கண் விழித்த போது மதியம் மணி இரண்டரையிருக்கும்.தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த பாப்ஜியையும், சுந்தரத்தையும் எழுப்பி உட்கார வைத்தேன்.எங்களுக்கு திடீரென்று ஒரு கவலை வந்து விட்டது.
“இந்த இடத்தில் இரவில் எப்படிப் பொழுதைக் கழிப்பது?”
“அதற்காகத்தான் ஆண்டவனாப் பார்த்து இங்கே நிறைய பேரை அனுப்பி வச்சிருக்கார்.வா, அவங்ககிட்டே போய் பேச்சுக் கொடுக்கலாம்” என்று பாப்ஜி ஐடியா கொடுக்க, நாங்கள் மண்டபத்தை விட்டு வெளியே வந்தோம்.அங்கு தர்மலிங்கம், பாண்டு, தொப்புளான், தாத்தா எல்லோரும் சிறு மகாநாடு “கூட்டி” பேசிக் கொண்டிருந்தார்கள்.எங்களைப் பார்த்ததும் பேச்சை நிறுத்தி விட்டு, “என்ன, நல்லா தூங்கினீங்களா?பாவம், ரொம்ப களைச்சுட்டீங்க” என்றார் தர்மலிங்கம்.
“களைப்பெல்லாம் பறந்து போச்சு” என்றேன் நான்.
“கால்லே அடிபட்டுதே, அது எப்படியிருக்குங்க?” என்று கேட்டார் பாண்டு.
“வலியே தெரியலே” என்றேன்.
“நீங்க வேணா பாருங்க. நாளைக்கே காயம் ஆ றிடும். இந்த மலையிலே இருக்கிற மூலிகைகளோட விசேஷங்க அது.இந்தக் காத்து பட்டாலே எந்த வியாதியும் குணமாயிரும்.எந்த ரணமும் ஆறிடும்….” என்று தர்மலிங்க்ம கூறிவிட்டு, “ஆமா!நீங்க ராத்திரி இங்கே தங்கப் போறீங்களா?” என்று சட்டென்று ஒரு கேள்விக் குண்டைத் தூக்கிப் போட்டார்.எங்களுக்குத் தூக்கி வாரிப் போட்டது.
“ஏன் அப்படிக் கேட்கிறீங்க?” ராத்திரி தங்கிப் பார்க்கணும்னு தான் முக்கியமா நாங்க வந்திருக்கோம்.நீங்க திரும்பிடணும்னு நினைக்கிறீங்களா?” என்று கேட்டேன் நான்.“அதெல்லாம் இல்லீங்க. சும்மா கேட்டேன்.நீங்க இருக்கணும்னு பிரியப்பட்டா இருக்கோம். உங்களுக்குத் துணையாகத்தானே மணியக்கார ஐயா எங்களை அனுப்பியிருக்காரு….?”
“பின்னே என்ன?நீங்க கையிலே சாப்பாடு கொண்டு வரலையா?”
“சாப்பாட்டுக்கு என்னங்க?இதோ நம்ம மனுஷாளு வந்திருக்காங்க. இவங்க நமக்கு சும்மா சோறு போடமாட்டாங்களா? நீங்க தங்கணும் நா தங்குங்க. அதைப் பத்தி என்னா…” தர்மலிங்கம் பட்டும் படாததுமாக பேசியது எங்களுக்கு ஆச்சரியமாயிருந்தது. என்ன காரணத்திற்காக அவர் பின்வாங்குகிறார் என்றே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. “நீங்களெல்லாம் போரதுன்னா போங்க. நாங்க ராத்திரி இருந்து விட்டு நாளைக்கு வர்றோம்” என்றேன் நான் பெரிய வீரனைப் போல.
“அவுரு அதுக்காக சொல்லலீங்க. உங்களை உத்தேசித்துதான் சொல்றாரு.ராத்திரி தங்கணும்னா அதுக்கெல்லாம் ஏற்பாடா வந்திருக்கணும்” என்று பாண்டு குறுக்கிட்டார்.
“இப்போ ஏற்பாட்டுக்கு என்ன குறைச்சல்?” என்று கேட்டேன் நான்.“கையிலே இருக்கிறதை ராத்திரி சாப்பிட்டுறீங்க…. காலையிலே என்ன செய்வீங்க?”
“காலையிலேதான் கீழே இறங்கிடப் போறோமே”.இதைக் கேட்டு பாண்டு சிரித்தார்.
“நாலு மணி நேரம் வெறும் வயித்துலே நடக்க முடியுங்களா?போகப் போக வெயில் வேறே கொளுத்தும்.ஏர்றது சொலபங்க. இறங்கிறபோதுதான் தள்ளாடிப் போயிடும். வயத்திலேயும் ஒண்ணும் இல்லாட்டி….”
காலையிலே ஏறி வந்த ஔபவம் நினைவில் பசுமையக் ஐருந்ததால் அப்படியொரு பங்கர நிலைமையைக் கற்பனை செய்து பார்த்த பொது வயிற்றைக் கலக்கியது.
“அது மட்டுமில்லீங்க. நீங்க விடியற் காலையிலே இறங்க முடியாது.மேலே ஒரே மேகக் கூட்டமாயிருக்கும்.வழியே தெரியாது.பாறையெல்லாம் ரொம்ப வழுக்கும்.கடப்பாறையெல்லாம் பனியிலே ஈரமாயிருக்கும். கை வச்சா வழுக்கும்…..”
உடனே கை வழுக்கி, கீழே இடறி விழுந்து மலையிலே உருண்டு போவது போல் எனக்கு ஒரு பிரமை தட்டியது!
“நீங்க இறங்கணும்னா சூரியன் வந்தப்புறம்தான் கிளம்ப முடியும்.ஏழு எட்டு மனிக்கு இறங்க ஆரம்பிச்சீங்கன்னா கீழே போறபோது பகல் பன்னிரண்டு ஒரு மணி ஆயிடும்.அந்த வெயிலைத் தாங்க முடியுமா?வயித்திலேயும் ஒண்ணும் இருக்காது.அதையும் நினைவில் வச்சிக்குங்க…. நான் சொல்றதைச் சொல்லிடணும் பாருங்க. அப்புறம் உங்க இஷ்டம்.நீங்க தங்கிட்டு வரணும்னா வாங்க” என்றார் பாண்டு.
“இப்போ நீங்க என்னதான் செய்யச் சொல்றீங்க?” என்று கேட்டேன் நான்.
“ரெண்டுலே ஒண்ணும் தீர்மானம் பண்ணிக்கங்க. கிளம்பறதுன்னா உடனே கிளம்பணும்.இப்போ மணி மூணு மணி ஆவுது.ஏழு மணிக்கெல்லாம் கீழே போயிடலாம்.இன்னும் லேட் பண்ணினா ராத்திரிலே மலை இறங்க முடியாது. ரொம்ப ஆபத்து…. சொல்றதைச் சொல்லிடணும் பாருங்க….”
நான் பாப்ஜியைப் பார்த்தேன்.
“என்ன சொல்றே?” என்று கேட்டார் அவர்.
“மூட்டையைக் கட்ட வேண்டியதுதான்” என்றேன் நான்.
பாப்ஜி பழநியைப் பார்த்தார்.
“எல்லாம் ரெடி.புறப்பட வேண்டியதுதான்” என்றார் பழநி சிரித்துக் கொண்டே.நான் பாண்டுவுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே என் முடிவை ஊகித்து விட்ட பாப்ஜி பழநியிடம் கூறி புறப்படுவதற்கான ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தார்.
வெற்றிகரமான வாபஸ்! சற்றும் எதிர்பாராத வகியயில் எங்கள் திட்டத்தில் திடீரென்று ஒரு திருப்பம் ஏற்பட்டு மலையை விட்டு நாங்கள் இறங்கத் தொடங்கினோம்.
வேகமாகவும், அவசரமாகவும் நான் இறங்கியதைக் கண்டு அத்தனை பேரும் அதிசயித்துப் போனார்கள். தண்டவாளத்தில் தவழ்ந்த போதும், கடப்பாறையிருந்த வழுக்குப் பாறையில் இறங்கிய பொதும், பல முறை மலையேறி இறங்கிப் பழக்கப்பட்டவன் போல நான் அநாயாசமாகச் சென்றதைப் பார்த்த என் தோழர்கள், எனக்கு பேய் பிசாசு ஏதாவது பிடித்து விட்டதோ என்று கூட சந்தேகப்பட்டார்களாம்! ஏறியபோது எல்லாரும் பின்னால் வந்த நான், இறங்கும் போது எல்லாருக்கும் வழிகாட்டிக் கொண்டு முன்னால் சென்ற காட்சி எனக்கே ஆச்சரியத்தைத் தந்தது.
எல்லாம் ஒரு மணி நேரம் தான்.யார் கண்ணோ பட்டு விட்டது.என் வேகம் மெள்ள மெள்ளக் குறையத் தொடங்கியது.எனக்குப் பின்னால் வந்திருந்தவர்களெல்லாம் ஒவ்வொருவராக முன்னேறி, என்னைக் கடந்து முன்னே செல்வதைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன் நான்.“அவசரப்படாதீங்க, மெள்ள வாங்க” என்று அவர்கள் சொல்லி விட்டுச் சென்றபோது என்னைக் கேலி செய்ததாகவே தோன்றியது.எனக்கு மூச்சுத் திணறுவதையும், என் கால்கள் தள்ளாடுவதையும் தர்மலிங்கம் கவனித்து விட்டார்.கைத்தடியை மீண்டும் என்னிடம் தந்தார்.அதை ஊன்றிக் கொண்டு நடக்க்த் தொடங்கினேன்.ஓர் அடி எடுத்து வைப்பது கூட பிரும்மப் பிரயத்தனமாகி விட்டது.
நடப்பதாக நினைத்தேனே தவிர, இருந்த இடத்தை விட்டு நகரவே முடியவில்லை.எல்லாரும் என்னை விட்டு விட்டு தொலைவில் போய்க் கொண்டிருந்தார்கள்.எனக்கு ஆண்டவனும், தர்மலிங்கமும்தான் துணை.என் இடக் கையை தர்மலிங்கம் பற்றிக் கொள்ள வலக்கையிலிருக்கும் கைத்தடியின் ஆதரவோடு நான் ஆமையாக ஊர்ந்து கொண்டிருந்தேன்.
என் நிலைமையைக் கண்டு பரிதாபப்பட்டு ஒரு பாறையில் காத்திருந்த சுந்தரமும் பாப்ஜியும் எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.நாங்கள் மெள்ள நடந்து கொண்டிருந்தோம்.கண்ணுக்கெட்டிய தொலைவுவரை யாரையும் காணவில்லை.
“அவங்களெல்லாம் காணோமே, எங்கே?” என்று கேட்டேன் நான்.
“டேய் தொப்புளான், பாண்டூ” என்று கூச்சலிட்டார் தர்மலிங்கம்.
“எங்கேயிருக்கீங்க?” என்று குரல் கொடுத்த தொப்புளான், ஒரு சரிவில் ஏறி முகத்தைக் காட்டினார்.
“என்னய்யா அந்த வழியிலே போயிட்டீங்க?அது மாதிமங்கலம் வழியாச்சே….” என்று சிரித்துக் கொண்டே கேட்டார் தொப்புளான்.எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.
இருந்த இடத்திலிருந்து நாங்கள் தவறவிட்ட வழிக்குச் செல்வதேன்ரால் மீண்டும் அரைமைல் மலையேறிப் போயாக வேண்டும்.என்னால் அது முடியவே முடியது.எனக்கு அழுகையே வந்து விட்டது.
“சார், நீ ஏன் அதைரியப்படறே?நான் உன்னைத் தோள்லே தூக்கிக்கிட்டு போயிடறேன்.நீ ஏறிக் குந்து” என்றார் தர்மலிங்கம்.அவருடைய உடல் வலிமையைவிட அவரது பரந்த மனபான்மையை மிகவும் மெச்சினேன் நான்.
அதற்குள் தொப்புளான். “நீங்க மறுபடியும் ஏறிப் போக வேணாம். இப்படியே குறுக்கே நடந்து வந்துடுங்க” என்று யொசனை கூறவே, தர்மலிங்கம் எங்களை மிக ஆபத்தான குறுக்கு வழியிலெ அழைத்துச் சென்றார். புதர்களும், உலர்ந்த சருகுகளும் மண்டிக் கிடந்த அந்தப் பாதையில் எங்கே பள்ளம் இருக்கிறது, எங்கே பாறை இருக்கிறது என்று கண்டு பிடித்து, காலை மெள்ள ஊன்றி, நடுங்கிக் கொண்டெ எப்படியோ நேரான பாதையிலே போய்ச் சேர்ந்து விட்டோம்.
அங்கிருந்து பாண்டு எங்களை வேறு வழியாக அழைத்துச் சென்றார். காலையில் வந்தது சுற்று வழியென்றும், தற்போது செல்லும் பாதை நட்பபதற்கு ரொம்ப சௌகரியமாக இருக்கும் என்றும் அவர் கூறவே, தர்மலிங்கத்தை விட்டு விட்டு பாண்டுவை எங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டோம்.
“அதோ பார்த்தீங்களா.தரைக்காடு தெரியுது. அதுதான் “ஈக்லி பிட்டஸ்” தோட்டம்…. அதைத் தாண்டினா ஏரிக்கரை, அப்புறம் ரோடு, அப்புறம் வீடு…” என்று அடிக்கொரு தரம் சொல்லிக் கொண்டு, களைத்து உட்காரும்போதெல்லாம் தைரியமளித்து, ஏழு மணிக்குள் கீழே அழைத்துக் கொண்டு வந்து சேர்த்து விட்டார் அவர்.
பர்வத மலையேறி விட்டு வந்ததிலிருந்து அங்கு இரவு தங்க முடியாமல் போய் விட்டதைக் குறித்து எனக்கு சற்று வருத்தமாகத்தான் இருந்தது.ஏதோ ஒரு சக்தி என்னை அங்கே தங்க விடாமல் அழைத்து வந்து விட்டதை உணர்ந்தேன்.“ஆக்கமும், ஊக்கமும் இருந்தால் எல்லா காட்சிகளையும் காணலாம்” என்று மலையேறுவதற்கு முன்பூண்டி சாமியார் என்னைடம் கூறினார்.எனக்கிருந்த ஆக்கமும், ஊக்கமும் போத வில்லையா?பூண்டி சாமையாரிடம் அதைப் பற்றிக் கூறினால் என் ஏக்கம் ஓரளவு தணியலாம் என்ற எண்ணத்துடன் ஒரு வாரம் கழித்து அவரிடம் சென்றேன்.மலையில் நாங்கள் கண்ட காட்சிகளைக் கூறினேன்.அங்கு எடுத்த படங்களைக் காட்டினேன்.
“சர்தான்…சர்தான்” என்றபடியே எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டார், பார்த்தார்.
“இரவு மலை மேலே தங்கலாம் என்ற எண்ணத்தில்தான் போணேன்.ஆனால் தங்காமலே திரும்பி வந்து விட்டேன்.பல அற்புதக் காட்சிகளைக் காணலாம் என்று கனவு கண்டேன்.ஏனோ, நான் நினைத்தபடி நடைபெறவில்லை.அடுத்த முறை எனக்கு அந்த பாக்கியம் கிடைக்குமா?” என்று அவரிடம் கேட்டேன்.
அதைக் கேட்டு அவர் புன்னகிய புரிந்தார்.
அந்தப் புன்னகையின்பொருள் அவருக்குத்தான் தெரியும்!
பர்வத மலை மீது ஏறி ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமியைத் தரிசித்து விட்டு வந்ததிலிருந்து என்னையும் அறியாமல் அம்மலையின் மீது நான் ஒரு பாசத்தை வளர்த்துக் கொண்டு விட்டேன். அம்மலையைப் பற்றிப் புராண, சரித்திர மகிமைகளையெல்லாம் அறிந்து கொள்ள வேண்டும் என்று துடித்தேன்.என் எண்ணத்தைப் புரிந்து கொண்ட நாகேசுவர ஐயர், “இதோ பாருங்கள், நீங்கள் வழியில் போகிறவர்களிடமெல்லாம் விசாரித்துப் பயனில்லை.மாதிமங்கலத்தில் வயதானவர்கள் ஓரிருவர் இருக்கின்றனர்.அவர்களையும் கேட்டுப் பார்க்கலாம்” என்று கூறி, எங்களை கடலாடியை அடுத்த தென்மகாதேவ மங்கலம் என்ற மாதிமங்கலத்திற்கு அழைத்துச் சென்றார்.
நாகேசுவர ஐயர் யாரையோ போய்ப் பார்க்க, அவர் வேறொருவருக்கு எங்களை அறிமுகப்படுத்த, அந்த நபர், எண்பது வயதைக் கடந்த ஒரு வயோதிகரை அழைத்து வந்தார்.அவர் ஓர் ஓய்வு பெற்ற ஆசிரியர்.பெயர் முத்துகுமாரசாமி பிள்ளை.அவர் பர்வத மலையைப் பற்றிய திரிசூலகிரி புராணத்திலிருந்து சில குறிப்புக்களைக் கூறியதோடு தம்முடைய சொந்த அனுபவங்களையும் விவரித்தார்.
பர்வத மலைக்கு முன்பாகம் மாதிமங்கலத்திலும், பின்பாகம் கடலாடியிலும் இருக்கிறது.ஏழு சடைப் பிரிவுகள் கொண்ட அந்தப் பிரும்மாண்ட மலை சுமார் 5500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்திருக்கிறது.
பர்வத மலைக்கு திரிசூலம், தென்மல்லிகார்ஜுனம், ஸ்ரீசைலம், பருப்பதம், சித்தசைலம், தென் கைலாயம், நவிரம், பல்குன்ற கோட்டம் என்ற பல பெயர்கள் உண்டு.ஆந்திரத்திலுள்ள ஸ்ரீசைலத்தில் இருப்பது போலவே இங்கு சுவாமி, மல்லிகார்ஜுனர் என்ற திருநாமத்துடனும், அம்பிகை பிரமராம்பிகை என்ற பெயர்8உடனும் திகழுகிறார்கள்.அங்கு உள்ளத்வைப் போல இங்கும் லிங்காயத் வீர சைவரே பூஜை செய்கிறார்.