தமிழ்நாடு – 45 – வழுவூர் (மாயூரம்)

வழுவூர்கஜசம்ஹாரர்

கவிமணிதேசிகவிநாயகம்பிள்ளைஅவர்கள்பாடியபாடல்களில்பிச்சைக்காரர்கும்மாளம்என்றுஒருபாட்டு, சத்திரத்திலேசாப்பாட்டுச்சாவடியிலேதூங்கும்பிச்சைக்காரர்கள்வாழ்க்கைஎவ்வளவுகவலையற்றவாழ்க்கைஎன்பதைப்படம்பிடித்துக்காட்டுகிறார்கள்கவிமணி. உண்டுவயிறுநிறைந்துஉள்ளக்கவலைஒழித்துநிற்கும்அவர்கள்வாழ்வுசிறந்ததுஎன்றேசொல்கிறார்கள். அவர்கள்கற்பனையில்உருவானபிச்சைக்காரர்போடும்கும்மாளத்தைத்தான்பாருங்களேன்.

ஆலமரத்தின்நிழல்இதுவேநல்ல

ஆயிரங்கால்எழுமண்டபமாம்

சாலவேதங்கும்பறவையெலாம்அதில்

சங்கீதம்பாடிடும்பாடகராம்.

என்றெல்லாம்பெருமிதத்துடன்பாடும்பிச்சைக்காரர்கள்கடைசியில்,

ஆதிசிவனும்ஓர்ஆண்டியடாஅவர்க்கு

அன்பானபிள்ளைகள்நாமேயடா

ஓதுமெய்ஞ்ஞானியார்யாவருமேநமக்கு

உற்றஉறவினர்ஆவாரடா

என்றுஇறைவனோடேயேஉறவுகொண்டாடஆரம்பித்துவிடுகிறார்கள். இந்தப்பாட்டைப்படித்தநான்எண்ணுவதுண்டு: உண்மைதானே. பணக்காரரில்பணக்காரனாகஇருக்கும்இறைவனேபின்னர்மிக்கஎளியவனாகப்பிச்சைக்காரரில்பிச்சைக்காரனாகவும்இருக்கிறானேஎன்று. கற்பனைகற்பிக்கும்கடவுளாகஉருப்பெற்றவர்கள்தான்எத்தனைஎத்தனையோபேர்? நடனராஜனாக, நீலகண்டனாக, சந்திரசேகரனாக, திரிபுராந்தகனாக, கஜசம்ஹாரனாக, எல்லாம்இறைவனைக்கற்பனைபண்ணியிருக்கிறார்கள். அப்படிக்கற்பனைபண்ணியகலைஞர்கள்தாம்பின்னர்பிக்ஷாடனாகவும்கற்பித்திருக்கிறார்கள்.

இப்படிஇறைவனையேபிச்சைக்காரனாகக்கற்பனைபண்ணுவதற்குஎத்தனைதுணிச்சல்இருக்கவேண்டும்இவர்களுக்கு. நாள்தவறாமல்நாம்இறைவனிடம்கேட்கும்பிச்சைகள்அனந்தம். பொன்வேண்டும், பொருள்வேண்டும், மண்வேண்டும், மனைவேண்டும், மக்கள்சுற்றம்எல்லாம்நிறையவேண்டும்வேண்டும்எனத்தினசரிபிச்சைகேட்டுநிற்கும்மனிதன்அத்தனையும்கொடுக்கும்இறைவனையேபிச்சைக்காரனாகக்கற்பனைபண்ணுவதுஎன்றால்அதைஎன்னஎன்றுகூறுவது? அப்படிஅவன்நம்மிடம்என்னபொருளைத்தான்பிச்சையாகக்கேட்கிறான்? நாமோஉள்ளத்தில்உறுதிஇல்லாதுஇறைவனிடமிருந்துஅகன்றுஅகன்றேஓடுகிறோம். அவனோஅளப்பரியகருணையோடுநம்மைத்தொடர்ந்தேவருகிறான். நம்மிடம்நமதுஅன்பைப்பிச்சைகேட்கிறான். அப்படிஅன்பையும்ஆணவத்தையும்நம்மிடமிருந்துபெற்றுக்கொண்டுநமதுவினைகளையெல்லாம்களைகிறான். சாயுஜ்ஜியத்தையேஅருளுகிறான். ‘சொல்லாதனஎல்லாம்சொல்லிநம்மைத்தொடர்ந்துஆட்கொண்டுபொல்லாவினைதீர்க்கும்புண்ணியனாகஅல்லவாஉருப்பெற்றுவிடுகிறான்இந்தஇறைவன். இப்படிஒருகற்பனை. இந்தஅதீதகற்பனைக்குஒருஉருவம்கொடுத்துவிடுகிறார்கள்நம்கலைஞர்கள். அவனேபிக்ஷாடனன். இந்தப்பிக்ஷாடனன்அநேகமாய்ப்பழம்பெருமையுடையசிவன்கோயில்களில்எல்லாம்இருப்பவன். ஆனால்அவனதுசிறந்ததிருஉருவைக்காணவேண்டுமென்றால்நாம்போகவேண்டுவதுஅந்தஅட்டவீரட்டத்தலங்களில்ஒன்றானவழுவூருக்கே. வழிவழுவாதுஅங்கேயேசெல்கிறோம்நாம்இன்று.

மாயூரம்திருவாரூர்ரோட்டில், மாயூரத்திலிருந்துஆறுமைல்தெற்கேவந்துஅதன்பின்ஒருமைல்மேற்குநோக்கிக்சென்றால், இந்தவழுவூர்சென்றுசேரலாம். ரயிலிலேயேபோனால்இலந்தங்குடிஸ்டேஷனில்இறங்கிஆறுபர்லாங்குநடந்துசெல்லவேண்டும். பிரளயகாலத்தில்உலகமெல்லாம்அழிந்தபோதும்இவ்வூர்அழியாதுவழுவினகாரணத்தால்வழுவூர்என்றபெயர்நிலைத்ததாகத்தலபுராணம்கூறுகிறது. பலதலங்களின்நடுவில்கைலாயம்போல்இருப்பதால்பரகைலாசம்என்றும், தன்னைஅடைந்தவர்களுக்குஎல்லாம்சிவஞானத்தைஅருள்வதால்ஞானபூமிஎன்றும்பெயர்கள்வழங்குகின்றன.

வடமொழியிலேசுயுதபுரிஎன்றும்பிப்பலாரண்யம்என்றும்கூறப்படுகிறது. இங்குள்ளகோயில்நல்லபெரியகோயில். கோயில்வாயிலைநூற்றுஐம்பதடிவரைஉயர்ந்தகோபுரம்அழகுசெய்கிறது. கோபுரத்தைக்கடந்துசென்றால், ஈசானதீர்த்தம்என்னும்திருக்குளம்இருக்கிறது. இதனைவலம்வந்தேகோயிலுள்நுழையவேண்டும். கோயிலின்தென்வடல் 342 அடியும்கிழமேல் 380 அடியும்உள்ளமதிலால்சூழப்பட்டிருக்கிறது. கோயிலின்மூன்றாவதுவாயிலையும்கடந்துதான்மகாமண்டபம்வந்துசேரவேண்டும். அங்குவந்துவடக்கேதிரும்பினால்இரும்புக்கிராதியிட்டஒருமேடைமீதுமுன்னர்குறித்தபிக்ஷாடனர்நின்றுகொண்டிருப்பார். சோழர்காலத்துச்செப்புப்படிமங்களில்சிறந்தஒன்றுஅது. மூன்றடிக்குமேல்உயர்ந்ததிருஉரு. அடியில்கொடுத்தபாதுகையைப்பார்த்தால், எங்கோஅவசரமாகச்செல்லும்வேகம்தெரியும். கையிலேபிக்ஷைப்பாத்திரம்ஏந்தியநிலை. அந்தநிலையிலும்மானுக்குப்புல்லளிக்கமறக்கவில்லைஇறைவன். ஆம். கல்லினுள்சிறுதேரைக்கும், கருப்பைஅண்டத்துஉயிர்க்கும்உணவுஅளித்துக்காக்கும்கருணையுடையவன்அல்லவாஅவன்.

மற்றொருபக்கத்திலேபூதகணம்ஒன்றும்தலையில்ஏந்தியபாத்திரத்துடன்நிற்கிறது. அரையைச்சுற்றிப்பன்னகம், தலையைச்சுற்றிஅழகானகிரீடம், ஆடை. அணிகள்எல்லாம்இல்லாமல்நிர்வாணகோலத்தில்நிற்கிறார்அவர். பிக்ஷாடனரின்தத்துவத்தைத்தான்இவர்உரு

வழுவூர்பிக்ஷாடனர்

எடுப்பதற்குரியபுராணவரலாற்றிலிருந்துதெரிந்துகொள்ளலாமே. தாருகவனத்திலேஉள்ளமுனிவர்கள்சகலகலைகளிலும்வல்லவர்கள் . அதனால்தருக்கித்திரிந்தவர்கள் . இவர்கள்ஆணவத்தைஅடக்கவேபுறப்பட்டிருக்கிறார்சிவபெருமான். உடன்வந்திருக்கிறார்மகாவிஷ்ணு . இருவருமேதங்கள்உருவத்தைமறைத்துக்கொண்டேவந்திருக்கிறார்கள். ஆடைஅணியாதஆண்அழகனாகப்பிக்ஷைப்பாத்திரம்ஏந்திப்புறப்பட்டிருக்கிறார்சிவபெருமான். இவரதுஅழகில்மயங்கிநிறைஅழிந்துநிற்கின்றனர்ரிஷிபத்தினிகள், மகா. விஷ்ணுவோகாண்பவரைமயக்கும்மோஹினியாகவந்திருக்கிறார். அவரைத்தொடர்ந்துநடந்திருக்கிறார்கள்முனிபுங்கவர்கள், (ஆம், அன்றுமாறுவேடப்போட்டிஎன்றுஒன்றுநடந்திருந்தால்இவர்கள்இருவருமேமுதல்பரிசு, இரண்டாம்பரிசுஇரண்டையும்தட்டிக்கொண்டுபோயிருப்பார்கள்போலிருக்கிறது!) இப்படிஇந்தமுனிவர்கள், அவர்களதுதுணைவியர்கர்வத்தைஅடக்கி, அவர்கள்அன்பையும்ஆணவத்தையும்பிச்சையாகப்பெற்றுஅவர்களைஉய்வித்திருக்கிறான்இறைவன்என்பதுகதை, நல்லரஸமானகதைதான். பிக்ஷாடனரைப்பார்த்தகண்கொண்டேமோகினிஅவதாரத்தையும்செப்புச்சிலைவடிவில்அந்தமேடையிலேயேபார்த்துவிட்டுநடக்கலாம்.

இந்தமண்டபத்தைக்கடந்துஅடுத்தகட்டுக்குச்சென்றால்அங்குள்ளஞானசபையிலேகம்பீரமாகக்காட்சிகொடுப்பவர்கஜசம்ஹாரர். ஒருகாலத்தில்யானைவடிவுகொண்டகஜாசுரன்என்பவன்பிரமனைநோக்கித்தவஞ்செய்துஅரியவரங்களைப்பெற்றுத்தேவர்களையும்முனிவர்களையும்துன்புறுத்தியிருக்கிறான். தேவர்களும்முனிவர்களும்முறையிடஇறைவன்கஜாசுரனுடன்போர்ஏற்று, அவன்உடல்கிழித்து, அந்தயானையின்தோலையேபோர்வையாகப்போர்த்துக்கொண்டிருக்கிறார். இங்குள்ளகஜசம்ஹாரர்மூன்றுநான்குஅடிஉயரத்தில்அற்புதமாகஉருவாகியிருக்கிறார். மேலைநாட்டுக்கலைஉலகிலேபிரசித்திபெற்றஒன்றுலாவக்கூன்என்னும்சிலை. ஒருதந்தையையும்அவன்மக்கள்இருவரையும்இரண்டுமலைப்பாம்புகள்சுற்றிக்கொள்ளஅந்தப்பிடியிலிருந்துமீளத்தந்தையும்மக்களும்திருகிக்கொண்டுதவிப்பதைஉருவாக்கியிருக்கிறான்சிற்பி. இந்தச்சிற்பிவடிவத்தின்முதுகுக்குமண்காட்டியிருக்கிறதுஇந்தக்கஜசம்ஹாரசெப்புச்சிலைவடிவம். யானையின்உள்ளேபுகுந்துதிருகிக்கொண்டுவரும்மூர்த்தியின்முன்பாகமும்பின்பாகமும்தெரியும்படிஅல்லவாசிற்பிவடித்திருக்கிறான். என்னஅற்புதமானவடிவம்! பக்கத்திலேஅஞ்சிஒடுங்கும்அன்னை. அந்தஅன்னையின்கரத்திலேதந்தையின்வெற்றிகண்டுமகிழும்குழந்தைமுருகன். எல்லோருமேஉருவாகியிருக்கிறார்கள்செப்புச்சிலைவடிவில், இந்தக்கஜசம்ஹாரமூர்த்தத்தையேகபிலபரணரும், சமயகுரவர்மூவரும்பாடியிருக்கிறார்கள்.

பேரானைஈர்உரிவைப்

போர்த்தானை, ஆயிரத்துஎண்

பேரானைஈர்உருவம்

பெற்றானைப்பேராநஞ்சு

உண்டானை, உத்தமனை

உள்காதார்க்குஎஞ்ஞான்றும்

உண்டாநாள்அல்லஉயிர்

என்றுசங்கப்புலவர்பாடிமகிழ்ந்தால்,

விரித்தபல்கதிர்கொள்சூலம்

வெடிபடுதமருகங்கை

தரித்ததோர்கோலகால

பயிரவனாகிவேழம்

உரித்துஉமைஅஞ்சக்கண்டு

ஒண்திருமணிவாய்விள்ளச்

சிரித்துஅருள்செய்தார்சேறைச்

செந்நெறிச்செல்வனாரே

என்றுஅப்பர்பாடுகிறார். இப்படிக்கவிதைவளர்த்தகலையாக, கஜசம்ஹாரர்நிற்கிறார்இக்கோயில்உள்ளே.

இந்தப்பிக்ஷாடனர், கஜசம்ஹாரரையெல்லாம்பார்த்தபின்இங்குபார்க்கவேண்டியவைஒன்றுமேஇராது. செப்புவடிவத்தில்இருக்கும்நடராஜர்அவ்வளவுஅழகானசிற்பம்இல்லை, அவரையும்தரிசித்துவிட்டுலிங்கஉருவில்இருக்கும்மூலவரைத்தரிசிக்கலாம். இந்தமூலமூர்த்தியேவிரட்டேசுவரர். வடமொழியில்கிருத்திவாஸேசுவரர்என்பர். அதற்குயானையின்தோலைப்போர்த்திஅருளியவர்என்றுதான்அர்த்தம். இங்குஅம்மன்சந்நிதிகோயிலின்வடபக்கத்தில்தனித்திருக்கிறது. இவளையேபாலகுராம்பிகைஎன்றும்இளங்கிளைநாயகிஎன்றும்கூறுவார்கள். இளங்கிளைஎவ்விதம்அழகுவாய்ந்ததாகவும், வளர்ச்சிஉடையதாகவும்காணப்படுகிறதோஅவ்வாறேஉலகத்தில்உயிர்களைத்தோன்றச்செய்துஅவைவளர்ச்சிஅடையஅருளுகிறாள்என்பதுபொருள். இவளுக்கேகிருபாவதிஎன்றபெயரும்உண்டு. இன்னும்இத்தலம்தீர்த்தவிசேஷத்தாலும்சிறப்புற்றது. இறைவனுக்குஐந்துமுகங்கள்என்பார்கள். ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியயோசாதம்என்பவைஅவைஎன்றும்விளக்குவார்கள். இந்தஐந்துமுகங்களின்பேராலும், ஐந்துதீர்த்தங்கள்இக்கோயிலையொட்டிஉருவாகியிருக்கின்றன. போதியஅவகாசத்தோடுகோயிலுக்குப்போகிறவர்கள்இத்தீர்த்தங்களில்நீராடி, புராணங்களில்சொல்லியிருக்கின்றஅத்தனைபலன்களையுமேபெறலாம். மாசிமகத்தன்றுஇக்கோயிலில்பெரியவிழாநடைபெறுகிறது. அன்றுஉதயத்தில்தான்கஜசம்ஹாரவிழாநடனக்காட்சி. மார்கழித்திருவாதிரைஅன்றுமேகஜசம்ஹாரநடனம்சிறப்பாகநடைபெறும். திருவாதிரைக்குமுந்தியநாள்புனர்பூசத்தில்கஜசம்ஹாரரைவெண்மையாகஅலங்காரம்செய்துபக்தர்கள்கண்குளிரக்காண்பார்கள். கோயில்நிரம்பவருவாயுள்ளபெரியகோயில்அல்ல; என்றாலும்இந்தஇறைவன்ஏழையுமன்று, இந்தவீரட்டானேசுவரருக்குவருஷத்துக்கு 5000 கலம்நெல்கிடைக்கிறது. ரூ.2000 ரொக்கமாகவேறேவருகிறது. போதாதா, நெல்லுக்குநல்லவிலைஇருக்கும்இக்காலத்தில்?

இதில்பதினைந்துகல்வெட்டுக்கள்உண்டு. கல்வெட்டுக்களில்இவ்வூர்வழுகூர்என்றுஇருக்கிறது. திருவழுதூர்நாடுஎன்றும், ஜயங்கொண்டசோழமண்டலத்தைச்சேர்ந்ததென்றும்குறிக்கப்பெற்றிருக்கிறது. இத்தலத்துஇறைவனைவீரட்டானாம்உடையார், வழுவூர்நாயனார்என்றெல்லாம்கல்வெட்டுகள்கூறுகின்றன. கோயிலில்விளக்கிட, திரும்வெம்பாவைஓதஎல்லாம்நிபந்தங்கள்ஏற்பட்டிருக்கின்றன. மதில், கோபுரம்முதலியவற்றைஅழகப்பெருமாள்பிள்ளைகட்டியதுஎன்றும்அறிகிறோம். இரண்டாம்ராஜராஜன், மூன்றாம்குலோத்துங்கன்காலத்தில்பலநிபந்தங்கள்ஏற்பட்டிருக்கின்றன. மூன்றாம்குலோத்துங்கன்காலத்தில்தான்அம்பிகையின்கோயில்கட்டப்பட்டதுஎன்றுஒருகல்வெட்டுக்கூறுகிறது. விஜயநகரமன்னன்வீரபொக்கண்ணஉடையார்காலத்தில் 1324ல்காவிரிவெள்ளத்தால்சேதம்அடைந்தநிலங்களுக்குத்தீர்வைவஜாஆகியிருக்கிறது.

முன்னர்எல்லாம்இக்கோயிலுக்குள்சென்றால்பிக்ஷாடனர், கஜசம்ஹாரர், மோஹினிமுதலியதிருவுருவங்களின்வஸ்திரங்களைக்களைந்துமூர்த்திகளின்வண்ணத்தைக்காட்டமாட்டார்கள்அர்ச்சகர்கள். இக்கோயிலில்இருபதுவருஷகாலமாகஇருந்தஒருதருமகர்த்தருக்கு, கஜசம்ஹாரர்பக்கத்தில்உள்ளஅன்னையின்இடையில்முருகன்இருக்கிறான்என்பதேதெரியாதாம். காரணம், அன்னையையும்குமரனையும்சேர்த்தேசேலைகட்டிவைத்திருக்கிறார்கள். இப்போதெல்லாம்அத்தனைகெடுபிடிபண்ணுகிறதில்லைஅர்ச்சகர்கள். விரும்பினால்கஜசம்ஹாரரின்முழுக்கோலத்தையும்காட்டுவார்கள். அன்னையைக்காட்டுவார்கள், முருகனையுமேகாட்டுவார்கள். கண்டுதொழுதுகலைஅறிவுபெற்றுத்திரும்பலாம்நாம். நடனஉலகில்பிரசித்திபெற்றஆசிரியர்வழுவூர்ராமையாபிள்ளைஎன்பதுதெரியும். கஜசம்ஹாரநடனம்நடந்தஇடத்தில்பிறக்கும்பாக்கியம்பெற்றவர்சிறந்தநடனஆசிரியராகப்பணியாற்றுவதுவியப்பில்லை. வழுவூரால்அவர்பிரசித்திபெற்றிருக்கிறார். ஏன்? ராமையாபிள்ளையாலுமேவழுவூர்இன்றுகலைஉலகில்பிரசித்திபெற்றதாகத்தானேஇருக்கிறது.