தமிழ்நாடு – 30 – திருவெண்ணைநல்லூர்

வெண்ணெய்நல்லூர் அருள்துறையார்

கவிச்சக்கரவர்த்திகம்பர்வீட்டிலேஒருவிசேஷம். அதற்குஊரேதிரண்டுவந்திருக்கிறது. கம்பரதுஅத்தியந்தநண்பரானசடையப்பமுதலியாரும்வந்திருக்கிறார். வந்தவர்கூட்டத்தில்ஒருபக்கத்தில்ஒதுக்குப்புறமாகஉட்கார்ந்துகொள்கிறார். இதைக்கம்பர்கவனிக்கவில்லை . கம்பரதுமனைவிபார்த்துவிடுகிறாள். உடனேதன்கணவனைஅணுகி, ‘அண்ணாவந்து, ஒதுக்குப்புறமாகஉட்கார்ந்திருக்கிறார்; அவரைஅழைத்துவைக்கவேண்டியஇடத்திலேஉட்காரவையுங்கள்என்றுசொல்கிறாள். இதற்குக்கம்பர்சொல்கிறார், ‘இப்படிஇவரைஇன்றுசபைக்குநடுவேவீற்றிருக்கவைத்துவிட்டால்போதுமா? அவரைவைக்கவேண்டியஇடத்தில்வைக்கமறக்கமாட்டேன்என்கிறார். இதைஞாபகத்திலேவைத்துக்கொண்டுதானோஎன்னவோ, பின்னர்தாம்ராமாவதாரம்பாடும்போதுதன்னைஆதரித்தஅந்தவள்ளல்சடையப்பரைக்காவியத்திலேபத்துஇடங்களிலேகொலுவீற்றிருக்கச்செய்துவிடுகிறார்கம்பர். ராமலக்ஷ்மணர்கள்விசுவாமித்திரரோடுமிதிலைசென்றுதங்குகிறார்கள். அன்றுபௌர்ணமி, இரவில்நிலவொளிபரந்துவீசுகிறது. எப்படிநிலவொளிபரந்திருக்கிறது? சடையன்புகழ்போல்எங்கும்பரந்திருக்கிறதுஎன்பதேஅவருடையஉவமை. இதைச்சொல்கிறார்அழகானஒருசொல்லோவியத்திவாயிலாக,

வண்ணமாலைகைபரப்பி, உலகை

வளைந்தஇருள்எல்லாம்

உண்ணஎண்ணி, தண்மதியத்து

உதயத்துஎழுந்தநிலாக்கற்றை

விண்ணும்மண்ணும்திசைஅனைத்தும்

விழுங்கிக்கொண்டவிரிதல்நீர்ப்

பண்ணைவெண்ணெய்ச்சடையன்

புகழ்போல்எங்கும்பரந்துளதால்

என்பதுதானேகம்பர்பாட்டு. இந்தவள்ளல்சடையப்பர்பிறந்தபதியேவெண்ணெய்நல்லூர். சடையப்பர்பிறந்தபதியைப்பற்றியும்ஒருவிவாதம். தென்பெண்ணைக்கரையிலுள்ளதிருவெண்ணெய்நல்லூரா? இல்லை, காவிரிக்கரையில்குத்தாலம்பக்கத்திலுள்ளகதிர்வேய்மங்கலமாஎன்று (கதிராமங்கலம்என்றுபெயர்நிலவுகிறது). கதிர்வேய்மங்கலத்தையும்அங்குள்ளவர்கள்வெண்ணெய்நல்லூர்என்றேஅழைக்கிறார்கள். இந்தவிவாதத்துக்குவிடைகூறமுயல்கிறது. சோழமண்டலசதகப்பாட்டுஒன்று.

எட்டுத்திசையும்பரத்தநிலா

எறிக்கும்கீர்த்திஏருழவர்

சட்டப்படுஞ்சீர்வெண்ணெய்நல்லூர்

சடையன், கெடிலன்சரிதம்எலாம்

ஒட்டிப்புகழ, ஆயிரம்நாவு

உடையார்க்குஅன்றி, ஒருநாவால்

மட்டுப்படுமோ? அவன்காணிவளஞ்சேர்சோழமண்டலமே.

வெண்ணெய்நல்லூர்ச்சடையனைக்கெடிலன்என்றும்போற்றுவதால், கெடிலநதிஓடுகின்றநடுநாடே. அவன்நாடுஎன்றும், ஆனால்அவனுக்குக்காணிவளம், சிலகாலம்சோழநாட்டில்இருந்திருத்தல்கூடும்என்றும்தெரிகிறது. விவாதம்எப்படியும்இருக்கட்டும். கம்பனால்புகழ்பெற்றிருக்கிறார்சடையப்பர். அந்தச்சடையப்பரால்புகழ்பெற்றிருக்கிறதுவெண்ணெய்நல்லூர். அந்தவெண்ணெய்நல்லூருக்கேசெல்கிறோம்நாம்இன்று.

திருவெண்ணெய்நல்லூர்விழுப்புரத்துக்குத்தெற்கேபன்னிரண்டுமைல்தொலைவில்இருக்கிறது. விழுப்புரம்திருச்சிரயில்மார்க்கத்தில்சென்றால்திருவெண்ணெய்நல்லூர்ரோட்ஸ்டேஷனில்இறங்கலாம். அப்படிஇறங்கினாலும்அங்கிருந்துநான்குமைல்மேற்கேபோகவேணும். இல்லை, திருக்கோவலூர்உலகளந்தார், வீரட்டர்முதலியவர்களைத்தரிசித்துவிட்டுவருபவர்கள்திருக்கோவலூருக்குநேர்கிழக்கேபதினான்குமைல்ரோட்டில்வரவேணும். அப்படிச்சென்றால்இத்தலத்தைஅடையலாம். எங்குஎல்லாமோசுற்றிக்கொண்டுசெல்லும்பாதை, முதலில்ஒருதெப்பக்குளக்கரையில்கொண்டுசேர்க்கும். அக்குளத்துக்குஇரண்டுபக்கமும்இரண்டுகோயில்கள். குளத்துக்குத்தென்புறம்இருப்பதுவிஷ்ணுகோயில், வடபுறம்இருப்பதுசிவன்கோயில். இருவரும்இப்படிஒற்றுமையாகஅடுத்தடுத்துஇருந்தாலும்மக்கள்என்னவோபிராதான்யம்கொடுப்பதுசிவன்கோயிலுக்குத்தான்; அங்குள்ளகிருபாபுரிஈசுவரருக்குத்தான். இந்தக்கிருபாபுரிஈசுவரரின்பெயர்இன்றுமங்கிமறைந்துபோய்விட்டது. இன்றுஅவர்தடுத்துஆட்கொண்டநாதர்என்றபெயரிலேயேபிரபலமாகஇருக்கிறார். இத்தலத்துக்குவெண்ணெய்நல்லூர்என்றுஏன்பெயர்வந்தது, இவர்ஏன்தடுத்தாட்கொண்டநாதர்என்றுபெயர்பெற்றார்என்றுதெரிந்துகொண்டபின்னர்கோயிலுக்குள்போகலாம். உமாதேவிக்குப்பசுக்களாகியஉயிர்களின்பேரில்அடிக்கடிஇரக்கம்பிறந்துவிடும். அதனால்கைலையைவிட்டுத்தவம்செய்யப்பூலோகத்துக்கேவந்துவிடுவாள். அப்படிவந்தவள்பசுவெண்ணெய்யினால்கோட்டைகட்டிக்கொண்டுஅதனிடையேபஞ்சஅக்கினியைவளர்த்துத்தவம்புரிகிறாள். (அடேஇந்தவெண்ணெய்உருகியேபெண்ணைபெருகிற்றுபோலும்!) அப்படித்தவம்புரிந்துபேறுபெற்றதலம்ஆனதனாலேதான்இத்தலத்துக்குவெண்ணெய்நல்லூர்என்றுபெயர். அம்மைஅருள்பெற்றகோயில்ஆனதனாலேகோயிலுக்கேஅருள்துறைஎன்றுபெயர்அமைகிறது.

இந்தவெண்ணெய்நல்லூருக்குத்தென்கிழக்கேஏழுஎட்டுமைல்தூரத்தில்நாவலூர்என்றுஒருஊர். அந்தநாவலூர்தான், சைவசமயாச்சாரியார்களில்ஒருவரானசுந்தரர்பிறந்தஊர். கைலையில்இறைவனுக்குஉகந்ததொண்டராகஇருந்தஆலாலசுந்தரரேதிருநாவலூரில்சடையனார், இசைஞானியர்என்னும்நல்லசைவத்தம்பதிகளின்தவப்புதல்வராகவந்துபிறக்கிறார். நம்பிஆரூரர்என்றுநாமகரணம்செய்யப்படுகிறார். அந்தநாட்டுமன்னர்நரசிங்கமுனையரையரால்வளர்க்கப்படுகிறார். வளர்ந்துவாலிபப்பருவம்எய்தியஇவருக்கு, நாவலூரைஅடுத்தபுத்தூரில்திருமணம்நடக்கஏற்பாடுஆகிறது. திருமணம்நடக்கஇருக்கிறநேரத்திலே, ஒருவயோதிகஅந்தணர்இம்மணமகன்எனக்குஅடிமை, இவன்பாட்டன்எழுதிக்கொடுத்தஅடிமைச்சீட்டுஎன்னிடம்இருக்கிறது. இவன்என்பணியாளனாகவேலைசெய்தல்வேண்டும். மணம்முடித்தல்கூடாதுஎன்றுஇடைபுகுந்துதடுக்கிறார். நம்பிஆரூரர், ‘இதுஎன்னபித்துக்குளித்தனம்? எங்காவதுஅந்தணன்வேறொருஅந்தணனுக்குஅடிமையாவதுண்டா ?’ என்றுமறுக்கிறார். ஆத்திரத்தில்கிழவேதியர்நீட்டியஓலையையும்பிடித்துஇழுத்துக்கிழித்துஎறிந்துவிடுகிறார். வலுத்தகிழவரும்சளைக்கவில்லை . ‘இந்தநம்பிஆரூரன்கிழித்ததுநகல்தான், மூலஓலைஎன்னிடம்திருவெண்ணெய்நல்லூரில்இருக்கிறதுஎன்றுஅங்குஇழுத்தேசெல்கிறார். பேரவையைக்கூட்டித்தம்வாதினைஉரைக்கிறார். மூலஓலையையேகாட்டித்தம்கட்சியைநிலைநிறுத்துகிறார். வேறுவழியில்லை. நம்பியாரூரர்கிழவர்பின்னாலேயேசெல்கிறார். முன்சென்றகிழவர்அங்குள்ளஅருள்துறைஎன்னும்கிருபாபுரிஈசுவரர்கோயிலுள்நுழைந்துஇதுவேஎன்வீடுஎன்றுசொல்லிமறைகிறார். அப்போதுதான்உணர்கிறார். இறைவனேதம்மைத்தடுத்துஆட்கொள்ளக்கிழவேதியராகவந்திருக்கிறார்என்பதை. இறைவனும், நீநம்மோடுவன்மைபேசிவாதிட்டாய், ஆதலால்நீவன்தொண்டனாகவேவிளங்குவாய், எம்மேல்சொல்தமிழ்பாடல்கள்பாடுஎன்றுஏவுகிறார். ‘எபடிப்பாடுவதுஎன்றுவன்தொண்டர்மயங்கியபோது, ‘நீநம்மைப்பித்தன்என்றெல்லாம்பேசிஏசினாய்அல்லவா, பித்தன்பித்தன்என்றேபாடுஎன்றுவேறேஅடியெடுத்துக்கொடுக்கிறார். பாடுகிறார்வன்தொண்டர்.

பித்தாபிறைசூடி!

பெருமானே! அருளாளா!

எத்தால்மறவாதே!

நினைக்கின்றேன்மனத்துஉன்னை

வைத்தாய்பெண்ணைத்தென்பால்

வெண்ணெய்நல்லூர்அருள்துறையுள்

அத்தா! உனக்குஆளாய்இனி

அல்லேன்எனலாமே.

என்றேபாடிப்பரவுகிறார்.

அருள்துறைகோயில்வாயிலுக்குவந்ததும்இந்தப்பாடல்எனக்குஞாபகம்வந்தது. பெண்ணைக்குத்தென்பக்கம்இக்கோயில்இருக்கிறது. என்கிறாரேஇவர். நாம்வந்தவழியில்இந்தஊருக்குவடக்கேநான்குமைல்தொலைவில்அல்லவாதென்பெண்ணைஇருந்ததுஎன்றுஎண்ணினேன், உடன்வந்தஅன்பர்களையும்விசாரித்தேன். ஆம்நம்பிஆரூரர்காலத்தில்பெண்ணைஇவ்வூரைஅடுத்துஓடியிருக்கிறது. பின்னர்தான்திசைதிரும்பிவடக்கேஒதுங்கியிருக்கிறதுஎன்றார்கள். மேலும்பெண்ணையாற்றின்கிளையானஒருமலட்டாறு, ஊரைஅடுத்துஓடுகிறதுஎன்கிறார்கள். நீரேஇல்லாததால்மலட்டாறுஎன்றுபெயர்பெற்றதோ, இல்லை, மலாடர்நாட்டில்ஓடுவதால்மலட்டாறுஎன்றுபெயர்பெற்றதோதெரியவில்லை. ஆனால்இந்தமலட்டாற்றின்கரையிலேயேவெண்ணெய்நல்லூர்இருக்கிறது. அருள்துறைகோயிலும்இருக்கிறது.

இனிகோயிலுள்நுழையலாம். கோயிலுள்நுழைந்ததும்தலவிநாயகரானபொள்ளாப்பிள்ளையாரைவணங்கிவிடவேண்டும். (பொள்ளாஎன்றால்உளியால்பொளியாதசுயம்புஎன்றுபொருள்) அப்படிவணங்காவிட்டால்அவர்பொல்லாதவராகவேமாறலாம். அப்பனைப்போல்பிள்ளையும், ‘அற்புதப்பழஆவணங்காட்டிநம்மைஆட்கொள்ளவேமுனையலாம்அல்லவா? இனிதடுத்துஆட்கொண்டதேவரையும்அவரதுதுணைவிவேற்கண்நங்கையையும்கண்டுதொழலாம். இவர்களைப்பற்றிச்சிறப்பாகச்சொல்வதற்குஒன்றும்இல்லை. இந்தக்கோயிலுக்குஉள்ளேயேசிவஞானபோதம்அருளியமெய்கண்டாருக்குஒருதனிச்சந்நிதிஇருக்கிறது. அவர்வெண்காடர்அருளினாலேபெண்ணாகடத்திலேஅச்சுதக்களப்பாளர்மகனாகப்பிறந்தவர். வெண்ணெய்நல்லூரிலேமாமனார்வீட்டிலேவளர்ந்தவர். பரஞ்சோதிமுனிவர்அருளினாலேஞானோபதேசம்பெற்றுமெய்கண்டார்என்றதீக்ஷாநாமம்பெற்றவர். சிவஞானபோதம்என்னும்சாத்திரத்தைஎழுதி, சித்தாந்தசைவத்தைநிலைநிறுத்தியவர். இவருக்குக்கோயிலுள்முக்கியத்துவம்அளித்ததுபோல், கோயிலுக்குவெளியேயும்திருவாவடுதுறைமடத்தார்மடம்நிறுவிஅதனைப்பரிபாலித்துவருகிறார்கள்.

இத்தனையும்பார்த்தாலும்அந்தவன்தொண்டரைக்காணவில்லையேஎன்றுஎண்ணுவோம். அவருக்குஇந்தக்கோயிலில்முக்கியஇடம்உண்டு. கோயிலின்தெற்குப்பிராகாரத்திலேமேற்கேபார்த்தசிறுகோயிலில்செப்புவடிவிலேஇவரைச்சமைத்துவைத்திருக்கிறார்கள். மற்றக்கோயில்களில்எல்லாம்கோலாகலமாகஇருக்கும்இந்தஆலாலசுந்தரர், இங்குஅடக்கஒடுக்கமாகஅடிமைஓலைஏந்தியகையராய்நிற்கிறார். நிரம்பவும்பிற்பட்டகாலத்திலேதான்செய்துவைத்திருக்கவேணும். அவரைப்பார்த்துவிட்டேதிரும்பலாம். இந்தக்கோயிலிலேகல்வெட்டுக்கள்பிரசித்தம். எல்லாம்பன்னிரண்டாம்பதின்மூன்றாம்நூற்றாண்டில்எழுந்தவை. அவைகளில்இரண்டுமுக்கியமானவை. ஒன்றுகோப்பெருஞ்சிங்கன்காலத்தியது. 1268-ல்வெட்டப்பட்டது. செஞ்சியைச்சேர்ந்தஉடையான்ஸ்ரீகைலாயமுடையான், திருவெண்ணெய்நல்லூர்ஆட்கொண்டதேவருக்குப்பிச்சன்பாடச்சொன்னான்என்றும், பெயருடையஇரண்டுவெள்ளிமுரசும்ஒருபொன்கல்காறையும்தானம்செய்ததைப்பற்றியும். மற்றொன்றுகுலோத்துங்கசோழன்காலத்தியது, வழக்குவென்றதிருவம்பலம்என்றகல்மண்டபம்கட்டச்சிலகுடிகளுடையவீடுகளைஎடுத்துக்கொண்டுவேறுஇடம்தந்ததைக்குறிக்கும். இம்மண்டபமேகோயில்பிராகாரத்தில்வடகிழக்குமூலையில்இருக்கிறது. இவைதவிர, தடுத்துஆட்கொண்டதேவர், ஆவணம்காட்டிஆட்கொண்டான்என்றெல்லாம்கல்வெட்டில்குறிப்புகள்இருக்கின்றன. இன்னும்திருவெண்ணெய்நல்லூருக்குக்கிழக்கேஇரண்டுமைல்தொலைவில்தடுத்துஆட்கொண்டஊர்என்றுஒருகிராமமும்அதற்கும்கிழக்கேபண்ணுருட்டிரோட்டில், பண்ணுருட்டிக்குமேற்கேநான்குமைல்தொலைவில்மணம்தவிர்த்தபுத்தூர்என்றுஒருகிராமமும்இருக்கின்றன. இவையெல்லாம்சுந்தரனைஇறைவன்தடுத்துஆட்கொண்டது, ஏதோகர்ணபரம்பரைக்கதைஎன்றல்லாமல்உண்மையாய்நடந்தவரலாறுஎன்பதைவலியுறுத்தும்.

இத்தனையும்தெரிந்துகொண்டஇந்தமூச்சிலேயேசுந்தரர்பிறந்தநாவலூருக்குச்சென்று, அங்குள்ளபக்தஜனேசுவரையும்மனோன்மணியையும்வணங்கிவிட்டேதிரும்பலாமே. சென்னைதிருச்சிடிரங்க்ரோட்டில்விழுப்புரத்துக்குத்தெற்கேபதினாறுமைல்சென்றதும், ரோட்டடியிலேயேதிருநாமநல்லூர்சமுதாயவளர்ச்சித்திட்டஆபீஸ்கட்டிடங்கள்தென்படும். அன்றையதிருநாவலூரேஇன்றுதிருநாமநல்லூர்என்றுவிரிந்திருக்கிறது. அந்தமெயின்ரோட்டிலிருந்துஇடப்பக்கம்திரும்பிஒருமைல்சென்றுவடபக்கம்திரும்பினால்நாவலேசுவரர்கோயில்வாயில்வந்துசேரலாம், இறைவன், இறைவிசுந்தரநாயகியைஎல்லாம்கண்டுதொழலாம்.

இந்தக்கோயிலுக்குள்ஒருகோயிலிலேவரதராஜப்பெருமாள்வேறேஇடம்பிடித்துக்கொண்டிருக்கிறார். வெண்ணெய்நல்லூரில்சுந்தரரைஆட்கொண்டுஅவர்முடிக்கஇருந்ததிருமணத்தைத்தடுத்துநிறுத்தியஇறைவனே, பின்னர்ஒன்றுக்குஇரண்டாக, திருவாரூர்பரவையையும்திருஒற்றியூர்சங்கிலியையும்இவருக்குமணம்முடித்துவைத்திருக்கிறார். இந்தஇரண்டுமனைவியரோடுஒருங்கிருந்துஇவர்குடித்தனம்பண்ணினார்என்றுஅவர்சரித்திரம்கூறவில்லை . என்றாலும்பிறந்தஇடத்துப்பெரியவர்கள், சுந்தரருடன்பரவை, சங்கிலிஇருவரையுமேசெப்புச்சிலையாகவடித்து, இருபக்கங்களிலும்நிறுத்திமகிழ்ந்திருக்கிறார்கள். நல்லஅழகானவடிவங்கள். சுந்தரரேஇந்தத்தலத்தைத்தானேமிகவும்விரும்பியிருக்கிறார். ‘வேயாடியார்வெண்ணெய்நல்லூரில்வைத்துஎன்னைநாயாடியார்க்குஇடமாவதுதிருநாவலூரேஎன்பதுதானேஅவரதுதேவாரம். எவ்வளவுதான்பற்றுஅற்றவர்கள்ஆனாலும்பிறந்தஇடத்துப்பாசம்போகுமா, என்ன?