சேதுராமன் அருட்கவியாவதற்குக் காரணமாக அமைந்த கும்மிப் பாடலைக் கீழே காணலாம் :
திரு முருகன் ஹர ஹரோ ஹரா கும்மி
திருப்பரங்குன்றத்துத் தெய்வத்திற்கு ஹர ஹரோ ஹரா
விருப்புறுவார் வினையறு வேற்(கு) ஹர ஹரோ ஹரா
திருப்புகழ் தமிழ்த் தெய்வத்திற்கு ஹர ஹரோ ஹரா
பொரு;ப்புதொறும் இருப்பவற்கு ஹர ஹரோ ஹரா
திருமாலார் மருகனுக்கு ஹர ஹரோ ஹரா
பெருமாள் கீழ்ப்பரமர் பிள்ளைக்(கு) ஹர ஹரோ ஹரா
தருமால் கட்டலையாள் தோன்றதற்(கு) ஹர ஹரோ ஹரா
வருமால் திரு குருநாதற்கு ஹர ஹரோ ஹரா
திருச்செந்தூற்த் தலைவனுக்கு ஹர ஹரோ ஹரா
செருச்சென்ற செல்வன் தங்க்(கு) ஹர ஹரோ ஹரா
அருச்சுனனின் அதிபர் மருகற்(க்8உ) ஹர ஹரோ ஹரா
திருச்சூருறை முருகன் தங்க்(கு) ஹர ஹரோ ஹரா
கடம்பணியும் கந்தனுக்(கு) ஹர ஹரோ ஹரா
திடம் பணியும் தீரனுக்கு ஹர ஹரோ ஹரா
விடம்பணிதாம் அனிந்தார் குருவுக்(கு) ஹர ஹரோ ஹரா
நடம் புரிவார் ம;லௌஅவற்கு ஹர ஹரோ ஹரா
பழநி வாழும் கிழவனுக்கு ஹர ஹரோ ஹரா
மழலைக் குழவி குருபரற்கு ஹர ஹரோ ஹரா
கழலணியும் குமரவேட்கு ஹர ஹரோ ஹரா
வடபழநி வாழ் வேலவற்கு ஹர ஹரோ ஹரா
மடப்பிடியாள் மணவாளற்கு ஹர ஹரோ ஹரா
படர்கொடியின் பாகனுக்கு ஹர ஹரோ ஹரா
தடம் புயத்தான் தணிகையானுக்(கு) ஹர ஹரோ ஹரா
குருமலைதனில் மறுவியற்(கு) ஹர ஹரோ ஹரா
திருமுருக்ன தேவதேவற்(கு) ஹர ஹரோ ஹரா
ஒருபிரமனை உளைய வைத்தாற்(கு) ஹர ஹரோ ஹரா
பெருபரமற்கு உபதேசித்தாற்(கு) ஹர ஹரோ ஹரா
பொய்யா மொழியைப் பொய்க்கச் செய்தாற்(கு) ஹர ஹரோ ஹரா
மெய்யாய் வல்லியைப் பணிந்தவற்(கு) ஹர ஹரோ ஹரா
செய்யா வினை தீர்செவ்வேளவதற்கு ஹர ஹரோ ஹரா
உய்யாறுதந்து உம்பரைக் காதாற்(கு) ஹர ஹரோ ஹரா
திருத்தணியில் உதித்தவற்கு ஹர ஹரோ ஹரா
உருத்திர சன்மன் ஊமைப் பிள்ளைக்(கு) ஹர ஹரோ ஹரா
விருத்தனான வள்ளிமணவாளற்(கு) ஹர ஹரோ ஹரா
திருத்திய புனத் தருவானாற்கு ஹர ஹரோ ஹரா
சம்பந்தனாய் அன்று தித்தாற்(கு) ஹர ஹரோ ஹரா
சம்பந்தமெ தெளிய வைப்பாற்(கு) ஹர ஹரோ ஹரா
சம்பந்தமாய்த் தோன்றியவற்(கு) ஹர ஹரோ ஹரா
வள்ளி மலைவாழ் வேந்தனுக்கு ஹர ஹரோ ஹரா
வள்ளிதனை வந்தணைந்தாற்கு ஹர ஹரோ ஹரா
கள்ள வேடத்தில் உள்ளே வைத்தாற்கு ஹர ஹரோ ஹரா
தெள்ளமுதமும் மாவு முண்டாற்கு ஹர ஹரோ ஹரா
அருணகிரி அருட் புகழுருவுக்(கு) ஹர ஹரோ ஹரா
வருணனாகப் பொழிந்தார் குருவுக்(கு) ஹர ஹரோ ஹரா
கருணனாக கொடுத்தார் திருவுக்(கு) ஹர ஹரோ ஹரா
தருண மிதென தந்து போந்தார்க்(கு) ஹர ஹரோ ஹரா
பழமுதிர்ச் சோலையுடையோனுக்(கு) ஹர ஹரோ ஹரா
மழ முதிர்களி றழைத்தோனுக்(கு) ஹர ஹரோ ஹரா
கிழவன் திருப்புகழ்ச் சாமி தோழற்(கு) ஹர ஹரோ ஹரா
குழவியுங் கொள் குமர நாதற்(கு) ஹர ஹரோ ஹரா
சிக்கல் சிங்கார வேலனுக்(கு) ஹர ஹரோ ஹரா
விக்க லெடுக்கையில் தக்க நீ ருண்டவதற்கு ஹர ஹரோ ஹரா
பக்கல் யானையைப் பரிவுடன் பெற்றவற்கு ஹர ஹரோ ஹரா
சிக்கல் தீர்த்து சேவடி சேர்ப்பவற்கு ஹர ஹரோ ஹரா
கிரிதவஞ் செய்திரி சரவண பவற்(கு) ஹர ஹரோ ஹரா
கிரியுருவானவர் கணபதி இலவற்(கு) ஹர ஹரோ ஹரா
நரி பரியாக்கினார் எரிதனிற் றோன்றினாற்கு ஹர ஹரோ ஹரா
புரிதவன் குறுமுனி தனக்கருள் புரிபவற்கு ஹர ஹரோ ஹரா
அறுவர் முலையுண்ட ஆறுமுகத்தோனுக்கு ஹர ஹரோ ஹரா
உறுபவம் ஒழித்தருள் ஓங்கார ரூபற்கு ஹர ஹரோ ஹரா
குறிஞ்சிக் கோட்டத்துக் குமரவேள் தனக்கு ஹர ஹரோ ஹரா
செறிதரு விரிஞ்சைச் செல்வச் செழியற்கு ஹரி ஹரோ ஹரா
எட்டிகுடி வேலன் எம்குல தெய்வத்திற்கு ஹர ஹரோ ஹரா
மட்டறு புகழுங்கொள் சக்திச் சரவணற்கு ஹர ஹரோ ஹரா
கட்டழகன் குற்தன் குளத்திற் பிறந்தவற்கு ஹர ஹரோ ஹரா
சிட்டரும் பாடிடும் சடாக்ஷர ரூபற்கு ஹர ஹரோ ஹரா
கந்தகோட்டத்துறை கந்த பிரானுக்கு ஹர ஹரோ ஹரா
தந்தியின் கொம்பைப் புணர்ந்தவர் தமக்கு ஹர ஹரோ ஹரா
தந்தை தனக்கே தாம் குருவானவற்கு ஹர ஹரோ ஹரா
சந்ததமும் பந்தத் தொடரறுப் பார்தமக்கு ஹர ஹரோ ஹரா
போரூரிலே வாழும் புண்ணியனுக்கு ஹர ஹரோ ஹரா
ஆரூரிலே தேரும் ஆண்டவனுக்கு ஹர ஹரோ ஹரா
ஈரிரண்டோ டிரண்டு விடற்கு ஹர ஹரோ ஹரா
யாரும் போற்றிடும் கலிவரதற்கு ஹர ஹரோ ஹரா
என் கணிலும் இருப்பவற்கு ஹர ஹரோ ஹரா
எங்கணுமே வாழ்பவற்கு ஹர ஹரோ ஹரா
தங்கமயில் வாகனற்கு ஹர ஹரோ ஹரா
சங்கரியும் பழமென்றுரைத்தாற்கு ஹர ஹரோ ஹரா
குகவேலன் குரு பரமோத்தமற்கு ஹர ஹரோ ஹரா
இகபரமும் இன்பம் தருவாற்(கு) ஹர ஹரோ ஹரா
சகமுழுதும் சாற்று புகழோற்(கு) ஹர ஹரோ ஹரா
மகமாயை பெற்றெடுத்தவற்கு ஹர ஹரோ ஹரா
குமர கோட்டத்துக் குக தேவனுக்(கு) ஹர ஹரோ ஹரா
அமர ரும்போற்றும் அன்பனவற்(கு) ஹர ஹரோ ஹரா
சமர்தனில் வென்ற சண்முகற்(கு) ஹர ஹரோ ஹரா
சமய வாதம் தீர்த்தவற்(கு) ஹர ஹரோ ஹரா
செங்கோட்டுக் கார்த்திகேயற்(கு) ஹர ஹரோ ஹரா
செங்கோட்டு யானை கணவற்(கு) ஹர ஹரோ ஹரா
பொங்கேட்டிற் பாதம் பதிந்தாற்(கு) ஹர ஹரோ ஹரா
தங்கேட்டையுடனே தீர்ப்பாற்கு ஹர ஹரோ ஹரா
நாகை வாழும் நம்பெருமாற்(கு) ஹர ஹரோ ஹரா
வாகை சூடும் வெற்றி வேலற்(கு) ஹர ஹரோ ஹரா
தோகை மயிலன் திருவருணை யோற்(கு) ஹர ஹரோ ஹரா
கேகயமும் வேலுங் கொண்டாற்(கு) ஹர ஹரோ ஹரா
அரவையில் அன்று நின்றாற்(கு) ஹர ஹரோ ஹரா
சிரசதனிற் கால்வைத்தார் மருகற்(கு) ஹர ஹரோ ஹரா
சரசமாகச் சண்டை தீர்த்தாற்(கு) ஹர ஹரோ ஹரா
முரசமொலிக்க மரத்தை யறுத்தார்க்(கு) ஹர ஹரோ ஹரா
பச்சை மாலின் மருகோன் தனக்(கு) ஹர ஹரோ ஹரா
இச்சா சக்தி தெய்வ வள்ளிக்கு ஹர ஹரோ ஹரா
சச்சிதானந்த ஞான சக்திவேற்(கு) ஹர ஹரோ ஹரா
வச்சிரவேல் கிரியா சக்திக்(கு) ஹர ஹரோ ஹரா
ஓங்கார ரூப மயிற்(கு) ஹர ஹரோ ஹரா
தாங்காத புகழுரை சேவற்(கு) ஹர ஹரோ ஹரா
காங்கேயன் காலரவத்திற்(கு) ஹர ஹரோ ஹராதீங்கேதும் வாராதருள் வாற்(கு) ஹர ஹரோ ஹரா