பழநிஆண்டவன்
‘மணங்கமழ்தெய்வத்துஇளநலம்‘ காட்டுபவன்முருகன்என்பார்நக்கீரர். இளைஞனாக, அழகனாகமட்டும்இருப்பவன்இல்லைமுருகன். சிறந்தஅறிஞனாசுவும்இருக்கிறான். ஞானப்பழமாகஅன்னைக்கும், ஞானகுருவாகத்தந்தைக்கும்அமைந்தவன்என்றல்லவாஅவனைப்பற்றியவரலாறுகள்கூறுகின்றன? ஞானப்பழமாகஅவன்நிற்கிறநிலைக்குஒருநல்லகதை. அன்னைபார்வதியும்அத்தன்பரமசிவனும்கயிலைமலையிலேஅமர்ந்திருக்கிறார்கள்ஒருநாள். அங்குவந்துசேருகிறார், கலகப்பிரியரானநாரதர். வந்தவர்சும்மாவரவில்லை . கையில்ஒருமாங்கனியையுமேகொண்டுவருகிறார். அதனைஐயனிடம்கொடுத்துஅவன்தன்ஆசிபெறுகிறார். அவனுக்குத்தெரியும்இவர்செய்யும்விஷமம். அந்தவிஷமத்திலிருந்துதானேபிறக்கவேண்டும்ஒருநன்மை. நாரதர்தந்தகனியைச்சிவபிரான்அன்னைபார்வதியிடம்கொடுக்கிறார். பார்வதிக்குஓர்ஆசை, மக்கள்இருவருக்கும்கொடுத்துஅவர்கள்உண்பதைக்கண்டுகளிக்கலாமேஎன்று. அந்தஎண்ணம்தோன்றியஉடனேயே, மக்கள்இருவரும்–விநாயகரும்முருகனும்தான்வந்துசேருகின்றனர். அதற்குள்நினைக்கிறார்சிவபெருமான், அக்கனிமூலம்ஒருபரீட்சையேநடத்தலாமேஎன்று. உங்கள்இருவருக்குள்ஒருபந்தயம். யார்இந்தஉலகைமுதலில்சுற்றிவருகிறார்களோ, அவர்களுக்கேஇக்கனிஎன்கிறார்தம்பிள்ளைகளிடம்.
இந்தப்போட்டியில்மூஷிகவாகனனானவிநாயகர்வெற்றிபெறுவதுஏதுஎன்றுநினைக்கிறான்முருகன். தன்மயில்வாகனத்தில்ஏறிக்கொண்டு ‘ஜம்‘ என்றுவானவீதியிலேபுறப்பட்டுவிடுகிறான்அவன். பிள்ளையார், நிறைந்தஞானவான்அல்லவா? அவர்தம்வாகனத்தில்எல்லாம்ஏறவில்லை . மிகஅமைதியாகக்காலால்நடந்தேஅன்னையையும்அத்தனையும்சேர்த்துஒருசுற்றுச்சுற்றுகிறார். மாங்கனிக்குக்கைநீட்டுகிறார். ‘என்னடா? உலகம்சுற்றியாகிவிட்டதா? என்றுதந்தைகேட்டால், ‘உலகம்எல்லாம்தோன்றிநின்றுஒடுங்குவதுஉங்களிடம்தானே! உங்களைச்சுற்றினால்உலகத்தையேசுற்றியதாகாதா? என்றுஎதிர்க்கேள்விபோடுகிறார். இந்தப்பதிலைஎதிர்க்கமுடியாமல்கனியைக்கொடுத்துவிடுகிறார்அத்தனும், போட்டியில்வெற்றிபெற்றமகனாம்விநாயகருக்கு. உலகம்எல்லாம்சுற்றிஅலுத்துவந்தமுருகன்விஷயம்அறிகிறான். ‘அடே! இந்தஅண்ணன்கனியைத்தன்மூளையைஉபயோகித்துஅல்லவாபெற்றுவிட்டான்? நாமும்இன்றுமுதல்ஞானவானாகவேவிளங்கவேண்டும்‘ என்றுநினைக்கிறான்.
ஞானம்பெறத்தடையாயிருக்கும்தனதுஉடைமைகளைஎல்லாம்துறக்கிறான். கோவணத்தைமட்டும்கட்டிக்கொண்டுவெளியேறிவிடுகிறான். தாயாம்பார்வதிக்கோதன்பிள்ளைஇளவயதிலேயேகாவிஉடுத்திக்கோவணாண்டியாகப்போவதில்விருப்பம்இல்லை. அதனால்பிள்ளையைப்பார்த்து. ‘அப்பா! நீயேஞானப்பழமாகஇருக்கும்போதுநாங்கள்வேறுஉனக்குப்பழம்கொடுக்கவேண்டுமா? என்றுகூறிச்சமாதானம்செய்கிறாள். முன்வைத்தகாலைப்பின்வாங்காதஞானப்பழமானமுருகன்பழநிமலைமீதுநின்றுவிடுகிறார். பழம்நீஎன்பதுதான்பழநிஎன்றுஆகியிருக்கிறதுஎன்பதுபுராணவரலாறு, இல்லை , இந்தஇடம்பொதினிஎன்றுஇருந்திருக்கிறது. பொதினிஎன்றபதமேமருவிப்பழநிஎன்றுஆயிற்றுஎன்றுகூறுவர்தமிழ்ஆராய்ச்சிவல்லுநர்கள். அதற்குஅகநானூற்றில்உள்ள,
வண்டுபடத்துதைந்தகண்ணியொண்கழல்
உருவக்குதிரைமழவர்ஓட்டிய
முருகன்நற்போர்நெடுவேள்ஆவி
அறுகோட்டுயானைப்பொதினியாங்கன்
என்னும்மாமூலனார்பாட்டையும்ஆதாரங்காட்டுவர். பொதினியாயிருக்கட்டும், இல்லைபழம்நீஎனவேஇருக்கட்டும். பழநிஒருபழமையானதலம். அங்கேகோயில்கொண்டிருப்பவன்முருகன். அந்தப்பழநிஆண்டவன்கோயிலுக்கேசெல்கிறோம்நாம்இன்று.
பழநி, திண்டுக்கல்–பொள்ளாச்சிலயனில்திண்டுக்கல்லுக்குவடமேற்கே 36 மைல்தொலைவில்இருக்கிறது. ரயிலிலேசெல்லலாம். கார்வசதியுடையவர்கள்காரிலும்செல்லலாம். மதுரையிலிருந்து, திண்டுக்கல்லிலிருந்து, கோவையிலிருந்துஎல்லாம்பஸ்வேறேசெல்கிறது. பழநியில்தங்குவதற்கும்நல்லவசதிகள்நிறையஉண்டு, தேவஸ்தானத்தார்கட்டியிருக்கும்சத்திரம்விசாலமானது, வசதிஅதிகம். ரயில்வேஸ்டேஷனிலிருந்துமூன்றுபர்லாங்குதூரத்தில்சத்திரம். அங்கிருந்துஐந்துபர்லாங்குதூரத்தில்அடிவாரம். அதுவரைவண்டியில்செல்லலாம். முன்னமேயேசொல்லியிருக்கிறேன், பழநிஆண்டவன்மலைமேல்ஏறிநிற்கிறான்என்று. ஆதலால்மலைஏறியேஅவன்கோயில்செல்லவேண்டும்.
மலைஏறுமுன்மலையையேவலம்வருதல்வேண்டும்கிரிச்சுற்றுஎன்பர்இதனை. இதுஅண்ணாமலையில்சுற்றியதுபோல்அவ்வளவுஅதிகதூரம்இல்லை. ஒருமைலுக்குக்குறைவாகவேஇருக்கும். பழனிமலைசுமார் 450 அடிஉயரமேஉள்ளது. அதன்மீதுஏற 660 படிகள்நல்லவசதியாகவிசாலமானமண்டபங்களுடன்கட்டப்பட்டிருக்கின்றன. ஏறுவதுசிரமமாகஇராது. என்றாலும்வயோதிகர்களும், பெண்களும்சிரமமில்லாதுஏறயானைப்பாதைஎன்றுஒன்றுஇருக்கிறது. கொஞ்சம்அதிகதூரம்வளைந்துசெல்லும். அதன்வழிஏறினால்கொஞ்சமும்சிரமம்தோன்றாது. இப்பொழுதுமலைக்குசெல்வதற்குஇழுமோட்டார்வண்டிப்பாதைஅமைத்திருக்கிறார்கள். காசைக்கொடுத்துஏறிஅமர்ந்தால்சிரமமில்லாதுமலைசேர்ந்துவிடலாம். என்றாலும்படிக்கட்டுகளின்வழியாகஏறுவதேமுறை. வழியில்உள்ளஇடும்பன்கோயில், குராவடிவேலவர்சந்நிதிஎல்லாம்கண்டுதொழுதுமேற்செல்லுதல்கூடும். அடிவாரத்தில்ஒருபிள்ளையார். அவரைவணங்கியேமலைஏறுவோம். முதலிலேயேஒருவிசாலமானமண்டபம். கோலைபி.எஸ்.ஜி. கங்காநாயுடுகட்டியது. அந்தமண்டபத்தில்இரண்டுமூன்றுநல்லசிலாவடிவங்கள்.
கண்ணிடந்துஅப்பும்கண்ணப்பரும்காளத்திநாதரும்ஒருதூணிலே, மாமயிலேறிவிளையாடும்முருகன்ஒருதூணில். இன்னும்தேவயானைதிருமணம்என்னும்சிலைகள்உண்டு. இவைநிரம்பப்பழையகாலத்தியவைஅல்லஎன்றாலும், பார்த்துஅனுபவிக்கத்தகுந்தவை.
இனிமலைஏறலாம். பாதிப்படிஏறியபின்வேள்ஆவிமரபில்வந்தவையாபுரிக்கோமான்உருவச்சிலைதாங்கியமண்டபம்வரும், அங்கிருந்துபழநிநகரையும்மலையையும்அடுத்துள்ளவையாபுரிக்குளத்தையும்காணலாம். நல்லஅழகானகாட்சி. மேலும்சிலபடிகள்ஏறினால்இடும்பன்கோயிலும்குராஅடி, வேலவர்கோயிலும்வரும். இடும்பன்வரலாற்றைத்தெரிந்துகொள்ளவேண்டாமா?
தமிழ்முனிவனானஅகத்தியருக்குஓர்ஆசை, தாம்கையிலையிலேபூசித்தசிவகிரி, சக்திகிரிஎன்னும்குன்றுகளையும்தென்திசைக்குஎடுத்துச்செல்லவேண்டும்என்று. இதுஅவரால்முடிகிறகாரியமாகஇல்லை. அவரைவணங்கவந்தஇடும்பாசுரன்என்பவனிடம்தம்விருப்பத்தைநிறைவேற்றச்சொல்கிறார்.
அவனோமிக்கபலசாலி. இரண்டுகுன்றுகளையுமேபேர்த்தெடுத்துஅவற்றைஒருகாவுதடியில்கோத்து, தன்தோளில்சுமந்துதென்திசைநோக்கிவருகிறான். தென்திசைவந்தவன்களைப்பாறக்காவுதடியைஇறக்கிவைக்கிறான். இளைப்பாறியபின்திரும்பவும்தூக்கினால்காவுதடியைத்தூக்கமுடியவில்லை. மலைகளைப்பெயர்க்கமுடியவில்லை. சுற்றும்முற்றும்பார்த்தபோதுஇந்தமலைகளில்ஒன்றின்பேரில்குராமரநிழலிலேமழலைமுதிர்ந்தகனிவாயுடன்ஒருசிறுவன்நிற்பதைக்காண்கிறான்இடும்பன்.
அவனாலேயேதன்காவுதடியைத்தூக்கமுடியவில்லைஎன்றுஎண்ணியஇடும்பன்அவனைமலையைவிட்டுஇறங்கிஓடிப்போகச்சொல்கிறான், அவன்மறுக்க, இவன்அவன்மேல்பாய்கிறான். ஆனால்அடியற்றமரமாகஅங்கேயேவிழுகிறான். இடும்பன்மனைவிஓடிவந்துகதறுகிறாள், அகஸ்தியரும்வந்துசேருகிறார். இளங்குமரனோஅதுவேஇருப்பிடம்என்றுகூறுகிறான். அன்றுமுதல்இடும்பனைப்போல்யார்காவுதடி. தூக்கிவருகிறார்களோஅவர்களுக்கெல்லாம்அருள்பாலிப்பதாகக்குமான்வாக்களிக்கிறான். இடும்பன்எடுத்துவந்தசிவகிரி, சக்திகிரியேஇன்றுபழநிமலை, இடும்பன்மலையெனநிற்கிறதுஅங்கே. காவுதடிபிலிருந்தேகாவடிஎடுக்கும்பழக்கம்ஏற்பட்டிருக்கிறது.
இப்படித்தான்இடும்பன், அருள்பெற்றுப்பழநிமலையிலேபாதிவழியிலேநிற்கிறான். குராவடிவேலவருமேஅங்கேகோயில்கொள்கிறார். இவர்களையெல்லாம்வணங்கிவிட்டுமேலும்படிஏறினால்மலைமேல்விரிந்திருக்கும்விசாலயானபிராகாரத்துக்குவந்துசேருவோம். மலைமேல்கட்டியகோயில்என்றாலும்பெரியகோவில்தான். தென்றல்அடிவருடஅக்கோயிலுள்மேற்குநோக்கியவனாகப்பழநிஆண்டவர்நிற்கிறார். மில்காரர்கள்கட்டியிருக்கும்வித்யாதரமண்டடத்தைக்கடந்தேகோயிலுள்செல்லவேணும். அங்குள்ளமணிமண்டபத்தைக்கடந்துதான்மகாமண்டபத்துக்குவந்துசேரவேணும். அங்குஇடப்பக்கத்தில்சுப்பிரமணியவிநாயகர்சிலைஒன்றுஐம்பதுவருஷங்களுக்குமுன்நகரத்தார்களால்நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. அங்குவிநாயகருக்குவணக்கம்செலுத்திவிட்டேராஜகோபுரவாயிலைக்கடந்துசெல்லவேண்டும், கோபுரம் 63 அடிஉயரமேஉள்ளசின்னக்கோபுரம்தான். இனதஅடுத்துத்தான்மாரவேள்மண்டபம். இதனை 34 கற்றூண்கள்தாங்கிநிற்கும். இதைஅடுத்தேதட்சிணாமூர்த்திக்கும்மலைக்கொழுந்தீசருக்கும்மலைநாச்சியம்மைக்கும்தனித்தனிசந்நிதிகள்.
இதைக்கடந்தேநவரங்கமண்டபம். இதேமண்டபத்தின்வடபக்கத்திலேதான்உற்சவமூர்த்திகள்வைக்கப்பட்டிருக்கின்றன. இங்கேவிழாக்காலங்களில்எழுந்தருளும்சின்னக்குமாரரும்இருக்கிறார். இங்குள்ளசண்முகர்வெளியில்எழுந்தருளுவதேஇல்லை. இந்தமண்டபத்தையெல்லாம்கடந்தேஅர்த்தமண்டபம்வரவேணும், அங்கிருந்தேகருவறையில்தண்டேந்தியகையனாய்நிற்கும்தண்டாயுதபாணியைத்தொழவேண்டும். தண்டாயுதபாணியின்முகத்தில்ஒருகருணாவிலாசம். அருள்கலந்ததிருநோக்கு, புன்னகைதவழும்உதடுகள், மதாணிவிளங்கும்மார்பு. ஒருகையைஅரையில்வைத்துஒருகையில்தண்டேந்திநிற்கும்நேர்த்தியெல்லாம்கண்குளிரக்கண்டுமகிழலாம். இவர்அபிஷேகப்பிரியர். காலைஉதயமானதுமுதல்இரவுஎட்டுமணிவரையில்அபிஷேகங்கள்நடந்துகொண்டிருக்கும். பன்னீர், சந்தனம், திருநீறுஎன்றுமாத்திரம்அல்ல. நல்லபஞ்சாமிர்தஅபிமேகம்அவருக்குப்பிரீதியானது. அவருக்குப்பிரீதியோஎன்னவோபக்தர்களுக்குப்பிரீதியானது. அந்தமூர்த்திபோகரால்பிரதிஷ்டைசெய்யப்பட்டவராயிற்றே, அவர்சிலைவடிவில்இருந்தாலும்அதுசிலையல்ல. ஒன்பதுவகைமருந்துச்சரக்குகளால்ஆகியநவபாஷாணத்தைரஸக்கட்டாய்த்திரட்டிச்செய்யப்பட்டவராயிற்றே. அவர்மேனியில்வழிந்துவரும்எப்பொருளுமேமக்களதுநோய்களையெல்லாம்தீர்க்கவல்லது. உயிர்களின்பிறவிப்பிணியையேநீக்கவல்லஆண்டவன்உடற்பிணிதீர்ப்பதுஎன்பதில்ஆச்சர்யம்ஒன்றுமேஇல்லைதானே?
இந்தஆண்டவனைப்பற்றிஓர்ஐயம்அன்பர்களுக்கு. இவன்மொட்டைஆண்டியா, சடைஆண்டியாஎன்று. சாதாரணமாகவெளியிட்டிருக்கும்படங்கள்எல்லாம்இவனைத்தலையைமுண்டிதம்செய்துகொண்டமொட்டையாண்டியாகத்தான்காட்டுகின்றன. அதுகாரணமாகவேஅந்தப்படங்களைப்பூசையில்வைத்துக்கொள்ளப்பலர்துணிவதில்லை. அவன்மொட்டையாண்டியாயிற்றே. நம்மையும்மொட்டைஅடித்துவிடுவானோஎன்று. ஆனால்மூர்த்தியின்வடிவைஅபிஷேககாலத்தில்கூர்ந்துநோக்குவோர்க்குத்தெரியும். அவன்மொட்டைஆண்டிஅல்லசடையாண்டியேஎன்று. மேலும்அவனைவணங்குபவர், அவனிடம்பிராத்தனைசெய்துகொள்பவர்எல்லாநலங்களும்பெறுகிறார்கள்என்பதும்கண்கூடு. தமிழ்நாட்டுஅறிஞன்அந்தப்பொய்யில்புலவன்வள்ளுவன்சொன்னான். ‘மக்கள்இவ்வுலகில்இருக்கும்துன்பங்களில்இருந்தெல்லாம்விடுபடவேண்டுமானால்இவ்வுலகத்தில்தாம்உடைமைஎன்றுகருதுகிறபொருள்களில்உள்ளஆசையைவிட்டுவிடவேண்டும்; அப்படிஆசையைவிடவிடத்தான்பெறவேண்டியபேறுகளைஎல்லாம்பெறலாம்என்று.
வேண்டின்உண்டாகத்துறக்கதுறந்தபின்
ஈண்டுஇயற்பாலபல.
என்பதேஅவர்சொன்னஅருமையானகுறள். உண்மைதானே? உலகமக்களுக்குஎல்லாநன்மைப்பேறுகளையும்அளிக்கவிரும்பும்நாயகன்அந்தஉலகத்துஉடைமைகளிலேயேபேறுகளிலேயேதானும்ஆசைவைத்துஅதில்திளைத்துநின்றால்எப்படிப்பக்தர்களுக்குஅருள்செய்யஇயலும்? ஆதலால்தான்அவன்தன்உடைமைகளையெல்லாம்துறக்கிறான். அவன்துறவுகோலம்பூணுவதுமக்களுக்குஅவர்கள்வேண்டும்பேறுகளையெல்லாம்அளிப்பதற்காகவே. அவன்முற்றும்துறந்தகோவணாண்டியாகநிற்பதினாலேதான்நாம்பெறற்கரியபேறுகனைஎல்லாம்பெறமுடிகிறது. அவன்துறலியானதுநம்மையெல்லாம்துறவிகளாக்கஅல்ல. ஆக்கம்உடையவர்களாக, அருளுடையவர்களாகமக்கள்வாழ்வதற்காகவேஆண்டவன்துறவுக்கோலம்பூணுகிறான். இல்லாவிட்டால்அவனுக்குப்பற்று, துறவுஎன்றெல்லாம்உண்டா?
இந்தப்பழநிஆண்டவர்வழிபாடுவேறொருவகையில்சிறப்புடையதும்ஆகும். இங்குவருவார்தொகையில்தமிழர்களைவிடஅதிகம்மலையாளநாட்டினரே. மேலும்இந்துக்களேஅன்றிமுகம்மதியர்களும்குடும்பத்துடன்வந்துசந்நிதிக்குப்பின்புறத்தில்சந்தனக்காப்பிட்டுத்தூபம்காட்டிபாத்தியாஓதிவணங்கிச்செல்கின்றனர். இப்படிஎல்லாம்சர்வசமயசமரசம்வளர்ப்பவனாகப்பழனிஆண்டவன்அங்குநின்றுஅருள்புரிகிறான்என்றால்அதுபோற்றுதற்குரியதுதானே? பழனிஆண்டவருக்குமாதம்தோறும்திருவிழாக்களும்உண்டு. பங்குனிஉத்திரம், வைகாசிவிசாகம், தைப்பூசம்முதலியவிழாக்களில்எல்லாம்திருத்தேர் – சிறப்பாகஅலங்கரிக்கப்பட்டுத்தெருவீதியில்உலாவரும். தங்கத்தேர்ஒன்றுஒவ்வொருமாதமும்கிருத்திகைதினத்தன்றுமலைமீதுஉள்ளபிராகாரத்திலேயேஉலாவரும்.
எல்லாம்சரிதான், நக்கீரர்பாடியஅந்தத்திருமுருகாற்றுப்படையில்வரும்ஆவினன்குடிதான்பழநிஎன்பார்களேஅதைப்பற்றிஒன்றுமேகூறவில்லையேஎன்றுதானேநினைக்கிறீர்கள். அந்தஆவினன்குடிக்கோயில்மலைஅடிவாரத்தில்இருக்கிறது. இதுவேஆதிகோயில். நக்கீரரால்மாத்திரமல்ல, ஒளவையாராலும்சிறப்பித்துப்பாடப்பெற்றது. ஒளவையார்காலத்தில்இதனைச்சித்தன்வாழ்வுஎன்றுஅழைத்திருக்கிறார்கள்.
நல்லம்பர்நல்லகுடி
உடைத்து; சித்தன்வாழ்வு
இல்லம்தொறும்மூன்று
எரிஉ.டைத்து; – நல்லரவப்
பாட்டுடைத்துச்சோமன்
வழிவந்தபாண்டியநின்
நாட்டுடைத்துநல்லதமிழ்
என்றுநல்லதமிழ்ப்பாட்டிலேயேஅல்லவாஇந்தச்சித்தன்வாழ்வுஇடம்பெற்றுவிட்டது? திருவாவினன்குடிக்கோவிலிலேதான், திருமகள், காமதேனு, சூரியன், நிலமகள், அக்னிமுதலியஐவரும்தொழுதுபேறுபெற்றிருக்கிறார்கள், ஐவருக்கும்கற்சிலைகள்இன்னும்இருக்கின்றனகோயிலில், இங்குள்ளமூர்த்திகுழந்தைவேலாயுதசாமி. இக்கோயில்ஐம்பதுவருஷங்களுக்குமுன்புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.
பழநிஆண்டவனைப்பாடியபெருமக்களுக்குள்ளேமிகச்சிறப்புவாய்ந்தவர்அருணகிரியார்தான்.
பழனம்உழவர்கொழுவில்எழுது
பழப்பழநிஅமர்வோனே.
என்றுமலைமேல்உள்ளஆண்டவனையும்,
ஆவல்கொண்டுவிறாலேசிராடவே
கோமளம்பலசூழ்கோயில்மீறிய
ஆவினன்குடிவாழ்வானதேவர்கள்பெருமாளே
என்றுஆவினன்குடிமக்களையும்பாடிமகிழ்ந்திருக்கிறார். பழநியைப்பற்றிக்கந்தர்அவங்காரத்திலும்ஒருநல்லபாட்டுப்பாடிஇருக்கிறார்அருணகிரியார்.
படிக்கின்றிலைபழநித்திருநாமம்
படிப்பவர்தாள்
முடிக்கின்றிலைமுருகாஎன்கிலை
மூசியாமல்இட்டு
மிடிக்கின்றிலைபரமானந்தம்
மேற்கொளவிம்மி, விம்மி,
நடிக்கின்றிலைநெஞ்சமே
தஞ்சம்எது? நமக்குஇனியே.
என்றபாடலைஎத்தனைதரம்வேண்டுமானாலும்பாடிப்பரவலாம்
என்ன, இங்குசிற்பச்சிறப்புகள்ஒன்றுமேஇல்லையா, என்றுநீங்கள்கேட்கும்கேள்விஎன்காதில்விழத்தான்செய்கிறது. பழங்காலத்துச்சிற்பங்கள்அதிகம்இல்லைதான்என்றாலும், ஊருக்குமேல்புறமாகஓடும்சண்முகநதிக்கரையிலேபழநிக்குவடக்கேமூன்றுகல்தொலைவில்ஒருபெரியதோப்பினிடையேபெரியாவுடையார்கோயில்என்றுஒன்றுஇருக்கிறதுஅதனைப்பழநியில்உள்ளவர்கள்பிரியாவுடையார்கோயில்என்பார்கள். சிறியகோயிலேஎன்றாலும்சமீபகாலத்தில்உருவானநல்லகற்சிலைகள்
கிருஷ்ணாபுரம்
பலஇருக்கின்றன. அவற்றில்தட்சிணாமூர்த்திமிகமிகஅழகுவாய்ந்தவர். அவகாசம்உடையவர்கள்வண்டிவைத்துக்கொண்டுஅங்குசென்றுகண்டுதொழுதுதிரும்பலாம்.
கோயில்பழையகோயில்என்றுஅங்குள்ள 16 கல்வெட்டுகள்கூறும். இதுதவிர, பழநியின்சுற்றுக்கோயில்களும்பலஉண்டு, பட்டத்துவிநாயகர், வேணுகோபாலப்பெருமாள், சங்கிலிபரமேசுவரர், வேளீசுவரர்எல்லோரும்இருக்கிறார்கள்இங்கே. எல்லோருமேஆண்டவனைமலைமேல்ஏற்றிவிட்டுஅவன்கால்நிழலில்ஒதுங்கிவாழ்பவர்களாகவேஇருக்கிறார்கள். பழநிமலையில்நல்லமூலிகைகள்பலகிடைக்கின்றன. அதனாலேயேவைத்தியசாலைகள்பலஇவ்வட்டாரத்தில்தோன்றிக்கொண்டிருக்கின்றன. இந்தவைத்தியநாதர்களுக்கெல்லாம்மேலானவைத்தியநாதன்தான்மலைமீதேஏறிநிற்கிறானே! அவனைவணங்கிஅருள்பெறுவதைவிடஉடலுக்கும்உயிருக்கும்வைத்தியம்வேறேசெய்துகொள்ளவேண்டுமாஎன்ன?