தமிழ்நாடு – 46 – திருச்செங்காட்டாங்குடி

செங்காட்டாங்குடிஉடையான்

திருத்தொண்டர்பெரியபுராணம்எழுதியவர்சேக்கிழார். அறுபத்துமூன்றுநாயன்மாரதுசரித்திரத்தைவரலாற்றுமுறையில்எழுதியிருக்கிறார். தெய்வம்மணக்கும்செய்யுள்களில்சிறந்தபக்திச்சுவைநனிசொட்டச்சொட்டக்கதைகளைச்சொல்கிறார்அவர். அந்தப்புராணத்தில்வரும்நாயன்மார்கள்எல்லோருமேஅவரவர்கடைப்பிடித்தகாரியத்தில்எத்தனைஇடையூறுவந்தாலும்அத்தனைக்கும்ஈடுகொடுத்து, வெற்றிகண்டவர்கள். செயற்கரியசெயல்கள்பலசெய்தவர்கள். இவர்களில்திருத்தொண்டின்உறைப்பிலேதலைநின்றவர்சிறுத்தொண்டர். அவரதுவரலாறுரஸமானது . ஏன்! கொஞ்சம்பயங்கரமானதும்கூட.

பல்லவமன்னன்மகேந்திரவர்மன்படைவீரர்களில்ஒருவராகச்சேர்ந்துபடிப்படியாகஉயர்ந்துசேனாதிபதியாகஉத்தியோகம்ஏற்கிறார்பரஞ்சோதி. மகேந்திரவர்மனதுமகனானநரசிம்மன்என்னும்மாமல்லனுக்குஉற்றதுணைவனாகப்பணியாற்றுகிறார். காஞ்சிவட்டாரத்தில்சளுக்கமன்னன்புலிகேசிசெய்தஅட்டூழியங்களுக்குப்பழிவாங்க, மாமல்லன்சளுக்கர்கள்மீதுபடையெடுத்துச்சென்றபோது, படையைமுன்னின்றுநடத்தியவீரர்பரஞ்சோதி, சளுக்கர்தலைநகரமானவாதாபியைத்தீக்குஇரையாக்கிவெற்றிகண்டார்.

மன்னவர்க்குத்தண்டுபோய்,

வடபுலத்துவாதாவித்

தொன்னகரம்துகளாகத்

துணைநெடுங்கைவரைஉகைத்து,

பன்மணியும்நிதிக்குவையும்

பகட்டினமும்பரித்தொகையும்

இன்னனஎண்ணிலகவர்ந்தே

இகலரசன்முன்கொணர்ந்தார்

அவர், என்றுசேக்கிழார்பாராட்டுகிறார். இப்படிப்போருக்குச்சென்றுவீரர்எல்லாம்பலப்பலபொருள்கள்கொண்டுவர, சேனாதிபதிபரஞ்சோதியார்மட்டும்வாதாபிக்கோட்டைவாயிலில்இருந்தகணபதியைக்கைப்பற்றிக்கொணர்ந்துதம்சொந்தஊராகியதிருச்செங்காட்டாங்குடியில்ஒருகோயில்கட்டிப்பிரதிஷ்டைசெய்துவிடுகிறார். வாதாபிப்போரில்இருதரத்துமக்களும்மற்றஉயிரினங்களும்பட்டதுயரையெல்லாம்அறிந்துஅன்றேசேனாதிபதிப்பதவியைஉதறிவிட்டு, துறவுபூண்டுதம்ஊரிலேயேதங்கிவிடுகிறார், மனைவிவெண்காட்டுநங்கையுடனும், மைந்தன்சீராளனுடனும். இப்படித்தான்தம்பெருமான்திருத்தொண்டர்சிறுத்தொண்டர்என்றபெயரோடுவாழ்ந்துவருகிறார்செங்காட்டாங்குடியில்.

இவரதுதொண்டின்சிறப்பைஉலகுக்குஉணர்த்தவிரும்புகிறான்இறைவன். பைரவவேடத்துடன்வந்துசேருகிறான். சிறுத்தொண்டரிடம்தன்னைஉத்தராபதியான்என்றுஅறிமுகம்செய்துகொள்கிறான். அமுதுசெய்தருளவேண்டும்என்றுகேட்டசிறுத்தொண்டரிடம், ‘ஒருதாய்க்குஒருமகனாக, அங்கம்பழுதில்லாதமைந்தன்ஒருவனை, அறுத்துக்கறிசமைத்துத்தந்தால்உண்போம்என்கிறான். பள்ளிசென்றபாலனாம்சீராளனையேஅழைத்துவந்து, சிறுத்தொண்டரும், வெண்காட்டுநங்கையும்அரிந்துகறிசமைக்கிறார்கள். உத்தராபதியாரைஉள்ளேஅழைக்கிறார்கள். எழுந்தருளியஅவரோ, உடன்உண்ணப்பிள்ளையைஅழைக்கவேண்டுகிறார். ‘இப்போதுஅவன்உதவான்என்றுசொல்லிப்பார்த்தும்கேளாததால், அவர்விரும்பியபடியேவெளியேசென்றுமைந்தா! வருவாய்என்றுஅழைக்கிறார்சிறுத்தொண்டர். நங்கையும், ‘செய்யமணியேசீராளா! வாராய்சிவனார்அடியார்யாம்உய்யும்வகையால், உடன்உண்ணஅழைக்கின்றார்என்றேஓலமிடுகின்றாள். அப்பொழுதேசீராளன்பள்ளியிலிருந்துஓடிவருபவன்போலஓடிவருகிறான். வந்தஉத்தராபதியாரும்மறைந்துரிஷபாரூடராகக்காட்சிஅளிக்கிறார். என்னேஇவர்தம்திருத்தொண்டின்உறைப்பு? வாளால்தன்மகவையேஅரிந்துசிவனடியாருக்குஊட்டமுனைகின்றதொண்டுஎவ்வளவுசிறந்தது? இப்படித்தொண்டுசெய்தவர்தான்சிறுத்தொண்டர்என்னும்அரியபெரியதொண்டர். அவர்பிறந்துவளர்ந்தபதியேதிருச்செங்காட்டாங்குடி. அந்தப்பழங்குடிக்கேசெல்கிறோம்நாம்இன்று.

திருச்செங்காட்டாங்குடி, தஞ்சைஜில்லாவில்திருவாரூர்மாயூரம்ரயில்பாதையில்நன்னிலம்ஸ்டேஷனுக்குக்கிழக்கேஏழுமைல்தொலைவில்இருக்கிறது. ஸ்டேஷனிலிருந்துவண்டிவைத்துக்கொண்டுசெல்லலாம். தஞ்சைஜில்லாவில்மொட்டைமாடுகள்பூட்டியவில்வண்டிகள்தான்பிரசித்தமானவைஆயிற்றே. இல்லை, கார்வசதிஉடையவர்கள்எல்லாம்அந்தநன்னிலம், நாகப்பட்டினம்சாலையில்திருப்புகலூர்போய்முடிகொண்டான்ஆற்றின்மீதுசமீபகாலத்தில்கட்டியிருக்கும்பாலத்தைக்கடந்துகண்ணபுரம்வழியாய்ப்போகலாம். இந்தத்திருப்புகலூர்,கண்ணபுரத்தில்உள்ளகோயில்களுக்குமேநாம்இனிப்போகப்போகிறோம். ஆதலால்நேரேவிறுவிறுஎன்றுவண்டியையோகாரையோநன்னிலம்ஸ்டேஷனுக்குநேர்கிழக்கேஎட்டுமைல்தொலைவில்உள்ளதிருமருகலுக்கேதட்டிவிடலாம். அதுதானேசெங்காட்டாங்குடிக்குப்பழையபாதை. செங்காட்டாங்குடிபோகுமுன்திருமருகலில்கோயில்கொண்டிருக்கும்மாணிக்கவண்ணரையும், வண்டுவார்குழலியையுமேதரிசித்துவிடலாம். இந்தமருகலுக்குவந்துஇறைவனைவணங்கியஅப்பர்,

பெருகலாம்தவம்; பேதமைதீரலாம்;

திருகலாகியசிந்தைதிருத்தலாம்;

மருகலாம்பரம்ஆயதோர்ஆனந்தம்;

மருகலான்அடிவாழ்த்திவணங்கவே

என்றுபாடியிருக்கிறாரே. தவத்தால்பெறும்பேற்றையும், பேதைமைதீர்வதையும்விடதிருகிக்கொண்டேஇருக்கும்சிந்தனையையேதிருத்திக்கொள்ளலாம்என்றல்லவாகூறுகிறார்அப்பர். திருகுசிந்தையைத்திருத்தத்தெரியாமல்தானேபெரியஅவதிக்குஉள்ளாகிறோம்நாம். ஆதலால்மருகல்சென்றுதிருகும்சிந்தையைத்திருத்திக்கொண்டபின்னரேமேல்நடக்கலாம். மருகல்கோயிலில்இறைவன்இருப்பதுஒருகட்டுமலைமேலே. சோழன்செங்கணான்கட்டியமாடக்கோயிலில்ஒன்றுஇது. இங்கிருக்கும்மாணிக்கவண்ணர்சுயம்புமூர்த்தி. இம்மூர்த்திநல்லவரப்பிரசாதிஎன்பதைவிஷம்தீண்டிஇறந்தசெட்டிப்பிள்ளையைஞானசம்பந்தர்உயிர்ப்பித்தருளியகதையிலிருந்துதெரிந்துகொள்கிறோம். கதைஇதுதான். செட்டியார்மரபைச்சேர்ந்தஇளைஞன்ஒருவன். அவன்மாமன்மகளைவேறுஒருவனுக்குக்கட்டிக்கொடுக்கஅவளதுபெற்றோர்முனைகின்றனர். ஆனால்காளையும்கன்னியுமோநல்லஇளங்காதலர்கள். ஆதலால்அவன்தன்காதலியைக்கூட்டிக்கொண்டுஊரைவிட்டேபுறப்படுகிறான். மருகல்வந்துஇரவில்ஒருதிருமடத்தில்தங்குகிறார்கள்இருவரும். இளைஞனைஅன்றிரவுபாம்புதீண்டிவிடுகிறது. அவன்உயிர்துறந்துவிடுகிறான். செட்டிப்பெண்ணோகதறித்துடிக்கிறாள். அப்போதுஞானசம்பந்தர்அந்தத்தலத்துக்குவந்துசேருகிறார். பெண்ணின்துயரைஅறிகிறார், பாடுகிறார்;

கடையனாய்எனுமால், சரன்நீஎனுமால்விடையாய்எனுமால், வெருவாவிழுமால்

மடையார்குவளைமலரும்மருகல்

உடையாய்தகுமோஇவள்உள்மெலிவே?

என்றுதான்கேட்கிறார்மருகல்உறைமாணிக்கத்தை. விடம்தீண்டியசெட்டிஉயிர்பெற்றுவிடுகிறான். (அன்பர்கள்கேட்கலாம். காதலரின்உடன்போக்குக்குஇறைவனும்அடியாரும்துணைநிற்கிறார்களே, ஆதலால்உடன்போக்கில்ஈடுபடுவர்களைஉற்சாகப்படுத்தலாம்போல்இருக்கிறதேஎன்று. உற்சாகப்படுத்தலாம். ஆனால்ஒன்றுமட்டும்ஞாபகம்இருக்கவேண்டும். இடையில்துயர்வரும்என்பதும், அத்துயர்துடைக்கஇப்போதெல்லாம்ஞானசம்பந்தரைப்போன்றஅடியார்கள்கிடையாதுஎன்பதும்) மருகல்கோயிலில்பார்த்துஅனுபவிக்கவேண்டியசிற்பவடிவங்கள்இல்லை. ஆனால்தெற்குவாயிலுக்குஎதிர்புறம்சீராளன்படித்தபள்ளிஇருக்கிறது. அந்தப்பள்ளியில்இன்றையதேவஸ்தானம்ஆபீஸ்இருக்கிறது. அதையும்பார்த்துவிட்டுமேற்குநோக்கிஇரண்டுமைல்சென்றால்செங்காட்டாங்குடிவந்துசேரலாம். (ஒரேஒருஎச்சரிக்கை. மழைகாலத்தில்வண்டியோ, காரோஒன்றும்போகாது. நடந்துதான்போகவேண்டும். ஆகையால்நல்லவேனிற்காலத்திலேயேபோய்த்திரும்பலாம். ஆம். சித்தரைப்பரணியில்தானேஅங்குஅமுதுபடையல்விழா. அதற்குப்போனால்போகிறது)

தூரத்தில்வரும்போதேகோபுரம்தெரியும். அதனால்நேரேகோபுரத்தைநோக்கியேநடந்துவிடக்கூடாது. கோபுரம்எப்போதுகீழேவிழுவோம்என்றுகாத்துக்கொண்டிருப்பதால்வாயிலைநன்றாகச்சுவர்வைத்துஅடைத்திருக்கிறார்கள். கோபுரவாயிலுக்குவடபக்கத்தில்மதிலைவெட்டிஒருபாதைஅமைத்திருக்கிறார்கள். நாம்அந்தப்பாதையைக்கூடவிட்டுவிடலாம். தெற்குவீதிக்கேசென்றுஅந்தத்தெற்குவாயில்வழியாகவேகோயிலுக்குள்செல்லலாம். அந்தவாயிலுக்குஎதிரேநம்மைஎதிர்நோக்கியேநிற்கிறாள்வாய்த்ததிருக்குழலி. அவளைக்கண்குளிரத்தரிசித்துவிட்டேஅப்பர்.

முருகுவிரிநறுமலர்மேல், மெய்த்தவத்தோர்

துணையை, வாய்த்த

திருகுகுழல்உமைநங்கைபங்கன்தன்னை

செங்காட்டாங்குடியதனில்கண்டேன்யானே

என்றுபாடியிருக்கிறார். நாமும்அவருடன்சேர்ந்தேபாடிவாய்த்ததிருக்குழலியைவணங்கியபின்உள்ளேசெல்லலாம். இனிமேற்குநோக்கிநடந்துமகாமண்டபத்தையும்கடந்துஅர்த்தமண்டபத்துக்குச்சென்றுகோயிலுள்இருக்கும்இறைவனையும்வணங்கலாம். வணங்கும்போதேஓதுவார்ஒருவர்ஞானசம்பந்தர்பாடியபதிகத்திலிருந்து,

நுண்ணியான், மிகப்பெரியான்,

நோவுஉளார்வாய்உளான்,

தண்ணியான், வெய்யான்,

தலைமேலான், மனத்துளான்,

திண்ணியான்செங்காட்டாங்

குடியான், செஞ்சடைமதியக்

கண்ணியான், கண்ணுதலான்

கணபதீச்சுரத்தானே,

என்றபாட்டைப்பாடுவார். இந்தச்செங்காட்டாங்குடியுடையானைக்கணபதீச்சுரத்தான்என்றுகூறுவானேன்? என்றுகேட்கத்தோன்றும்நமக்கு. கஜமுகாசுரன்என்பவன்தேவர்களுக்குஇடுக்கண்செய்ய, அவனைஒழித்துக்கட்டசிவகுமாரரானவிநாயகர்யானைமுகத்துடன்அவதரித்துஅவனைச்சம்ஹரித்திருக்கிறார். இந்தக்கஜமுகாசுரனைசம்ஹரித்தபோதுஅவனதுஇரத்தம்செங்காடாய்ப்பெருகியகாரணத்தால்செங்காட்டாங்குடிஎன்றபெயர்நிலைத்திருக்கிறது. இந்தப்பழிநீங்கஇத்தலத்தில்இறைவனைக்கணபதிவழிபட்டகாரணத்தால்தானோஎன்னவோ, வாதாபிகணபதியும், தமிழ்நாட்டுக்குள்முதல்முதல்இந்தத்தலத்திலேயேபுகுந்திருக்கிறார். சேனாபதியார்பரஞ்சோதியார்துணைகொண்டு. இன்னும்இத்தலத்துக்குஎத்தனைஎத்தனையோபெயர்கள். அத்தனையையும்விவரிக்கப்புகுந்தால்அதுவேஒருபெரியராமாயணம்ஆகும்.

கணபதீச்சுரத்தானைவணங்கிக்கொண்டுநிற்கும்போதேபக்கத்தில்ஒருவர்வந்துநிற்பார். அவர்யாரென்றுஉற்றுநோக்கினால்அவரேசிறுத்தொண்டர்என்றுஅறிவோம். கூப்பியகையோடு, தம்மனைவிவெண்காட்டுநங்கை, பையன்சீராளன்எல்லோரையும்கூட்டிக்கொண்டேவந்திருப்பார்அவர்! ஆம். செப்புச்சிலைவடிவத்தில்தான். அவரதுமுகத்திலோசாந்திதவழும். பணிவும்லளிதமும்ஒருங்கேதோன்றக்கைகூப்பிநிற்கும்கோலம்அழகுவாய்ந்தது. பிள்ளைக்கறியமுதுக்கதையைப்பற்றிக்கொஞ்சம்நஞ்சம்சந்தேகம்உள்ளவர்களும், இத்தகையபக்தர்எதையும், அருமைச்சீராளனையுமேஇறைவனுக்குஅர்ப்பணிக்கத்தயங்கமாட்டார்என்பதையுமேஉணர்வார்கள், சீராளன்திருவுருஅவ்வளவுஅழகானதாகஇல்லை . அறுத்துக்கறிசமைத்தபிள்ளையைத்திரும்பவும்அவசரத்தில்தானேபிசைந்துஉருவாக்கியிருக்கவேண்டும். எப்படியும்பிள்ளைஉயிர்ஓவியமாகநிற்கின்றானே. அதுபோதாதா? இனிமேல்தான்தென்பக்கமுள்ளசந்நிதிக்குவந்துஉத்தராபதிஈசுவரரைக்காணவேணும். நின்றகோலத்தில்இருக்கும்பைரவமூர்த்தம். இவ்வடிவம்உருவானதைப்பற்றிஒருகதை, ஐயடிகள்காடவர்கோன்விருப்பப்படி, சிற்பிகள்உத்திராபதியார்சிற்பவடிவைஉருக்கிவார்க்கமுயன்றுவெற்றிகாணவில்லை. அந்தச்சமயத்தில்ஒருசிவயோகிவந்துகுடிக்கத்தண்ணீர்கேட்டு, சிற்பிகள்கொடுத்தகொதிக்கின்றகருவையேஉண்டுசெப்புச்சிலையாகநின்றுவிட்டார்என்பார்கள். உண்ணவந்துஅமர்ந்தவர்நின்றுகொண்டாஇருந்திருப்பார்என்றுஎண்ணியநிர்வாகிகள்அவரையேஇருந்தகோலத்திலும்புதிதாகஒருவடிவம்வார்த்துவைத்திருக்கிறார்கள். இந்தஉத்தராபதிஈசுவரர்சந்நிதிக்குஎதிரேதான்அவர்வந்துமுதலில்தங்கியிருந்தஆத்திமரம். மரத்தைப்பார்த்தாலேஅதுஎவ்வளவுபழையமரம்என்றுதெரியும். இனிவெளிப்பிராகாரத்துக்குவந்துமேற்கநோக்கிநடந்தால், வாதாபிகணபதியைத்தரிசிக்கலாம். இத்தலத்திலேநிறையவிநாயகர்வடிவங்கள்உண்டு, இன்னும்சிறப்பாகஇங்குஒருஅம்சமும்உண்டு. வாதாபிகணபதி, உத்தராபதியார், அம்பிகைஎல்லோருக்குமேஇரண்டிரண்டுகைகள்தாம். இவையெல்லாம்கூர்ந்துகவனிக்கத்தக்கவை.

மேலப்பிராகாரத்துக்குவந்துவடக்கேதிரும்பினால்இத்தனைசிரமப்பட்டுஇத்தலத்துக்குவந்துஇவ்வளவுநேரம்சுற்றியதும்வீண்அல்லஎன்றுகாண்போம். இங்குதான்நவதாண்டவமூர்த்திகள்நிற்கிறார்கள், நல்லகற்சிலைஉருவிலே. சிவதாண்டவம்ஏழுஎன்பர்ஒருசிலர். அதுவும்தவறு, தாண்டவத்திருவுருவம்நூற்றுஎட்டுஎன்பர்சிற்பநூல்வல்லார். ஒருகணக்கிலும்சேராமல்நவதாண்டவம்என்றுஎழுதியிருக்கும். அங்கேஇருப்பதுஎன்னவோஎட்டுப்பேர்கள்தான். புருங்கலளிதர், கஜசம்ஹாரர், ஊர்த்துவதாண்டவர், காலசம்ஹாரர், கங்காளர், பிக்ஷாடனர், திரிபுரசம்ஹாரர், பைரவர்என்பவர்களேஅவர்கள். இவர்களுடன்உத்தராபதியாரையும்சேர்த்தேஒன்பதுஎன்றுகணக்கிட்டிருக்கிறார்கள். இவர்களில்நால்வரேதாண்டவத்திருவுருவினர். மற்றவர்தாண்டவர்கள்அல்ல. போகட்டும்; இந்தவிவாதம்எல்லாம்நமக்குவேண்டாம். இருக்கும்சிலாவடிவங்கள்அத்தனையும்அழகுவாய்ந்தவை. அழகுக்குஅஞ்சலிசெய்துஅமைதிபெறலாம். இக்கோயிலில்இன்னொருசிறப்பும்உண்டு. காலையில்தொழுதால்வினைஅகலும், உச்சிவேளையில்தொழுதால்இப்பிறப்பின்துயர்அகலும். மாலையில்தொழுதால்ஏழ்பிறப்பின்வெந்துயரம்எல்லாம்விடும்என்பர். ஆதலால்மாலைவேளையேசெல்லுங்கள்.

இக்கோயிலில் 32 கல்வெட்டுகள்இருக்கின்றன. சோழமன்னர்கள்விஜயநகரமன்னர்கள்செய்ததிருப்பணிகள், ஏற்படுத்தியநிபந்தங்கள்எல்லாவற்றையும்விரிவாகக்கல்வெட்டுகள்கூறும். இவர்களில்முக்கியமானவன், ராஜராஜசோழன்காரியஸ்தனானதென்னவன்மூவேந்தவேளான்என்பவனே. அவன்தான்கோயிலின்பெரும்பகுதியைத்திருப்பணிசெய்திருக்கிறான். இன்றுகோயில்கோபுரம்எல்லாம்திரும்பவும்திருப்பணிசெய்யவேண்டியநிலையில்இருக்கின்றன. தென்னவன்மூவேந்தவேளான்திரும்பவும்அவதரிக்கமாட்டான். ஆதலால்திருப்பணிசெய்யவேண்டியவர்கள்தமிழ்மக்களேஎன்பதைமட்டும்ஞாபகமூட்டிவிட்டிநான்விடைபெற்றுக்கொள்கிறேன்.