நவதாண்டவம்
ரஷ்யநாட்டின்பிரசித்திபெற்றநடனவித்தகிமாடம்பாவ்லோவா, ஒருநாள்அவள்தனதுநடனங்களைஒருபெரியஅரங்கிலேஆடிக்காட்டுகிறாள். நடனங்களைஎல்லாம்கண்டுகளித்தரஸிகப்பெருமகன்ஒருவருக்குஅன்றையநிகழ்ச்சியில்அந்தஅம்மையார்கடைசியாகஆடியநடனத்தின்பொருள்விளங்கவில்லை. அதனால்நடனம்முடிந்ததும்அவசரம்அவசரமாகஅந்தரசிகர்கிரீன்ரூமுக்குள்ளேயேஓடுகிறார். அம்மையாரைக்காண்கிறார்.
“அம்மையே! தாங்கள்கடைசியாகஆடியஅற்புதநடனத்தின்பொருள்என்ன“என்றுமிக்கஆர்வத்தோடுகேட்கிறார். அதற்குஅந்தஅம்மையார்சிரித்துக்கொண்டே, “அவ்வளவுஎளிதாகஅந்தநடனத்தின்பொருளைவார்த்தைகளால்சொல்லக்கூடும்என்றால், நான்அதைநடனம்ஆடிக்காட்டியிருக்கவேண்டாம்.” என்கிறார். ஆம், ஒருபெரியஉண்மையைத்தான்மிகஎளிதாகக்கேட்டகேள்விக்குஎதிர்க்கேள்விபோட்டுவிளக்கிவிடுகிறார்பாவ்லோவா. வெறும்வார்த்தைகளிலேநடனத்தின்பொருளைஎல்லாம்சொல்லிவிடக்கூடும். என்றால்அதைநடனம்ஆடிக்காண்பிப்பானேன்?
அரங்கம், திரைச்சீலை, பக்கவாத்தியம், உடைஅணிஎன்றெல்லாம்சிரமப்பட்டுத்தேடுவானேன்? சொல்லால்விளக்கமுடியாததைஎல்லாம்நடனம்ஆடிக்காட்டிவிடமுடியும்என்றல்லவாசித்தாந்தப்படுத்துகிறாள்பாவ்லோவா! ஆனால்இந்தபாவ்லோவாபிறப்பதற்குஎத்தனையோகற்பகோடிகாலங்களுக்குமுன்னாலேயேஇந்த. – சித்தாந்தத்தைநிலைநிறுத்தியவன்தானேஅகிலஉலகநாயகனானநடனராஜன். அந்தநடனராஜன்ஆடியநடனத்தையேதாண்டவம்என்றனர்கலைஞர்கள்.
தாண்டவம்எப்படிப்பிறந்தது. தட்தட்என்றுநிலத்தைத்தட்டிஆடுவதால்தாண்டவம்என்றுஆயிற்றுஎன்றுகூறுவார்உண்டு. நடனத்திற்குஅதிதேவதையான்சிவபெருமான்தன்னுடையகணநாதர்களில்ஒருவனானதண்டுஎன்பவன்மூலமாக, தான்ஆடியஆட்டங்களைபரதமுனிவருக்குக்கற்பிக்க, தண்டுவின்மூலம்கற்பிக்கப்பட்டஇந்தஆட்டத்திற்குதாண்டவம்என்றபெயர்ஏற்பட்டதுஎன்றுகூறும்பரதசாஸ்திரம். ஒன்றுமட்டும்உண்மை.
இறைவனால்ஆடப்பட்டஆட்டமேதாண்டவம்என்றுபெயர்பெற்றிருக்கிறது. அதனால்ஆடவர்ஆடும்ஆட்டமேதாண்டவம்என்றும்தீர்மானமாகியிருக்கிறது. பின்னர்அந்தஆட்டத்தையேபெண்மிகலளிதமாகஆட, அந்தஆட்டத்தையேலாஸ்யம்என்றும்குறிப்பிட்டிருக்கின்றனர். தாண்டவம்ஆடியவர்சிவபெருமான், லாஸ்யம்ஆடியவள்பார்வதிஎன்றும்இலக்கியங்கள்கூறிவந்திருக்கின்றன.
சொல்லால்விளக்கமுடியாது. தாண்டவலக்ஷணங்களை, தமிழ்நாட்டுச்சிற்பிகள்கல்லால்விளக்கமுற்பட்டிருக்கின்றனர். அதுகாரணமாகவேகல்லிலும்செம்பிலும்பலநடனத்திருக்கோலங்களைநம்முன்நிறுத்திவைத்திருக்கின்றனர். சொல்லால்விளக்கமுடியாதுஎன்று
சொன்னவர்கள், எண்ணினவர்களுக்குஎல்லாம்காட்டியிருக்கின்றனர், தமிழ்நாட்டுக்கலைஞர்கள்.
தாண்டவவடிவங்களில்சிறப்பாயிருப்பதுஉடல்உறுப்புகளின்அசைவுகளே. அதனையேகரணம்என்கிறோம். இந்தகரனவகைகள் 108 என்று, பரதசாஸ்திரத்தில்குறிக்கப்பட்டிருக்கிறது. இந்த 108 கரணங்களையேதாண்டவலக்ஷணமாககல்லில்பொறித்துவைத்திருக்கிறார்கள், தில்லைத்திருச்சிற்றம்பலவன்கீழக்கோபுரவாயிலிலே. இந்தகோபுரம்கட்டப்பட்டது 13-ம்நூற்றாண்டிலேஎன்றுசரித்திரஏடுகள்கூறும்.
அதற்கும்முந்நூறுவருஷங்களுக்குமுன்பே, இந்ததாண்டவவடிவங்களைத்தஞ்சைப்பெருவுடையார்கோயில்விமானமாகியதக்ஷிணமேருவின்முதல்தட்டிலே, உள்பக்கத்திலேகல்லில்உருவாக்கிவைக்கமூனைந்திருக்கிறான், அந்தசிவபாதசேகரன்ராஜராஜன், ஆனால்என்னகாரணத்தாலோ, 81 வடிவாங்களேபூர்த்திசெய்யப்பட்டிருக்கின்றன. மற்றவைகளைசெதுக்கவிரும்பியகல்எல்லாம்வெறும்கற்களாகவேகட்டிடத்தில்நின்றுகொண்டிருக்கின்றன.
இன்னும்இந்தநூற்றுஎட்டுதாண்டவவடிவங்களில்முக்கியமானவைபன்னிரண்டு. அவையேஆனந்ததாண்டவம், சந்தியாதாண்டவம், சிருங்காரதாண்டவம், திரிபுரதாண்டவம், ஊர்த்துவதாண்டவம், முனிதாண்டவம், சம்ஹாரதாண்டவம், உக்கிரதாண்டவம், பூததாண்டவம், பிரளயதாண்டவம், புஜங்கதாண்டவம், அத்ததாண்டவம்என்பனஎன்றும்கூறுவர். இன்னும்திருச்செங்காட்டங்குடியிலேஉள்ளஉருத்திராபதீஸ்வரர்கோயிலிலேவடக்குப்பிராகாரத்திலேஉள்ளஒருசிறுமண்டபத்திலே ‘நவதாண்டவம்‘ என்றுஎழுதிபத்துவடிவங்களைவைத்திருக்கின்றனர்.
அதிலும்ஒருவேடிக்கைஎன்னவென்றால்அவைகளில்பலதாண்டவவடிவங்களேஅல்ல!
இன்னும்தாண்டவவடிவங்களில்சிறப்பானவைசிவபெருமான்ஆடியஆட்டங்களேஎன்றாலும்அவருடன்சேர்ந்துவிநாயகரும், கண்ணனும், சரஸ்வதியும்ஏன்ஞானசம்பந்தருமேஆடியிருக்கிறார்கள்அந்தவடிவங்களில்சிறப்பானஒன்பதையேஉங்கள்முன்நவதாண்டவம்என்றபெயரோடுநிறுத்தமுன்வருகிறேன். தமிழ்நாட்டுச்சிவன்கோயில்களில்எல்லாம்இருக்கும்வடிவம்ஆனந்தத்தாண்டவதிருஉருவம். அதனைப்பலதடவைபார்த்துமகிழ்ந்திருப்பீர்கள். ஆதலால்அவ்வடிவினைஇங்குதிரும்பவும்காட்டநான்விரும்பவில்லை. அந்தநடராஜன்வடிவங்களிலேமிகவும்சிறப்பானஒன்றுவடஆர்க்காடுமாவட்டத்திலேஆரணியைஅடுத்தகாமக்கூரிலேஇருக்கிறது. இரண்டுகாலையுமேதரையில்ஊன்றிஆடும்தாண்டவக்கோலம்அது. அதுவேகாளிகாதாண்டவம். அதுசிறந்ததொருசெப்புப்படிமமாகஇருக்கிறது.
இறைவன்ஆடியஆட்டங்களாலேதாளொன்றால்பாதாளம்ஊடுருலி, மற்றைத்தாளொன்றால்அண்டம்கடந்துருவிஆடும்ஆட்டமேஊர்த்துவதாண்டவம். இந்தத்தாண்டவம்ஆடியதுதிருவாலங்காட்டிலேஎன்பர். தில்லையிலுள்ளஇந்தஊர்த்துவதாண்டவர்ஒருதனிக்கோயிலிலேயேஇருக்கிறார். என்றாலும்இந்தவடிவம்சிறப்பாயிருப்பதுதிருச்செங்காட்டங்குடியிலேதான்.
அங்குமிக்ககலைஅழகோடுஇந்தஊர்த்துவதாண்டவவடிவினைசிறப்பாய்அமைந்திருக்கிறான்கல்லிலே. மார்க்கண்டனுக்காக, காலனைக்காலால்உதைத்துஆடியஆட்டமேகாலசம்ஹாரதாண்டவம். இந்தவடிவம்சிறப்பாயிருப்பதுதிருக்கடையூரிலே, என்றாலும்அங்கேயுள்ளமூர்த்தியைதங்கஅணிகளாலும், பட்டுத்துணிகளாலும்இன்னும்மாலைகளாலும்சிலைகளாலும்எப்போதும்பொதிந்தேவைத்திருப்பர்.
ஆதலால்தாண்டவவடிவத்தின்அழகுமுழுவதையும்கண்கொண்டுகாணுதல்இயலாது. ஆனால்திருவீழிமிழலையிலேஉள்ளநேத்திரார்பணேஸ்வரர்கோயிலில்ஓர்இருள்படிந்தபொந்திலேஇந்ததாண்டவர்தாண்டவமாடிக்கொண்டிருக்கிறார். இவருடையதாண்டவவடிவங்களில்எண்ணற்றவைகளைக்காட்டக்கூடும்என்றாலும்இன்னும்ஒன்றேஒன்றைமட்டும்காட்டுவதோடுஇப்போதுதிருப்திஅடைகின்றேன்.
அவர்தான்திரிபுரத்தாண்டவர். சிரித்துப்புரம்எரித்தசேவகன்வடிவம்கல்லிலும்செம்பிலும்பலஇடங்களில்உருவாகியிருந்தாலும், அழகானவடிவமாகஅமைத்திருப்பதுகும்பகோணத்திற்குகிழக்கே 12 மைல்தூரத்திலேஉள்ளகோனேரிராஜபுரத்திலேதான். அங்குள்ளஆனந்ததாண்டவர்அழகானவர், பிரபலமானவர், அவரையும்விஞ்சும்அழகோடுஅன்னைதிரிபுரசுந்தரியையும்உடன்அழைத்துக்கொண்டுநம்முன்வருகிறார்இந்தத்திரிபுரதாண்டவர்.
இந்தவென்றாடுதிருத்தாதையும், வியந்துகைதுடிகெட்ட, நின்றாடும்மழகளிறாகவிளங்குபவர்தாண்டவவிநாயகர். இவர்இருக்கிறார், கும்பகோணத்தைஅடுத்ததாராசுரம்ஐராவதேஸ்வரர்கோயிலிலே. நல்லகாத்திரமானவடிவில்இவரைப்போலஎண்ணற்றதாண்டவவிநாயகர்ஓர்இஞ்சுஉயரம்முதல்மூன்றடிவரைபலகோணங்களில்உருவாகியிருக்கிறார்அங்கே. அக்கோயிலைஅமைத்தசிற்பிஇத்தாண்டவவிநாயகரையேதன்முத்திரையாகவைத்திருக்கிறான்.
இப்படி, தந்தையும்மகனும்தான்தாண்டவம்ஆடுகிறார்கள்என்றில்லை. பரந்தாமனின்அவதாரமானகண்ணனும்பலதாண்டவவடிவங்களிலேநமக்குகாட்சிதருகிறான். அவைகளில்சிறப்பானவைகாளிங்கதாண்டவம், நவநீததாண்டலம்என்பவையே. சோழவளநாட்டிலேதிருச்சேறையிலேஒருகாளிங்கதாண்டவர்மடுவும்காளிங்கனும்இல்லாமலேதாண்டவம்ஆடும்திருக்கோலம்அது.
வடஆர்க்காடுமாவட்டத்திலே – பள்ளிகொண்டான்என்னும்தலத்திலேவெண்ணெய்கிடைத்தமகிழ்ச்சியிலேதாண்டவம்ஆடும்நவநீததாண்டவன்வடிவம்சிறப்பாயிருக்கிறது.
இப்படிசிவன், விஷ்ணு, விநாயகர்எல்லாம்தாண்டவம்ஆடும்போது, எப்போதுமேஇன்னிசைவீணைஏந்திநிற்கும்ஏழிசைவல்லபியானசரஸ்வதியால்சும்மாஇருக்கமுடியுமா. அவளுமேதாண்டவம்ஆடமுனைந்துவிடுகிறாள். இந்ததாண்டவசரஸ்வதியைத்தமிழ்நாட்டுக்கோயில்களில்நான்காணவில்லை. இவளைக்காணஒருநடையேநடந்தேன். மைசூர்ராஜ்யத்திலேஉள்ளஹொய்சலர்கோயிலானபேலூர்சொன்னக்கேசவர்கோயிலிலேநவரங்கமண்டபத்திலேஇவள்நடனமாடிக்கொண்டிருக்கிறாள், வீணைஏந்தியகரத்தோடுதாளம்தவறாமல், இவளதுதாண்டவக்கோலம்மிக்கஅழகுவாய்ந்தது. நுணுக்கவேலைப்பாடுகள்நிறைந்தது.
இப்படித்தேவதேவியர்எல்லாம்தாண்டவம்ஆடும்போது, பக்தர்களில்எல்லாம்சிறந்தபக்தமணியானசீர்காழித்திருஞானசம்பந்தரும், ஞானப்பால்உண்டமகிழ்ச்சியிலேதாண்டவமாடிக்கொண்டேகிளம்பிவிடுகிறார். அந்தத்தாண்டவக்கோலத்தையுமேபார்க்கிறீர்கள்பக்கத்திலே. இவரேதாண்டவசம்பந்தர். இவர்இருப்பதுநெல்லைசாலிவாடீஸ்வரர்கோயிலிலே.
இந்தநவதாண்டவவடிவங்களைக்கண்டமகிழ்ச்சியிலேஎனக்குக்கூடதாண்டவம்ஆடும்ஆசைபிறக்கிறது. நீங்களும்தாண்டவம்ஆடிக்கொண்டேகிளம்பினால்அதுஅதிசயமில்லைதான். ஆம், ஹாவ்லக்எல்விஸ்என்பவன், “வாழ்வேஒருதாண்டவம்தான்! மரங்களும், மாக்களும், மக்களும்தாண்டவம்ஆடியேஉணர்ச்சிகளைவெளிப்படுத்தத்தெரிந்திருக்கிறார்கள்“ – என்றுதானேகூறுகிறான்?
ஆலயங்கள்ஏனையா?
சமீபகாலத்தில்ஒருபொருளாதாரப்பேராசிரியரைப்பார்த்தேன். நாட்டிலேபணவீக்கம்குறைவதற்கெல்லாம்பெரியபெரியதிட்டங்களைவகுத்துக்கொண்டிருந்தார்அவர். அதேசமயத்தில்பலரிடத்தேகாணுகின்றவறுமையையும்அவர்மறந்தாரில்லை. ‘எவ்வளவுபொருள், கோயில்என்றும்கூத்துஎன்றும்தேவரென்றும், திருவிழாஎன்றும்விரயமாகிறது. இத்தனைபொருளையும்வைத்துஒருகூட்டுறவுச்சங்கம்ஏற்படுத்தினால்மக்களுக்குஎவ்வளவுபலன்தரும்! என்றெல்லாம்விளக்கினார். கடவுளைக்கண்டுதொழுவதற்குகோயில்என்றஇடம்வேண்டுமா? என்றபெரியகேள்வியையேகிளப்பினார்.
கீழானமக்களேகடவுளைத்தண்ணீரில்காண்கிறார்கள்அறிஞர்களோவானவீதிகளில்கடவுளைக்காண்பார்கள்
கல்லினும், மண்ணிலும், மரத்திலும்கடவுளைக்காண்பவர்கள்அறிவிலிகளேதன்உள்ளத்தின்உள்ளேயேகடவுளைக்காண்பவன்தான்மனிதன்
என்றவேதஉரையைக்கூடமேற்கோள்காட்டினார். அவருடையஎண்ணம்கோவில்களைஎல்லாம்இடித்துதரைமட்டமாக்கிமக்களுக்குவீடுகட்டிக்கொடுக்கலாம். இடநெருக்கடியும்தீரும். மக்கள்வாழ்வதற்குநல்லவசதியாகவும்இருக்கும். கல்லையும்கட்டையையும்விலைக்குவிற்றாலோஏராளமானபணம்சேரும். பொருளாதாரநெருக்கடிகூடக்கொஞ்சம்குறையும்என்பதுதான். இப்படியெல்லாம்திட்டங்கள்வகுத்துகூறும், அவருடையதிறமையானபேச்சைக்கேட்கக்அவர்சொல்லுவதெல்லாம்சரிதானேஎன்றுகூடப்பட்டதுஎனக்கு.