தமிழ்நாடு – 35 – சீர்காழி

சீகாழித்தோணியப்பர்

ஆறுஏழுவருஷங்களுக்குமுன்நான்தஞ்சையில்உத்தியோகம்ஏற்றிருந்தேன். அப்போதுஅமெரிக்கநண்பர்ஒருவர்தம்மனைவியுடன்தஞ்சைவந்திருந்தார். அவருக்குக்கோயில், குளம், சிற்பம், கலைமுதலியவற்றைக்காண்பதில்மிகுந்தஅக்கறை. (ஏதோநம்நாட்டுஉற்சவங்களில்நடக்கும்கேளிக்கைகளைப்படம்பிடித்துஇந்தியர்களின்அநாகரிகவாழ்க்கைஎன்றுஅமெரிக்கப்பத்திரிகைகளுக்குக்கட்டுரைஎழுதும்கூட்டத்தைச்சேர்ந்தவர்அல்லஅவர்) உண்மையிலேயேஅவருக்குநமதுகோயில்கட்டிடநிர்மாணத்தில், சிற்பக்கலையில்எல்லாம்நல்லஈடுபாடு. அவரைத்தஞ்சைஜில்லாவில்உள்ளசிலபெரியகோயில்களுக்குஅழைத்துச்சென்றுகாட்டினேன். அந்தச்சுற்றுப்பிரயாணத்தில்ஓர்இரவுமாயூரத்தில்வந்துதங்கினோம்நாங்கள். அவருக்குநம்கோயிலில்நடக்கும்உற்சவம்ஒன்றையும்காணவேண்டும்என்றுஅவா. மாயூரத்தில்விசாரித்தால், மறுநாட்காலைசீகாழியில்திருமுலைப்பால்உற்சவம்நடைபெறுகிறதுஎன்றார்கள். எனக்குமேஅந்தஉற்சவத்தைப்பார்க்கவேண்டுமென்றுஆசை. ஆதலால்நானும்நண்பரும்அவரதுமனைவியும்அதிகாலையில்எழுந்துஸ்நானத்தையெல்லாம்முடித்துக்கொண்டுசீகாழிசென்றடைந்தோம். அங்குள்ளசட்டைநாதர்ஆலயத்தின்ஆஸ்தானமண்டபத்துக்குப்போனோம். காலைஎட்டுமணியாவதற்குமுன்னமேயேகூட்டம்கூடிவிட்டதுகோயில்பிராகாரத்தில். அந்தஊரில்உள்ளவர்கள்பக்கத்துஊரில்உள்ளவர்கள், ஆண்பெண்குழந்தைகள்அடங்கலும்திரளாகவந்திருந்தார்கள். கிட்டத்தட்டமுப்பதாயிரம்பேர்அங்கேகூடியிருந்தார்கள். எல்லோர்கையிலும்ஒவ்வொருசெம்பு. பணக்காரர்கள்வெள்ளிகூஜாவைத்திருந்தார்கள். கோயிலின்பரம்பரைதர்மகர்த்தரானதருமபுரஆதீனத்துமகாசந்நிதானம்அவர்களும்அவர்களதுபரிவாரம்புடைசூழஎழுந்தருளியிருந்தார்கள். நாங்களோநல்லஒருகைப்பிடிச்சுவரில்ஏறிநின்றுகொண்டோம்.

சரியாய்ஒன்பதுமணிஅளவில், உற்சவமூர்த்திகளானதோணியப்பர், பெரியநாயகிசகிதம்இரண்டுபெரியசப்பரங்களில்வெளியில்வந்தார்கள். அதேசமயத்தில்ஒருசிறியஅழகானபல்லக்கில்ஞானசம்பந்தர்அவருக்குஎன்றுஏற்பட்டகோயில்உள்ளேயிருந்துவெளியேவந்தார். ஞானசம்பந்தர்வந்ததும்பெரியநாயகியைஞானசம்பந்தர்பல்லக்குக்குஅருகில்கொண்டுவந்தார்கள். அம்மையின்மடிமீதுவெள்ளிக்கலசத்திலிருந்தபாலைஞானசம்பந்தருக்குக்கொடுக்கும்பாவனையில்அர்ச்சகர்கள்பரிமாறினார்கள், அவ்வளவுதான்; அந்தநேரத்தில்உற்சவம்காணவந்திருந்தஅன்பர்கள்அனைவரும்அவரவர்கொண்டுவந்திருந்தசெம்புப்பாத்திரங்களை, வெள்ளிகூஜாக்களைத்தலைக்குமேலேதூக்கினர். அப்படித்தூக்கிநிவேதனம்பண்ணிவிட்டுஒவ்வொருவரும்அந்தஇடத்திலேயே, செம்பிலிருந்தபாலைத்தாமும்உண்டுமற்றவர்களுக்கும்பகிர்ந்துகொடுத்தார்கள். பால்செம்புகொண்டுபோகாதஎங்களுக்குமே, ஆதினத்தலைவர்பால்கொடுக்கமறக்கவில்லை. நானும்என்னுடன்வந்தநண்பர்களுமேபாலைஉண்டுமகிழ்ந்தோம். கூட்டத்தைவிட்டுவெளியில்வந்தோம். வெளியேவந்ததும்அமெரிக்கநண்பர்கேட்டார்: ‘இதுஎல்லாம்என்ன?’ என்று, அவருக்குவிளக்கினேன், கிட்டத்தட்டஆயிரத்துநானூறுவருஷங்களுக்குமுன்னால்உலகீன்றஅன்னையாம்பெரியநாயகிஞானசம்பந்தராம்பிள்ளைக்குஞானப்பால்ஊட்டியவரலாற்றை. அந்தவரலாறுஇதுதான்:

சீகாழியில்சிவபாதஇருதயரதுகுமாரராக, பகவதிஅம்மையார்வயிற்றில்ஞானசம்பந்தர்அவதரிக்கிறார். மூன்றுவயதுப்பாலகனாகவளர்ந்திருந்தபோது, ஒருநாள்நீராடச்சென்றதந்தையாருடன்தானும்உடன்வருவதாகப்பிடிவாதம்பிடிக்கிறதுகுழந்தை. எனவேகுழந்தையைஅழைத்துச்சென்றுகுளக்கரையில்நிறுத்திவிட்டு, குளத்தில்இறங்கிநீரில்மூழ்கி, அகமர்ஷ்ணமந்திரத்தைஓதிக்கொண்டிருக்கிறார்தந்தை. முழுகியதந்தைவிரைவாகஎழாததைக்கண்டுகுழந்தைஅம்மையே! அப்பா!’ என்றுகதறிஅழுகிறது. இந்தஅழுகுரலைக்கேட்டஅன்னையாம்பெரியநாயகியும்அத்தனாம்தோணியப்பரும்ரிஷபவாகனத்தில்எழுந்தருளியதோடுஅம்மைஇறங்கிவந்துதன்திருமுலைப்பாலைக்கறந்துஅதில்சிவஞானத்தையும்கலந்துகுழந்தைக்குஊட்டிவிட்டுமறைகிறார்கள். நீரிலிருந்துஎழுந்ததந்தைகுழந்தையின்வாயில்பால்வடிவதைக்கண்டு, ‘யார்கொடுத்தபாலைக்குடித்தாய்?’ என்றுஅதட்டி, குழந்தையைஅடிக்கஒருகுச்சியைஓங்குகிறார். அருள்ஞானம்பெற்றகுழந்தையோஉடனேவானவெளியைச்சுட்டிக்காட்டி,

தோடுஉடையசெவியன்விடைஏறி

ஓர்தூவெண்மதிசூடிக்

காடுஉடையசுடலைப்பொடிபூசி,

என்உள்ளம்கவர்கள்வன்

ஏடுஉடையமலரான்முனைநாள்

பணிந்துஏத்தஅருள்செய்த

பீடுஉடையபிரமாபுரம்

மேவியபெம்மான்இவன்அன்றே!

என்றுபாடஆரம்பித்துவிடுகிறது. சிவபாதஇருதயருக்கோஒரேமகிழ்ச்சி, தம்குழந்தைக்குஅன்னைதன்ஞானப்பாலையேஊட்டியிருக்கிறாளேஎன்று. இந்தஅதிசயசம்பவத்தைநினைவுகூறவேஇந்தத்திருவிழாஎன்றேன். இத்திருவிழாநடக்கும்போதுமக்கள்எல்லாம்கொண்டுவந்திருந்தபாலைஞானசம்பந்தருக்குநிவேதனம்பண்ணிவிட்டுஉண்டால், அவரவர்க்குத்தம்அறியாமைநீங்கிஅருள்ஞானம்பிறக்கும்என்றுநம்பிக்கை. ‘திருமுலைப்பால்உண்டார்மறுமுலைப்பால்உண்ணார்என்பதுபழமொழி. அதுதான்இன்றுஅத்தனைபேர்பாலைநிவேதித்துஅருந்தினர்என்றுநண்பரிடம்விளக்கினேன்.

நண்பர்சொன்னார்: ‘என்னஅருமையானஅனுபவம்! எவ்வளவுஅழுத்தமானபக்தியில்பிறந்திருக்கிறதுஇந்தநம்பிக்கை, பக்திநம்பிக்கையைவளர்க்கிறதுஉள்ளத்தில்; அந்தநம்பிக்கைபக்திக்குஊன்றுகோலாய்நின்றுஉதவுகிறதுஎன்றெல்லாம்வியந்துகொண்டேயிருந்தார். அமெரிக்கநண்பருக்கும்அவர்மனைவிக்கும்அதுபுதியஅனுபவம். எனக்கோஅதுஉளம்உருக்கும்அரியஅனுபவம். இந்தஅனுபவம்பெறவிரும்பினால்சித்திரைமாதம்நடக்கும்பிரம்மோற்சவத்தில்இரண்டாம்நாள்திருவாதிரைநக்ஷத்திரத்தன்றுசீகாழிசெல்லமறவாதீர்கள். ‘ஞானசம்பந்தர்வாழ்விலேயேஒருவிசேஷம்அவர்பிறந்ததுதிருவாதிரையிலேயே; அவர்ஞானப்பால்உண்டதுஒருதிருவாதிரையிலேயே; அவர்முத்திப்பேறுபெற்றதும்ஒருதிருவாதிரையிலேதான்என்றுஅறிவோம்.) இந்தஞானப்பால்உண்டவைபவம்ஏதோகர்ணபரம்பரைக்கதையல்ல, உண்மையிலேயேநடந்துஒன்றுஎன்பதற்கு,

போதையார்பொற்கிண்ணத்து

அடிசில்பொல்லாதுஎனத்

தாதையார்முனிவுஉறத்

தான்எனைஆண்டவன்

என்றுஞானசம்பந்தர்பாடியபாடலேநல்லஅகச்சான்று, இப்படிஞானசம்பந்தர்ஞானப்பால்உண்டதலமாகியசீகாழிக்கேசெல்கிறோம்நாம்இன்று.

சீகாழிதென்பிராந்தியரயில்பாதையில்மாயூரத்துக்கும், சிதம்பரத்துக்கும்இடையிலுள்ளஒருசிறியஊர். ஊர்சிறியதுஎன்றாலும்பேர்பெரியது. பிரமபுரம், வேணிபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம்என்றெல்லாம்பன்னிரண்டுதிருப்பெயர்கொண்டது. இத்தனைபெயர்களும்காணாதென்று, பெருஞ்சாலைஇலாக்காக்காரர்கள்மைல்கற்களில்எல்லாம்சீர்காழிஎன்றுஅழுத்தமாகஎழுதியிருக்கிறார்கள். இவர்களுக்குரயில்வேக்காரர்கள்என்னசளைத்தவர்களா? சிய்யாழிஎன்றேபுதியபெயர்ஒன்றைச்சூட்டிமகிழ்கிறார்கள்.

இந்தச்சீகாழிசென்றதும்நேரேகோயிலுக்குப்போகலாம். மதில்களும்கோபுரங்களும்கூடியதொருபெரியகோயில்அது. சட்டைநாதஸ்வாமிதேவஸ்தானம்என்றபெயரோடுவிளங்குகிறது. தருமபுரஆதீனத்தார்

மேற்பார்வையில்இருக்கிறது. 1400 ஏக்கர்நன்செய்நிலமும், 300 ஏக்கர்புன்செய்நிலமும், வருஷத்துக்குச்சர்க்கார்தரும்ரூ. 2479-ம்அந்தத்தேவஸ்தானத்தின்சொத்துஎன்றால்கேட்கவாவேண்டும்? நிர்வாகம்சிறப்பாகநடக்கிறது. தருமபுரத்துஆதீனத்துக்கோயில்ஆனதினாலேகோயில்மிகவும்சுத்தமாகவைக்கப்பட்டிருக்கிறது. கோயில்மூன்றுபகுதியாகஇருக்கிறது. பெரியபகுதியில்இறைவன்தோணியப்பர், சட்டைநாதர்எல்லாம். வடபக்கத்தில்திருநிலைநாயகிகோயிலும்அக்கோயிலின்முன்உள்ளபிரமதீர்த்தமும். இந்தத்தீர்த்தக்கரையிலேயேதான்ஞானப்பால்உண்டிருக்கிறார்ஞானசம்பந்தர், இரண்டுகோயில்களுக்கும்இடையில்மேற்குக்கோடியில்ஞானசம்பந்தருக்குத்தனித்ததொருகோயில்.

கோயிலில்நுழைந்துஆஸ்தானமண்டபத்தைக்கடந்ததும்கர்ப்பக்கிருஹம்சென்றுலிங்கஉருவில்இருக்கும்பிரமபுரிஈசுவரரைவணங்கலாம். அவருக்குவலப்பக்கத்தில்மகாமண்டபத்தில்ஞானசம்பந்தர்உற்சவமூர்த்தியாகஇருக்கின்றார். அவர்சின்னஞ்சிறுகுழந்தைவடிவினர்ஆனதனாலே, வயிரநகைகளும், பட்டாடைகளும்உடுத்தி, அழகாகவேநிற்பார். வஸ்திரங்களையெல்லாம்களைந்துவிட்டுப்பார்த்தால், அந்தப்பிள்ளையின்முகத்தில்பால்வடியும். கையிலேவழக்கமாகஇருக்கும்பொற்றாளம்இராது. இடதுகையில்சிறுகிண்ணம்இருக்கும். (அம்மைஅருள்ஞானத்தைக்குழைத்துக்கொடுத்தபால்கிண்ணம்அதுவேபோலும்.) வலதுகையோதோடுடையசெவியனாம்தோணிபுரத்தானைச்சுட்டிக்காட்டும். இந்தஞானசம்பந்தரையும்தரிசித்துவணங்கிவிட்டு, கோயிலின்மேற்பிராகாரத்திலுள்ளகட்டுமலைமீதுஎளிதாகஏறலாம்.

அங்கேஅந்தமலைமீதுகுருமூர்த்தமானதோணியப்பர்பெரியநாயகிசமேதராகக்காட்சிகொடுக்கிறார். அவருக்கும்மேல்தளத்திலே, மலைஉச்சியிலேதென்திசைநோக்கியவராயச்சட்டைநாதர்நிற்கிறார். தோணியப்பரும்சட்டைநாதரும்சுதையாலானதிருவுருவங்களே. இந்தப்பேரண்டத்தைச்சுற்றிவளைந்துகிடக்கும்பெருங்கடல்ஊழிக்காலத்தில்பொங்கிஎழுந்துஅண்டத்தையேஅழித்தபோது, உமாமகேசுவர்பிரணவத்தைதோணியாகக்கொண்டுகடலில்மிதந்து, இத்தலத்துக்குவந்துதங்கித்திரும்பவும்அண்டத்தைஉருவாக்கியிருக்கிறார். (ஆம்! பைபிளில்வரும் Deluge என்னும்மகாபிரளயமும் Noah’s Arc என்னும்தோணியும்இதனையேகுறிக்கின்றனபோலும்) அன்றுஅப்படிவந்ததோணியப்பரேஇன்றுதோணிஒன்றும்இல்லாமலேயேஇக்கட்டுமலையில்ஏறிஉட்கார்ந்துகொண்டிருக்கிறார். இரணியனதுஉயிர்குடித்தநரசிங்கம்அகங்கரித்துத்திரிந்தபோதுஅதனைஅடக்கி, அதன்எலும்பைக்கதையாகவும், தோலைச்சட்டையாகவும்தரித்தவடுகநாதரேசட்டைநாதர்என்றுதலவரலாறுகூறும். இதுசிவனதுபைரவமூர்த்தங்களில்ஒன்று. இவரையேஆபத்துத்தாரணர்என்றுமக்கள்வணங்குகின்றனர். இவரையே,

துங்கமாமணித்தூணில்வந்து,

இரணியன்தோள்வலி

தனைவாங்கும்

சிங்கஏற்றுஉரிஅரைக்குஅசைத்து,

உலகுஎலாம்தேர்ந்துஅளந்து

அவன்மேனி

அங்கம்யாவும்ஓர்கதையதாய்க்

கொண்டு, அதன்அங்கியாய்ப்

புனைகாழி

சங்கவார்குழைச்சட்டைநாயகன்

துணைத்தாமரைச்

சரண்போற்றி

என்றுதலபுராணம்போற்றிவணங்குகிறது. இதேசட்டைநாதர்முத்துச்சட்டைநாதர்என்றபெயரோடும்வலம்புரிமண்டபத்தில்யோகஸ்தானத்தில்அஷ்டபைரவர்உருவிலும்காட்சிகொடுக்கிறார்இக்கோயில்உள்ளேயே.

இவர்களையெல்லாம்பார்த்தபின்னர்வெளியேவந்துபிரமதீர்த்தத்தைச்சுற்றிக்கொண்டுதிருநிலைநாயகிசந்நிதிசென்றுவணங்கலாம். அதன்பின்ஞானசம்பந்தர்கோயிலுள்ளும்நுழைந்துஅங்குசிலைஉருவில்இருக்கும்ஞானசம்பந்தரையுமேகண்டுதொழலாம். ஒருஅர்ச்சனையுமேசெய்யச்சொல்லலாம். அப்படிச்சொன்னால்ஓர்உண்மைவிளங்கும். முருகப்பெருமானுக்குஉரியஅஷ்டோத்தரத்தைச்சொல்லியேஅர்ச்சனைசெய்வார்அர்ச்சகர். இதுஎன்னஎன்றுவினவினால், முருகனதுஅவதாரமூர்த்தம்தானேஞானசம்பந்தர்என்றவிடைபெறுவோம். இப்போதுதெரிகிறது, பெரியநாயகிஏன்இறங்கிவந்துஞானசம்பந்தருக்குஞானப்பால்ஊட்டினார்என்று. எத்தனைஅவதாரம்எடுத்தாலும்தன்குழந்தையைத்தெரியாமல்போய்விடுமாதாய்க்கு? ஞானசம்பந்தர்பிறந்துவளர்ந்தஇந்தத்தலத்துக்குஅப்பர்வந்திருக்கிறார்; சுந்தரர்வந்திருக்கிறார். இத்தலத்தின்புனிதத்தன்மையைஉணர்ந்துஇதைமிதிக்கஅஞ்சிஎட்டஇருந்துபார்த்துவிட்டேதிரும்பியிருக்கிறார்சுந்தரர்.

முத்தியும்ஞானமும்வானவர்அறியா

முறைமுறைபலபலநெறிகளும்காட்டி,

கற்பனைகற்பித்தகடவுளைஅடியேன்

கழுமலவளநகர்க்கண்டுகொண்டேனே

என்பதுதானேஅவரதுதேவாரம்.

இத்தலத்தின்சரித்திரஏடுகளைப்புரட்டினால்எவ்வளவோவிஷயங்கள்அறியலாம். இக்கோயிலில்நாற்பத்துஏழுகல்வெட்டுகள்இருக்கின்றன. சோழமன்னர்களதுகல்வெட்டுகளோடுவீரவிருப்பண்ணஉடையார்கல்வெட்டுகளும், கிருஷ்ணதேவராயரதுகல்வெட்டுகளும்இருக்கின்றன. இந்தக்கல்வெட்டுகளிலிருந்துபலபழக்கவழக்கங்களும், நிலஅளவைமுறைகளும், தலம்மூர்த்திஇவைகளின்அமைப்புகளும்விளங்கும். “இராஜராஜவளநாட்டுத்திருக்கழுமலநாட்டுப்பிரமதேசம்திருக்கழுமலம்என்றநீண்டபெயரில்இத்தலம்குறிப்பிடப்பட்டிருக்கும். வீரராஜேந்திரன், இரண்டாம்குலோத்துங்கன், இரண்டாம்ராஜராஜன், ராஜாதிராஜன்முதலியசோழமன்னர்கள்ஏற்படுத்தியுள்ளநிபந்தங்கள்கணக்கில்அடங்கா. இவற்றையெல்லாம்சரித்திரஆராய்ச்சியாளர்களுக்குவிட்டுவிட்டுநாம்திரும்பிவிடலாம்.

சீகாழிதோணியப்பரையும், ஆளுடையபிள்ளையையும்தரிசித்தசூட்டோடேயேஞானசம்பந்தர்திருமணத்தோடுசிவசாயுஜ்யம்பெற்றதலமானஅந்தநல்லூர்ப்பெருமணத்திற்குமேபோய்வந்துவிடலாமே. நல்லூர்ப்பெருமணம், ஆச்சாள்புரம்என்றபெயரோடுஇன்றுவிளங்குகிறது. சீகாழிக்குவடக்கேபத்துமைல்தொலைவில்உள்ளசிறியஊர்அது. பதினாறுவயதுநிரம்பியஞானசம்பந்தருக்கு, பெருமணநல்லூரில்இருந்தநம்பியின்பெண்ஸ்தோத்திரபூரணியைத்திருமணம்பேசுகிறார்கள். திருமணச்சடங்குகள்நடக்கின்றன. திருமணச்சடங்குகள்முடிந்ததும், மனைவியையும்உடன்வந்தஉற்றார்உறவினர்அனைவரையுமேகூட்டிக்கொண்டுகோயிலுள்நுழைந்துகாதலாகிக்கசிந்துஎன்றுதொடங்கும்பதிகத்தைப்பாடிக்கொண்டேஅங்குதோன்றியசோதியிலேயேஎல்லோரும்இரண்டறக்கலந்தனர்என்பதுவரலாறு. ஞானசம்பந்தரதுதிருமணக்கோலம்இக்கோயிலில்இருக்கிறது; மிகவும்பிற்பட்டகாலத்தில்செய்துஅமைத்தவடிவம்என்றேதோன்றுகிறது. இவரைக்கல்யாணசம்பந்தர்என்கிறார்கள். குழந்தையாகக்கண்டஆளுடையபிள்ளையைக்கல்யாணக்கோலத்திலும்கண்டதிருப்தியோடேயேநாம்இத்தலத்திலிருந்துதிரும்பலாம்தானே.