திருவாதவூர் அண்ணல்
சிலர்பெரியமனிதர்களாகவேபிறக்கிறார்கள்; சிலர்முயற்சியால்பெரியமனிதர்களாகிறார்கள். சிலர்பெரியமனிதர்களாகஆக்கப்படுகிறார்கள்என்பதுஆங்கிலப்புலவர்ஒருவரதுவிமரிசனம். இதுமனிதர்களுக்குமட்டும்இருக்கும்சிறப்புஅல்ல. கிராமங்கள், நகரங்களுக்குமேஇச்சிறப்புஉண்டு. அரியக்குடி, செம்மங்குடி, முசிரிமுதலியகிராமங்கள், சரித்திரப்பிரசித்தியோஅல்லதுபுராணப்பிரசித்தியோஉடையவைஅல்ல. என்றாலும்இம்மூன்றுஊர்களையும்இன்றுஇசைஉலகில்அறியாதவர்இல்லை. காரணம், அரியக்குடியில்ஒருராமானுஜஅய்யங்கார், செம்மங்குடியில்ஒருஸ்ரீனிவாசஅய்யர், முசிரியில்ஒருசுப்பிரமணியஅய்யர்தோன்றியிருக்கிறார்கள். நல்லசங்கீதவிற்பன்னர்களாகவாழ்கிறார்கள். அதுகாரணமாகஅரியக்குடி, செம்மங்குடி, முசிரிமுதலியகிராமங்களும்பிரசித்திஅடைந்துவிடுகின்றன.
அதுபோலவேமதுரைஜில்லாவில்ஒருசிறியஊர். அந்தஊர்அவ்வளவுபிரபலமானஊர்அல்ல, அங்குஅமாத்தியர்குலத்திலேஒருவர்பிறக்கிறார். வளர்கிறார். அவருடையஅறிவுடைமையைக்கேட்டுப்பாண்டியமன்னன்அரிமர்த்தனன்தன்மந்திரியாகவேஆக்கிக்கொள்கிறான். இந்தஅமைச்சரைஇறைவன்ஆட்கொள்கிறான். அவர்திருவாசகம்என்னும்தெய்வப்பாக்களைப்பாடுகிறார். அதனால்இறைவனாலேயேமாணிக்கவாசகர்என்றுஅழைக்கப்படுகிறார். அந்தமாணிக்கவாசகரதுபிறப்பால்வாதவூர்பெருமைஅடைகிறது. மாணிக்கவாசகரதுபிள்ளைத்திருநாமம்என்னஎன்றுதெரியவில்லை. அவரைவாதவூரர்என்றேஅழைக்கிறார்கள். வாதவூர்அண்ணல், வாதவூர்த்தேவன்என்றெல்லாம்போற்றப்படுகிறார். இப்படிமாணிக்கவாசகராம்வாதவூரர்பிறந்ததினாலேபெருமையும்பிரசித்தியும்பெற்றதலம்தான்திருவாதவூர். அந்தத்திருவாதவூருக்கேசெல்கிறோம்நாம்இன்று.
திருவாதவூர்மதுரைக்குவடகிழக்கேபதினான்குமைல்தொலைவில்உள்ளசிறியஊர். மதுரையிலிருந்துஒத்தக்கடைவரைநல்லசிமிண்ட்ரோடுஇருக்கிறது. அதன்பிறகுசாதாரணக்கப்பிரோடுஉண்டுகார்இருந்தால்காரிலேயேசெல்லலாம், இல்லாவிட்டால்பஸ்ஸிலும்செல்லலாம். ஊருக்குள்நுழைந்ததும்நம்மைவரவேற்பதும்ஒருபெரியகுளம். அதனைஏரி, கண்மாய்என்றெல்லாம்கூறுவர்மக்கள், அதுவே! புராணப்பிரசித்திஉடையவிஷ்ணுதீர்த்தம். வேதங்களைவைத்திருந்ததிருமால்அவற்றைஇழந்திருக்கிறார்ஒருசமயம். அவற்றைமீண்டும்பெறஇத்தலத்துக்குவந்துஇங்குகோயில்கொண்டிருக்கும்வேதநாயகனைவழிபட்டிருக்கிறார். அவர்வழிபட்டதுநீர்உருவில்நின்று. அதனாலேதான்இந்தத்தீர்த்தம்விஷ்னுதீர்த்தம்என்கிறார்கள்.
இந்தத்தீர்த்தக்கரையில்நின்றுபார்த்தால்குளத்தினுள்ளேஇரண்டுகற்கம்புகங்கள்தெரியும். அவகளின்மீதுஒருகல்விட்டமும்அதன்மேல்ஒருபிம்பமும்இருக்கும். இதனையே, புருஷாமிருகம்என்பர். உடல்எல்லாம்மிருகத்தின்உடலாகவும்முகம்மாத்திரம்முனிவரதுமுகம்போலவும்இருக்கும். புருஷாமிருகத்தைப்பற்றிப்பாரதத்தில்விரிவானவிளக்கம்இருக்கிறது. பாண்டவர்தலைவனானதருமர்ராஜசூயயாகம்செய்யமுனைந்தபோது, யாகபூமியைதேர்ந்தெடுத்துஅதைச்சுத்தமாக்கப்புருஷாமிருகத்தையேவேண்டியிருக்கிறார். அப்படியேபுருஷாமிருகம்வேள்விநடக்கஇருக்கும்இடத்துக்குவந்துஅதனைத்தூயதாக்கியிருக்கிறது. இதோடுமாத்திரம்இதன்வரலாறுமுடிந்துவிடவில்லை. இதுவிஷ்ணுதீர்த்தத்தின்மத்தியில்இருந்துதீர்த்தத்தையேபுளிதமாக்கிக்கொண்டிருக்கிறது. இந்தவட்டாரத்தில்மழைஇல்லாமலிருந்தால்நூறுதேங்காய்களையம், வேறுபொருள்களையும்கருக்கிஇந்தச்சிலையின்மேல்பூசுவார்களாம். அப்படிப்பூசியஇரண்டுமூன்றுநாட்களுக்குள்நல்லமழைபெய்கிறதாம். இப்படிஓர்அனுபவம்இந்தப்புருஷாமிருகவழிபாட்டிலே. ஆகவேநாம்விஷ்னுதீர்த்தம், அங்குள்ளபுருஷாமிருகம்இவைகளைவணங்கியபின்னரேகோயிலில்நுழையவேணும். கோயில்வாயிலில்ஒருகுளம், அதனைஅக்கினிதீர்த்தம்என்பர்.
கோயில்வாயிலைஐந்துமாடங்கள்கொண்டராஜகோபுரம்அணிசெய்கிறது. கோயில்வாயிலைக்கடந்துஉட்சென்றால்வெளிப்பிராகாரத்துக்குவருவோம். அங்குதலவிருட்சமானமகிழமரம்விரிந்துபரந்திருக்கிறது. அங்கேயேபைரவதீர்த்தமும்இருக்கிறது. இந்தப்பிராகாரத்தின்வடபக்கத்திலேஒருநூற்றுக்கால்மண்டபம்இருந்திருக்கவேணும். அதுஇடிந்துசிதைந்துகிடக்கிறதுஎன்றாலும்இன்னும்இருக்கும்கொடுங்கைள்அழகுவாய்ந்தவையாகஇருக்கின்றன. இந்தமண்டடத்தைமாணிக்கவாசகரேகட்டினார்என்பதுகர்ணபரம்பரை. இந்தமண்டபத்தில்தான்நடராஜர்மணிவாசகருக்குத்தம்பாதச்சிலம்பொலிகேட்கநடனம்ஆடியிருக்கிறார். அதைமாணிக்கவாசகரே,
வாதவூரில்வந்துஇனிதுஅருளிப்
பாதச்சிலம்பொலிகாட்டியபண்பும்
என்றும்பாடிமகிழ்ந்திருக்கிறாரே. இந்தப்பிராகாரத்தையும்சுடந்தேஅடுத்தபிராகாரத்துக்குவரவேணும். பிரதானகோயில்நேரேயேஇருக்கும். அங்குசென்றுவாதபுரிஈசுவரராம்வேதநாயகரைத்தொழுதுவணங்கலாம். வாயுபூஜித்ததலம்ஆதலால்வாதபுரிஈசுவரர்என்றுபெயர்பெற்றிருக்கிறார். வேதங்களையெல்லாம்காத்தருளியகாரணத்தால்வேதநாயகர்என்றும்பெயர்பெற்றிருக்கிறார். அம்மையின்பெயரும்வேதநாயகி., ஆரணவல்விஎன்பதுதானே. வேதநாயகர்கோயில்உள்ளேயேஒருகிணறு, கபிலதீர்த்தம்என்றபெயரோடு. சகரர்களைத்தம்பார்வையால்எரித்தகபில்முனிவர்இங்கேவந்துவேதநாயகனைப்பூஜித்துஇத்தீர்த்தம்அமைத்தார்என்பதுபுராணவரலாறு. இந்தக்
திருவாதவூர்
கோயிலின்வடபக்கத்திலேயேஒருசிறுசந்நிதி, அங்குசிலாவிக்கிரகமாகநடராஜரும்சிவகாமியும்இருக்கின்றனர். நல்லவடிவங்கள். நூற்றுக்கால்மண்டபம்நல்லநிலையில்இருந்தபோதுஅங்கிருந்தவர்கள்போலும், பின்னர்மூலக்கோயிலிலேயேவந்துஇடம்பிடித்திருக்கின்றனர். இந்தச்சந்நிதிக்குநேரேயுள்ளதெற்குலாயிலைத்தான்ஆறுகால்பீடம்என்கிறார்கள். நல்லவேலைப்பாடமைந்தஆறுதூண்கள்அந்தமண்டபத்தைத்தாங்கிநிற்கின்றன, அந்தவாயில்வழியாகவெளியேவந்துமேற்குப்பிராகாரத்துக்குப்போனால்அங்குதான்மணிவாசகருக்குஒருசந்நிதிஅமைத்திருக்கிறார்கள். அங்குஏடேந்திய! கையராய்ச்சிலைவடிவில்மாணிக்கவாசகர்இருக்கிறார். அவரதுஉத்சவவிக்காகங்கள்இரண்டுஇருக்கின்றன. ஒன்றுபழையவடிவம். மற்றொன்றுசமீபகாலத்தில்செய்யப்பட்டது. பழையவடிவிலேமுழங்காலுக்குமேலேதுண்டுஅணிந்தநிலையில்இருப்பவரை, இப்போதுகோவணத்துடன்நிற்பதாகஅமைத்திருக்கிறார்கள். மாணிக்கவாசகாதுதுறவைப்பூரணமாகக்காட்டக்கோவணத்துடன்தான்நிற்கவேண்டுமென்றுநினைத்தார்கள்போலும். பழையவடிவிலேஉள்ளஅழகுபுதியவடிவில்இல்லைதான்.
இந்தப்பிராகாரத்தின்தென்பக்கத்துவாயில்வழியாகத்தான்வேதநாயகியின்தனிக்கோயிலுக்குச்செல்லவேணும். எல்லாச்சிவன்கோயில்களும்அம்பிகைஇறைவனின்இடப்புறம்இருக்க, இங்குவலப்புறத்தில்இருக்கிறாள். மதுரையிலும்அப்படியே, அவிநாசிகருணாம்பிகையும்அப்படியே. இப்படிஇடம்மாறியகாரணத்தால், இச்சந்நிதியில், சக்தியின்ஆதிக்கம்அதிகம்என்றும்தெரிகிறோம், நின்றகோலத்தில்கம்பீரமாகநிற்கும்ஆரணவல்லியைவணங்கிவெளியில்வரலாம்.
இத்தலம்மாணிக்கவாசகர்பிறந்ததால்உயர்ந்ததுஎன்றுமுன்னமேயேசொன்னேன். வாதவூரர்மன்னவன்விருப்பப்படியேஅமைச்சர்பதவியேற்று, அவன்வேண்டிக்கொண்டவண்ணமேகீழ்க்கரைக்குக்குதிரைவாங்கச்சென்றதும், அங்குதிருப்பெருந்துறையில்இறைவானால்ஆட்கொள்ளப்பட்டதும், பின்னர்மன்னன்வாதவுரைஅழைத்துக்கேட்க, அவருக்காகஇறைவனேநரிகளைப்பரிகளாக்கிக்கொள்வதும், பின்னர்அந்தப்பரிகளேநரிகளாகிஓடிப்போய்விடுவதும்இதற்கெல்லாம்காரணம்வாதவூரரேஎன்றுஅவரைச்சிறையில்அடைப்பதும், அங்குவைகையில்வெள்ளம்பெருகிவரஅதைஅடைக்கஊரையேதிரட்டுவதும், அங்குவந்தியின்பங்குக்காகஇறைவனேகூலியாளாகவந்துபாண்டியமன்னனிடம்அடிபடுவதும், பின்னர்வாதவூரர்பெருமையைஅறிவதும்இறைவனேநடத்தியதிருவிளையாடல். இந்தத்திருவிளையாடல்விழாசிறப்பாகமதுரையில்நடைபெறுகிறது. வருஷந்தோறும்அவ்விழாவுக்கு, வாதவூரிலுள்ளமாணிக்கவாசகர்எழுந்தருளிநான்குநாட்கள்அங்குதங்கிஅதன்பின்பேஊர்திரும்புகிறார். வாதவூரராம்மாணிக்கவாசகருக்குமற்றமாணிக்கவாசகருக்குஇல்லாதசிறப்புஇருந்தாகவேண்டுமே. மார்கழிமாதம்முதல்பத்துநாட்கள், வாதவூரில்திருவெம்பாவைஉற்சவம்நடைபெறுகிறது. பத்துநாட்களும்மாணிக்கவாசகர்உலாவருவார்.
இத்தலத்தில்சங்கப்புலவர்கபிலரும்வாழ்ந்திருக்கிறார். முன்னரேநாம்திருக்கோவிலூர்போயிருந்தபோது. அவர்பாரியின்சிறந்தநண்பர்என்றும், பாரிமக்களுக்குமணம்முடித்துவைத்தபின்எரிமூழ்கிஇறந்தனர்என்றுஅங்குள்ளகபிலக்கல்கூறும்கதைமூலம்தெரிந்திருக்கிறோம். மணிவாசகரைப்போலவே, கபிலரும்இவ்வாதவூரில்பிறந்தவர்தாம். இவர்சின்னப்பிள்ளையாகஇருந்தபோதேஒருபாட்டுப்பாடியிருக்கிறார். பாட்டுஇதுதான்.
நெட்டிலைஇருப்பைவட்டவான்பூவட்டாதாயின்
பீடுடைப்பிடியின்கோடுஏய்க்கும்மே! வாடினோபைத்தலைப்பரதர்மனைதொறும்உணங்கும்
செத்தனைஇரவின்சீர்ஏய்க்கும்மே!
நெடியஇலைகளையுடையஇலுப்பைப்பூவாடாமல்இருந்தால்பெண்யானைபின்கொம்பைஒத்திருக்கும், வாடிவிட்டாலோவலையர்வீடுகளில்காய்ந்துகிடக்கும். இறாமீன்போல்சுருண்டுகிடக்கும்என்பதுபாட்டின்பொருள். இந்தப்பாட்டினையும்நினைவுபடுத்திஇந்தப்பாடல்பாடி!! கபிலனார்பிறந்தஊர்திருவாதவூர்என்றுதிருவிளையாடல்புராதனம்கூறும்.
நீதிமாமதுரகநீழல்
‘நெட்டிலைஇருப்பை‘ என்றோர்
காதல்கூர்பனுவல்யாக்கும்
கபிலனார்பிறந்தமூதூர்
வேதநாயகனூர்வாழ்திருவாதவூர்
என்பதுபாடல். ஆகவேஇந்தஊர்சிறந்தஇலக்கியப்பிரசித்திஉடையஊராகவும்இருந்திருக்கிறது.
எல்லாம்சரிதான். மணிவாசகர்பிறந்தஇடம், வீடுஒன்றும்இந்தத்தலத்தில்இல்லையாஎன்றுநீங்கள்கேட்பதுகாதில்விழுகிறதுவேதநாயகர்கோயிலில்இருந்துதெற்கேஇரண்டுபர்லாங்குதூரத்தில்ஒருசிறுகோயில்கட்டியிருக்கிறார்கள், அங்குதான்மனிவாசகர்வீடுஇருந்ததாம். அதனால்ஊர்மக்கள்கொஞ்சம்பணம்திரட்டிஅங்குமணிவாசகருக்குஒருகோயில்எழுப்பியிருக்கிறார்கள்.
வாதவூரராம்மாணிக்கவாசகர்வரலாற்றைப்பற்றிஎவ்வளவோவிவாதம், அவர்மூவர்முதலிகளுக்குமுற்பட்டவரா? இல்லை. பிற்பட்டவரா? இந்தவாதங்களுக்கெல்லாம்முடிவுகாண்பதுஎளிதானகாரியம்இல்லை. ஆனால்அவர்பிறந்தஊர்வாதவூர்என்பதில்வாதம்ஒன்றுமேஇல்லை. மானமங்கலத்திலிருந்துஇங்குவந்துகுடியேறிஅமாத்தியப்பிராமணர்குலத்தில்தோன்றியவர்என்பதிலும்விவாதம்இல்லை. இவற்றையெல்லாம்விட, இந்தவாதவூர்த்தேவுஎன்றுஉலகபுகழ்மாமணியின்மணிவாசகம்ஊனினைஉருக்கிஉள்ளொளிபெருக்கும்என்பதிலும்வாதமேஇல்லை . திருவாசகத்தைக்கசிந்துபாடியராமலிங்கஅடிகள்.
வான்கலந்தமாணிக்கவாசக!
நின்வாசகத்தை
நான்கலந்துபாடுங்கால்
நற்கருப்பஞ்சாற்றினிலே
தேன்கலந்துபால்கலந்து
செழுங்கனித்தீஞ்சுவைகலந்துஎன்
ஊன்கலந்துஉயிர்கலந்து
உவட்டமாய்இனிப்பதுவே.
என்றுகூறினார். திருவாசகத்தேனை, அமுதைப்படித்துஅனுபவித்தவர்களுக்குள்ளேஇதைப்பற்றியும்யாதொருவிவாதமுமில்லை. ஏதோவாதவூர்என்றதலத்தில்பிறந்தாலும், வாதங்கள்இல்லாதபலஉண்மைகளைஅல்லவாஎவ்லோரும்உணரும்படிசெய்திருக்கிறார். அதுபோதும்நமக்கு.