அப்போது ஆதித்தன் உதித்து விட்டது போல் அறையில் சட்டென்று ஓர் ஒளி படர்ந்தது. மல்லிகை மலர்ந்தது போல் நறுமணம் கமழ்ந்தது. மணிகளின் ஒலி கேட்டது. தேவ கன்னிகை போன்ற வெண் தூய ஆடை அணிந்து, அங்கங்களிலெல்லாம் வைர வைடூரியங்கள் மின்ன வதனத்தில் புன்னகை தவழ, அருள் சுரக்கும் தன் பார்வையால் அவரையே நோக்கிக் கொண்டிருந்தாள். தண்மதியின் குளுமை அவர் உடலைத் தீண்டி, நெஞ்சத்தைக் குளிர்வித்தது.
தாயே, நீ யாரம்மா? இங்கு ஏன் வந்தாய்? என்று கனிவுடன் கேட்டார் வெங்கடபட்டர். அதியக் கேட்ட அம்மடந்தையின் உதடுகள் மெள்ள அசைந்தன.
“அந்தணரே, நான்தான் கலைவானி, சொல்லுக்கு அதி தேவதை, எழுத்துக்கு அரசி, பேரறிஞர்களின் பொழுது போக்குக்கு எனை வெத வியாசர் படைத்தார். நான் ஆனந்த தீர்த்தருக்கு மிகவும் நெருங்கியவள். பிறரெல்லாம் என் புகழின் இருப்பிடமான வேதங்களைப் புறக்கணித்த போது, பூர்ண பிரக்ஞர் அவற்றைச் சீர்படுத்தினார். பிரம்மசூத்திரம் என்ற பசுவின் பாலை கரந்து ஊட்டி என்னை வளர்த்தார். பின்னர் டீக்காச்சாரியார் என்பவரின் மடியில் வளர்ந்தேன். அதற்குப் பிறகு மன்னருக்கெல்லாம் மன்னரான ஸ்ரீ வியாசராஜரின் பெராதரவு எனக்கு கிட்டியது. அவர் நியாயாம்ருத சந்திரிகா, தர்க்க தாண்டவா என்ற நூல்களைப் படைத்து நான் குடியிருக்க மாளிகை ஒன்றையும் அமைத்துக் கொடுத்தார். அழகும், இளமையும் கொண்ட தோழனைத் தேடிச் சென்ர நான் விஜயீந்திரரைச் சந்தித்தேன். அவர் என்மீது எல்லையற்ற அன்பும், பாசமும் கொண்டார். கண்ட்டகோதார் என்ர அருமையான புடவையை எனக்கு அன்பளிப்பாகத் தந்தார். நியாயமௌடிகமாலா என்ற வைர மாலையையும் எனக்கு அணிவித்து அழகு பார்த்தார்.
உங்கள் குருநாதரான சுதீந்திரர், பாகவதத்திற்கு உரை எழுதி என் பெருமையை உயர்த்தினார். “சுபத்ரா பரிணயம்” என் நெற்றிக்கோர் அணிகலனாக பிரகாசித்தது. தற்போது நான் தங்களை நாடி வந்திருக்கிறேன். அடைக்கலம் என்று அண்டி வந்தவளைத் தாங்கள் புறக்கணிக்கக் கூடாது. என் வாழ்வு மலர வெண்டுமானால் நீங்கள் சந்திரிகாவுக்கு வியாக்கியானம் எழுத வேண்டும். அது மட்டுமல்ல, தங்களது எழுத்துப் பணியால் வேதம் தழைக்க வேண்டும். வைணவ தத்துவம் ஓங்கி வளர வேண்டும். உலகில் சமயப் பற்றும், தெய்வ நம்பிக்கையும் நிலைக்க வேண்டும். மூல ராமரை ஆராதிப்பவர்களிடம் நான் சரணடைந்து விட வேண்டும் என்று வேத வியாசர் என்னைப் பணித்திருக்கிறார். உங்களை நாடி வருபவர்களெல்லாம் சம்சாரக் கடலைக் கடந்து, நற்கதி அடைய வேண்டும் என்று, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியே ஆசி வழங்கி விட்ட பிறகு, அதற்கு ஏற்ற சூழ்நிலையையும், வாழ்க்கை முறைகளையும் நீங்கள் அமைத்துக் கொள்வதைத் தவிர வேரு வழியில்லை. பெரும் கடமை உங்களை அழைக்கிறது. வருங்காலத் தலைமுறையினர் உங்கள் தியாகத்தையும், சேவையையும் நம்பியிருக்கின்றனர்.
இந்த வித்யா பீடத்தை அலங்கரிக்கப் போகும் தாங்கள் வெதாந்த சாம்ராஜ்யத்தின் தன்னிகரில்லாத சக்கரவர்த்தியாகத் திகழப் போகிறீர்கள். இது விதியின் கட்டளை. இதை மாற்ற யாருக்கும் அதிகாரம் கிடையாது. உங்களைத் தவிர எனக்கு வேறொரு புகலிட்ம இல்லை. சிறிதும் கவலைப்படாதீர்கள். உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிட்டும். எல்லாவித மங்களங்களும் உண்டாகும்” என்று கூறி கலைமகள் ஸ்ரீ வேங்கடபட்டரின் செவிகளில் சில மந்திரங்களை ஓதி விட்டுத் தன்னை மறைத்துக் கொண்டாள்.
தோற்றம் மறைந்தது. அங்கு நிலவிய பிரகாசமும் மறைந்தது. அந்த இனிமையான குரல் மட்டும் ஸ்ரீ வேங்கடபட்டரின் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தது. பேரின்ப வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த அவரிய, பேரமைதி ஒன்று ஆட்கொண்டது. மனத்தில் சஞ்சலம் இல்லை. எண்ணத்தில் சலனம் இல்லை. கலைவானி காதில் ஓதிய மந்திரம் அவரது குழப்பங்களையெல்லாம் பூரணமாகப் போக்கி விட்டது.
நடந்தவற்றையெ நினைத்து நினைத்து உருகியவர், நினைவிழந்து போனார். அந்நிலையில், ஸ்ரீ ராகவௌம், நரஹரியும், வேணுகோபாலௌம், வேத வியாசரும் அவருக்குத் தரிசனம் தந்தனர். அருளாசி வழங்கிவிட்டு மறைந்தனர். கண் விழித்தவர், முற்றும் மாறிய புது மனிதராகி விட்டார். பொழுதும் புலர்ந்தது.
கடவுளின் சித்தத்திற்கு அடி பணிந்தார் வேங்கடபட்டர். துறவறம் மெற்கொள்வது என்றும் முடிவு செய்தார். அருகில் கண்ணயர்ந்திருந்த தம் மனைவியையும், மகனையும் ஒரு முறை அன்பொழுகப் பார்த்தார். மறுகணம் வைராக்கியத்துடன் திரும்பினார்.
புது வாழ்வு மலர்ந்து, புத்தனாக வெளியே நடந்தார்.
தன் கணவரை, ஸ்ரீ சுதீந்திரர் ஒரு துறவியாக ஆக்க முயன்று கொண்டிருக்கிறார் என்பதை சரஸ்வதிபாய் முதல் நாளே அரைகுறையாக அறிந்திருந்தாள். குமுறி வந்த வேதனையை உள்ளடக்கிக் கொண்டு கணவரிடம் அதைப் பற்றி ஒரு வார்த்தையும் பேசாமல் இருந்தாள் அவள். வேங்கடபட்டரும் தன் முடிவை மனைவியிடம் கூறவில்லை. பாசவலையின் பின்னலிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு அந்தத் துயரத்தையெல்லாம் நெஞ்சுக் குழியில் புதைத்து விட்டு உள்ளத்தில் நிலவிய அமைதியை முகத்தில் பிரதிபல்லிக்கச் செய்யப் பெரும் பாடுஅட்டுக்ப் கொண்டிருந்த தன் கணவரைக் கண்டு சரஸ்வதிபாய் குழம்பினாள், கலங்கினாள். கண்ணீர் வடித்தாள். ஆனால், இறுதி வரை ஒரு வார்த்தையும் பேசவில்லை.
நீராடி விட்டு நித்திய அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு நேரே ஸ்ரீ மடத்திற்குச் சென்று சுதீந்திரரின் திருப்பாதங்களில் விழுந்து வணங்கினார் வேங்கடபட்டர்.
“குருதேவா, தங்களது ஆசியாலும், கருணையாலும், நான் ஒரு மனிதன் ஆனேன். நான் தங்களது உடைமை. எனக்கென்று இனி தனி உலகம் இல்லை. நீங்கள் அறிமுகப்படுத்தும் உலகிற்குத்தான் இனி நான் உரியவன். இது விதி விதித்த வழி. ஸ்ரீ ராகவன் காட்டிய பாதை. கலைவாணி எனக்கு வகுத்துக் கொடுத்துள்ள வாழ்க்கை. அதை உளமார ஏற்றுக் கொள்கிறேன். உவகையுடன் என்னைத் தங்களுக்கு அர்ப்பணிக்கிறேன். உத்தமரே, அடியேனை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறி அவரது பாதங்களைப் பற்றிக் கொண்டார்.
இதைக் கேட்டு சுவாமிகளின் நெஞ்சம் நெகிழ்ந்தது.
“அருமைச் சீடனே, எழுந்திரு. நீ பெரும் பேறு பெற்றாய். அழியக்கூடிய உலக சுகங்களை உதறித் தள்ளிவிட்டு, அழியாத சாம்ராஜ்யத்தின் மன்னனாகப் போகிறாய். தேவர்களும் கண்டு பொறாமைப்படும் தெய்வீகத் தியாகம் உன்னுடையது” என்று சுதீந்திரர் கூறியபோது, கண்களை மூடிக் கர்ம கூப்பி, உணர்ச்சியற்ற நெடுமரமாக நின்று கொண்டிருந்தார் ஸ்ரீ வேங்கடபட்டர்.
சரஸ்வதி பாய்க்குக் கணவர் மீது இருந்த அளவற்ற பாசத்தை சுதீந்திரர் நன்கு அறிந்திருந்ததால், தம் சீடருக்குக் கும்பகோணத்தில் தீட்சை அளிக்க விரும்பவில்லை அவர். இடையூறுகள் ஏதெனும் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சி, சீடரை அழைத்துக் கொண்டு தஞ்சாவூருக்குச் சென்றார்.
1621-ஆம் ஆண்டு, அப்போது அங்கு அரசனாக இருந்த ரகுநாத போபால், ஸ்ரீ சுதீந்திர சுவாமிகள் விரும்பியபடி சடங்குகள் நடைபெறுவதற்கு தம் அரண்மனையைத் திறந்து விட்டார். கொலு மண்டபத்தில் பெரியோர்களும், பண்டிதர்களும் குழுமியிருந்தார்கள். அவர்கள் `முன்னிலையில் ஸ்ரீ சுதீந்திர சுவாமிகள், ஸ்ரீ வேங்கடபட்டருக்குச் சந்நியாச ஆசிரமத்தை வழங்கினார். ஸ்ரீ ராகவனெ கனவில் வந்து ஆசி கூறியதால், வேங்கடபட்டருக்கு ராகவேந்திரர் என்ற ஆசிரமப் பெயரையும் சூட்டினார். அவருக்குப் பிரணவத்தை ஓதினார். அறுபத்து நான்கு கலைகளையும் போதித்தார். புனித நீரால் அபிஷேகம் செய்து கண்குளிர மனம் குளிர அவருக்கு ஆன்மீக சாம்ராஜ்யத்தின் பட்டாபிஷேகத்தையும் நடத்தி வைத்தார்.
கணவர் துறவியாகிவிட்ட செய்தியைக் கேள்வியுற்ற சரஸ்வதி பாய், புழுவெனத் துடித்தாள். வறுமையில் வாடியபோதும், அன்புக் கணவர் அருகில் இருக்கிறார் என்ற மன நிறைவில் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தவளின் தலையில் இச்செய்தி பேரிடியாக விழுந்தது. கணவரின் ஆசை முகத்தை அவள் இனி காணவே முடியாது. உயிரோடு இருந்தும் அவளைப் பொறுத்தவரை, அவர் மாண்டு விட்டார். கணவர் மரித்த பிறகு, மனைவி உயிரோடு இருக்கலாமா? என்று ஒரு கணம் சிந்தித்தாள். கூடாது, கூடாது, என்று உள் மனம் இடித்துரைத்தது. தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேரு வழியேயில்லை என்ற முடிவுக்கு வந்தாள். ஐயோ, தற்கொலையா? …… அது மாபெரும் பாவமாயிற்றே! என்று மனச்சாட்சி அறைகூவியது.
“இல்லை……இல்லை…..கணவனை விட்டு நான் பிரிந்திருக்கிறேனே அதுதான் கொடிய பாவம், தற்கொலை செய்து கொள்வது இந்த மாபாதாகச் செயலை விட்க குறைந்த பாவம்தான், என்று கதறியபடி பைத்தியம் பிடித்தவள் போல் அங்குமிங்கும் ஓடினாள். செய்வதறியாது சிந்தை கலங்கியிருந்தவள், ஒரு பாழுங்கிணற்றில் குதித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். பின்னர் பிசாசாக மாறி, கணவரின் முன்வந்து நின்று ஆசை மொழிகள் பேசினாள். அங்கலாய்த்தாள். அரற்றினாள். அவள் நிலை கண்டு மனம் இரங்கிய ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள், கையில் நீரை எடுத்து அவள் மீது தெளித்து அவருக்கு நற்கதி அளித்தார்.
அன்னை ஆர்யாம்பாள், பச்சிளம் பாலகனான சங்கரனை நீராடுவதற்காக நதிக்கு அழைத்துச் சென்றார். திரும்பும் போது, பெற்ற பிள்ளை துறவியாகி, பாரெல்லாம் போற்றும் ஞான குருவாகிவிட்ட காட்சியைக் கண்டு உள்ளம் குமுறி, கண்ணீர் மல்கித் தனியளாகி நடந்து வந்தார்.
அன்னை மகாலட்சுமி, பள்ளிச் சிறுவனான சுவாமிநாதனை கலவையில் முகாமிட்டிருந்த ஸ்ரீ மடத்திற்கு அழைத்துச் சென்றார். திரும்பும் போது துறவுக் கோலம் பூண்டுவிட்ட மைந்தனப் பார்த்து விடை கூடப் பெறமுடியாமல், நெஞ்சம் விம்மிப் புடைக்க இல்லம் சென்றார்.
உத்தம மனைவி சரஸ்வதி பாய், குடும்பத்தை வறுமையிலிருந்து காப்பாற்றும் பொருட்டு, கணவர் வேங்கடபட்டரியக் கும்பகோணத்திற்கு அழைத்துச் சென்ராள். தனக்குத் த்ரிஎயாமல் சந்நியாசியாகிவிட்ட கணவருடன் பேசும் உரிமையைக் கூட இழந்து உள்ளம் நொந்து உயிரை விட்டாள்.
விதியின் வலிமையை கண்டு வியக்கத்தான் வேண்டியிருக்கிறது. அதற்கு விளக்கங்கள் கொடுக்க முனைந்தால் வீண்கால விரயம்தான் ஆகிறது!
மனைவியைப் பறி கொடுத்த ஸ்ரீ ராகவேந்திரர் தமது கௌதம கோத்திரத்தில் பிறந்தவர்களும் அவர்களது வம்சத்தினரும் தங்கள் இல்லங்களில் நடைபெறும் சுப காரியங்களின் போது மனைவியின் பெயரால் வஸ்திர தானங்கள் செய்து ஆராதிக்க வேண்டும் என்ரு பணித்தார். அந்தப் புண்ணியத்தின் பலனாக சரஸ்வதிபாய் தற்கொலைப் பாவ்ம நீங்கிப் புண்ணியலோகம் சென்றாள்.
கும்பகோணம் ஸ்ரீ விஜயீந்திரர் மடத்தில் தங்கிவிட்ட ஸ்ரீ ராகவேந்திரரின் புகழ் நாளுக்கு நாள் ஓங்க் உயர்ந்து கொண்டே வந்தது. அவரது கண்களில் வீசிய அருள் ஒளி அனைவரது உள்ளங்களையும் கவர்ந்தது. தங்க மெனி தெய்வீக எழிலோடு பிரகாசித்தது. அவரது நீண்ட கரங்கள் , ஸ்ரீ ராமனை நினைவுபடுத்தின. காதுகளை துளசி அலங்கரித்து, நெற்றியில் அலங்கார அட்சதை துலங்கியது. பரந்த மார்பு, கருணையுள்ளத்திற்கும், உறுதியான மனத்திற்கும் கட்டிய்ம கூறியது. அவரது நாவில், கலைமகள் நடனமாடினாள். அப்புனிதரைத் தரிசித்தவர்களெல்லாம் துயர் நீங்கித் துன்பக் கடலைக் கடந்து தூய்மை பெற்றனர்.
ஸ்ரீ சுதீந்திர சுவாமிகள் தமது சீடரின் மகிமையைக் கண்டு மகிழ்ந்து விட்டு, துங்கபத்திரா நதி தீரத்திலுள்ள ஹம்பியருகே சென்று பிருந்தாவனப் பிரவேசம் செய்தார். முதலில் சந்நியாசம் பெற்று யாத்திரை செய்து கொண்டிருந்த ஸ்ரீ யாதவேந்திர குருவின் பிரிவையும், ஸ்ரீ ராகவேந்திரர் துறவறத்தையும் கேள்வியுற்றுக் கும்பகோணம் வந்தார். ஸ்ரீ ராகவேந்திரர் ஸ்ரீ மடத்தை அவரிடம் ஒப்படைக்க விரும்பினார். ஆனால் ஸ்ரீ மடத்தின் சீடர்கள் அதை ஏற்க வில்லை. ஸ்ரீ யாதவேந்திரர் தம்மிடமிருந்த விக்ரகங்களையும், ஸ்ரீ ராகவேந்திரரிடமே கொடுத்து விட்டுக் கிருஷ்ணா நதி தீரம் சென்ரு கடும் தவம் புரிந்து தமது உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.