அஞ்சைகளம் (கேரளா)

அஞ்சைக்களத்துஅப்பன்

சமயகுரவரில்ஒருவரானசுந்தரர்திருநாவலூரிலேபிறக்கிறார். அவரைஇறைவன்திருவெண்ணெய்நல்லூருக்குஅழைத்துச்சென்றுஅற்புதப்பழையஆவணம்காட்டிஆட்கொள்கிறார். அவரைத்தம்பிரான்தோழன்என்றேஅழைக்கிறார். அன்றுமுதல்சுந்தரரும்இறைவனோடுதோழமைபூண்டு, எண்ணற்றஅரியகாரியங்களைச்செய்யஇறைவனையேஏவலாளனாகக்கொள்கிறார்.

இந்தத்தம்பிரான்தோழரின்இன்னொருதோழர்சேரமன்னனாகியசேரமான்பெருமாள்என்னும்திருத்தொண்டர். இவரும்சிவத்தொண்டில்ஈடுபட்டவர்சேரநாட்டிற்குத்தன்தோழனாகியசுந்தரரைப்பலமுறைஅழைத்திருக்கிறார். கடைசியாகச்சுந்தரரும்இணங்கிதன்மலைநாட்டுத்தலயாத்திரையைத்துவக்குகிறார். இதனைச்சொல்கிறார், திருத்தொண்டர்பெரியபுராணம்பாடியசேக்கிழார்,

ஆரம்உரகம்அணிந்தபிரான்

அன்பர்அணுக்கவன்தொண்டர்

ஈரமதுவார்மலர்ச்சோலை

எழில்ஆரூமில்இருக்கும்நான்

சேரர்பெருமான்தனைநினைந்து

தெய்வப்பெருமான்கழல்வணங்கி

சாரல்மலைநாடுஅடைவதற்குத்

தவிராவிருப்பின்உடன்போந்தார்

இப்படிமலைநாட்டுத்தலயாத்திரையைத்தொடங்கியவர், வழியில்அவிநாசியில்முதலைஉண்டபாலனைஅழைத்து, அவனைஅவனதுபெற்றோர்களிடம்சேர்ப்பித்துவிட்டுமேலும்நடக்கிறார், வழியில்உள்ளஆறுகளையும், காடுகளையும்கடந்தே. இவரதுவருகையை, அடியார்கள்சேரமான்பெருமாளிடம்ஓடோடிவந்துஅறிவிக்கிறார்கள். சேரமன்னனதுஉவகைகட்டுக்குஅடங்காததாகிறது. கரைபுரண்டோடும்அவரதுஉவகையைசேக்கிழார்தமக்குப்படம்பிடித்துக்காட்டுகிறார்.

என்ஐயன்அணைந்தான் .

எனைஆளும்அண்ணல்அணைத்தான்

ஆரூரில்சைவன்அணைந்தான் .

என்துணையாம்தலைவன்அணைந்தான்

தரணிஎலாம்உய்யஅணைந்தான்.

அணைந்தான்

என்றேகுதூகலிக்கிறார். ஆகவேஅவர்நகரைஎல்லாம்நன்றாகஅலங்கரித்து, யானைமீதுஎதிர்கொண்டுவந்து, சுந்தரைஅழைத்துச்செல்கிறார், தனதுநகருக்கும்திருமாளிகைக்கும். அப்படிச்சுந்தரரைஅழைத்துச்சென்றஇடம்தான்அவனதுதலைநகரானவஞ்சி, அதுவேதிருஅஞ்சைக்களம். மணவாழ்க்கையைஎல்லாம்வெறுத்தசுந்தரர், அங்கிருந்தேதன்கயிலையாத்திரையைத்துவங்குகிறார். இறைவனும்தன்தோழனாம்சுந்தரருக்குவெள்ளானைஎல்லாம்அனுப்பிகயிலைக்குஅழைத்துவரச்செல்கிறார்.

அதன்படியேசுந்தரர்புறப்படும்போது, கோமகனும்குதிரைமீதுஅமர்ந்துசுந்தரருடன்கயிலைசெல்கிறார்இப்படிஇரண்டுபெரியதொண்டர்கள்கயிலையைநோக்கிப்பிரயாணம்புறப்பட்டஇடமேதிருஅஞ்சைக்களம்என்னும்தலம். அத்தலத்தைநோக்கியேநாமும்விரைகின்றோம். இன்று, நமக்குகயிலைசெல்லும்நோக்கமெல்லாம்இல்லாதிருந்தும்கூட.

திருஅஞ்சைக்களம்செல்ல, சென்னையிலிருந்துகொச்சின்எக்ஸ்பிரஸ்வண்டியில்ஏறவேணும். ஷோரனூர்எல்லாம்கடந்தபின்இருஞாலகுடாஎன்றஸ்டேஷனில்இறங்கவேணும். அங்கிருந்துகிராங்கனூர்என்னும்கொடுங்கோளூருக்குவழிகேட்டுக்கொண்டுபோகவேணும்.

போகும்வழியில்ஓர்உப்பங்கழியையும்கடக்கவேனும். முன்னாலேஎன்றால்இக்கரையில்காத்திருந்துபடகில்ஏறித்தான்அக்கரைசெல்லவேணும். இப்போதோ . உப்பங்கழியில்பெரியபாலம்ஒன்றையேஅமைத்திருக்கிறார்கள். ஆதலால்காரிலோபஸ்ஸிலோஏறிக்கொண்டுஜாம்ஜாம்என்றுகொடுங்கோளூருக்கேபோய்விடலாம். கொடுங்கோளூர்பகவதிகோயிலுக்கும்சென்றுவணங்கி, அருள்பெற்றுக்கொள்ளலாம்.

அதன்பின்மேற்குநோக்கிஒன்றரைமைல்போனால்திருஅஞ்சைக்களம்வந்துசேரலாம். உப்பங்கழிவழியாகபடகிலேபோனால்இறங்குதுறையில்இறங்கி, வடக்குநோக்கிநடந்தால். கோயில்வாயில்வந்துசேரலாம். நாமோ, கொடுங்கோளூரிலிருந்துமேற்குநோக்கியல்லவாவந்திருக்கிறோம். அங்கேஒருசந்நிதியில்கல்லால்அமைத்ததீபஸ்தம்பம்ஒன்றுதெரியும்.

அந்தப்பக்கமாகத்திரும்பினால், ஒருசிறுகட்டிடத்தில், சேரமான்பெருமாள்சுந்தரமூர்த்திவாசகசாலைஎன்றுதமிழிலேஎழுதியபோர்டுஒன்றுதொங்கும். கட்டிடம்திறந்துகிடந்தாலும்பதில்சொல்லஆள்ஒருவரும்அங்கிருக்கமாட்டார்கள். அங்கிருந்துகோயில்எங்கிருக்கிறதுஎன்றுதெரிந்துகொள்வதும்எளிதன்றுகோயிலுக்குத்தான்கோபுரம்என்றெல்லாம்ஒன்றும்கிடையாதே. கொஞ்சம்துணிந்துமேலேநடந்தால்சிலஒட்டுக்கூரைகள்தோன்றும். ஒருபெரியகாம்பவுண்டும்தோன்றும்.

அதுதான்கோயில்என்பர். அங்குள்ளவாயில்கோயிலின்மேல்புறத்துவாயில். அந்தவாயில்வழியாகஉள்ளேநுழைந்தால், அங்குஒருமரக்கொட்டகைதெரியும். அதனையேஆனைப்பந்தல்என்கிறார்கள். விழாக்காலங்களில்ஆனையைஅலங்கரித்துக்கொண்டுவந்துநிறுத்தும்இடம்ஆதலால்ஆனைபந்தல்என்றுபெயர்பெற்றதோ, இல்லைஅன்றுசுந்தரரைகயிலாயத்திற்குஅழைத்துச்செல்லவந்தவெள்ளையானைவந்துநின்றஇடம்ஆதலால்ஆனைப்பந்தல்என்றுபெயர்பெற்றதோ, தெரியவில்லை. எப்படியோஒருயானைவந்துஅங்குநின்றிருக்கிறது. அதனால்பந்தல்அமைக்கவேண்டும்என்றும்தோன்றியிருக்கிறது, மக்களுக்கு. இந்தக்கொட்டகையைஒட்டியேஒருபெரியபிராகாரம்இருக்கிறது. அதனைச்சுற்றிக்கொண்டுவடபக்கத்துக்குவந்தால்அந்தப்பிராகாரத்திலேதான்தலவிருட்சமானகொன்றைபூத்துக்குலுங்கிக்கொண்டிருக்கும். அதனைச்சுற்றிஒருபீடம்இட்டு, சுவரும்எழுப்பியிருக்கிறார்கள்.

அதைக்கடந்தேகிழக்குப்பிராகாரம்வரவேணும். அங்கேதான்பிரதானவாயில். எல்லாம்ஒட்டுக்கூரைதான்என்றாலும்அந்தவாயில்சுவரில்தான்சுந்தரர்வெள்ளையானையின்பேரில்கயிலைசெல்லும்சிற்பம்சிறியஅளவில்செதுக்கப்பட்டிருக்கிறது. இப்படிச்செதுக்கிவைக்கவேண்டும்என்றுதெரிந்திருக்கிறதே, அதற்கேஒருகும்பிடுபோடலாம்தானே? இந்தப்பிராகாரத்திலேபிரதானவாயிலைஅடுத்துதீபஸ்தம்பமும்கொடிமரமும்இருக்கின்றன. இந்ததீபஸ்தம்பம்முழுவதுமேஇரும்புஅகல்விளக்குகளைஅடித்துவைத்திருக்கிறார்கள். திருவிழாக்காலங்களில்எல்லாவிளக்கையும்ஏற்றினால்எப்படியிருக்கும்என்றுமானசீகமாகக்கற்பனை. பண்ணிப்பார்க்கலாம். தீபமங்களசோதிநமோநமோஎன்றுபாடவும்செய்யலாம். பொங்கழல்உருவனானஅய்யனை, தீபஒளிமூலம்அலங்கரிக்கக்கற்றவர்மலைநாட்டுமக்களேஎன்றால்மிகையில்லை. இந்தப்பிரகாரம்வழியாய்நடந்துதெற்குப்பிரகாரத்துக்குவந்தால், அங்குஒருசிறுசந்நிதிகிழக்குநோக்கியிருக்கும். அதுஎன்னசந்நிதிஎன்றுவிசாரித்தால்அதுவேதக்ஷிணாமூர்த்திசந்நிதிஎன்பர். தக்ஷிணாமூர்த்திஎன்றால்தென்பக்கம்நோக்கியிருக்கவேண்டாமோ? இவர்என்னகிழக்குநோக்கியிருக்கின்றா? என்றவியப்போடேயேகோயில்வாயில்வழியாகஉள்ளேநோக்கினால், கல்லாலின்புடையமர்ந்து, வல்லாளர்நால்வருக்கும்உபதேசிக்கதக்ஷிணாமூர்த்தியைக்காணவில்லை. ஒரேயொருசிவலிங்கம்தான்இருக்கிறது.

இந்தத்தனிக்கோயிலுக்குப்பக்கத்திலேசந்நிதிஒன்றிருக்கிறது. அதுவேசாஸ்தாசந்நிதி. இவர்கோயிலுக்குவிமானம்இல்லை. வெயிலில்காய்கிறார். மழையில்நனைகிறார். இவரேகயிலையில்சேரமான்பாடியபாடல்களின்பிரதியைஉலகுக்குக்கொண்டுவந்தவர்என்கிறார்கள். இந்தவரலாற்றைபெரியபுராணம்பாடியசேக்கிழாரும்கூறுகிறார்.

இனிஇப்பிராகாரத்தைச்சுற்றிக்கொண்டமேற்குவாயில்வழியாகஅடுத்தபிராகாரத்துக்குள்நுழையலாம். நாம்இங்குவந்ததுசேரமானையும்சுந்தரரையும்பார்க்கத்தானே? ஆதலால், அவர்இருக்கும்இடம்விரையலாம். இப்பிராகாரத்தில்தென்பகுதியில்மேற்குக்கோடியில்உத்சவமூர்த்திகளாகஇருவரும்சிறியவடிவிலேஒருசிறுஅறையில்எழுந்தருளியிருக்கின்றனர். இரண்டும்ஒன்றரைஅடிஉயரமேஉள்ளசெப்புப்படிமங்கள். அழகுவாய்ந்தவைகளாகஇல்லை. இவர்கள்வெளியில்உலாவருவதில்லை. ஆடிச்சுவாதியில்சுந்தரர்கயிலைசென்றதன்ஞாபகார்த்தமாகஅன்றுதிருமஞ்சனம்ஆட்டப்பெறுகிறார்கள். இவர்கள்இருவரையும்வணங்கிவிட்டேமேல்நடக்கலாம்.

மேற்குபிராகாரத்தைச்சற்றிக்கொண்டு, வடக்குப்பிராகாரத்திற்குவந்தால், அங்குநடராஜர்சந்நிதிஇருக்கிறது. அவரேதிருவஞ்சிக்குளம்சபாபதி. அப்படித்தானேஅந்தப்பீடத்தில்பொறித்திருக்கிறது? இவர்விரித்தசெஞ்சடையான்அல்ல.

பாண்டியநாட்டுநடராஜர்களைப்போல்பின்னுசெஞ்சடைஉடையவரே. இவரேசேரமான்வழிபட்டமூர்த்திஎன்கின்றனர். இங்குள்ளசுவர்களில்ஓவியங்கள்தீட்டப்பெற்றிருக்கின்றன. எதுவும்கவர்ச்சிஉடையதாகஇல்லை . இனிபிரதானகோயில்வாயிலுக்குவரலாம். திருஅஞ்சைக்களத்துஅப்பன்கருவறைபெரிதுதான். கிழக்குநோக்கியவாயில்வழியாகஅங்குள்ளலிங்கத்திருஉருவைத்தரிசிக்கலாம், மிகவும்சிறியதிருமேனி.

இக்கருவறைமேல்உள்ளவிமானம்மரத்தால்ஆக்கப்பட்டுசெப்புத்தகடுவேய்ந்ததாகஇருக்கிறது, இங்குஅம்மைக்குத்தனிசந்நிதிஇல்லை. என்னஇவர்அம்மைஇல்லாஅப்பனோஎன்றுகேட்டால், இல்லை. செப்புப்படிமமாகஒருசிறுஅம்மையையும்அப்பன்பக்கத்திலேவைத்துக்காட்டுவர். அங்குள்ளஇருட்டில்விளக்கமாகஒன்றும்தெரியாது.

இந்தஅஞ்சைக்களத்துஅப்பர்சுந்தரர்ஒருவராலேயேபாடப்பட்டவர், ஒன்றுக்குஇரண்டாகபரவையாரையும்சங்கிலியையும்மணந்தசுந்தரர், இந்தஅஞ்சைக்களத்துஅப்பனைதரிசித்தபின்தானேமனைவாழ்க்கையைவெறுத்து, அதன்பின்கயிலைசெல்லவிரைந்திருக்கிறார். அதையேஅவர்தனதுதேவாரத்திலும்பாடுகிறார்!

வெறுத்தேன், மனைவாழ்க்கையை

விட்டொழிந்தேன், விளங்கும்குழைக்

காதுடைவேதியனே!

இறுத்தாய், இலங்கைக்குஇறை

ஆயவனைதலைப்பத்தோடு

தோள்பலஇற்றுவீழக்

கறுத்தாய்கடல்நஞ்சமுதுண்டு

கண்டம்கருகப்பிரமன்தலை

ஐந்திலும்ஒன்று

அறுத்தாய்கடங்கரைமேன

மகோதைஅணியார்பொழில்

அஞ்சைக்களத்துஅப்பனே!

என்பதுசுந்தரர்தேவாரம். இத்தலத்திற்குவந்துதான்பரசுராமர்தன்தாயாம்ரேணுகையைக்கொன்றபாவம்நீங்க, அஞ்சைக்களத்துஅப்பனைவணங்கியதாகவும்புராணம்கூறுகிறது.

மலைநாட்டில்உள்ளபாடல்பெற்றஸ்தலம்இதுஒன்றுதான். இந்தத்தலத்தையும்விடாமல்சென்றுகண்டோம், என்றதிருப்தியோடுவீடுதிரும்பலாம். கோவையிலிருந்துசிவக்கவிமணி C.K. சுப்பிரமணியமுதலியார்அவர்கள், ஆண்டுதோறும்இத்தலத்திற்குவருவார்களாம். அவர்கள்கட்டளைஇட்டவண்ணமேஇன்றுகோவைஅன்பர்ஒருவர்ஆண்டுக்கொருமுறைஆடிசுவாதித்தினத்தன்றுஇத்தலம்சென்றுவழிபாடுசெய்துவருகிறார். அவகாசம்உள்ளவர்கள்அடுத்தஆடிசவாதியில்அஞ்சைக்களம்சென்றுஅந்தஅப்பனைத்தரிசிக்கலாம். பயணம்சிரமமானதுதான். அதற்குத்தக்கபலன்பெறசிறந்தசிற்பவடிவங்களோ, கோயில்கட்டிடஅமைப்போஇல்லாதகுறையும்உண்டு.

இன்னும்இத்தலத்தில்சேரமான்பறம்புஎன்றுஒருஇடம்இருக்கிறது. அங்குதான்சேரமான்பெருமாளதுஅரண்மனை. இருந்ததாகச்சொல்கிறார்கள். ஒருகல்லையும்நட்டுஎழுதிவைதிருக்கிறார்கள்.

இன்னும்கோளோற்பத்திஎன்றநூலிலே, இந்தச்சேரமான்பெருமாள், மெக்காவிற்குச்சென்றுஇஸ்லாமியராகிவிட்டார்என்றுகூறப்பட்டிருக்கிறது. அவர்வழிவந்தவர்களேஇன்றையமலையாளத்துமாப்பிள்ளைமார்என்றுகூறப்பட்டிருக்கிறதாம். நல்லகதைதான், அறுபத்துமூன்றுநாயன்மாரில்சிறந்தஒருவரையேமதம்மாறியவராகக்கூறுவது! ஆதாரமில்லாதகற்பனைகளுக்குத்தான்கணக்கேது? அதைநம்பவாமுடியும்?