தமிழ்நாடு – 37 – திருப்புன்கூர்

திருப்புன்கூர்சிவலோகன்

தீண்டாமைஒழிப்பு, ஹரிஜனஆலயப்பிரவேசம்எல்லாம், நம்சமூகத்தில்உள்ளகுறைகளைநீக்கஎழுந்தசமீபகாலமுயற்சிகள். ‘எல்லோரும்ஓர்குலம். எல்லோரும்ஓரினம்என்றஅடிப்படையில்சமுதாயவாழ்வில்எல்லோரும்பங்குபெறவேணும்என்பதற்காகஎழுந்தஇயக்கம்அவை. நாடுசுதந்திரம்பெற்றுமக்கள்சுபிட்சமாகவாழ, சமுதாயத்தில்உள்ளஉயர்வுதாழ்வுகள்ஒழியவேண்டும்என்றபிரசாரம்தீவிரமாகநடந்தது; நடக்கிறது. இந்தஇயக்கத்துக்குமுழுஆக்கம்தந்தவர்மகாத்மாகாந்திஜி.

எந்தக்கோயிலில்ஓர்இனத்தவரைத்தீண்டத்தகாதவர்எனஒதுக்கிஉள்ளேவிடமறுக்கிறார்களோ, அந்தக்கோயிலினுள்நுழையகாந்திஜிமறுத்திருக்கிறார். தமிழ்நாட்டிலேமீனாக்ஷிசந்நிதியிலே, அரங்கத்துஅரவணையான்கோயிலிலே, பழனிஆண்டவன்முன்பெல்லாம், ஹரிஜனங்களைஅழைத்துக்கொண்டுகாந்திஜிசென்றுஹரிஜனஆலயப்பிரவேசத்தைவிழாக்களாகவேநடத்தியதுஎல்லாம்சரித்திரப்பிரசித்தம். இன்றுதமிழ்நாட்டில்ஹரிஜனங்களுக்குத்திறந்துவிடப்படாதகோயில்களேஇல்லைஎன்றுஎளிதாகச்சொல்லிவிடலாம். ஆனால்இந்தஇயக்கத்தைஎண்ணற்றவருஷங்களுக்குமுன்னாலேயேமுன்னின்றுநடத்தியிருக்கிறார்ஒருசிவலோகநாதர். கோயிலுள்விடவேண்டாம், தேரடியில்நின்றுதரிசிப்பதற்காவதுவழிசெய்யவேண்டும்என்றஹரிஜனபக்தனானநந்தனுக்காகவழிமறைத்திருக்கும்நந்தியைசற்றேவிலகிஇரும்பிள்ளாய்என்றுஉத்தரவுபோட்டார்அவர். அந்தச்சிவலோகநாதரைக்காணவேஇன்றுசெல்கிறோம்திருப்புன்கூருக்கு.

திருப்புன்கூர், வைத்தீசுவரன்கோயிலுக்கு, நேர்மேற்கேஇரண்டுமைல்தூரத்தில்இருக்கிறது. வைத்தீசுவரன்கோயில்ஸ்டேஷனில்இறங்கிபஸ்ஸில்ஏறியோஇல்லை, கார், வண்டிஏதாவதுவைத்துக்கொண்டோசெல்லலாம். போகிறவழியெல்லாம்செந்நெல்வயல்கள், பங்கயங்கள்மலரும்பழனங்கள், எங்குபார்த்தாலும்ஒரேதென்னஞ்சோலைகள். ரோட்டைவிட்டுத்தெற்கேதிரும்பிஒன்றிரண்டுபர்லாங்தூரம்வளைந்துவளைந்துசென்றால், கோயிலைஅடுத்தகுளக்கரைவந்துசேருவோம். குளக்கரையிலிருந்துகோயிலைக்காண்பதேஓர்அழகானகாட்சி.

திருப்புன்கூர்கோயில்

விலகியநந்தி

கோயில்சந்நிதித்தெருவின்கீழ்க்கோடியில், தேரடியில்ஒருசிறுகோயில்புதிதாகக்கட்டிஅதில்நந்தனைப்பிரதிஷ்டைசெய்திருக்கிறார்கள். அந்தத்தேரடியில்நின்றுதானேநந்தன்கதறிஇருக்கிறான். ‘வழிமறைத்திருக்கிறதே, ஐயே! மலைபோலஒருமாடுபடுத்திருக்குதேஎன்று. நாமும்நம்வண்டியைவிட்டுஅங்கேயேஇறங்கிவிடலாம். அங்கிருந்தேநந்தன்தரிசித்தசிவலோகநாதனைக்கண்டுதரிசித்துவிடலாம். அன்றுநந்தனுக்குவழிமறைத்தநந்திதான், பின்னர்வழியைவிட்டுவடபக்கமாகவிலகிஎல்லோரும்தேரடியில்நின்றுதரிசிக்கஇடம்தந்திருக்கிறதே. இந்தஇடத்தில்நின்றேநந்தன்சரித்திரம்முழுதையும்கேட்டுவிடலாம், தெரிந்தவர்கள்மூலம். அப்படித்தெரிந்தவர்கள்அகப்படாவிட்டால், பெரியபுராணம்எழுதியசேக்கிழாரும், நந்தன்சரித்திரக்கீர்த்தனம்பாடியகோபாலகிருஷ்ணபாரதியும்நமக்குதுணைவரத்தயாராயிருக்கிறார்கள். கதைஇதுதான்.

சோழவளநாட்டிலேஆதனூர்என்றஒருசிறியஊர். (இன்றுமேலஆதனூர்என்றுவழங்குகிறது. திருப்புன்கூருக்கும்மேற்கேஇரண்டுமைல்தொலைவில்இருக்கிறது) அங்குஒருபுலைப்பாடி. அதில்நந்தன்பிறக்கிறான். ஓர்அந்தணரிடம்பண்ணையாளாகவேலைபார்க்கிறான். அவனுக்குஎப்படியோஒர்ஆசைபிறந்துவிடுகிறதுதில்லையில்நடம்ஆடும்கூத்தனைக்கண்டுதரிசிக்கவேண்டும்என்று. அதற்குத்தன்சேரியில்ஆள்திரட்டுகிறான். சேரியிலுள்ளவர்களைத்தில்லைவாழ்அந்தணர்கள்கோயிலுள்விடமாட்டார்களேஎன்றுஅவர்கள்எண்ணுகிறார்கள். ‘இதுஎல்லாம்நமதுஜாதிக்குஅடுக்காதகாரியம்என்றுநாட்டாண்மைக்கிழவன்வேறேதடுக்கிறான். இருந்தாலும்ஒருசிலரைக்கூட்டிக்கொண்டுபக்கத்திலிருக்கும்திருப்புன்கூரில்உள்ளசிவலோகநாதனைத்தரிசிக்கப்புறப்பட்டுவருகிறான்.

சிவலோகநாதனைக்கண்டுசேவித்திடுவோம்வாரீர்!

பாவமயங்களைப்போக்கிஅவர்பரமபதத்தைக்கொடுப்பார்அந்த

சிவலோகநாதனைக்கண்டு

சேவித்திடுவோம்வாரீர்!

என்றுபாடிக்கொண்டேவந்துவிட்டான்திருப்புன்கூர்தேரடிக்கு. அதன்பின்தான், சிவலோகநாதனைக்கண்டுதரிசிப்பதுஎளிதல்லஎன்றுதெரிகிறது. முதலில்சந்நிதித்தெருவிலேநுழையவேஅனுமதிகிடையாது. அதன்பின்கோயில்வாயிலில்பெரியநந்திவேறேபடுத்துக்கிடக்கிறது. எப்படிஎட்டிநின்றுதரிசிப்பது? அவனதுஏக்கம்எல்லாம்தேரடியில்நின்றுதரிசித்தாலும்போதும்என்பதுதான். ‘உற்றுப்பார்க்கச்சற்றேஇந்தநந்திவிலகாதாஎன்றுஎண்ணியிருக்கிறான். அவ்வளவுதான், சிவலோகநாதன்தன்நந்தியைப்பார்த்து, சற்றேவிலகியிரும்பிள்ளாய், நம்சந்நிதானம்மறைக்குதாம்என்றுவேண்டிக்கொள்கிறான். நந்தியும்அப்படியேவிலகிக்கொள்கிறது. நந்தன்குதுகலித்துஆடிப்பாடுகிறான். இப்படிநந்திவிலகஅருள்செய்கான்சிவலோகநாதன்என்பதைச்சேக்கிழார்,

சீர்ஏறும்இசைபாடித்

திருத்தொண்டர்திருவாயில்

நேரேகும்பிடவேண்டும்

எனநினைந்தார்க்கு, அதுநேர்வார்

கார்ஏறும்எயில்புன்கூர்

கண்ணுதலார்திருமுன்பு

பேர்ஏற்றைவிலங்கஅருள்

புரிந்துஅருளிப்புலப்படுத்தார்

என்றுபாடுகிறார்அவரதுதிருத்தொண்டர்புராணத்தில். நந்திவிலகிதரிசனத்துக்குவழிசெய்தகாரணத்தால், தில்லைச்சிற்றம்பலவனுமேஅருள்புரிவான்என்றநம்பிக்கைவலுக்கிறதுநந்தன்சகாக்களிடத்தே. நாளையேபோகவேணும்என்றுதுடிக்கிறான்நந்தன். ஆனால்ஆண்டானானஅந்தணர்எளிதாகஇடங்கொடுத்துவிடுவாரோ? நாற்பதுவேலிநிலத்துக்குநடவுநட்டுவிட்டுத்தான்போகவேனும்என்கிறார். எப்படிஇதனைமுடிப்பதுஎன்றுநந்தன்மயங்கிநின்றபோதுஇறைவனேஇந்தவேலையையும்முடித்துக்கொடுக்கிறார். அந்தணரோநந்தன்பக்தியின்பெருமையைஉணர்ந்துஅவன்காலிலேயேவிழுந்துவணங்கிஎழுந்துவிடைகொடுக்கிறார். பின்னர்ஆறாதபெருங்காதல்ஒப்பரிதாய்வளர்ந்தோங்க, உள்ளுருகிக்கைதொழுதகோலத்தோடுதில்லைசென்றுஇறைவன்அருளியபடிஎரிமூழ்கி, உலகுய்யநடம்ஆடும்நடராஜனைவழிபட்டுமுத்திபெற்றார்என்பதுவரலாறு. இந்தநந்திவிலகிக்கிடக்கும்நேர்த்தியொன்றைக்காண்பதற்கேஇக்கோயிலுக்குப்போகலாம். வெளியில்நின்றுபார்த்தாலும்சிவலோகன்தரிசனம்கிட்டும்.

சிவலோகநாதன்சந்நிதிக்கேபோய்விட்டாலும்அங்கிருந்துபார்த்தால்நந்திஎவ்வளவுதூரம்வடபக்கம்விலகிவழிமறையாதிருக்கிறதுஎன்றும்தெரியும். இதைவிடஎல்லாம்அழகு, அவசரத்தில்விலகியநந்திகொஞ்சம்ஒருக்களித்துச்சாய்ந்துகிடப்பது. நந்திவிலகியவரலாற்றைநம்பமறுக்கும்அன்பர்கள்கூடஇதைக்கண்டு, வாய்மூடிமௌனியாகநிற்கவேண்டியதுதான். கோபுரவாயிலைக்கடந்துநந்திமண்டபம்வந்து, இறைஅருளிலேநம்பிக்கைஅதிகம்பிறக்கச்செய்யும்நந்தியெம்பெருமானையும்வணங்கியபின்கோயிலுள்நுழையலாம். கோயில்நிரம்பப்பெரியகோயிலும்இல்லை, சின்னஞ்சிறியகோயிலும்இல்லை. மகாமண்டபத்திலேதெற்குநோக்கிஅந்தச்சிவகாமிநாதன்சிவகாமியோடுநடம்ஆடியகோலத்தில்நிற்கிறான். அந்தத்திருவுருவைப்பார்க்கும்போது, அவரதுதிருவடியில்குடமுழாவையும், பஞ்சமுகவாத்தியத்தையும்முழக்கும்பூதகணங்களையும்பார்க்கத்தவறிவிடாதீர்கள். நீங்கள்தவறினாலும்இத்தலத்துக்குவந்தசுந்தரர்ஞாபகமூட்டத்தவறமாட்டார்.

மானைநோக்கியோர்

மாநடம்மகிழமணிமுழா

முழக்கஅருள்செய்த

தேவதேவ! நின்திருவடி

அடைந்தேன்செழும்பொழில்

திருப்புன்கூர்உளானே.

என்பதைப்பாடிக்காட்டியேநமக்குஅறிவுறுத்துவார். நடராஜதரிசனம்செய்தபின்இங்கேகோயில்கொண்டிருக்கும்சௌந்திரநாயகியாம்அம்மையையும்கண்டுவணங்கலாம். இத்தலத்துக்குச்சிவலோகநாதனைவிடப்பெருமைதேடித்தந்தஅந்தத்திருநாளைப்போவாராம்நந்தனையும்செப்புச்சிலைவடிவில்கண்டுமகிழலாம்.

இத்தலத்துக்குச்சம்பந்தர்வந்திருக்கிறார், அப்பர்வந்திருக்கிறார். ஆளுக்குஒருபதிகம்பாடிப்பரவிஇருக்கிறார்கள்.

கலைஞானம்கல்லாமே

கற்பித்தானை, கடுநரகம்சாராமே

காப்பான்தன்னை

பலவாயவேடங்கள்தானே

ஆகிப்பணிவார்கட்கு

அங்கங்கேபற்றானானை

சிலையால்புரம்எரித்த

தீஆடியை, திருப்புன்கூர்

மேவியசிவலோகனை

நினைந்துநினைந்துபாடியநாவுக்கரசர்பாட்டுஎவ்வளவோஅரியஉண்மைகளையெல்லாம்வெளியிடுவதாகஇருக்கிறது. அப்பரும்சம்பந்தரும்சும்மாப்பாடிப்பரவுவதோடுநிறுத்தினால்இங்குஎழுந்தருளியசுந்தரர்சிவலோகனுக்குநிலம்சேர்த்துவைக்கவேமுனைந்திருக்கிறார். சோழநாட்டிலேஒருகாலத்தில்பஞ்சம்ஏற்பட்டிருக்கிறது. மழையேபெய்யாமல்வறண்டிருக்கிறது. கோன்நோக்கிவாழும்குடிகள்வான்நோக்கிவருந்திஇருக்கிறார்கள். சோழமன்னன்வேறேதைந்துஉருகியிருக்கிறான். அவன்திருபுன்கூருக்குவந்திருந்தஅன்றேசுந்தரரும்தனதுசுற்றுப்பிரயாணத்தில்அங்குவந்துசேர்ந்திருக்கிறார். அரசனும்குடிகளும்மழைவளம்இல்லாதுநாடுவறண்டிருப்பதைக்கூறுகிறார்கள். ‘சரிபன்னிரண்டுவேலிநிலத்தைக்கோயிலுக்குஎழுதித்தருகிறீர்களா?” என்றுகேட்டிருக்கிறார். அப்படியேஎழுதிக்கொடுத்திருக்கிறான்மன்னன். உடனேபாடியிருக்கிறார்சுந்தரர். அவ்வளவுதான்; மழைபெய்யஆரம்பித்திருக்கிறது. மக்களும்மன்னனும்குதூகலத்தில்ஆழ்ந்திருக்கின்றனர். ஆனால்பெய்யஆரம்பித்தமழைபெய்துகொண்டேயிருக்கிறது. நாள்ஒன்றுஇரண்டுஎனவளர்ந்துபத்துநாட்களாகியும்நிற்கக்காணோம். மழைபோதும்போதும்என்றபின்னும்நிற்காவிட்டால்கஷ்டந்தானே. ‘ஐயனே! மழையைநிறுத்தும்என்றுசுந்தரரிடமேகுறைஇரந்திருக்கிறார்கள். ‘சரி, பெய்யும்மாரியையும்பெருகும்வெள்ளத்தையும்நிறுத்துகிறேன். என்னதருகிறீர்கள்? இன்னுமொருபன்னிரண்டுவேலிநிலம்சிவலோகனுக்குத்தருகிறீர்களா?’ என்றுகேட்டிருக்கிறார். சரி, என்றுதலையசைத்திருக்கிறார்கள்மக்களும்மன்னனும். பாடியிருக்கிறார்சுந்தரர். மழைநின்றிருக்கிறது. மீட்டும்பன்னிருவேலிகிடைத்திருக்கிறதுகோயிலுக்கு. இவ்வளவும்சும்மாகற்பனைக்கதையல்ல, சுந்தரரேசொல்கிறார்:

வையகம்முற்றும்மாமழை

மறந்து, வயலில்நீர்இலை

மாநிலம்தருகோம்

உய்யக்கொள்மற்றுஎங்களை

என்ன, ஒளிகொள்வெண்முகிலாய்

பரந்துஎங்கும்

பெய்யும்மாமழைப்பெருவெள்ளம்

தவிர்த்து, பெயர்த்தும்பன்னிரு

வேலிகொண்டுஅருளும்

செய்கைகண்டுநின்திருவடி

அடைந்தேன், செழும்பொழில்

திருப்புன்கூர்உளானே

என்றபாட்டைவிடஇந்தநிகழ்ச்சிக்குவேறுஎன்னசான்றுவேண்டும்.

இன்னுமொருவரலாறு, இக்கோயிலுக்குஇன்னும்நிலம்சேர்ந்ததற்கு. வீரவிக்ரமசோழன்மகனானசிற்சபேசநடேசன்பிறக்கிறான், வளர்கிறான். (இவனைஎல்லாம்சரித்திரத்தில்தேடக்கூடாது) அவன்திருப்புன்கூரிலுள்ளதேவதாசிசௌந்தரத்தைத்தன்காதல்கிழத்தியாகக்கொண்டுஅவளுடன்வாழ்ந்திருக்கிறான். திருப்புன்கூரைவிட்டுத்திருவாரூர்போகஅவன்விரும்பியபோதுதாசிசௌந்தரம்உடன்செல்லமறுத்திருக்கிறாள். அதனால்மன்னன்தான். அவளுக்குக்கொடுத்தபொருளையெல்லாம்அவள்அறியாமல்கைப்பற்றியிருக்கிறான். கேட்டால்தனக்குஒன்றுமேதெரியாதேஎன்றும்சொல்லியிருக்கிறான். அவள்அப்படியேசத்தியம்செய்துதரச்சொல்லிதிருக்குளத்துக்குஇழுத்திருக்கிறாள். பொய்ச்சத்தியம்பண்ணமுனைந்தமன்னனைப்பாம்பைக்காட்டிப்பயமுறுத்தியிருக்கிறார்சிவலோகன், அதனால்சிற்சபேசன்வேண்டியநிலபுலங்களைக்கோயிலுக்குஎழுதிவைத்து, தன்னைஅண்டியபழியினின்றும்நீங்கியிருக்கிறான்என்றுகதை,

இந்தச்சிவலோகநாதர்இப்படிநிலங்களைச்சேர்த்தாரேதவிர, அவைகளைவைத்துக்காப்பாற்றிக்கொள்ளத்தெரியவில்லை. எப்படியோகோட்டைவிட்டுவிட்டார். அன்றுசுந்தரர்தேடிக்கொடுத்ததும்பின்னர்சிற்சபேசன்எழுதிக்கொடுத்ததுமானநிலங்களெல்லாம்இன்றுதேவஸ்தானத்தின்சொத்தாகஇல்லை. ஏதோதனக்குவேண்டியகொஞ்சநிலங்களையும்புலன்களையும்மாத்திரமேவைத்துக்கொண்டிருக்கிறார். (பின்னால்நிலஉடைமைக்குஉச்சவரம்புவரும், அதுகஷ்டம்தரும்என்பதையெல்லாம்தெரியாமலாஇருந்திருப்பார்!)

திருப்புன்கூர்இறைவனைவழிபட்டுமுத்திபெற்றவர்கள்ஜாபிதாநிரம்பவும்நீளம். சூரியசந்திரர், இந்திரன், பிரம்மா, அகஸ்தியர், அக்கினி, பதஞ்சலிவியாக்கிரபாதர், சப்தகன்னியர்எல்லாம்வழிபட்டுமுத்தியடைந்தனர்என்றுதலபுராணம்கூறும். அறுபத்துமூன்றுநாயன்மார்களில்விறல்மிண்டர், ஏயர்கோன்கலிக்காமர்எல்லாம்இங்குதான்முத்திபெற்றார்கள்என்றும்அறிவோம். இத்தனைதெரிந்தபின்இத்தலம்ஏன்புன்கூர்என்றுபெயர்பெற்றதுஎன்றுதெரியவேண்டாமா? வேறுஒன்றும்இல்லை. புங்கம்செடிகள்நிறைந்தஊர்இது, கரிஞ்சாரண்யம்என்றேஒருபெயர்இவ்வூருக்கு. இந்தஊரின்நிலவளம்ஏன்செழிப்பாயிருக்கிறதுஎன்றுஎனக்குஇப்போதுவிளங்குகிறது. பசுந்தழைஉரத்தில்புங்கன்தழைக்குமேல்நல்லஉரம்கிடையாதே. புங்கமரமேஇங்குதலவிருட்சம். உரம்இருந்தது, உழத்தெரிந்தது. ஆனால்கிடைத்தநிலங்களைக்காப்பாற்றிக்கொள்ளத்தெரியவில்லையேஇந்தச்சிவலோகநாதருக்குஎன்பதேநமதுவருத்தம்.