கந்தனை அனைய கடம்பந்துறையார்
ஓர்அரசவை. அங்கேபுலவர்பலர்குழுமியிருக்கின்றனர். புலவர்கள்கூடியதால்பாடல், எதிர்ப்பாடல்இடையிடையே ‘சமுத்தி‘ என்றெல்லாம்நடக்கிறது. சமுத்திஎன்றால்தான்தெரியுமேஒருவர்கடைஅடிகொடுக்க, மற்றவர்பாட்டைமுடிக்க; ஒருவர்அடியெடுத்துக்கொடுக்கமற்றவர்பாட்டைமுடிக்க; ஒருவர்அடியெடுத்துக்கொடுக்கமற்றவர்தொடர்ந்துபாட; ஒருவர்ஒருகருத்தைச்சொல்லஅந்தக்கருத்தைஅமைத்துமற்றவர்பாடஎன்றுஅமையும்அல்லவா? அந்தஅவையில்ஒருபுலவர்விரும்புகிறார். சூரியன்செல்லும்கதிமுழுதும்வரும்படிஒருவெண்பாப்பாடவேண்டும்என்று. உடனேபாடுகிறார்ஒருபுலவர்.
குணகடலில்தேன்றி
கோகனப்போதை
மணமுடனேநன்றாய்
மலர்த்தி –வணமாக
நாற்றிசைகள்எங்கும்
நன்றாய்ஒளிபரப்பி
மேற்றிசைக்குசெல்லும்
வெய்யோன்
என்பதுபாட்டு. ஆம்! காலைசூரியஉதயத்திலிருந்துமாலைஅஸ்தமனம்வரைசூரியனின்கதியைஅல்லவாபாடல்கூறுகிறது. நாமும்தான்சூரியஉதயத்துக்குமுன்னமேயேஎழுந்திருக்கிறோம். அவன்வானவீதியில்உலாவரும்போதுஉடல்உழைத்துப்பணிபுரிகிறோம். அவன்மாலையில்மறைந்ததும்அயர்ந்துதிரும்பவும்படுக்கைக்குச்செல்லுகிறோம். இதற்கிடையிலேதான்கோயில், குளம், பூசை, புனஸ்காரம்எல்லாம். ஆனால்இப்போதுநான்உங்களைவேண்டுவதுஒருநாள்முழுவதும்கோயில்வழிபாட்டுக்குஎன்றுஒதுக்கிவைக்கவேண்டும்என்று. வேண்டுமானால்அதுவும்ஞாயிற்றுக்கிழமையாகஇருக்கட்டும்.
வாரத்துக்குஒருநாளாகியஞாயிற்றுக்கிழமைதான்எல்லாத்துறையில்உள்ளவர்களுக்கும்ஓய்வுண்டே. எதற்காகச்சொல்லுகிறேன்என்றால், திருச்சிமாவட்டத்திலேஉள்ளமூன்றுகோயில்களுக்குக்காலையில்ஒன்றுக்கும்மதியத்தில்ஒன்றுக்கும்மாலையில்ஒன்றுக்கும்சென்றுஅங்குள்ளசந்நிதிகளில்வழிபாடுசெய்தால்பலனுண்டுஎன்றுஒருநியதிஇருக்கிறதே; அந்தநியதியையும்அந்தவட்டாரமக்கள்ஒருநல்லபழமொழியாகஅல்லவாசொல்கிறார்கள். ‘காலைக்கடம்பர், மத்தியானச்சொக்கர், அந்தித்திருவேங்கிநாதர்‘ என்பதுதான்பழமொழி. கடம்பர்இருப்பதுகுழித்தலையிலே, சொக்கர்இருப்பதுசிவாயமலையிலே, திருவேங்கிநாதர்இருப்பதுதிருஈங்கோய்மலையிலே. இவற்றைக்கடம்பந்துறை, வாட்போக்கி, மரகதமலைஎன்றும்புராணங்கள்கூறும். இவைமூன்றையும்ஒரேநாளில்மக்கள்ஏன்வணங்கவேண்டும்என்பதற்குக்காரணமும்கூறுவர். இந்தமூன்றுதலங்களும்சோமாஸ்கந்தமூர்த்தம்போல்அமைந்திருக்கின்றனவாம். உண்மைதான். தெற்கேயுள்ளவாட்போக்கிசிவனதுஉருவத்தில்உயர்ந்தமலைமேல்இருக்கிறது. வடக்கேயுள்ளஈங்கோயும்சக்திஉருவில்மலையாகஉயர்ந்திருக்கிறது. இடையேஉள்ளகடம்பந்துறைதான்தரையோடுதரையாய்க்கந்தன்உருவத்தில்இருக்கிறது. அதனால்தான்இம்மூன்றுதலங்களையும்அங்குள்ளமூர்த்திகளையும்ஒரேநாளில்கண்டுவணங்கினால்சோமாஸ்கந்தமூர்த்தியையேவணங்கியபலன்கிடைக்கும். சரிதான்புறப்படுவோம்மூன்றுதலங்களையும்ஒரேநாளில்கண்டுதரிசிக்க.
ஆம். முதல்முதலில்கடம்பந்துறைக்கேசெல்வோம். அத்துறைகந்தனின்அம்சமாகஇருப்பதினால்அல்ல. அங்குசெல்லத்தான்ரயில்வசதிஇருக்கிறது. திருச்சிஈரோடுலயனில்இருக்கிறதுகடம்பந்துறை, ரயில்வேஸ்டேஷனில்கடம்பந்துறைக்குஒருடிக்கட்என்றுகேட்டால், புக்கிங்கிளார்க்பரக்கப்பரக்கவிழிப்பார். ஆதலால்டிக்கட்டைக்குழித்தலைக்குத்தான்எடுக்கவேணும். குழித்தலைஎன்றபெயரில்தானேகடம்பந்துறைஇன்றுவிளங்குகிறது. இக்குழித்தலைதிருச்சிக்குமேற்கேஇருபத்திரண்டுமைல்தொலைவில்ஒருதாலுகாவின்தலைநகராய்விளங்குகிறது.
ரயில்வேஸ்டேஷனில்இறங்கிவடக்குநோக்கிஒருமைல்நடந்தால்அங்குள்ளகடம்பவனநாதர்கோயில்வாயில்வந்துசேரலாம். கோயில்காவிரிக்கரையிலேஇருக்கிறது. சிவன்கோயில்களெல்லாம்ஒன்றுகிழக்குநோக்கி, இல்லை, மேற்குநோக்கிஇருப்பதைத்தான்பார்த்திருக்கிறோம். இந்தக்கோயில்மாத்திரம்வடக்குநோக்கிஇருக்கிறது. கங்கைக்கரையில்காசிவிசுவநாதர்கோயில்வடக்குநோக்கியிருப்பதுபோல்காவிரிக்கரையில்வடக்குநோக்கிஇருக்கும்கோயில்இதுஒன்றுதான். இங்குள்ளஇறைவன்வட்டக்குநோக்கியிருந்தால், இறைவியாம்முற்றிலாமுலையம்மைகிழக்குநோக்கியேநிற்கிறாள். கோயிலுக்குள்நுழையுமுன், ஏன்இத்தலம்குழித்தலைஎன்றும்கடம்பந்துறைஎன்றும்பெயர்பெற்றதுஎன்றுதெரிந்துகொள்ளவேண்டாமா? குளிர்ந்தசோலைகளையுடையதால்குழித்தண்டலைஎன்றுபெயர்பெற்றிருக்கிறது. குழித்தண்டலையேகுழித்தலைஎனறுகுறுகியிருக்கிறது. ஆதியில்இந்தப்பிரதேசம்கடம்பவனமாகஇருந்திருக்கிறது. இன்றும்இக்கோயிலின்தலவிருட்சம்கடம்பமரமே. கடம்பவனத்திடையேஅமர்ந்தவர்கடம்பவனநாதராகியிருக்கிறார். காவிரிக்கரையில்கட்டப்பட்டகோயில்ஆனதினால்கடம்பந்துறைஎன்றுபெயர்பெற்றிருக்கிறது. இத்தலத்துக்குவந்தஅப்பர்,
பூமென்கோதைஉமைஒருபாகனை
ஓமம்செய்துஉணர்மின்கள்உள்ளத்தால்;
காமன்காய்ந்தபிரான்கடம்பந்துறை
நாமம்ஏத்தநம்தீவினைநாசமே.
என்றுபாடியிருக்கிறார்.
இனி, கோயிலுள்நுழையலாம். கோயில்பெரியகோயில்அல்ல. கருவறையில்லிங்கத்திருவுருவுக்குப்பின்னேசப்தகன்னியர்உருவச்சிலைகள்இருக்கின்றன. வெளிப்பிரகாரத்தின்வடமேற்குப்பகுதியிலேதான்இறைவியின்சந்நிதி. அம்மையின்சந்நிதிக்குமுன்பரமநாதர்வடிவம்இருக்கிறது. இவரேஇத்தலத்தின்காவல்தெய்வம். ஆனால்இவரோநாம்அவரைஅணுகுமுன்பேவலக்கையைநேரேஉயர்த்திச்சலாம்போடும்பாவனையில்நிற்கிறார். சலாம்போட்டுவிட்டேநடக்கலாம். இக்கோயிலில்இரண்டுசோமாஸ்கந்தமூர்த்திகள், இரண்டுநடராஜமூர்த்திகள். இரண்டுநடராஜரில்ஒருவர்காலடியில்முயலகன்இருக்கமாட்டான். ஏதோஅயர்ந்துமறந்திருந்தபொழுதுஎழுந்துஓடியிருப்பான்போலும்! இந்தநடராஜவடிவம்பலவருஷங்களுக்குமுன்பூமியின்அடியிலிருந்துகண்டெடுக்கப்பட்டதுஎன்கிறார்கள்.
இக்கோயிலில்பார்க்கவேண்டியவைவேறுஒன்றும்இல்லை, இக்கோயில்களில்உள்ளகல்வெட்டுக்களில்ஒன்று 1552-ல்விஜயநகரமன்னன்கிருஷ்ணதேவராயனது, அதில்இத்தலத்தை ‘ராஜகெம்பீரவளநாட்டுக்குழித்தண்டலைச்சீமையானகணபதிநல்லூர்‘ என்றுகுறித்திருக்கிறது. காலைஏழுமணிக்கேஇங்குவந்திருக்கிறோம். இப்போதுமணிஒன்பது. இன்னும்இரண்டுகோயில்களைமாலைமங்குவதற்குள்சென்றுகாணவேண்டும். நீர்என்னடாவென்றால்இப்போதுதான்கல்வெட்டுக்களைஆராயமுனைகிறீர்‘ என்றுநீங்கள்சொல்வதுஎன்காதில்விழத்தான்செய்கிறது. ஆதலால்இத்தலத்தைவிட்டுப்புறப்படலாம். மத்தியானச்சொக்கரைக்காண்பதற்கு.
ஐயர்மலை
மத்தியானச்சொக்கர்முன்னமேயேசொன்னதுபோல்தரையில்இருப்பவர்அல்ல, ஒருநல்லமலைமீதுஏறியேநிற்கிறார். அந்தமலையையேரத்தினகிரிஎன்பார்கள். அந்தமலையேமணப்பாறைசெல்லும்ரோட்டில்குழித்தலைக்குத்தெற்கேஆறுமைல்தூரத்தில்இருக்கிறது. அத்தலத்துக்குக்காரிலும்போகலாம்; பஸ்ஸிலும்போகலாம்; மாட்டுவண்டியிலும்போகலாம். மாட்டுவண்டியிலும்போனாலும்காலைபத்துப்பத்தரைக்குள்சென்றுசேர்ந்துவிடலாம். தூரத்தில்போகும்போதேமலைதெரியும். ஆம். அம்மலைதான் 1200 அடிஉயரம்உயர்ந்திருக்கிறதே. இந்தமலையைத்தான்சிவாயமலை, ஐயர்மலை, வாள்போக்கி, ரத்தினகிரிஎன்றெல்லாம்அழைத்திருக்கிறார்கள்.
ஓம்என்னும்பிரணவஎழுத்தைப்போல்மலையும்படியும்அமைந்திருப்பதால்சிவாயமலைஎன்றார்களாம். மலையில்ஒருபக்கம்சமணமுனிவர்படுக்கைகள்ஐந்துஇருப்பதைப்பார்த்துஇதனைப்பஞ்சபாண்டவர்மலைஎன்றிருக்கிறார்கள். இந்தப்பஞ்சபாண்டவரேபின்னர்ஐவர்என்றும்அதன்பின்னர்ஐயர்என்றும்திரிந்துஇம்மலைக்குஐயர்மலைஎன்றபெயரையும்வாங்கிக்கொடுத்திருக்கிறார்கள்.
இம்மலைக்குஏன்ரத்தினகிரிஎன்றும்வாள்போக்கிஎன்றும்பெயர்வந்தது? அதுவா, ஆரியமன்னன்ஒருவனதுமணிமுடிகாணாமல்போய்விட்டது. புதியமகுடம்செய்துகொள்ளநல்லரத்தினங்கள்தேடிஇப்பக்கம்வந்திருக்கிறான்அவன். அவன்முன்னால்இறைவன்ஓர்அந்தணன்வடிவில்தோன்றி, தொட்டிஒன்றைச்சுட்டிக்காட்டிஅதைக்காவிரிநீரால்நிரப்பினால்ரத்தினங்கள்தருவதாகக்கூறியிருக்கிறார். அப்படியேமன்னன்நீர்கொணர்ந்துகுடம்குடமாய்க்கொட்டியும்தொட்டிநிறையக்காணோம். அதனால்கோபமுற்றமன்னன்தன்உடைவாளைஉருவிஅந்தணன்தலையில்வெட்டியிருக்கிறான். உடனேஇறைவனாம்அந்தணன்மறைய, மன்னன்தான்செய்ததவறுக்காகவருந்துகிறான். அதன்பின்மன்னனுக்குஇறைவன்மாணிக்கம்ரத்தினம்எல்லாம்அருளுகிறான். வாளால்ஏற்பட்டதழும்புஇன்னும்இறைவன்திருமுடியில்இருக்கிறது. அதனால்முடித்தழும்பர்என்றும்அவன்அழைக்கப்படுகிறான். இப்படிமன்னன்வாள்போக்கியகாரணத்தால்வாள்போக்கிஎன்றும்மன்னனுக்குரத்தினம்கொடுத்ததால்ரத்தினகிரிஎன்றும்வழங்குகிறது.
இனி, மலைஏறலாம். மலைஏறுவதுகொஞ்சம்கடினம். மொத்தம் 952 படிகள்ஏறிக்கடக்கவேணுமே. அடிவாரத்திலிருந்துமலைஏறும்இடத்திலேஒருபெரியஉருண்டைப்பாறையிலேவிநாயகர்உருவம்செதுக்கப்பட்டிருக்கிறது. இவருக்குப்பூசைபோட்டால்மழைபெய்யுமாம். இன்னும்கொஞ்சம்ஏறினால்பொன்னிடும்பாறைஎன்றுஒருபாறை. அதையும்கடந்துசென்றால்சப்தமாதர்கோயில். அதையும்கடந்துஅதன்பின்உள்ளவசந்தமண்டபத்தையும்கடந்தால்தான்அம்பாள்சந்நிதிவந்துசேரலாம். அங்குதான்தலவிருட்சமானவேப்பமரம்இருக்கிறது. சரி, ஒருமட்டும்கோயில்ஏறிவந்துவிட்டோம்என்றுபெருமூச்சுவிட்டால்உடன்வருபவர்கள் ‘இன்னும்கொஞ்சம்ஆம், எழுபதுபடிகள்மாத்திரம்ஏறிவிட்டால்சுவாமிசந்நிதிசேரலாம்‘ என்பார்கள். இன்னமாஎழுபதுபடி? வந்ததோவந்தோம், மூச்சைப்பிடித்துக்கொண்டுஏறிஉச்சிக்காலசேவைக்குஇறைவன்கோயிலுக்குச்சென்றுசேர்ந்துவிடலாம், அம்பாள்கிழக்குநோக்கிநின்றால்இறைவன்மேற்குநோக்கிநிற்கிறார். இவரையேரத்தினகிரீசர், வாள்போக்கிமுடித்தழும்பர், மலைக்கொழுந்தீசர், மத்தியானச்சொக்கர்என்றெல்லாம்அழைக்கிறார்கள்.
இறைவியோகரும்பார்குழலி. கல்வெட்டுக்களில்மாணிக்கமலைஉடையநாயனார், ஹாலட்சேஸ்வரிஎன்றபெயர்கள்காணப்படுகின்றன. இறைவனைத்தரிசித்துவிட்டுக்கீழேஇறங்கலாம். இறங்குவதுசிரமமாகஇராது. இருந்தாலும்கால்வலிக்கும்குறைவிராது. படிஇறங்கியபின்சாவதானமாகஅடிவாரத்தில்இருக்கும்கருப்பண்ணர், வைரமேகப்பெருமாள், கோரஉருநாய்க்கர்முதலியசந்நிதிகளுக்குச்செல்லலாம். இவர்களில்பிரசித்திபெற்றவர்வைரமேகப்பெருமாளே, காஞ்சியிலுள்ளஆயர்குலத்தினர்ஒருவர்ஒருபிரார்த்தனைசெய்துகொள்ளுகிறார். பிரார்த்தனைநிறைவேறினால்தலையையேதருவதாகப்பிரதிக்ஞைசெய்கிறார். பிரார்த்தனையைமுடித்துவைக்கிறார்ரத்னகிரீசர். சொன்னபடியேதம்தலையையேபலியாகக்கொடுக்கிறார்பிரார்த்தித்துக்கொண்டவர். அவரேவைரமேகப்பெருமாள்என்னும்பெயரில்இத்தலத்தின்காவல்தெய்வமாகஇருக்கிறார்:ஆம், இத்தகையவைரநெஞ்சம்படைத்தவரைவைரமேகப்பெருமாள்என்றுஅழைக்காமல்வேறுஎன்னபெயர்சொல்லிஅழைப்பது?
இன்னும்இந்தவட்டாரத்தில்ஒருவகுப்பினர்பன்னிரண்டாம்செட்டியார்என்றுஅழைக்கப்படுகின்றனர். எதற்காகஇவர்களுக்குஇந்தப்பெயர்என்றால், என்றோ , எப்போதோ, பதினோருவணிகமக்கள்தங்கள்சொத்தைப்பங்குபோட்டுக்கொள்ளத்தெரியாமல்திண்டாடியபோதுஇறைவனேஒருசெட்டியாராகவந்துஇருந்தசொத்துக்களைப்பன்னிரண்டுபங்குவைத்துஒருபங்கைத்தாம்எடுத்துக்கொண்டுமறைந்திருக்கிறார். அதனால்மற்றப்பதினோருபேருடையபரம்பரையும்பன்னிரண்டாம்செட்டியார்என்றுஅழைக்கப்படுகின்றனர். இறைவன்கெட்டிக்காரர்தான், பன்னிரண்டாம்செட்டியாராகவந்துபொருளைச்சுற்றிக்கொண்டுபோனதுடன்ஏமாந்தசோணகிரிகளானமற்றப்பதினோருபேருக்கும்பன்னிரண்டாம்செட்டியார்என்றபெயரையும்சூட்டிவிட்டல்லவாசென்றிருக்கிறார்.
என்ன? மணிஒன்றுஒன்றரையாகிறதே! சாப்பாட்டிற்குஏதாவதுவழிஉண்டா? எப்போதுஈங்கோய்மலைபோவதுஎன்றுதானேநினைக்கிறீர்கள்? சாப்பாடுஇந்தச்சிவாயமலையில்கிடைக்காது. வந்தவண்டியிலேயேதிரும்பிக்குழித்தலைசென்றுஅங்குதான்உணவுஅருந்தவேணும். ரத்தினகிரிமலைஏறியஅலுப்புத்தீரக்குழித்தலையில்உள்ளஜில்லாபோர்ட்தங்கும்விடுதியில்வேண்டுமானால்கொஞ்சம்இளைப்பாறலாம். அதன்பின்மாலைநாலுமணிக்குத்திரும்பவும்பயணத்தைத்தொடங்கலாம். குழித்தலையிலிருந்துஈங்கோய்மலைசெல்லக்காவிரிஆற்றைக்கடக்கவேணும். இத்தலம்காவிரியின்வடகரையில்இருக்கிறது. அத்துடன்இங்கேகாவிரிஒருமைல்அகலம்உள்ளதாய்இருக்கிறது. இந்தஅகண்டகாவிரியைக்கடக்கமணத்திட்டைஎன்றஇடத்திற்குச்சென்றுபரிசல்ஏறித்தான்செல்லவேணும்.