இவ்வாறு பல அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டே சஞ்சாரம் செய்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள், பண்டரிபுரம் சென்று, பண்டரிநாதனை தரிசித்துக் கொண்டு ரெய்ச்சூருக்கு அருகேயுள்ள ஆதவானிக்குச் சென்றார். அந்தப் பகுதியிலுள்ள ஒரு குக்கிராமத்தில் வெங்கண்ணா என்ர ஒரு ஏழை அந்தணர் மாடுகளை மேயவிட்டு விட்டு அரச மரத்தடியில் இருந்த மேடையில் அமர்ந்திருந்தார். படிப்பு வாசனையற்ற அவர் எதற்கும் தகுயற்றவர் என்று குடும்பத்தாரால் ஒதுக்கப்பட்டிருந்தார்.
தன் கிராமத்தின் வழியெ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் செல்வதைக் கண்டதும், வெங்கண்ணா எழுந்து வந்து அவரை வணங்கி விட்டு, பய பக்தியுடன் நின்றார். சுவாமிகள் அவருகு ஆசி கூறி மந்திராட்சதை கொடுத்தார். பின்னர் தன் பரிதாப நிலையை எடுத்துரைத்தார் வெங்கண்ணா. ஸ்ரீ ராகவெந்திரர் அவரைக் கருணையோட் ஓக்கி ஆறுதல் மொழி கூறினார்.
வெங்கண்ணா, நீ கவலைப்படாதெ. உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. உனக்கு இடுக்கண் வரும்போது என்னை நினைத்துக் கொள். அச்சமயத்தில் நான் உனக்கு துணை நின்று எல்லா உதவிகளும் செய்கிறேன், என்று கனிவோடு கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தார் சுவாமிகள்.
பின்னர் அவர், ஸ்ரீ சைல தலத்திற்குச் சென்ரு மல்லிகார்ஜுனரையும், பிரமராம்பாலையும் தரிசித்து விட்டு, குல தெய்வமான ஸ்ரீ வெங்கடாசலபதியைத் தரிசிக்க திருப்பதிக்குச் சென்றார். அங்கிருந்து காஞ்சீபுரம் வந்து ஸ்ரீ வரதராஜரியயும், காமாட்சி தெவியையும் வணங்கி விட்டு, திருவண்ணாமலைக்கு சென்ரார். அங்கிருந்து திருக்கோயிலூர், விருத்தாசலம் முதலிய இடங்களுக்குச் சென்று ஸ்ரீ முஷ்ணம் என்ற கிராமத்தை அடைந்தார்.
அத்தலத்தில் கோயில் கொண்டிருக்கும் பூவராகப் ப்ருமாள், சுயம்பு மூர்த்தி, ஸ்ரீமத்வர், ஸ்ரீமுஷ்ணத்திற்கு வந்து வராகப் பெருமாளை வழிபட்டிருக்கிறார். அவ்வூருக்கு அருகில் தமது தண்டத்தால் ஒரு திருக்குளத்தையும், தோற்றுவித்திருக்கிறார். தண்ட தீர்த்தம் என்று அழைக்கப்படும் அந்தத் தீர்த்தம் இன்றும் மிகச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஸ்ரீமத்வருக்குப் பின் தோன்றிய மத மதப் பெரியார்கள் பலர் இந்த வைணவத் தலத்திற்கு தீர்த்த யாத்திரை வந்திருக்கிறார்கள்.
தமது பூர்வாசாரியர்களை பின்பர்றி ஸ்ரீ ராகவேந்திரரும், ஸ்ரீ முஷ்ணத்திற்கு வந்து பூவராகப் பெருமானை தரிசித்ததுட்ன, புஷ்கரணியில் ஸ்நானம் செய்து கரையில் இருக்கும் ஸ்ரீ சுமதீந்திர மடத்தில் தங்கிப் பூஜைகள் செய்தார். அதற்குப் பிறகு, சில காலம் சஞ்சாரம் செய்து விட்டு மீண்டும் கும்பகோணத்திற்கே வந்து சேர்ந்தார். மகிழ்ச்சியால் பூரித்துப் போன அவ்வூர் மக்கள் பூர்ண கும்ப மரியாதைகளுடன் ஸ்ரீ ராகவேந்திரரை குதூகலத்துடன் வரவேற்றனர்.
சில வருடங்கள் கழிந்தன. ஒரு நால், மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த சுவாமிகள் சட்டென்று வானத்தை நோக்கிக் கை கூப்பி தொழுதார். அடுத்த கணம் அவர் கழுத்தில் துளசி மாலை ஒன்று வந்து விழுந்தது. வியப்புற்ற மாணவர்கள் உயரே பார்த்தனர். யாரோ ஒரு மகான் இரண்டு விரல்களை மும்முறை காட்டுவது தெரிந்தது. மேலும் ஆச்சரியமுற்று அந்தக் காட்சியின் ரகசியத்தை விளக்கும்படி குருவிடம் கேட்டனர். அதற்கு ராகவேந்திரர் “கிருஷ்ண த்வைபாயன தீர்த்தர்” என்ற ஒரு மகான் வியோகமாகி தேவர்களால் அழைத்துச் செல்லப்படுவதைப் பார்த்து நான் அவரை வணங்கினேன். அவர் எனக்கு ஆசி வழங்கி துளசி மாலையை அணிவித்தார். அத்துடன் என் பிருந்தாவன வாசம் நெருங்கி விட்டது என்பதை அறிவுருத்துவதற்க்க மூன்று முறை இரண்டு விரலை காட்டினர். அதாவது என் பிருந்தாவனப் பிரவேசத்திற்கு இன்னும் இரண்டு வருடங்கள், இரண்டு மாதங்கள், இரண்டு தினங்களெ இருக்கின்றன என்பதை நினைவுபடுத்தி விட்டுப் போகிறார்கள். நான் இனி என் பிருந்தாவனத்திற்காக அருகாமையில் ஓர் இடத்தைத் தேடிக் கொண்டு வாசம் செய்ய வேண்டும், என்று கூறினார். அன்று முதலே தமது யாத்திரைக்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார்.
ஸ்ரீமடத்தில் இருக்கும் தமது குருவுக்கு குருவான ஸ்ரீ விஜயீந்திர சுவாமிகளின் பிருந்தாவனத்தை ஆசாரத்துடனும் முறையோடும் பூஜை செய்ய ஒருவரை நியமித்தார். தமக்குப் பிறகு ஸ்ரீ மடத்தை நிர்வகிக்கவும் தக்க ஏற்பாடுகளைச் செய்தார். அதுவரை ஸ்ரீ மடத்தின் கண்காணிப்பில் இருந்து வந்த ஸ்ரீ சக்ரபானி, ஸ்ரீ சாரங்கபாணி ஆலயங்களை ஸ்ரீ அகோபில மடத்தின் மேற்பார்வையிலும், ஸ்ரீ கும்பேஸ்வர ஆலயத்தை ஸ்ரீ காமகோடி மடத்தின் மேற்பார்வியயிலும் விட்டு விட்டு தமது பயண்த்திற்குத் தயாரானார்.
கும்பகோனவாசிகளுக்கு சுவாமிகளை விட்டுப் பிரிய மனமில்லை. ஞான ஒளி அகன்று விட்டால், ஊரே இருண்டு விடும் என்று அஞ்சியவர்கள் பீறிட்டு வந்த கண்ணீரை அடக்க முடியாமல் அங்கேயே தங்கி விடும்படி சுவாமிகளிடம் பிரார்த்திக் கொண்டனர். ஆனால் இறுதிக் காலத்தில் தாம் இருக்க வேண்டிய இடம் வேறு என்பதை சுவாமிகள் அவர்களுக்கு எடுத்துக் கூறி விட்டு ஒரு நல்ல நாளில் குடந்தையை விட்டுக் கிளம்பினார். ஸ்ரீ ராமன் காட்டுக்குச் சென்றபோது அயோத்திவாசிகள் ஆராத்துயரில் ஆழ்ந்தது போல் கும்பகொணவாசிகள் மீளாத்துயரில் மூழ்கினர்.
சுவாமிகளின் இந்த யாத்திரை வெகு வேகமாக நடைபெற்றது.. கர்நாடகத்திற்கு விஜயம் செய்தவர், ஹோஸ்பெட், நவ பிருந்தாவனம் முதலிய இடங்களைத் தரிசித்துக் கொண்டு ஆதோனி வந்து சேர்ந்தார். அவ்வூர் திவானான வெங்கண்ணப்பட்டர், சுவாமிகளை எதிர் கொண்டழைத்தார். ஆம்! முன்பு சுவாமிகளால் ஆசீர்வதிக்கப்பட்ட அநாதையான அந்த வெங்கண்ணாதான் அப்போது அவ்வூர் நவாபுக்கு திவானாக இருந்தார். அந்த ஏழை அந்தணர் எப்படித் திவானாக ஆனார் என்பது ஒரு தனிக்கதை.
ஆசாரியனின் அருளாசி முழுமையாக இருந்து விட்டால், விதி செயலிழந்து போகிறது. வாழ்க்கைப் பாதையில் செம்மை படருகிறது. வளம் கொழிக்கிறது. கலைமகள் கருணை பொழிகிறாள்; திருமகள் துணை நிற்கிறாள்.
எழை அந்தணரான வெங்கண்ணா மட்டும் இதற்கு விதிவிலக்காக முடியுமா? மகான் ஸ்ரீ ராகவேந்திரரின் தரிசனம் கிடைத்த அந்தக் கணத்திலிருந்தெ அவருக்கு நற்காலம் பிறந்து விட்டது. பொற்காலம் தொடங்கி விட்டது.
மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவரின் நிலை கண்டு மனமிரங்கி, நீ கவலைப்படாதெ, உன் கண்ணீரைத் துடைப்பது என் கடமை. வாழ்க்கையில் உனக்குச் சோதனை ஏற்படும் போது என்னை நினைத்துக் கொள். ஓடி வந்து உதவி செய்கிறேன் என்று அபயம் அளித்து விட்டு ஸ்ரீ ராகவேந்திரர் சென்ற சில மாதங்களுக்குள் வெங்கண்ணாவுக்கு ஒரு சோதனை ஏற்பட்டது.
ஆதோனி என்று தற்போது அழைக்கப்படும் ஆதவானி தாலுக்காவின் நவாப் மசூத்கான் நிலவரியை வசூலிப்பதற்காக வெங்கண்ணாவின் கிராமத்திற்கு வந்தார். அப்போது அவருக்கு டில்லி பாதுஷாவிடமிருந்து ஒரு முக்கியமான கடிதம் வந்தது. அதைப் படித்துச் சொல்ல ஒருவருமில்லை. சுற்று முற்றும் பார்த்தார் நவாப். ஒரு ஓரமாக வெங்கண்ணா நின்று கொண்டிருந்ததைப் கண்டார். அருகில் வரும்படி கட்டளையிட்டார். கடிதத்தைப் படித்துக் காட்டச் சொன்னார்.
வெங்கண்ணா நடுநடுங்கினார். பள்ளியில் படித்தது சொற்பம்தான். அரசாங்கக் கடிதத்தைப் படித்துச் சொல்லும் அளவுக்கு அவர் கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்கவில்லை. பாவம், என்ன செய்வார்? அவருக்கு உடலெல்லாம் வியர்த்தது.
நவாப், வெங்கண்ணாவை முறைத்துப் பார்த்தார். கடிதத்தை வெங்கண்ணாவின் கையில் திணித்தார். “சீக்கிரம் படித்துச் சொல்லு!” என்று உறுமினார் அவர்.
கடிதத்தைப் பிரித்துப் பார்த்தார் வெங்கண்ணா. “அட ராமா, இதென்ன சோதனை? இது இந்தியில் அல்லவா எழுதப்பட்டிருக்கிறது” வெங்கண்ணா விழித்தார்.
படிக்கப் போகிறாயா இல்லையா? கர்ஜித்தார் நவாப். நீ கடிதத்தைப் படித்து அதிலுள்ள விஷயங்களை எனக்கு விளக்கிக் கூறினால் உனக்குப் பரிசுகள் தருவேன். இல்லாவிட்டால் உன் உயிரைத் துறக்கத் தயாராயிரு!, அதிகாரக் குரலால் அரசரின் ஆணை பிறந்தது.
இக்கட்டான நிலையில் சிக்கித் தவித்தார் வெங்கண்ணா. நடுங்கும் விரல்களுக்கிடையே கடிதம் படபடத்தது.
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நம!
வெங்கண்ணாவின் இதயக் குரல் இடையறாது ஒலித்தது, எதிரொலித்தது. இருள் கப்பியிருந்த மனத்தில் ஓர் ஒளி பிறந்தது. அஞ்ஞான இருள் விலகியது. ஞானக் கண் திறந்து. மின்சாரம் பாய்ந்தது போல் உடலெங்கும் புல்லரித்தது.
கடிதத்தைப் பிரித்துப் பார்த்தார். எழுத்து தெரிந்தது, மொழி புரிந்தது, பொருள் விளங்கியது. தட்டுத் தடுமாறாமல், தங்கு தடையின்றி, பண்டிதரைப் போல் கம்பீரமான குரலில் படித்து முடித்தார். எப்படிப் படித்தார்? அது அவருக்கே புரியாத புதிர்.
தம்முள் அடங்கியிருக்கும் சக்தி, தம்மையறியாமல் வெளிப்படும் போது வியப்படைகிறோம். நம்மையும் மீறிய மாபெரும் சக்தியொன்று இயங்குகிறது. அது நம்மை இயக்க வைக்கிறது என்று உணருகிறோம். அந்தக் கணத்தில் அகங்காரம் அழிகிறது. ஆன்மா ஒளிர்கிறது. ஆண்டவனுக்கு அடி பணிகிறோம். நம்மால் ஆவது ஒன்றுமில்லை. அவனன்றி ஓர் அணுவும் அசைவதில்லை என்ற உன்னத தத்துவத்திற்கிணங்க, சரணாகதியடைகிறோம். நான் என்ற தனித்தன்மை அழிந்தொழிந்து பிறவி எடுத்த பெரும் பயனை எய்துகிறோம்.
தம் வாழ்வில் இருள் அகற்றி ஒளி வழங்கிய ஞான வள்ளலை நினைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த வெங்கண்ணாவைத் தட்டிக் கொடுத்தார் நவாப். தமது ராஜ்யத்துடன் மேலும் சில பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ள நற்செய்தியைத் தமக்கு படித்துக் காட்டியவரை உளமார வாழ்த்தினார். வெங்கண்ணரே, இன்றிலிருந்து தாங்கள்தான் என்னுடைய திவான். எனக்கு அறிவு புகட்டி, ஆலோசனைகள் கூறத் தங்களை விடத் தகுதி வாய்ந்தவர்கள் கிடையாதும், என்று கூறி தாம் அளிக்கும் பதவியை ஏற்றுக் கொள்ளும்படியும் வேண்டினார்.
உலகில் இனி வாழ முடியுமா? என்று அதுகாறும் கவலைப்பட்டுக் கொண்டிருந்த வெங்கண்ணா ஒரு நொடியில் உயர்ந்த பதவியில் அமர்த்தப்பட்டார். குருநாதனின் கருணை நோக்கு குசேலரை குபேரனாக்கி விட்டது.