அழகர்கோயில் அழகன்
கோவையில்ஒருபட்டிமண்டபம். “அழகைஆராதணைபண்ணியவள்ஆண்டாள்; அறிவைஆராதனைபண்ணியவர்மாணிக்கவாசகர். இருவரதுஆராதனையில்எவரதுஆராதனைசிறந்தது?” என்பதுவிவாதத்துக்குஎடுத்துக்கொண்டபொருள், ஆண்டாள்பாசுரங்களையும், மாணிக்கவசாகரதுதிருவாசகப்பாடல்களையும்அலசிஆராய்ந்துவிவாதித்தனர், விவாதத்தில்கலந்துகொண்டவர்கள். பட்டிமண்டபத்தின்தலைமையைஏற்றிருந்தநான்விவாதத்தில்தீர்ப்புக்கூறிமுற்றுப்புள்ளிவைக்கவேண்டியிருந்தது. அந்தவேலைஎவ்வளவுசிரமமானதுஎன்பதைஅப்போதுஉணர்ந்தேன். நான்சொன்னேன், “அழகுசிறந்ததா? அறிவுசிறந்ததா? என்பதுவிவாதம்அல்ல. ஆராதனைக்குஉரியவைகளில்அறிவுசிறந்ததா, அழகுசிறந்ததா? என்பதுதான். அறிவுடைமைஅழகுடைமையைவிடச்சிறந்ததுதான். என்றாலும்அறிவுஇறைவன்தன்மைகள்என்னஎன்றுவிவகரித்துஅதில்தெளிவுகாணஉதவுமேஅன்றிஆராதனைக்குஉரியஒன்றாகஅமைதல்இயலாது. ஆனால்ஆராதனைக்குஉரியதாகஇறைவனதுஅழகுதான்உதவுதல்கூடும்”என்றுபீடிகைபோட்டு, ஆண்டாள்தன்காதலனதுஅழகைஎப்படிஎப்படிஅனுபவித்துஆராதனைபண்ணுகிறாள்என்றுபலபாசுரங்களைமேற்கோளாகக்காட்டினேன். திருவரங்கத்துஅழகனைக்கண்டகாதலித்துநிற்கும்அவள்நிலையைவிளக்கும்பாடல்இதுதான், தன்தோழியைப்பார்த்துப்பேசுகிறாள்ஆண்டாள்.
எழில்உடையஅம்மனையீர்!
என்அரங்கத்துஇன்னமுதர்
குழல்அழகர், வாய்அழகர்
கண்அழகர், கொப்பூழில்
எழுகமலப்பூஅழகர்
எம்மானார்என்னுடைய
கழல்வளையைத்தாமும்
கழல்வளையேஆக்கினரே
என்றுஏங்குகிறபாடலில்ஆண்டாள்எப்படிஅரங்கத்துஅழகனின்குழல்அழகிலும், கண்அழகிலும், கொப்பூழ்அழகிலும்உள்ளம்பறிகொடத்துநின்றிருக்கிறாள்என்பதைப்பார்க்கிறோம். அன்றுமிதிலைநகரில்உலாவந்தராமனைக்கண்டபெண்கள்எப்படிஅவனதுதோள், தடக்கைமுதலியஅவயங்களைக்கண்டுமோகித்து, அங்கஅவயவங்களில்வைத்தகண்ணைஎடுக்கமூடியாமாமல்திணறிநின்றார்கள்என்றுகம்பன்வர்ணிக்கிறானோ, அதையும்மிஞ்சியநிலையில்அழகனதுஅவயவங்கள்எல்லாவற்றையுமேஆராதித்துக்காணும்பேறுபெற்றவள்ஆண்டாள். ஆதலால்அவளதுஅழகுஆராதனையேசிறந்ததுஎன்றுகூறினேன்நான். இப்படித்தான்ஸ்ரீமந்நாராயணன்எல்லாஆழ்வார்களாலும்ஆராதிக்கப்பட்டிருக்கிறான். ஆழ்வார்கள்கண்டஅழகர்களில்எல்லாம்சிறந்தஅழகனாகஇருப்பவனேதிருமாலிருஞ்சோலைஎன்னும்அழகர்கோயிலில்அழகன்என்றபெயரோடுகோயில்கொன்டிருக்கிறான். அந்தஅழகன்இருக்கும்அழகர்கோயிலுக்கேசெல்கிறோம்இன்று.
அழகர்கோயில்என்னும்திருமாலிருஞ்சோலைமதுரைக்குவடக்கே 12 மைல்தொலையில்இருக்கிறது. இதனையேசோலைமலைஎன்றும்கூறுகின்றனர். சோலைமலை, திருமாலிருஞ்சோலைஎன்றெல்லாம்கூறினால்வண்டிக்காரர்களுக்கோ, பஸ்காரர்களுக்கோதெரியாது. அழகர்கோயில்என்றுசொன்னால்மாத்திரமேதெரியும்.
மதுரையிலிருந்துகாரில்செல்லலாம். பஸ்ஸில்செல்லலாம். அப்படிச்சென்றுசேர்ந்தால்முதலில்நம்மைஒருபெரியசோலையிலேஇறக்கிவிடுவார்கள். சோலைக்குமேற்கும்வடக்கும்நீண்டுயர்ந்தமலைச்சிகரம். ஆதலால்சோலைமலைஎன்றுஅந்தத்தலம்பெயர்பெற்றதுபொருத்தம்என்றேதோன்றும். அத்துடன்அங்குள்ளசோலையும்மரங்கள்நிறைந்துநன்றாகஇருண்டேஇருக்கும். அதனால்அதனைத்திருமாலிருஞ்சோலைஎன்றுபாராட்டுவதும்பொருத்தம்தான். இந்தச்சோலையின்நடுவிலேதான்கோயில், கோயிலின்பிரதானவாயில்எப்போதும்அடைத்தேவைக்கப்பட்டிருக்கும். அங்குதான்கோயிலின்காவல்தெய்வமானபதினெட்டாம்படிக்கருப்பன்இருக்கிறார். இந்தக்கருப்பண்னசாமிக்குஇங்குஉருவம்இல்லை. பதினெட்டாம்படிக்கருப்பன்முன்புசத்தியம்செய்வதுஎன்பதுஇன்னும்நடக்கிறது. அவனுடையசந்நிதிமுன்புயாரும்பொய்சொல்லத்துணியமாட்டார்கள். இவனுடையகாவலின்கீழ்தான்அழகர்கோயில்அழகன்வாழ்கிறான்.
தினந்தோறும்கோயிலில்உள்ளபண்டாரத்தைப்பூட்டி, சாவியைஇந்தப்பதினெட்டாம்படிக்கருப்பனிடம்கொண்டுவைத்துவிடுவார்கள். மறுநாள்காலைவரும்பட்டர், சாவிஎடுத்துக்கொண்டுசெல்வார். இன்னும்அழகர், மதுரைக்கு, மீனாக்ஷிகல்யாணத்துக்காகப்புறப்படும்போதுஅவர்அணிந்துள்ளநகைளின்ஜாபிதாவைஇக்காவல்தெய்வத்தின்முன்புபடித்துக்காட்டுவார்கள். அழகர்திரும்பும்போது, ஜாபிதாகருப்பன்ணர்முன்படித்துக்காட்டப்படும். இத்தனைஅக்கறையுடன்கோயிலையும்கோயில்சொத்துக்களையும்பராமரிக்கும்தெய்வமாகஇவர்விளங்குகிறார்.
கோயிலுள்செல்லபதினெட்டாம்படிவாசலுக்குவடபுறம்உள்ளமதிலின்ஒருசுவர்திறந்திருக்கும். அதுதான்வண்டிவாசல். அந்தவாசல்வழியேநுழைந்து – கோயிலின்வெளிப்பிராகாரத்தைஅடையலாம். அங்குகோயில்முன்புஇருக்கும்பிரதானமண்டபமேகல்யாணமண்டபம். இங்குதான்நல்லசிற்பவடிவங்களைஉடையதூண்கள்இருக்கின்றன. இரணியன்உடல்கிழிக்கும்நரசிம்மர். வேணுகோபாலன், ரதிமன்மதன், கருடவாகனவிஷ்ணு, திரிலிக்ரமர், லக்ஷ்மிவராகர்எல்லாம்நல்லஅழகானகற்சிலைகள். இவைகளைக்காண்பதற்கென்றேஒருநடைஇக்கோயிலுக்குப்போகலாம்.
இனித்தான்கோயிலின்பிரதானவாயிலானதொண்டைமான்கோபுரவாசலைக்கடந்துஉள்பிராகாரங்களுக்குச்செல்லவேணும். கோயில்மிகப்பெரியகோயில். இரண்டுமூன்றுபிராகாரங்களைக்கடந்துதான்கருவறைசேரவேண்டும். வழியில்இருப்பவை, சுந்தரபாண்டியன்மண்டபம், ஆரியன்மண்டபம், முனையதரையன்மண்டபம்முதலியன, கோயிலின்கருவறையில்மூலவராகநிற்பவர்ஸ்ரீபரமசாமி. இவர்ஐம்படைதாங்கியவராய்க்கம்பீரமாகநிற்கிறார். ஸ்ரீதேவியும்பூதேவியும், இருபுறம்நிற்கிறார்கள். இவர்கையிலுள்ளசக்கரம்பிரயோகசக்கரம். இவர்முன்புஎழுந்தருளியிருக்கும்உற்சவமூர்த்தியேஅழகர்என்னும்சுந்தரராஜர். ஏற்றிருக்கும்பெயருக்குஏற்பமிகவும்சுந்தரமானவடிவம். அபரஞ்சிததங்கத்தால்ஆனவர்.
இவருக்குஅபிஷேகம்எல்லாம்நூபுரகங்கைத்தீர்த்தத்தால்தான். மற்றநீரால்அபிஷேகம்செய்தால்அறுத்துவிடுகிறாராம். இவரேசோலைமலைக்கரசர். இந்தஉற்சவரைத்தவிரவேறுசிலஉற்சவமூர்த்திகளும்உண்டு. அவர்கள்எல்லாம்ஸ்ரீசுந்தரபாஹு, ஸ்ரீநிவாசர், நித்யோத்ஸவர்முதலியோர். இவர்கள்எல்லாம்வெள்ளியில்செய்யப்பட்டவர்கள். இந்தக்கருவறையைஅடுத்தபிராகாரத்திலேயேவலம்புரிவிநாயகர்இருக்கிறார். இந்தப்பிராகாரத்திலேயேசேனைமுதலியார், விஷ்வக்சேனர்இருக்கிறார்கள், இங்குள்ளபைரவர்க்ஷேத்திரபாலகர்என்றுஅழைக்கப்படுகிறார், இவர்நிரம்பவும்வரப்பிரசித்திஉடையவர். கோயிலின்அர்த்தசாயபூசைமுடிந்ததும்கோயில்கதவைபூட்டிச்சாலியைஇந்தக்ஷேத்திரபாலகர்முன்வைத்துவிடுவார்கள். மறுநாள்காலையில்எடுத்துக்கோயிலைத்திறப்பார்கள்.
இக்கோயிலின்தாயார்சந்நிதிதென்பக்கம்இருக்கிறது. இவளேகல்யாணசுந்தரவல்லி. தனிக்கோயில்தாயார்என்றும்அழைப்பார்கள்மக்கள். கல்யாணசுந்தரவல்லிஎன்றபெயர்க்கேற்பஅதிகசௌந்தர்யத்துடனேயேவிளங்குகிறார். கோயிலின்வடக்குப்பிராகாரத்தில்ஆண்டாள்சந்நிதி. உற்சவமூர்த்தியானஆண்டாள், மற்றதலங்களைப்போல்அல்லாதுஉட்கார்ந்திருக்கும்பாவனையில்இருக்கிறது. சுந்தரராஜர்தமதுதிருக்கல்யாணதினத்தன்றுஸ்ரீதேவி, பூதேவி, கல்யாணசுந்தரவல்லி, ஆண்டாள்என்னும்நான்குதேவிமார்களுடன்எழுந்தருளுகிறார். ஸ்ரீஆண்டாள்ரங்கநாதரையும், அவருடையஅம்சமானசுந்தரராஜரையும்தம்கணவனாகவரித்துக்கொண்டாள்என்றுசொல்லப்படுகிறது. இந்தசந்நிதிகள்தவிரஇக்கோயிலில்ஸ்ரீசுதர்சனசக்கரர், யோகநரசிம்மர்முதலியசந்நிதிகளும்விசேஷமானவை. இன்னும்இங்குள்ளராக்காயிஅம்மனும்ஸ்தலதீர்த்தங்களுடன்அதிதேவதையாகவிளங்குகிறாள்.
இந்தஸ்தலத்தில்கோயிலுக்குஅடுத்தபடியாகஇரண்டுதீர்த்தங்கள். ஒன்றுநூபுரகங்கை. மற்றொன்றுசிலம்பாறு. கோயில்வடக்குவாயில்வழியாகமலைஏறிஇரண்டுமைல்தூரம்சென்றால்நூபுரகங்கைஎன்னும்தீர்த்தத்தைஅடையலாம். அதன்உற்பத்திஸ்தானம்தெரியவில்லை. யானைத்துதிக்கைபோல்அமைந்திருக்கும்கோமுகியின்வழியாகமாதவிமண்டபத்துக்குவருவதைத்தான்பார்க்கிறோம். இந்தத்தீர்த்தத்தில்இரும்புச்சத்தும்தாமிரச்சத்தும்இருக்கின்றனவாம். அதனால்இதில்நீராடுபவர்களுக்குத்தீராதநோயெல்லாம்தீர்கிறது. இத்தீர்த்தம்தெற்குநோக்கிப்பாயும்போதுசிலம்பாறுஎன்றுபெயர்பெறுகிறது. இந்தச்சிலம்பாறுஆதியில்பிரமன்திரிவிக்கிரமரின்தூக்கியதிருவடியில்அபிஷேகம்செய்தநீர்என்றுநம்பிக்கை.
இன்றுஇந்தஆறுசுந்தரராஜனின்அடிகளைவருடிக்கொண்டுபாய்ந்துபெருகிவயல்களைவளப்படுத்துகிறது. இதன்சுவைஇனிமையாகஇருக்கிறது. ஆதலால்இதனைத்தேன்அருவிஎன்றுஅழைக்கிறார்கள்மக்கள். இந்தநூபுரகங்கைசிலம்பாறுஇருந்தஇடத்தில்தான்அந்தப்பழமுதிர்ச்சோலைமலைகிழவோனாகமுருகன்அன்றுகோயில்கொண்டிருந்தான். அதுவேஆறுபடைவீடுகளில்ஒன்றானபழமுதிர்ச்சோலைமலைஎன்றும்அறிகிறோம். இல்லை, இதுவிவாதத்துக்குஉரியவிஷயம்என்றுவாதிடுவோர்உண்டு. இத்தனைவிவாதங்களுக்கிடையிலும்சமீபகாலத்தில்அங்குமுருகனுக்குஒருகோயில்எடுப்பித்திருக்கிறார்கள்பக்தர்கள். எப்படியோஇந்தமலைஆதிமுதல்முருகனுக்கும், திருமாலுக்கும்
அழகர்கோயில்–வைகுண்டநாதர்
உரியமலையாகஇருந்துவந்திருக்கிறது. அதனாலேயேகந்தபுராணம்இதனைமுத்திதருபேரழகர்என்றுசிறப்பிக்கிறது.
அழகர்மலைஅழகானசுந்தரராஜன்நிரம்பச்செல்வம்படைத்தவன்அரவணையான்சொத்துஎவ்வளவுஎன்றுஒருவாறுநாம்அறிவோம். அரங்கன்சொத்துஅழகன்அங்கவடிக்கும்காணாதுஎன்பதுபழமொழிஎன்றால்அழகன்எவ்வளவுசெல்வன்என்றுஊகிக்கலாம். சித்திராபௌர்ணமியில்அவன்சர்வாலங்காரபூஷிதனாகமதுரைக்குகோலாகலம்ஒன்றைப்பார்த்தாலேதெரியும்.
சுந்தரராஜன்நித்தியோத்சவப்பெருமாள். பிரதிதினமும்ஏதாவதுஉத்சவம்நடந்தகொண்டேயிருக்கும். இவற்றில்சிறப்பானதுசித்திராபௌர்ணமித்திருநாள்தான், மதுரையில்மீனாக்ஷிசுந்தரேசுவரருக்குஅன்றுதிருமணம்நடக்கிறது. அதைக்காணச்சீர்வரிசைகளுடன்புறப்படுகிறார்சுந்தரராஜர். அவர்லவகைக்கரைவந்துசேருமுன்அவரைமக்கள்எதிர்கொண்டுஅழைக்கின்றனர், வழியில்உள்ளமண்டபங்களில்எல்லாம்தங்கிப்பக்தர்களதுவழிபாட்டைஏற்றுக்கொள்கிறார். சித்திராபௌர்ணமியன்றுவைகைஆற்றில்இறங்கிவண்டியூர்வைரைசென்றுதேனூர்மண்டபத்தில்தங்கித்திரும்புகிறார். திரும்பும்போதுநடக்கும்புஷ்பப்பல்லக்குசேவைஎல்லாம்பிரசித்தமானது. இந்தஉலாவைப்பற்றிமக்கள்பேசிக்கொள்வதெல்லாம்விசித்திரமானது.
அதாவதுசுந்தரராஜன்தன்தங்கைதிருமணத்துக்குச்சீர்வரிசைகளுடன்வருவதாகவும்அப்படிவருவதில்கொஞ்சம்தாமதம்ஏற்பட்டகாரணத்தால்குறித்தகாலத்தில்வந்துசேரமுடியவில்லைஎன்றும், ஆதலால்இவர்வருமன்பேமுகூர்த்தம்நடந்துவிடுவதாகவும், அதனால்கோபங்கொண்டுமதுரைநகருக்குவராமல்வைகைவழியாகவேவண்டியூர்செல்வதாகவும்சொல்வர். இக்கூற்றில்உண்மைஇல்லை. மீனாக்ஷிதிருமனத்துக்குச்சுந்தரராஜன்வந்திருந்துதங்கையைத்தாரைவார்த்துக்கொடுத்ததாகவேவரலாறு. இதற்குரியசிற்பவடிவமும்சோமசுந்தரர்கோயிலில்இருக்கிறது. அப்படியிருக்கமக்கள்இப்படிக்கயிறுதிரிப்பதுசரியல்லதான். என்றாலும்இப்படியெல்லாம்கடவுளர்வாழ்விலும்பிணக்குகள்எற்படுத்திஅனுபவிப்பதிலேஓர்இன்பமேகாண்கிறார்கள்பொதுமக்கள்.
பன்னிருஆழ்வார்களில்பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், திருமங்கைஆழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார்முதலியஅறுவரால்இந்தஅழகர்சுந்தரராஜன்மங்களாசாஸனம்செய்யப்பட்டிருக்கிறார். பெரியாழ்வாருடன்ஆண்டாள். இந்தச்சோலைமலைக்குவந்திருக்கிறாள். அவள்சூடிக்கொடுத்தமாலையைஅழகர்உவந்துஏற்றுக்கொண்டிருக்கிறார்.
குலமலைகோலமலை
குளிர்மாமலைகொற்றமலை
நீலமலை, நீண்டமலை
திருமாலிருஞ்சோலைமலை
என்றுபெரியாழ்வார்பாடியிருக்கிறார்
திருமாலிருஞ்சோலை
என்றேன், என்னத்
திருமால்வந்துஎன்நெஞ்சு
நிறையப்புகுந்தான்
என்றுநம்மாழ்வார்பாடுகின்றார்.
ஆழ்வார்கள்காலத்துக்கும்முந்தியபழம்பெருமைஉடையது! இத்திருக்கோயில், சங்கஇலக்கியங்களில்ஒன்றானபரிபாடலில்இங்குள்ளகண்ணன்பலராமன்கோயில்பேசப்படுகிறது. சங்ககாலத்துக்குப்பிந்தியஇலக்கியமானசிலப்பதிகாரத்திலும்இம்மலை. இம்மலைமேல்உள்ளதிருமால், தீர்த்தங்கள்எல்லாம்விரிவாகக்கூறப்பட்டுள்ளன. இக்கோயிலை, மதுரையைஆண்டமலயத்துவஜன்கட்டினான்என்பதுவரலாறு. பாண்டியமன்னர்பலர்இக்கோயிலுக்குப்பலவகையானதிருப்பணிகளைச்செய்திருக்கிறார்கள். ஜடாவர்மன்சுந்தரபாண்டியன்இக்கோயில்விமானத்துக்குப்பொன்வேய்ந்திருக்கிறான். பின்னர்விஜயநகரநாயக்கமன்னர்களின்பிரதிநிதியானவிசுவநாதநாயக்கர்எவ்வளவோதிருப்பணிகளைச்செய்திருக்கிறார். இப்படியாகவிரிவடைந்துபுகழ்பெற்றுநிற்கும்அழகனைத்தான்மக்கள்கள்ளழகன்என்கின்றனர். அந்தவட்டாரத்துக்கள்ளர்குலமக்களுக்குதலைவன்என்பதால்அப்பெயர்பெற்றான்என்பர். எனக்குத்தோன்றுகிறது. இப்படிச்சொல்வதுதவறுஎன்று. கோயிலுக்குவருவோர்உள்ளங்களைக்கவர்ந்துகொள்ளும்கள்வனாகஇருப்பதினால்தான்அவனைக்கள்ளழகன்என்றுசொல்கிறார்கள்போலும்! நீங்களும்சென்றுஅவனால்களவாடப்பட்டு, உள்ளம்பறிகொடுத்துத்திரும்பினால்நான்ஒன்றும்அதிசயப்படமாட்டேன்.