வேளூர்வைத்தியநாதன்
‘மூலிகைமர்மம்‘ என்றுஒருபுத்தகம். அதில்வேம்புஎன்றுஓர்அத்தியாயம். அதில்நம்வீட்டுப்புழக்கடையிலும், ஊர்வெளிப்புறங்களிலும்வளரும்வேப்பமரத்தின்குணங்களைப்பற்றியேவிரிவாகக்கூறப்பட்டிருக்கும். ‘முறைசுரங்களுக்கும், இரத்தசுத்திக்கும்வேம்பின்வேர், பட்டைமுதலியனகைகண்டமருந்து. வேப்பமரத்துஇலையேவீக்கங்களைவற்றவைப்பதற்கும், விஷக்கிருமிகளைக்கொல்வதற்கும், விஷவாயுக்களைத்தடுத்துச்சுகாதாரத்தைஉண்டுபண்ணுவதற்கும்ஏற்றது. சுவாசரணங்களுக்கும், மூளைக்குப்பலம்தருவதற்கும்இரத்தத்திலுள்ளவிஷங்களைமாற்றுவதற்கும்வேப்பம்பழம்சிறந்தது.
இதைப்போல்வேப்பம்விதை, வேப்பம்எண்ணெய்எல்லாம்கடுமையானநோய்தீர்க்கவல்லவை. வேப்பம்பூவடகமும், வேப்பம்பூரஸமும்உணவோடுஉணவாகவயிற்றுக்கோளாறுகளைத்தீர்க்கக்கூடியவை. நிரம்பச்சொல்வானேன்? வேப்பமரத்துக்காற்றைஉட்கொள்பவர்கள்எல்லாம்நோய்நொடிஇல்லாமல்வாழ்வார்கள். அவர்களைவிஷவாயுக்களால்உண்டாகும்வாந்திபேதி, பிளேக், வைசூரிமுதலியவைஅண்டாது. வேம்பும்அரசும்சேர்ந்துவிட்டாலோஅவற்றைச்சுற்றிவலம்வரும்பெண்களின்கருப்பையின்கோளாறுகளையெல்லாம்நீக்கவல்லது. இப்படிஇன்னும்என்னஎன்னஎல்லாமோவிரிவாகவேப்பமரத்தைப்பற்றியும்அதன்கிளை, தளிர், பழம், பட்டைமுதலியவற்றைப்பற்றியும்அந்தமூலிகைமர்மத்தில்எழுதியிருந்தது. இந்தமர்மங்களைநமக்குஅந்தநூலாசிரியரானவைத்தியர்விளக்குவதற்குஎத்தனையோஆயிரம்ஆண்டுகளுக்குமுன்பேஒருவர்தெரிந்துவைத்திருக்கிறார். அதுகாரணமாகஅவர், அந்தவேப்பமரத்தடியிலேயேகடையைவிரித்திருக்கிறார். தம்மைவைத்தியநாதன்என்றுவிளம்பரப்படுத்தியிருக்கிறார். தீராநோய்களைத்தீர்க்கும்வைத்தியராகவாழ்ந்திருக்கிறார். இவரையே, சமயக்குரவர்களில்வயதுமுதிர்ந்தவரானஅப்பர்பெருமான்
பேராயிரம்பரவிவானோர்
ஏத்தும்பெம்மானைப், பிரிவிலா
அடியார்க்குஎன்றும்
வாராதசெல்வம்வருவிப்பானை,
மந்திரமும்தந்திரமும்
மருந்தும்ஆகி
தீராநோய்தீர்த்துஅருள
வல்லான்தன்னைத்திரிபுரங்கள்
தீஎழத்திண்சிலைகைக்கொண்ட
போரானை, புள்ளிருக்கு
வேளூரானைப்போற்றாதே
ஆற்றநாள்போக்கினேனே
என்றுபாடியிருக்கிறார். இந்தவைத்தியநாதன்கோயில்கொண்டிருக்கும்புள்ளிருக்குவேளூருக்கேசெல்கிறோம்இன்று.
சாதாரணமாக, புள்ளிருக்குவேளூர்என்றால்ஒருவருக்கும்ஊர்எங்கிருக்கிறதுஎன்றுதெரியாது. ஆனால்வைத்தீசுவரன்கோயில்எங்கிருக்கிறதுஎன்றால்தெரியும். தென்பிராந்தியரயில்வேயில்மாயூரத்துக்கும்சீகாழிக்கும்இடையில்இருக்கிறது. சீகாழிக்குஅடுத்ததென்பக்கத்துஸ்டேஷன்என்றுரயில்வேஅட்டவணையைப்பார்க்காமலேயேசொல்லிவிடுவார்கள். ரயில்வேஸ்டேஷனில்இறங்கிக்கிழக்குநோக்கிநடந்தால்தெற்குரதவீதியில்கொண்டுவந்துவிடும். அதன்பின்ஒருபிரச்சினன. கோயிலுக்குக்கிழக்கும்மேற்கும்பெரியகோபுரங்கள்இருக்கின்றனவே, கோயிலுக்குள்எப்படிநுழையவேணும்என்றகேள்விஎழும். மேற்கேபார்த்தவராகவைத்தியநாதர்இருப்பதால்மேலக்கோபுரவாயில்வழியாகநுழைந்துமண்டபங்களைக்கடந்துவரலாம். ஆனால்நாம்இந்தக்கோயிலுக்குவருவது, நமதுபழவினையாம்நோய்தீர்க்கமாத்திரம்அல்லவே. உடலில்உறவாடும்நோயையும்தீர்க்கத்தானே. ஆதலால்அன்றுஅந்தவேம்படியில்கடைவிரித்தவைத்தியாநாதனைஅல்லவாமுதலில்சந்தித்து, நம்நோய்விவரங்களைக்கூறிஅதற்குமருந்துதேடவேண்டும். ஆதலால்தெற்கு
புள்ளிருக்குவேளூர்– கோயில்
ரதவீதியைக்கடந்துகீழைரதவீதிவழிவந்துகீழைக்கோபுரவாயில்வழியாகவேஉள்நுழையலாம்.
ராஜகோபுரத்தைக்கடந்தஉடனேஅங்கிருக்கும்வெளிஅத்தனையையும்ஆக்கிரமித்துக்கொண்டுபெரியதொருவேப்பமரம்நிற்கும். அந்தமரமேஇங்குதலவிருட்சம். அந்தமரத்தடியிலேயேமேற்கேபார்த்தவராகஇருக்கிறார்ஆதிவைத்தியநாதர். இந்தஇடத்தையேவேம்படிமால்என்றுகூறுவார்கள். இந்தஆதிவைத்தியநாதரிடம்நாம்நம்நோய்க்குமருந்துபெறமுடியாது. வியாபாரம்பெருத்துவிட்டகாரணத்தால்கடைமுதலாளிகோயிலுக்குஉள்ளேபோய்விட்டார்என்பர். கோயிலுக்குள்ளிருக்கும்புதியவைத்தியநாதரே, எல்லாநோய்களுக்குகண்கண்டமருந்தானதிருச்சாத்துருண்டைவியாபாரம்செய்துவருகிறார். இந்தமருந்துபெறவிரும்புபவர்சுக்கிலபக்ஷத்தில்நல்லநாழிகையில்அங்குள்ளசந்தானதீர்த்தத்தில்நீராடி, அங்குள்ளமண்ணைஎடுத்துப்புதுப்பாத்திரத்தில்வைத்து, கோயிலுள்வந்துவிபூதிகுண்டத்தில்உள்ளவிபூதி, சித்தாமிர்ததீர்த்தத்திலுள்ளதண்ணீர்இவைகளையும்சேர்த்துப்பிசைந்துமுத்துக்குமரர்முன்புள்ளகுழிஅம்மியில்இட்டுஅரைத்துக்கடுகுஅளவுஉண்டைகள்செய்து, தையல்நாயகிதிருமுன்புவைத்துஅருச்சனைசெய்துஎடுத்துப்போய்உண்ணவேண்டும்என்பர்கோயில்நிர்வாகிகளும், அர்ச்சகர்களும். இப்படியேசொல்லியிருப்பார்கள்போலும்அன்றுஇக்கோயிலுக்குவந்தகாளமேகத்தினிடமும். உடனேஅவர்,
மண்டலத்தில்நாளும்
வைத்தியராய்த்தாமிருந்து
கண்டவினைதீர்க்கின்றார்
கண்டீரோ?-தொண்டர்
விருந்தைப்பார்த்துஉண்டருளும்
வேளூர்என்நாதர்
மருந்தைப்பார்த்தால்
சுத்தமண்.
என்றுஏளனமாகவேபாடியிருக்கிறார். நான்கூடக்காளமேகம்கட்சிதான். திருச்சாத்துருண்டைஉருட்டக்கஷ்டப்படவேண்டாம்என்பேன். ஆதிவைத்தியநாதரைச்சுற்றிவளர்ந்திருக்கும்வேம்படியில்சும்மாஅரைமணிநேரம்அப்படியேதங்கிஇருந்துவிட்டால், தீராதநோய்எல்லாம்தீர்ந்துபோகுமேஎன்றுதான்சொல்லத்தோன்றுகிறதுஎனக்கு.
இப்படிநம்உடல்நோயைத்தீர்த்துக்கொண்டபின்உளநோயைத்தீர்க்கக்கோயில்உள்ளேயேநுழையலாம். பரந்துகிடக்கும்தெற்குவெளிப்பிராகாரத்தைக்கடந்துபிரதானகோயில்மண்டபத்துக்குவந்தால்தென்பக்கம்ஒருபெரியவாயில்இருக்கும். அதில்நுழைந்தால்சித்தாமிர்ததீர்த்தத்தினிடம்கொண்டுசேர்க்கும். காமதேனுபால்சொரிந்துஇறைவனைஅபிஷேகம்செய்ய, அந்தப்பால்பெருகியேஇந்தத்தடாகம்நிரம்பிஇருக்கிறதுஎன்பர். இல்லைசித்தர்கணத்தர்இறைவன்திருமுடியில்கொட்டியதேவாமிர்தமேஇங்குநிறைந்திருக்கிறது, அதனாலேயேசித்தாமிர்ததீர்த்தம்என்றுபெயர்வந்ததுஎன்றும்கூறுவர். இந்தத்தீர்த்தத்தில்ஒருவிசேஷம். இதில்பாம்பும்தவளையும்எப்போதுமேஇருந்ததில்லை. ஏதோசாதனந்தர்இட்டசாபத்தால்நேர்ந்ததுஇதுஎன்பர். இதனால்கொஞ்சம்துணிந்தேஇக்குளத்தில்இறங்கலாம், குளிக்கலாம், நீச்சல்அடிக்கலாம். வேம்படிமாலில்தீராதவியாதிமிச்சம்இருந்தால்அதுகட்டாயம்இத்தீர்த்தத்தில்குளித்ததும்தீர்ந்துபோகும்.
இனி, கோயிலுள்நுழைந்து, கர்ப்பக்கிருஹம்சென்றுவைத்தியநாதனைக்கண்டுவணங்கலாம், பின்னர்
ஆதிவைத்தியநாதர்
அவரைவலம்வரலாம். அப்படிவரும்போது ‘இந்தத்தலத்துக்குவைத்தீசுவரன்கோயில்என்றபெயர்மிகவும்பொருத்தமாகஇருக்க, இதைஏன்புள்ளிருக்குவேளூர்என்றுஅழைக்கிறார்கள்என்றுஉடன்வரும்நண்பர்கேட்பார். அவருக்குவிடைசொல்லும்இந்தப்பிராகாரம். ஜடாயுஎன்னும்புள் (பறவை), ரிக்குவேதம், முருகனாம்வேள், சூரியனாம்ஊர், நால்வரும்பூஜித்ததலம்ஆனதால்இந்தபெயர்வந்ததுஎன்றுதலவரலாறுகூறும். இதற்கேற்பஇங்குள்ளதெற்குப்பிராகாரத்தில்சடாயுகுண்டம்இருக்கிறது. ராமாயணத்தில்வரும்சடாயுஇராவணனோடுபோர்ஏற்றுவிழுந்துமாண்டஇடம்என்றும், அந்தசடாயுவைப்பின்னர்ராமலக்ஷ்மணர்கள்தகனம்செய்தஇடமேஇதுஎன்றும்அறிவோம். அங்குள்ளஒருகுண்டத்தில்சடாயுவின்சாம்பல்இன்றும்இருப்பதைக்காணலாம். சடாயுவும்சம்பாதியும்முத்திபெற்றஇந்தப்புள்ளிருக்குவேளூரைஞானசம்பந்தர்பாடுகின்றபோதுஇரண்டுபறவைஅரசினையும்ஞாபகத்தில்வைத்துக்கொண்டேபாடியிருக்கிறார்.
கள்ளார்ந்தபூங்கொன்றை
மதமத்தம்கதிர்மதியம்
உள்ளார்ந்தசடைமுடிஎம்
பெருமானார்உறையும்இடம்
தள்ளாய்சம்பாதிசடாயு
என்பார்தாம்இருவர்
புள்ளானார்க்குஅரையனிடம்
புள்ளிருக்குவேளூரே,
என்பதுதானேஅவர்பாடியதேவாரம். சடாயுகுண்டத்தைக்கடந்துவரும்வழியில், செவ்வாய்க்கிரஹம்ஆனஅங்காரகனதுஉற்சவமூர்த்தத்தையுமேகண்டுவணங்கலாம். நீங்கள்கோயிலுக்குப்போனநாள்செவ்வாய்க்கிழமையாகஇருந்தால்சிறப்பானஅலங்காரத்தைக்காண்பதுடன், விசேஷமானநைவேத்தியங்களும்இங்குகிடைக்கும். தலத்தில்நவக்கிரஹங்கள்ஒருவரைஒருவர்வக்கரித்துக்கொண்டிருப்பதில்லை. சூரியனுக்கும்அங்காரகனுக்கும்தனித்தனிசந்நிதிஅமைத்துவிட்டதால், மற்றஏழுபேரும்கைகட்டிவாய்பொத்திவரிசையாககீழைத்திருமாளிகைப்பத்தியில்நின்றுகொண்டிருக்கிறார்கள்.
இவர்களைப்பார்த்தபின்நடந்தால்தெற்குநோக்கிஅருள்பாலித்துக்கொண்டிருக்கும்தையல்நாயகியிடம்வருவோம். தையல்நாயகிநல்லஅழகானவடிவம், கரும்புருவச்சிலை, வரிக்கயல்விழி, வள்ளைவார்காது, முல்லைஅரும்பும்இளநகை, செங்கனிவாய், பிறைநுதல்எல்லாம்படைத்தவளாய்ப்புள்ளூர்மேவும்இந்தவாலாம்பிகையைவணங்கிவிட்டுவடக்குநோக்கிப்போகலாம். அங்குதானேசண்முகர்சந்நிதிஇருக்கிறது. இந்தச்சண்முகரின்உற்சவமூர்த்தமேசெல்வமுத்துக்குமாரர். இவர்உண்மையிலேநல்லசெல்வந்தர். அதிலும்கார்த்திகைதினத்தன்றுநடக்கும்சந்தனாபிஷேகம், அலங்காரம்எல்லாம்கண்குளிரக்காணவேண்டியவை, இவரையேஅருணகிரியார், குமரகுரபரர்எல்லாம்பாடிப்பரவியிருக்கிறார்கள். குமரகுருபர்பாடியமுத்துக்குமரன்பிள்ளைத்தமிழ்மிகச்சிறப்புவாய்ந்தது.
கூன்ஏறுமதிநுதல்தெய்வக்
குறப்பெண்குறிப்பறிந்து
அருகுஅணைந்து,
குற்றேவல்செய்ய, கடைக்கண்
பிணிக்குஎனக்குறைஇரந்து
அவள்தொண்டைவாய்
தேனூறுகிளவிக்குவாயூறி
நின்றவன்செங்கீரை
ஆடிஅருளே
என்றுபாடும்பிள்ளைத்தமிழில், தமிழ்கொஞ்சிவிளையாடுகிறது.
கோயில்நிரம்பப்பெரியகோயில்ஆனதால்சுற்றிச்சுற்றிவரலாம். அங்குகோயில்கொண்டிருக்கும்மூர்த்திகளையெல்லாம்கண்டுகண்டுதொழலாம். இக்கோயிலில்எட்டுகல்வெட்டுக்கள்இருக்கின்றன. அவைகூடமுழுவதும்சிதையாமல்இல்லை . திருப்பணிசெய்தபோதுசிதைந்திருக்கலாம். இக்கல்வெட்டுக்களில்சிறப்பானதுகி.பி. பன்னிரண்டாம்நூற்றாண்டின்முற்பகுதியில்சோழநாட்டைஆண்டவிக்கிரமசோழன்காலத்தியது; இவன்முதற்குலோத்துங்கன்மகன், இவன்றன்மெய்க்கீர்த்தியைஒருகல்வெட்டுக்கூறுகிறது.
திருவடிஇரண்டும்தன்முடியாகத்
தென்னவர்சூட, முன்னும்மனுவாறுபெருக,
கலியாறுவறப்ப, செங்கோல்திசை
தொறும்செல்ல, வெண்குடைநிலவளாகம்
எங்கணும்தங்க, வெண்ணிலாத்திகழ,
ஒருதனிமேருவில்புவியின்பொன்னேமியாவும்
தன்னேமிநடப்ப, விளங்குஜயமகளை
இளங்கோப்பருவத்துசக்கரக்கோட்டத்து
வீரத்தொழிலால்வதுமணந்தான்
என்பதுஒன்று. இதனால்இவன்இக்கோயிலுக்குச்செய்தபணிவிளங்கவில்லைஎன்றாலும்மன்னனதுகீர்த்திமட்டும்பெரிதாகவேஇருந்திருக்கிறதுஎன்றுஅறிகிறோம். வீரராஜேந்திரபாண்டியன்காலத்தியகல்வெட்டுஒன்றில்திருஅம்பலமுடையானானதொண்டைமானால்திருப்புள்ளிருக்குவேளூர்நாயகனுக்குஇறையிலியாகவிடப்பெற்றநிலங்களைக்குறிக்கின்றது. இன்னும்அச்சுதப்பநாயக்கர், துளஜாமகாராஜாமுதலியவர்கள்விட்டநிபந்தங்களைக்குறிக்கும்கல்வெட்டுக்களும்உண்டு.
இக்கோயில்தருமபுரஆதீனக்கோயில்களில்பெரியது. பொருள்வளம்உடையது; சிறப்புமிக்கது. 6105 ஏக்கர்நன்செய்நிலமும் 1176 ஏக்கர்புன்செய்யும், லக்ஷத்துஅறுபதாயிரம்ரூபாய்மதிப்புள்ளதிருஆபரணமும்இக்கோயிலுக்குஉண்டுஎன்றால்வேறுஅதிகம்சொல்வானேன். இன்றையஆதீனகர்த்தர்ஸ்ரீலஸ்ரீசுப்பிரமணியதேசிகபரமாச்சர்யசுவாமிகள், இந்தவைத்தியநாதன்தம்பதிகளிடத்தும்அவர்களைவிடஅந்தச்செல்வமுத்துக்குமரனிடமும்அளவிலாபக்திஉடையவர்கள்ஆதலால்கோயில்காரியங்களையெல்லாம்தம்நேரடிப்பார்வையிலேயேநடத்துகிறார்கள். திருப்பணிசெய்துகொண்டேயிருக்கிறார்கள். தங்கக்கவசத்துக்குமேல்தங்கக்கவசமாகமூர்த்திகளுக்குஅணிந்துஅணிந்துபார்த்துமகிழ்கிறார்கள். சென்னையிலேயே ‘வேளூர்இறைபணிமன்றம்‘ ஒன்றைநிறுவி, சைவசமயப்பற்றைவளர்க்கிறார்கள். இதனால்தானேவைத்தியநாதனையும்செல்வமுத்துக்குமரனையும்ஆர, அமரஇருந்துபார்த்துவழிபட்டுத்திரும்பமுடிகிறதுநமக்கு.