வியாச குகைக்கு அருகில், வலப்புறம் “கணேச குகை” என்ற சிறு வெண்ணிறமான மண்டபம் ஒன்றைக் காட்டினார்கள். வெளியே பத்ரிநாராயணரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. உள்ளே, வலக்காலைக் குத்திட்டுக் கொண்டு மகா கணபதி உட்கார்ந்திருக்கிறார்.
வியாச பகவான் மகாபாரதக் கதையை சொல்ல, ஸ்ரீ விநாயகப் பெருமான், உடைந்த தன் தந்தத்தினால் ஓலைச்சுவடியில் எழுதியதாகப் படித்திருக்கிறோம். இம்மாதிரியான சித்திரங்களையும் பார்த்திருக்கிறோம். மகா கணபதி இந்தச் சிறு குகையில் தாந்தங்கி வியாசருக்கு உறுதுணையாயிருந்து அருந்தொண்டாற்றினாராம்.
வியாச பகவான் எந்தக் குகையில் அமர்ந்து மகாபாரதத்தையு, பதினெட்டு புராணங்களையும், பிரும்ம சூத்திரத்தையும் எழுதினாரோ, எந்தக் குகையில் வேதங்களை வகைப்படுத்தி, வரிசைப்படுத்தி, நான்கு பிரதானப் பகுதிகளாகப் பிரித்துத் தந்தாரோ, எந்தக் குகையில் ஸ்ரீ ஆதிசங்கரர் வியாச பகவானைச் சந்தித்து, அவரோடு தமது பிரும்மசூத்ர பாஷ்யத்தைப் பற்றி நீண்ட விவாதம் நடத்தினாரோ, அந்தக் குகையை நோக்கி இப்போது நடந்து கொண்டிருக்கிறோம்.
பத்ரிகாரண்யத்தில் பராசரரின் திருமகனாய்ப் பிறந்து, பத்ராயணர் என்ற காரணப் பெயர் பெற்ற வியாச முனிவர், இந்து சமயத்திற்கும், கலாசாரத்திற்கும், பாரத சமுதாயத்திற்கும், வேத நெறியைப் பின்பற்றும் பரம்பரையினருக்கும், மூல புருஷராக விளங்குபவர். மகாவிஷ்ணுவின் மறு அவதாரமாகக் கருதப்படுபவர். சிதாறிக் கிடந்த வேதங்களைத் திரட்டி தர்ம வாழ்வுக்கு வழிவ் அகுத்து அளித்ததால், “வேத வியாசர்” என்ற சிறப்பு பெயர் பெற்றவர். விஷ்ணு புராணத்திலும், விஷ்ணு சகஸ்ரநாமத்திலுமவர் புகழ் ஏற்றம் பெற்றிருக்கக் காண் கிறோம. அவரின்றி, மகாபாரதக் கதையை நாம் அறிந்திருக்கப் போவதில்லை. மகாபாரதம் இல்லாவிட்டால், புண்ணிய பாரதத்தின்வ் அரலாறு இருண்ட காவியமாக மறைந்து போயிருக்கும். எனவே, ஆன்மீக உலக்ம, வியாச பகவானுக்கு பெரும் கடன் பட்டிருக்கிறது.
அந்தப் புராண புருஷர் நடமாடிய மண்ணில் நடந்து கொண்டிருக்கிறோம் என்ற எண்ணமே நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துகிறது. அதுவே புராண காலத்தில் மணிபத்ர ஆசிரமம் என்றழைக்கப்பட்ட இடம். “மானாகான்” என்ற பெயர் கொண்ட கிராமம்தான், தற்போது மானா என்று சுருங்கியிருக்கிறது.
இந்தியாவின் கடைசி கிராமம் புண்ணியம் செய்த பூமி. அங்கிருக்கும் ஒரு பெரிய பாறையில் இருக்கும் ஒரு குகையில்தான் வியாச மகரிஷி அமர்ந்து செயற்கரிய பணிகள் ஆற்றியிருக்கிறார். அந்தக் குகை இதோ கண்ணுக்குத் தெரிகிறது.
நிமிர்ந்து பார்த்தேன். ஓர் ஆலய கோபுரம் போல் அதன் சிகரம் அமைந்திருப்பதைக் கண்டேன். இது இயற்கையெழுப்பிய மகோன்னத கோபுரம். மனிதன் கட்டியது அல்ல.
அது மட்டுமா? அந்தப் பாறையின் அமைப்பே விநோதமாக இருக்கிறது. புத்தகங்களொ, ஓலைச் சுவடிகளொ, அவற்றை ஒன்றன் மீது ஒன்று ஒழுங்காக அடுக்கி வைத்தார் போல் காணப்படுகிறது. வியாச பகவான் எழுதிய புராணங்களுக்கு அடையாளமாக அது அமைந்திருப்பதால் “வியாச புஸ்தக்” என்று அது போற்றி வணங்கப் படுவதாக அறிந்தேன். சற்று நேரம் அங்கேயே தலை வணங்கி நின்றேன்.
மானா கிராமத்தில் நின்று பத்ரிநாராயணர் உறையும் திசையைப் பார்க்கிறார் வியாஅர். எதிரில் சரஸ்வதி நதி ஓடுகிறது. அதற்கும் அப்பால் நர, நாராயண மலைகள் கம்பீரமாக நிற்கின்றன. தமது மகாபாரதத்தைத் தொடங்குகிறார். அருமையானதொரு சுலோகம் பிறக்கிறது.
நாராயணம் நமஸ்கிருத்ய நரம்சைவ நரோத்தமம்
தேவீம் சரஸ்வதீம் வ்யா சம் ததோ ஜயமுதீரயேத்
நர நாராயணர்களையும், சரஸ்வதி தேவியையும் வணங்கி விட்டுத் தன் வெற்றிக் காவியத்தைத் தொடங்குகிறார் மாமுனிவர்.
அமர சுலோகம் பிறந்த குகையின் வாயிலில் தற்போது நின்று கொண்டிருக்கிறோம். குளிர்ந்த காற்று ஆதவனின் கடுமையைத் தணித்துக் கொண்டிருக்கிறது.
சிமெண்டும், சுன்ணாம்பும் கருங்கள்லும், செங்கல்லும் அந்தக் குகைக்கு நாகரீகப் பூச்சு தந்திருக்கின்றன. வெளியே இருபுறமும் குட்டித் திண்ணைகள். ஏதோ ஒரு கிராமத்து வீடு போல் இருக்கிறது.
உள்ளேசெ ந்று பார்க்க வேண்டும் என்று உள்ளம் துடிக்கிறது. ஆனால் கதவு பூட்டப்பட்டிருக்கிறது. அதில் யாரோ ஒரு சாது வசிக்கிறாராம். அவர் பூட்டிக் கொண்டு வெளியே சென்றிருக்கிறார். அக்கம் பக்கத்தில் விசாரித்தோம். அவர் எங்கே சென்றிருக்கிறார் என்பதோ, எப்போது திரும்புவார் என்பதோ யாருக்குமே தெரியவில்லை. அட கடவுளே, இது என்ன சோதனை!
இருப்பினும் கிடைத்த வரையில் மகிழ்ச்சி. இங்கிருந்த படியே நமஸ்கரித்து விட்டு அத்திருப்தியுடனேயே திரும்ப வேண்டியதுதான், வேறு என்ன செய்ய முடியும் என்று மனத்தில் எண்ணைக் கொண்டே அக்குகை வாயிலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி எழுந்தேன்.
அடுத்த கணம், “டேரோ, டேரோ” என்ற குரல் கேட்டது. திரும்பினேன். தொலைவில், பள்ளத்தாக்கில் வந்து கொண்டிருந்த சாது ஒருவர், அங்கேயே இருங்கள், இதோ வந்து விடுகிறேன், என்பது போல் சைகை காட்டிக் கொண்டே எங்களை நோக்கி வேகமாக் அனடந்து வந்து கொண்டிருந்தார்.
அந்த சாது வந்தார். கதவைத் திறந்தார். எங்களை உள்ளே அழைத்துச் சென்றார். அன்போடும், ஆதரவோடும் பேசினார். சில ஆண்டுகளாக தாம் அங்கு வசிப்பதாகவும் அக்குகையை நவீன முறையில் கட்டியதாகவும் கூறினார்.
ஆறடிக்கு பத்தடி உள்ல ஓர் அறை அது. அங்கு ஒரு திண்ணையில் வியாச பகவானின் உருவச் சிலை ஒன்று இருந்தது. வட்ட வடிவத்தில் பழங்காலக் கருங்கற்கள் இரண்டு இருந்தன. அவற்றில் இனம் கண்டு கொள்ள முடியாத மனித உருவங்கள் கோடுகளாக வரையப்பட்டிருந்தன. மற்றொரு சிறு பாறையில் ஏதோ எழுத்துக்கள் காணப்பட்டன. அவற்றைத் தாம் அங்கு கண்டதாகவும், அப்படியே எடுத்து வைத்திருப்பதாகவும், அவற்றிங்காலத்தை ஆராய்ச்சியாளர்கள்தான் கண்டு பிடித்துச் சொல்ல வேண்டும் என்றும் கூறினார் அந்த சாது.
எண்ணங்கள் அடங்கி, நினைவுகள் அழிந்து, உள்ளார்ந்த அமைதியில் ஆழ்ந்தேன். ஆன்மீக அணுக்களால் ஊட்டம் பெர்று அங்குவ் அட்டமிடும் மின்னலைகள் சிந்தையைச் செம்மைப்படுத்த வேண்டும் என்ற பிரார்த்தனையுடன்மௌனமாகச் சிறிது நேரம் அங்கேயே அமர்ந்திருந்தேன். பின்னர், வியாசபகவானை மனத்தால் தியானித்து, குகைக்குள்ளும் ஒரு நமஸ்கார்ம செய்து விட்டு, நாங்கள் அந்த சாதுவிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டோம்.
சென்னனைக்குத் திரும்பியதும், வழக்கம் போல் தேனம்பாக்கம் சென்று காஞ்சிப் பெரியவரிடம் என் யாத்திரையைப் பற்றியெல்லாம் விரிவாகக் கூறினேன். வியாசக் குகையைப் பார்க்கச் சென்ற அனுபவத்தை விவரித்து விட்டு, அத்தனை தொலைவு சென்று போட்டோ எடுக்காமல் திரும்ப நேர்ந்தது பெரிய குறையாக இருக்கிறது என்ற என் மன வருத்தத்தையும் வெளிப்படுத்தினேன். அதைக் கேட்டுப் பெரியவர் லேசாகச் சிரித்துக் கொண்டார்.
அதன் பொருள் எனக்கு அப்போது புரியவில்லை. ஒன்பது மாதங்கள் கழித்துத்தான் விளங்கியது.
பெரியவரின் அருளாசியால், 1974-ம் வருடம் ஜூன் மாதம் நான் மீண்டும் வியாச குகைக்குச் சென்றேன். இம்முரை டில்லியில் இரண்டு நாட்கள் தங்கி, பாதுகாப்பு இலாகா அதிகாரிகளைச் சந்தித்து, வியாச குகையைப் பட்ம் எடுக்க அனுமதி பெற்றுக் கொண்டு சென்றேன். அந்தக் கடிதம் கையிலிருந்தும் எனக்கு சில தடைகள் ஏற்பட்டன. கடைசி நிமிடத்தில் அவையும் விலகி, என் எண்ணம் வெற்றிகரமாக நிறைவேறியது.
தேவப்பிரயாகை, ஜோஷிமட் போன்றே பத்ரிநாத்தும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் போற்றித் தொழும் நூற்றெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பெரியாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்து சிறப்பித்துள்ள புண்ணியத் தலம் அது.
மூப்பின் முதிர்ச்சியாக உடல் தளர்ந்து, கண் பார்வை மங்கி, கூனிக்குறுகி தடுமாறும் நிலை வருவதற்குள் ஒரு முறையாவது அத் திருத்தலத்திற்குச்ச் என்று வர வேண்டும் என்று பத்து பாசுரங்களில் மனம் கரைய மன்றாடும் திருமங்கை ஆழ்வார், “வதரி வணங்குதுமே” என்று தம் மனத்திற்கு அன்புக் கட்டளையிடுகிறார். வேறு பத்துப் பாசுரங்களால் அலகநந்தா கங்கையின் மகிமையையும், ஸ்ரீ நாராயணப் பெருமானின் பெருமைகளையும் பொங்கிப் பூரிக்கப் புகழ்பவராய், “கங்கைக் கரையின் மேல் வதரியாச்ர மர்ந்துள்ளானெ” என்று விளிக்கிறார்.
பன்னெடுங்காலமாக அங்கு வாழ்ந்து புனிதம் கூட்டிய மாமுனிவர்களும் தரிசித்து அருள் பெற்ற மெய்யடியார்களும், யாத்திரை சென்று பயனடைந்த ஆத்திக பெருமக்களும், பத்ரி நாராயணரின் தரிசனத்தைத் தம்முள் ஓர் இதயத் தாபமாக வளர்த்து விட்டிருக்கிறார்கள். அண்மைக் காலமாக அங்கு சென்று வந்தவர்கள் தங்கள் அனுபவங்களை எழுதி நம் ஆர்வத்தை மேலும் தூண்டிவிட்டிருக்கிறார்கள். யாத்திரை முடிந்து திரும்பியவர்கள் அதைப் பற்றிப் பேசி, “நாமும் அங்கெல்லாம் போவோமா?” என்ற ஏக்கத்தையும் கிளறி விட்டிருக்கிறார்கள்.
அக்காலத்தில் ரிஷிகேசத்திலிருந்து பத்ரிநாத்துக்குக் கால் நடையாகவே சென்றவர்கள், பல இன்னல்களுக்கு ஆளாகி, பல சோதனைகளைக் கடந்து, உயிரைப் பணயம் வைத்துப் பயணத்தை மேற்கொண்டவர்கள், அவர்கள் பட்ட சிரமங்கள் இப்போது செல்பவர்களுக்கு இருக்கவே இருக்காது. முன்பு பஸ், தேவ்பபிரயாகை வரையில்தான் செல்லுமாம். பின்னர் ஸ்ரீநகர், ருத்ரபிரயாகை, பீப்பல்கோட்டி, ஜோஷிமட் என்று படிப்படியாக பஸ் பாதை விரிவாக்கப்பட்டு தற்போது பத்ரிநாத் வரையில் பஸ்ஸிலேயே செல்லும் சௌகரியம் செய்து தந்திருக்கிறார்கள். பஸ் நிலயத்திலிருந்து ஒரு ஃபர்லாங் நடந்து, பாலத்தைக் கடந்தால் கோயிலை அடைந்து விடலாம். காரில் செல்பவர்கள் இன்னும் அருகில் செல்லலாம்.
மலைப்பாதையில் பயணம் செய்யும் போது முதலில் மலைப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், போகப் போக அது பழகி விடுகிறது. அப்பகுதியைச் சேர்ந்த கடுவாலி டிரைவர்கள் மேடு பள்ளங்களையும், பயங்கரத் திருப்பங்களையும், திடீர் வளைவுகளையும், பார்த்து ஜாக்கிரதையாக ஓட்டுகிறார்கள். எத்தனை வேகமாகப் போனாலும் அவர்களுக்கு நல்ல கண்ட்ரோல் இருக்கிறது. தென்னாட்டில் திருப்பதி, நீலகிரி, கொடைக்கானல், கொல்லிமலை, மைசூர் மலைகள் முதலியவற்றில் ஓட்டிப் பழக்கப்பட்டவர்கள், இமாலயத்திலும் எளிதாக ஓட்டி விடலாம் என்று தயவு செய்து நினைத்து விட வேண்டாம். அந்தப் பள்ளத்தைப் பார்த்த உடனேயே குடல் நடுங்கும்; மலைச் சரிவுகளைக் காணும்போதே நெஞ்சு பதறும்; கை கால்கள் உதறும்; தென்னாட்டிலிருந்து ஒரு கோஷ்டியினர் மினி பஸ் ஒன்றைக் கொண்டு வந்திருந்தார்கள். அந்த டிரைவர் கொஞ்ச தூரம் வந்து விட்டு, “நம்மால் முடியாது சார்” என்று திரும்பி விட்டதைப் பார்க்க நேர்ந்ததால்தான் இவ்வாறு சொல்கிறேன்.
இங்கிருந்து பத்ரிநாத் போக நினைப்பவர்கள் டில்லிக்குப் போய், அங்கிருந்து ரிஷிகேசத்திற்கு ரயிலிலோ, பஸ்ஸிலோ, டாக்சியிலோ செல்ல வேண்டும். அங்கெல்லாம் டாக்சியில் ஐந்து, ஆறு பேரை ஏற்றி, வாடகையை பங்கு பிரித்து பெற்றுக் கொள்கிறார்கள். வசதி உள்ளவர்கள் ரிஷிகேசத்திலிருந்தே பத்ரிநாத்துக்கு டாக்சி அமர்த்திக் கொள்ளலாம்.
பஸ் சர்வீசும் இருக்கிறது. முதல் நாளே சென்று ரிசர்வ் செய்து கொள்ளலாம். பஸ்சில் முதல் கிளாஸ், இரண்டாம் கிளாஸ், மூண்றாம் கிளாஸ் என்று இருக்கிறது. முதல் இரண்டு கிளாஸ் பிரயாணிகளுக்கு முன் வரிசைகளில் இடம் ஒதுக்கப்படுகிறது. கோஷ்டியாக வருபவர்கள் தனி பஸ்களும் ஏற்பாடு செய்து கொள்ளலாம். செல்லும் வழியில், ஆகாரத்திற்குக் கஷ்டம் இருக்காது. ருத்ரப்பிரயாகியயிலும், ஸ்ரீநகரிலும், ஜோஷிமடத்திலும் நல்ல ஓட்டல்கள் இருக்கின்றன. பழங்கள் கிடைக்கின்றன. இரவு தங்குவதற்கான விடுதிகளும் இருக்கின்றன. சப்பாத்தி, சப்ஜி பிடிக்காதவர்களுக்கு சாதமும், தயிரும் கிடைக்கின்றன. பத்நாத்திலும் தங்குவதற்கு நிறைய விடுதிகள் இருக்கின்றன. கவலையே வேண்டாம். குளிருக்குப் பயந்து பெரிய படுக்கைகள் எடுத்துப் போக வேண்டாம். கடைகளில் “ரஜாய்” வாடகைக்குக் கிடைக்கிறது. இரண்டு வாங்கிக் கொண்டு, கீழே ஒன்றைப் போட்டுக் கொண்டு படுத்து, நமக்கு மேலே ஒன்றைப் போர்த்திக் கொண்டு விட்டால் எந்தக் குளிரும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. சாப்பாட்டுக்கும் நல்ல ஓட்டல்கள் இருக்கின்றன. அந்த இடத்தில் வற்றல் குழம்பும், மிளகு ரசமும், அப்பளமும் வேண்டுமானால் பணத்தைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. கேட்டதைக் கொடுத்துதான் ஆக வேண்டும்.
பத்ரிநாத் செல்வதார்கு ஜூன் முதல் அக்டோபர் வரை சௌகரியமான மாதங்களாகும். மே மாதம் இரண்டாவது வாரத்திற்குள் திறந்து, நவம்பர் மாதம் மூன்றாவது வாரத்திற்குள் அந்தக் கோயிலை மூடி விடுகிறார்கள். அது திறக்கப்படும் தேதியும், மூடப்படும் தேதியும் பத்திரிகையில் பிரசுரிக்கப்படுகின்றன. ஆறு மாதங்கள் அப்பகுதி முழுவதும் உறைபனியால் மூடப்பட்டிருக்கும். அப்போது ஊரையே காலி செய்து கொண்டு எல்லோரும் கீழே வந்து விடுகிறார்கள். உற்சவ மூர்த்தியை பாண்டுகேசுவரத்திலுள்ள ஆலயத்திற்கு எடுத்துச் சென்று விடுகிறார்கள். ஆனால், ராவல்ஜி அங்கு போவதில்லை. அவர் கேரளாவுக்குச்ச் என்று விடுகிறார்.
சாதாரணமாக நவம்பர் 16, 17, 18 மூன்று நாட்களில் ஒருநாள் கோயிலை மூடுகிறார்கள். அதாற்கு இரண்டு முகூர்த்தங்கள் கூடியிருக்க வேண்டுமாம். அன்று ராவல், ஒரு பெண்மணியைப் போல் உடை உடுத்தி, மகாலட்சுமி கோயிலில் பூஜையை முடித்துக் கொண்டு, சந்தனக் காப்போடு அம்பாளை அப்படியே எடுத்துச் சென்று, பத்ரிநாராயணருக்கு அருகில் வைத்து விடுகிறார். பின்னர், சுவாமிக்குக் காலையில் செய்த மலர் அலங்காரத்தைக் களைந்து, மூர்த்தியின் மீது நெய்யைத் தடவை, கம்பளியால் போர்த்தி, இரும்புக் கவசத்தால் மூடிவிடுகிறார். அதக் கம்பளியை மானா கிராமத்திலுள்ல பெண்கள் நெய்து அனுபுக்கிறார்களாம். பின்னர், ஒரு தாம்பாளத்தில் நிறைய நெய்யை விட்டு, அதில் கனமான திரியை வைத்து விளக்கேற்றி வைக்கிறார். பிறகு கதவை மூடி சீல் வைத்து விட்டு வந்து விடுகிறார். ஆறு மாதங்கள் கழித்து, கருவறைக் கதவைத் திறக்கும் போது, அந்த ஜோதி எரிந்து கொண்டிருக்குமாம்.
பத்ரிநாத் யாத்திரை செய்து விட்டுத் திரும்பிய நான், இமாலயத்திலுள்ல புனிதத் தலங்களைப் பற்றிய சில நூல்களைப் படிக்க நேர்ந்தது. முக்கியமாக உத்தர கண்டத்தில் “சதுர் தாம்” என்று அழைக்கப்படும் யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் என்ற தலங்களைப் பற்றிய பல விவரங்களைப் படித்து அறிந்து கொண்டேன். இந்த நான்கு இடங்களுக்கும் யாத்திரை சென்று வருவது பெரும் புண்ணியம் என்றும், அதிலும் இந்த வரிசையில் சென்றால்தான் முழுமையான பலன் கிடைக்கும் என்றும் ஓரிரு புத்தகங்களில் குறிக்கப்பட்டிருந்தது. அதைத் தவிர, பத்ரிநாத்துக்கு மட்டும் நேரே சென்று வருவது சாத்திரத்திற்கு உடன்பாடானது அல்லவென்றும், முதலில் கேதார்நாத்துக்குச் சென்று, கேதாரேசுவரரை தரிசித்துக் கொண்டு, பின்னர் ஸ்ரீ பத்ரிநாராயணரைத் தரிசிக்கச் செல்வதுதான் முறையென்றும் அவ்வாறு நிறைவுற்ற யாத்திரைதான் உண்மையான பலன் அளிக்கிறது என்றும வ் அவற்றில் கண்டிருந்தது. அவ்வாறு முதலில் கேதார்நாத்துக்குச் செல்ல முடியாதவர்களுக்குத்தான் பத்ரிநாத்தில் தப்த குண்டத்திலிருந்து ஆலயத்திற்குச் செல்லும் வழியில், ஸ்ரீ ஆதிகேதாரேசுவரர் திருச்சந்நிதி இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.