வேட்டுவ முருகன்
கொல்லியம்பாவைஇருந்தாள்என்பர்சங்ககாலச்சான்றோர். அவள்இருந்தாளோஇல்லையோ? இன்றுநாமக்கல்லிலிருந்து 15 மைல்தூரத்தில்உள்ளபேலுக்குரிச்சியை (வேலுக்குரிச்சிதான்இப்படிமாறிஇருக்கிறது.) அடுத்துள்ளகொல்லிமலைச்சாரலிலேஒருசிறியகுன்றின்பேரிலேமுருகன்நிற்கிறான், வேட்டுவக்கோலத்தில். தலையிலேவேட்டுவனதுகொண்டை, வலக்கையிலேதண்டு, இடக்கையிலேஒருகோழி. இந்தக்கோலத்தில்தான்அவன்வள்ளியைமணம்புணரவந்திருக்கிறான். கொல்லிமலைச்சாரலைக்கண்டதும்அங்கேயேதங்கியிருக்கிறான். அவன்பேரில்குருக்கள்ஒருவர்பாட்டுஒன்றுபாடியிருக்கிறார்.
வள்ளிக்குஇசைந்தமணவாளன்வேடுவனாய்அள்ளிக்கொளும்பேர்அழகுடனே – துள்ளுகின்றகோழியினைக்கையிடுக்கிகொல்லிமலைச்சாரலிலே
வாழுகின்றான்சென்றேவணங்கு
என்றுஎனவே, அந்தவேட்டுவமுருகனையும்கண்டுதொழுதுவிட்டேதிரும்பலாம்.
செங்கோட்டுஅர்த்தநாரி
ஓர்இலக்கியக்கூட்டம். அக்கூட்டத்தில்ஓர்அறிஞர்சொற்பொழிவுநிகழ்த்தினார். அவரோசிறந்தசீர்திருத்தவாதி, ஆணுக்குப்பெண் ‘சரிநிகர்சமானம்‘ என்றுஅறைகூவுகிறார். பேச்சின்இடையிலேசொன்னார் : ‘நம்நாடுஆங்கிலேயர்ஆளுகையில்இருந்தபொழுதுசீமையில்இந்தியாமந்திரியாகஇருந்தபெதிக்லாரன்ஸ்என்பவர்பெயர்எப்படிஅமைந்ததுதெரியுமா? லாரன்ஸ்என்பதுதான்அவர்பெயர். பெதிக்என்பதுஅவரதுமனைவியின்பெயர், இருவரும்சமூகசேவையில்ஈடுபட்டவர்கள். அதுகாரணமாகஇருவரும்தங்கள்இருவரதுபெயரையும்இணைத்தேமக்களிடம்அறிமுகம்செய்துகொண்டனர், அம்மைபெயர்மிஸஸ்பெதிக்லாரன்ஸ்என்றால்ஐயாபெயர்மிஸ்டர்பெதிக்லாரன்ஸ். நாமோநமதுமனைவியின்பெயரைமுழுக்கவேமறக்கடித்துவிடுகிறோம். மிஸஸ்ராமசாமி, மிஸஸ்கிருஷ்ணசாமிஎன்றேஅவர்களையும்அழைத்துவருகிறோம். இதுசரியா?’ என்றபேசிக்கொண்டேபோனார். அந்தக்கூட்டத்துக்குத்தலைமைவகித்தநான்இதற்குக்கொஞ்சமும்சளைக்கவில்லை ‘ஆணும்பெண்ணும்சரிநிகர்சமானம்என்பதற்குஇந்தப்பெயர்இணைப்புத்தான்முக்கியம்என்றால்பெதிக்லாரன்ஸ்பிறப்பதற்குஎவ்வளவோகாலத்துக்குமுன்பேதமதுகடவுளர்நமக்குவழிகாட்டியிருக்கிறார்களே. நாம்வழிபடும்மூர்த்திகளில்பெரும்பாலோர்அம்மையப்பனாகத்தானேஇருக்கிறார்கள். அவர்கள்பெயரும்உமாமஹேஸ்வரன், லட்சுமிநாராயணன், சீதாராமன்என்றுதானேஇருந்திருக்கின்றன. பெயரை
மாத்திரந்தானாதங்கள்பெயருடன்கொண்டிருக்கிறார்கள்? அவர்களதுவடிவையேதங்கள்வடிவில்சேர்த்துக்கொண்டிருக்கிறார்களே. மனைவியைப்பாகத்தில்வைத்துக்கொள்கிறான்ஒருவன், ஆகத்தில்வைத்துக்கொள்கிறான்ஒருவன், என்? நாவிலேயேவைத்துக்கொள்கிறான்மற்றொருவன். திரிமூர்த்திகளின்கதையேஇவ்வளவினதென்றால்இம்மூர்த்திகளைவணங்குகின்றவர்களாகியநாமாநம்மனைவியைசஹதர்மசாரிணிகளாகவைத்துக்கொள்ளத்தயங்கப்போகிறோம்?’ என்றுஎதிர்க்கேள்விபோட்டேன், பேச்சாளரிடம். உண்மைதானே. இம்மூர்த்திகளெல்லாம்நமக்குநல்லவழிகாட்டிகளாகஅல்லவாஅமைந்திருக்கின்றனர். அதிலும்பாகத்திலேயேவைத்துக்கொண்டிருக்கிறானேஅந்தமாதிருக்கும்பாதியன், அந்தஅர்த்தநாரியைநினைத்தால்அந்தமூர்த்தியைக்கற்பனைபண்ணியகலைஞனைநினைக்கிறோம். சொல்லிலும்கல்லிலும்அம்மூர்த்தியைஉருவாக்குவதில்தான்எவ்வளவுசிந்தனைத்திறன்? மனிதஉடம்பின்அமைப்பையும்பார்ப்போமானால்ஒவ்வோர்உடம்பும்இருவேறுஒட்டுகளாகஅமைக்கப்பெற்றிருத்தல்விளங்கும். ஆணும்பெண்ணும்ஒன்றுகின்றவகையில்அன்றி, ஊர்வன, பறப்பன, நடப்பனமுதலியஎந்தஉயிருமேசிருஷ்டிக்கப்படுவதில்லையே. இப்படிசிருஷ்டிக்கப்படும்உயிரும்உடலும்தத்தம்தாயும்தந்தையுமாய்இருவகைஇயல்புகளும்பொருந்திநிற்கவேண்டுவதுதானே. உலகில்உள்ளஎல்லாஉயிர்களுக்கும்தாயாகவும்தந்தையாகவும்இருக்கும்இறைவனைஅந்தஉருவில், ஆம்! பாதிஆணாகவும், பாதிபெண்ணாகவும்வழிபடுவதில்தான்எத்தனைபொருத்தம். அப்படிஇறைவனைஅர்த்தநாரியாக, மாதிருக்கும்பாதியனாக, பஞ்சின்மெல்லடியாள்பாகனாக, வழிபடும்தலம்தான்திருச்செங்கோடுஎன்னும்கொடிமாடச்செங்குன்றூர். அந்தத்திருச்செங்கோடுஎன்னும்தலத்துக்கேசெல்கிறோம்நாம்இன்று.
அர்த்ததாரி
திருச்செங்கோடு, சேலம்மாவட்டத்தில்உள்ளஒருதாலுக்காவின்தலைநகரம். இத்தலம்சேலத்துக்குத்தெற்கே 28 மைல்தூரத்தில்இருக்கிறது. சேலம்ஜங்ஷனில்இறங்கிக்கார்வைத்துக்கொண்டுசெல்லலாம். சேலம் – ஈரோடுரயில்பாதையில்சங்ககிரிதுர்க்கம்என்னும்ஸ்டேஷனில்இறங்கித்தென்கிழக்காய்ஆறுமைல்வண்டிபிடித்துக்கொண்டும்சென்றுசேரலாம். சொல்லப்போனால்செங்கோடுஎன்பதேசெங்குன்று, செங்கிரிஎன்றெல்லாம்வழங்கி, சங்சுகிரிஎன்றும்வழங்கப்படுகிறதோஎன்னவோ?
இந்தச்சங்ககிரியிலும்ஒருசிறுகுன்றுஉண்டு, அதனால்தானேசங்ககிரிதுர்க்கம்என்றுபெயர்பெற்றிருக்கிறது. சங்ககிரியில்இருந்துபோகும்போதேதிருச்செங்கோட்டுமலைதெரியும். பெயருக்குஏற்பவேசிவந்தநிறத்தோடுஅம்மலைகாட்சிஅளிக்கும். இன்னும்அம்மலைமேல்ஏறிநிற்கும்அர்த்தநாரியைப்போலவேஇரண்டுசிகரங்கள்வேறேபின்னிப்பிணைந்துநிற்பதும்தெரியும். பின்னிக்கிடக்கும்பெருங்கோடாகத்திருச்செங்கோடுஇருப்பதனால்தானே, வேறுஎங்கும்இல்லாதஅர்த்தநாரிமூர்த்தம்இங்குமூலமூர்த்தியாகவேஎழுந்தருளியிருக்கிறது.
மலைகிட்டத்தட்டஇரண்டாயிரம்அடிஉயரம்உயர்ந்திருக்கிறது. அதில் 1900 அடிஉயரத்தில்கோயில்இருக்கிறது. அம்மலைஏற 1200 படிகள்இருக்கின்றன. பழனியில்இருப்பதுபோல்நன்றாகச்செப்பம்செய்யப்பட்டபடிகள்அல்ல. என்றாலும்ஏறுவதற்கும்இறங்குவதற்கும்வசதியாகஇருக்கும். உயரத்திலும்பழனிக்குஒன்றரைப்பங்குஇருப்பதால்ஏறுவதுகொஞ்சம்சிரமமாகவேஇருக்கும். மலைஏறமுயல்வதற்குமுன்னாலேயேஅடிவாரத்தில்உள்ளகைலாயநாதர்கோயிலில்சென்றுவணங்கிவிடலாம். மலைஏறிஇறங்கியபின்னர்எப்போதடாஜாகைசென்றுஇளைப்பாறுவோம்என்றிருக்கும்; அடிவாரத்தில்கோயிலுக்குஎல்லாம்செல்லத்தெம்புஇருக்காதே
இந்தக்கைலாயநாதர்கோயில்ஊருக்குநடுவில்இருக்கிறது. கமா!i 250 அடிசதுரத்தில்மதில்களுடன்கூடியபெரியகோயில்தான், கோயிலின்பெருந்திருவாயிலே 76 அடிஉயரம்என்றால்பார்த்துக்கொள்ளுங்களேன். இங்குகைலாயநாதரும்அவரதுதுணைவிபரிமளவல்லியும்தனித்தனிக்கோயிலில்இருக்கிறார்கள். இருவருக்கும்இடையேஒருசிறுகோயிலில்சுப்பிரமணியர்நிற்கிறார். இவர்ஆறுமுகவன்அல்ல. தலையில்திருமுடியும்கரத்தில்வேலும்தாங்கியகோலத்தில்இருக்கிறார். இவர்களையும்இத்தலவிநாயகரானபட்டிவிநாயகரையும்வணங்கிப்பின்னரேமலைஏறமுற்படலாம். அப்போதுதானேஉடலில்மாத்திரம்அல்ல, உள்ளத்திலும்வலுவோடுமலைஏறமுடியும்.
சரி, இனிமலைஏறத்தொடங்கலாமா? அதற்குமுன்இத்தலத்தைக்கொடிமாடச்செங்குன்றூர்என்றும்இங்குள்ளமலையைநாககிரிஎன்றம்ஏன்அழைக்கிறார்கள்என்றும்தெரிந்துகொள்ளலாம், கொடிகளைவீசும்மாடமாளிகைகள்நிறைந்தசிவந்தமலையைஉடையதால்கொடிமாடச்செங்குன்றூர்என்றுபெயர்பெற்றிருக்கவேணும். நமக்குத்தான்தெரியுமே, அந்தவாயுவுக்கும்ஆதிசேஷனுக்கும்நடந்தபோட்டிமகாமேருவைஆதிசேடன்தன்படத்தைவிரித்துமூடிக்கொள்கிறான், வாயுவோமேருவைப்பெயர்க்கும்வண்ணம்வீசுகிறான். வாயுவின்வேகம்தாங்காமல்சர்ப்பஅரசன்தன்படத்தைச்சற்றேமேலேதூக்கியிருக்கிறான்சிறிதுமூச்சுவாங்க. அவ்வளவுதான்; மேருவின்சிகரங்களில்ஒன்றுபிய்த்துக்கொண்டுவந்துவிழுந்திருக்கிறது. இங்கேஅத்துடன்சேடனதுவாயின்இரத்தம்பட்டுச்சிவந்தகுன்றாகவேஅதுஇருந்திருக்கிறது. இதனாலேயேசெங்கோடுஎன்றும்நாககிரிஎன்றும்வழங்கப்பட்டுவந்திருக்கிறது.
அடிவாரத்தில்கஜமுகப்படிவிநாயகர்முதற்படியிலேயேஒர்இழுவைமரத்தடியில்இருக்கிறார். அவரைவணங்கிவிட்டேமலைஏறவேணும். அதன்பின்செங்குந்தர்மண்டபம், காளத்திசுவாமிகள்திருமடம், திருமுடியார்மண்டபம்எல்லாம்படியேறிக்கடக்கவேணும். இங்கேதான்கற்பாறையிலே, நாககிரிஎன்றபெயருக்குஏற்பஅறுபதடிநீளத்தில்பெரியஉருவில்ஐந்துதலைப்பாம்புஒன்றைச்செதுக்கிவைத்திருக்கிறார்கள். பாம்பின்படத்தின்நடுவிலேஒருசிவலிங்கம்இருக்கிறது. இந்தநாகசிலைப்பக்கத்திலுள்ளசிறுமண்டபத்திலிருந்துசுமார் 200 படிகளைக்கடந்தால்செங்குந்தசின்னமுதலியார்மண்டபம்வரும். அதன்பின்சிங்கத்தூண்மண்டபம். இதையும்கடந்தபின்பேஅறுபதாம்படிஎன்னும்சத்தியப்படிகள். பிறதலங்களில்பதினெட்டாம்படியென்றும், கருப்பன்என்றும்கூறும்இடத்தைப்போன்றதுஇது. ஏதாவதுதீராதவழக்கென்றால், வாதிடுபவர்கள்இந்தஅறுபதுபடிகளையும்ஏறி, தான்சொல்லுவதுஎல்லாம்சத்தியம்என்றுஅந்தப்படிகளின்பேரில்உள்ளமுருகக்கடவுள்அறியச்சொல்லவேணும். இன்றும்இச்சத்தியமுறைநடக்கிறது.
இந்தஅறுபதாம்படிமேல்எல்லையில்இருக்கும்முருகனைஅன்றேஅருணகிரியார்சத்தியவாக்கியப்பெருமாள்என்றுஅழைத்துதிருப்புகழ்பாடியிருக்கிறார். நாம்சத்தியம்ஒன்றும்செய்யாவிட்டாலும், சத்தியவாக்கியப்பெருமானுக்குவணக்கம்செலுத்தும்வாக்கில்கொஞ்சம்அங்குள்ளமண்டபத்தில்தங்கியிருந்துஇளைப்பாறிமேலும்நடக்கலாம், அதன்பின்செட்டிக்கவுண்டன்மண்டபம், தேவரடியான்மண்டபம், இளைப்பாறுமண்டபம்எல்லாம்கடந்தேகோபுரவாசல்மண்டபத்துக்குவந்துசேரவேணும். அங்கும்கொஞ்சம்இருந்துஇளைப்பாறிக்கொண்டேகோயிலுள்செல்லலாம். இந்தமண்டபத்தைஒருபெரியகோபுரம்அழகுசெய்கிறது. அந்தமண்டபத்துக்கேகீழ்ப்புறம்இருபதுபடிக்கட்டுகள்கீழ்இறங்கியேகோபுரத்தின்பிரகாரத்துக்குவரவேணும். இனிஅக்கோயிலைவலம்வரமுனைந்தால்முதல்முதல்நாம்வந்துசேருவதுசெங்கோட்டுவேலவர்சந்நிதிதான். அவன்பாலசுப்பிரமணியன், இவன்மிகவும்அழகுவாய்ந்தவன். அவன்அழகினைக்கண்டேஅருணகிரியார்,
மாலோன்மருகனை, மன்றாடி
மைந்தனை, வானவர்க்கு
மேலானதேவனை, மெய்ஞ்ஞான
தெய்வத்தை, மேதினியில்
சேலார்வயல்பொழில்செங்கோடனைச்
சென்றுகண்டுதொழ
நாலாயிரம்கண்படைத்திலனே
அந்தநான்முகனே
என்றுபாடிமகிழ்கிறார். இந்தஅருணகிரியார்இந்தச்செங்கோட்டுவேலனிடம்மிகஈடுபாடுஉடையவர்என்றுதெரிகிறது. கந்தர்அலங்காரத்தில்அவனுக்குஎன்றுஎட்டுப்பாட்டைஒதுக்கிவிடுகிறார். இன்னும்கந்தரனுபூதி, திருப்புகழ்பாடும்போதும்இவனைமறக்கவில்லை. கிழக்குநோக்கிநிற்கும்இந்தவேலன்வலதுகரத்தில்வேலும்இடதுகரத்தில்கோழிக்கொடியுடனும்நிற்கிறான். உற்சவமூர்த்தமாகநிற்கும்வேலவனோவள்ளிதெய்வயானைசகிதமாகவேநிற்கிறான். இவனைக்கண்டுதொழாதுமேல்நடக்கஇயலாது. இக்கோயிலின்முன்மண்டபம்நல்லசிற்பவேலைப்பாடுகள்நிறைந்தது. சந்நிதிக்குச்சென்றதும்மகாமண்டபத்தில்நாம்முதலில்காண்பதுஅர்த்தநாரீசுவரரின்உற்சவமூர்த்தத்தையே. செப்புவடிவத்தில்சிறந்தவடிவம். தலையிலேசடைமுடிக்குப்பதிலாகஓர் ‘ஆண்டாள்கொண்டை‘ மற்றப்படிஇடப்பாகம்எல்லாம்பெண்மையும்வலப்பாகம்ஆண்மையும்நிறைந்திருக்கும். வலப்பாகத்தில்மற்றஅர்த்தநாரியில்இல்லாதவிதத்தில்ஒருகோலைமிடுக்காகஏந்தியிருப்பார். இன்னும்இம்மூர்த்திக்குஇரண்டேதிருக்கரங்கள்என்பதும்உய்த்துணரத்தக்கது. இந்தவடிவினையேமாணிக்கவாசகர்,
தோலும்துகிலும், குழையும்
சுருள்தோடும்
பால்வெள்ளைநீறும்
பசுஞ்சாந்தும், பைங்கிளியும்
சூலமும்தொக்கவளையும்
உடைத்தொன்மைக்
கோலமேநோக்கிக்
குளிர்ந்தூதாய்கோத்தும்பீ!
என்றுபாடியிருக்கிறார். இந்தவடிவினைஇந்தப்பாட்டோடுபொருத்திப்பார்த்துக்கொண்டிருக்கும்போதுஒருதொண்டுகிழமுனிவர்மூன்றுகால்களுடன்இவர்காலடியில்நிற்பதைக்காண்போம். இவர்யார்என்றுவிசாரித்தால்அவர்தாம்பிருங்கிமுனிவர்என்பார்கள். பிருங்கிசிவனையேதொழுபவர்; சக்தியைவணங்காதவர். இதுசக்தியாம்அன்னைக்குஅவமானமாகஇருந்திருக்கிறது. அதற்காகஇறைவனிடம்வேண்டிஅவர்உடலிலேயேபங்குபெற்றிருக்கிறாள். அப்போதுகூடபிருங்கிவண்டுஉருவெடுத்துஇந்தஅர்த்தநாரிவடிவத்தைத்துளைத்துச்சிவனைமாத்திரம்வலம்வந்துவணங்கினாராம். அப்படிவணங்கும்போதுதம்உடலில்உள்ளசதையைஎல்லாமேஉதறிஎலும்பும்தோலுமாகவேநின்றிருக்கிறார். அதனால்இறைவன்இவருக்குமூன்றாவதுகால்கொடுத்திருக்கிறார்.
இனிவடக்குநோக்கிச்சென்றால்மூலவராம்அர்த்தநாரீசுவரரைக்காணலாம். நல்லவெண்மைநிறத்தில்உற்சவமூர்த்தம்போலவேஇருப்பார். காலடியில்நீர்ஊறிக்கொண்டிருக்கும். மேற்குநோக்கிநிற்கிறார்இவர். ஆனால்மேற்குநோக்கிவாயில்கிடையாது. ஒருசித்திரப்பலகணிதான்அங்குஉண்டு. இப்படிநிற்கும்அர்த்தநாரியைக்கண்டுதானேசம்பந்தர்,
வெந்தவெண்ணீறுஅணிந்து,
விரிநூல்திகழ்மார்பில்நல்ல
பந்தணவும்விரலாள்ஒரு
பாகம்அமர்ந்துஅருளிக்
கொந்தணவும்பொழில்சூழ்கொடி
மாடச்செங்குன்றூர்நின்ற
அந்தணனைத்தொழுவார்
அவலம்அறுப்பாரே
என்றுபாடியிருக்கிறார். இன்னும்ஞானசம்பந்தர்இத்தலத்துக்குவந்திருந்தபோதுமக்களையெல்லாம்குளிர்சுரம்வாட்டஅவர், ‘செல்வினைவந்துஎமைத்தீண்டப்பெறாதிருநீலகண்டம்‘ என்றுபாடிமக்களைக்குளிர்சுரம்தீண்டாமல்காப்பாற்றியிருக்கிறார்.
இந்தஅர்த்தநாரீசுவரரைப்பார்த்தபின்அங்கேயுள்ளவிசுவநாதர், விசாலாக்ஷி, ஆதிகேசவப்பெருமாள், நாகேச்சுரர்சந்நிதிகளுக்கும்சென்றுவணங்கலாம். மேலும்மலைஏறிபாண்டீசர்கோயிலுக்குச்சென்றும்வணங்கலாம். இக்கோயில்தான்மலைச்சிகரத்தின்உச்சியில்இருக்கிறது. இங்குள்ளலிங்கமூர்த்தியைவந்தீசர்என்றும்அழைக்கின்றனர். புத்திரசந்தானம்பெறவிரும்புபவர்கள்கார்த்திகைநக்ஷத்திரம்கூடியநன்னாளில்சென்றுவணங்கினால்மகப்பேறுபெறுகிறார்கள்.இந்தக்கோயிலில்நிறையக்கல்வெட்டுகள்உண்டு. ராஜகேசரிவர்மன், பரகேசரிவர்மன்காலத்துக்கல்வெட்டுக்கள்பிராமணபோஜனம்செய்விக்கஏற்படுத்தியநிபந்தங்களைக்கூறுகின்றன. அறுபதாம்படிப்பக்கம்மதுரைகொண்டபரகேசரிவர்மனதுவெற்றிகளைக்குறிக்கும்கல்வெட்டுக்கள்இருக்கின்றன. அவைஅக்காலத்தில்கிராமசபைகள்எப்படிநடந்தனஎன்பதையெல்லாம்குறிக்கின்றன. ஜடாவர்மன்சுந்தரபாண்டியன், கிருஷ்ணதேவராயன், மதுரைதிருமலைநாயக்கர்காலத்துக்கல்வெட்டுக்களும்இருக்கின்றன. மலைமேலேஅக்காலத்திலேகோட்டைஒன்றுஇருந்ததுஎன்பதற்குக்கூடச்சான்றுகள்கல்வெட்டில்கிடைக்கின்றன. இன்றுஅக்கோட்டையின்சின்னம்முழுவதும்அழிந்துபோயிருக்கிறது. கோட்டைபோய்விட்டது. கோட்டைவாசல்என்றபெயர்மட்டும்இருக்கிறது. நமக்குள்ளகால்வலியில்இதைப்பற்றியெல்லாம்விரிவாகஆராய்ச்சிசெய்யத்தோன்றாது. ஆதலால்இத்துடனேயேநிறுத்திக்கொண்டுதிரும்பிவிடுவோம்.