தமிழ்நாடு – 121

பெருங்குளத்து மாயக்கூத்தர்

கூத்தன்என்றதுமேநம்எண்ணத்தில்வருவதுஆனந்தக்கூத்தாடியநடராஜமூர்த்தம்தான். இலக்கியவரலாறுகளிலேசிவபெருமான்ஆடியகொடுகொட்டி, பாண்டரங்கம்முதலியகூத்துகளைப்போலவேகண்ணனும், அல்லியம், மல்குடம்முதலியஆட்டங்களைஆடினான்என்பதுகுறிக்கப்படுகிறது. இன்னும்முருகன், துர்க்கை, கொல்லிப்பாலை, இந்திராணிமுதலியோர்ஆடியகூத்துகளும்விவரிக்கப்படுகிறது. இத்தனைக்கும்மேலேமாயனர்ம்பரந்தாமனேஒருமாயக்கூத்தையும்ஆடிமாயக்கூத்தன்என்றபெயரையும்பெற்றிருக்கிறான்என்கிறபோது, அந்தவரலாற்றைஅறியஆவல்ஏற்படுவதுசகஜம்தானே! அந்தவரலாறுஇதுதான்.

தண்பொருநைஎன்னும்தாமிரபரணியின்வடகரையிலேகுளந்தைஎன்றுஒருசிற்றூர். அங்கேகோயில்கொண்டிருப்பவர்வேங்கடவாணர். அவரிடம்ஆறாதபக்திகொண்டிருப்பவர்வேதசாரர்என்றஅந்தணர். அவரும்அவர்மனைவிகுமுததுவதையும்இல்லறம்நடத்திவந்தனர்.

அவர்களுக்குகமலவதிஎன்றுஒருமகள்பிறந்துவளர்ந்துவந்தாள். இந்தநிலையில்ஓர்அரக்கன்அங்குவந்துவேதசாரரின்மனைவியைக்கவர்ந்துசென்றுவிடுகிறான். மனைவியைமீட்கவழியறியாது. திகைக்கிறார். தான்வணங்கும்ஸ்ரீநிவாசனிடமேவிண்ணப்பித்துக்கொள்வதைத்தவிரவேறுசெய்யஅறியாதுவாழ்கிறார். ஸ்ரீநிவாசனும், அவனதுராமாவதாரத்தில்தன், மனைவிசீதையைஇராவணன்எடுத்துச்சென்று, அசோகவனத்தில்சிறைவைத்திருந்தபோது, பிரிவுத்துயரைஅனுபவித்தவன்தானே?

ஆதலால்பக்தனாம்வேதசாரரின்துயர்துடைக்கவேண்டி, அரக்கன்மேல்படைகொண்டுசென்றுஅவனைவென்று, அவனனத்தன்காலின்கீழ்போட்டுமிதித்துமாயக்கூத்தாடுகின்றார். இதனாலேயேஇத்தலத்தில்கோயில்கொண்டிருக்கும்பரந்தாமன்சோரநாட்டியசர்மன்மாயக்கூத்தன்என்றுபெயர்பெற்றிருக்கிறான். சோரனிடமிருந்துபக்தரதுமனைவியைமீட்டுக்கூத்தாடியபெருமகனேசோரநாட்டியன்எனப்படுகிறான். இவனைப்பற்றியதுதிஒன்றுஇத்துணைவிவரத்தையும்கூறுகிறது.

ஸ்ரீவேதசாரமகிஷியும்அபக்ருத்யநித்யாம்

ஸ்நாதுங்கதாம்திதிசுதேன

குகாபநீதாம். ஆனியதூர்ணமதிசது

கருணாநிதிஹியஹதம்சோரநாட்டியம்

அனிஷம்கானம்பிரயத்யே.

என்பதுதான்துதி. இந்தசோரநாட்டியன்என்னும்மாயக்கூத்தன்கோயில்கொண்டிருக்கும்தலம்தான்பெருங்குளம்என்னும்திருக்குளந்தை. அதுவைணவத்திருப்பதிகள்நூற்றெட்டில்ஒருதிருப்பதி, அந்தத்தலத்துக்கேசெல்கிறோம்நாம்இன்று.

பெருங்குளம்என்னும்திருக்குளந்தை, திருநெல்வேலிக்குக்கிழக்கேஇருபத்திஐந்துமைல்தொலைவிலுள்ளசிறியஊர். இதற்குரயிலில்போவதானால்ஸ்ரீவைகுண்டம்ஸ்டேஷனில்இறங்கிகார்வைத்துக்கொண்டோ , பஸ்ஏறியோ, பத்துமைல்வடகிழக்காகப்போகவேணும். தூத்துக்குடியிலிருந்துஇருபதுமைல்தெற்கேவந்தாலும்வரலாம். இந்தஊரில்அதன்பெயருக்கேற்பபெரியஏரிகுளம்ஒன்றிருக்கிறது. ஸ்ரீவைகுண்டத்திலிருந்துசெல்லும்வழியேபலகுளக்கரைகள்வழியாகத்தான்செல்கிறது.

ஒருபக்கம்நீர்நிறைந்தஏரிகளும், ஒருபக்கம்பரந்தநெல்வயல்களுமாககண்ணுக்குஇனியகாட்சிஅளிக்கும். இத்தலம், ஆழ்வார்பாடியநவதிருப்பதிகளுள்ஒன்று. அந்தநவதிருப்பதிகளில்தாமிரபரணியின்வடகரையிலிருப்பவைஆறு. அதில்இதுமேற்கேஇருந்துநான்காவதுதிருப்பதி, இத்தலத்தில்கோயில்கொண்டிருக்கும்பரந்தாமனாம்மாயக்கூத்தனை,

கூடச்சென்றேன்இனிஎன் :கொடுக்கேன், கோல்வளைநெஞ்சத்

தொடக்கமெல்லாம்

பாடற்றுஒழிய, இழந்து

வைகல்பல்வளையார்முன்

பரிசலிந்தேன்

மாடக்கொடிமதின்தென்குளந்தை

வண்குடபால்நின்ற

மாயக்கூத்தன்

ஆடல்பறவைஉயர்ந்த

வெல்போர்ஆழி

வலவனைஆதரித்தே

என்றுபாடிமகிழ்ந்திருக்கிறார்நம்மாழ்வார். இம்மாயக்கூத்தனையும், இத்தலத்தையும்பற்றிஇவர்பாடியபாட்டுஇந்தஒரேபாட்டுத்தான்.

இவ்வூரையடைந்து, குளக்கரையையும்கடந்து, சந்நிதித்தெருவழியாகமேற்குநோக்கிநடந்தால்கோயில்வாயில்வந்துசேரலாம். கோயில்வாயிலில்ஒருசிறுகோபுரம்உண்டு. அதனைஅடுத்தேபந்தல்மண்டபம். அம்மண்டபத்திலேயேதிருமஞ்சனக்குறடு. இந்தமண்டபத்தில்நுழையும்முன்பே, தென்பக்கம்திரும்பினால், ஒருசிறுமண்டபம்பூட்டிவைக்கப்பட்டிருக்கும்.

அதைத்தான்கழுநீர்ப்பெருமான்சந்நிதிஎன்பர். மடைப்பள்ளியிலிருந்துவரும்கழுநீர்எல்லாம்அப்பக்கமாகத்தான்ஓடும். அங்குஒருகாவல்தெய்வம்இருந்திருக்கவேண்டும். அவனையேகழுநீர்த்துறையான்என்றுஅன்றுமக்கள்அழைத்திருக்கவேண்டும்.

இன்றுஅம்மண்டபத்தில்இருப்பதுஒருபீடம்மட்டுமே. கழுநீர்த்துறையான்கழுநீரோடுகழுநீராய்கரைந்துபோய்விட்டான்போலும்! கோயில்வாயிலுக்குவடபுறம், அவருக்குத்தனிசந்நிதி. அவரையும்வணங்கிவிட்டேகோயிலுக்குள்நுழையலாம். கொடிமடம்மகாமண்டபம்எல்லாம்கடந்தேஅர்த்தமண்டபம்வரவேணும். அங்கிருந்தேமூலவராம்வேங்கடவாணனைத்தரிசிக்கலாம். வேங்கடவாணன்அந்ததிருமலைவேங்கடவனைப்போலதனியாகவேநின்றகோலத்தில்சேவைசாதிக்கிறார். மேலேவர்ணம்பூசப்பட்டிருக்கிறது.

இந்தவேங்கடவாணன்இருக்கும்கருவறையிலேவேதசாரரும், அவர்மனைவிகுமுதவதையும்கூப்பியகையராய்நிற்கிறார்கள். அத்துடன்பிரகஸ்பதியும்இருக்கிறார். ஸ்ரீதேவிபூதேவிக்குஅவர்இடம்கொடுக்கவில்லை. அர்த்தமண்டபத்தில்இருக்கும்உத்சவரேமாயக்கூத்தர்என்றுஅழைக்கப்படுகிறார். அவருக்குஇருமருங்கிலும்அலர்மேல்மங்கைத்தாயாரும், குளந்தைவல்லித்தாயாரும்இருக்கின்றனர்.

மூவரும், இவர்பக்கலில்கருடனும், அழகியகுறட்டொன்றிலேசர்வாலங்காரபூஜிதராய்நிற்கின்றனர். வேங்கடவாணனையும்மாயக்கூத்தரையும்வணங்கித்திரும்பும்போதுஇத்தலத்திற்குச்சிறப்பானகருடாழ்வார்இருவரைக்காணலாம். ஒருவர்புத்தம்புதியமேனியர். மற்றொருவர்புராதனமானவர்.

அவர்கையிலேபாம்பொன்றுஏந்தி, பெருமாள்எழுந்தருளுவதற்குஏற்றமுறையில்கால்மடித்துசிறகைவிரித்துநிற்கிறார். இன்னும்இத்தலத்தில்ஆழ்வார்கள்பலரும், உடையவரும், சேனைமுதலியார்என்னும்விஸ்வக்சேனரும்மற்றக்குறடுகளில்எழுந்தருளியிருக்கிறார்கள். இன்னும்மணவாளமாமுனிகள்சந்நிதியும்தனியேஇருக்கிறது.

இங்குள்ளமாயக்கூத்தருக்குதங்கக்கவசம்அணிவிக்கப்பட்டிருக்கிறது. அதைப்பற்றிரஸமானவரலாறுஒன்றுஉண்டு. ஆழ்வார்திருநகரியில்நாயக்கர்மண்டபம்கட்டிமுடிந்தகாலத்தில்வைகாசிஉத்சவம்சிறப்பாகநடந்துகொண்டிருந்தது. அந்தஉத்சவத்திற்குநவதிருப்பதிப்பெருமாள்களும்எழுந்தருளுவதுவழக்கம். பலவருஷங்களுக்குமுன்இந்தஉத்சவத்தைக்காணசென்னையிலிருந்துஒருகுடும்பத்தினர்வந்திருந்தனர்.

அவர்கள்தாம்நமதுமுன்னாள்அறநிலையஅமைச்சர்திருவேங்கடசாமிநாயுடுஅவர்களின்முன்னோர். அக்குடும்பத்தலைவர்மற்றொருவருக்கும்சொல்லாமல்தன்மனதிற்குள்ளேயேஒருபிரார்த்தனைசெய்துகொண்டார். நவதிருப்பதிப்பெருமாள்களில்ஆதிநாதரைத்தவிரமற்றவர்களில்எவர்முதல்முதல்நாயக்கர்மண்டபத்திற்குவந்துசேர்கிறாரோ, அவருக்குத்தங்கக்கவசம்செய்துசாத்துவதுஎன்றுபிரார்த்தனை. அன்றுமுதல்முதல்எழுந்தருளியவர்மாயக்கூத்தர். அதனால்அவர்பிரார்த்தனைப்படிதங்கக்கவசம்செய்துஅணிவித்திருக்கிறார்.

ஆம். பெரியவர்பெருமான்களிடையேஓர்ஓட்டப்போட்டியையேவைத்திருக்கிறார். அந்தப்போட்டிப்பந்தயத்தில்முன்னோடிவந்துஜெயித்தவர்மாயக்கூத்தராகஇருந்திருக்கிறார். மாயக்கூத்தர்சோரநாட்டியம்மட்டும்ஆடவல்லவர்அல்ல. நன்குஓட்டப்பந்தயத்திலும்வெற்றிபெறக்கூடியவர்என்பதைஅறிகிறோம்.

இக்கோயிலில்கல்வெட்டுகள்இல்லைஎன்றாலும், ஆழ்வார்திருநகரியில்எடுத்தகல்வெட்டுக்களில்இத்தலம்குறிப்பிடப்பட்டிருக்கிறதுஅக்கல்வெட்டுகள்மூலம், பெருங்குளத்தில்சிலநிலங்கள்ஆழ்வார்திருநகரித்திருவிழாச்செலவினுக்குநன்கொடையாகஅளிக்கப்பெற்றிருக்கிறதுஎன்றுதெரிகிறது. இக்கல்வெட்டுகளில், இவ்வூர், உத்தமபாண்டியநல்லூர்என்றபெருங்குளம்என்றேகுறிப்பிடப்பட்டிருக்கிறது.

இக்கோயிலுக்குப்கீழ்புறம்ஒருசிவன்கோயில்இருக்கிறது. அங்குகோயில்கொண்டிருப்பவர்வழுதீசர். இவர்திருக்குறள்அரங்கேறியகாலத்தில்பாண்டியநாட்டைஆண்டுவந்தஉக்கிரப்பெருவழுதியால்பிரதிஷ்டைசெய்யப்பட்டவர்என்பதுவரலாறுஎன்பதால்அவரதுபழமையும்விளங்கும். இந்தவழுதீசர்கோயில்ஜீரணோத்தாரணப்பணிசிறப்பாகநடந்துவருகிறது.

மாயக்கூத்தர்கோயில்கோபுரம், கருவறைமேல்உள்ளஆனந்தநிலையவிமானம்எல்லாம்சிதைந்துஇருக்கிறது. மண்டபங்களும்பழுதுற்றநிலையிலேதான்இருக்கின்றன.

இவைகளையெல்லாம்புதுப்பிக்கும்பணியைஉள்ளூர்அன்பரும்பிறரும்ஆரம்பித்திருக்கிறார்கள். மாய்க்கூத்தர்பெயர்தாங்கியமாயக்கூத்தர்அய்யங்கார்என்பவரேமுன்னின்றுகாரியங்களைநடத்துகிறார். மாயக்கூத்தரேமுன்னின்றுநடத்தும்திருப்பணியில்பங்குகொள்வதுபெரும்பேறு. அந்தப்பேற்றைத்தமிழன்பர்கள்பலரும்பெறட்டும்என்றேஇதனையும்உங்கள்காதில்போட்டுவைக்கிறேன்.