தராலியிலிருந்து “ஹரிசீல்” என்ற “ஹரிப்பிரயாகை” நான்கு மைல் தொலைவிலிருக்கிறது. இந்தப் பகுதியில் எங்கள் பயணம் புத்துணர்வும், புதுத்தென்பும் அளிப்பதாக அமைந்திருந்தது. இயற்கைக் காட்சிகளின் வனப்பு, அழகுத் தத்துவத்துக்கு இலக்கணமாக திகழ்ந்தது. உத்தரகாசியிலிருந்து கங்கோத்ரிக்கு வரும்போது இருட்டி விட்டிருந்ததால் நாங்கள் இந்தக் காட்சிகளை ரசிக்க முடியாமல் போயிற்று. நல்லவேளை, திரும்பும் போதாவது வெளிச்சத்தில் வந்தோமே என்று நினைத்துக் கொண்டேன்.
ஹரிப்பிரயாகையில் சியாம கங்கா என்னும் நதியும், ஜலந்தர் என்னும் நதியும் பாகீரதியுடன் கலக்கின்றன. அங்கு புராதனமான லட்சுமிநாராயணர் ஆலயம் ஒன்று இருப்பதாக நான் முன்பே படித்திருந்ததால் நானும் நண்பரும் புறப்பட்டோம். கண்ணன், டாக்சியிலேயே அமர்ந்திருந்தார். உடல் நலம் சற்றுக் குன்றியிருந்த காரணத்தால் உற்சாகம் இழந்திருந்தவரை, உபத்திரவப்படுத்த நான் விரும்பவில்லை.
அங்கிருந்து மிகப்பழைய, ஆபத்தான நிலையிலிருந்த பாலத்தைக் கடந்து, சுமார் ஒரு மைல் நடந்து, கடைசியில் அந்தக் கோயிலைக் கண்டுபிடித்தோம்.
ஊருக்கு வெளியே, ஒதுங்கி, தனிமையில் கோயில் கொண்டிருந்தார் லட்சுமிநாராயணர். சிறு கோயில்தான். அது பூட்டப்பட்டிருந்தது. சுற்றுமுற்றும் தேடிப் பார்த்தோம். விசாரித்துப் பார்க்கலாம் என்றால் ஓர் ஆசாமி கூடக் கண்ணில் தென்படவில்லை.
இத்தனை தூரம் வந்து விட்டு சுவாமியைப் பார்க்காமல் திரும்ப எங்களுக்கு இஷ்டமில்லை. எங்கேயாவது விசாரித்துப் பார்க்கும்படி ஜவானிடம் கேட்டுக் கொண்டோம். ஒரு கிழவிதானந்தக் கோயிலைக் கவனித்துக் கொண்டிருக்கிறாள் என்றும் நினைவுபடுத்திக் கொண்டு ஸலீந்தர் சென்றார். நாங்கள் பின்னால் நடந்தோம்.
ஜவான் சொன்ன அந்தக் கிழவியைக் கண்டுபிடித்தோம். ஆனால், அவள் கோயிலைத் திறக்க மாட்டேன், காலையில் வீட்டு வேலை நிறைய இருக்கிறது என்றும் அவளைத்தொந்தரவு செய்ய வெண்டாம் என்றும் கண்டிப்பாகக் கூறிவிட்டாள். நாங்கள் மன்றாடினோம். ஆயிரத்து ஐந்நூறு மைல்களுக்கு அப்பாலிருந்து இமாலய யாத்திரை வந்திருப்பதாக்க கூறினோம். அதைக் கேட்டு அந்த அம்மாளின் மனம் கரைந்தது. வீட்டுக்குள் சென்று சாவிக் கொத்தை எடுத்துக் கொண்டு வந்து கோயிலைத் திறந்தாள்.
வெளியே ஒரு சிவலிங்கம் இருக்கிறது. கருவறையில் நாராயணர், லட்சுமி, கருடன், ஹனுமான் முதலிய மூர்த்திகள் இருக்கின்ரன. எல்லாம் பளிங்குக்கல்லால் ஆனவை.
நாராயணன் தமது மேல்கரங்களில் கதையும், சக்ரமும் ஏந்தியிருக்கிறார். கீழ் வலக்கை வர ஹஸ்தமாக் ஐருக்கிறது. இடக்கையில் சங்கு இருக்கிறது.
அந்தக் கிழவியின் பெயர் பார்வதி. கடுவால் பிராம்மண வகுப்பைச் சேர்ந்தவர். அவரது பரம்பரையினர்தான் அந்தக் கோயிலை கவனித்து வந்திருக்கின்றனர். இவள் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவள். எங்களுக்கு சுவாமி பிரசாதம் தந்துவிட்டு, தன் வீட்டுக்குச் சென்று “ஜில்”ளென்று மோர் கொண்டு வந்து கொடுத்து உபசரித்தார்.
அங்கு ஓர் அழகிய சிறுமி, கன்றுக் குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். நண்பர் அவலை போட்டொ பிடித்துக் கொண்டிருக்கும் போது, அந்தப் பெண் இந்த அம்மாளின் பேத்தியா? என்று விசாரிக்கும்படி ஸலீந்தரிடம் சொன்னேன். ஸலீந்தர் கேட்டார்.
“ஆமாம், என் பிள்ளை வயிற்றுப் பேத்தி இவள். பெயர் பிந்து. என் பிள்ளையும், நாட்டுப்பெண்ணும் அடுத்தடுத்து இறந்து விட்டனர். இப்போது இந்தப் பெண்ணும் நானும்தான் இங்கே குடித்தனம் நடந்த்துகிறோம். நீங்கள் வந்தபோது பசி என்று இவள் அழுது கொண்டிருந்தாள். அவளுக்கு ஏதாவது செய்து தர வேண்டும் என்றுதான் முதலில் உங்களுடன் கோயிலுக்கு வரத் தயங்கினேன். என்னைத் தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள்” என்று அந்த மூதாட்டி கூறிய போது எங்கள் கண்கள் கலங்கி விட்டன.
கங்கோத்ரியிலிருந்து உத்தரகாசி வரும் வரையில், பாகீறதி நதி பாய்ந்து ஓடும் பள்ளத்தாக்குகளின் ரம்மியமான காட்சிகலை ரசித்துக் கொண்டெ வந்தோம். பாரதத்தின் ஜீவநாடியான அந்த ஜீவநதி, உயரத்திலிருந்து பார்க்கும் போது ஓர் அழகுடன் விளங்குகிறது. அருகில் ஓடும்போது ஓர் எழிலுடன் திகழ்கிறது. வகை வகையான தோற்றங்களுடன், வளம் குவித்து நம்மை வாழ்விக்கப் பறந்தோடி வரும் பாகீரதி மங்கை, புதுப் புதுப் பொலிவுகளுடன் பூத்துக் குலுங்குகிறாள். அவளையும், அவளை அரவணைத்துக் கொண்டு வரும் இமயத் தொடரையும் இமை கொட்டாது பார்த்துப் பார்த்து பரவசம் அடைந்தோம். இயற்கையழகைப் பருகப் பருக, சாந்தி பிறக்கிறது. அந்த சாந்தியில் ஆனந்தம் தாண்டவமாடுகிறது. அந்தத் தாண்டவ நடனத்தில் ஆண்டவனின் தரிசனம் கிடைக்கிறது.
கங்கனானி என்ற இடத்தைக் கடந்த போது, மலை மீது பராசரர் ஆசிரமம் இருந்த இடத்தில் இறங்கி அந்தத் திக்கை நோக்கிக் கன்னத்தில் போட்டுக் கொண்டோம்.
இரண்டு மைல்கள் கடந்ததும் அதுவரை காணாத ஒரு காட்சியைக் கண்டு வியந்தோம். அங்கு பாகீரதி விரிந்து பரந்து நிரம்பி வழிந்து ஓடிக் கொண்டிருந்தாள். பாலமாகக் குறுக்கே கட்டப்பட்டிருந்த கனமான ஓர் இரும்புக் கம்பியில் ஒருவன்,இக்கரையிலிருந்து அக்கரைக்குச் சென்று கொண்டிருந்தான். அதைப் பார்த்த பொது, “அறுந்து விழுந்தால் என்ன கதி” என்று நினைத்த நமக்குத்தான் பயமாயிருந்தது. நின்று நடுக்கத்துடன் வேடிக்கை பார்த்த எங்களைப் பார்த்து அந்த ஆசாமி சிரித்துக் கொண்டிருந்தான். பழக்கப்பட்டுப் போய்விட்டால் எதிலுமே பயமற்றுப் போய்விடுகிறதே!
உத்தரகாசிக்கு வந்து சேரும்பொது பகல் மணி ஒன்றாகி விட்டது. நாங்கள் ஆகாரத்தை முடித்துக் கொண்டு சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு கோயில்களைத் தரிசிக்கச் சென்றோம்.
பாரதத்தில் மொத்தம் ஐந்து காசிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. புகழ் பெற்ற வாராணசி என்ற காசி உத்தர காசி, கேதார்நாத் செல்லும் வழியில் உள்ள குப்த காசி, தமிழகத்திலுள்ள தென்காசி இந்த நான்கையும் நான் அறிவேன். ஐந்தாவது எது என்று சரியாகத் தெரியவில்லை. விருத்த காசியாக இருக்குமா அல்லது சிவகாசியா?
வடக்கேயுள்ள இந்த உத்தரகாசியில் உறைபவரும் விசுவேசுவரரே. கலியுகத்தில் புராதன காசியின் மகிமை குறையும் போது நான் உத்தரகாசியில் வந்து தங்கி விடுவேன் என்று ஸ்ரீ பரமேசுவரனே கூறியிருக்கிறாராம். உண்மையாக இருக்கலாம். நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்பு வரை உத்தரகாசி தவத்திற்கும், தியானத்திற்கும் ஏற்ற தனிமையும், சாந்தியும் நிறைந்த ஒரு தவச்சோலையாக இருந்தது. மனித நடமாட்டத்திலிருந்து ஒதுங்கி, ஆன்மீக சாதனைகளில் நாட்டம் கொள்வதற்காக இங்கு அநேக மகாத்மாக்களும் வந்திருக்கிறார்கள். தினமும் பாகீரதியில் ஸ்நானம் செய்தும், விசுவேசுவரனை வழிபட்டும் ஆத்ம லாபம் பெற்று வந்திருக்கிறார்கள்.
அந்நாட்களை நாம் வெகு சிரமப்பட்டு கற்பனை செய்து கொண்டால்தான் உண்டு. இப்போது முற்றிலும் மாறி விட்டிருப்பதைப் பற்றி முன்பெ குறிப்பிட்டிருக்கிறேன்.
நாங்கள் கோயிலுக்குச் சென்றபோது மாலை மனி மூன்றிருக்கும். எங்கலையும், நிகழ்லுக்காக கோயிலில் ஒதுங்கிப் படுத்துக் கொண்டிருந்த ஓரிருவரையும் தவிர அங்கு வேறு யாருமில்லை.
சிறு கோயில்தான். அது தரை மட்டத்திற்கு சற்று மேலே ஓர் உயர்ந்த மேடையில் அமைந்திருக்கிறது. பத்துப் பதினைந்து படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.
அலங்கார மண்டபங்களோ, சிற்பத்தூண்களோ கிடையாது. உயர்ந்த மேடையைச் சுற்றிப் பிராகாரம் அமைந்திருக்கிறது. கிழக்கு நோக்கிய நுழைவாயில். வாயிற்படிக்கு மேல் விநாயகர் இருக்கிறார். அவர் தமது கரங்களில் பரசு, உத்திராட்ச மாலை, கமண்டலம், மோதகம் முதலியவற்றை ஏந்தியிருக்கிறார். (வடக்கே பெரும்பாலான கணபதி மூர்த்திகள் இத்தோற்றத்துடந்தான் காணப்படுகின்றனர்.)
ணாம் கருவறையில் தாராளமாக நுழையலாம். காசியில் நடைபெறுவது போன்றெ இங்கேயும், ஸ்ரீ விசுவேசுவரருக்கு நம் கையாலேயே அபிஷேக, ஆராதனைகள் செய்யலாம்.
பெரிய, புராதனமான லிங்கம். பார்த்ததுமே பக்தியை தோண்டும் வடிவில் எழுந்தருளியிருக்கிறார் சுவாமி. எத்தனை மகான்கள், எத்தனை யோகீசுவரர்கள், எத்தனை ஞானத்தபோதனர்கள் அவரை வழிபட்டிருப்பார்களோ! எத்தனையெத்தனை பேருக்கு அவர் நற்கதி அருளியிருப்பாரோ! எத்தனை கருணை நிறைந்தவராக இருந்தால் எங்களைப் போன்றவர்களுக்கும் அவர் தரிசனம் அளிப்பார்?
தஞ்சம் என்று சரணடைந்துவிட்டால் அடுத்த கணமே அடைக்கலம் தந்தருள காத்திருக்கும் பிரபுவுக்குச் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு, அவரை வலம் வந்தோம். விசுவேசுவரனை ஒரு முறை வலம் வந்து விட்டால் நாம் அண்டசராசரங்களைச் சுற்றி வந்த பலனைப் பெற்று விடலாமே! அன்று பரமேசுவரனை வலம் வந்து விட்டு, தும்பியான் மிக எளீதாகப் பழத்தைப் பெற்றுச் சென்று விடவில்லையா? அது போல!
நமக்கு இந்தத் தத்துவத்தை நினைவு படுத்திக் கொண்டு கருவறையில் சலவைக் கல்லாலான சிறு விநாயகமூர்த்தி அமர்ந்திருக்கிறார். அங்கு விருஷபத்தில் அமர்ந்தபடி ஓர் உருவச்சிலை இருக்கிறது. அமர்ந்திருப்பது அப்பனா, அம்மையா என்பது சரியாகப் புலப்படவில்லை.
பிராகாற்றத்தைச் சுற்றிக் கொண்டு கீழ் இறங்கி வந்தால் சுவாமி கோயிலுக்கு நேர் எதிரே, ஒரு மண்டபத்தில் பிரும்மாண்டமான திரிசூலம் காணப்படுகிறது. ஐம்பது ஐம்பத்திரண்டு அடி உயரமிருக்கும். சக்தி சொரூபமான அந்தச் சூலத்தை, அம்பாளாக வழிபடுகிறார்கள். சுவாமியை காசி விசுவேசுவரர் என்றும், சக்தியை காசி விசுவேசுவரி என்றும் அழியக்கிறார்கள். இந்தத் திரிசூலத்தைப் பார்த்ததும், பத்ரிநாத் செல்லும் வழியில் சமோலிக்கருகில் உள்ல கோபேசுவரர் ஆலயத்தில் பார்த்த உயரமான சூலம் என் நினைவுக்கு வந்தது. இதுவும் இரும்பாலானதே.
இதைய் நேபாள மகாராஜ ஒருவர் நிர்மாணித்ததாகக் கூறுகிறார்கள். அதாற்குச் செப்புக்கவசம் போட்டிருக்கிறார்கள். அத்தகட்டில் பிராசீனமான லிபியில் ஏதோ எழுதப்பட்டிருக்கிறது. சூலத்தின் அடியில் ஸ்ரீசக்ரமும் ஒரு பாணலிங்கமும் இருக்கின்றன.
சிவனையும் சக்தியையும் தரிசித்துக் கொண்டு வெளியே வந்தோம். ஆலயத்திற்குக் கிழக்குப்ப்புறம் பைரவனுக்கு ஒரு சிறு கோயில் இருக்கிறது. கோயில் பூட்டப்பட்டிருந்ததால் எட்டிப் பார்த்தோம். அந்த மூர்த்தி அர்த்தபிம்பமாக இருப்பதைக் கண்டோம்.
அக்கோயிலின் எதிர்ப்புறம் சற்றுத் தொலைவில் அன்னப்பூரணிக்கு ஒரு கோயிலும், அருகில் பரசுராமனுக்கு ஒரு கோயிலும் இருக்கின்றன.
இக்கோயில்களெல்லாம் இருப்பது ஊருக்குக் கிழக்குத் திசையில். அங்கிருந்து புறப்பட்டு டாக்சி மேற்கே இரண்டு மூன்று சந்துகளில் நுழைந்து ஓர் ஓரமாக நின்றது.
“இதோ இப்படிப் போங்கள்” என்று ஒரு குறுகலான பாதையைக் காட்டினார் புஷ்க்கர். நாங்கள் இறங்கிச் சென்றோம்.
அது மணிகர்ணிக ஸ்நான கட்டத்திற்குச் செல்லும் வழி. மகரசங்கராந்தியின் போது, அந்த இடத்தில் ஜன நெரிசல் தாங்க முடியாதாம். அப்போது ஊரில் ஏழுநாட்கள் திருவிழா நட்ககுமாம். எங்கிருந்தெல்லாமோ மக்கள் பெருங்கூட்டமாக வருவார்களாம். பெரிய பெரிய சந்தைகள் நடைபெறுமாம். வியாபாரம் கொழிக்குமாம். உத்தரகாசி அமர்க்களப்படுமாம்.
வாராணசியிலுள்ல ஸ்நான கட்டத்திற்கு ஈடான மகிமையை இது பெற்றிருப்பதாகக் கூறுகிறார்கள்.
இங்கு பாகீரதி இரு கிளைகளாகப் பிரிந்து செல்கிறாள். நடுவில் ஒரு திட்டுப் போல் இருக்கிறது. பெரும் வெள்ளம் வரும் பொது திட்டு மறைந்து, எல்லாம் ஒன்றாகி விடும் போலிருக்கிறது.
உத்தரகாசியிலிருந்து மாலை நாலரை மணிக்குப் புறப்பட்டு மாலை சுமார் ஆறு மணிக்கு தராசு வந்து சேர்ந்தோம்.
தராசுவிலிருந்து சற்றுத் தொலைவு சென்று வலப்புறம் திரும்பினால், நரேந்திர நகர் வழியாக ரிஷிகேசத்திற்குச் செல்லலாம். நேரே சென்றால், டெஹ்ரி வழியாக ஸ்ரீநகருக்கும், ருத்ரபிரயாகைக்கும் செல்லலாம்.
இரவு ஏழரை மனிக்கு டெஹ்ரி வந்து சேர்ந்தோம். நெரிசலும் நாகரீக வளர்ச்சியும் மிகுந்த ஊர். இமாலயப் பகுதியிலிருக்கிறோம் என்பதே மறந்து விடுகிறது. திடீரென்று சமவெளிக்கு வந்து விட்டது போன்ற ஒரு பிரமை ஏற்படுகிறது. இரவு ஒன்பதரை மணிக்கு ஸ்ரீநகரை அடைந்து அங்கு தங்கினோம்.
அதிகாலையில் எழுந்து ருத்ரபிரயாகைக்குச் சென்றோம். ருத்ரபிரயாகையிலிருந்து அலகநந்தாவின் கரையின் மீது சென்றால் பத்ரிநாத்தை அடையலாம். மந்தாகினியின் கரை மீது சென்றால் கேதார்நாத்தை அடையலாம். ருத்ரபிரயாகையிலிருந்து கேதார்நாத் 48 மைல்கள்தான். ஆனால், முதல் நாள் எட்டரை மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் பத்து மணிக்குத்தான் கேதார்நாத்தை அடையமுடிந்தது.
முன்பெல்லாம் ருத்ரபிரயாகை வரையில்தான் பஸ் போகுமாம். அங்கிருந்து கேதார்நாத்திற்கு நடையாகத்தான் செல்ல வேண்டும். அடுத்து, பதினோரு மைலில் உள்ல அகஸ்திய முனி என்ற இடம் வரையில் பஸ் பாதை அமைக்கப்பட்டது. ;பின்னர் படிப்படியாக விரிவாக்கப்பட்டு தற்போது கேதார்நாத்திலிருந்து பன்னிரண்டாவது மைல் வரையில் “ஸோன் பிரயாகை” வரையில் பஸ்ஸும், காரும் செல்கிறது. அங்கிருந்து நடையாகவோ, மட்டக் குதிரையிலோ, கண்டியிலோ, தண்டியிலோதான் கேதாருக்குச் செல்லலாம்.
ருத்ரபிரயாகையிலிருந்து கேதார்நாத் செல்லும் பாதை, பந்த்ரிநாத் பாதையைப் போல் அத்தனை சீரானதாக இல்லை. அது ராணுவத்தினர் போட்டிருக்கும் பாதை. இது பி.டபிள்யூ,டி. இலாகாவினர் போட்டிருக்கும் பாதை. வேறு எப்படியிருக்கும்?
காலை எட்டரை மணிக்கு ருத்ர பிரயாகையிலிருந்து புறப்பட்டு, முக்கால் மணிக்கெல்லாம் பதினோராவது மைலிலிருக்கும் அகஸ்திய முனி என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அகிருந்து ஒரு பர்லாங் சென்றால் கடை வீதி, அதனருகிலேயே கோயில் இருக்கிறது.