ராமேச்சுரத்துராமலிங்கர்
சிவன்கோயில்களில்கருவறையில், கோயிலுக்கேநடுநாயகமாய்இருப்பதுசிவலிங்கம். சிவலிங்கவழிபாடுமிகமிகப்பழமையானது. திருமூலர்தமதுதிருமந்திரத்தில்அண்டலிங்கம், பிண்டலிங்கம், சதாசிவலிங்கம், சிவலிங்கம், ஆத்மலிங்கம், ஞானலிங்கம்முதலியவைகளைப்பற்றிவிரிவாகப்பேசுகிறார்.
இலிங்கமதாவதுயாரும்அறியார்
இலிங்கமதாலதுஎண்திசைஎல்லாம்
இலிங்கமதாவதுஎண்ணெண்கலையும்
இலிங்கமதாவதுஎடுத்ததுஉலகே
என்பதுதிருமந்திரவாக்கு. பாதாளம்முதல்ஆகாசபர்யந்தம்எல்லையில்லாதஅனந்தசொரூபமாகப்பிரகாசிப்பதுலிங்கம். இதனையே ‘ஆபாதால‘ என்றதியானசுலோகம்கூறியேருத்ராபிஷேகத்தைத்தொடங்கவேன்டும்என்பதுவிதி. அண்டமெல்லாம்நிறைந்துநிற்கும்இறைவனைஅணுவிலேகாட்டமுயன்றவன்கலைஞன், அருவுருவமானகடவுளைஉருவத்திலும்அருஉருவத்தில்காட்டுவதில்வெற்றிபெற்றவன்அவன். அந்தஅருஉருவத்திருமேனிபயேசிவலிங்கவடிவம், அதாவதுவடிவம்போலவும்இருக்கும்; அதேசமயத்தில்வடிவம்ஒன்றுஇல்லாமலும்இருக்கும்நிலை. இந்தலிங்கவடிவினைஅரசர்கள், முனிவர்கள், பிரதிஷ்டைசெய்திருக்கின்றனர். முசுகுந்தன்பிரதிஷ்டைகாளத்தியில், தொண்டைமான்சக்கரவர்த்தியின்பிரதிஷ்டைவடதிருமுல்லைவாயிலில், இடும்பன்பிரதிஷ்டைஇடும்பாவனத்தில். திரிசிரன்பிரதிஷ்டைதிருச்சிராப்பள்ளியில். அகஸ்தியர்பிரதிஷ்டைஅகஸ்தியன்பள்ளியில், மூன்றுகோடிமுனிவர்கள்சேர்ந்தபிரதிஷ்டைசெய்ததுகோடிகாலில், ஆனால்எல்லாவற்றையும்தூக்கிஅடிக்கும்வகையில்மூவர்க்கும்மேலானராமனேபிரதிஷ்டைசெய்துவணங்கியலிங்கம்தான்ராமலிங்கம்.
மூலமும்நடுவும்ஈறும்
இல்லதோர்மும்மைத்தாய
காலமும்கணக்கும்நீத்த
காரணன்கைவில்லேந்தி
சூலமும்திகிரிசங்கும்
கரகமும்துறந்துதொல்லை
ஆலமும்மலரும்வெள்ளிப்
பொருப்பும்விட்டுஅயோத்திவந்தான்
ராமன்என்பான்கம்பன். அந்தராமனேபிரதிஷ்டைபண்ணியலிங்கம்தான்ராமலிங்கம். அந்தராமலிங்கம்இருப்பதுராமேச்சுரம். அந்தராமலிங்கத்தைத்தரிசிக்கவேசெல்கிறோம்நாம்இன்று.
ராமேச்சுரம்என்னும்ராமேசுவரம், வங்காளக்குடாக்கடலில்ராமநாதபுரம்மாவட்டத்தைச்சேர்ந்தஒருசிறியதீவு, சென்னை–ராமேசுவரம்ரயில்பாதையில்மண்டபம்கடந்துபாம்பன்வழியாகராமேசுவரம்செல்லவேனும். இந்தத்தீவுமாகாவிஷ்ணுதாங்கியிருக்கும்வலம்புரிச்சங்கின்வடிவில்இருக்கிறதென்பர். ரயில்வேஸ்டேஷனிலிருந்துஅரைமைல்தூரத்தில்கோயில்இருக்கிறது. கோயில்பிரும்மாண்டமானபிராகாரங்களுடன்கூடியது. கோயில்கிழமேல் 865 அடிநீளமும், தென்வடல் 675 அடிஅகலமும்உள்ளது. கிழக்குவாயிலை 126 அடிஉயரமுள்ளகோபுரம்அழகுசெய்கிறது. மேல்வாயிலில் 78 அடிஉயரமுள்ளகோபுரம்இருக்கிறது. இதுவேபழையகோபுரம். தெற்கேயும்வடக்கேயும்கோபுரங்கள்கட்டப்படவில்லை. கிழக்குவாயில்வரவேண்டுமானால்கொஞ்சம்சுற்றிக்கொண்டுவரவேணும். ஆதலால்எல்லாரும்மேலக்கோபுரவாயில்வழியாகவேகோயிலுள்நுழைவர். நாமும்அப்படியேசெல்லலாம்.
மேல்பிராகாரத்தில்வடமேற்குமூலையில்ஓர்இடம்திரைச்சீலைகளால்மறைக்கப்பட்டிருக்கும். அங்குள்ளகாவலனிடம்பத்துகாசுநீட்டினால்திறந்துகாட்டுவான். அங்கிருக்கும்காட்சிதான்ராமலிங்கர்பிரதிஷ்டை . இந்தராமலிங்கர்பிரதிஷ்டைஒருசுவையானகதையாயிற்றே. இலங்கையில்இராவணவதம்நிகழ்த்தியராமனைப்பிரம்மஹத்திதோஷம்பிடித்துக்கொள்கிறது. அதன்நிவர்த்திக்குஇறைவனைப்பிரதிஷ்டைசெய்துபூஜிப்பதுதான்வழிஎன்பதைஅறிகிறான்ராமன். ராமனதுஏவல்கூவல்பணிசெய்யத்தான்அனுமன்உடன்இருக்கிறானே. அவனைஅனுப்பிநர்மதைநதிக்கரையிலிருந்தேலிங்கம்அமைக்கக்கல்கொண்டுவரச்சொல்கிறான்; சென்றஅனுமன்திரும்பக்காணோம். அதற்குள்பிரதிஷ்டைக்குக்குறித்தநேரம்வந்துவிடுகிறது. ராமனுடன்வந்தசீதாப்பிராட்டிஅங்குகடற்கரையிலிருந்தமணலையேசிவலிங்கமாக்கிக்கொடுக்கிறாள். ராமனும்பூஜையைமுடித்துக்கொள்கிறான். பூஜைமுடிந்தபின்அனுமன்லிங்கத்துடள்வந்துசேருகிறான். அவனுக்குஒரேகோபம், தன்முயற்சிஎல்லாம்
ராமேஸ்வரம்கோயில்பிரகாரம்
வீணாய்ப்போய்விட்டதேஎன்று. சீதைஅமைத்தமணல்லிங்கத்தைத்தன்வாலால்கட்டிஇழுத்துப்பிடுங்கிஎறிந்துவிடமுனைகிறான். நடக்கிறகாரியமாஅது? ஆதிலிங்கம்ஆயிற்றே. அனுமானைச்சமாதானம்செய்யவிரும்பியராமன்அவன்கொண்டுவந்தலிங்கத்தையும்பக்கத்திலேயேபிரதிஷ்டைசெய்துவைத்துஅதனைஅனுமத்லிங்கம்என்றுஅழைக்கிறார். இத்தனைநாடகமும்சுதைவடிவில்அங்குவண்ணஉருவில், காட்டப்பட்டிருக்கும். கருவறையில்இருப்பவர்ராமலிங்கர். அவர்பக்கத்தில்இடப்பக்கத்தில்இருப்பவர்அனுமன்கொண்டுவந்தபிரதிஷ்டைசெய்யப்பட்டவிசுவநாதர், இருவரையும்கருவறையில்சென்றுகண்டுவணங்கலாம். இந்தராமலிங்கரேஉலகில்உள்ளபன்னிரண்டுஜோதிலிங்கங்களில்ஒன்றாகவிளங்குகிறார். இவர்மேனியிலேஅனுமனதுவால்தழும்புஇன்னும்இருக்கிறது.
ராமலிங்கர்நல்லஅபிஷேகப்பிரியர், அதிலும்கங்காஸ்நானத்தைவிரும்புகிறவர். ஆதலால்வடநாட்டிலிருந்துவரும்யாத்திரிகர்கள்எல்லாம்கங்காஜலம்கொண்டுவந்துஅபிஷேகம்செய்கிறார்கள். இந்தகங்காபிஷேகத்துக்குநிபந்தனைகள்அதிகம். அதற்கெல்லாம்உட்பட்டேஅபிஷேகத்துக்குச்சேவார்த்திகள்ஏற்பாடுசெய்யவேணும். இந்தராமலிங்கர்சந்நிதிகாலைஆறுமணிமுதல்இரவுபத்துமணிவரைஎப்போதும்திறந்தேஇருக்கும். இந்தநல்லவசதிஎல்லாக்கோயில்களிலும்கிடைப்பதில்லையாத்திரிகர்களுக்கு. கருவறைசெல்லுமுன்பிராகாரங்களைஒருசுற்றுச்சுற்றலாம். ராமேசுவரபிராகாரங்கள் {Corridors) பிரபலமானவைஆயிற்றே. இந்தப்பிராகாரங்கள்ஒவ்வொன்றும்சுமார்நானூறுஅடிநீளமும், இருபதிலிருந்துமுப்பதடிஅகலமும், அறுபதுஅடிஉயரமும்உடையன. பிரும்மாண்டமானதூண்கள்தாங்கிநிற்கின்றன. இவ்வளவுபெரியபிராகாரங்களைவேறுஇடங்களில்காணமுடியாது: கல்கிடையாது. ஒருசிறுதீவுக்கு, இவ்வளவுபெரியகற்களைஎப்படிக்கொண்டுவந்தனர். எப்படிஇந்தப்பிராகாரங்களைஅமைத்தனர்என்பதுபலருக்கும்லியப்பானதொன்றே.
இக்கோயிலில்மூன்றுபிராகாரங்கள். மூன்றாம்பிராகாரமானவெளிப்பிராகாரத்திலேதான்பெரியநடராஜரதுவடிவம்ஒன்றும்இருக்கிறது. உள்பிராகாரத்தில்தான்ராமலிங்கர்கோயில்கொண்டிருக்கிறார். அங்குள்ளநவசக்திமண்டபம்நல்லவேலைப்படுடையது. அந்தபிராகாரத்திலேதான்பர்வதவர்த்தினிஅம்பிகையின்சந்நிதி. இவளையேதாயுமானவர்மலைவளர்காதலிப்பெண்உமைஎன்றுஅழகொழுகஅழைக்கிறார்.
ஆரணிசடைக்கடவுளர்
அணியெனப்புகழ்அகிலாண்ட
கோடியீன்ற
அன்ளையே! பின்னையும்கன்னியென
மறைபேசும்ஆனந்த
ரூபமயிலே!
வார்அணியும்கொங்கைமாதர்
மகிழ்கங்கைபுகழ்வளமருவு
தேவஅரசே
வரைராஜனுக்குஇருகண்மணி
யாய்உதித்தமலைவளர்
காதலிப்பெண்உமையே!
என்றுபாடிப்பாடிப்பரவசம்அடையலாமல்லவா?
இங்குள்ளநந்திசுதையால்உருவானவர்தான். நல்லபெரியநந்தி, நீளம்பன்னிரண்டுஅடி, உயரம்ஒன்பதுஅடி. கீழ்க்கோபுரவாயிலில்பெரியஅனுமார்இருக்கிறார். பிரதமலிங்கரைப்பிரதிஷ்டைசெய்யும்பாக்கியத்தைஇழந்தவர்என்றுஅவர்பார்வையிலுள்ளஏக்கத்திலிருந்தேதெரியும். ராமேசுவரத்தில்சுவாமிதரிசனத்தைவிடதீர்த்தம்தான்விசேஷமானது. இக்கோயில், கோயில்பிராகாரங்களைச்சுற்றியேஇருபத்திரண்டுபுண்ணியதீர்த்தங்கள்இருக்கின்றன. இந்தத்தீர்த்தங்களில்எல்லாம்ரசாயனசத்துக்கள்இருப்பதால்புண்ணியத்தோடுதேகஆரோக்கியமும்உண்டாக்கும். எல்லாத்தீர்த்தங்களும்புராணமகத்துவமும்பெற்றவை. கோயிலுக்குநேர்கிழக்கேயுள்ளகடல்துறைதான்முக்கியமானது. அதுவேஅக்கினித்தீர்த்தம். இங்கேதான்தீர்த்தாடனம்தொடங்கவேண்டும். கடைசியில்கோயிலுள்உள்ளகோடிதீர்த்தத்தில்ஸ்நானம்செய்யவேண்டும். கோடிதீர்த்தத்தில்தீர்த்தம்ஆடியபிறகுஊரிலேதங்கக்கூடாதுஎன்பதுஐதீகம். கட்டியபுண்ணியம்எல்லாம்நம்வீடுவரையாவதுநம்முடன்கொண்டுசெல்லவேண்டும்.
ராமேசுவரத்தைவிட்டுகிளம்புமுன்பார்க்கவேண்டியவைகந்தமாதனபர்வதம்; ஏகாந்தராமர்கோயில், நம்பிநாயகிஅம்மன்கோயில்முதலியன. கந்தமாதனபர்வதம்வடமேற்கேஒன்றரைமைல்தூரத்தில்இருக்கிறது. இங்கிருந்துதான்இலங்கைக்குஅனுமார்தாவினார்என்றுகூறப்படுகிறது. ஏகாந்தராமர்கோயில்ராமேசுவரத்துக்குமேற்கேமூன்றுமைல்தூரத்தில்தங்கச்சிமடம்ஸ்டேஷன்பக்கத்தில்இருக்கிறது. இங்குராமர்சீதையுடன்பேசிக்கொண்டிருக்கும்பாவனையில்சிலைகள்அமைத்திருக்கிறார்கள். ராமர்இங்குதான்தமதுமந்திராலோசனையைநடத்தினார்என்பர், ராமேசுவரத்துக்குத்தெற்கேஇரண்டுமைல்தூரத்திலுள்ளநம்பிநாயகிஅம்மன்நம்பிக்கையுடன்ஆராதிப்பவர்களுக்கெல்லாம்அருளுபவள்என்பதுநம்பிக்கை, இன்னும்சீதாகுண்டம், வில்லூரணிதீர்த்தம், கோதண்டராமசுவாமிகோயில்எல்லாம்சென்றுவாங்கித்திரும்பலாம்.
இந்தத்தலத்துக்குஞானசம்பந்தரும், அப்பரும்வந்திருக்கிறார்கள்; பதிகங்கள்பாடியிருக்கிறார்கள்.
தேவியைவவ்வியதென்னிலங்கை
யரையன்
ஏவியல்வெஞ்சிலையண்ணல்செய்த
இராமேச்சுரத்தாரை
நாவியல்ஞானசம்பந்தன்
நல்லமொழியால்நவின்றேத்தும்
பாவியல்மாலைவல்லார்
அவர்தம்வினையாயினபற்றறுமே
என்றுசம்பந்தர்பாடினால்,
கடலிடைமலைகள்தம்மால்
அடைத்துமால்கருமம்முற்றி
திடலிடைச்செய்தகோயில்
திருஇராமேச்சுரம்
என்றுஅப்பர்பாடுகிறார். இத்திருப்பதிகங்களையெல்லாம்பாடிராமேச்சுரம்மேவியஇறைவனைவாங்கிவிட்டு, தனுஷ்கோடிக்குச்சேதுஸ்நானத்துக்குச்செல்லலாம். ராமேச்சுரத்திலிருந்து 24 மைல்தூரத்தில்தனுஷ்கோடிஇருக்கிறது. இங்குதான்வங்காளக்குடாக்கடல், இந்துமாசமுத்திரம்இரண்டும்கூடுகின்றன. மகோததி, ரத்னாகரம்என்னும்கடல்கள்கலப்பதாகப்புராணங்கள்கூறும். ராமேசுவரத்திலிருந்துகடற்கரைவழியாகத்தோனியில்ஏறிக்கொண்டும்சேதுக்கரைசெல்லலாம். இதுஎல்லாம்
கோயில்
காற்றுவசதியாகஅடிக்கும்போதுதான்சௌகரியமாகஇருக்கும். இல்லாவிட்டால்பேசாமல். சமீபத்தில்புதிதாகஅமைக்கப்பட்டபாதையில்தனுஷ்கோடிசெல்லுதலேசரியானது. மணற்பரப்பில்நாலுபர்லாங்குநடந்துதான்சேதுஸ்நானகட்டத்துக்குவரவேணும், தனுஷ்கோடிஎன்றால், ஒருகோடிவில்என்றுஅர்த்தம். இங்குதீர்த்தம்ஆடினால்ஒருகோடிபுண்ணியதீர்த்தங்களில்நீராடியபலன்கிடைக்கும். இங்கிருந்துதான்இலங்கைசெல்லராமன்அணைகட்டியிருக்கிறான், அதனாலேயேசேதுஎன்றுஅழைக்கப்படுகிறது. இங்குமொத்தம் 36 ஸ்நானம்செய்யவேண்டுமென்பதுவிதிஅதற்குஒருமாதம்தங்கவேண்டும், அதுஎல்லாம்நம்மால்முடிகிறகாரியமாஎன்ன? ஆதலால்ஒரேநாளிலேயேமுப்பத்தாகமுழுக்குகள்போட்டுமேலேசொல்லியஸ்தானபலன்களையெல்லாம்ஒரேயடியாகப்பெற்றுவிடவேண்டியதுதான், தனுஷ்கோடியிலேதீர்த்தமாடியபின்னரேராமலிங்கரைத்தரிசிக்கவேண்டும்என்றும்கூறுவர். எதுவசதியோஅப்படிச்செய்துகொள்ளலாம். நாம்இழுத்தஇழுப்புக்கெல்லாம்இசைபவராயிற்றேஇறைவன்ராமலிங்கர்அகிலஇந்தியப்பிரசித்தியுடையவர். இமசேதுபரியந்தம்அவர்புகழ்பரவிக்கிடக்கிறது. இங்குவரும்வடநாட்டுயாத்திரிகர்களின்எண்ணிக்கைசொல்லில்அடங்காது. வடக்கையும்தெற்கையும்இணைப்பதில்வெற்றிகண்டவர்இந்தராமலிங்கர். அதுவேஅவருக்குப்பெரியபுகழைத்தேடித்தந்திருக்கிறது.
தனுஷ்கோடியிலும்ராமேசுவரத்திலும்ஸ்நானம்பிராத்தனைஎல்லாம்முடித்துக்கொண்டேஇராமநாதபுரம்போய்அங்கிருந்ததர்ப்பசயனம் (திருப்புல்லாணி) சென்றுதரிசனம்செய்யவேண்டும்என்பர். புண்ணியசேதுவைநினைக்கும்போதெல்லாம்சேதுகாவலர்களானசேதுபதிகளும்நம்நினைவுக்குவருவார்கள், அவர்கள்குகனுடையபரம்பரைஎன்றுவழக்கு. முதல்சேதுபதியாகியகுகனுக்குராமர்பட்டம்கட்டியதைக்குறிப்பிடும்கல்ஒன்றுஇராமநாதபுரம்அரண்மனையில்இராமலிங்கவிலாஸ்என்றஇடத்தில்இருக்கிறது. சேதுகாவலர்கள்ராமேச்சுரம்கோயிலில்செய்ததிருப்பணிகள்அனந்தம். சடைக்கத்தேவர்உடையார்சேதுபதிமுதல்பரம்பரையாகவந்தசேதுபதிகள்எல்லாம்பலநிபந்தங்கள்ஏற்படுத்தியிருக்கிறார்கள். சென்றநூற்றாண்டின்கடைசியில்இருந்தபாஸ்கரசேதுபதியின்தானதருமம்உலகப்பிரசித்தம்.
புல்லாணிஎம்பெருமான்
கொல்லணைவேல்வரிநெடுங்கண்
கௌசலைதன்குலமதலாய்!
குனிவில்ஏந்தும்
மல்லணைந்தவரைத்தோளா!
வல்வினையேன்மனமுருக்கும்
வகையேகற்றாய்
மெல்லணைமேல்முன்துயின்றாய்!
இன்றுஇனிப்போய்
வியன்கானமரத்தின்நீழல்
கல்லணைமேல்கண்துயிலக்
கற்றனையோகாகுத்தா!
கரியகோலே!
என்றுகுலசேகரர்பாடுகிறார். தனயனானராமன்காட்டுக்குப்புறப்பட்டான்என்றவுடனே, தந்தைதசரதன்புலம்புவதாகப்பாட்டு. அரண்மனையில்பிறந்து, அரண்மனையில்வளர்ந்துஹம்ஸதூளிகாமஞசத்தில்உறங்கியபிள்ளைஇனிகாட்டிலேகல்லையேஅணையாகக்கொண்டல்லவாஉறங்கப்போகிறான்என்றஉடனேஉள்ளத்தில்எழும்தாபம்வெளிப்படுகிறது. ஆனால்இந்தப்பிள்ளை, கல்லைமாத்திரம்தானாஅனையாகக்கொள்கிறான்? புல்லையுமேதான்அனையாகக்கொள்கிறான். கதைநமக்குத்தெரியும். சீதையைஎடுத்துச்சென்றுஇலங்கையில்அசோகவனத்தில்சிறைவைத்துவிடுகிறான்இராவணன். அவள்இருக்கும்இடத்தைஅறிந்துவந்துசொல்கிறான்அனுமன். உடனேராமன்சுக்ரீவனதுவானரப்படையின்துணையுடன்இலங்கைமீதுபடைஎடுக்கிறான். இடையிலேஇருக்கிறதுகடல். கடல்கடந்துதான்இலங்கைசெல்லவேணும். லிபீஷணன்ஆலோசனைப்படிவருணனைவழிபடமுனைகிறான். அதற்காகத்தருப்பையையேசயனமாக்கிஅதிலிருந்துவருணனைவேண்டுகிறான். இதைக்கம்பன்சொல்கிறான்.
தருணமங்கையைமீட்பது
ஓர்நெறிதருகஎன்னும்
பொருள்நயந்துநல்
நூல்நெறிஅடுக்கியபுல்லிவ்
கருணைஅம்கடல்கிடந்தது.
கருங்கடல்நோக்கி
வருணமந்திரம்எண்ணினன்
விதிமுறைவணங்கி
என்று. இப்படிப்புல்லணைமேல்கிடந்துவருணனைவேண்டியதலம்தான்திருப்புல்லணை. அதனையேதிருப்புல்லாணிஎன்கிறார்கள், அந்தத்திருப்புல்லாணிக்கேசெல்கிறோம்நாம்இன்று.
திருப்புல்லாணிராமநாதபுரத்துக்குத்தெற்கேகீழக்கரைசெல்லும்பாதையில், ராமநாதபுரத்திலிருந்துஆறுஏழுமைல்தொலைவில்இருக்கிறது. ராமநாதபுரம்ஸ்டேஷனில்இறங்கி, வண்டிவைத்துக்கொண்டுபோகலாம். சொந்தக்கார்இருந்தால் ‘ஜாமிஜாம்‘ என்றுகாரிலேயேபோய்இறங்கலாம். ஊர்மிகச்சிறியஊர். கோயில்பெரியதும்அல்ல, சிறியதும்அல்ல. ‘கள்ளவிழும்மலர்க்காவியும், தூமடல்கைதையும்புள்ளும்அள்ளற்பழனங்களும், சூழந்தபுல்லாணி‘ என்றுஅன்றுமங்கைமன்னன்பாடியிருக்கிறான், இன்றுஅள்ளற்பழனங்களையோமலர்க்காவிகளையோபார்த்தல்அரிது. கடற்கரையைஒட்டியகிராமம்ஆனதால்மணல்குன்றுகளுக்குக்குறைவில்லைஎன்றாலும்கோயில்வாயில்சென்றுசேரும்வரைநல்லரோடுஇருக்கிறது. இங்குதான்புல்லர், கண்ணுவர், காலவர்முதலியமுனிபுங்கவர்கள்தவம்புரிந்துமுத்திபெற்றிருக்கிறார்கள். முனிவராம்புல்லர்விரும்பியபடியேஜனார்த்தனன். தேவியர்மூவரோடும்சதுர்புஜத்தோடும், பஞ்சாயுதங்களோடும், ஸ்ரீவத்சம், கௌஸ்துபம்முதலியமாலைகள்விளங்க, பீதாம்பரமும்அனிந்துதிவ்வியாபரணங்களும்தரித்துஎழுந்தருளியிருக்கின்றார். இன்னும்இத்தலத்திலேதேவலர்என்னும்முனிவர்தவம்செய்யும்போதுசப்தகன்னியரும்அங்குள்ளதிருக்குளத்தில்ஜலக்கிரீடைசெய்திருக்கிறார்கள். அவர்கள், தம்தவத்தைக்கலைத்ததற்காகஅவர்களையக்ஷர்களாகப்போகும்படிசபித்திருக்கிறார். அவர்கள்சாபவிமோசனம்வேண்டியபொழுதுஅவர்களைப்புல்லாரண்யத்தில்புல்லர்வழிபட்டபெருமானைவழிபட்டுச்சாபவிமோசனம்பெறஅருளியிருக்கிறார்.
இலங்கைசெல்லும்இராமர்இங்குதர்ப்பசயனத்தில்கிடந்துவருணனைவேண்டியிருக்கிறார். பின்னர்இங்குள்ளஎம்பெருமானையும்வணங்கியிருக்கிறார்அவரும்ராமனுக்குவில்ஒன்றைக்கொடுத்திருக்கிறார். அதுகாரணமாக, புல்லணிஎம்பெருமானுக்குத்திவ்யசரபன், தெய்வச்சிலைமன்என்றபெயர்நிலைத்திருக்கிறது. பின்னர்தான்வருணன், ராமர்முன்வந்துகடலைச்சுவறஅடிப்பதைவிட, சேதுகட்டுதலேசிறந்ததுஎன்றுகூறஅதன்படியேநளன்தலைமையில்சேதுகட்டிமுடிக்கப்படுகிறது. இங்குதான்சேதுகட்டத்தீர்மானம்ஆனதால்இதனைஆதிசேதுஎன்றும்அழைக்கின்றனர். புல்லர்முதலானரிஷிகள்ஜகந்நாதனைச்சரண்அடைந்துபரமபதம்பெற்றது. இங்கேதான். கடற்கடவுளும்தசரதபுத்திரனைச்சரணடையஅவனுடையகிருபைக்குப்பாத்திரனானதும்இங்கேதான். ஆதலால்இத்தலத்தில்சரணாகதிதருமத்தைஅனுஷ்டிக்கிறவர்கள்இகபரசுகங்கள்எல்லாம்பெறுவர்என்பதுநம்பிக்கை
இத்தலத்தில்கல்யாணஜகந்நாதன்என்றபெயரோடுபெருமாள்கோயில்கொண்டிருக்கிறார். தாயார்திருநாமம்கல்யாணவல்லி. கோயில்விமானம்கல்யானவிமானம். கோயில்பிராகாரத்தில்ராமன்தர்ப்பசயனனாகச்சேவைசாதிக்கிறான்பட்டாபிராமன்சந்நிதிவேறுஇருக்கிறது. இங்குள்ளஹேமதீர்த்தம்சக்கரதீர்த்தம்பிரசிசத்தமானவை. சகலபாவங்களையும்போக்கவல்லவை. இக்கோயிலில்சிலாவடிவங்கள்அப்படிஒன்றும்பிரமாதமாகஇல்லை. என்றாலும், கோயிலில்செப்புப்படிமங்கள்பலபூசையில்இல்லாமல்இருக்கின்றன. ராமர், லஷ்மணர், பரதர்சத்துருக்னர்படிமங்கள்எல்லாம்இருக்கின்றன. எல்லாம்கவனிப்பார்அற்றுக்கிடக்கின்றன.
இங்குள்ளதலவிருட்சம்அசுவத்தவிருட்சம்என்னும்அரசமரம். அதன்நிழலில்நாகப்பிரதிஷ்டைசெய்வோருக்குமக்கட்பேறுஉண்டாகும்என்றுநம்பிக்கை. இத்தலத்தில்இவ்விருட்சம்அமைந்ததற்குஒருபுராணக்கதைவழங்கிவருகிறது.
ஆதியில்படைப்புத்தொழில்பராந்தாமனிடத்திலேயேஇருந்திருக்கிறது. முதலில்பிரம்மாவையும்பின்னர்நவப்பிரஜாபதிகள், இந்திரன்முதலியோரையும்படைத்துப்பின்னரேபிரம்மாவைத்தொடர்ந்துசிருஷ்டிசெய்யுமாறுபணித்திருக்கிறார். படைத்தல்தொழிலைச்செய்வதற்குத்தெற்குநோக்கிப்பிரம்மாவந்தபோதுகோடிசூரியப்பிரகாசத்தோடுஒருஜோதிதோன்றிமறைந்திருக்கிறது. அந்தஜோதியின்ரகசியம்என்னஎன்றுகேட்டபோது, பரந்தாமன், ‘அதுவேபோதஸ்வரூபமானபோதிமரம், அந்தமரத்தடியிலேதான்ஜகந்நாதன்தங்குகிறான்‘ என்றுஅருளியிருக்கிறான்அதுகாரணமாகவேபோதிஎன்னும்அரசமரம்ஜகந்நாதனுக்குநிழல்தரும்தருவாய்அங்குஅமைந்திருக்கிறது (போதிமரத்தடியில்ஞானம்பெற்றபுத்தரையும்விஷ்ணுவினதுஅவதாரம்என்றுகொள்வதுஇதனால்தான்போலும்).
இத்தலத்துக்குதிருமங்கைமன்னன்வந்திருக்கிறார்; இருபதுபாசுரங்கள்பாடிமங்களாசாஸனம்செய்திருக்கிறார். அவர்பாடியபாடல்கள்பலநாயகநாயகிபாவத்தில்அழகொழுகும்வண்ணம்இருக்கின்றன.
வில்லால்இலங்கை
மலங்கச்சரந்துரந்த
வல்லாளன்பின்போன்
நெஞ்சம்வரும்அளவும்
எல்லாரும்என்தன்னை
ஏசிடினும்பேசிடினும்
புல்லாணிஎம்பெருமான்
பொய்கேட்டிருந்தேனே
என்றபாசுரம்பிரபலமானஒன்றாயிற்றே. அனைவரும்கேட்டுக்கேட்டுரசித்ததாயிற்றே.
இந்தஆதிசேதுவின்காவலரேராமநாதபுரம்ராஜாக்கள். சேதுக்கரையையும்உள்ளடக்கியபிரதேசத்தின்மன்னர்களாகஇருக்கிறகாரனத்தால்அவர்களைச்சேதுபதிஎன்றுஅழைத்தார்கள். திருப்புல்லாணிக்கோயில்எப்பொழுதுகட்டப்பட்டதுஎன்றுதெரியவில்லை. பரராஜசேகர்ராஜாகாலத்தில்தான்கோயில்கட்டியதாகவரலாறுகூறுகிறது. இருபத்தேழுகிராமங்கள்இக்கோயில்பராமரிப்புக்காகச்சேதுசமஸ்தானத்தாரால்விட்டுக்கொடுக்கபட்டிருக்கின்றன. அதற்குத்தாமிரசாஸனங்களும்ஓலைச்சாஸனங்களும்உண்டு, கி.பி. பதினேழாம்நூற்றாண்டின்பிற்பகுதியில்சேதுபதியாகஇருந்தகிழவன்சேதுபதிஎன்னும்ரகுநாதசேதுபதிஅவர்கள்பதினோருகிராமங்களைஇந்தக்கோயிலுக்குத்தானம்வழங்கியிருக்கிறார். இவருக்குப்பின்வந்தவிஜயரெகுநாதசேதுபதி, முத்துராமலிங்கசேதுபதிமுதலியவர்களும்பலநிபந்தங்கள்ஏற்படுத்தியிருக்கிறார்கள். கோயிலுக்குச்சொந்தமாகநிறையஉப்பளங்கள்உண்டு. மன்னார்குடாக்கடலில்நடைபெறும்முத்துக்குளிப்பிலும்இந்தக்கோயிலுக்குஒருபங்குஉண்டுஎன்றுதெரிகிறது. எல்லாம்சொல்லிஒன்றுசொல்லமறந்துவிட்டேனே, இந்தத்தலத்தில்இரவில்நைவேத்தியமாகும்திருக்கண்ணமுது {பால்பாயாஸம்) மிக்கசுவையுடையது. பகலில்போகிறவர்களும்ஞாபகயாகக்கேட்டால்அர்ச்சகர்எடுத்துவைத்திருக்கும்திருக்கண்ணமுதுகிடைக்கலாம். இரவில்போனால்தான்கட்டாயம்கிடைக்குமே.
இத்தலத்துக்குவந்தநாம்ராமநாதபுரத்துக்குவட்டகிழக்ஏழுமைல்தூரத்தில்உள்ளதேவிபட்டம்வரையில்சென்றுஅங்குள்ளபட்டாபிராமனையும்வாங்கலாம். இங்குதான்ராமன்வருணனுக்குஅபயம்அளித்தார்என்றுவரலாறு. இங்குபிரதானதேவதைமற்ரிஷாசுரமர்த்தினி. அதனால்தான்தேவிபட்டணம்என்றுபெயர்பெற்றிருக்கிறது. இந்தத்தேவிபட்டணத்தைஅடுத்துநவபாஷாணம்என்னும்சமுத்திரதீர்த்தம்வேறேஇருக்கிறதுஇங்குதான்ராமர்நவக்கிரஹபூஜைசெய்திருக்கிறார். ஒன்பதுகுத்துக்கல்கள்கடலில்இருக்கின்றன. அந்தஇடத்தில்அலைஅடிப்பதில்லை. இந்தத்தீர்த்தத்தில்நீராடிப்பக்கத்தில்உள்ளகோயிலில்மங்களநாதர்மங்களேகவரியையும்வணங்கினால்எல்லாநல்லபலன்களும்சித்திக்கும்என்றுநம்பிக்கை. அவகாசம்உள்ளவர்களெல்லாம்தேவிபட்டணம், நவபாஷாணம்எல்லாம்சென்றேதிரும்பலாம்நல்லபலன்கள்கிடைக்குமென்றால்தயக்கமில்லாமல்செல்வதற்குமக்கள்முன்வருவதில்வியப்பென்ன.