காளையார்கோயில் காளீசர்
ஒருகுடும்பத்தில்மூன்றுசகோதரர்கள், நல்லபரம்பரைச்செல்வந்தர்கள். மூவரிலும்மூத்தவர்நல்லஉழைப்பாளி, விவசாயவிருத்தியிலும், வியாபாரப்பெருக்கத்திலுமேகண். அதனால்குடும்பத்துக்குச்சொத்துசேர்ப்பதெல்லாம்அவர்தான். நடுஉள்ளவரோகொஞ்சம்குஷிப்பேர்வழி. நல்லசெலவாளி, மைனர்போலத்திரிவார், செலவுசெய்யத்தயங்கமாட்டார். கோலாகலமாகச்செலவுசெய்துகொண்டுஉல்லாசமாகக்காலங்கழிப்பார், கடைக்குட்டிமிக்கஅடக்கம், பொருள்சேர்க்கவோ, செவழிக்கவோஅவர்முற்படுவதில்லை. எப்போதும்படிப்பதும்பஜனைக்குச்செல்வதுமாகவேகாலங்கழிக்கிறார். இப்படிஒருகுடும்பம், இத்தகையசகோதரர்களைநாம்வாழ்நாளில்பலஇடங்களில்கண்டிருக்கிறோம்அல்லவா?
இதேவிதமாகநாம்வணங்கும்கடவுளரும்வாழ்கிறார்கள்என்றுஅறிகிறபோதுதான்நமதுஆர்வம்அதிகமாகிறது. அதில்முழுமுதற்கடவுளாகியசிவபெருமானதுவாழ்க்கையிலேயேஇப்படிநடக்கிறது. முத்தொழில்புரியும்முதல்வனேநாம்கண்டமூன்றுசகோதரர்கள்போல்மூன்றுநிலையிலும்நின்றுஅருள்புரிகிறான்என்றால்கேட்கவாவேணும்! ஒருசிறுஊர். அங்குஒருபெரியகோயில், கோயிலிலேமூன்றுசந்நிதி. கோயிலில்முதல்வராகஇருப்பவர்காளீசர், அவருக்குவலப்புறம்சோமேசர். இடப்புறம்சுந்தரேசர். இந்தமூவரையும்பற்றிஊர்மக்கள்சொல்வதுஎன்னவென்றால், ‘காளீசர்தேட, சோமேசர்அழிக்க, சுந்தரேசர்சுகிக்கஎன்றல்லவாஅமைந்திருக்கிறதுஎன்பதுதான். இதற்குவிளக்கம்இதுதான். இந்தக்கோயில்சொத்துமுழுதும்ஆம், நாற்பதுகிராமங்களில்உள்ளநிலமும்இரண்டுலக்ஷம்பெறுமானநகைகள்மஞ்சங்கள்எல்லாமும்தேடிச்சேர்த்துவைத்திருப்பவர்காளீசர்தான். நிலங்களின்பட்டாஎல்லாம்அவர்பேரிலேதான்; சொத்துச்சுதந்திரம்எல்லாமேஅவருக்குத்தான். ஆனால்அவருக்குஎன்றுபெரியபிரம்மோத்சவமோஅல்லதுமற்றச்செலவுகளோஅதிகம்கிடையாது. அவருக்குநடக்கும்உத்சவம்எல்லாம்தைப்பூசத்தில்புஷ்பஸ்நானம்தான்.
ஆனால்சோமேசருக்குத்தான்ஆடம்பரமானஉத்சவம், வைகாசிவிசாகத்திலே. அந்தபிரமோத்சவத்தில்தான்தேரோட்டம்தெப்பம்புஷ்பபல்லக்குஎல்லாம். மொத்தச்செலவுபதினாயிரம்வரைஆகும். ஆடம்பரமானசெலவுகளுக்குக்குறைவேயில்லை. இருவரையும்அடுத்துஒருசின்னஞ்சிறுகோயிலிலேகுடியேறியிருக்கும்சுந்தரேசரோமிக்கஅமைதியாகவாழ்கிறார். நித்தியப்படியிலும்இவர்தேவைமிகமிகக்குறைவுதான், உத்சவாதிகளிலும்இவர்கலந்துகொள்கிறதில்லை. ஆம்! இப்போதுவிளங்குகிறது–காளைதேட, சோமன்அழிக்க, சுந்தரர்சுகிக்கஎன்றுமக்கள்ஏன்சொல்லுகிறார்கள்என்று.
இப்படி, காளீசுவரரும்சோமேசரும், சுந்தரேசரும்கோயில்கொண்டிருக்கும்ஊர்தான்இன்றுகாளையார்கோயில்என்றுவழங்கப்படுகிறது. இக்காளையார்கோயிலுக்கேசெல்கிறோம்நாம்இன்று.
இந்தச்சின்னஞ்சிறியஊர்மதுரைக்குநேர்கிழக்கேநாற்பதுமைல்தூரத்தில்தொண்டிக்குச்செல்லும்ரஸ்தாவில்இருக்கிறது. ரயில்வழியாகச்செல்லவிரும்புபவர்கள்சிவகங்கைஸ்டேஷனில்இறங்கிக்கிழக்கேபத்துமைல்தூரம்செல்லவேணும். காரைக்குடி, தேவகோட்டை, சருகனிவழியாகவும்வரலாம். ஊர்சிறியஊர்தான்என்றாலும்கோயிலும்குளமும், கோபுரமும்வீதிகளும்பெரியவைகளாகவேஇருக்கின்றன. இந்தத்தலத்தைஅப்பர், சம்பந்தர், சுந்தரர்மூவரும்பாடியிருக்கிறார்கள், தேவாரகாலத்தில்இந்தத்தலத்தின்பெயர்கானப்பேர்என்றுஇருந்திருக்கிறது.
கங்காளர், கயிலாயமலையாளர்.
கானப்பேராளர், மங்கை
பங்காளர், திரிசூலப்படையாளர்
விடைப்பாளர்பயிலுங்கோயில்
என்றுஞானசம்பந்தர்கோயிலைப்பாடினால், கோயிலில்உள்ளமூர்த்தியை,
ஆனைக்காவில்அணங்கினை
ஆரூர்நிலாயஅம்மானைக்
கானப்பேரூர்சட்டியைக்
கானூர்முளைத்தகரும்பினை
என்றுநாவுக்கரசர்பாடிமகிழ்கிறார். இந்தக்கானப்பேரூர்கட்டியாம்கடவுளேசுந்தரர்தேவாரத்தில்கானப்பேரூர்உறைகாளையாகிறார். அதனால்அந்தஊர்காளையார்கோயில்என்றுவழங்கப்படுவதற்கும்காரணம்ஆகிறார். நாவலூர்நம்பியாரூரர்தலம்தலமாகச்சென்றுஇறைவனைப்பாடித்துதித்துவரும்நாளில், தன்அருமைநண்பர்சேரமான்பெருமாள்நாயனாரோடுதிருச்சுழியல்என்னும்தலத்துக்குவந்துசேருகிறார். அங்குஅன்றிரவுதுயிலும்போதுகானப்பேர்உறைஅண்ணல்அவர்கனவிலேதோன்றுகிறார். காளைஉருவிலே, செங்கையினிற்பொற்செண்டும், திருமுடியில்சுழியமுடன், எங்குமில்லாத்திருவேடம்என்புருகாமுன்காட்டி, யாம்இருப்பதுகானப்பேர்என்றும்ஞாபகப்படுத்திவிட்டுமறைகிறார். அதனால்சுந்தரர்இந்தக்கானப்பேர்ஊருக்கேவருகிறார். வரும்வழிஎல்லாம்.
காதலுறத்தொழுவதுஎன்றுகொலோ?
அடியேன்
கார்வயல்சூழ்கானப்பேர்உறை
காளையையே !
என்றுஏங்கிஏங்கித்துதிக்கிறார். அன்றுமுதல்கானப்பேர்என்றுவழங்கப்பட்டதலம்காளையார்கோயில்என்றுபெயர்பெறுகிறது.
கைலாயத்தில்ஒருநாள்பார்வதியும்பரமசிவனும்தனித்திருந்தார்கள். அப்போதுஒருசந்தேகம்எழுகிறது. பார்வதியின்
காளையார்கோயில்–கோபுரம்
உள்ளத்தில்; ‘எல்லாமேவல்லவராகியஉமக்குச்சகளரூபம்எதற்கு?’ என்றுகேட்டுவைக்கிறாள்அன்னைபார்வதி. அத்தனும்சிருஷ்டிதிதி, சங்காரம். திரோபவம், அனுக்கிரகம்என்னும்ஐந்தொழிற்காகவேஇவ்வுருக்கொண்டிருக்கிறோம்என்றுசொல்லிவிட்டுஅத்துடன்நிறுத்தாது. எனதுகண்திறக்கும்போதுஉலகம்தோன்றும். விழித்திருக்கும்போதுவாழும், மூடுங்காலத்துஅழியும்என்றுஅருள்திறத்தைமேலும்விளக்குகிறார். இதைக்கேட்டஅம்மை–பெண்மைக்கேஉரியசந்தேகத்தோடு, இதைப்பரீட்சித்துப்பார்த்துவிடத்துணிகிறாள்.
இறைவன்பின்புறமாகவந்துஅவரதுகண்கள்இரண்டையும்ஏதோவிளையாட்டாகத்தன்கைகளால்பொத்துகிறாள். அவ்வளவுதான்; மூவுலகமுமேஇருளில்புதைந்துவிடுகின்றது. உயிர்கள்எல்லாம்வாடிவதங்கிவிடுகின்றன. அண்ணலும்அம்மையைக்கடிந்து, அவள்தன்கைகளைவிவக்குகிறார். இப்படிஒருஉத்பாதத்தைஏற்படுத்தியதற்காகப்பார்வதியைக்கரியஉருவமுடையகாளியாகக்கடவாய்என்றுசபித்துவிடுகிறார். அம்மை, அறியாதுசெய்தபிழையைமன்னிக்கவேண்டும்எனஇறைவன்காலடியில்விழுந்துகதற, ‘சரிசண்டாகரனைவென்றபின், காளியுருவம்நீங்கித்திரும்பவும்என்னைவந்துசேர்வாய்‘ எனஅனுக்கிரகிக்கிறார்.
அம்மையும்அரனதுஆணைப்படியேகாளியாகிறாள், கானப்பேரூரைஅடுத்தமருதவனத்தில்துர்க்கைவடிவிலேகோயில்கொள்கிறாள். இந்தச்சமயத்தில்பெருவரங்கள்பலபெற்றசண்டாசுரன்தேவர்களைவருத்த, தேவர்கள்அம்மையிடம்முறையிட, அம்மையும்சண்டாசுரனோடுபோர்புரிந்துஅவனைமுடிக்கிறாள். தேவர்களும்பூமழைபொழிந்துதேவியைவாழ்த்துகிறார்கள். தேவியின்சாபமும்நீங்குகிறது. சாபவிமோசனம்பெற்றஇந்தக்காளியம்மையேஅழகெலாம்திரண்டசுவர்ணவல்லியாகி, கானப்பேரூரில்கோயில்கொண்டிருந்தகாளீசரைமணந்துஅவரதுஇடப்பாகத்தில்வீற்றிருக்கிறாள். காளையார்கோயிலைச்சுற்றியுள்ளசின்னஞ்சிறியஊர்கள்எல்லாம்இந்தப்புராணவரலாற்றைஇன்றைக்கும்பாறைசாற்றிக்கொண்டிருக்கின்றன.
தேவர்கள்தேவியைக்கண்டுகுறையிரந்துநின்றஇடமேகண்டதேவி; தேவிதங்கியிருக்கதேவர்கள்நிருமாணித்துக்கொடுத்தகோட்டையேதேவிகோட்டை, அம்மைசண்டாசுரனைவெற்றிக்கண்டஇடமேவெற்றியூர்; சண்டாசுரனதுதேரில்உள்ளகொடிஇற்றுவீழ்ந்தஇடமேமாளக்கண்டான்; வெற்றிபெற்றதேவியைப்பூமழைபொழிந்துதேவர்கள்வாழ்த்தியஇடமேபூங்கொடிஎன்றுஇன்றும்வழங்கப்பெறுகின்றன. இப்படிக்காளியுருவில்இருந்தபார்வதியாம்பரமேட்டியைமணந்தஈசுவரனேகாளீசுவரனாகிறார். அந்தச்சுவர்ணவல்லியையும்தன்இடப்பாகத்தில்ஏற்றருளியபின்சுவர்ணகாளீசுவரனாகவேமாறுகிறார். இன்றும்காளையார்கோயில்மூலமூர்த்திசுவர்ணகாளீசுவரன்என்றுதானேஅழைக்கப்படுகிறான்,
காளீசுவரன்கானப்பேர்ஊரில்கோயில்கொண்டிருக்கும்போதுஇந்தப்பாண்டியநாட்டைஆண்டவன்வீரசேனன். இவனுக்குப்பழவினைவசத்தால்குழந்தைஇல்லை. அதனால்இவனும்இவன்மனைவிசோபனாங்கியும்சுவர்ணத்தால்ஒருபிள்ளையைச்செய்துவைத்து, அதைப்பார்த்துப்பார்த்துத்திருப்திஅடைகிறார்கள். சுவர்ணகாளீசுவரனைவணங்கவந்தஇந்தத்தம்பதிகள், கோயிலைஅடுத்தஉருத்திரதீர்த்தத்தில்முங்கிமுழுகிஎழுகிறார்கள்சுவர்ணப்பதுமையோடு, இறைஅருளால்அந்தச்சுவர்ணபுத்திரன்உயிர்பெறுகிறான். உடனேஇறைஅருளைநினைந்து, அங்குக்கோயில்கொண்டிருந்தகாளீசர்சுவர்ணவல்லி, சோமேசர்சௌந்திரவல்லியாவருக்கும்கோயில்கள்எடுப்பித்து, நித்தியநைமித்திககாரியங்களுக்கும்உற்சவாதிகளுக்கும்ஏராளமானநிபந்தங்களைஏற்படுத்துகிறான்.
இந்தஇரண்டுபெருமான்களைவணங்கிவாழ்த்துவதோடுஅவன்திருப்திஅடையவில்லை. தன்னுடையவழிபடுதெய்வமாகியசோமசுந்தரரையும்மீனாக்ஷியையும்தரிசித்துவணங்காமல்தினமும்அவன்உணவுஉண்பதில்லை. காளீசர்கோயில்கட்டும்திருப்பணியில்ஈடுபட்டிருக்கும்போதும்தினமும்மதுரைவந்துசோமசுந்தரரைத்தரிசித்துவிட்டுக்கானப்பேரூருக்குத்திரும்பிவருகிறான். ஒருநாள்அடைமழைபெய்தது. கானப்பேரூரிலிருந்துமதுரைவந்துதிரும்பமுடியவில்லை. அதனால்உணவேஅருந்தாமல்அமர்ந்திருக்கிறான். அந்தச்சமயத்தில்சோமசுந்தரனேஅந்தப்பாண்டியமன்னன்வீரசேனன்கனவில்தோன்றி, ‘இனிநீஇங்குவரவேண்டியதில்லை. நாமேஅங்குவந்து, காளிசுவரனுக்கும்சுவர்ணவல்லிக்கும்இடையிலேவீற்றிருப்போம்‘ என்றுசொல்லிமறைகிறான். விடிந்துஎழுந்துபார்த்தால்குறிப்பிட்டஇடத்தில்ரிஷபத்தின்அடிச்சுவடுகள்தோன்றுகின்றன. அந்தஇடத்திலேஅவசரம்அவசரமாகமீனாக்ஷிசுந்தரேசருக்குக்கோயில்எழுகிறது. அங்கயற்கண்ணிதன்னொடும்அமர்ந்தஆலவாய்அரன்இங்குசுந்தரனாகஎழுந்தருளுகிறார்.
காளீசர், சோமேசர், சுந்தரேசர்மூவரும்கோயில்கொண்டிருக்கும்இந்தக்கோயிலுக்குமேல்புறத்திலேஒருபெரியதெப்பக்குளம். இக்குளம்மதுரைமாரியம்மன்தெப்பக்குளம்போல்அவ்வளவுபெரியது. அன்றுஎன்றாலும்அமைப்புஎல்லாம்அதேபோலத்தான். களத்தின்நடுவில்இருக்கும்நீராழிமண்டபமேஒருபெரியகோபுரமுடையசிறியகோயிலாகவும், அதைச்சுற்றிநான்குமூலைகளிலும்கோபுரங்களோடுஅமைந்தமண்டபங்களாகவும்இருக்கின்றது. இந்தக்குளத்தைத்தான்ஆனைமடுஎன்கிறார்கள். ஆம்! ஆனைஇறங்கினாலும்அதைமுழுகடிக்கும்ஆழமுடையதுஎன்றுதெரிகிறது. என்றாலும்இந்தக்குளம்எப்படிஏற்பட்டது. அதற்குஆனைமடுஎன்றுஏன்பேர்வந்தது? என்பதற்குஒருரஸமானகதை.
தேவேந்திரனதுஐராவதம்என்னும்வெள்ளையானைகைலாசம்போய்த்திரும்பவருகிறது. விளையாட்டாக, அங்கிருந்தரிஷபத்தின்வாலைப்பிடித்துஇழுத்திருக்கிறது. ரிஷபமானநந்திக்கோஒரேகோபம், உடனே, ‘நீகாட்டானைடாகப்பூமியில்பிறந்துஆயிரம்வருடங்கள்வருந்தக்கடவாய்‘ என்றுசாபமிட்டுவிடுகிறது. நந்தியிட்டசாபத்துக்குவிமோசனத்தைநாயகனேநல்குகிறார். அதனால்காட்டானையாகப்பிறந்துவளர்ந்தஐராவதம், இத்தலத்துக்குவந்துதன்கொம்புகளாலேயேகுத்திக்குத்திஇந்தத்தடாகத்தைஉண்டாக்கி. இந்தத்தடாகத்திலுள்ளதண்ணீரையேதன்துதிக்கையால்முகந்துகொண்டுவந்துகாளீசர், சோமேசருக்குஎல்லாம்அபிஷேகம்செய்யச்சாபவிமோசனம்ஆயிற்றாம். அன்றுமுதல்இந்தத்தடாகம்ஆனைமடுஎன்றேவழங்கப்பபடுகிறது.
இந்தக்காளையார்கோயில்என்னும்கானப்பேர்மிகவும்பழைமையானஊர்என்றுதெரிகிறது. இந்தஊரைச்சுற்றிஒருகோட்டைஇருந்திருக்கிறது. அந்தப்பழையசங்ககாலத்திலேயே, அப்போதுபாண்டியநாட்டைஆண்டமன்னன்தான்உக்கிரப்பெருவழுதி. இவனேதிருக்குறள்அரங்கேறும்போதுஅரியாசனத்திலிருந்தபெருமகன். இவன்அப்போதுஇந்தக்கானப்பேரூரில்இருந்தவேங்கைமார்பன்என்னும்சிற்றரசனைவென்றுஅவன்கோட்டையைக்கைப்பற்றியதால், ‘கானப்பேரெயில்எறிந்தஉக்கிரப்பெருவழுதி‘ என்றவிருதைப்பெற்றிருக்கிறான். சோழமன்னர்களும்பாண்டியமன்னர்களும்இக்கோயிலைக்கட்டவும்பராமரிக்கவும்வேண்டியவைகளைச்செய்திருக்கிறார்கள். கி.பி.பதினான்காம்நூற்றாண்டில்முகம்மதியர்தென்நாட்டின்மீதுபடையெடுத்தபோது, ஸ்ரீரங்கத்துரங்கநாதரையும்சேதப்படுத்திவிடுவாரோஎன்றுஅஞ்சி, அங்குள்ளகர்ப்பக்கிருகத்தைச்சுவர்எழுப்பிமறைத்துவிட்டு, பிள்ளைலோகாச்சாரியார்என்பவர், ரங்கநாதரையும், ரங்கநாயகியையும்இந்தக்கானப்பேரூருக்கேகொண்டுவந்துஒருசிறுகோயிலைஅமைத்துஅங்குவைத்துக்காப்பாற்றியிருக்கிறார். இதுபழையகதை.
இந்தக்கோயில்திருப்பணியிலேசமீபகாலத்திலேமுழுதும்ஈடுபட்டவர்கள்சிவகங்கையிலிருந்துஅரசாண்டபெரியமருது, சின்னமருதுஎன்றபாளையப்பட்டுக்காரர்களே. மூன்றுசந்நிதிகளிலும்மண்டபங்களெல்லாம்கட்டி, சோமநாதரதுகோபுரத்தையும்பெரிதாகக்கட்டியபெருமைபெரியமருதுவையேசாரும். இந்தக்கோபுரத்திருப்பணிக்குச்செங்கல்இந்தக்கோயிலிலிருந்துதென்மேற்குபன்னிரண்டுமைல்தொலைவில்உள்ளமானாமதுரையிலிருந்தேவந்ததாம். ஆங்கிலேயர்இங்குவந்துகாலூன்றிநிற்கநினைத்தபோதுஅவர்களைஎதிர்த்துப்போரிட்டவர்களில்முதன்மையானவர்இந்தமருதுசகோதரர்கள். போரில்பிறரதுவஞ்சனையால்மருதுசகோதரர்கள்தோற்கிறார்கள். தோற்றவர்களில்பெரியமருதுஆங்கிலேயர்கையில்அகப்படாதுதலைமறைவாய்இருக்கிறார். அவர்இருக்கும்இடத்தையேஆங்கிலேயர்களால்கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆங்கிலதளகர்த்தனானகர்னல்ஆக்னியூவுக்கு, செய்வதுஎன்னதென்றுதெரியவில்லை. அப்போதுஅறிகிறான், இவர்இந்தக்கோபுரம்கட்டியஅருமையை, உடனேதோன்றுகிறதுஒருயுக்தி. ‘சரிஇன்றைக்குப்பத்தாவதுநாள்இந்தப்பெரியமருதுவந்துஅடிபணியாவிட்டால்இவர்கட்டியஇந்தக்கோபுரம்தரைமட்டமாக்கப்படும்‘ என்றுஊர்ஊராகத்தெருத்தெருவாகத்தண்டோராப்போடச்சொல்கிறான்.
பெரியமருதுவின்காதில்விழுகிறதுதண்டோராச்சத்தம். தாம்கட்டியகோபுரம்தரைமட்டம்ஆக்கப்படுவதைவிடத்தம்தலையையேகொடுப்பதுசரிஎன்றுஎண்ணுகிறார். குறித்தநாளிலேவந்துதளகர்த்தனிடம்சரண்அடைகிறார். தளகர்த்தனும்இவரதுகலைஉணர்வை, பக்தியைஎல்லாம்மதிக்கிறான். என்றாலும்மேலதிகரிகளின்உத்தரவுப்படியேஇவரைத்தூக்கிலிடஏற்பாடுசெய்கிறான். அந்தச்சமயத்தில்அவர்வேண்டிக்கொண்டபடியேகாளீசர்சந்நிதிக்குநேரேயுள்ளபொட்டலில்அவருக்குச்சமாதிஎழுப்பவும்ஒத்துக்கொள்கிறான். இப்படிஎன்றும்சமாதியிலிருந்துசோமேசரையும்காளீசுவரரையும்வணங்கிக்கொண்டிருப்பவரதுசிலாஉருவமேபெரியமருதுவின்திருவுரு. காளீசர்சந்நிதிவாயிலில்இன்றும்நின்றுகொண்டிருக்கிறது. சமீபகாலத்தில்கோயிலின்திருப்பணிகள்முடிந்து, கோபுரங்கள்புதுப்பிக்கப்பட்டுக்குடமுழுக்குவிழாவும்சிறப்பாகநடந்திருக்கிறது.