தமிழ்நாடு – 25 – மதுராந்தகம்

மதுராந்தகத்துக்கருணாகரன்

கவிச்சக்கரவர்த்திகம்பன்தமிழ்நாட்டில்பலதலங்களுக்குச்சென்றிருக்கிறான். தொண்டைநாட்டிலுள்ளஅந்தப்பிரபலமானகச்சிக்கேசென்றிருக்கிறான். அங்குள்ளஏகம்பனையேவணங்கியிருக்கிறான். கம்பன்ஏதோகம்பங்கொல்லையைக்காத்ததினாலாவது, இல்லை! கம்பூன்றிநடந்ததினாலாவதுதான்கம்பன்என்றுபெயர்பெற்றான்என்றுகூறுவதுஅறியாமையே.

கோதண்டராமன்கோயில்

தேரழுந்தூரில்வழிவழியாகச்சைவப்பெருங்குடியில்வந்தகம்பனதுமுன்னோர்களுக்குக்கச்சிஏகம்பனேவழிபடுதெய்வமாகஇருந்திருக்கிறான். ஆனால்ஏகாம்பரன்பெயரையேஅவன்தந்தைஅவனுக்குச்சூட்டியிருக்கிறார். அதனால்தான்கம்பன்என்றபெயர்நிலைத்திருக்கிறது. தக்கபுகழையுமேபெற்றிருக்கிறது.

இந்தக்கம்பன்தொண்டைநாடுசென்று, கச்சிஏகம்பனைக்கண்டுதொழுதுவிட்டுத்தன்சொந்தஊராகியதேரழுந்தூருக்குத்திரும்பியிருக்கிறான். வருகிறவழியில்ஓர்ஊர். அந்தஊரில்கோயில்கொண்டிருப்பவன்கோதண்டராமன்என்றுஅறிந்தபோது, கோயிலுள்சென்றுதன்னைஆட்கொண்டபெருமானானராமனைவணங்கித்துதிக்கநினைத்திருக்கிறான். அவசரமாகஊர்திரும்புகின்றபயணம். ஆதலால்கடைகளில்நுழைந்துஆராதனைக்குரியபொருள்களைவாங்கிக்கொள்ளவோநேரமில்லை. ஆதலால்கையைவீசியேநடக்கிறான். கோயிலுள்நுழைகிறான். நேரேகர்ப்பகிருகத்துக்கேவந்துவிடுகிறான். அங்குலகஷ்மணசமேதனாகநிற்கும்கோதண்டராமனை, அவன்ஆராதித்தகருணாகரனைஎல்லாம்கண்குளிரக்காணுகின்றான். அந்தஅல்லையாண்டுஅமைந்தமேனிஅழகனை, அந்தஅழகனதுஅழகைஎல்லாம்எத்தனையோபாடல்களில்ராமகதைமுழுவதும்சொல்லிச்சொல்லிமகிழ்ந்தவன்ஆயிற்றே.

என்றாலும்செந்தாமரைக்கண்ணொடும்செங்கனிவாயினொடும்சந்தார்தடந்தோளோடும்தாழ்தடக்கைகளோடும்வில்லேந்திநிற்கும்அந்தராமனைக்கண்டபொழுது, தான்சொல்லவேண்டுவதுஇன்னும்எவ்வளவோஇருக்கின்றனபோல்தெரிகிறதேஎன்றஎண்ணம். இப்படித்தன்எண்ணங்களைஅலைபாயவிட்டுஅப்படியேமெய்மறந்துநின்றிருக்கிறான். மேலேகிடந்தஉத்தரீயத்தைஎடுத்துப்பவ்யமாகஅரையில்கட்டிக்கொள்ளவேண்டும்என்றுதோன்றவில்லை. மூர்த்தியைக்கைகூப்பிவணங்கவேண்டுமென்றும்தோன்றவில்லை.

இந்தநிலையில்நிற்கும்கம்பனைப்பக்கத்திலேநின்றுகொண்டிருந்தபரமபாகவதர்ஒருவர்பார்க்கிறார். அவருக்கோஇவன்பேரில்ஒரேகோபம். ‘இப்படியும்இருக்குமாஒருபிரகிருதி? சந்நிதிமுன்வந்தும்வணங்காமல்நிற்கிறானே. அப்படிஇவன்என்னவணங்காமுடியனா?’ என்றெல்லாம்எண்ணுகிறார். அவருக்குஇருந்தஆத்திரத்தில்கம்பன்விலாவிலேயேஒருகுத்துக்குத்தி, என்ன, ஐயா! ஆராதனைக்குஉரியபொருள்தான்ஒன்றும்கொண்டுவரவில்லைஎன்றால், சந்நிதியில்மூர்த்தியைக்கைகூப்பித்தொழவுமாதெரியாது?’ என்றுகேட்கிறார்.

அப்போதுதான்விழித்துக்கொண்டகம்பன், அப்பரமபாகவதருக்குப்பதில்சொல்கிறான். கவிச்சக்கரவர்த்திஅல்லவா? பதில்பாட்டாகவேவருகிறது. பாட்டுஇதுதான்:

நாராயணாயநமஎன்னும்நல்நெஞ்சர்

பாராளும்பாதம்பணிந்துஏத்துமாறுஅறியேன்

கார்ஆரும்மேனிக்கருணாகரமூர்த்திக்கு

ஆராதனைஎன்அறியாமைஒன்றுமே!

என்றபாடலைப்பரமபாகவதருடன்சேர்ந்துநாமும்கேட்கிறோம்.

கோயிலைஅறிந்தாலும்கும்பிடத்தெரியாததன்அறியாமையைஎவ்வளவுஎளிமையோடுசொல்கிறான்! அதைவிடஅவன்ஆராதனைக்குக்கொண்டுவந்தபொருள்தன்அறியாமையேஎன்றுசொல்கிறபோது, எத்தகையவிளக்கம்பெறுகிறோம்! உண்மைதானே. இறைவனையும்பெரியவர்களையும்அணுகும்போது, நாம்கொண்டுபோகவேண்டுவதுநம்மிடம்நிறையஇருப்பதும், அவர்களிடம்கொஞ்சமும்இல்லாததுமானபொருளைத்தானேகொண்டுபோய்க்காணிக்கையாகவைத்துஆராதிக்கவேண்டும்! நம்மிடம்நிறையஇருப்பதுஅறியாமை, இறைவனிடத்துக்கொஞ்சங்கூடஇல்லாதிருப்பதும்அறியாமை. ஆதலால்நமதுஅறியாமையையேஆராதனப்பொருளாகக்கொண்டுகொட்டவேண்டியதுதானே.

அதைத்தானேசெய்கிறான்கம்பன். நம்மையும்செய்யும்படிவற்பறுத்துகிறான். இப்படிக்கம்பன்ஆராதித்தகோதண்டராமனை, அந்தராமன்ஆராதித்தகருணாகரனைக்காணக்கம்பன்சென்றஊருக்கேநாமும்செல்லவேண்டாமா? அந்தஊர்தான்மதுராந்தகம்.

மதுராந்தகம்செங்கல்பட்டுஜில்லாவிலேஉள்ளதாலுக்காவின்தலைநகரம். நிரம்பச்சிறியஊரும்அல்ல. நிரம்பப்பெரியஊரும்அல்ல. சென்னைக்குத்தெற்கேஐம்பதுமைல்தூரத்திலேஇருக்கிறதுஇந்தஊர். ரயிலிலும்பஸ்ஸிலும், ஏன்நல்லகாரிலும்செல்லலாம். இந்தஊருக்குவடக்கேஇருந்துவந்தாலும், தெற்கேஇருந்துவந்தாலும், ஊருக்குமேற்கேஉயர்ந்தகரையோடுகூடியபெரியஏரிநம்கண்முன்வரும்.

அந்தஏரியின்மறுகாலேகல்லாறுஎன்றபெயரோடுஒருபெரியநதியாகஓடுகிறதுஎன்றால்கேட்டானேன். இந்தஏரிதமிழ்நாட்டிலுள்ளபெரியஏரிகளில்ஒன்று. கரையின்நீளம் 12960 அடி. அதன்நீர்ப்படிபரப்புபதின்மூன்றுசதுரமைல். ஏரிநீர்நிறைந்தால்நூறுஅடிக்குமேல்ஆழம். ஏரிக்குஐந்துமதகுகள். அந்தமதகுகள்வழியாகப்பாய்ந்துபெருகும்தண்ணீர்வளர்பிறைஅருங்குணம்முள்ளிமுன்னத்திக்குப்பம்மதுராந்தகம்முதலியஊர்களிலுள்ள 2702 ஏக்கர்நன்செய்நிலங்களில்மூன்றுபோகம்நெல்விளைவுக்குப்பயன்படுகிறது.

இந்தஏரியின்தண்ணீர்வழிந்தோடஅமைந்திருக்கும்கலிங்கல்நூற்றுஐம்பதடிநீளம்என்றால்ஏரியைக்கொஞ்சம்கற்பனைபண்ணிமானசீகமாகவேபார்த்துக்கொள்ளலாம்தானே. இந்தத்தலத்தில்நாம்முதன்முதலில்காணவேண்டுவதுகோதண்டராமன்கோயிலையல்ல, இந்தப்பெரியஏரியையும்அல்ல. இந்தஏரியில்உள்ளஇந்தக்கலிங்கலைத்தான். ஆம்! இந்தக்கலிங்கலில்தானேகோயிலினுள்சிலைஉருவில்நிற்கும்ராமனும்லக்ஷ்மணனும்சோதிவடிவிலேகாட்சிகொடுத்திருக்கிறார்கள்வெள்ளைக்காரக்கலெக்டர்கர்னல்பிளேசுக்கு.

இந்தராமன்காரியமேஇப்படிதான். நாளும்ராமநாமத்தையேஸ்மரணைசெய்துகொண்டிருக்கும்பக்தர்களுக்குத்தரிசனம்தரமாட்டான். ஆனால்அவனைப்பற்றிக்கொஞ்சம்கூடநினைக்காதவர்களைத்தேடிப்பிடிக்கஓடுவான். ராமதாஸின்சரித்திரம்தான்தெரியுமே! அல்லும்பகலும்அனவரதமும்துதித்து! பத்ராசலத்தில்கோயில்எடுப்பித்தஅந்தக்கோபண்ணாவின்கனவில்கூடத்தோன்றாதஅவன், ஹைதராபாத்தில்உள்ளபாதுஷாவானமன்னனைநோக்கிவிரைந்திருக்கிறான். அவனுக்குத்தரிசனம்தந்திருக்கிறான். மோகாராக்களாகவேஅவன்முன்கொட்டியிருக்கிறான்என்றால்கேட்பானேன், ஆனால்இந்தக்கலெக்டர்பிளேசுக்குத்தரிசனம்தந்ததுமிக்கரசமானகதை.

மதுராந்தகத்துஏரிபெரியஏரிதான்என்றாலும், இந்தஏரிக்குஒருசாபமோஎன்னவோ, வருஷாவருஷம்கரைஉடைத்துக்கொள்வதுதவறுவதுஇல்லை. பெரும்பொருள்செலவில்ஏரிக்கரையைப்பழுதுபார்ப்பார்கள், இங்குள்ளமராமத்துஇலாகாஅதிகாரிகள்,

என்றாலும்நல்லஐப்பசி, கார்த்திகைமாதங்களில்அடைமழைபெய்துஏரிநிறைந்துவிட்டால், ஒரேகவலைதான். எங்கேயோஓர்இடத்தில்பிய்த்துக்கொண்டுகரைஉடையும். தண்ணீரெல்லாம்வெளியேஓடும். வழியிலுள்ளபயிர்களைஅழிக்கும். மாடுமனைமக்களையெல்லாம்வாரிக்கொண்டேபோய்விடும். ஏரியில்உள்ளதண்ணீர்எல்லாம்இப்படிவந்துவிட்டால்பயிர்விளைவதேது? நிலவரிவசூலாவதுஏது? இதனால்எல்லாம்சர்க்காருக்குஒரேநஷ்டம். கலெக்டர்களுக்கோஓயாததலைவலி,

1795-1798 வருஷங்களில்செங்கல்பட்டுஜாகீரில்கலெக்டராகஇருந்தவர், கர்னல்லயனல்பிளேஸ்என்றஆங்கிலத்துரை. இவருக்குஇந்தமதுராந்தகம்பெரியஏரிக்கதைதெரியும். அவர்கலெக்டராகவந்தஅந்தவருஷத்திலே (1795இல்) ஏரிஉடைப்புஎடுத்துஅதனால்மக்களுடன்சர்க்கார்அடைந்தநஷ்டங்களைப்பற்றி. விவரமானகுறிப்புகளைப்படித்திருக்கிறார்.

ஆதலால் 1798இல்இந்தஏரிக்கரையைப்பலப்படுத்தவிசேஷசிரத்தைஎடுத்திருக்கிறார். மழைகாலம்முழுதும்இங்கேயேமராமத்துஇலாகாஅதிகாரிகளுடன்முகாம்செய்வதுஎன்றுதிட்டமிட்டுக்கொள்கிறார். தக்கபாதுகாப்புநடவடிக்கைகள்எடுக்கமுனைந்திருக்கிறார். அப்படிமுகாம்பண்ணியபோது, ஏரியைநகரையெல்லாம்சுற்றிப்பார்த்துக்கொண்டுவந்தவர், கோதண்டராமசாமிகோயில்வாயிலுக்குவந்திருக்கிறார்.

கோதண்டராமன்

கோயில்கோபுரம்எல்லாவற்றையும்கண்டுஅதிசயித்துநின்றதுரைமகனைஅர்ச்சகர்களும்ஊர்ப்பிரமுகர்களும்கோயிலுக்குள்வந்துமற்றஅழகுகளையும்காணஅழைத்திருக்கின்றனர். அவரும்காலில்உள்ளபாதரட்சைகளையெல்லாம்கழற்றிவைத்துவிட்டுக்கோயிலுக்குள்நுழைந்துவெளிப்பிராகாரத்தைச்சுற்றிவந்திருக்கிறார். அங்குஓரிடத்தில்கருங்கற்கள்பலகுவித்துவைத்திருப்பதைப்பார்த்து, ‘இவைஏன்இங்குகுவித்துவைக்கப்பட்டிருக்கின்றன?’ என்றுகேட்டிருக்கிறார். அங்குள்ளவர்கள், இங்குகோயில்கொண்டிருப்பவர்சக்கரவர்த்தித்திருமகனானராமன். அவருடையதர்மபத்தினிஜானகிக்குஎன்றுஒருதனிக்கோயில்இல்லை. அந்தத்தாயாருக்குஒருகோயில்கட்டலாம்என்றேகல்எல்லாம்சேகரித்தோம். ஆனால்கட்டமுடியவில்லை. வருஷாவருஷம்விளைச்சல்இல்லாதகாரணத்தால், மக்களிடம்போதியபணம்வசூலிக்கமுடியவில்லை. கோயில்கஜானாவிலும்பலம்இல்லை, அதனால்தான்எடுத்தகாரியம்தடைப்பட்டுக்கிடக்கிறது!’ என்றுசொல்கிறார்கள்.

இதையெல்லாம்கேட்டகலெக்டரோ, கொஞ்சம்ஏளனமாகவே, ‘என்ன, ஐயா! உங்கள்சாமிக்குஇந்தஏரிஉடையாமல்பார்த்துக்கொள்ளத்தெரியவில்லை. இவருக்குஒருகோயில், இவர்மனைவிக்குஒருகோயில்! இதுஎல்லாம்வீண்பணவிரையந்தானே?’ என்றுபேசியிருக்கிறார்.

இதைக்கேட்டஅர்ச்சகர்கள்துடிதுடித்து, ‘துரைவாள்! இப்படிஎல்லாம்சொல்லக்கூடாது. எங்கள்ராமன்இக்கலியுகத்தில்கண்கண்டதெய்வம். அவனைஉள்ளன்போடுஆராதிப்பவர்களுக்குஅவர்கள்வேண்டுவதையெல்லாம்முட்டின்றிஅருளுவான்!’ என்றெல்லாம்சொல்கிறார்கள்.

ஏரிக்கரைநினைவாகவேஇருந்தகலெக்டர்இதைக்கேட்டு, ‘சரி. உங்களுக்கும்உங்கள்ராமனுக்குமேஒருசவால். நான்உள்ளன்போடுஉங்கள்ராமனிடம்பிரார்த்தித்துக்கொள்கிறேன். இந்தவருஷத்துமழையில்இந்தஏரிக்கரைஉடையாமல்இருந்தால், நானேஇந்தராமன்மனைவிஜானகிக்குக்கோயில்கட்டித்தருகிறேன். பார்ப்போம், இதை!’ என்றுசொல்லிவிட்டு, முஸாபரிபங்களாவுக்குத்திரும்பிவிடுகிறார்.

அன்றிரவேநல்லமழை. மறுநாள்காடுமேடுஎல்லாம்நீர்வழிந்துஓடுகிறது. ஏரியில்தண்ணீர்மட்டம்ஏறிக்கொண்டேஇருக்கிறது. கலெக்டர்கருணாகரமூர்த்தியைமட்டும்நம்பிச்சும்மாஇருந்துவிடவில்லை. மராமத்துஇலாகாஅதிகாரிகள்அத்தனைபேரையும்ஏரிக்கரையில்பலஇடங்களில்காவல்போட்டுக்கரைஎங்கேஉடைத்துக்கொள்ளும்என்றுதோன்றுகிறதோ, அந்தப்பாகத்தையெல்லாம்பலப்படுத்தமுஸ்தீபுகள்செய்கிறார்.

பகல்முழுதும்மழைபெய்கிறது: இரவும்நிற்கக்காணோம். கலெக்டருக்குஒரேகவலை, இரண்டாம்நாளும்உத்தியோகஸ்தர்கள்எல்லாம்சோர்வுஇல்லாமல்கரையைக்காவல்காப்பார்களாஎன்று. ஆதலால்அவர்களைச்சடுதிபார்க்கஇரவுபத்துமணிக்குக்கலெக்டர்புறப்படுகிறார்குடைஒன்றைஎடுத்துக்கொண்டு. தாசில்தார், டபேதார்மற்றும்ஊர்க்காரர்சிலரும்கலெக்டர்பின்னாலேயேவருகிறார்கள். எல்லோருமேஏரிக்கரைமீதுநடக்கிறார்கள்கொட்டுகிறமழையிலே.

கலிங்கல்பக்கம்வந்ததும்துரைதம்கையிலுள்ளகுடையையும்தொப்பியையும்எறிந்துவிட்டு, மண்டியிட்டுக்கூப்பியகையராய்த்தொழுதுகொண்டுஇருக்கிறார். பக்கத்தில்உள்ளவர்கள்துரைவழுக்கிவிழுந்துவிட்டார்போலும்என்றுஎண்ணி, அவரைத்தூக்கிவிடமுனைகிறார்கள்.

அவரோ, ‘அடேமுட்டாள்களே! அதோபாருங்கள். கலிங்கலின்இருபக்கத்திலும்தேஜோமயமானஇரண்டுவீரர்கள்அல்லவாநின்றுகாவல்புரிகிறார்கள். அவர்கள்வில்லேந்திநிற்கின்றஅழகுதான்என்ன! முகத்தில்தான்எத்தனைமந்தஹாசம்!’ என்றுகூவவேஆரம்பித்துவிடுகிறார்.

பக்கத்தில்நிற்கும்பக்தர்களுக்குஒன்றுமேதெரியவில்லை. கலெக்டருக்குக்கிடைத்தகோதண்டராமதரிசனம்அவர்களுக்குக்கிடைக்கவில்லை. கலெக்டரும்மக்களும்ஊர்திரும்புகிறார்கள்.

அன்றுஏரிக்கரைஉடையவில்லை. கலெக்டரும்தான்சொன்னசொல்லைநிறைவேற்றமறக்கவில்லை. ஜானகிக்குஒருகோயிலைத்தம்முடையமேற்பார்வையிலேயேகட்டிமுடித்துக்கொடுத்துவிட்டுத்தான்தம்தாய்நாட்டுக்குக்கப்பல்ஏறிஇருக்கிறார். இந்தத்தருமம்கும்பினிஜாகீர்கலைக்டர்கர்னல்லயனல்பிளேஸ்துரைஅவர்களதுஎன்றுகோயில்மண்டபத்திலேகல்லில்வெட்டிவைத்திருக்கிறார்கள். இதைஇன்றும்அங்குசெல்பவர்கள்காணலாம். கலெக்டர்வேண்டுகோளுக்குஇரங்கிஏரிகாத்தஇந்தராமனையேஏரிகாத்தபெருமாள்என்றுஇன்றும்அழைக்கிறார்கள்மக்கள்.

இத்தனைவிஷயங்களும்தெரிந்தபின், இனிநாமும்கோயிலுள்செல்லலாம். கம்பன்கண்டகோதண்டராமனை, ஏரிகாத்தபெருமாளைக்கண்டுவணங்கலாம். கோயிலுக்குமுன்னாலேபெரியதிருக்குளம். குளக்கரையில்எல்லாம்நல்லதென்னஞ்சோலைகள். இந்தச்சோலைகளுக்கும்ஏரிக்கரைக்கும்இடையிலேகோயில்.

இந்தக்கோயிலிலேமூலவர்கோதண்டராமன். உற்சவமூர்த்திஇருவர், ஒருவன்கருணாகரன். மற்றொருவன்கோதண்டராமன். இவர்களிடையேஒருபெரியவேற்றுமை. கோதண்டராமனோஏகபத்தினிவிரதன். கருணாகரனோஇரண்டுபெண்டாட்டிக்காரன். ஸ்ரீதேவிபூதேவிசமேதனாகஅவன்நிற்கிறான். ஆனால்இந்தக்கருணாகரன்ராமன்வணங்கியநாராயணமூர்த்திஎன்கிறார்கள்.

கோதண்டராமன்கோயிலுக்குவலப்பக்கத்திலேஜனகவல்லித்தாயாரின்கோயில், இதைத்தான்கலெக்டர்லயனல்பிளேஸ்கட்டியிருக்கிறார். இத்தலம்வைஷ்ணவர்களுக்குமிகவும்உயர்ந்தஸ்தலம். அங்குதான்இராமானுஜருக்குப்பெரியநம்பிபஞ்சசம்ஸ்காரம்என்னும்வைஷ்ணதீக்ஷைசெய்துவைத்திருக்கிறார். தீக்ஷைநடந்தஇடம்மகிழமரத்தடியில். அந்தமகிழமரமும், ஸ்தலப்பெயரானவகுளாரண்யம்என்பதைநிலைநிறுத்தஅங்கேயேநின்றுகொண்டிருக்கிறது.

இந்தமகிழடியையேஸ்ரீவைகுண்டவர்த்தனம்என்றுஅழைக்கிறார்கள். கம்பன்கண்டகருணாகரனை, கோதண்டராமனை, இளையபெருமாளுடன்நிற்பவனைத்தரிசித்துவிட்டுவருவதுடன்பெரியநம்பி, இராமானுஜர், மகிழடிஎல்லோரையும்சேவைசெய்துதிரும்பலாம்.

இந்தமதுராந்தகம்சோழமண்டலத்தைராஜராஜனுக்குமுன்னால்ஆண்டஉத்தமச்சோழன்என்னும்மதுராந்தகச்சோழனால்வேதம்ஓதும்அந்தணர்களுக்குமான்யமாகவிடப்பட்டு, மதுராந்தகச்சதுர்வேதிமங்கலம்என்றுநிலைபெற்றிருக்கிறது.

மூலவர்கோயில்அப்போதேஎழுந்திருக்கவேண்டும். பின்னர்வந்தசோழமன்னர்களாலும்நாயக்கமன்னர்களாலும்விரிவடைந்திருக்கிறது. இதைஅர்ச்சகர்கள்ஒப்புக்கொள்ளமாட்டார்கள். மதுரசம்பொருந்தியபுண்ணியதீர்த்தங்கள்நிறைந்தநகரம்ஆதலால்தான்மதுராந்தகம்என்பார்கள். நாம்அவர்களோடுசண்டைக்குப்போகவேண்டாம்.