தமிழ்நாடு – 120

தமிழ்நாட்டின் அஜந்தா

ஒருநாள்காலைநேரம். நானும்சிலநண்பர்களும்கன்னியாகுமரியிலிருந்துதிருவனந்தபுரத்துக்குப்பயணம்புறப்பட்டோம், நாற்பதுஐம்பதுமைல்மேடுபள்ளங்களின்வழியாக. எல்லாம்நல்லசிமண்ட்சாலைபோடப்பட்டிருக்கிறது. அந்தச்சாலையில்காரில்போவதேஒருஇன்பம். போகிறவழியெல்லாம்தோப்புகள், வயல்கள், ஆறுகள், சிற்றோடைகள், தாமரைத்தடாகங்கள்தான். கண்நிறைந்தகாட்சிகளேஎங்கும். நெய்யாற்றங்கரைக்குக்கீழ்புறம் (ஆம்; நெய்யாற்றங்கரையில்தண்ணீர்தான்ஓடுகிறது. நெய்ஆறாகஓடுகிறதுஎன்றுநினைத்துஅங்குபோய்ஏமாந்துவிடாதீர்கள்.) ஒருபெரியதடாகம். தெளிந்ததண்ணீர்அதில்நிறைந்திருக்கிறது. பக்கத்திலேசேறுபட்டவயல்கள். தடாகத்திலும், இந்தவயல்களிலும்செவ்வாம்பல்பூக்கள்பூத்துக்குலுங்கிக்கொண்டிருக்கின்றன. காதலன்வரவைநோக்கும்காதலியைப்போல்உதயசூரியன், ஆகாயவீதியிலேவரவரமெள்ளமெள்ளஇதழ்விரித்துச்சிரிக்கஆரம்பிக்கின்றனமலர்கள். இந்தமலர்களுக்கிடையிடையேஅன்னப்பறவைகள்அங்குமிங்கும்நீந்திக்கொண்டிருக்கின்றன.

அன்னப்பறவைகளின்குஞ்சுகளும்தாய்மாரோடுநீந்துகின்றன, கொஞ்சநேரத்தில்தடாகம்முழுவதும்செக்கச்செவேலென்றுதாமரைப்பூக்கள்மலர்ந்துவிடுகின்றன. அந்தக்காட்சிதண்ணீரிலேதீப்பற்றிக்கொண்டதுபோலத்தோன்றுகிறது. தாய்ப்பறவைகள், “ஏது, நம்குஞ்சுகள்இந்தத்தீயின்வெம்மையில்வெம்பிப்போய்விடக்கூடாதேஎன்றுஅஞ்சிதத்தம்குஞ்சுகளைத்தங்களுடையசிறகுகளால்அனைத்துஒடுக்கிக்கொள்கின்றன. இப்படியெல்லாம்ஒருகாட்சியைநாம்இன்றுபார்க்கிறோம். இதேகாட்சியைஇரண்டாயிரம்வருஷங்களுக்குமுன்பும்ஒருகவிஞர்பார்த்திருக்கிறார். பார்த்தவர், அந்தக்காட்சியை

அள்ளல்ப்பழனத்து

அரக்கரம்பல்வாய்அவிழ

வெள்ளம்தீப்பட்டது

எனவெரீஇப்புள்ளினம்தம்

கைச்சிறகால்பார்ப்பொடுக்கும்.”

(முத்தொள்ளாயிரம்)

என்றுஒருநல்லபாட்டிலேஅமைத்தும்வைத்திருக்கிறார். ஓர்அற்புதசித்திரத்தைஅழகியசொல்லிலேதீட்டிவைத்திருக்கிறார்என்றும்சொல்லலாம்.

இதைவிடஅழகானஓர்ஓவியத்தைக்கல்லிலேதீட்டிவைத்திருக்கிறான்ஒருசக்கரவர்த்தி. இன்றைக்குஆயிரத்துமுந்நூறுவருஷங்களுக்குமுன்னாலேதீட்டப்பட்டஅந்தச்சித்திரத்தில்நல்லஅழகானதாமரைத்தடாகம்ஒன்றுஉண்டு. தடாகம்முழுவதும்மலர்மயந்தான். அன்னப்பறவைகளும்குஞ்சுகளும்வெள்ளம்தீப்பட்டதுஎனஅஞ்சிநிற்கும்காட்சியெல்லாம்மிகமிகஅழகு. தடாகத்தில்அன்னப்பறவைகள்மட்டுமல்ல, யானைகளும்மாடுகளும்வேறேஇறங்கிக்குழப்புகின்றன. தாமரைத்தடாகம்என்றால்பறவைகளுக்கும்விலங்கினங்களுக்கும்தானா? மக்களுக்குஇல்லையா? ஆகையால்புதுப்புனல்குடையும்ஆடவர்சிலரையும்அங்கேகாண்கிறோம்.

பெண்டிரும்இருந்திருக்கவேண்டும்என்றுகொஞ்சம்கற்பனையும்செய்துகொள்ளலாம். இப்படிப்பட்டஒருசித்தன்னவாசல்சமணக்குகைக்கோயிலிலேமுதற்கட்டின்விதானத்திலேசித்திரித்திருக்கிறான்மன்னன்மகேந்திரவர்மன். ஜைனர்களுடையசுவர்க்கம்ஆகியசாமவசரவணப்பொய்கையையேசித்திரிக்கமுயன்றிருக்கிறான். எல்லாம்கல்லின்மேல்சுண்ணாம்புபூசிஅதன்மேல்என்றும்அழியாவர்ணங்களைக்குழைத்துத்தீட்டியசித்திரங்கள்தான்.

சித்தன்னவாசலைத்தமிழ்நாட்டின்அஜந்தாஎன்றுசொல்லலாம். அஜந்தாசெல்லஅவகாசம்இல்லாதவர்கள்சித்தன்னவாசலுக்குநடையைக்கட்டலாம். தொண்டைமான்புதுக்கோட்டைக்குச்சென்று, அங்கிருந்துகாரிலோவண்டியிலோநேரேமேற்கேசென்றால், இந்தக்குகைவாயிலின்முன்கொண்டுவிடும். பின்அங்குள்ளஇரும்புக்கிராதியைக்காவலன்மூலம்திறந்துஉள்ளேசென்றுமுதற்கட்டில்நுழையவேண்டும்.

கொஞ்சம்நம்முடையகௌரவத்தையெல்லாம்கட்டித்தூரவைத்துவிட்டு, மேலேகிடக்கும்துண்டைஎடுத்துக்கீழேவிரித்துஅதில்படுத்துக்கொண்டுஅண்ணாந்துபார்த்தால்பார்க்கலாம்நான்மேலேசொன்னசித்திரங்களை. கொஞ்சநேரம்இமைகொட்டாதுபார்த்தால், அந்தச்சித்திரக்காரப்புலிசெய்துள்ளவர்ணவிஸ்தாரங்கள்அழகியகாட்சிகள்எல்லாம்தத்ரூபமாய்க்காட்சியளிக்கஆரம்பித்துவிடும். படுத்தவர்கள்அப்படியேமயக்கம்போட்டுவிடாமல், அப்படியேதுண்டைஉதறித்தோளில்போட்டுக்கொண்டுமற்றக்காட்சிகளையும்பார்க்கலாம். தடுப்பவர்ஒருவருமேகிடையாது.

சித்தன்னவாசல்குகைக்கோயில்மிகவும்சிறியகோயில்தான். உள்ளேஒருசதுரமானஅறையும்வெளியேஒருநீண்டதாழ்வாரமுமே. எல்லாம்கருங்கல்மலையிலேகுடையப்பட்டிருக்கிறது. தாழ்வாரத்துப்பக்கச்சுவர்களில்இரண்டுசிலைகள். வடக்கேபார்த்துஇருப்பவர்பார்ஸவநாதர். அவரைஜைனதீர்த்தாங்கரர்இருபத்திநாலுபேர்களில்ஒருவர்என்கிறார்கள். அவருடையதலைமீதுபடமெடுத்தநாகம்விரிந்துகுடைபிடிக்கிறது. தென்புறம்பார்க்கஇருப்பவர்ஜைனகுருஆச்சார்யார். இவருக்குச்சாதாரணகுடையேதான். இருவரும்அர்த்தபத்மாசனத்தில்தியானத்தில்இருக்கிறார்கள். இந்தச்சிலைகள்கல்லில்செதுக்கியசிலைகள். மேலேவர்ணம்பூசப்பட்டுப்பின்னால்உதிர்ந்திருக்கவேண்டும்என்றுதோன்றுகிறது.

மேல்விதானத்தையும், பக்கச்சுவர்களையும்விட்டுக்கொஞ்சம்அந்தமண்டபத்தைத்தாங்கிநிற்பதுபோல்செதுக்கப்பட்டுள்ளதூண்களைப்பார்த்தால்உலகமேகண்டுஅதிசயிக்கத்தகுந்தஇரண்டுஅழகியசித்திரங்களைப்பார்ப்போம். வடபுறத்தில்ஒருநடனமாதைப்பார்க்கிறோம். அவளுடையஅங்கங்களில்ஒருகுழைவு. கண்களிலேஒருகவர்ச்சி. அணிகளிலேஒருவியப்பு. அவளதுரோஜாவர்ணஉடல்அழகும், கருங்கூந்தலிலேதாமரைசொருகியிருக்கும்நேர்த்தியும்நம்மைமயக்கவேசெய்யும். அவளதுதோற்றத்திலும், நடனத்திலும்நாம்உள்ளத்தைப்பறிகொடுத்துவிடாமல்கொஞ்சம்கண்களைத்திருப்பிஅடுத்ததூணைப்பார்த்தால்அங்கேகாட்சிகொடுக்கமகேந்திரவர்மனேகாத்துநிற்கிறான்.

மகேந்திரவர்மன்பெரியவீரன், நல்லகவிஞன், சங்கீர்ணஜதியின்ஆதிகர்த்தா, மத்தவிலாசநாடகாசிரியன், பெரியசித்திரக்காரப்புலிஎன்றெல்லாம்கேள்விப்பட்டிருக்கிறோம்.

மற்றவிஷயங்கள்எல்லாம்உண்மையோஎன்னவோதெரியாது. ஆனால்அவன்ஒருபெரியசித்திரக்காரப்புலிஎன்பதில்எள்ளளவும்சந்தேகம்இல்லைதான். அவனுடையகாம்பீர்யம்அவனுடையமகுடத்திலேயேதெரிகிறது. அவனுடையமுகத்திலோகளைசொட்டுகிறது. “நல்லபணியைநாமும்தமிழ்நாட்டிலேசெய்துமுடித்துவிட்டோம்” – என்றஆத்மதிருப்தியைஅவன்கண்களிலேகாண்கிறோம்.

ஆனால்ஒரேஒருஎச்சரிக்கை. இந்தஇரண்டுசித்திரங்களையும்பார்ப்பதற்குசூட்சுமதிருஷ்டிவேண்டும். மங்கியசித்திரங்கள்தான்அங்கேஇப்போதுஇருக்கின்றன. கண்ணாடிக்கண்ணர்கள்யாராவதுபோய், ‘ஒன்றுமேதெரியவில்லையேஎன்றுசொன்னால்அதற்குநான்பொறுப்பாளியல்ல.

வெளித்தாழ்வாரத்தைவிட்டுஉள்ளேசென்றால்அங்கும்சுவரெல்லாம்சித்திரம். பலஇடங்களில்பொரிந்துவிழுந்துவிட்டனஎன்றாலும், விதானத்தில்எழுதப்பட்டுள்ளசித்திரம்மட்டும்ஆசுஅழியாமல்இருக்கிறது. கம்பளம்விரித்தாற்போன்றசித்திரம்வெகுஅழகாய்இருக்கிறது. ஜைனர்கள்கற்பனைசெய்துள்ளதெய்வலோகக்காட்சியேஅங்குசித்திரிக்கப்பட்டிருக்கிறது. அங்கும்மூன்றுதீர்த்தாங்கரர்களின்உருவம்கல்லில்செதுக்கப்பட்டிருக்கிறது.

இந்தக்குகைக்கோயிலைப்பல்லவசக்கரவர்த்திமகேந்திரவர்மன், அப்பர்பெருமான்அருளால்சைவசமயத்தைத்தழுவுவதற்குமுன்செய்துமுடித்திருக்கவேண்டும்என்றுயூகிக்கிறார்கள்சரித்திரக்காரப்புலிகள். ஜைனனாகஇருக்கும்போதேஇந்தச்சித்திரங்களைஎழுதியிருக்கவேண்டும்என்றுவேறேசொல்கிறார்கள். மன்னன்மகேந்திரனைப்போன்றமகாரஸிகர்கள், ஜாதிமதபேதங்களுக்கெல்லாம்அப்பாற்பட்டவர்கள்.

இதைப்பற்றியெல்லாம்ஆராய்ச்சியும்விவாதமும்நமக்கென்னத்திற்கு?. நாம்பார்த்துஅனுபவிக்கவேண்டியதெல்லாம்அவனும்அவனுடையசகாக்களும்தீட்டிவைத்திருக்கும்சித்திரங்களைத்தானே. சித்திரங்கள்ஆயிரம்வருஷங்களுக்குமேலாகவேஅழியாதிருப்பதுஅதிசயத்திலும்அதிசயமே. மூலிகைகளிலிருந்துஎடுத்தவர்ணம்என்றுமட்டும்சொல்வதற்கில்லை. உலோகங்களிலிருந்தும்வர்ணத்தைவடித்தெடுத்திருப்பார்கள்போல்தோன்றுகிறது, சாதாரணவர்ணத்தில்கூடஇந்தச்சித்திரங்களைத்தீட்டிஉங்கள்கண்களுக்குவிருந்தளிக்கஎன்னால்இயலவில்லை. ஏதோபேனாச்சித்திரங்களைத்தந்தேஉங்களைத்திருப்திசெய்யவேண்டியிருக்கிறது. நமக்கும்ஒருஅஜந்தாஉண்டு. அதைநாமும்பார்த்துவிட்டோம்என்றுகொஞ்சம்திருப்தியடையலாம்அல்லவா?

நவதிருப்பதி

ஒருபக்தர், நம்மாழ்வாரதுதிருவாய்மொழிப்பாசுரங்களைப்பாடிப்பாடித்திளைத்தவர். நம்மாழ்வாரதுஅவதாரத்தலமானதிருக்குருகூரையும், அங்குஆழ்வார்தங்கியிருந்தபுளியமரத்தையும், அங்குகோயில்கொண்டிருக்கும்ஆதிநாதரையும்பற்றிநிறையஅறிந்திருக்கிறார்.

அந்தக்குருகூர்திருநெல்வேலிமாவட்டத்திலேதண்பொருநைஎன்னும்தாமிரபரணிநதிக்கரையிலேஇருக்கும்ஒருசிறியஊர்என்றும், நம்மாழ்வார்அவதரித்தநாளிலிருந்துஅந்ததிருப்பதிக்குஆழ்வார்திருநகரிஎன்றுபெயர்வழங்கிவருகிறதுஎன்பதையும்கேட்டிருக்கிறார். அந்தபக்தருக்குஓர்ஆசை, அந்தக்குருகூருக்குச்செல்லவேண்டும், அங்குகோயில்கொண்டிருக்கும்ஆழ்வாரையும், ஆதிநாதரையும்வணங்கவேண்டும்என்று, சம்சாரபந்தங்களில்சிக்கிச்சுழலும்பக்தருக்கும்அதற்குநாளும்பொழுது, வாய்க்கவில்லை. பலவருடங்கள்கழிகின்றன. கடைசியாகஒருநாள்வசதிபண்ணிக்கொண்டுரயில்ஏறிதிருநெல்வேலியில்வந்துஇறங்குகிறார். அப்போதுதிருகுருகூருக்குரயில்போடப்படவில்லை. பஸ்வண்டிகளும்இன்றுஓடுவதுபோல்ஓடவில்லை. டாக்சிகார்களேகிடையாதகாலம்அது. இதையெல்லாம்ஈடுசெய்யத்தான்அவரிடம்நிறையஆர்வம்இருக்கிறதே.

அந்தஆர்வத்தையேதுணையாகக்கொண்டு, வழிவிசாரித்துக்கொண்டு, திருநெல்வேலியிலிருந்துகிழக்குதோக்கிநடக்கிறார். கிருஷ்ணாபுரம், ஜயதுங்கன்நல்லூர்,

கருங்குளம், ஸ்ரீவைகுண்டம்எல்லாவற்றையும்கடக்கிறார், ஓரிடத்தும்தங்காமலேயே. கடைசியாகபதினேழுமைல்நடந்ததும்ஊர்தெரிகிறது. விசாரித்தால்அதுதான்ஆழ்வார்திருநகரிஎன்கிறார்கள். ஊருக்குவடபுறம்தாமிரபரணிஓடுகிறது. படித்துத்தெரிந்துகொண்டதும், முன்சென்றவர்கள்சொன்னஅடையாளங்களும்சரியாகவேஇருக்கின்றன. பக்தரதுஉள்ளத்திலேஒரேகுதூகலம். பக்தர்நல்லகவிஞரும்கூட, அவரதுஉள்ளத்தில்எழுந்தஉற்சாகம்கவிதையாகபிரவகிக்கிறது. பாடுகிறார்அவர்:

இதுவோதிருநகரி?

ஈதோபொருநை?

இதுவோபரமபதத்து

எல்லைஇதுவோதான்

வேதம்பகர்ந்திட்ட

மெய்ப்பொருளின்உட்பொருளை

ஓதும்சடகோபன்ஊர்?

இதுதானாஆழ்வார்திருநகரி? இதுதானாதண்பொருநை? இதுதானாவைகுந்தநாதன்தங்கும்பரமபதத்துஎல்லை? – இதுதானோவேதத்தின்உட்பொருளையெல்லாம்திருவாய்மொழியாகப்பாடியசடகோபன்என்னும்நம்மாழ்வார்பிறந்தபதி. அடடா! இதைக்காணுகின்றபேறுஎளிதில்சித்திக்கக்கூடியதாஎன்ன, என்றுஒரேஆனந்தவெறியில்ஆடிப்பாடவேஆரம்பித்துவிடுகிறார். அப்படிஒருவெறியைபக்தர்ஒருவருக்குஉண்டாகியதிருப்பதிதான்ஆழ்வார்திருநகரிஎன்னும்குருகூர்.

அப்பர், சம்பந்தர், சுந்தரர்என்னும்மூவர்முதலிகளால்பாடப்பெற்றதலங்கள் 274 என்றுஒருகணக்கு. ஆழ்வார்களால்மங்களாசாஸனம்செய்யப்பட்டதிருப்பதிகள் 108 என்றும்அறிவோம். சமயகுரவர்கள்பாடியதேவாரங்கள்முழுவதும், ஆழ்வார்கள்பாடியபாசுரங்கள்முழுவதும்நமக்குகிடைத்துவிட்டனஎன்றுஉறுதிகூறமுடியாது. ஆதலால்பாடல்பெறாதபதிகள்என்றுநாம்எண்ணும்பலதலங்கள்பாடல்கள்பெற்றிருந்திருக்கலாம்என்றுஎண்ணவும்இடமுண்டு. என்றாலும்பாடல்பெற்றபதிகளுக்குஒருசிறப்புஉண்டு.

அதிலும்நம்மாழ்வார்பாடியபதிகள்என்றால்கேடகவாவேண்டும். பாண்டிநாட்டுவைணவதிருப்பதிகள்பதினெட்டுஎன்றால், அதில்ஒன்பதுதாமிரபரணிநதிக்கரையிலேகுருகூராகவும், அதைச்சுற்றியதிருப்பதிகளாகவும்இருக்கின்றன. அவைகளையேநவதிருப்பதிகள்என்றுவைணவஉலகம்போற்றுகிறது.

இத்திருப்பதிகளைதரிசிப்பதில்ஒருபெரியபுண்ணியம்உண்டு, உள்ளத்துக்குஒருமகிழ்ச்சியும்ஒருதெம்பும்உண்டுஎன்றுஅறிகிறபோதுநமக்குமேஅத்திருப்பதிகளைதரிசித்துவிடவேண்டும்என்றஆர்வமும்துடிப்பும்எழுவதுஇயற்கை. வைகுண்டஏகாதசிதினத்தன்றுவைணவபக்தர்கள்கால்நடையாகக்காலையிலேயேபுறப்பட்டுஸ்ரீவைகுண்டம்முதல்திருகோளூர்வரைஎட்டுத்திருப்பதிகளுக்கும்சென்றுஅங்குள்ளபெருமாள்களைஎல்லாம்வணங்கிமாலையில்ஆழ்வார்திருநகரிவந்துஆதிநாதரும்ஆழ்வாரும்பரமபதத்துக்குஎழுத்தருளும்போதுதாமும்உடன்சேர்ந்துகொண்டால்இந்தபிறவியிலேயேமுத்திநிச்சயம்என்றுநம்பிக்கையோடுயாத்திரைக்குவருபவர்களும்உண்டு.

நமக்கெல்லாம்வைகுண்டஏகாதசிதினத்தன்றுஇதற்குவசதிபண்ணிக்கொள்ளஅவகாசம்கிடைக்கிறதோஎன்னவோ? நல்லதீபாவளிதினத்தன்றுஆம்எல்லோருக்கும்விடுமுறைகிடைத்திருக்கும்நாளில்காலையில்கங்காஸ்நானம்செய்துபுத்தாடைபுனைந்துஇந்தநவதிருப்பதிகளையும்ஒருசுற்றுச்சுற்றிதரிசித்துவிடலாமே. அதற்குநமக்குஅவகாசமும்கிடைக்குமே. அதற்கும்அவகாசமில்லாததமிழ்அன்பர்களைஇன்றுமானசீகமாகவேஇந்தநவதிருப்பதிகளுக்கும்அழைத்துச்சென்றுவிடமுனைகிறேன்நான்இன்று. என்ன, உடன்வருகிறீர்கள்அல்லவா? இல்லைநேராகவேசென்றுபார்த்துவிடுவோமேஎன்றுதுணிகிறவர்களுக்குஒன்றுசொல்வேன்.

திருநெல்வேலியிலோஇல்லைஸ்ரீவைகுண்டத்திலோஒருடாக்சிகார்ஏற்பாடுசெய்துகொண்டுபுறப்படுவதுநல்லது. நடந்தேகிளம்புவோம்என்றால்ஒருஎச்சரிக்கை. மொத்தம்பதினாறு, பதினெட்டுமைல்நடக்கத்தயாராகஇருக்கவேண்டும். இந்தநடராஜாசர்வீசைவிட்டுகாரிலேசென்றால்சுமார்மூன்றுநான்குமணிநேரத்திற்குள்முடித்துத்திரும்பிவிடலாம். இந்தநவதிருப்பதிகளில்ஆறுதிருப்பதிகள்தாமிரபருணியின்வடகரையிலும்மூன்றுதிருப்பதிகள்தென்கரையிலும்இருக்கின்றனஎன்றாலும், ஆற்றின்வடகரையில்நடந்தாலும்சரி, காரில்சென்றாலும்சரி, நான்குதிருப்பதிகளையேவசதியாகக்காணமுடியும்.

தொலைவில்லிமங்கலம்என்னும்கிராமத்தில்ஆற்றின்வடகரையைஅடுத்துஇருக்கும்இரட்டைத்திருப்பதிகளைக்காணதென்கரையிலிருந்துநடந்தேஆற்றைக்கடந்துசெல்வதுதான்நல்லது. வசதியானதும்கூடஇதையெல்லாம்சொல்லிக்கொண்டிருப்பதைவிடயாத்திரையையேதுவங்கிவிடுவதுநல்லது.

திருநெல்வேலியிலிருந்துபஸ்ஸிலோரயிலிலோ, முதலில்ஸ்ரீவைகுண்டம்போய்ச்சேர்ந்துவிடுவோம். ரயிலில்சென்றால்தாமிரபருணியின்தென்கரையில்புதுக்குடிஎன்றசிற்றூரில்தான்இறங்குவோம். இனிஆற்றின்பேரில்கட்டியிருக்கும்பாலத்தின்வழியாகநடந்துஸ்ரீவைகுண்டம்ஊர்போய்ச்சேரலாம். பாலத்தின்மீதுபோகும்போதேநீண்டுயர்ந்தகோபுரம்தெரியும். அதைநோக்கிநடந்தால்அங்குள்ளகள்ளப்பிரான்கோயில்வாயில்வந்துசேருவோம்.

விறுவிறுஎன்றேஉள்ளேநுழைந்து, அர்த்தமண்டபம்சென்றால்அங்கேதங்கத்தால்ஆனமஞ்சத்திலேதிருமகளும்நிலமகளும்இருபுறமும்நிற்க, கள்ளப்பிரான்கையில்கதையுடன்நிற்பார். அவர்நம்உள்ளம்கவரும்கள்வராகபேரழகுடன்இருப்பார். இவருக்கும்பின்னாலேதான்மூலவராககருவறையிலேவைகுந்தநாதர்தனித்தேநிற்கிறார். இவர்பலகாலம்மண்ணுள்மறைந்திருந்ததாயும், அந்தஇடத்திலேபசுக்கள்எல்லாம்பால்சொரிந்துநிற்க, அதன்பின்னரேவெளிவந்திருக்கிறார். அதனால்அவரைபால்பாண்டியன்என்றும்செல்லமாகஅழைக்கின்றனர். ஒவ்வொருஆண்டும்சித்திரைமாதம்ஐந்துஆறாம்தேதிகளில்காலையில்இளஞ்சூரியனதுகிரணங்கள். கோபுரவாயில்மண்டபங்கள்எல்லாம்கடந்துவந்துவைகுந்தநாதர்மேனியைப்பொன்னிறமாக்குகின்றன. சிவபெருமானுக்குஇச்சூரியபூசைபலதலங்களில்நடக்கிறதுஎன்றாலும், பரந்தாமனுக்குஇந்தசூரியபூசனைநடப்பதுஇந்தத்திருப்பதிஒன்றிலேதான். இக்கோயிலின்கன்னிமூலையில்வைகுண்டநாயகிதனிக்கோயிலில்கோவில்கொண்டிருக்கிறாள். அதற்குஎதிர்த்தவடதிசையில்சோரநாதநாயகிக்கும்ஒருதனிக்கோயில்இருக்கிறது. இக்கோயிலில்காணவேண்டியவைசெப்புப்படிமமாகஇருக்கும்லக்ஷ்மிநரசிம்மர்ஒருவர். வெளிமண்டபத்திலேஇரண்டுஅழகியசிற்பங்கள். ராமன்சுக்ரீவனைஅணைத்துக்கொண்டுநிற்கும்கோலம்ஒன்று. அதற்குஎதிர்திசையில், லக்ஷ்மணர்அனுமனையும்அங்கதனையும்அணைத்துநிற்கும்கோலம்ஒன்று. இரண்டுமேதமிழ்நாட்டின்சிற்பக்கலைஉலகில்பிரசித்திபெற்றவை.

வைகுண்டநாதன்சந்நிதியிலேயேநீண்டநேரம்நின்றுவிட்டோம். இனிவிறுவிறுஎன்றுமூன்றுமைல்நடந்தால்நத்தம்என்றஊர்வந்துசேருவோம். நத்தம்என்னும்நவதிருப்பதிஒன்றுகிடையாதேஎன்றுஎண்ணினால், அந்தஊர்தான்வரகுணமங்கைஎன்றதிருப்பதிஎன்றுஅறிவோம்.

அங்குகோயில்கொண்டிருப்பவர்விஜயாசனர். பெயருக்குஏற்பஇருந்ததிருக்கோலத்திலேயேகாட்சிஅளிப்பார். அவர்பக்கத்தில்வரகுணவல்லித்தாயாரும்வீற்றிருப்பார். அவர்களையும்வணங்கிவிட்டுமேல்நடந்தால்புளிங்குடிஎன்றதிருப்பதிவந்துசேருவோம். இங்கேபுஜங்கசயனராகபெருமாள்கிடக்கிறார். நல்லஆகிருதியானவடிவினர். அர்த்தமண்டபத்தையும்கடந்துகருவறைவாயில்வரைசென்றால்தான்அவரதுமுழுவடிவையும்காணலாம்.

அதற்கெல்லாம்பட்டாச்சாரியார்கள்அனுமதிக்கமாட்டார்கள். கோயில்பிராகாரத்தைச்சுற்றிவரும்போதுவடக்குவாயில்சன்னல்வழியாகக்கண்டால்பாததரிசனம்கிடைக்கும். பாதங்கள்இவைஎன்னில்படிவங்கள்எப்படியோஎன்றுகொஞ்சம்கற்பனைபண்ணிஅந்தக்காசினிவேந்தன்வடிவைக்கண்டுகொள்ளவேண்டியதுதான், இதுவரைநாம்கண்டமூன்றுகோயில்களையும்சேர்த்தேநம்மாழ்வார்மங்களாசாஸனம்செய்துவைத்திருக்கிறார்.

புளிங்குடிகிடந்துவரகுலைமங்கை

இருந்து, வைகுந்தத்துள்நின்று

தெளிந்தஎன்சிந்தைஅகங்கழியாதே

என்னைஆள்வாய், எனக்கருளி

தணிந்தசீர்உலகம்மூன்றுடன்வியப்ப

நாங்கள்கூத்தாடிநின்றுஆர்ப்ப

பளிங்குநீர்முகிலின்பவளம்போல்கனிவாய்

சிவப்பநீகாணவாராயே

என்பதுநம்மாழ்வார்பாசுரம்.

புளிங்குடியிலிருந்துஐந்துமைல்கிழக்குநோக்கிச்சென்றால்பெருங்குளம்வந்துசேருவோம். பெயருக்குஏற்பஊரைஒட்டிவடபுறத்தில்ஒருபெரியகுளமேஇருக்கிறது. இங்குள்ளகோயிலில்கோயில்கொண்டிருப்பவர்தான்மாயக்கூத்தர். இவரேஉத்சவர். மூலவராகஇருப்பவர்வேங்கடவாணர். அவர்பிரஹஸ்பதிக்குபிரத்யக்ஷமானவர். அவர்பக்கலிலேயேபிரஹஸ்பதியும்இருக்கிறார். இந்தமாயக்கூத்தனையும்நம்மாழ்வார்பாடிமகிழ்ந்திருக்கின்றார்.

மாடக்கொடிமதிள்

வண்குட்டால்நின்றமாயக்கூத்தன்

ஆடற்பறவைஉயர்த்தவெல்போர்

ஆழிஅலவனைஆதரித்தே.

என்பதேநம்மாழ்வார்பாசுரம். மாயக்கூத்தனையும்குளந்தைவல்லியையும்வணங்கிவிட்டுதுலைவில்லிமங்கலம்நோக்கிநடக்கலாம். ஆம்நடக்கவேவேணும். வாய்க்கால்கரை, வயல்வரப்புஉடங்காடுஎல்லாம்கடந்தேதுலைவில்லிமங்கலத்துஇரட்டைத்திருப்பதிசேரவேண்டும். இந்தப்பயணம்எளிதானதுஅல்ல. பாதையும்சரியாய்இராது.

ஆதலால்காரில்ஏறிக்கொண்டு, வந்தவழியேதிரும்பிஸ்ரீவைகுண்டம்வந்துதாமிரபருணியின்தென்கரையிலேஆறுமைல்தூரம்போனால்காமெல்லாபாத்என்றமுஸ்லீம்சகோதரர்களின்புதியகிராமத்தண்டைவந்துசேருவோம். அங்குஆற்றின்தென்கரையிலேகாரைநிறுத்திவிட்டு, இறங்கிக்கரைஏறிஆற்றைக்கடந்தால்துலைவில்லிமங்கலத்தில்உள்ளஇரட்டைத்திருப்பதிவந்துசேருவோம். நல்லஉடங்காட்டிற்குள்ளேஇரண்டுசிறியகோயில்கள்ஒன்றைஒன்றுஅடுத்துஇருக்கும். ஒன்றிலேஇருப்பவர்தேவர்பிரான். மற்றொன்றிலேநிற்பவர்அரவிந்தலோசனர். இவர்களையும், கருந்தடங்கண்ணிஎன்னும்தாயாரையும்தரிசித்துவணங்கிஇந்தஇரட்டைத்திருப்பதிப்பெருமாள்களைப்பற்றிப்பத்துபாடல்களைநம்மாழ்வார்பாடிமங்களாசாஸனம்செய்திருக்கிறார்.

சிந்தையாலும்சொல்லாலும்

செய்கையினாலும்தேவர்பிரானையே

தந்தைதாயென்றடைந்தசடகோபன்

என்றேதன்னைஅறிமுகப்படுத்திகொள்கிறார்.

இனிஇரட்டைத்திருப்பதியைவிட்டுதாமிரபரணியின்தென்கரைவந்துகார்ஏறி, கிழக்கேஒன்றரைமைல்சென்றுவடக்கேதிரும்பினால், தென்திருப்பேறைஎன்னும்திருப்பதிவந்துசேருவோம். இங்கேகோயில்கொண்டிருப்பவர்தான்மகரநெடுங்குழைக்காதர். எல்லாத்திருப்பதிகளிலும்பெருமாளின்அங்கஅழகைவைத்துபுதுப்புதுப்பெயர்பூண்டுநிற்கும்பெருமாள்இத்திருப்பதியில்காதில்அணிந்திருக்கும்குழையையேதன்திருப்பெயராகத்தாங்கிநிற்கும்அழகுடையவராகஇருக்கிறார். இங்குள்ளமூலவர்நிகரில்முகில்வண்ணன். இப்பெருமாளையும்குழைக்காதவல்லித்தாயாரையும்வணங்கி,

மகாநெடுங்குழைக்காதன்மாயன்

நூற்றுவரைஅன்றுமங்கநூற்ற

நிகரில்முகில்வண்ணன்நேமியான்

என்நெஞ்சம்கவர்ந்தென்னைஊழியாலே

என்றநம்மாழ்வார்பாடலையும்பாடிவிட்டு, மேற்குநோக்கிமூன்றுமைல்நடந்தால்மதுரகவிஆழ்வாரின்அவதாரத்தலமானதிருக்கோளூர்என்னும்திருப்பதிவந்துசேருவோம்.

மதுரகவியாழ்வார்பெருமாளையேபாடவில்லை. அவர்கண்டஞானஒளி, வகுளபூஷணபாஸ்கரன்நம்மாழ்வார்தானே? அவரேஅவருக்குத்தெய்வம்எல்லாம். கோயில்சிறியகோயில்தான்என்றாலும், அங்குள்ளபெருமாள்வைத்தமாநிதி. இவரும்கிடந்ததிருக்கோலம்தான்.

உண்லும்சோறுபருகும்நீர்

தின்னும்வெற்றிலை.

– –

யெல்லாம்எம்பெருமான்

என்றேகண்கள்நீர்மல்கி

மண்களில்உளவனசீர்

வளம்மிக்கவனூர்வினவி

திண்ணம்யென்னினமான்புகும்

ஊர்திருக்கோளூரே

என்றுநம்மாழ்வாரால்பாடல்பெறும்பேறுபெற்றஊர்ஆயிற்றே. இங்குள்ளவைத்தமாநிதியாம்மதுசூதனனைவணங்கிவிடைபெற்று, நவதிருப்பதிகளில்பிரதானதலமாகியஆழ்வார்திருநகரிஎன்னும்குருகூர்வந்துசேரலாம்.

அங்குகோயில்கொண்டிருக்கும்ஆதிநாதப்பெருமாள், பொலிந்துநின்றபெருமாள், சடகோபர்என்னும்நம்மாழ்வார், அவர்இளமையில்இருந்ததிருப்புளிஎல்லாவற்றையும்தரிசித்துவிட்டுஊர்திரும்பலாம். திரும்பும்போதுஇதுவோதிருநகரிஎன்றுஎக்களிப்போடுபாடியகவிஞன்போல

சேமம்குருகையோ?

செய்யதிருப்பாற்கடலோ

நாமம்பாராங்குசமோ

நாரணமோதாமம்

துளவேர்வகுளமோ

தோள்இரண்டோநான்கும்

உளவோபெருமான்உனக்கு

என்றுநவதிருப்பதிகளையும்பாடியநம்மாழ்வாரிடமேகேட்கலாம். அத்தகையதெம்புதான்இதற்குள்நமக்குவந்திருக்கவேண்டுமே!

அருக்கன்குளம்காட்டுராமர்கோயில்

தாயுரைகொண்டுதாதைஏவகானாளப்புறப்படுகின்றான்கமலக்கண்ணனானராமன். உடன்செல்கிறார்கள்தம்பிலக்ஷ்மணனும்மனைவிசீதையும். மூவரும்பஞ்சவடியில்தங்கியிருந்தபோதுஇலங்கைவேந்தனானராவணன்வஞ்சத்தால்மூவரும்பிரிகிறார்கள், அந்தநேரத்தைப்பயன்படுத்திக்கொண்டுசீதையைக்கவர்ந்துசெல்கிறான்ராவணன்.

அப்படிச்செல்லும்ராவணனைஎதிர்த்துப்பறவைக்கரசனானசடாயுபோரிடுகிறான். தன்இறகுகளைராவணன்வெட்டிவிட்டதால்கீழேவிழுந்துகிடக்கிறான். சீதையைத்தேடிப்புறப்பட்டராமலக்ஷ்மணர்களைச்சந்தித்து, சீதையைச்சிறைஎடுத்துச்சென்றஅரக்கன்போனவழியைச்சொல்லிவிட்டு, சடாயுஉயிர்துறக்கிறான். சடாயுவைத்தன்தந்தையாகவேமதித்தராமன், தன்தந்தைக்குச்செய்யும்ஈமக்கடன்களைஎல்லாம்செய்கிறான். இதனைஆதிகவிவான்மீகிசொல்கிறார். அவர்வழிநின்றுஅமரகாவியம்எழுதியகவிச்சக்கரவர்த்திகம்பனும்சொல்கிறான்.

ஏந்தினன்இருகைதாளினால்

ஏற்றினன்ஈமம்தன்மேல்

சாந்தொடுமலரும்நீரும்

சொரிந்தனன்தலையின்சரல்

கரந்துஎரிகாலமூட்டி

கடன்மூறைகடவாவண்ணம்

நேர்ந்தனன்நிரம்புநன்னூல்

மந்திரநெறியில்வல்லான்.

என்பதுகம்பன்பாட்டு.

இந்தநிகழ்ச்சிஎங்குநடந்தது? என்றுஒருகேள்வி, சோழநாட்டிலேசீகாழியைஅடுத்தவைத்தீஸ்வரன்கோயிலுக்குள்ளேசடாயுகுண்டம்என்றுஒருஇடம்இருக்கிறது. அதில்கொஞ்சம்சாம்பலும்இருக்கிறது. அதுவேசடாயுவைத்தகனம்செய்தஇடம்என்றுகூறும்அத்தலவரலாறு. ஆனால்ராமன்ஈமக்கிரியைகளைச்செய்தான்என்றவரலாறுஇல்லை.

திருநெல்வேலிஜில்லாவிலேநாரணம்மாள்புரம், மணிமூர்த்தீஸ்வரம்என்னும்இரண்டுசிற்றூர்களுக்குஇடையேஒருசிறுகிராமம்அருக்கன்குளம்என்றபெயரோடுதாமிரபரணிநதிக்கரையில்இருக்கிறது. அங்கும்ஒருசடாயுகுண்டம்இருக்கிறதுசடாயுகுண்டம்என்பதுஒருநல்லகிணறுபோல்இருக்கிறது. எக்காலத்தும்அதில்தண்ணீர்ஊறிக்கொண்டேஇருக்கிறது: இக்குண்டத்தின்கரையிலேஒருசிறுகோயில். அதில்கோயில்கொண்டிருப்பார்அனந்தநாராயணன். வைகுந்தவாசனானஅந்தநாராயணன், லட்சுமிசமேதனாகஅங்கேசிலைஉருவில்இருக்கிறான். பக்கத்திலேசடாயுவும்நின்றுகொண்டிருக்கிறான்.

இந்தசடாயுகுண்டத்திற்குத்தெற்கேஒருபர்லாங்குதொலைவில்ஒருபெரியகற்கோவில்இருக்கிறது. அதனைக்காட்டுராமர்கோயில்என்கின்றனர், உடைமரங்கள்நிறைந்தஒருகாட்டிடையே, இரண்டரைஏக்கர்விஸ்தீரணமுள்ளஇடத்தில், இக்கோயில்கட்டப்பட்டிருக்கிறது. செப்பறைலிருந்துபாலாமடைசெல்லும்ராணிமங்கம்மாள்சாலையைஅடுத்து. இக்கோயில்இருக்கிறது.

தென்தமிழ்நாட்டைநாயக்கமன்னர்கள்ஆண்டகாலத்தில், கட்டப்பட்டுள்ளஇந்தக்கோயில்விமானத்திற்குச்சிகரம்இல்லை. அதில்கலசமும்இல்லை. இதைஎல்லாம்விடகருவறையில்ராமர், லக்ஷ்மணர், சீதைசிலைகளையேகாணோம். அவைகளையாரோஉடைத்துஎறிந்திருக்கிறார்கள். உடைந்ததுண்டுகள்மட்டும்கோயில்பிராகாரத்திலேகிடக்கின்றன.

இந்தஇடத்தில்தான்சடாயுவுக்குராமன்ஈமக்கடன்செய்தானாஎன்றுகேட்கத்தோன்றும். இக்கேள்விக்குவிடைபெற, ஊரைஅடுத்துள்ளராமலிங்கர்கோயில்பக்கம்போகவேணும். இக்கோயில்நல்லநிலையில்இருக்கிறது.

அங்குதான்ராமர்பூஜித்தராமலிங்கரும்பர்வதவர்த்தினியும்கோயில்கொண்டிருக்கிறார்கள். இக்கோயிலுக்குவடபுறம்ஒருசிறுகோயில். அக்கோயிலிலேராமாவதாரத்தின்மூலமூர்த்தியானஸ்ரீநிவாசப்பெருமாள்நிற்கிறார். அவர்பிண்டம்போடுவதுபோல்வலதுகையைமடக்கிவைத்துக்கொண்டுநிற்கிறார்.

இந்தவடிவினைப்பார்த்தபின்நமதுசந்தேகங்கள்எல்லாம்தீர்ந்துவிடும். இதுதான்உண்மையிலேயேசடாயுகுண்டம், சடாயுதீர்த்தம்எல்லாம். இந்தத்தாமிரபரணிக்கரையிலேதான்ராமன்தெய்வமரணம்உற்றசடாயுவுக்குபிதுர்க்கடன்களைஎல்லாம்செய்திருக்கிறான்.

பின்னர்பக்தர்கள்விருப்பப்படியேஅங்கேயேஎழுந்தருளியிருக்கிறான். பதிநான்குவருஷம்காட்டிடையேவாழ்ந்தஅந்தசக்கரவர்த்திதிருமகனானராமனைகாட்டுராமன்என்றும்அவன்கோயிலைக்காட்டுராமர்கோயில்என்றும்மக்கள்அழைப்பதும்பொருத்தம்தானே?

இப்படிபிரசித்திபெற்றகோயிலில்மூலவிக்கிரகங்கள்இல்லாதகுறையைநீக்கஅன்பர்சிலர்மூன்வந்திருக்கின்றனர். ராமன், லக்ஷ்மணர், சீதைமூவரதுவடிவினையும்நல்லசிலைஉருவில்அமைத்துவைத்திருக்கிறார்கள். அவற்றைவிரைவில்கோயிலில்பிரதிஷ்டைசெய்யவும்ஏற்பாடுசெய்திருக்கிறார்கள். அந்தகாட்டுராமனுடையதிருப்பணியிலேபங்குகொண்டால், நமதுபெயரும்நிலைத்துநிற்குமல்லவா?