தமிழ்நாடு – 81

பாண்டிக் கொடுமுடியார்

ராமனும்அனுமனும்ஒருநாள்அயோத்திநகரில்இருந்துவெளியூர்களுக்குப்புறப்படுகிறார்கள். போகிறவழியில்ஓர்ஆற்றைக்கடக்கவேண்டியிருக்கிறது. ஆற்றிலோவெள்ளம்கரைபுரண்டுஓடுகிறது. படகுஇல்லாமல்ஆற்றைக்கடத்தல்இயலாதுஎன்றுபடுகிறதுராமனுக்கு. ஆனால்அனுமனோராம, ராம்என்றுசொல்லிக்கொண்டுஆற்றில்இறங்கிவிடுகிறான். ஆற்றில்ஓடியவெள்ளமும்அப்படியேஸ்தம்பித்துநின்று, ஓர்ஆள்போகக்கூடியஅளவுக்குவழிஅமைத்துக்கொடுக்கிறது. அனுமன்ஆற்றைக்கடக்கிறான்ராமநாமஸ்மரணைசெய்துகொண்டே. ராமனும்அவன்பின்னாலேயேஇறங்கிநடந்தேஆற்றைக்கடக்கிறான்அன்று, இப்படிஒருகதை, கதைஉண்மையாகநடந்திருக்கவேண்டும்என்பதில்லை. ராமனைவிடப்பெரியதுராமநாமம்என்றுஅழுத்தமாகச்சொல்வதற்குக்கற்பித்ததாகவேஇருக்கலாம். ஆம்! ராமநாமம்ராமனைவிடஎவ்வளவுசிறந்ததோஅவ்வளவுசிறந்தது, நமசிவாயஎன்றபஞ்சாக்ஷரமந்திரம், அந்தமந்திரத்தின்ஆதிகர்த்தாவாகியசிவபெருமானைவிட. அதனால்தான்அந்தப்பஞ்சாக்ஷரமந்திரத்தைச்சைவப்பெருமக்கள்ஓதிஓதிவழிபடுகிறார்கள்; இகபர

சௌபாக்கியத்தைஎல்லாம்பெறுகிறார்கள், ‘காதலாகிக்கசிந்துகண்ணீர்மல்கிஒதுவார்தம்மைநன்னெறிக்குஉய்ப்பதுஅந்தநாதன்நாமம்நமச்சிவாயவேஎன்றுஞானசம்பந்தர்பாடினால், ‘கல்தூணைப்பூட்டியோர்கடலில்பாய்ச்சினும்நல்துணையாவதுநமச்சிவாயவேஎன்றுபாடுகிறார்அப்பர். மணிவாசகரோ, ‘நமசிவாயவாழ்க, நாதன்தாள்வாழ்கஎன்றேதம்திருவாசகத்தைஆரம்பிக்கிறார். ஆனால்இவர்கள்எல்லோரையும்தூக்கிஅடிக்கிறார்சுந்தரர்நமச்சிவாயபதிகம்பாடுவதிலே, ‘இறைவா! உன்னைநான்மறந்தாலும்என்நாநமச்சிவாயஎன்றுசொல்லமறப்பதில்லையே. அதனால்தானேபிறவாதபேறுஎல்லாம்எனக்குஎளிதில்சித்தியாகிவிடுகிறதுஎன்றுஎக்களிப்போடுபேசுகிறார்.

மற்றுப்பற்றுஎனக்குஇன்றி

நின்திருப்பாதமேமனம்பாவித்தேன்,

பெற்றலும்பிறந்தேன்இனிப்

பிறவாததன்மைவந்துஎய்தினேன்;

கற்றவர்தொழுதுஏத்தும்

சீர்கறைஊரில்பாண்டிக்கொடிமுடி

நற்றவா! உன்னைநான்பறக்கினும்

சொல்லும்நாநமச்சிவாயவே.

என்பதுசுந்தரர்பாட்டு. நல்லூர்ப்பெருமணத்தில்சோதியில்கலக்கும்போதுஞானசம்பந்தர்நமச்சிவாயப்பதிகம்பாடியிருக்கிறார். பல்லவமன்னன்மகேந்திரவர்மன்தம்மைக்கல்லில்கட்டிக்கடலில்எறிந்தபோதுநமச்சிவாயப்பதிகம்பாடியிருக்கிறார்திருநாவுக்கரசர். ஆனால்சுந்தரரோ, காவிரிக்கரையிலுள்ளபாண்டிக்கொடுமுடிக்கோயிலுக்குவந்துஇங்குஇறைவனைவணங்கித்தொழும்போதேநமச்சிவாயப்பதிகம்பாடியிருக்கிறார். இப்படிச்சுந்தரர்வாக்கால்நமச்சிவாயத்தைக்கேட்கும்பேறுகிடைக்கிறது. நமக்குப்பாண்டிக்கொடுமுடியைநினைத்தால், அந்தகொடுமுடிஎன்றதலத்துக்கேசெல்கிறோம்நாம்இன்று.

கொடுமுடிதிருச்சிக்குமேற்கே 62 மைல்தூரத்தில்இருக்கிறது. இத்தலம்செல்லத்திருச்சிஈரோடுலயனில்உள்ளகொடுமுடிஸ்டேஷனில்இறங்கவேணும். சென்னையிலிருந்துகோவைசெல்லும்ரயிலில்வந்துஈரோட்டில்வண்டிமாற்றி 23 மைல்தென்கிழக்கேவந்தாலும்இத்தலம்வந்துசேரலாம். ரயில்வேஸ்டேஷனிலிருந்துநாலுபர்லாங்குதொலையில்கோயில்இருக்கிறது. கோயில்காவிரியின்மேல்கரையில்இருக்கிறது. தெற்குநோக்கிவந்தகாவிரிஇங்குதான்கிழக்குநோக்கித்திரும்புகிறது.

அகண்டகாவிரியாகவேஇங்குஆறுஇருக்கும், அதிலும்ஐப்பசி, கார்த்திகைமாதங்களில்ஆறுநிறைந்துபோகும்போதுமிகஅழகாகஇருக்கும். இப்படிக்காவிரிகரைபுரண்டுபோவதைக்கண்டுதானேமாணிக்கவாசகர், ‘அரியபொருளே! அவிநாசிஅப்பா! பாண்டிவெள்ளமே!’ என்றுஇறைவனைக்கூவிஅழைத்திருக்கிறார். அகத்தியர்கமண்டலத்தில்கொண்டுவந்தகங்கையைஇங்குள்ளவிநாயகர்காக்கைஉருவில்வந்துகவிழ்த்திருக்கிறார். அதனால்காவிரிஎன்றபெயரேஇந்நதிக்குவந்ததுஎன்பதுவரலாறு. இன்னும்இக்காவிரியின்நடுவிலேஉள்ளபாறையைஅகத்தியர்மலைஎனவழங்குகின்றனர்மக்கள், காகம்கவிழ்த்தவிநாயகர், காவிரிகண்டவிநாயகர்என்றபெயரில்கோயில்பிரகாரத்திலேயேஇருக்கிறார். கோயிலுள்செல்லும்போதுஅவரைத்தரிசித்துக்கொள்ளலாம்.

இத்தலத்தில்மலைஒன்றும்இல்லையே, இத்தலத்துக்குஎப்படிக்கொடுமுடிஎன்றுபெயர்வந்ததுஎன்றுஅறியவிரும்புவோம். அதற்கும்அந்தப்பழையகதையைஒருபுதியமெருகுடனே, தலவரலாறுகொடுக்கும். தேவலோகத்திலேஆதிசேடனுக்கும்வாயுவுக்கும்ஒருபலப்பரீக்ஷை. சேடன்மகாமேருவைப்பற்றிக்கொள்ளவாயுதன்பலம்கொண்டமட்டும்வீசிஅதைப்பறிக்கப்பார்க்கிறான். முழுமலையும்பெயரவில்லைஎன்றாலும்மூன்றுசிறுதுண்டுகள்பெயர்ந்துவிழுந்தது. அவையேகாளத்தி, திருச்சி, திரிகோணமலைஎன்றகுன்றுகள்என்றுமுன்னமேயேதெரிந்திருக்கிறோம்.

வாயுவின்வேகத்தில், ஆதிசேடன்தலையில்உள்ளஐந்துமணிகள்வேறேசிதறியிருக்கின்றன. அவைகளில்சிவப்புமணிஅண்ணாமலையிலும், மரகதம்ஈங்கோய்மலையிலும், மாணிக்கம்வாட்போக்கியிலும், நீலம்பொதிகையிலும், வைரமணிஇத்தலத்திலும்விழுந்திருக்கின்றன. வைரம்மற்றமணிகளில்எல்லாம்சிறந்தமணியாயிற்றே. அதுவேகொடுமுடியாகநின்றிருக்கிறதுஇங்கே. அந்தக்கொடுமுடியின்சிகரமேஇக்கோயிலில்லிங்கத்திருஉருவாகவும்இருக்கிறதுஎன்றுஅறிவோம். கொங்குநாட்டில்உள்ளஇக்கொடுமுடிக்குப்பாண்டிக்கொடுமுடிஎன்றுஏன்பெயர்வந்ததுஎன்றுதெரியவில்லை.

இனிநாம்கோயிலுள்நுழையலாம். கோயில்பெரியகோயில். மூன்றுபிரிவாகஇருக்கின்றன. இறைவனுக்கு, இறைவிக்குஎன்பதோடுதிருமாலுக்குமேஒருசந்நிதி. ஒவ்வொருசந்நிதியையும்ஒவ்வொருகோபுரம்அழகுசெய்கிறது. வடபக்கம்கொடுமுடிநாதர்கோயில், இவரையேமகுடேசர், மலைக்கொழுந்தர்என்றெல்லாம்அழைக்கிறார்கள், தேவியோவடிவுடையநாயகி, பண்மொழிஅம்மை. இவளோதென்பக்கத்துக்கோயிலில்இருக்கிறாள். இருவருக்கும்இடையேதனிக்கோயிலில்வீரநாராயணப்பெருமாள்கிழக்குநோக்கியவராய்அறிதுயிலில்இருக்கிறார். இவர்எங்கேஇங்குவந்துசேர்ந்தார்? பிரமனும்விஷ்ணுவும்மகுடேசுவரரைத்தரிசிக்கவந்தவர்கள். இவர்களில்பிரம்மாமேலப்பிரகாரத்தில்வன்னிமரத்தடியில்தங்கியிருக்கிறார். தரிசனம்கிடைப்பதற்குகொஞ்சம்காத்திருக்கவேண்டியிருந்ததுபோலும்! அந்தநேரத்தில்அயர்ந்துபடுத்திருக்கவேணும்இந்தவீரநாராயணர். மைத்துனர்துயிலைக்கலைக்கவேண்டாம்என்றுகொடுமுடிநாதர்எண்ணிவிட்டார்போலும்!

இதனாலேஇக்கோயிலைஉத்தமர்கோயிலைப்போல்திரிமூர்த்திகள்கோயில்என்றேகூறுகின்றனர். பெருமாள்இங்குவந்திருக்கிறார்என்பதைஅறிந்துஅவர்துணைவிமகாலக்ஷ்மியுமேவந்திருக்கிறாள். எப்போதும்காலடியில்இருப்பவள்இங்குதனிக்கோயிலில்பெருமாளுக்குத்தென்புறம்தலைமாட்டிலேயேஉட்கார்ந்திருக்கிறாள். இவர்களையெல்லாம்சென்றுகண்டுவணங்கிஎழலாம். வெளிப்பிரகாரத்தைச்சுற்றினால்அங்குதலவிருட்சமானவன்னி. அங்கேஒரேபீடம், அதில்பிரம்மாஎல்லோரும்இருக்கிறார்கள். இவர்களுக்கும்தெற்கேகோயிலின்வடமேற்குமூலையில்அனுமாருக்குஎன்றுஒருகோயில். அங்குபெரியதொருசிலைவடிவில்ஆஞ்சநேயர். ஊசிநுழையஇடம்கொடுத்தால்ஓட்டகத்தையேநுழைப்பவர்போல், இந்தப்பெருமாளுக்குஇடம்கொடுக்கஅவர்தம்சிறியதிருவடியையுமேகூட்டிக்கொண்டுவந்திருக்கிறார்.

இதுஎல்லாம்தென்நாட்டில்நிலவியசைவவைஷ்ணவஒற்றுமையைக்காட்டுவதற்காகஎழுந்தவைஎன்றுதெரிந்துகொண்டோமானால்அதுசமயசமரசத்தைவளர்க்கஉதவும்.

இக்கோயிலில்ஒருசிறப்பு, நாம்பார்த்தசிலதலங்களில்சூரியன்கோபுரவாயில்கொடிமரம்நந்திமுதலியஎல்லாவற்றையுங்கடந்துகருவறைவந்துஇறைவனைத்தழுவியிருக்கிறான்வருஷத்தில்இரண்டுமூன்றுநாட்களில். ஆனால்ஒருதலத்திலும்இறைவியைஅவன்பூசித்தாகஇல்லை. இத்தலத்தில்மட்டும்ஆவணி, பங்குனிமாதங்களில்மூன்றுநான்குதினங்கள்சூரியன்ஒளி, முறையேஇறைவன்அம்பாள்இருவர்பேரிலுமேவிழுகின்றது. இப்படிச்சூரியஒளிபடும்படிகோயில்கட்டியசிற்பிகள்எத்தனைகற்பனைஉடையவர்களாகஇருந்திருக்கவேண்டும்என்றுமட்டும்எண்ணினால்நம்மைஅறியாமலேயேநமதுதலைஅந்தச்சிற்பிகளுக்குவணங்கும்.

இத்தலத்தில்சித்திரைத்தேர், ஆடிபதினெட்டு, மார்கழித்திருவாதிரை, வைகுண்டஏகாதசிஆகியவிழாக்கள்எல்லாம்சிறப்பாகநடக்கின்றன. கோயிலைவிட்டுவெளிவருமுன்இக்கோயிலில்உள்ளசெப்புச்சிலைகளையும்பார்த்துவிடவேண்டும். ஆனந்தநடராஜர், சிவகாமிஎல்லாம்மற்றக்கோயில்களில்உள்ளவர்களைப்போலத்தான். சோமாஸ்கந்தர், திரிபுராந்தகர், சமயக்குரவர்நால்வர்எல்லாம்செப்புப்படிமங்கள். இவர்களோடுகாளிகாதாண்டவத்திருஉருவம்ஒன்று. இரண்டுகாலையுமேஊன்றிஅநாயாசமாகஆகாயவீதியைநோக்கிநடக்கும்நர்த்தனர்அவர்மிகஅழகானவடிவம். இவரைக்காணவேஒருநடைபோடலாம்இந்தத்தலத்துக்கு.

இத்தலத்துக்குச்சமயக்குரவர்நால்வருமேவந்திருக்கிறார்கள். மணிவாசகரதுஅனுபவத்தைமுன்னரே

நடராஜர்

பார்த்தோம். சுந்தரர்நமச்சிவாயப்பதிகம்பாடுவதற்குத்தெரிந்தெடுத்ததலமேஇதுதான்என்றும்தெரிந்தோம். சம்பந்தர்அப்பர்இருவரும்வேறுபாடிஇருக்கிறார்கள்.

பெண்ணமர்மேனியினாரும்,

பிறைபுல்குசெஞ்சடையாரும்

கண்ணமர்நெற்றியினாரும்,

காதமரும்குழையாரும்,

எண்ணமருங்குணத்தாரும்,

இமையவர்ஏத்தநின்றாரும்,

பண்ணமர்பாடலினாரும்,

பாண்டிக்கொடுமுடியாரே

என்பதுசம்பந்தர்தேவாரம். கோயிலில்உள்ளகாளிகாதாண்டவத்திருவுருவின்முன்நின்றுஇப்பாடலைப்பாடித்தான்பாருங்களேன். அவர்நம்மோடுபேசத்தயங்கமாட்டார்என்பதனைக்காண்போம். பண்ணமைந்தபாடலால்சம்பந்தர்பாடினார். அப்பரோ,

சிட்டனை, சிவனைச்

செழுஞ்சோதியை

அட்டமூர்த்தியை

ஆலநிழல்அமர்

பட்டனைத்திரும்ப

பாண்டிக்கொடுமுடி

நட்டனைத்தொழ

நம்வினைநாசமே

என்றுஅடக்கமாகவேபாடிமகிழ்கிறார். இந்தப்பாடல்களையெல்லாம்பாடிமகிழ்ந்தால், அங்குள்ளநிர்வாகிகள்சொல்வார்கள், கொங்குநாட்டில்உள்ளதலங்களில்இத்தலம்ஒன்றுதான்மூவராலும்பாடப்பெறும்பேறுபெற்றதுஎன்று. நான்சொல்லுவேன், இக்கொடுமுடியாரைப்பாடும்பேற்றைஇந்தமூவர்என்ன, சமயக்குரவர்கள்நால்வருமேபெற்றவர்கள்தான்என்று. இத்தலத்துஇறைவன்பாடல்உகந்தபெருமான்என்றும்தெரிகிறது. நால்வரதுபாடல்பெற்றதோடுஅவர்திருப்தியடையவில்லை, கபிலதேவநாயனாரின்பாடல்ஒன்றையும்பெற்றிருக்கிறார். பதினோராம்திருமுறையில்இரட்டைமணிமாலையில்ஒருபாட்டு, நல்லஅகத்துறையில்அமைந்திருக்கிறது. ஒருபெண்கொடுமுடியாரிடம்காதல்கொண்டுவாடுகிறாள். அந்தப்பெண்ணின்தாய்இறைவனிடம்சென்றுஇப்படிஅவள்நாளுக்குநாள்மெலிந்துவாடிநையவிடலாமா? என்றுகேட்கிறாள். இந்தக்கேள்விதான்பாட்டாகவருகிறதுகபிலதேவநாயனாரதுவாக்கில்.

நிறம்பிறிதாய், உள்மெலிந்து

நெஞ்சுஉருகிவாளா

புறம்புறமேநாள்போக்கு

வாளோ? – நறுந்தேன்

படுமுடியாய்பாய்நீர்

பரந்துஒழுகுபாண்டிக்

கொடுமுடியாய்! என்றன்கொடி

பாடலைப்பாடிப்பாடிமகிழலாம். இந்தப்பாடல்நம்உள்ளத்தைஉருக்குகிறது.

இக்கோயிலில்கல்வெட்டுக்கள்நிறையஉண்டு. இத்தலம்அதிராஜமண்டலத்துக்காவிரிநாட்டுக்கறையூர்திருப்பாண்டிக்கொடுமுடியென்றும், இறைவன்பெயர்திருப்பாண்டிக்கொடுமுடிமகாதேவர், ஆளுடையநாயனார்என்றும்கல்வெட்டுக்களில்காணப்படுகின்றன. சுந்தரபாண்டியன்கோனேரின்மைகொண்டான், கொங்குமன்னன்வீரநாராயணரவிவர்மன்முதலியோர்கல்வெட்டுக்களின்மூலம்இங்குபள்ளிக்கொண்டபெருமாள், பெரியதிருவடி, இளையபிள்ளையார்முதலியவர்கள்எழுந்தருளியவிவரமும்கோயில்பூசனை, திருவிழாதிருப்பணிகளுக்குஏற்படுத்தியநிலதானவிவரங்களும்கிடைக்கின்றன. இவற்றையெல்லாம்ஆராய்வார்ஆராயட்டும். நாம்இறைவன், இறைவி, பெருமாள், பிரம்மாமுதலியவர்களைவணங்குவதோடுஅங்குள்ளமுருகனை, அருணகிரியாருடன்சேர்ந்துகுருஎனச்சிவனுக்கருள்போதா? கொடுமுடிகுமரப்பெருமாளே!’ என்றுபாடிப்பரவிவிட்டுத்திரும்பிவந்துவிடலாம்.

ஊரைவிட்டுத்திரும்புமுன், அங்குள்ளஅன்பர்கள்ஊருக்குத்தென்மேற்குமூலையில்தேரோடும்வீதியில்உள்ளமலையம்மன்கோயிலுக்கும்அழைத்துச்செல்வர். பர்வதவர்த்தினியேஅங்குகன்னிக்கோலஉருவில்எழுந்தருளியிருக்கிறாள். அம்மன்சந்நிதியில்நந்திஇருக்கிறது. இன்னும்அக்கோயிலுள்நாகநாதர், ஆனந்தவல்லி, பேச்சியம்மாள், கருப்பணசாமிமுதலியவர்களதுசந்நிதிகளும்இருக்கின்றன. இவர்களையுமேபார்த்துவிட்டுரயிலேறிஊர்திரும்பலாம்.