பழமலைநாதர்
சைவசமயகுரவரில்ஒருவரானசுந்தரர்ஒருதலத்துக்குப்போனார். அந்தஊர்ப்பெயர்என்னஎன்றவிசாரித்தார். விருத்தகிரிஎன்றார்கள். அங்குகோயில்கொண்டிருப்பவர்யார்என்றார், விருத்தகிரிஈசுவரர்என்றார்கள். ‘அம்பிகை?’ என்றார். ‘ஆம். அவளும்விருத்தாம்பிகையே‘ என்றார்கள். ‘என்னஇந்தஊர், இந்தஉரில்உள்ளஇறைவன், இந்தஇறைவனதுதுணைவிஎவ்லோருமேகிழடுதட்டியவர்களாகஇருக்கிறார்களே. இங்குநமக்குஜோலியில்லை‘, என்றுசொல்லிமேலும்நடையைக்கட்டினார். இப்படிஓடிவிட்டால்விருத்தகிரிஈசுவரர்விட்டுவிடுவாரா? ‘ஏனப்பாஎன்னைப்பாராதே, என்னைப்பாடாதேபோகிறாய். என்மனைவிஅப்படிஒன்றும்கிழவியில்லை; வந்துதான்பாரேன்‘ என்றுஅழைக்கிறார். சுந்தரர்வருவதற்குமுன்னே, ஒருபாலாம்பிகையைச்சிருஷ்டிபண்ணித்தம்பக்கத்தில்வைத்துக்கொள்கிறார். இந்தப்பாலாம்பிகையைப்பார்த்தபின்னரேசுந்தரர்பாடத்துவங்கினார்விருத்தகிரியாரை. விருத்தாம்பிகைகோயில்வெளியில்இருக்க, பாலாம்பிகைசந்நிதிவிருத்தகிரியார்கோயில்உள்ளேயேஇருப்பதைப்பார்த்துஇன்றும்மக்கள், ‘பாருங்களேன்இந்தக்கிழவன்காரியத்தை, மனைவிகிழவியாகிவிட்டாள்என்றுதள்ளிவைத்துவிட்டு, சின்னஞ்சிறுகுமரியாம்மனைவியைமட்டும்பக்கத்தில்வைத்துக்கொண்டிருக்கிறாரே!’ என்றெல்லாம்பேசவாய்ப்பாகச்சந்நிதிகள்அமைந்திருக்கின்றனஅந்தக்கோயிலில்,
ஆனால்இந்தக்கதையில்கொஞ்சமும்உண்மையேஇல்லை. ஆதாரமுமேஇல்லை. அப்படிஎன்றால்இந்தக்கதைஎப்படிஎழுந்தது? விருத்தாசலத்திலேவிருத்தாம்பிகைஎன்னும்பெரியநாயகிக்குத்தனிசந்நிதி, தனியேஒருகோயில். ஆனால், சுவாமிகோயிலிலேவடகிழக்குமூலையிலேஒருசிறுசந்நிதி, அந்தச்சந்நிதியில்நிற்பவள்பாலாம்பிகை. இந்தப்பாலாம்பிகைஇங்கேஉருவானதேபதினாறாம்நூற்றாண்டிலேதான். கதைஇதுதான்: கி.பி. பதினாறாம்நூற்றாண்டிலேகுருநமச்சிவாயர்என்றபெரியார்திருவண்ணாமலையில்இருந்திருக்கிறார். அங்கிருந்தவர்தில்லையைநோக்கிப்புறப்பட்டுவரும்வழியில், இந்தவிருத்தாசலம்என்னும்திருமுதுகுன்றத்துக்குவந்திருக்கிறார். இங்குள்ளவிருத்தகிரியார்என்னும்பழமலைநாதரையும், பெரியநாயகியையும்தரிசித்துவிட்டுக்கோயிலில்ஒருபக்கத்தில்படுத்திருக்கிறார். நடுநிசியில்பசிவருத்தியிருக்கிறது. அவரோஅன்னையின்கருணையைநன்குஉணர்ந்தவர். தாயிடம்சோறுகேட்டால்கொடுப்பாள்என்றுநம்பி,
நன்றிபுனையும்பெரிய
நாயகிஎனும்கிழத்தி,
என்றும்சிவனார்
இடக்கிழத்தி–நின்ற
நிலைக்கிழத்திமேனிமுழு
நீலக்கிழத்தி
மலைக்கிழத்திசோறுகொண்டுவா.
என்றுபரிவோடேகேட்டிருக்கிறார். குருதமச்சிவாயர்பெண்என்றபொருளிலேயேகிழத்திஎன்றுவிளித்திருக்கிறார்அன்னையை. ஆனால்அன்னைக்கு, தன்னைஇவன்வேண்டுமென்றேகிழவிஎன்றபொருளில்அழைத்திருக்கிறான்என்றுதோன்றியிருக்கிறது. உடனேபெரியநாயகிமுதியவள்வடிவில்வந்து, ‘ஏனப்பா, என்னைக்கிழத்திகிழத்திஎன்றுபாடினாய். கிழவியால்எப்படிச்சோறுஎடுத்துவரஇயலும்?’ என்றுகேட்டிருக்கிறாள். ஒருபாவமும்அறியாதகுருநமச்சிவாயர், ‘இதுதானாகோபம்?’ என்றகேட்டுவிட்டுப்பாட்டைமாற்றிவிடுகிறார்.
முத்தநதிசூழும்
முதுகுன்றுஉறைவாளே!
பத்தர்பணியும்
பதத்தாளே–அத்தன்
இடத்தாளேமுற்றா .
இளமுலைமேல்ஆர
வடத்தாளேசோறுகொண்டுவா,
என்றுபாடியிருக்கிறார். இதைக்கேட்டுப்பெரியநாயகிமகிழ்ச்சியுற்றுஇளமைநாயகிஉருவில்வந்துகுருநமச்சிவாயருக்குச்சோறும்நீரும்கொடுத்துஉதவியிருக்கிறாள். அன்றுமுதல்இளமைநாயகிக்குஒருசந்நிதிஇந்தக்கோயில்உள்ளேஎன்பதுதலவரலாறு. இதுகூடஎவ்வளவுஉண்மையோஅறியேன். கன்னி, குமரி, அன்னை, கிழவிஎல்லாம்ஒருத்தியேதான். ‘அகிலாண்டகோடிஈன்றஅன்னைஎன்றாலும், பின்னேயும்கன்னிஎனமறைபேசும்ஆனந்தரூபமயிலாயிற்றே‘ அவள். இதையெல்லாம்உணர்ந்தஅன்பர்ஒருவர்அம்பிகைபெயர்விருத்தாம்பிகை, பெரியநாயகிஎன்றுமட்டும்இருப்பானேன், இளமைநாயகி, பாலாம்பிகைஎன்றும்இருக்கட்டுமேஎன்றுநினைத்திருக்கிறார். இந்தநினைவின்ஞாபகமாகக்கோயிலுக்குள்ஒருகோயிலை, இளமைநாயகிக்குபின்னால்யாரோஎடுத்திருக்கவேண்டும். விருத்தாம்பிகையோடுபாலாம்பிகையும்நிலைத்துவிடுகிறார்கள்இக்கோயிலில். இதைவைத்துமக்கள்கயிறுதிரிக்கவும்வகைசெய்துவிடுகிறார்கள்.
நாம்இன்றுசெல்வது, விருத்தாம்பிகை, பாலாம்பிகைசமேதராகத்திருமுதுகுன்றத்தில்கோயில்கொண்டிருக்கும்பழமலைநாதரைக்காணவே. விழுப்புரம், திருச்சிகார்டுலைனில், விருத்தாசலம்சந்திப்பில்இறங்கிப்போகலாம். பாஸஞ்சர்வண்டிஎன்றால்விருத்தாசலம்டவுன்ஸ்டேஷனில்இறங்கியும்போகலாம். எங்கிருந்துபோனாலும்ரயிலைவிட்டுஇறங்கியதுமேபெரியகோபுரங்கள்தெரியும். கோயிலைஅடுத்துஓடும்மணிமுத்தாற்றைக்கடக்கநல்லபாலம்ஒன்றும்உண்டு. பாலத்துக்கும்கிழக்கேநின்றுகோபுரதரிசனம்செய்துவிட்டு, கோயில்வாயிலுக்குவரலாம். விருத்தாசலம், முதுகுன்றம், பழமலைஎன்றெல்லாம்சொல்கிறார்களேஆதலால்கோயில்ஏதோஒருமலைமீதுஇருக்கும்போலும்என்றஎண்ணவேண்டாம். கோயில்நல்லகெட்டியானதரையிலேயேகட்டப்பட்டிருக்கிறது.
கோயில்மிகப்பெரியகோயில். மூன்றுமதில்கள்பிராகாரங்களுடன்கூடியது. புறச்சுற்றுமதில் 660 அடிநீளமும் 392 அடிஅகலமும்உடையது. உயரம்இருபத்தாறுஅடி. கனம்நான்குஅடிஎன்றால்மதில்எவ்வளவுஉறுதியானதுஎன்றுதெரிந்துகொள்ளலாம்தானே? நான்குதிசைகளுக்கும்நான்குவாயில்கள்; வாயில்கள்ஒவ்வொன்றிலும்ஏழுநிலைகள்உள்ளபெரியகோபுரங்கள்எல்லாம்கம்பீரமாகநிற்கின்றன. கீழைக்கோபுரவாயிலுக்குமுன்னால்வெளியேபதினாறுகால்மண்டபம்ஒன்று. கோபுரவாயிலின்இருபக்கத்திலும்பரதநாட்டியப்பெண்மணிகள் 72 பேர், ஆம்கற்சிலைகளாகத்தான். இந்தவாயிலைக்கடந்துவந்தால்பரந்தவெளிச்சுற்று. இதனையேகைலாயப்பிராகாரம்என்பர். இங்குபார்க்கவேண்டியவைவிபசித்துமுனிவர்மண்டபம், அக்கினிதீர்த்தம், ஆழத்துப்பிள்ளையார்கோவில், சக்கரதீர்த்தம், ஆகமக்கோயில்கள். இவற்றையெல்லாம்சுற்றிப்பார்க்கக்
காலில்நல்லவலுவேண்டும். போதியஅவகாசமும்வேண்டும். அவைஎல்லாம்இல்லாதவர்கள்பிள்ளையாரைத்தரிசித்துவிட்டுக்கோயிலுள்நுழைந்துவிடலாம். இவர்பூமியில்தன்தளத்துக்குப்பதினெட்டுஅடிதாழ்ந்துஆழத்தில்தனிக்கோயிலில்இருக்கிறார்.
இரண்டாவதுசுற்றுமதிலும், வெளிச்ஆழத்துப்பிள்ளையார்கோயில்சுற்றுமதிலைப்போலவேகனமானது, உயர்ந்தகோபுரம்உடையது. இந்தமதில்சுவருக்குள்ளேயேவன்னியடிப்பிராகாரம்இருக்கிறது. இங்குதலவிருக்ஷம்வன்னிமரம்ஆயிற்றே. வன்னிமரத்தடியிலே, விபசித்துமுனிவர், உரோமசமுனிவர், விதர்க்கணசெட்டி, குபேரன்தங்கைஎல்லாரும்இருக்கிறார்கள். இப்பிராகாரத்தின்தென்மேற்குமூலையில்வல்லபைக்கணபதிஇருக்கிறார். ஏதோபிரம்மச்சாரிஎன்றுநாம்நினைத்துக்கொண்டிருப்பவர், வல்லபையைத்தூக்கிமடியில்இருத்திக்கொண்டுஉல்லாசமாய்இருப்பதைப்பார்க்கிறோம்.
இந்தவன்னியடிப்பிரகாரத்தைச்சுற்றிவந்தால்கொடிமண்டபத்துக்கும்மேற்கேயுள்ளஇசைமண்டபத்துக்குவந்துசேருவோம். அம்மண்டபத்தில்தான்பெரியநாயகர் (பெரியநாய்க்கர்இல்லை ) இருக்கிறார். இவரேஇக்கோயிலில்உள்ளபெரியஉற்சவமூர்த்திஎன்றாலும்ஆண்டுக்குஒருமுறைமாசிமகம்ஆறாம்நாள்மட்டுமேவெளியேஉலாவவருவார். மற்றஉற்சவங்களுக்குஒரு ‘டெபுடி‘ நியமித்திருக்கிறார். அவர்தான்சின்னப்பழமலைநாதர். அவரைக்கோயிலுள்சென்றுபார்க்கலாம். இந்தஇசைமண்டபத்தின்வடபக்கத்தேநடராஜர், சிவகாமிஅம்மையுடன்கொலுஇருக்கிறார். அவர்களையும்வணங்கிவிட்டேஉள்மதிலையுங்கடந்துபிரதானகோயிலுள்நுழையலாம். இங்குள்ளபிராகாரத்தைஅறுபத்துமூவர்பிராகாரம்என்பர். அறுபத்துமூவரோடுஎண்ணற்றதிருவுருவங்கள்இந்தப்பிராகாரத்திலே. அவர்களில்முக்கியமானவர்கள்யோகதக்ஷிணாமூர்த்தி, மாற்றுரைத்தபிள்யைார், பிந்துமாதவப்பெருமாள்முதலியோர், இங்கேயேசின்னப்பழமலைநாதரும்இருக்கிறார். நல்லசோமாஸ்கந்தவடிவினர்அவர். இங்குவடமேற்குமூலையிலேதான்இளமைநாயகியார்கோயில்.
ஆம், விருத்தாம்பிகையைஒதுக்கிவைத்துவிட்டுஇளையமனைவியைநெருக்கமாகவேவைத்துக்கொண்டிருக்கிறார்முதுகுன்றர்என்றபரிகாசத்துக்குஎல்லாம்உள்ளானவள்அவள், இத்தனைச்சுற்றுச்சுற்றிஇவ்வளவுதூரம்நடந்ததெல்லாம்பழமலைநாதரைக்காணவே. அவரையேகாணலாம்கர்ப்பக்கிருஹத்தில். நல்லஅழகானலிங்கத்திருவுரு. அவரைவணங்கித்தொழுதுவிட்டுவிறுவிறுஎனவெளியேவந்து, இரண்டாம்பிராகாரத்துவடக்குவாயில்வழியாய்அன்னைபெரிய
பழமலை–வடக்குக்கோபுரம்
நாயகியின்கோயிலுக்குவரலாம். இந்தக்கோயிலேஒருபெரியகோயில், ஏழுநிலைக்கோபுரத்தோடு, இங்குள்ளஅலங்காரமண்டபம், இடைவெளிமண்டபம்எல்லாம்கடந்துகர்ப்பக்கிருஹம்சென்றுபெரியநாயகியையும்தொழலாம்.
இக்கோயிலில்உள்ளகோஷ்டங்களில்கஜசம்ஹாரர், மகிஷமர்த்தினி, துர்க்கை , நரசிம்மி (அதாவதுநரசிம்மவடிவம், ஆனால்தனங்களுடன்கூடியபெண்ணுரு) எல்லாம்உண்டு. இவைகளைப்பார்க்கும்போதுவிருத்தகிரிஈசுவரர்கோயிலுக்கும்முந்திக்கட்டப்பட்டகோயிலேஎன்றுதோன்றும். அம்பிகைவிருத்தாம்பிகைஎன்றேஅன்னையைஅழைத்தாலும்அவள்முகத்தில்தெய்வக்களிதுலங்குநகையைக்காணலாம். கண்டுநாமும்மகிழலாம். இவள்தம்கோயிலைவிட்டுநாம்வெளியேவருவதைக்கோயில்கோபுரத்திலுள்ளஒருகுகையிலிருந்துமயில்வாகனானகுமரன்கவனித்துக்கொண்டிருப்பதையுமேபார்க்கலாம். இவனையேகுகைமுருகன்என்கிறார்கள். இங்கேயேநாதசர்மா, அநவர்த்தினிஎல்லாம்இருக்கிறார்கள். இவர்கள்இந்தத்தலத்துக்குவந்து, பெரியநாயகியைவணங்கி, சாரூபபதவிபெற்றவர்கள்என்றுதலவரலாறுகூறும்.
இக்கோயில்ஆதியில்விபசித்துமுனிவரால்கட்டப்பட்டிருக்கிறது. ஆதனால்தான்இன்றுவரைவிபத்துக்கள்ஒன்றுக்கும்ஆளாகாமலேநின்றுகொண்டிருக்கிறது. இக்கோயிலின்பெரும்பகுதியைக்கற்றளியாகத்திருப்பணிசெய்தவர். கண்டராதித்தசோழன்மனைவிசெம்பியன்மாதேவியே. ராஜராஜசோழனுக்குமுன்சோழநாட்டைச்சிறிதுகாலமேஆண்டஉத்தமசோழனின்உத்தமத்தாய். சிறந்தசிவபக்தை. ராஜராஜன், மூன்றாம்குலோத்துங்கன்காலத்திலும்திருப்பணிகள்நடந்திருக்கின்றன. பன்னிரண்டாம்நூற்றாண்டின்இறுதியில்ஏழிசைமோகனானகுலோத்துங்கசோழகாடவராதித்தன், ஏழிசைமோகனதிருமண்டபம்கட்டினான்என்றுஇங்குள்ளகல்வெட்டுகூறுகிறது. கச்சிராயன், வீரசேகரக்காடவராயன், நாயக்கமன்னர்கள், பெரம்பலூர்உடையார்முதலியோர்எல்லாம்கோயிலின்பலபகுதிகளைக்கட்டியிருக்கிறார்கள். இவைகளையெல்லாம்விரிக்கில்பெருகும்.
இவர்கள்மாத்திரம்என்ன, வெள்ளைக்காரகலெக்டர்களும்இப்பழமலைநாதர்கோயில்திருப்பணியிலேபங்குபெற்றிருக்கிறார்கள். மகம்மதியர்கள்காலத்திலேஇக்கோயிலைப்பாதுகாப்புக்குஉரியகோட்டையாக்கியிருக்கிறார்கள், 1803-ல்கும்பினிஜாகீர்கலெக்டராகஇருந்தசார்ல்ஸ்ஹைட்என்பவர்கைலாசப்பிரகாரத்துக்குத்தளவரிசைபோட்டிருக்கிறார். தேர்இழுக்கஇரும்புச்சங்கிலி, கும்பஹாரத்துக்குவெள்ளிக்குடம்எல்லாம்செய்துவைத்திருக்கிறார். நகரத்தார்களும்இந்தக்கோயில்திருப்பணியில்பங்குபெற்றிருக்கிறார்கள்.
இக்கட்டுரையைச்சுந்தரர்தலையிலேபழியைப்போட்டுஆரம்பித்தோம். அந்தவரலாறுஉண்மையல்லஎன்றும்கண்டோம். ஆனால்இந்தச்சுந்தரர்இங்குஉண்மையிலேயேசெய்தகாரியம்ஒருரஸமானவரலாறு. சுந்தரருக்குஎப்போதுமேபணமுடை. எந்தக்கோயிலுக்குச்சென்றாலும், எங்கெல்லாம்இறைவனைக்கண்டாலும்கையைநீட்டிவிடுவார். அந்தஇறைவனும்இல்லைஎன்னாதுகொடுக்கத்தயங்குவதில்லை. பழமலைநாதர்மற்றவர்களுக்குச்சளைத்தவரா, என்ன?
உம்பரும்வானவரும்
உடன்நிற்கவேஎனக்கு
செம்பொனைத்தந்துஅருளி
திகழும்முதுகுன்றுஅமர்ந்தீர்;
வம்புஅமரும்குழலாள்
பரவைஇவள்வாடுகின்றாள்;
எம்பெருமான்அருளி
அடியேன்இத்தளம்கெடவே
என்றுபாடினாரோஇல்லையோ, பொன்னைஅள்ளிக்கொடுத்திருக்கிறார். இப்படிஎளிதாகப்பொன்னைப்பெற்றசுந்தரர்இன்னும்ஒன்றும்செய்திருக்கிறார். பொன்னைஎப்படிஅந்தத்தொலைதூரத்தில்உள்ளதிருவாரூருக்குக்கொண்டுசெல்வது? பொன்னைக்கட்டிமணிமுத்தாறுநதியில்போட்டிருக்கிறார், அதில்கொஞ்சம்மாற்றும்எடுத்துக்கொண்டு. அதற்குமாற்றுரைத்தபிள்ளையாரைசாட்சிவைத்திருக்கிறார். இறைவனிடம் ‘பழமலையானே! நீர்கொடுத்தபொன்னைஇங்கேமணிமுத்தாற்றில்போட்டுவிட்டேன், திருவாரூர்சென்றுகமலாலயத்தில்கேட்பேன். அங்குஎடுத்துத்தரவேணும், என்னசொல்கின்றீர்?’ என்றுகேட்டிருக்கிறார். ‘சரி‘ என்றுசொல்லாமல்வேறுஎன்னசொல்வார்? சொன்னதுமாத்திரமாஅப்படியேஎடுத்தும்கொடுத்திருக்கிறார்கொஞ்சமும்மாற்றுக்குறையாமல். ஏதோ ‘பாங்குடிராப்ட்‘ ஒன்றும்வாங்காமலேயேபணத்தைஓர்உரிலிருந்துமற்றோர்ஊருக்குக்கொண்டுபோக, நல்லவழிகண்டுபிடித்திருக்கிறார்சுந்தரர். இந்தசுந்தரர்மாத்திரமல்லசம்பந்தர், நாவுக்கரசர்எல்லோருமேஇந்தப்பழமலையானைப்பெரியநாயகியைப்பாடிப்பரவியிருக்கிறார்கள். நாமும்பாடிப்பரவலாம், அங்குசென்றால்.