தமிழ்நாடு – 31 – திருவதிகை

அதிகைவீரட்டனார்

மூன்றுஅசுரர்கள், வித்துண்மாலி, தாருகாக்ஷன்கமலாக்ஷன்என்று. மூவரும்வரபலம்மிக்குஉடையவர்கள். மூவரும்மூன்றுகோட்டைகளைக்கட்டிக்கொள்கிறார்கள். பொன், வெள்ளி, இரும்பால்ஆனவைஅக்கோட்டைகள். இந்தக்கோட்டைகளோடேயேஎவ்விடமும்செல்லக்கூடியவர்கள்அவர்கள், இவர்களதுஆட்சிஎப்படிஇருக்கும்என்றுசொல்லவாவேண்டும்? மக்கள்தேவர்நரகர்எல்லாம்இந்தஆட்சியில்துன்புறுகின்றனர். எல்லோருமேசென்றுமுறையிடுகிறார்கள், சிவபெருமானிடம். அவரும்இந்தத்திரிபுரங்களைத்தகர்த்தெறிய, இந்தஅசுரர்களுடன்போர்புரியசன்னத்தர்ஆகிறார். பூமியையேதட்டாகவும், சூரியசந்திரர்களையேசக்கரங்களாகவும்கொண்டுஅமைத்ததேர்தயாராகிறது. வேதங்களேகுதிரைகளாகஅமைகின்றன. பிரும்மாவேசாரத்தியம்செய்யவருகிறார். மேருமலைவில்லாகிறது. வாசுகிநாணாகிறது. மகாவிஷ்ணுவேபாணம்ஆகிறார். இத்தனைஏற்பாடுசெய்துகொண்டுபோருக்குப்புறப்பட்டபெருமான்தேரில்ஏறியதும்சிரிக்கிறார். அவ்வளவுதான்; திரிபுரங்கள்மூன்றும்வெந்துபொடிசாம்பலாகிவிடுகின்றன. நல்லசிவபூஜைசெய்தவர்களானதனாலே, அந்தஅசுரர்கள்மூவரில்இருவர், எம்பிரான்கோயிலுக்குவாயில்காவலராகஅமைகிறார்கள். ஒருவர்குடாமுழக்கும்பணியாளராகவேலைஏற்கிறார். இந்தத்திரிபுரிதகனம்நடந்தஇடம்தான்திருஅதிகை. அங்குகோயில்கொண்டிருப்பவர்தான்அதிகைவீரட்டனார்.

அட்டவீரட்டங்களில்ஒன்றானஇந்தத்திருஅதிகைவீரட்டானம்மிக்கபுகழ்பெற்றதலம். ஊருக்குஅதிகைஎன்றுஏன்பெயர்வந்தது? அதிகப்புகழ்படைத்தஊரானதனாலேஅதிகைஎன்றுஆகியிருக்குமோ? திரிபுரதகனம்நடந்தஇடம்அதிகப்புகழ்பெற்றஇடம்என்றுசொல்லவேறுஆதாரமாதேடவேண்டும்? அந்தப்பழையசங்ககாலத்திலேயேஇந்தஅதிகைமன்னன்அதியமான்என்றபெயரோடுபுகழ்நிறுவிஇருக்கிறான். ஒளவைக்குஅமரத்துவம்அளிக்கக்கூடியதெல்லிக்கனியைக்கொடுத்து, அவன்அருளைப்பெற்றிருக்கிறான். பாடலும்பெற்றிருக்கிறான், இவனையேசிறுபாணாற்றுப்படைஎன்னும்பத்துப்பாட்டில்ஒருபாட்டு.

மால்வரைக்கமழ்பூஞ்சாரல்

கவினியநெல்லி

அமிழ்துவிளைதீங்கனி

ஔவைக்குஈந்த

உரவுச்சினங்கனலும்

ஒளிதிகழ்நெடுவேள்

அரவக்கற்றானைஅதிகன்.

என்றுவியந்துகூறுகிறது. ஆம்! அதிகையில்இருந்தவன்அதிகன். இல்லை, அதிகன்இருந்தஊர்அதிகைஎன்றேகொள்ளலாம். இந்தஅதிகைக்கேசெல்லலாம்நாம்.

இத்தலத்துக்குச்செல்ல, விழுப்புரம்கடலூர்ரயில்பாதையில்பண்ணுருட்டிஎன்றஸ்டேஷனில்இறங்கவேண்டும். பண்ணுருட்டிஅல்லதுபண்ருட்டி. பண்ருட்டிபலாப்பழம்பிரசித்தமானதாயிற்றே. அதனைச்சொன்னாலேநாவில்நீர்ஊறுமேமேலும்பண்ருட்டிப்பொம்மைகள்வேறேஅந்தஊருக்குஅதிகப்புகழைத்தேடித்தந்திருக்கின்றனவே. இந்தப்பண்ணுருட்டிஸ்டேஷனில்இறங்கிவண்டிபிடித்துக்கொண்டுதான்செல்லவேண்டும். திருஅதிகைசெல்லவேண்டும்என்றுசொன்னால்வண்டிக்காரர்களுக்குத்தெரியாது. திருவதிஎன்றுசொன்னால்தான்தெரியும். (அவர்கள்என்ன? நெடுஞ்சாலைப்பொறியர்கள்கூட, ரோட்டிலேதிருவதிஎன்றுஎழுதித்தானேபோர்டுநட்டுவைத்திருக்கிறார்கள்!) ரயில்வேஸ்டேஷனிலிருந்துகடலூர்செல்லும்ரோட்டில்ஒருமைல்சென்றால், தென்புறம்ஒருபெரியகோபுரம்தென்படும். அங்குவண்டியைத்திருப்பிக்கோயில்வாயிலில்வண்டியைவிட்டுஇறங்கலாம். அங்குராஜகோபுரத்தையும்முந்திக்கொண்டுஒருமண்டபம்நிற்கும். மண்டபத்துக்குவடக்கேஅப்பர்திருமடம், மண்டபத்தின்முகப்பிலேஇறைவனுடையதிருமணக்கோலம். அக்கோலத்திலே, எல்லாஇடங்களிலும்இறைவனுக்குப்இடப்பக்கம்இருக்கும்அம்பிகை, இங்குவலப்பக்கமாகநிற்கிறாள். இந்தவேடம்வேண்டுமென்றுகேட்டுத்தவம்செய்துபெற்றாள்என்றுதலபுராணம்கூறும். இதற்கேற்பவேகோயில்உள்ளும்திரிபுரசுந்தரிஇறைவனுக்குவலப்புறமேகோயில்கொண்டிருக்கிறாள். சோழநடுநாட்டில்உள்ளகோயில்களில்இறைவி, இறைவனுக்குவலப்புறம்இருப்பதுஇக்கோயில்ஒன்றுதான்என்றுநினைக்கிறேன்.

இன்னும்இந்தத்திருஅதிகை, நாவுக்கரசராம்அப்பரைவாழ்வித்தஇடமும்கூட. திருமுனைப்பாடிநாட்டிலேதிருவாமூர்என்றஊரிலேமாதினியாரின்தவப்புதல்வியாக, திலகவதியார்பிறக்கிறார். இந்தத்திலகவதியாருக்குஒருதம்பிமருள்நீக்கியார்என்றபெயரோடு. அப்போதுநாடெல்லாம்சமணம்பரவியிருக்கிறது. மன்னன்மகேந்திரவர்மனேஜைனசமயத்தைச்சார்ந்திருக்கிறான். சைவமரபிலேபிறந்தமருள்நீக்கியாரும்சமணம்ஆகிறார். சமணமடத்திலேதருமசேனர்என்றபெயரோடுதங்கிவாழவும்செய்கிறார். இந்தச்சமயத்தில்திலகவதியாரைத்திருமணம்முடிக்கஇருந்தசேனாபதிகலிப்பகையார்போர்க்களத்தில்இறந்துவிடுகிறார். ‘மணம்செய்துகொள்ளாவிட்டாலும்மனத்தால்நான்அவருக்கேஉரியவள், ஆதலால்அவர்இறந்தபின்னர்வேறுஒருவரைத்திருமணம்புரியேன்என்றுவைராக்கியசித்தத்தோடுவாழ்கிறார்அவர். திருமடம்ஒன்றுஅமைத்து, ஆலயத்திருப்பணிமுதலியனசெய்துவந்தஇவர், தம்தம்பியாம்மருள்நீக்கியார்மருள்நீக்கம்அடையாதுவாழ்வதுகுறித்துவருந்திநைகிறார். இவர்படும்வருத்தம்தாளாது, இறைவன்தருமசேனரின்மருள்நீக்கமுனைகிறார். இறைஅருளால்தருமசேனரைசூலைநோய்பற்றுகிறது. எந்தவைத்தியம்செய்தும்தீராதகாரணத்தால், தமக்கையிடம்ஓடிவந்துவணங்கி, அவர்அளித்தநீற்றைஅணிந்து, நீரைஉண்டு, அதிகைவீரட்டனாரைவணங்குகிறார்.

கூற்றயினவாறுவிலக்ககலீர்,

கொடுமைபலசெய்தனநான்அறியேன்

ஏற்றாய்அடிக்கேஇரவும்பகலும்

பிரியாதுவணங்குவன்எப்பொழுதும்

தோற்றாதுஎன்வயிற்றின்அகம்படியே

குடரோடுதுடக்கிமுடக்கிஇட

ஆற்றேன்அடியேன்அதிகைக்கெடில

வீரட்டானத்துஉறைஎம்மானே

என்றுதுவங்கும்திருப்பதிகமும்பாடுகிறார். சூலைநோயும்அகல்கின்றது. இப்படித்தான்தருமசேனர்மீண்டும்சைவராகிநாவுக்கரசர்என்னும்நல்லபுகழோடுவாழ்கிறார். சமணர்கள்பேச்சைக்கேட்டுஅரசனும்இவரைநீற்றறையில்வைக்கிறான்; நஞ்சுகலந்தஉணவுஊட்டுகிறான்; யானைக்காலால்இடறவைக்கிறான்; கல்லில்கட்டிக்கடலில்எறிகிறான். எல்லாஇடர்களினின்றும்இறைஅருளால்தப்புகிறார். கோயிலைச்சுத்தமாகவைத்துக்கொள்ளும்உழவாரப்பணிசெய்தேவாழ்கிறார். மன்னன்மகேந்திரவர்மனும், சைவசமயமேசமயம்எனஉணர்ந்துசைவனாகிறான். இந்தநாவுக்கரசராம்நல்லவர்வாழ்க்கையோடுதொடர்புகொண்டநற்பதியேஇத்திருஅதிகை.

இனிகோயிலுக்குள்நுழையலாம். வான்நோக்கிஉயர்ந்தஇந்தக்கோபுரவாயிலின்இருபக்கமும்பரதசாத்திரத்திலுள்ளநூற்றுஎட்டுத்தாண்டவலட்சணங்களைவிளக்கிக்கொண்டுபெண்கள்நிற்கிறார்கள், இதையெல்லாம்பார்த்துவிட்டுஉள்ளேநுழைந்தால்ஒருபெரியவெளிமுற்றம். அங்கேதென்பக்கம்சங்கரதீர்த்தம். வடபக்கம்ஒருபுத்தர்சிலை. அடே! இந்தத்தலத்தில்ஜைனர்கள்மாத்திரம்தான்இருந்தார்கள்என்றுஇல்லை. பௌத்தர்களும்இருந்திருக்கிறார்கள். அவர்களையும்வெல்லவேண்டியிருக்கிறதுஅப்பருக்கு.

இந்தமுற்றத்தையும், அதன்பின்இடைவரும்இடைவழிக்கோபுரத்தையும்கடந்துதான்பிரதானகோயிலுக்குள்நுழையவேண்டும். கோயிலினுள்நுழைந்ததும்இடப்பக்கம்திரும்பினால்தனித்ததொருமாடத்தில்செப்புச்சிலைவடிவில்பெரியஉருவிலேநாவுக்கரசர்நிற்கிறார். சமீபகாலத்தில்வடித்தசெப்புவிக்கிரகமாகவேஇருக்கவேண்டும். வடித்தசிற்பிஅவனுக்குஇருந்தஆர்வத்தில்ஒருபெரியதவறுசெய்திருக்கிறான். அப்பர்ஏந்தியிருக்கும்உழவாரப்படையின்முகப்பிலேசிவலிங்கத்தையேஅமைத்திருக்கிறான். இதைஅப்பர்கண்டிருப்பாரானால்கடிவதோடுநின்றிருக்கமாட்டார். எனக்குமட்டும்ஒன்றுதோன்றுகிறது. ‘நின்ளாவார்பிறர்இன்றிநீயேஆனாய்என்றுபாடியவர்தானேஅவர். ஆதலால்அவர்ஏந்தியஉழவாரத்திலும்சிவபெருமான்இருக்கத்தானேவேண்டும். அதைவடித்துக்காட்டியசிற்பியைக்கோபித்துக்கொள்வானேன்என்றுஅவரையேகேட்டிருப்பேன்.

இனிஅப்பரைப்பார்த்தகண்ணுடனேயேஅப்பரின்தமக்கையார்திலகவதியாரையுமேபார்த்துவிடலாம். தெற்குப்பிராகாரத்தின்திருமாளிகைப்பத்தியில்தான்திலகவதியார்சந்நிதி. கற்சிலையில்உருவானவரைவிடச்செப்புவடிவில்உருவாகியிருப்பவர்தான்நம்உள்ளம்கவர்கிறார். ‘தம்பியார்உளர்ஆகவேண்டும்என்றகருணையோடு, அம்பொன்மணிநூல்தாங்காதுஅனைத்துயிர்க்கும்அருள்தாங்கிஇம்பர்மனைத்தவம்புரியும்திருக்கோலத்திலேயேஅவரைப்பார்க்கிறோம்.

இந்தத்தெற்குப்பிராகாரத்திலேயேஅம்பிகைகோயிலும்இருக்கிறது. பெரியநாயகி, திரிபுரசுந்தரிஎன்றபெயர்தாங்கிநிற்கிறாள்அவள். தஞ்சைப்பெரியநாயகியைப்போல்ஆறு, ஏழுஅடிஉயரம்இல்லையென்றாலும், நான்குஐந்துஅடிக்குக்குறைவில்லை . திரிபுரசுந்தரியின்கோயில்வாயிலுக்கும்வெளியில்உள்ளமுற்றத்திலிருந்துமூலக்கோயிலின்விமானதரிசனம்செய்யலாம். சோழர்கள்பெருஉடையார்க்குக்கல்லால்கட்டியவிமானம்போலவேமிக்கஅழகாகச்சுதையில்கட்டப்பட்டிருக்கிறது. இந்தவிமானம்எண்கோணத்தில்அமைந்திருக்கிறது. விமானம்அடித்தளத்திலிருந்துஸ்தூபிவரைசிற்பவடிவங்கள்தான். எல்லாம்சுதையால்ஆனவை. நல்லவர்ணம்தீட்டப்பெற்றவை. இவைகளில்பிரசித்தமானவடிவம்தான்திரிபுராந்தகர்வடிவம், பன்னிரண்டுதிருக்கரம். சூலம்ஏந்தியகைஒன்று, வில்லேந்தியகைஒன்று. ஒருகாலைத்தேர்த்தட்டிலும்மற்றொருகாலைஉயர்த்தியும்வில்வளைத்துநிற்கிறார். கம்பீரமானதோற்றம். பார்த்துக்கொண்டேஇருக்கலாம். இந்தச்சிற்பவடிவத்தைக்கண்டபின்கர்ப்பக்கிருஹவிமானத்தையேஒருசுற்றுச்சுற்றத்தோன்றும். விநாயகர், அவருடன்நிற்கும்தேவகணங்கள், கைலைமலையானும், அந்தமலையையேஅசைக்கும்மன்னன்ராவணனும், இன்னும்கோவர்த்தனதாரி, அக்னி, ஏகபாதமூர்த்திஎல்லாம்நல்லநல்லவடிவங்களாகச்சுதையில்உருவாகியிருக்கிறார்கள். இவற்றைப்பார்த்துக்கொண்டேவடக்குப்பிராகாரத்துக்குவந்தால்அங்குஒருகிணறு. அதனையேசூலதீர்த்தம்என்கின்றனர். தருமசேனரின்சூலைநோய்தீர்த்துஅவரைநாவுக்கரசராக்கியதீர்த்தம்அல்லவா?

இப்படிக்கோயிலைவலம்வந்து, தென்பக்கமாகஉள்ளபடிகளில்ஏறிக்கோயிலுள்சென்றதும், நம்முன்நிற்பவர்திரிபுராந்தகரும்திரிபுரசுந்தரியுமே. அம்பிகைவடிவமும்அழகானதாகஇல்லை. செப்புவடிவில்சோழநாட்டுக்கோயில்களில்வடித்துவைத்திருக்கும்திரிபுராந்தகர்களோடுஒப்பிடஇயலாது. வில்அளவுக்குமிஞ்சியகாத்திரம். இந்தத்திரிபுராந்தகரைவணங்கிவிட்டு, கர்ப்பக்கிருஹம்நோக்கிச்சென்றால்அங்கேமூலவரைத்தரிசிக்கலாம். இவரேவீரட்டானர். சோடசலிங்கம். பதினாறுபட்டைகள்தீட்டிப்பளபளவென்றிருக்கிறார். இவருக்குப்பின்னாலேகர்ப்பக்கிருஹச்சுவரிலேஉமையுடன்கூடியஇறைவன்; மணக்கோலம்என்பார்கள். பல்லவர்கோயில்களில்உள்ளசோமாஸ்கந்தமூர்த்தமாகவேஇருக்கலாம். கந்தர்தெரியவில்லை. லிங்கத்திருவுருமறைத்துக்கொண்டிருக்கிறதுஅந்தப்பகுதியை, இந்தவீரட்டானரைவணங்கிவிட்டு, வெளியேவரலாம்.

இன்னும்இத்தலத்தைஒட்டிப்பார்க்கவேண்டியவைஇரண்டுஉண்டு. ஒன்றுகுணதரவீச்சுரம்மற்றொன்றுவேகாக்கொல்லை. குணதரவீச்சுரம்வீரட்டானர்கோயிலுக்குப்பக்கத்திலேஇருக்கிறது. சமணனாகஇருந்தமகேந்திரவர்மன்நாவுக்கரசரால்சைவனாகியஆர்வத்தில்சமணப்பள்ளிப்பாழிகளைஇடித்துஅந்தக்கற்களைக்கொண்டுகட்டியதுகுணதரவீச்சுரம்.

வேகாக்கொல்லைதிருவதிகைக்குத்தெற்கேஎட்டுமைல்தொலைவில்இருக்கிறது, திரிபுரதகனகாலத்தில்இந்தஓர்இடம்மட்டும்வேகவில்லையாம். அந்தஇடத்துமண்வெண்மையாகவேஇருக்கிறது. ஆம், திரிபுராந்தகராம்செம்மேனிஎம்மான்சுட்டமண்செம்மண். அவரால்சுடப்படாதமண்வெள்ளைமண். இப்படிவேகாக்கொல்லையின்வெண்மண்ணும், திருஅதிகையின்செம்மண்ணும்திரிபுரதகனத்துக்குச்சான்றுபகர்ந்துகொண்டுஇன்னும்இருக்கின்றன. இதையெல்லாம்நம்பமறுக்கிறநம்மனமுமேசெம்மைப்படவேண்டுமே.