“அதோ பார், அந்தப் பனிச் சிகரத்தை! வெள்ளிக் கம்பிகளாக உருகி எத்தனை அழகாக யமுனை ஓடி வருகிறாள் பார்…… ஆகா அருமையான காட்சி” என்றார் கண்ணன்.
“இங்கே இருந்து ஒரு போட்டொ எடுத்துக் கொண்டு விடுகிறேன்” என்று துடித்தார் நண்பர்.
அதுதான் யமுனையின் கோயிலா?
அதுவாகத்தான் இருக்க வேண்டும்.
உடல் அசதியையும் மறந்து ஆலயத்தை நோக்கி உற்சாகத்துடன் நட்ககத் தொடங்கினேன் நான்.
கருமேகக் கூட்டங்கள் கவிந்து, நீலவானமே இருண்டு போயிருந்தது. செழுமை நிறைந்த மலைகளின் மீது கருமை படிந்திருந்தது. குளிர்காற்றுவ் ஈசிக் கொண்டிருந்தது. அருவிகளாகக் கொட்டி ஆவேசமாகப் பாய்ந்து கொண்டிருந்த யமுனை அருகில் அட்டகாசமாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தாள்.
ஒரு சிறு கடைவீதியைக் கடந்து, பாலத்தின் மீதேறி மறுபக்கமுள்ள யமுனைக் கோயிலின் அடிவாரத்தை அடைந்தோம். கோயிலுக்குப் போக இன்னும் பத்துப் படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.
நாங்கள் நின்ற இடத்திலிருந்து சற்றுக் கீழிறங்கிப் போனால், யமுனையில் நீராடலாம். அந்த ஆசையும் இருந்தது. ஆனால், அதில் காலை வைத்ததும் தேள் கொட்டினாற்போல் சுரீரென்றது. அலகநந்தாவை விட “ஜில்”லென்றிருந்தது. ஐஸ் கெட்டது பொங்கள்! ஒருகணம் கூட அதில் நிற்க முடியவில்லை. வெற்றிகரமாக வாபஸ் செய்வது என்று முடிவு செய்தோம். அதற்கு முன், கையில் நீரை எடுத்து பருகினோம். யமுனை நீர் ஒரு வாய் குடித்தால் பெரிய யாகங்கள் செய்த புண்ணியம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.
அதோ, ஆலயத்திற்குப் பின்னால் பிரம்மாண்டமாகத் தெரிகிறதே, அந்த மலைத்தொடருக்கு “பந்தர்பூஞ்ச்” என்று பெயர். அதன் சிகரம் 21,000 அடி உயரம். ஆஞ்சநேயர் தன் வாலில் தீயைப் பற்றவைத்துக் கொண்டு லங்கா தகனம் செய்தார் அல்லவா? இலங்கையை அழித்த பிறகு, நெருப்பை அணைப்பதற்கு நேரே இமாலயத்திலிலுள்ள இந்த மலைச்சிகரத்திற்குத்தான் மாருதி வந்தாராம். எப்போதும் உறைபனியால் மூடப்பட்டிருக்கும் மலையில் தேய்த்து, தன் வாலில் உள்ல நெருப்பை அணைத்துக் கொண்டதால் “குரங்கு வால்” (பந்தர் பூஞ்ச்) என்று இதற்குப் பெயர் ஏற்பட்டதாம்.
இந்த மலைத்தொடருக்கும் பின்னால் உள்ல “களிந்தி” என்ற ஐஸ் மலைத்தொடரிலிருந்து யமுனை உற்பத்தியாகி வருவதாகச் சொல்லப்படுகிறது. இது யமுனோத்ரியிலிருந்து நான்கு மைல் தொலைவில் உள்ளது. ஒம்மலையிலிருந்து யமுனா என்றும் ஜானவி என்றும் இரண்டு பெரிய நீர்வீழ்ச்சிகள் பெருகி வந்து யமுனோத்ரிக்கு அருகில் ஒன்று கலந்து நதியாகின்றன.
வடனாட்டில் ஜமுனா என்கிறார்கள். அது நம் பக்கத்தில் யமுனாவாகி யமுனையாயிருக்கிறது. ஜம்னோத்ரியென்றும், யமுனோத்ரியென்றும் அழைக்கப்படும் இடம், அந்நதி உற்பத்தியாகும் இடத்தைக் குறிப்பிடவில்லை. இங்கு யமுனை வடக்கு நோக்கிப் பாய்கிறது. (யமுனை+உத்தரி) அப்படிப் பிரவகிப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது. இதே போன்றுதாங்கங்கை வடக்கு முகமாகப் பாயும் இடைத்தைத்தான் கங்கோத்ரி என்று அழைக்கிறார்கள். பாகீரதி அங்கே உற்பத்தியாகவில்லை. சுமார் பன்னிரண்டு மைல்களுக்கு அப்பாலுள்ல கோமுகத்திலிருந்து அவல் பிறந்து,க் ஈழ் நோக்கி ஓடி வருகிறாள்.
யமுனையில் காலை நனைத்தவுடனேயே என் உடலெங்கும் நடுக்கமுற்று, சிலிர்க்கத் தொடங்கியது. குளிர் அதிகமாய் இருந்ததால் சீராகப் பேச முடியாமலுட் ஹடுகள் தாளம் போடத் தொடங்கின.
“இதோ, இங்கே வாப்பா, எத்தனை இதமாக இருக்கிறது பார்” என்று கண்ணன் அழைக்கவெ அங்கு வேகமாகச் சென்றேன்.
“ஆகா….எத்தனை சுகம்”1
காலுக்கடியிலிருந்து நீராவி வந்து, உடலில் சூடேற்றியது. பக்கவாட்டில் இருந்த ஒரு துவாரத்திலிருந்து “புஸ்…புஸ்” என்று வெளியேறிய போது ஆவி, புகை மண்டலமாகப் பரவியது.
இது இயற்கையின் கருணை. பத்ரியில் கண்ட அதே மாதிரி அதிசயக் கருணை. ஐஸ் நீராக ஓடிக் கொண்டிருக்கும் யமுனைக்குப் பத்தடி தொலைவில், ஓர் உஷ்ண ஊற்று ஓடிக் கொண்டிருக்கிறது. சிரிப்புடன் அழுகை; இன்பத்துடன் துன்பம்; புகழ்ச்சியுடன் இகழ்ச்சி; குளுமையுடன் வெம்மை – என்னே இயற்கையின் சமன் செய்யும் நீதி! பாலன்ஸ் செய்யும் அற்புதம்!
“வாப்பா, முதலில் அந்த உஷ்ண குண்டத்தில் போய்க் களைப்புத்தீரக் குளிப்போம். பிறகு அம்மன் தரிசனம் செய்யலாம்” என்று கண்ணன் கருத்து தெரிவித்து முடிப்பதாற்குள் நாங்கள் சுடுநீர் குளத்தில் குதித்து விட்டோம். அலுப்பு மிகுந்த நடைக்குப் பின்னர், நடுக்கும் குளிருக்கும் இடையே அந்தச் சுடுநீரில் அமுங்கித் திளைக்கும் சுகத்தைச் சொல்லி விளக்குவத எளிதல்ல. இத்தனை முன்யோசனையுடன், 10,800 அடி உயரத்தில், எங்களுக்காக ஒரு “ஹாட் ஸ்ப்ரிங்” அமைத்துத் தந்துள்ள இயற்கையன்னையே, எங்கள் ஆனந்தக் கண்ணீரையே நன்றிக் கண்ணீராகப் பெற்றுக் கொள் தாயே!”
நாங்கள் குளித்த குண்டத்திற்கு மேலே மற்றொரு குண்டம் இருக்கிறது. அது இதைவிடச் சூடு மிகுந்தது. கொதி நீரில் மூழ்கிப் பழக்கப்பட்ட ஓரிரு சாதுக்கள் அதில் ஸ்நானம் செய்து கொண்டிருந்தனர்.
அதன் கரையில், மலையேறி வரும் வழியில், எனக்குத் தன் கைத்தடியைத் தந்து உதவிய சாது நின்று கொண்டிருந்தார். “நலமாக வந்து சேர்ந்தீர்களா?” என்று புன்னகைத்தவாறே ஜாடையால் கேட்டார் அவர். “உங்கள் உதவியால் வந்து சேர்ந்தேன், மிக்க நன்றி” என்று கூறி, அவரது தடியை அவரிடம் தந்தேன்.
எங்களுடன் குளித்த ஓர் இலைஞன், அம்மந்தரிசனம் செய்யும்;படி எங்களை அழைத்தான். அவன் ஜூனியர் பண்டா என்பது பின்னர்தான் தெரிந்தது. பெரிய பண்டாவை, நாங்கள் மலையேறி வரும் வழியில் சந்தித்தோம். அப்போது அவர் கோயிலிலிருந்து தமது கிராமத்திற்குப் போய்க் கொண்டிருந்தார்; இல்லை, பறந்து கொண்டிருந்தார். அடேயப்பா, எத்தனை வேகமாக நடந்தார் அவர்! ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை கூட ஏறி இறங்குவாரோ, என்னவோ! அவருடைய காலின் கன்றுச் சதையைக் கவனித்தேன். அந்த மலையைப் போலவே இரும்பாக இறுகியிருந்தது அது.
சின்னப் பண்டாவுடன் சில படிகள் ஏறிச் சென்றோம். அங்கு ஒரு தகரக் கொட்டகை போடப்பட்டிருந்தது. அதன் கீழே ஐந்தாறு சாதுக்கள் ஆட்டாமாவு பிசைந்து ரொட்டி தட்டிக் கொண்டிருந்தார்கள். சில யாத்திரிகர்களும் இருந்தனர். அங்கு குளிரே தெரியவில்லை. கடப்பைக் கல் தரைய்ல் காலை வைத்த போது சூடேறியது. சிறு சிறு துவாரங்கள் வழியே ஆவி வெளிவந்து கொண்டிருந்தது. இயற்கை படைத்துத் தந்திருக்கும் அந்த “ஹாட் கண்டிஷன்” அறையில் அவர்கள் சுகமாகப் படுத்து உறங்குவார்களாம். கொடுத்துவைத்தவர்கள்!
அங்கிருந்து பத்தடி தொலைவில், மலைச்சரிவை ஒட்டினாற் போல் ஒரு சிறு குண்டம் இருந்தது. அதை நெருங்க முடியாமல் அனல் வீசியது. கல்யாண வீட்டில் கோட்டையடுப்பை நெருங்குவது போல் இருந்தது. எட்டி நின்று எட்டிப் பார்த்தேன். அதிலிருந்த தண்ணீர் தள தள வென்று கொதித்துக் கொண்டிருந்தது. கீழே யாரோ தீமூட்டி அடுப்பெரிப்பது போல் தோன்றியது. அதாற்குப் பெயர் சூரிய குண்டம். பொருத்தமான பெயர்தான், சந்தேகமில்லை.
அதன் கரையில் ஓரிருவர் உட்கார்ந்து சோறு வடித்துக் கொண்டிருந்தார்கள். அரிசியையோ, வேறு தானியத்தையோ மூட்டையாகக் கட்டி தண்ணீரில் முக்கி, மீன் பிடிப்பவர்கள் போல் உட்கார்ந்திருந்தார்கள். ஐந்து நிமிடங்களுக்கெல்லாம் அதுச் ஆதமாகி விடுகிறது. உருளைக் கிழங்கு, வெங்காயம் முதலிய காய்கறிகளையும் இம்மாதிரியே வேக வைக்கிறார்கள். அது மட்டுமல்ல, ஆட்டாமாவில் கனமாக ரொட்டி தட்டுகிறார்களே, அதையும் அந்த நீரில் போட்டு எடுக்கிறார்கள். அது வெந்ததும் மேலே மிதந்து வருகிறது. அதைக் கிடுக்கியினால் வெளியே எடுத்து விடுகிறார்கள்.
பசித்தவர்களுக்கு இயற்கை அன்னை அங்கு அடுப்பும், வெண்கலப் பானையும், வாணலியும் செய்து வைத்திருக்கிறாள்.
அந்த “அடுப்பு குண்ட”த்திற்கு வலப்புறம் ஏழு எட்டு அடி தொலைவில் யமுனா திவ்யசிலா இருக்கிறது. அதிலிருந்து சுடுநீர் கொப்பளித்துக் கொண்டு வருகிறது. அருகில் சின்னஞ்சிறு வலம்புரி விநாயகர் சிலையும் காணப்படுகிறது.
இந்த திவ்யசிலாவுக்குத்தான் பூஜை நடைபெறுகிறது. பண்டா மந்திரங்கல் சொல்ல, நாமே அர்ச்சனை செய்யலாம். “இதுதான் உண்மையான யமுனை. இங்குதான் அவள் உற்பத்தியாகிறாள்” என்றார் அந்த சின்னப் பண்டா.
“ஐஸ் உருகி வருவதுதான் யமுனை என்கிறார்களே?” என்று அவரிடம் விளக்கம் கேட்டேன் நான்.
“அதெல்லாம் இல்லை. இதுதான் ஜம்னா” என்றார் அவர் பிடிவாதமாக.
யமுனை சூரியனுடைய புத்திரி என்று புராணம் கூறுவதால், இந்தச் சுடுநீரை அவ்விதம் கூறுகிறார்களோ என்று நினைத்துக் கொண்டேன்.
யமுனையின் திவ்யசிலாவுக்கு அருகில் ஒரு பள்ளம் இருக்கிறது. அதைக் “கௌதம குண்டம்” என்று குறிப்பிட்டார் பண்டா.அ திலிருந்து நீராவி வீசும் வேகம், ஒரு பாக்டரியின் அருகில் இருக்கும் உணர்வைத் தோற்றுவித்தது. அடியில் ஒரு மெஷின் வேலை செய்வது போலிருந்தது.
நாங்கள் அர்ச்சனையை முடித்துக் கொண்டு, இடப்புறமுள்ள யமுனையின் கோயிலுக்குச் சென்றோம்.
அது மிகச் சிறிய கட்டடம். கருவறையில், அமர்ந்த திருக்கோலத்தில் யமுனாதேவியின் புராதன உருவச் சிலை இருக்கிறது. மேல் கரங்களில் கமலமும், கமண்டலமும் வைத்திருக்கிறாள். வலத்ஹு கீழ்க்கரத்தைத் தொங்க விட்டுக் கொண்டிருக்கிராள். நான்காவது கரம் தொடையின் மீது இருக்கிறது. அது சுயம்பு மூர்த்தி என்கிறார்கள். பக்கத்தில் கங்காதேவியின் சிலையொன்றும் இருக்கிறது. அது நவீனமானது. நதிகளாக நாட்டை வாழிக்கும் பெருங்கருணையை, தேவி வடிவத்தில் தரிசித்து, நம் நன்றிப்பெருக்கை வெளிப்படுத்துகிறோம். யமுனைக் கோயிலுக்கு தெற்கே, சற்றுத் தொலைவில், ஓர் ஆஞ்சநேயர் கோயிலும் இருக்கிறது.
இதுதான் யமுனோத்ரி. கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி கோயில்களைப் போல், இங்குள்ல ஆலயத்தையும், நவம்பரிலிருந்து ஆறு மாதங்களுக்கு மூடி விடுகிறார்கள். இந்தப் பகுதி தியான, யோக சாதனைகளுக்கு ஏற்ற இடம் என்று கூறப்படுகிறது. இலங்கையிலிருந்து சிவபெருமானுடன் பன்னிரண்டு மகரிஷிகள் இங்கு வந்ததாகவும், அவர்கள் இன்னும் இங்கு தவத்தில் ஆழ்ந்திருப்பதாகவும் கருதப்படுகிறது. இயற்கையின் வனப்பை ரசித்து இங்கு வீசும் காற்றைச் சுவாசிப்பது உடலுக்கும் உள்லத்துக்கும் நன்மருந்தாகும்.
யமுனோத்ரியில் இருப்பது மிக மிகச் சாதாரணமான கடைவீதி. தங்குவதற்கும் நவீன வசதிகளோடு கூடிய வீடுகள் ஒன்றும் கிடையாது. மின்விளக்குகள் கிடையாது. ஒரு மைல் ஏறிச் சென்றால் காட்டு இலாகா விடுதி இருப்பதாகச் சொன்னார்கள். உடலசதி அத்தனை தொலைவு நட்ககும் தென்பையோ, உற்சாகத்தையோ அளிக்காததால்,நாங்கள் அருகிலிலுள்ள ஓர் அறையையே வாடைக்கு எடுத்துக் கொண்டோம். வாடகைக்கு ரஜாயும் கொடுத்தார்கள். அந்தக் கும்மிருட்டிலும், கடுங்குளிரிலும், உடல் களைப்பிலும் வேறு ஒன்றும் செய்யத் தோன்றாதவர்களாய், பேசாமல் போர்த்திக் கொண்டு படுத்து விட்டோம். அப்போது மணி என்ன தெரியுமா? ஆறரையோ, ஆறே முக்காலோதான்! யமுனோத்ரி உறங்கத் தொடங்கி விட்டது. ஆனால் எனக்குத் தூக்கம் வரவில்லை!
மலையேறி யமுனோத்ரிக்கு வந்து சேரும் வரை என் உடல் நிலை அவ்வளவு திருப்திகரமாக இல்லை. தலைவலி மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. எதுவுமே உட்கொள்ல ஆர்வமில்லாத வகையில் வயிறு குமட்டிக் கொண்டிருந்தது. ஓர் அயர்வு, ஆயாசம், ஓய்ச்சல்.
ஆனால் பனி மூடிய மலைச் சிகரத்தையும், யமுனா நதியையும் இயற்கையழகையும் கண்ட உடனே அத்தனையும் எங்கோ மறைந்து விட்டன. அந்த சுடுநீர் குண்டத்தில் முழுகி எழுந்த உடனேயே, களைப்பெல்லாம் பறந்தோடி விட்டது. உள்ளத்தில் ஒரு மலர்ச்சியும், உடலில் ஒரு புதுத்தென்பும் தோன்ற ஆரம்பித்தன. புது இடங்களை ஆர்வத்துடன் பார்க்கும் போதும், அவற்றின் தொடர்பான புராணக் கதைகளைக் கேட்கும் போதும் உடலை மறந்த புதியதோர் உற்சாகம் பெறுவதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். அன்றும் அவ்வாறே இருந்தது.