷேகராமரைஉருவாக்கியசிற்பியிடம்இதைமறைக்கமுடியவில்லைஇராமனுக்கு. அவன்எப்படியோஇந்தரகசியத்தைஅறிந்துஅதைஅம்பலப்படுத்தியிருக்கிறான். அவ்வளவுதான். இதைவைத்துஒருபாதுகாபிரபாவமேபாடலாம்போலிருக்கிறது! பாதுகாசஹஸ்ரம்எல்லாம்பாடத்தெரிந்தவர்கள்தானே, கவிஞர்கள், கலைஞர்கள்?

“~“எல்லாம்சரிதான்! – பூவராகன்என்றீர், யக்ஞவராகன்என்றீர், போகநாராயணன்என்றீர், இத்தலம்ஸ்ரீமுஷ்ணம்என்றுஏன்பெயர்பெற்றதுஎன்றுகூறவில்லையே?” என்றுதானேகேட்கிறீர்கள்? அதையும்சொல்லிவிடுகிறேன். ஹிரண்யாட்சன்கதையைமுன்னமேகேட்டிருக்கிறோம். அவனுடையசெல்வம், ஆயுள், புகழ்எல்லாவற்றையும்அபகரித்துஸ்ரீதேவியைக்காப்பாற்றியதால்ஸ்ரீமுஷ்ணம்எனப்பெயர்வந்ததுஎன்கிறார்கள்.

இத்தலத்தில்இன்னொருவிசேஷம், இக்கோயிலைஅடுத்தகீழ்புறத்தில்ஒருசிவன்கோயில்உள்ளதுஅங்குள்ளஇறைவன்பெயர்நித்தீச்சுரர். பூவராகனும்நித்தீச்சுரரும்ஒருவரையொருவர்பாராதுஒருவர்முதுகுப்புறத்திலேஒருவர்முதுகைக்காட்டிக்கொண்டுநிற்கிறார்கள். நமக்குமுன்னமேயேதெரியும்கம்பன்பிறந்தஊராகியதேரழுந்தூரிலேவேதபுரிஈஸ்வரரும்ஆமருவிஅப்பனும்ஒருவரைஒருவர்எதிர்நோக்கிசௌஜன்யமாகநிற்கிறார்கள்என்று. இங்குஏன்பிணங்கிக்கொண்டுஒருவரைஒருவர்பார்க்காதுமுகத்தைத்திருப்பிக்கொண்டுநிற்கிறார்களோதெரியவில்லை.

என்றாலும்இந்தநித்தீச்சுரர்சந்நிதிமுன்புஒருதிருக்குளம்நித்யபுஷ்கரிணிஎன்றபெயருடன்விளங்குகிறது.. ஹிரண்யாட்சனைசம்ஹரித்தகாலத்தில்பூவராகன்மேனியில்இருந்துவடிந்தவேர்வைத்துளிகளேஇப்படிபுஷ்கரிணியாகமாறியதுஎன்றுபுராணம்கூறுகிறது. இப்புஷ்கரிணியின்கரையிலேஅக்கினிதிக்கிலேஒருஅரசமரம்நிற்கிறது. நித்யபுஷ்கரிணியில்நீராடிஇம்மரத்தைவலம்வருபவர்கள்எல்லாநலமும்பெறுவர்என்பதுநம்பிக்கை. இந்தமரமும்பூஜைக்குஉரியபொருளாகிறது.

இக்கோயில்யாரால், எப்போதுகட்டப்பட்டதுஎன்றுதெரியவில்லை. கட்டிடக்கலையைப்பார்த்தால்இதுவிஜயநகரநாய்க்கமன்னர்களால்கட்டப்பட்டிருக்கவேண்டும். அதற்கேற்பஅச்சுதநாய்க்கர், அனந்தப்பநாய்க்கர், கொண்டப்பநாய்க்கர், கோவிந்தப்பநாய்க்கர்முதலியோர்சிலைகள்புருஷசூக்தமண்டபம்என்னும்பதினாறுகால்மண்டபத்தில்நிற்கின்றன. இக்கோயில்பலவருஷங்களாகஉடையார்பாளையம்ஜமீன்தார்கள்மேற்பார்வையில்இருந்துவந்திருக்கிறது. பலநிபந்தங்கள்அவர்களால்ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இதையெல்லாம்ஆராயநமக்குநேரம்ஏது? பூவராகன்பக்ஞவராகன், அம்புஜவல்லித்தாயார்முதலியோரைவணங்கிஅவர்தம்அருள்பெற்றுத்திரும்புவதோடுதிருப்திஅடையலாம்.