பாகீரதி ஆலயத்தில் கடைசி நிகழ்ச்சியாக நடைபெற்ற பஜனைப் பாடல்களைக் காது குளிர கேட்டுவிட்டு தண்டி சுவாமி ஆசிரமத்தில் சிறிது ஆகாரம் உண்டுவிட்டு எங்கள் விடுதிக்கு வந்து சேர்ந்த பொது இரவு ஒன்பது மணியிருக்கும். கங்கோத்ரி உறங்கி ஒரு ஜாமம் ஆகிவிட்டிருந்தது.
1974-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதி செவ்வாய்கீழமை. எனக்கு மறக்க முடியாத தினமாகும். அன்று காலை எட்டு மணிக்கு, பாகீரதி கோயிலில் பிரசாதம் பெற்று, அன்னையை வலம் வந்து எங்கல் “கோமுக்” பயணத்தைத் தொடங்கினோம்.
ஜவான் ஸலீந்தர்சிங்குக்கு வாயெல்லாம் பல். அவர் ஒரு கர்வாலியாக இருந்தும் அதுவரை கங்கோத்ரியையே பார்த்ததில்லையாம். அத்துடன் கோமுக் தரிசனம் கிடைப்பதும் தனது பெரும்பாக்கியம் என்று நூறு தடவைக்கு மேல் சொல்லிச் சொல்லிப் பூரித்துப் போய் விட்டார்.
சற்று தூரம் சென்றதும் திரும்பிப் பார்த்தோம். கங்கோத்ரி கோயில் சிறியதாகத் தெரிந்தது. பக்கத்தில் பாகீரதி வாய்க்காலாக வலைந்துவ் அளைந்து சென்று கொண்டிருந்தாள். கங்கோத்ரியிலுள்ள குடில்களும், விடுதிகளும் வெகு தொலைவில் இருப்பது போல் தெரிந்தன.
கங்கோத்ரியின் மட்டத்திலிருந்து உயர்ந்து வந்து விட்டோம் என்பதற்கு எங்களுக்கு வலப்புறம் சிறுத்துக் கொண்டும் இளைத்துக் கொண்டும் ஓடிய பாகீரதி நதியே சான்றாக அமைந்தது. வலப்புறமுள்ள மலை உச்சியிலிருந்து பனி உருகி, சிறு நதியாக ஓடி வந்து பாகீரதியுடன் கலந்து கொண்டிருந்தது. சூரிய ஒளியில் பட்டு பனிமலைச் சிகரங்கள் மின்னும் போது எங்கள் கண் கூசப் போகிறதே என்றோ என்னவோ, மேகக் கூட்டங்கள் அங்கங்கே அவற்றைத் திரையிட்டு மறைத்திருந்தன.
ஒரு மைல் வந்திருப்போம். “பாபா கங்காதாஸ் பலஹரி” என்ற ஒரு சிறு போர்டு காணப்பட்டது.
“இங்கிருந்து கீழிறங்கிப் போனால் நதிக்கரையில் இருக்கும் ஒரு சிறு ஆசிரமத்தில் இந்த சாதுவைத் தரிசிக்கலாம். இவர் இருபது வருடங்களாக இங்கு வசித்து வருகிறார். பழ ஆகாரங்களிலேயே உயிர் வாழ்ந்து வருகிறார்” என்றார் சுந்தரானந்தா.
அவரைப் பார்க்கலாமா? என்றேன் நான். “இப்படிப் போகிற வழியெல்லாம் இறங்கி ஏறிக் கொண்டிருந்தால் கோமுக் போக இரண்டு நாட்களாகிவிடும். நீங்கள் நடக்கும் வேகத்தைப் பார்த்தால் “சிடுவாஸா” போய்ச் சேர்வதற்குள்ளேயே இரவாகி விடும் என்று தோன்றுகிறது” என்றார் சுந்தரானந்தா.
கங்கோத்ரியிலிருந்து கோமுக் சுமார் பன்னிரண்டு மைல் இருக்கும். ஒழுங்கான பாதை கிடையாது. ஏற்றமும் இறக்கமுமாக இருக்கிறது. போகப் போக மண் தரயைக் காண்பதே அரிதாகி விடுகிறது. பாறைகளிலும், சரளைக் கற்களிலும்தான் நடந்து செல்ல வேண்டும். பனிக் காலத்திலும், மழைக்காலத்திலும் சாதாரண மக்கள் அங்கு செல்வது முடியாத காரியம். மலை ஏறுவதில் பயிற்சி பெற்றவர்களும், உயிரைத்துரும்பாக மதிக்கும் சாதுக்களும்தான் அங்கு செல்லத் துணிவார்கள்.
திடமுள்ளவர்களாயிருந்தால் அந்தப் பன்னிரண்டு மைல் பயணத்தையும் ஒரே நாளில் முடித்துக் கொண்டு திரும்பிவிடலாம். ஆனால், அதெல்லாம் உங்களால் முடியாது என்று சுந்தரானந்தா முதலிலேயே கூறிவிட்டார். என் நடையின் வேகத்தையும், நான் மூச்சு விடத் திணறுவதையும் பார்த்த பிறகு, “இவர்களோடு வருவதற்கு ஏண்டா ஒப்புக் கொண்டோம்?” என்று அவருக்குத் தோன்றியிருக்க வேண்டும். அப்படி வெளியில் கூறாவிட்டாலும், அவரது முகபாவத்திலிருந்து அவரது சிந்தனையை என்னால் ஊகிக்க முடிந்தது.
முதல் இரண்டு மூன்று மணி நேரம் பாகீரதியின் பள்லத்தாக்கின் வனப்பையும், நதிக்குக் கரை கட்டி நின்று கொண்டிருந்த மலைச் சிகரங்கலையும் ரசித்துக் கொண்டே நடந்தோம். சுந்தரானந்தா ஒவ்வொரு சிகரத்தின் பெயரையும் கூறி, சுட்டிக் காட்டிய போது, அங்கங்கே நின்று “ஆகா ஆகா”வென்று கலையுணர்வோடும் ன் ரசனையோடும் கலைஞனின் ரசனையோடும் பாராட்டி மகிழ்ந்தோம்.
ஆனால், நடக்க நடக்க அசதி மேலிட்டது. கால் கெஞ்சிற்று. நடை தளர்ந்து வேகம் குறைந்து கொண்டே வந்தது. உடல் தள்ளாடி, மூச்சுவிட முடியாமல் இரைத்தது. உட்கார்ந்து உட்கார்ந்து பயணத்தைத் தொடரவேண்டியதாயிற்று.
ஜமுனோத்ரிக்குச் செல்லும்போது, தலையிடியால் வலித்ததே, அதே மாதிரி “ஆல்டிட்யூட் சிக்னெஸ்” என்ற ஒற்றைத் தலைவலியால் தற்போதும் அவதிப்பட்டேன். நாக்கு உலர்ந்து, தொண்டை வறண்டது. காற்றடித்தால் கீழே விழுந்து விடுவோமோ என்று அஞ்சும்படி உடல் லேசாகி விட்டிருந்ததை உணர்ந்தேன். நல்லவேளையாகக்கையில் தடியிருந்ததோ, தப்பித்தேனோ. இம்முறை கங்கோத்ரியிலிருந்து வரும் போதே கவனமாக ஒரு தடியை கையோடு கொண்டு வந்திருந்தேன். சுந்தரானந்தாவுக்குப் பால் கொண்டு வந்திருந்த கிழவரிடமிருந்து இரவலாக அதை வாங்கி வந்திருந்தேன். ஜமுனோத்ரியின் பயணத்தின் போது தம் தடியைத் தந்து உதவிய சாதுவைப் போல், கோமுகப் பயணத்தின் போதும் ஒருவர் வருவார் என்பது என்ன நிச்சயம்!
ஏன் கவனத்தை வேறு பக்கம் திருப்புவதற்காகவும், என்னை உற்சாகப் படுத்துவதற்காகவும் சுந்தரானந்தா “இதோ இந்தச் செடியைப் பார்த்தீர்களா? அந்த மரத்தைப் பார்த்தீர்களா?” என்று வழி நெடுகிலும் எதையாவது சுட்டிக் காட்டிக் கொண்டே வந்தார்.
செல்லும் வழியில் ஒருவகைக் காட்டுத் துளசிச் செடி மண்டிக் கிடந்ததைப் பார்த்தேன். அதற்கு “கங்கா துளசி” என்று பெயராம். அது பூஜைக்கு ஏற்றது என்றும், அதில் கஷாயம் செய்து குடித்தால் விஷ ஜுரத்திற்கு நல்லது என்றும் கூறினார் சுந்தரானந்தா.
ஒருவகை காட்டு ரோஜாச் செய்ட்களும் ஏராளமாகக் காணப்பட்டன. மலர்கள் சிறியவையாக இருந்தன. அதன் கிளைகளை உடைத்து, சீவி, கழிகளாகப் பயன்படுத்துவார்களாம்.
பாகீரதியின் கரையில் அரச மரங்கஃஜ்லைப் போல் பெரிய பெரிய மரங்கள் வளர்ந்திருந்தன. அவற்றுக்கு வேணு மரங்கள் என்று பெயராம். இலைகளரச இலைகளைப் போன்றே சற்று அகலமாக இருக்கின்றன. அரச மரங்களை நாம் வழிபடுவது போலவே காட்டு மக்கள் அம்மரத்தை வழிபடுகிறார்களாம்.
கோமுக்கை நெருங்க நெருங்க “போஜ் பத்ர” என்ற ஒரு வகையான மரம் அதிகமாகக் காணப்படுகிறது. அதன் பட்டையை உரிக்க உரிக்க காகிதம் போல் வந்து கொண்டேயிருக்கிறது. அந்தக் காலத்தில் மகரிஷிகள் எழுதுவதற்கு அதைத்தான் உபயோத்திருக்கிறார்கள்.
நாங்கள் பல காட்சிகளைப் பார்த்துக் கொண்டெ, பல விஷயங்களைப் பேசிக் கொண்டே நடந்து கொண்டிருந்தோம். திடீரென்று “ஜில்”லென்று வீசிய காற்று எங்களைத் தாக்கத் தொடங்கியது. அது ஊசியாகக் குத்திற்று.
“இது கடும் பனிக்காற்று. ஐஸ் மலைகளிலிருந்து வீசுகிறது. இப்படித்தான் திடீர் திடீரென்று வீசும். நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். முக்கியமாக காதுகளையும் மூக்கையும் மூடிக் கொள்ளுங்கள்” என்று எங்களை உஷார்படுத்தினார் சுந்தரானந்தா.
கங்கோத்ரியிலிருந்து காலையில் நாங்கள் புறப்பட்ட போது நல்ல வெய்யில் அடித்துக் கொண்டிருந்தது. நட்ககும் போது சற்று புழுக்கமாக இருக்கவெ ஸ்வெட்டரைக் கூடக் கழற்றியிருந்தேன் நான். ஆனால், சுந்தரானந்தாவின் எச்சரிக்கையைக் கேட்டதும், எல்லாவற்றையும் மீண்டும் போட்டுக் கொண்டு விட்டேன். தலையையும் முகத்தையும் மூடிக் கொண்டேன். க்ளவுஸ் போட்டுக் கொண்டு கைவிரல்களைப் பாதுகாத்துக் கொண்டேன். இந்த உடலை எப்படியாவது பழுதுபடாமல் பாதுகாத்து, கோமுகத்தைத் தரிசனம் செய்து விடவேண்டும் என்ற தணியாத ஆர்வம் என்னுள் கொழுந்து விட்டு எரிந்ததால், யார் என்ன சொன்னாலும் கேட்கும் மூடில் இருந்தேன் நான்.
நாங்கள் பாகீரதி நதிக்கு இடப்புறமாக் அனடந்து கொண்டிருந்தோம். வலப்புறம் கரையின் ஓரமாக ஒற்றையடிப் பாதையைப் போல் ஒரு சுவடு தெரிந்தது. அவ்வழியேதான்முன்பெல்லாம் கோமுகத்திற்குச் செல்வார்களாம்.
அது நாங்கள் சென்ற வழியைக் காட்டிலும் ஆபத்துக்கள் நிறைந்தது. தற்போது யாரும் அவ்வழியே செல்வது இல்லை. அந்தக் கரையில் ஓரிரு சிறு குடில்கள் தெரிந்தன. மரங்களில் காவி ஆடைகள் உலர்த்தியிருப்பதைக் கண்டோம். ஒரு குடிலில் வங்காளத்தைச் சேர்ந்த இளம் சந்நியாசினி ஒருவர் வசிப்பதாகச் சுந்தரானந்தா கூறிய போது நாங்கள் ஆச்சரியப்பட்டுப் போனோம்.
கேட்பாரற்றுக் கிட்ககும் அந்தக் காட்டுப் பகுதியில் மனித நடமாட்டமே இல்லாத, ஒதுங்கிய பிரதேசத்தில், குளிரையும் பனியையும், மழையையும் பொருட்படுத்தாமல் ஒருவர் வசிக்க வேண்டும் என்றால், உண்மையில வர் ஒரு பற்றற்ற ஞானியாகவும், வைராக்கியம் நிறைந்தவராகவும்தான் இருக்க வேண்டும்.
சுமார் ஒரு மனியிருக்கும். சூரியன் இருக்குமிடம் தெரியாமல் மேகக் கூட்டம் வானத்தை மறைத்து விட்டிருந்தது. “உஸ் உஸ்” என்று குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. “சிடுவாஸா” போக இன்னும் எத்தனை தூரம் நட்கக வேண்டும் என்று தெரியவில்லை. “இனி ஒரு அடி கூட நட்கக முடியாது” என்று வெளிப்படியயாகக் கூறும் அளவுக்கு எனக்கு களைப்பு மேலிட்டிருந்தது. ஜமுனோத்ரியில் பயணத்தின் போது ஏற்பட்டது போல் வயிற்றுக் குமட்டலும் வந்து விட்டது. மரண தாகம் எடுத்தது. மிட்டாயைப் போட்டுக் கொண்டால், வாயெல்லாம் கசந்தது. என்னிலைமையைப் பார்த்து சுந்தரானந்தா பரிதாபப்பட்டார். அரவணைத்தவாறே என்னை அழைத்துக் கொண்டு மெல்ல நடந்தார்.
“இன்னும் கொஞ்ச தூரம்தான். இதுதான் தேவகங்கா. இந்த இடத்திற்கு “தேவகாட்” என்று பெயர். அந்தப் பாலத்தைக் கடந்து போனால் “சீடுவாஸா” வந்துவிடும்” என்று தைரியம் கூறிக் கொண்டே, அங்கிருந்த குறுகலான மரப்பாலத்தின்மீது என்னை ஜாக்கிரதையாக அழைத்துச் சென்று அந்தப் பக்கம் கொண்டு போய்ச் சேர்த்தார். என் உடல் அப்போதிருந்த நிலையில் நிச்சயமாகத் தனியாக நான் அதன்மீது நடந்திருக்க முடியாது.
பதினைந்து நிமிடங்களுக்கெல்லாம் “சீடுவாஸா” வந்து சேர்ந்தோம். அங்கு தங்குவதார்கு சத்திரமோ, சாவடியோ கிடையாது. திறந்த வெளியில் ஒரு பாறையில் படுத்துக் கொண்டேன். சீராக மூச்சு விட முடியாமல் கஷ்டப்பட்டேன். அங்கெல்லாம் பிராணவாயு குறைவாக இருக்கும் போலிருக்கிறது. கண்ணனும், மற்ற நண்பரும் ஏதோ சாப்பிட்டார்கள். எனக்கு அவர்கள் பக்கம் திரும்பிப் பார்க்கக் கூடப் பிடிக்கவில்லை. கண்ணன், கோதுமை உருண்டையில் கொஞ்சம் பிட்டு எனக்குக் கொடுத்தார். அதில் பாதியை வாயில் போட்டுக் கொண்டேன். அதற்கு மேல் வேண்டியிருக்கவில்லை.
சுந்தரானந்தாவும், அவருடைய நண்பரும் எங்கேயோ கீழே நதிப்பக்கமாக இரங்கிச் சென்று ஒரு பாத்திரத்தில் காப்பி போட்டுக் கொண்டு வந்தார்கள். ஆளுக்கொரு தம்ளர் குடித்து விட்டு, மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம்.
குறுக்கே ஓர் ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அதை எப்படிக் கடந்து செல்வது என்று நாங்கள் தயங்கினோம்.
“நல்ல வேளை, தண்ணீர் அதிகமாக ஓடவில்லை. நிறைய இருக்குமோ என்று பயந்தேன். அப்படி இருந்திருந்தால் நாம் இரண்டு மூன்று மைல்கள் சுற்றிக் கொண்டு போக வேண்டியிருந்திருக்கும்” என்று கூறி, குரங்கு போல், பாறை பாறையாகத் தாவச் செய்து எங்களை ஜாக்கிரதையாக அழைத்துச் சென்றார் சுந்தரானந்தா. துணைக்கு அவர் இல்லாவிட்டால் வழி தப்பிப் போயிருப்போம். “அனுபவமிக்க வழிகாட்டி ஒருவரில்லாமல் கோமுகத்திற்குச் செல்லாதீர்கள்” என்று டில்லியில் பலர் எங்களை எச்சரித்ததன் பொருள் அப்போதுதான்புரிந்தது.
மணி மாலை நாலரை இருக்கும். பத்தாவது மைலில் இருக்கும் “போஜ் வாஸா” வந்து சேர்ந்தோம். ஒரு பள்ளத்தாக்கின்னடுவினிருக்கும் சிறு தங்குமிடம் அது. நூறு அடிக்கு மேல் கீழே இறங்கிப் போக வேண்டும்.
“நானும் நண்பரும் கோமுகத்தருகில் இருக்கும் ஜியலாஜிகல் சர்வெ காம்ப்புக்குப் (புவியியல் ஆய்வாளர் முகாம்) போகிறோம். நீங்கள் இரவு இங்கே தங்கிவிட்டுக் காலையில் எழுந்து வாருங்கள்.இனிமேல் உங்களால் நடக்க முடியாது” என்று கூறி விட்டு சுந்தரானந்தா, வேகமாக நட்ககத் தொடங்கினார்.
நாங்கள் அன்றிரவு போஜ்வாஸாவில் தங்கினோம். ஐயோ அந்த இரவு!
ஏன் வாழ்க்கையில் மறக்க முடியாத இரவுகளில் மிக பயங்கரமானது அது.
காலை எட்டு மணிக்கு உடல் நலத்துடனும் உற்சாகத்துடனும் கோமுக தரிசனத்திற்குப் புறப்பட்ட நான், “போஜ்வாஸா” வந்து சேர்ந்த போது சீக்காளியாகி விட்டிருந்தேன். குளிரடக்கமாக, எங்கேயாவது படுத்தால் போதும் என்று தோன்றியது. நிற்கவோ, சூழ்நிலையின் ரம்மியத்தை ரசிக்கவோ சக்தியற்று, மிகவும் சோர்வுற்றிருந்தேன்.
அந்த இடத்தில் ஒரு பாதாள அறை இருக்கிறது. அதில் “லால்பிஹாரி” என்ற ஒரு சாது வசிக்கிறார். அங்கு வரும் யாத்திரிகர்கலுக்கு தங்க வசதிகள் செய்து கொடுக்கிறார் அவர். வெந்நீர் போட்டுக் கொடுக்கிறார். டீயும், ஆகாரமும் தயாரித்துத் தருகிறார். வசதியுள்லவர்கள் தாராளமாய்த்தந்து விட்டுப் போவதை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்கிறார்.
கண்ணன் நண்பருடன் அந்தப் பாதாள அறைக்குப் போய் அவரிட்ம ஏதோ பேசினார்கள். ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியாத நிலையிலிருந்த நான், அங்கிருந்த ஒரு மேடையில் அமர்ந்தேன். அங்கிருந்து கோமுகம் தரிசனமாயிற்று. பிரமாண்டமான அந்த ஐஸ் பாறை, மறையும் சூரியனின் ஒளிப்பட்டு தங்கமாகப் பளபளத்துக் கொண்டிருந்தது. போஜ்வாஸாவிலிருந்து அந்த இடம் சுமார் இரண்டு மைல்கள். இருபுறமும் உறை பனியால் போர்த்தப்பட்ட மலைச்சிகரங்கள். ஒருவித ஆரவாரமுமின்றி அருகில் பாகீரதி கங்கா ஓடிக் கொண்டிருந்தாள்.