தமிழ்நாடு – 64 – திருக்கண்ணமங்கை

கண்ணமங்கை பக்தவத்ஸலன்

பலவருஷங்களுக்குமுன்ஒருநடனநாட்டியநிகழ்ச்சியைக்காணச்சென்றிருந்தேன். புதியமுறையில்பலபுராணக்கதைகளைநடனநாட்டியமாகநடித்துக்காண்பித்தனர்நடிகர்கள், ஆண்டாள்திருக்கல்யாணம், பஸ்மாசுரமோகினிமுதலியபுராணக்கதைகளைநடனமாடியேவிளக்கம்செய்தனர். பஸ்மாசுரமோகினிகதையைஅடுத்துக்கஜேந்திரமோட்சம்என்றுகண்டிருந்ததுநிகழ்ச்சிநிரலில், பஸ்மாசுரமோகினியின்பஸ்மாசுரன், சிவன், மோகினிஅவதாரம்எடுத்தவிஷ்ணுஎல்லாருமேமேடைமீதுதோன்றிநடனம்ஆடினர்.

அதுபோல்கஜேந்திரமோட்சத்திலும்கஜேந்திரன், முதலை, கருடன், மகாவிஷ்ணுஎல்லோருமேமேடைமீதுதோன்றுவார்களோஎன்றுஎண்ணினேன்நான், விஷ்ணுவின்வேடத்தைவேண்டுமானால்நடிகர்கள். போட்டுக்கொள்ளலாம்; யானை, முதலை, கருடன்வேடங்களைஎல்லாம்மனிதர்கள்போட்டுநடித்தால்நன்றாயிருக்குமாஎன்றுநினைத்தேன். அதற்குள்நிகழ்ச்சியின்அறிவிப்புதெரிவிக்கப்பட்டது. திரையும்விலகியது. ஒரேஒருநடிகர்தான்மேடைமீதுதோன்றினார், பின்னணிவாத்தியங்கள்மெதுவாகஒலிக்கஆரம்பித்தன. நடிகர்தம்இரண்டுகைகளையும்நீர்நிறைந்ததடாகம்ஒன்றுஇருக்கிறதுஎன்றுகாட்டிவிட்டுமலரும்தாமரைகளையும்ஹஸ்தமுத்திரைமூலமாகவேகாண்பித்தார். இதன்மூலம்தாமரைமலர்ந்ததடாகமேகாண்பித்தார். சிறிதுநேரத்தில்அந்தநடிகரேமேடையில்ஒருகோடியிலிருந்துமற்றொருகோடிக்குநடந்தார். இரண்டுகாலால்தான்நடந்தார்.

என்றாலும்உடல்அசைவுவலதுகையைத்தும்பிக்கைபோல்அங்குமிங்கும்ஆட்டுவதன்மூலம்அசைந்துஆடிவரும்யானையையேகண்முன்கொண்டுவந்துவிட்டார். இனிஇந்தயானையேதடாகத்தில்இறங்குகிறது. படிக்கட்டில்யானைஎப்படிமெதுவாகஇறங்குமோஅப்படியேஇறங்குவதுபோல்அபிநயித்தார். பின்னர்யானைதும்பிக்கைமூலம்நீர்குடிப்பது, வாரிஇறைப்பதுயெல்லாம்காட்டினார்நடிகர். எல்லாம்கைஅசைவு, கால்அசைவு, உடல்அசைவுகளினாலேயே, இப்படிநடித்தநடிகரேஇன்னும்சிலநிமிஷநேரங்களில்முதலையாகமாறிவிட்டார்.

முதலைதண்ணீருக்குள்எப்படிவளைந்துவளைந்துவருமோஅந்தக்காட்சியைக்கண்முன்கொண்டுவந்தார். சிறிதுநேரத்தில்அவரேமுதலைகாலைப்பிடித்துக்கொள்ளஅதனால்வீறிட்டுஅலறும்யானையாகவும்மாறினார். பின்னர்அவரேகருடனாகவும், கருடன்மேல்ஆரோகணித்துவரும்பெருமாளாகவும்மாறிவிட்டார், மேடைமீதுஆதிமூலமேஎன்றுஅழைத்தகஜேந்திரனைமுதலைப்பிடியினின்றும்விடுவித்துமோக்ஷமும்அளித்துவிடுகிறார். இத்தனையையும்ஒருநடிகரேபத்துநிமிஷநேரத்தில்அங்குஎழும்இன்னிசைக்கேற்பநடனம்ஆடிநடித்துமேடைமீதுகாட்டிவிடுகிறார்.

இதில்இருந்ததுஒருகஷ்டம், நடனநாடகத்தைநடித்தநடிகருக்குஎவ்வளவுகற்பனைவேண்டியிருந்ததோஅத்தனைகற்பனையுடையவர்களாகப்பார்ப்பவர்களும்அமையவேண்டியிருந்தது. நடனநாடகத்தைக்கண்டவர்களும்கற்பனைபண்ணியேகதையைத்தெரிந்துகொள்ள, உணர்ந்துகொள்ளவேண்டியிருக்கிறது. குளமாக, யானையாக, முதலையாக, கருடனாக, காத்தற்கடவுளாம்திருமாலாகஎல்லாம்ஒரேநடிகர்மாறிமாறிநடித்ததைக்கண்டுமகிழ்ந்ததோடுவியப்பிலும்ஆழ்ந்துவிட்டேன். அத்தனைகலைஅழகுஇருந்தது, அந்தநடனநாடகநிகழ்ச்சியில்.

இத்தனைகலைஅழகையும்பின்னர்ஒருசிற்பவடிவில்கண்டபோதுஅப்படியேஅதிசயித்துநின்றேன். அந்தச்சிற்பவடிவம்அமைந்திருப்பதேஒருதனிஅழகு. ஒருசிற்பிக்குநான்குஅடிநீளம், இரண்டுஅடிஅகலம்உள்ளஒருகல்கிடைக்கிறது.

வைகுண்டவாசன்

கல்லின்கனம்எல்லாம்ஒன்றரைஅடிதான். இந்தக்கல்லைப்பார்ப்பதற்குமுன்சிற்பிகஜேந்திரமோக்ஷக்கதையைக்தன்மனக்கண்ணில்கண்டிருக்கிறான். ஆம்! ‘உள்ளக்கிழியில்உருஎழுதிவைத்திருக்கிறான். கிடைத்தகல்லில்உருவாக்கிக்காட்டமுனைந்திருக்கிறான். இருப்பதோஒருசிறியகல், அதில்உருவத்தால்பெரியயானை, அந்தயானையின்காலைப்பிடித்துஇழுக்கும்முதலை, யானையைக்காக்கவருகின்றபெருமான், அந்தப்பெருமானைத்தூக்கிவருகின்றகருடன்எல்லோரையும்உருவாக்கவேண்டுமேஎன்றுசிற்பிகவலைப்பட்டதாகத்தெரியவில்லை. கல்லிலேபெரும்பகுதியைப்பெருமானுக்கும்கருடனுக்கும்ஒதுக்கிவிடுகிறான். அடித்தளத்தில்ஒருசிறுஇடத்தில்வீறிட்டுஅலறும்யானைஉருவாகிறது. அந்தயானையின்காலைப்பிடிக்கும்முதலையும், இருக்கிறகொஞ்சஇடத்துக்குள்ளேயேஉடலைவளைத்துக்கொண்டுநெளிவதற்குஆரம்பித்துவிடுகிறது. அவ்வளவுதான்; அதன்பின்பறந்துவருகின்றகருடன்மேல்ஆரோகணித்துவரும்அந்தப்பெருமானின்கோலம்எல்லாம்உருவாகிவிடுகிறதுசிற்பியின்சிற்றுளியால். பெருமான்வருகின்றவேகம்கூடத்தெரிகிறதுகருடனதுவரவைச்சித்திரித்திருப்பதிலே.

சங்குசக்கரம்ஏந்தியகைகள்இரண்டோடுஅபயவரதமுத்திரைகளோடுஇரண்டுகைகள். கருடனதுவடிவஅமைப்பேஒருகவர்ச்சி; பெருமானதுமேனியிலேஓர்அழகு; எல்லாவற்றையும்அல்லவாசிற்பிசெதுக்கியிருக்கிறான். கலைஞனாகியசிற்பி, யானை, முதலைகளைச்செதுக்குவதிலும்மிக்ககவனமேசெலுத்தியிருக்கிறான், அதனால்தானேஉயிருள்ளமுதலையையும்வளர்ச்சிகுறையாதயானையையுமேகாண்கிறோம்கல்லுருவில். இப்படிஅற்புதமாகஒரேகல்லில்இத்தனையும்உருவாக்கிஇருக்கும்சிலையைக்கண்ட்பின்தான், ஒரேநடிகர்அத்தனைகோலங்களிலும்அவர்ஒருவராகவேநடித்ததுஅதிசயமாகப்படவில்லை. இத்தகையஅற்புதச்சிற்பவடிவைக்காணவிரும்பினால்நீங்கள்செல்லவேண்டுவதுதிருக்கண்ணமங்கைக்குஅந்தத்திருக்கண்ணமங்கைக்கேசெல்கிறோம்நாம்இன்று.

திருக்கண்ணமங்கைதிருவாரூருக்குமேற்கேநான்கு, ஐந்துமைல்தொலைவில்இருக்கிறது. திருவாரூர்ஜங்ஷனில்இறங்கிவண்டியோ, காரோவைத்துக்கொண்டுசென்றாலும்போய்ச்சேரலாம். இல்லை, கும்பகோணத்தில்இறங்கி, நாச்சியார்கோயில், திருச்சேறைகோயில்களுக்குஎல்லாம்போய்த்தரிசித்துவிட்டுப்போய்ச்சேரலாம். இந்தவழியில்போனால்வசதிஇருந்தால், நாலூர், நாலூர்மயானம், குடவாயில்முதலியபாடல்பெற்றகோயில்களுக்குமேபோய்த்தரிசனம்பண்ணிவிட்டுஇங்குவந்துசேரலாம். எப்படிவத்நாலும்சாலையில்இறங்கிமேற்கேகொஞ்சதூரம்நடக்கவேண்டும்.

அப்படிநடந்தால்முதலில்தர்சனபுஷ்கரணியைத்தரிசனம்பண்ணலாம். இந்தப்புஷ்கரணிதரிசனம்பண்ணுவதற்குத்தான்ஏற்றது. இறங்கித்துளாவிக்குளிப்பதற்கெல்லாம்ஏற்றதுஅல்ல. ஆதலால்விறுவிறுஎன்றுகோயிலுக்குள்ளேநுழையலாம். அங்குகோயில்கொண்டிருப்பவர்பக்தவத்ஸலர்; அவரையேபத்தாரவிப்பெருமாள்என்பார்கள்அங்குள்ளவர்கள். கிழக்குநோக்கிநின்றகோலத்தில்இவரைக்கண்டுவணங்கிக்கொள்ளலாம். இவரையேமங்கைமன்னன்பதினான்குபாசுரங்களில்பாடிப்பரவியிருக்கிறார். கண்ணமங்கைக்கண்ணனை, மங்கைமன்னன்பாடுவதுபொருத்தம்தானே.

பண்ணினை, பண்ணில்நின்றதோர்

பான்மையை, பாலுள்நெய்யினை

மால்உருவாய்நின்ற

விண்ணினை, விளங்கும்சுடர்

சோதியை, வேள்வியை,

விளக்கின்ஒளிதன்னை

மண்ணினை, மலையைஅலை

நீரினை, மாலைமாமதியை

மறையோர்தங்கள்

கண்ணினை; கண்களாரவும்

நின்றுகண்ணமங்கையுள்

கண்டுகொண்டேனே

என்பதுமங்கைமன்னன்பாடல். பாடலைப்பாடிக்கொண்டேநாமும்அவனைவலம்வரலாம். அப்படிவலம்வரும்போதுதான், ஒருமாடத்தில்முன்சொல்லியகஜேந்திர

கஜேந்திரவிஷ்ணு

மோக்ஷக்காட்சியைக்காண்போம். இந்தஒருகாட்சிதானா? இன்னும்பலமாடங்களில்பலகோலங்களில்பெருமாள்நின்றுகொண்டிருப்பார். ‘தாயெடுத்தசிறுகோலுக்குக்குழைந்துஓடி, தயிர்உண்டுவாய்துடைத்தமைந்தனாம்கண்ணனைவேணுகோபாலனாகக்காண்போம். இத்துடன்பூமாதேவியைக்காத்தளிக்கின்றவராகமூர்த்தி, இரணியன்உடல்கிழித்துஉதிரம்உறிஞ்சியநரசிம்மன், சேமமதிள்சூழ்இலங்கையர்கோன்கரமும்சிரமும்துணித்தஅந்தக்கோதண்டராமன்முதலியவர்களையெல்லாம்நல்லநல்லகல்லுருவில்காண்போம். இத்தனைசிலைகளையும்தூக்கிஅடிக்கும்சிலைஒன்றும்இங்குஉண்டு. ஆதிசேஷனைநினைத்தால்அவன்விரித்தபடுக்கையில்படுத்துஅறிதுயில்கொள்ளும்அனந்தசயனன்தான்ஞாபகத்துக்குவருவான். ‘பாற்கடலில்பாம்பணைமேல்பையத்துயின்றான்பரமன்என்பதுதானேகலைஞன்கற்பனை. ஆனால்இங்குள்ளபரமனோநிரம்பவும்உஷாராகப்படுக்கையைவிட்டேஎழுந்துஉட்கார்ந்திருக்கிறான். பாயாகச்சுருண்டுகிடந்தபாம்பேஇங்கேகோப்புடையசீரியசிங்காதனமாகஅமைந்திருக்கிறதுஇந்தவைகுண்டநாதனுக்கு. ஒருகாலைஊன்றிஒருகாலைத்தொங்கவிட்டுஉட்கார்ந்திருப்பதிலேயேஒருகாம்பீர்யம். ஊன்றியகாலின்மேல்நீட்டியகையோஅவன்றன்உல்லாசத்தைக்காட்டுகிறது. சங்குசக்ரதாரியாய்த்திருமாமணிமகுடம்தாங்கிப்புன்னகைதவழஇருக்கும்இந்தவைகுண்டநாதனின்திருஓலக்கம்அழகுணர்ச்சிஉடையார்எல்லாம்கண்டுகளிக்கும்ஒருகலைச்சிகரம். கஜேந்திரமோக்ஷத்திலேகலைஞனின்கற்பனைவளம்நிரம்பியிருந்தால்இந்தவைகுண்டநாதன்தோற்றத்திலேஓர்அற்புதசௌந்தர்யம்நிறைந்திருக்கிறது. இந்தஅழகனைவழுத்திவாழ்த்தாதமானுடர்மானுடரேஅல்லஎன்பதுமங்கைமன்னன்சிததாந்தம். அப்படியேஅவர்பாடுகிறாரே,

மண்ணாடும், விண்ணாடும், வானவரும்,

தானவரும், மற்றும்எல்லாம்

உண்ணாதபெருவெள்ளம்உண்ணாமல்,

தான்விழுங்கிஉய்யக்கொண்ட

கண்ணாளன், கண்ணமங்கைநகராளன்

கழல்சூடி, அவனைஉள்ளத்து

எண்ணாதமானிடத்தைஎண்ணாத

போதெல்லாம்இனியவாறே.

என்பதுமங்கைமன்னன்பாடல், இத்தகையசிற்பவடிவங்களெல்லாம்நிறைந்துஇந்தக்கோயிலைஒருகலைக்கூடமாகவேஅமைத்துவைத்திருக்கிறார்கள்நமதுசிற்பிகள்.

இப்படியேகண்ணமங்கைக்காராளனைப்பற்றியேபேசிக்கொண்டிருக்கிறீரே, இங்குள்ளதாயாரைப்பற்றிஒன்றுமேசொல்லவில்லையேஎன்றுதானேநினைக்கிறீர்கள். அவரசப்படவேண்டாம். அவளைத்தான்பார்க்கஇப்போதுஉடனடியாகவேஅழைத்துச்செல்கிறேன். பக்தவத்ஸலருக்குவடபக்கத்தில்தனிக்கோயிலில்அபஷேகவல்லித்தாயார்இருக்கிறாள். அங்குசென்றுஅவளைவணங்குபவர்களுக்குஓர்அதிசயம்காத்துநிற்கும். இந்தத்தாயார்சந்நிதியிலேஒருபெரியதேன்கூடு; இந்தத்தேன்கூடுஇங்கேஎப்போதுகட்டப்பட்டதுஎன்றுசொல்வார்ஒருவரும்இல்லை. ஆனால்இந்தத்தேன்கூடுஇங்கேகட்டப்பட்டதற்குஒருகதைமட்டும்உண்டு.

கண்ணமங்கைநகராளனைப்பிரியவிரும்பாதமுனிபுங்கவர்பலர்தேனியாகப்பிறக்கவரம்வாங்கிக்கொண்டார்களாம். அவர்களேஇங்கேகூடுகட்டிஅனவரதகாலமும்பக்தவத்ஸலன், அபிஷேகவல்லிஇருவரையும்சுற்றிச்சுற்றிவட்டமிட்டுரீங்காரம்செய்துவாழ்கிறார்கள். அவர்களுக்குத்தேன்கிடைப்பதும்அவ்வளவுசிரமமானதாகஇல்லை . பெருமானின்மார்பைஅலங்கரிக்கும்அலங்கல்மாலையிலேதான்அளவிறந்ததேன்உண்டே. அந்தத்தேனையேஉண்டுஉண்டுதிளைத்துஎந்நேரமும்பாடிக்கொண்டேசுற்றிச்சுற்றிவருகிறார்கள். இத்தேன்கூட்டுக்குஇல்லை, இத்தேன்கூட்டில்வாழும்முனிவர்களுக்குத்தினமும்பூசைநடக்கிறது.

திருக்கண்ணமங்கைசெல்வோர்இந்தத்தேன்கூட்டைக்கண்டுதொழாமல்திரும்புவதில்லை. நாம்மட்டும்தொழாமல்திரும்புவானேன்? தேனைஉண்ணவழியில்லைஎன்றால்நாக்கைச்சப்புக்கொட்டிக்கொண்டேதிரும்பிவிடலாம். கண்ணமங்கைவைணவத்திருப்பதிகளாம்நூற்றெட்டில்ஒன்று. நூற்றெட்டுத்திருப்பதிஅந்தாதிபாடியதிவ்யகவிபிள்ளைப்பெருமாள்அய்யங்கார், இந்தத்திருப்பதியையும்பாடியிருக்கிறார்.

கருத்தினால்வாக்கினால்

நான்மறையும்காணா

ஒருத்தனைநீ! நெஞ்சே!

உணரில்பெருத்தமுகில்

வண்ணமங்கைகண்கால்

வனசத்திருவரங்கம்

கண்ணமங்கைஊர்என்றுகாண்.

என்பதுஅவரதுபாட்டு. கண்ணமங்கைசெல்பவர்களுக்குக்கலையழகைக்காணும்வாய்ப்புஉண்டு. பக்தவத்ஸலனையும்அபிஷேகவல்லியையும்வணங்கும்பேறுஉண்டு. இந்தத்தலத்திலேசிறப்பானதிருவிழாவைகுண்டஏகாதசிதான். ஆம்! வைகுண்டநாதன்கம்பீரமாகக்கொலுவிருக்கும்தலம்அல்லவா! ஆதலால்வசதிசெய்துகொள்ளக்கூடியவர்கள்வைகுண்டஏகாதசிஅன்றேசெல்லுங்கள்என்றுசொல்லிவிட்டுநான்நின்றுகொள்கிறேன்.