மாயூரம்நடராஜர்
இருக்கும்இறைவனைவணங்கி, அங்குள்ளஞானமிர்தசரஸ்என்னும்தீர்த்தமும்ஆடியபின்மேலும்நடக்கலாம்மயூரநாதர்கோயிலைநோக்கி.
மயூரதாதர்கோயில்மாயூரநகரின்தென்பகுதியிலேதரங்கம்பாடிரோட்டையொட்டிஇருக்கிறது. இங்குகோயில்கொண்டிருப்பவரைமயிலாடுதுறையார்என்றுகல்வெட்டுக்கள்கூறுகின்றன. அன்னையும்மயிலம்மைதான். அபயாம்பிகை, அஞ்சல்நாயகிஎன்றும்அழைப்பர், இந்தத்தலம்மயூரம்என்றும்இங்குள்ளஇறைவன்மயூரநாதர்என்றும்அழைக்கப்படுவதன்காரணம்தெரியவேண்டாமா? இறைவனைமதியாதுதக்கன்வேள்விசெய்கிறான். தக்கன்மகளாகியஇறைவிதாக்ஷாயணிதந்தையிடம்வாதாடச்செல்கிறாள். அவளையுமேமதிக்கிறானில்லைதக்கன். அவன்செய்யும்சிவநிந்தனையைக்கேட்டுஉலகமேஅஞ்சுகிறது. அப்போதுபக்கத்திலிருந்தமயிலும்அஞ்சிஅம்மையைவந்துஅடைகிறது. அவளும்மயிலுக்குஅபயம்கொடுக்கிறாள்.
பின்னர்தாக்ஷாயணிதக்கனின்வேள்வித்தீயிலேவீழ்ந்துவிடுகிறாள். இறைவன்சங்காரதாண்டவம்ஆடுகிறான். பின்னர்அம்மைவிரும்பிக்காப்பாற்றியமயிலுருவில்அவள்எழுகஎனஅருள்புரிகிறான். அவளுடன்கலைமகளும்அலைமகளுமேமயிலுருப்பெற்றுஎல்லோரும்சேர்ந்துஆடுகின்றனர்இக்காவிரிக்கரையிலே. அம்மைமயிலாய்ஆடியதுறைதான்மயிலாடுதுறை. அம்மைபூஜித்தஇறைவனேமயூரநாதர். அம்மையும்மயூரநாதரும்கோயில்கொண்டிருக்கும்இடமேமயூரம். அஞ்சிவந்தமயிலுக்குஅபயம்கொடுத்தஅன்னையேஅபயாம்பிகை, அஞ்சல்நாயகிஎன்றெல்லாம்தலவரலாறுகூறும். ‘மதிநுதல்இமயச்செல்விமஞ்ஞையாய்வழிபட்டுஏத்தும்இதுதுலாப்பொன்னித்தானம்‘ என்றேபரவுவார்திருவிளையாடல்புராணம்பாடியபரஞ்சோதியார்.
இத்தலத்துக்குச்சம்பந்தர்வந்திருக்கிறார்; அப்பர்வந்திருக்கிறார். அப்பர்இம்மயிலாடுதுறைக்குஒருதனிப்பதிகமேபாடியிருக்கிறார். அதைவிடஅழகாகஎந்தஎந்தத்துறைகளில்எல்லாம்இறைவன்தங்கியிருக்கிறான்என்றநீண்டஜாபிதாவையேகொடுக்கிறார்திருத்தாண்டகத்திலே.
கயிலாயமலைஎடுத்தான்
கரங்களோடுசிரங்கள்உரம்
நெரியக்கால்விரலால்செற்றோன்
பயில்வாயபராய்த்துறை
தென்பாலைத்துறை, பண்டெழுவர்
தவத்துறை, வெண்துறை, பைம்பொழில்
குயில்ஆலந்துறை, சோற்றுத்துறை,
பூந்துறை, பெருந்துறையும்
குரங்காடுதுறையினோடும்
மயிலாடுதுறை, கடம்பந்துறை,
ஆவடுதுறை, மற்றுந்துறை
அனைத்தும்வணங்குவோமே
அப்பருடன்சேர்ந்துஇந்தத்துறைகளிலேநீராடிஇறைவனைவணங்கியபேற்றைநாமும்பெறலாம்தானே. இங்குள்ளகோயில்பெரியகோயிலுமல்ல, சிறியகோயிலும்அல்ல. கருவறையைச்சுற்றியகோஷ்டத்தில், ஆனந்தத்தாண்டவர், கங்காதரர்எல்லாம்கற்சிலைகளாகஉருவாகியிருக்கிறார்கள். திருத்தொண்டர்அறுபத்துமூவரும், கல்லிலும்செம்பிலும்கவினூறஅமைந்திருக்கிறார்கள், செப்புவடிவத்தில்இருப்பவைநல்லஅழகானபடிமங்கள். இந்தக்கோயில்திருவாவடுதுறைஆதீனத்தார்நிர்வாகத்துக்குஉட்பட்டது. இந்தக்கோயிலுக்குள்ஒருசிறுகோயில்குமரனுக்கு. அதற்குக்குமரக்கட்டளைஎன்றுபெயர். இந்தத்தேவஸ்தானம்தருமபுரம்ஆதீனத்தார்நிர்வாகத்தில்இருக்கிறது. அருணகிரியார்இத்தலத்தைரத்தினச்சிகண்டியூர்என்றுகுறிப்பிடுகிறார்.
எழில்வளமிக்குத்தவழ்ந்துஉலாவிய
பொனிநதிதெற்கில்திகழ்ந்துமேவிய
இணையிலிரத்னச்சிகண்டியூர்உறைபெருமாளே!
என்பதுஅருணகிரியார்திருப்புகழ்.
இக்கோயிலில்பதினாறுகல்வெட்டுக்கள்இருக்கின்றன. முதற்குலோத்துங்கன், இரண்டாம்ராஜாதிராஜன், மூன்றாம்குலோத்துங்கன், மூன்றாம்ராஜராஜன்முதலியசோழமன்னரும், சடையவர்மன்சுந்தரபாண்டியமன்னனும்ஏற்படுத்தியநிபந்தங்கள்குறிக்கப்பட்டிருக்கின்றன. மூன்றாம்குலோத்துங்கன், தன்னைக் ‘கோனேரின்மைகொண்டான்வீரராஜேந்திரன்திரிபுவனவீரதேவன்‘ என்றுஅறிமுகப்படுத்திக்கொள்கிறான். குமரகோயிலைப்பற்றியகல்வெட்டுக்கள்இல்லை.
மாயூரத்திலேபார்க்கவேண்டியகோயில்இன்னொன்றும்உண்டு. அதுதான்துலாக்கட்டமண்டபத்துக்குத்தெற்கேயுள்ளவிசுவநாதர்கோயில், இந்தக்காசிவிசுவநாதரும்அவர்துணைவிவிசாலாக்ஷியும்காசிக்குவரஇயலாததமிழ்மக்களைத்தேடி, தமிழ்நாட்டுக்குவந்து, இங்குள்ளஎல்லாக்கோயில்களிலும்இடம்பிடித்துஉட்கார்ந்துகொள்கிறார்கள்; தரிசனமும்கொடுக்கிறார்கள். கங்கையும்யமுனையும்சரஸ்வதியுமேஇங்குவந்துவிட்டார்கள்என்றுதெரிந்தபின், விசுவநாதரும்விசாலாக்ஷியும்இங்குஎழுந்தருளியதில்வியப்பில்லை. இவர்கள்வந்துவிட்டார்களேஎன்றுகாசித்துண்டிவிநாயகர்பூதகணங்கள்எல்லோருமேபுறப்பட்டுவந்துசேர்ந்திருக்கிறார்கள், இந்தக்காவிரிக்கரைக்கு. ஆகவேதுலாக்காவேரிஸ்நானத்துக்குப்போனால்மயிலாடுதுறையார், வழிகாட்டும்வள்ளலார், காசிவிசுவநாதர்எல்லோரையும்கண்டுவணங்கித்திரும்பலாம்.
மாயூரம்வரைபோய்விட்டுஅடுத்துள்ளதருமபுரம்போகாமலும், அங்குள்ளஆதீனத்தார்அவர்களைப்பாராமலும்திரும்பமுடியுமா? தருமைஆதீனம்பழம்பெருமையுடையது. ஸ்ரீவில்லிபுத்தூரில்பிறந்துவளர்ந்தகுருஞானசம்பந்தர்செந்தமிழ்ச்சொக்கரைஆத்மார்த்தமாகப்பூஜைபண்ணி, கமலைஞானப்பிரகாசரிடம்உபதேசம்பெற்று, தருமபுரம்வந்துமடம்நிறுவியர்கள். இம்மடம்நாளும்வளர்ந்துஇன்றுஇருபத்தேழுகோயில்களின்பரம்பரைத்தர்மகர்த்தர்களாகஇருந்துவருகிறார்கள். இப்போதுமடாதிபதியாகஇருந்துஅருளாட்சிசெய்பவர்கள்ஸ்ரீலஸ்ரீசுப்பிரமணியதேசியபரமாச்சாரியசுவாமிகள். அவர்கள்செய்துவரும்அறப்பணிகள்அனந்தம். திருக்குறள்உரைவளம்வெளியிட்டதைத்தொடர்ந்துதிருமுறைகளையெல்லாம்அழகாகஅச்சிட்டுவழங்குகிறார்கள். கல்விகேள்விகளில்சிறந்தரசிகர்அவர்கள். அவர்களைத்தரிசித்து, அவர்களோடுஅளவளாவ, அவர்கள்அருள்பெற, எல்லாம்கொடுத்துவைத்தவர்கள்பாக்கியசாலிகளே. அந்தப்பாக்கியம்நிறையஎனக்குஉண்டு.