நாகசாயி மந்திர்
நாம்யார்க்கும்குடிஅல்லோம்,
நமனைஅஞ்சோம், நரகத்தில்இடர்ப்படோம்
நடலைஇல்லோம்,
ஏமாப்போம், பிணிஅறியோம்
பணிவோம்அல்லோம், இன்பமே
எந்நாளும்துன்பம்இல்லை
தாம்ஆர்க்கும்குடிஅல்லாத்
தன்மையானசங்கரன்நற்
சங்கவெண்குழைஒர்காதில்
கோமற்கேநாம்என்றும்
மீளாஆளாய்கொய்மலர்ச்
சேவடிஇணையேகுறுகினோமே
என்பதுபிரபலமானஒருதேவாரப்பாடல். இதைப்பாடியவர்அப்பர்பெருமான்என்னும்நாவுக்காசர். சமணாயிருந்தபல்லவமன்னன்மகேந்திரவர்மன், அவரைதுன்புறுத்தியதோடு, தன்முன்ஆஜர்ஆகும்படிகட்டளைபிறப்பித்தபோதுஅத்தகையஉத்திரவைஎதிர்த்துப்பாடியபாடல்என்பர். நாம்யார்க்கும்குடிஅல்லோம்தமனைஅஞ்சோம், என்றுபாடும்தெம்புஒருவருக்குஇருந்ததுஎன்றால்அதுஅவரதுஅஞ்சாமையையும்அவர்உள்ளத்தில்இருந்தஉறுதியையுமேகாட்டுகிறது. இதேஉறுதிமற்றமக்கள்உள்ளத்திலும்எழுவதற்குஅதுஉதவிசெய்யவேண்டாமா?
இறைவன்பால்நம்பிக்கைஏற்படுவதுஎன்பதுஎளிதானகாரியமாஎன்ன. நாமெல்லாம்கடவுள்நம்பிக்கைஉள்ளவர்கள்தாம். ஆனால்அந்தக்கடவுள்நம்பிக்கைஉரம்பெற்றதாகஇல்லையே. தலைவலிஎன்றஉடனேயே, ஆஸ்ப்ரோமாத்திரையைத்தேடித்தானேஓடுகிறோம். நமச்சிவாயா, நமோநாராயணாயஎன்றுசொல்லிதலைவலியைவிரட்டிஅடிக்கும்மனப்பக்குவம்நமக்குஇல்லையே. இந்தநிலையில்ஒருபெரியார் “நானிருக்கப்பயமேன்“என்றதாரகமந்திரத்தைஓதிஅதன்மூலம்நமதுஅசலங்களைஎல்லாம்போக்கி, அருளும்ஆற்றல்பெற்றிருந்தால்அப்பெரியாரைநோக்கிமக்கள்எல்லாம்ஓடுவதில்வியப்பில்லையே! அந்ததார்கமந்திரத்தைஓதிதன்பக்தர்களைஎல்லாம்அஞ்சாது. காக்கும்அருள்வள்ளல்தான்சாயிபாபா.
அதுஎன்னசாயிபாபா, பேரைக்கேட்டால்முஸ்லிம்பக்கிரியின்பெயர்போல்அல்லவாஇருக்கிறதுஎன்கிறீர்களா? ஆம்கிட்டத்தட்ட 150 வருஷங்களுக்குமுன்னால்நைஜாம்ராஜ்யத்தைசேர்ந்தபாத்ரிஎன்றஒருசிற்றூரில்ஓர்அந்தணர்குடும்பத்தில்பிறந்துபின்னர்ஒருமுஸ்லீம்பக்கிரியால்வளர்க்கப்பட்டு, இன்றைபம்பாய்ராஜ்யத்தில்கேஸர்தான்பக்கத்தில்உள்ளசீரடிஎன்னும்தலத்தில்வந்துதங்கியிருந்தபெரியார்அவர். இந்துமுகமதியர்வேற்றுமைகளைஎல்லாம்கடந்தவர். ராமும்ரஹீமும்அவருக்குஒன்றே. இன்றுசீர்டியிலும், ஏன்இந்தியநாடுமுழுவதிலுமேஅவரைஎண்ணிறந்தஇந்துக்களும்முகம்மதியர்களும்தெய்வமாகவேபோற்றிவருகின்றனர்.
அவரைவழிபடுவதால்நோய்நீங்குகின்றனர். துன்பம்தவிர்கின்றனர். இன்னும்எண்ணியஎண்ணியவாறுஎய்திவாழும்பேற்றையும்பெறுகின்றனர். இவர்சீரடியில்இருந்தபோதுபலஅற்புதங்கள்நிகழ்த்தினார்என்பர். அவர்தங்கியிருந்தமசூதியில்ஒருநந்தாவிளக்கைஎரித்துவந்திருக்கிறார். அதற்குஎண்ணெய்எல்லாம்மக்கள்உதவியிருக்கின்றனர்.
ஒருநாள்எண்ணெய்இல்லாதுபோக, பக்கத்தில்வைத்திருந்தகூஜாவில்உள்ளதண்ணீரையேஊற்றிவிளக்கைஎரித்தார்என்பார்கள். இப்படித்தண்ணீரில்விளக்குஎரித்தஅதிசயநிகழ்ச்சியைக்கண்டஒருசிலரேபாபாவைப்பற்றிமற்றவர்களுக்குசொல்லியிருக்கின்றனர். அதன்பின்னரேஅவரைநாடிவரும்பக்தர்கள்கூட்டம்பெருகியிருக்கிறது. பலபலஅதிசயங்கள்நிகழ்த்திருக்கின்றன. இந்தஅதிசயங்கள்எல்லாம்அவர்ஜீவியவந்தராகஇருந்தகாலத்தில்நடந்தவை.
இன்னுமோர்அதிசயம். தமிழ்நாட்டில்பொருள்வளம்மிகுந்தகோயம்புத்தூரில்சிலவருஷங்களுக்குமுன்னேஅவரதுதிருஉருவப்படத்தின்முன்நிகழ்ந்திருக்கிறது. அந்தஅதிசயம்இதுதான். இருபதுவருஷங்களுக்குமுன்சாயிபாபாவின்பெயர்தமிழ்நாட்டில்பிரசித்தமில்லை.
சென்னையில்நரசிம்மசுவாமிஎன்றசெல்வந்தர்ஒருவர்இருந்திருக்கிறார். அவருடன்திரு AVK. சாரிஎன்பவரும். இருந்துவந்திருக்கிறார். இருவரும்ஒருநாள்கோவைக்குவந்திருந்தபோது, கோவையில்திரு. தி. வரதராஜஐயர்என்பவரும்அவரதுசகோதரன் C.V. ராஜனும்சாயிபாபாபக்தர்களாகஇருந்திருக்கின்றனர். இவர்கள்எல்லாம்ஒன்றுசேர்ந்துகோவையில்ரத்னசபாபதிபுரம்என்றபுதியகுடியிருப்பில்வடக்கேஒருஏக்கர்நிலம்வாங்கி, அங்குகிணறுஒன்றுவெட்டிஒருபர்ணசாலையும்அமைத்துஅதில்சாயிபாபாவின்திருஉருவப்படம்ஒன்றைவைத்துவணங்கியிருக்கிறார்கள். ஒவ்வொருவியாழக்கிழமையும்இன்னும்சிலரும்வந்துவழிபாட்டில்கலந்துகொண்டாடிஇருக்கிறார்கள்.
1943ம்வருஷம்ஜனவரிமாதம் 7ந்தேதிவியாழக்கிழமை, இந்தசாயிபாபாசந்நிதியில்ஓர்அற்புதம்நிகழ்ந்தது. பஜனைஆரம்பமாவதற்குசிறிதுநேரத்திற்குமுன்னேஎங்கிருந்தோஒருபெரியநாகம்ஒன்றுஊர்ந்துவந்தது. சாயிபாபாபடத்தைவலம்வந்தது. பின்னர்தன்படத்தைவிரித்துஆடஆரம்பித்தது. அந்தநாகத்தின்படத்தில்சங்குசக்கரங்கள்திரிபுண்டரம்முதலியசின்னங்கள்அழகாகஇருந்தன. அந்தநாகம்அப்படிஆடிக்கொண்டிருந்ததைக்கண்டஒருசிலபக்தர்கள்மற்றவர்களுக்குசொன்னார்கள். ஆணும்பெண்ணும்பிள்ளைகளுமாய்பலர்கூடிவிட்டனர். மலர்கொண்டுவந்துநாகராஜன்பேரிலும்சாயிபாபபடத்தின்பேரிலும்அர்ச்சித்தனர்.
அந்தநாகமும்பலமணிநேரம்ஆனந்தபரவசநிலையில்ஆடிக்கொண்டிருந்துவிட்டுபின்னர்தன்னைசுற்றியிருந்தமலர்க்குவியல்களிலிருந்துவிடுபட்டுஎங்கோசென்றுமறைந்துவிட்டது. இந்தஅதிசயத்தைக்கண்டபின்தான், அந்தபர்ணசாலையைஒருபெரியகோயிலாகவேகட்டவேண்டும், எனபக்தர்கள்முனைந்தனர். கட்டியும்முடித்தனர். ஒருபெரியபடம்ஒன்றையும்எழுதிவைத்தனர். பூசைகளையும்தொடர்ந்துநடத்துகின்றனர். இப்படிஉருவானதேகோவைநாகசாயிமந்திர்.
இந்தமந்திரில்இன்றுஒவ்வொருவியாழக்கிழமையும், ஞாயிற்றுகிழமையும்எண்ணிறந்தபக்தர்கள்கூடுகின்றனர்; வணங்குகின்றனர். பிரார்த்தனைசெய்துகொள்கிறார்கள். அந்தப்பிரார்த்தனைகளும்அப்போதைக்குஅப்போதேநிறைவேற்றிவைக்கவும்பெறுகின்றனர். நான்கடவுள்நம்பிக்கைஉடையவன். சைவனாய்பிறந்திருந்தாலும்சிவனிடம்எவ்வளவுபக்தியோஅதில்குறையாதபக்தியேவிஷ்ணுவிடத்தும்வைத்திருப்பவன்.
இன்னும்குமரன்எல்லோரையும்தொழுதுவணங்கிறவன்தான். நான்எப்படிசாயிபக்தன்ஆனேன்என்பதுசிலசைவர்கள்ஐயம். எனக்குவேண்டியநண்பர்ஒருவர்சாயிபக்தனாகஇருந்தார்அவர்ஒருவியாழக்கிழமைகாலைஎன்னிடம்மாலையில்சாய்பாபாகோயிலுக்குவாருங்களேன்என்றார்.
எனக்குஅப்போதுசாயிபாபாவைப்பற்றிஅதிகம்தெரியாததால்அக்கறைகாட்டவில்லை. அவர்சொன்னார். சாயிபாபாவைநினைத்துக்கொண்டுஒருசிறுபிராத்தனைசெய்துகொள்ளுங்கள். இன்றுகோயிலுக்குவாருங்கள்நாளைஅதுநடக்கும்என்பதற்குஓர்அறிகுறிகாண்பீர்கள்என்றார். சரிஇதைபரீக்ஷைசெய்துபார்த்துவிடலாமேஎன்றுஎண்ணியேஅன்றுமாலைநண்பருடன்கோயிலுக்குச்சென்றேன்.
அப்போதுஎனக்குஉத்தியோகத்தில் I.A.S.பதவிவரவேண்டியகாலம். அதுஎக்காரணத்தினாலோஎதிர்பார்த்தகாலத்தில்கிடைக்கவில்லை. நாட்கள்கடந்துபோய்க்கொண்டேயிருந்தது. ஆதலால்அன்றுகோயிலுக்குப்போனேன். சாயிபாபாவின்படத்தைபார்த்தேன். அவர்ஜீவியவந்தராகஇருந்தபோதுஅவர்கண்கள்தீக்ஷண்யம்பெற்றஇருக்குமாம். அதைஎதிர்நோக்கவேமக்களால்இயலாதாம்.
அங்குசாயிபாபாவின்உருவத்தில்உள்ளகண்களைபார்க்கப்பார்க்கஅவைஎன்இதயத்தையேஊடுருவுவதுபோன்றஅனுபவத்தைப்பெற்றேன். அதுவேஓர்உள்ளநிறைவைத்தந்தது. அதன்பின்எனக்கு IAS பதவிவிரைவில்கிடைக்கவேண்டும்என்றுஉள்ளன்போடுபிரார்த்தித்துக்கொண்டுவீடுதிரும்பினேன், மறுநாட்காலைநான்ஆலுவலகத்திற்குச்சென்றால். IAS வரிசையில்சேர்ப்பதற்கு, வேண்டியதகவல்ஒன்றுகேட்டுசென்னைசர்க்காரிடமிருந்துதபால்வந்திருந்தது.
அதற்குபின்ஆறுமாதம்கழித்தே IAS பதவிவந்ததுஎன்றாலும், அன்றுமனதிலேஒருதெம்புபிறந்தது. சாயிபாபாபக்தனாகநானும்மாறினேன். அதன்பின்ஒவ்வொருகுருவாரமும், தவறினால்ஞாயிற்றுக்கிழமைஅன்றும்நாகசாயிமந்திருக்குப்போய்வந்தேன். இன்னும்கஷ்டங்கள்நேர்ந்தால்சாயிபாபாவிடம்பிரார்த்தனைசெய்துகொள்கிறேன். அக்கஷ்டங்கள்தீரவும்பெறுகிறேன்.
எனதுஉபாசனாமூர்த்திபிள்ளையார்தான். தஞ்சைப்பெருஉடையாரிடத்திலே, தில்லைச்சிற்றம்பலவனிடத்திலேஉள்ளபக்தியைவிடதிருவேங்கடவனிடத்திலேஅழுத்தமானபக்தியும்நம்பிக்கையையுடையவன்தான்என்றாலும்அதேசமயத்தில்சாயிபாபாபக்தனாகவும்வாழ்கிறேன். இதில்எல்லாம்முரண்பாடுஒன்றும்இல்லை.
ஏதோமனதுள்பற்றுக்கோடுகொள்வதற்குஒருமூர்த்தம்வேண்டும். அதுசாயிபாபாவாகஇருக்கிறது. எனக்குஇன்று. “நான்இருக்கபயமேன்“என்றதாரகமந்திரம்நம்காதுகளில்ஒலித்துஉள்ளத்தில்நிறைந்துவிட்டால், நாமார்க்கும்குடிஅல்லோம், நமனைஅஞ்சோம்என்றுஉறுதியேபிறந்துவிடுகிறதுஅல்லவா? இப்படிஒருகடவுள்நம்பிக்கைவளர்வதற்குதுணைபுரிவராகநாகசாயிமந்திர்பாபாஎன்வாழ்வில்புகுந்திருக்கிறார். அதனால்மிக்கமகிழ்ச்சிஅடைகிறேன்.