அதிகாலை ஆறரை, ஏழு மணி இருக்கும். பத்ரிநாத்தில் ஓர் அற்புதமான காட்சியைக் கண்டேன். என் வாழ்நாளில் இதுவரை பார்த்திராத ஓர் அரிய காட்சி அது. வாழ்க்கை முழுவதும் மரக்க முடியாத மகோன்னதக் காட்சி பத்ரி ஆலயத்திற்குப் பின்னால் இருக்கும் நாராயண மலைக்குப் பின்புரம் ஒரு மலைச்சிகரம் தெரிந்தது. அது வெள்ளியை உருக்கி வார்த்தது போல் தோற்றமளித்தது. சூறிய ஒளியில் அது “பளிச் பளிச்”சென்று மின்னிய போது கண் கூசியது. சற்றைக்கெல்லாம் மேகக்கூட்டம் வந்து அதை மறைத்தது. அது விலகியதும் மீண்டும் அச்சிகர்ம சூரியனைப் போல் பிரகாசித்தது.
அது நீலகண்ட பர்வதம். 21,600 அடி உயரம். பத்ரிநாத்தைவிட இரு மடங்கு உயரமானது. இமயமலைச் சிகரங்களிலேயே இது மிகவும் அபாயம் மிக்கதாகும். மிக செங்குத்தான ஏற்றம். மலைச்சரிவுகளும் அதிகம்.
வருடம் முழுவதும் அங்கு பனி உறைவதால் அது ஐஸ் சிகரமாகவே இருக்கிறது. வெண்ணீறணிந்த சிவபெருமானாகவே நினைத்து நாங்கள் கன்னத்தில் போட்டுக் கொண்டோம். அழ்குதானே ஆனந்தம். ஆனந்தம்தானே ஆண்டவன்!
பத்ரிநாத்தின் சிறப்புகளில் ஒன்று தப்த குண்டம் என்ற சுடுநீர் குண்டம். இயற்கையின்புரியாத புதிர்களில் இதுவும் ஒன்று. ஐஸ் நதியாக அலகநந்தா ஓடுகிறது. பக்கத்திலேயே கொதிக்கும் வெந்நீர் ஊற்றும் இருக்கிறது. பூகர்ப்ப விஞ்ஞானிகள் எத்தனையோ விளக்கங்கள் தருகிறார்கள். விளக்கங்கள் தந்துவிடுவதால்யே இயற்கையின் மகிமை குறைந்து விடுமா? தங்கள் அறிவுக்குப் புலப்படாத இயற்கை அதிசயங்கள் ஆண்டவனின் செயலாகக் கருதிப்போற்றி வணணங்குவதில் தவறென்ன? எல்லாவற்றையும் அறிந்து விட்ட தாக இருமாந்திருக்கும் விஞ்ஞானி கூடத்தான் சில சமயம் மூக்கில் விரலை வைக்கிறார்? தலையை சொறிகிறார். நம்மையும் மீறிய சக்தியொன்று இருக்கிறது என்று அரைமனத்தோடாவது ஒப்புக் கொள்கிறார்.
சுடு நீரோடு அலகநந்தாவின் நீரைக்கலந்து ஸ்நானம் செய்வதுதான் மிக விசேஷமாம். அது விசேஷமோ இல்லையோ, அப்படிக் கலந்து குளித்தால் உடலுக்கு இதமாக இருக்கிறது. தப்த குண்டத்தில் கையையோ, காலையோ வைத்துவிட்டால் கொப்புளித்து விடும் போலிருக்கிறது. அது அத்தனை சூடு. பயத்தால், பயந்து கொண்டிருக்க வேண்டியதுதான். ஸ்நானம் செய்யவே முடியாது. “டபக்”கென்று அதில் குதித்து விட வேண்டும். இடுப்பளவு ஆழம்தான். ஒருகண நேரம் நம்மால் சூடு தாங்கமுடியாது. அதைப் பொறுத்துக் கொண்டுவிட்டால், பிறகு அந்நீரிலிருந்து எழுந்து வரவெ மனம் வருவதில்லை. பரம சுகமாயிருக்கிறது.
மூல குண்டத்தைத் தவிர இரண்டு மூன்று சிறு குண்டங்களும் இருக்கின்றன. பெண்மணிகளுக்கென்று மறைப்புக்களுடன் ஒரு தொட்டியும் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் ஒரிஜினல் குண்டத்திலிருந்து நீர் விடப்படுகிறது. கடைசியில் எல்லா நீரும் அலகநந்தாவுடன் கலந்து விடுகிறது.
நான் வீம்புக்காக அலகநந்தாவிலும் குளித்தேன். பத்ரிநாத்தில் அலகநந்தா ஐஸ் ரயிலாக, எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஓடுகிறது. நீர் நம் மேலே படும்போது கத்தியால் வெட்டுவது போலிருக்கிறது. காக்காய்க் குளிப்புதான். அதாற்கு மேல் ஆசைப்படுவது அறிவீனம்.
தப்த குண்டத்தினருகில் நின்று கொண்டிருந்தால் நன்றாகப் பொழுது போய்விடும். எல்லோரும் சமம் என்ற சமதர்ம தத்துவத்தை அங்கு நேரில் காணலாம். ஏழையாவது, பணக்காரனாவது, பெரிய மனிதனாவது, சிறிய மனிதனாவது, முற்போக்காவது, பிற்போக்காவது, துறவியாவது, சம்சாரியாவது, எல்ளோரும் அங்கே ஒன்றுதான்.
எல்ளோரும் ஸ்நானம் செய்து விட்டு, நாராயணனின் திருநாமம் நாவில் துலங்க, படிகள் ஏறிச்சென்றூ, வலப்புறமுள்ள ஆதிகேதாரேசுவரரையும், இடப்புறமுள்ள ஸ்ரீ ஆதிசங்கரரையும் தரிசித்துக் கொண்டு பத்ரிநாராயணனின் தரிசனத்திற்குச் செல்கிறார்கள்.
பத்ரிநாத்தில் பிரதம அர்ச்சகருக்குத் தரப்படும் மரியாதை மற்றோர் அதிசயம். “ராவல்ஜி” என்று அழைக்கப்படும் பிரதம பூசாரி, பூஜைக்குச் செல்லும் போதும், பூஜை முடிந்து விடுதிக்குத் திரும்பும் போதும், வெள்ளித்தடி ஏந்திச் செல்லும் பாராக்காரர் முன்னே செல்ல, மரியாதையுடன் அழைத்துச் செல்லப்படுகிறார். அந்தக் காட்சியைக் காண்பவர்களுக்கு, மனிதகுலத்தின் பிரதிநிதியாக ஆறு மாதம் ஸ்ரீ நாராயணரைப் பூஜை செய்ய உரிமை பெற்றிருப்பவரின் மீது ஒரு தனி மரியாதை ஏற்படுவது உறுதி.
செப்டம்பர் 24-ம் தேதி. திங்கட்கிழமை காலை ஒன்பது மணிக்கு மேல், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பத்ரிநாத் எல்லைக்குள் காலடி எடுத்து வைத்தார். அப்போது அந்தப் பள்ளத்தாக்கு இளம்வெய்யிலில் நீராடிக் கொண்டிருந்தது. குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. வேத கோஷம் முழங்க, மங்கள வாத்தியங்கள் ஒலிக்க, பூர்ணகும்ப, ஆலய மரியாதைகளுடன் சுவாமிகள் வரவேற்கப்பட்டார்.
மகரிஷிகளும், மாமனிதர்களும் நடமாடிய பத்ரிகாசிரமத்தில், ஸ்ரீ ஆதிசங்கரரின் திருநாமத்துடன் தொடர்பு கொண்டு, நம் ஆன்மீக வரலாற்றுடன் பிணைக்கப்பட்டு,த் என் கேரளத்தை வடக்கு எல்லையுடன் இணைத்து, பாரதத்தை ஒருமைப்படுத்தியுள்ள மனிதத் தவத்தில், ஸ்ரீ ஆதிசங்கர பகவானின் வழித்தோன்றல் எழுந்தருளிய காட்சியைக் கண்டவர்கள் பெரும்பேறு பெற்றவர்களாவார்கள்.
ஸ்ரீமடம் முகாமிட்டிருந்த விடுதியில் அனைவருக்கும் தரிசனம் தந்தருளிய பின்னர், ஸ்ரீ ஜயேந்திரர் அவசர அவசரமாகப் பத்ரிநாராயணரின் தரிசனத்திற்காகப் புறப்பட்டார்.
அலகநந்தாவின் மீதுள்ள இரும்புப் பாலத்தைக் கடந்து, தப்தகுண்டத்திற்கு வந்து, முறையாக சங்கல்ப ஸ்நானம் செய்து, மடி உடுத்திக் கொண்டு, கௌரி காளை முழங்க, ஸ்ரீ ஆதிகேதாரேசுவரரையும், ஸ்ரீ ஆதிசங்கரரையும் தரிசித்துக் கொண்டு, ஸ்ரீ பத்ரிநாராயணரின் ஆலயத்திற்குச் சென்றார்.
அர்த்த மண்டபத்தில் நின்று, தவக்கோலத்தில் அமர்ந்திருக்கும் ஸ்ரீ நாராயணப் பெருமானின் மெய்யுருவில் மனம் லயித்து, தியானத்தில் ஆழ்ந்து, உள்ளம் ஒன்றிவிட்ட நிலையில், ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தம்மை மறந்து, கருவறை வாயிலில் அசையாமல் நின்றிருந்த திருக்கோலம், அனைவரது உள்ளத்திலும் பக்தியுணர்வைத் தூண்டுவதாகவே அமைந்திருந்தது.
அன்று காலை நாங்கல் பிரும்ம கபாலம் என்ற இடத்தில், மறைந்த எங்கள் மூதாதையர்களுக்கும், பிரிந்து விட்ட உறவினர்களுக்கும், இழந்து விட்ட உயிருக்குயிரான தோழர்களுக்கும் நினைவாஞ்சலி செலுத்தினோம். நம் பாரதத்திலேயே பிண்ட தானம் செய்து, திதி கொடுப்பதற்கு இதைவிட சிறந்த இடம் கிடையாது என் கிறார்கள. நாம் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்கள் எல்லாம் இவ்வ்விடத்தில் துடைக்கப்பட்டு விடுகின்றனவாம்.
இந்த இடம் பத்ரிநாத் ஆலயத்திற்கு வடபுறம் சுமார் இருநூறு அடி தொலைவில் இருக்கிறது. மேடு பள்ளங்கள் நிறைந்த ஒரு பெரிய பாறையைத்தான் பிரும்ம கபாலம் என் கிறார்கள. அதை அணைத்துக் கொண்டுதான் அலகநந்தா ஓடுகிறது.
கோபாவேசத்தில் சிவபெருமான் ஒரு சமயம் பிரும்மதேவனுடைய ஐந்தாவது தலையைக் கொய்தார். ஆனால், அந்தக் கபாலம் அவருடைய கையில் நன்றாக ஒட்டிக் கொண்டு விட்டது. எத்தனை உதறினாலும் கீழே விழவில்லை. உலகம் முழுவதும் சுற்றித் திரிந்துவிட்டு, பத்ரிநாத்துக்கு வந்து, நாராயணரியக் குறித்து பிரார்த்தித்தார். இக்கட்டான நிலையிலிருந்த தம்மை காத்தருளும்படி மன்றாடினார். ஸ்ரீ நாராயணனின் கருணை அவர் மீது விழுந்தது. அடுத்த கணம் பிரும்மாவின் சிரம் அவர் கையை விட்டு நழுவிக் கீழே விழுந்தது.
பிரும்ம கபாலத்தைக் குறித்து மற்றோர் கதையும் கூறப்படுவது உண்டு. மகாவிஷ்ணு திருப்பாற்கடலில் யோக நித்திரையில் ஆழ்ந்திருந்த சமயம். இரண்டு அசுரர்கள் வேதங்களைக் காத்துக் கொண்டிருக்கும் பிரும்மதேவனைத் துன்புறுத்தினார்கள். அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. யோகநித்திரையை விடுத்து, தம் உதவிக்கும் வரும்படி திருமாலைப் பிரார்த்தித்தார் அவர். ஸ்ரீ நாராயண மூர்த்தியும் அவ்விதமே செய்தார். வினை நீங்கிப் பிரும்ம தேவன் இந்த இடத்தில் இருந்து கொண்டு, மீண்டும் உலகை சிருஷ்டித்தார்.
பத்நாத்துக்கு வருபவர்கள் மகா சங்கல்பம் செய்து, பிரும்ம குண்டத்தில் ஸ்நான செய்து விட்டு, பிரும்ம கபாலத்தில் பிண்டதானம் செய்வதைக் கிடைத்தற்கரிய வாய்ப்பாகக் கருதுகிறார்கள். பத்ரிநாராயணனுக்கு நைவேத்தியம் செய்யப்படும் சாதத்தை விலை கொடுத்து வாங்கி வந்துதான், இங்கு பிண்டங்கள் வைக்க வேண்டும். பித்ரு பட்சத்தில் பிண்டதானம் செய்வது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
பிரும்ம கபாலத்தில் பிண்டம் அளிப்பது இதர இடங்களில் அளிப்பதை விட ஆயிரம் மடங்கு பலனுள்ளதாகக் கருதப்படுகிறது. நாம் பத்ரிக்கு வருகிறோம் என்று தெரிந்தது, நம் முன்னோர்களின் ஆவிகள் அங்கு முன்னதாகவே வந்து, நம் வருகைக்காகவும், நாம் அளிக்கபோகும் பிண்டங்களுக்காகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்குமாம்! குழந்தைச் செல்வாம் இல்லாதவர்கள் ஆத்ம பிண்டம் போட்டுக் கொள்ளும் ஒரே இடம் இதுதான் என்றும் கூறுகிறார்கள்.
அன்று இரவு, பத்ரிநாராயணரைப் பக்திச் சிரத்தையுடன அராதித்து வரும் அர்ச்சகர் ராவல் என்ற கேரள நம்பூதிரி பிரும்மசாரியை நான வரது இல்லத்தில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன்.
அப்போது, ஆலயத்தில் அன்றாடம் நடைபெறும் ஆராதனை முறைகளைப் பற்றியும் அங்கு நடைபெறும் திருவிழாக்களைப் பற்றியும் நவம்பர் மாதத்தில் ஆலயத்தை மூடும் சடங்குகளைப் பற்றியும், மே மாதத்தில் தரிசனத்திற்காக மீண்டும் திறக்கப்படும் வைபவத்தைப் பற்றியும் விவரமாகத் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
ஸ்ரீ பத்ரிநாராயணரைத் தரிசிக்க வரும் அனைவரும் வெற்றுமளை மறந்து, இப்புண்ணிய பாரத மண்ணிற்குரிய மைந்தர்களாகவே தங்களைக் கருதுகிறார்கள் என்பதில் நாம் பெருமிதம் கொள்ளலாம். திருப்பதியைப் போன்றே இங்கும் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களை, பல மொழி பேசுபவர்களைக் காண்கின்றோம். வாழ்க்கையின் பல்வேறு நிலையிலுள்ளவர்களையும் அங்கு சந்திக்க முடிகிறது. வளம் கொழிக்கும் செல்வந்தர்கள் முதல், பஞ்சைப் பராரிகள் வரை அத்திருச்சந்நிதியில் பார்க்க முடிகிறது. நாகரீக மேன் மக்கள் முதல், மலைக்காட்டுப் பாமர மக்கள் வரை ஆலயத்தில் நடமாடுகிறார்கள். இந்துக்கள் மட்டுமா வருகிறார்கள்? பௌத்தர்களும், ஜைனர்களும் கூட வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.
உத்தரகண்டம் என்று அழைக்கப்படும் இமாலயக் கடுவால் பகுதியில், பத்தாயிர்ம அடி உயரத்தில் அமையப் பெற்றிருக்கும் இந்த உன்னதத் தலம், சரித்திர புராண காலங்களுக்கெல்லாம் முன்பிருந்தே புகழடைந்திருக்கிறது. பத்ரிகாசிரமத்தை, “உலகிலுள்ள புனிதத் தலங்களுள் முதன்மையானது” என்று மகாபாரதம் வருணிக்கிறது.
திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ல ஸ்ரீ மகாவிஷ்ணு நாராயண ரிஷியாகவும், நர ரிஷியாகவும் திருவுருக் கொண்டு, இத்தலத்திற்கு வந்து தவமிருந்தாராம். இவர்களிருவரும் பிரும்மாவிந்திருக்குமாரனான தர்மராஜனுக்கும், தட்சப் பிரஜாபதியின் திருக்குமாரத்தியான மூர்த்திதேவிக்கும் மைந்தர்களாகப் பிறந்தார்களாம்.
பகவான் மனிதனுக்கு நாராயணப் பெரு மந்திரத்தை உபதேசித்தருளவும், வேதங்கள் என்ற அரும் செல்வத்தை வாரி வழங்கவும், தம்மையும் நாராயணனாகவும், நரனாகவும் இரண்டாகப் பிரித்துக் கொண்டார். பரமாத்மா-ஜீவாத்மா தத்துவத்தை விளக்குவதாகவே இத்திரு அவதாரங்கல் அமைந்திருக்கின்றன.
ஜீவாத்மா, தன்னைப் பரமாதாவினின்றும் வேறில்லை என்று உணர்ந்து மூலப்பொருளுடன் ஐக்கியப்படுத்திக் கொள்ளும் பாவத்தை “ஞானம்” என்றும், அப்ப்ரு நிலையை “ஞான நிலை” என்றும் கூறுவார்கள். பத்ரிநாராயணர் இந்த ஆத்ம ஞானத்தைப் போதிப்பதாலேயே, பத்ரிகாசிரமம், “ஞானபூமி”யாகக் கருதப்படுகிறது.
ஸ்ரீ நாராயணப் பெருமான் கடுமையான தவத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்ட மகாலட்சுமி, பத்ரி மரமாக (இலந்தை மரம்) மாறி அவருக்குப் பாதுகாப்பாக நின்றாளாம். அதனால், அந்த ஆசிரமத்திற்கு “பத்ரிகாசிரமம்” என்ற பெயர் ஏற்பட்டதாம். ஒரு காலத்தில் இப்பகுதி இலந்தைக் காடாக இருந்ததால் இந்தப் பெயர் ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.
உலக நலனுக்காகவே தவயோகத்தில் ஆழ்ந்திருக்கும் இவ்விரு ரிஷிகளையும், தேவரிஷியான நாரதர் காணவந்த கதை மகாபாரத்தில் சாந்தி பர்வத்தில், நாராயணியப் பகுதியில் விவரிக்கப்பட்டு உள்ளது.
நாரதர், நர நாராயனர்களைப் பார்த்து, “நீங்கள் யார்? எதார்காக இத்தனை கடுமையானதொரு தவத்தில் ஆழ்ந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டாராம். அதற்கு அவர்கள் நாரதரை திருப்பாற்கடலிலுள்ல சுவேத தீபத்திற்குச் செல்லும்படி கூறினார்களாம்.அ வ்வாறே நாரதர் திருப்பார்கடலுக்குச் சென்று, பள்ளி கொண்ட பெருமானைத் தரிசித்தார். அப்போது மகாவிஷ்னு, நர நாராயணர்கள் தம்முடைய அம்சமே என்று கூறினார். அதைக் கேட்ட நாரதர் புனிதராகி, பத்ரிகாசிரமத்திற்குத் திரும்பி அவர்கள் அருகிலேயே அநேக ஆண்டுகள் தங்கி, தியானத்தில் ஆழ்ந்திருந்தாராம்.
இன்றும், நாரதமுனி, நர நாராயணர்களுக்குப் பூஜை செய்து வருவதாகவே நம்பப்படுகிறது. பத்ரி நாராயணருக்கு ஆறு மாதம் மனித பூஜையும், ஆறு மாதம் தேவ பூஜையும் நடைபெறுகிறதாம். ஆலயம் மூடப்பட்டிருக்கும் ஆறு மாதங்களும், தேவர்களின் சார்பில் நாரதர் பூஜை செய்கிறாராம். அதன் அடையாளமாகவே கருவறையில் நாரதரின் விக்கிரகம் ஒன்றும் வியக்கப்பட்டிருக்கிறது.நாரதர் அங்கு தவம் இருந்ததன் அடையாளமாக ஆலயத்திற்கு நேர் கீழே அலகநந்தாவின் கரையில் “நாரத சிலா” என்ற பாறிய ஒன்றும் இருக்கிறது. அதை அடுத்துள்ள நாரத குண்டத்திலிருந்துதான் ஸ்ரீ ஆதிசங்கர பகவான், பத்ரிநாராயணரின் சாளக்கிராமச் சிலையைக் கண்டெடுத்து, தப்த குண்டத்தின் அருகிலுள்ல “கருட சிலா”வுக்கு அருகில் ஆலயம் அமைத்தாராம். அது கால வெள்ளத்தில் கரைந்து போய், தற்போது உள்ள இடத்தில் அக்கோயில் மாற்றப்பட்டதாம். அங்கு கருடபகவாந்தவம் இருந்ததற்கு அடையாளமாக, “கருடசிலா” வைக் காட்டுகிறார்கள். இந்தப் பாறைக்குப் பின்புறம் ஸ்ரீ சைதன்ய மகாப்பிரபுக்கு ஒரு சிறு கோயில் எழுப்பட்டிருக்கிறது.