தபோவனத்தை விட்டுப் புறப்பட்ட சேதுராமன், கலசப்பாக்கத்திலிருக்கும் பூண்டி கிராமத்தில் எழுந்தருளியிருந்த ஆற்று சுவாமிகளைத் தரிசிக்கச் சென்றார்.
உலகத்தை மறந்து உன்மத்தரைப் போல் திண்ணையில் அமர்ந்திருந்த அந்த மகானைக் கண்டதும் சேதுராமன் அவரிடம் தம் உள்ளத்தைப் பறி கொடுத்து, அவரது கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். “பளிச் பளிச்”சென்று மின்னொளி போல் அம்மகானின் பார்வை தன்னைத் தாக்கிய போதெல்லாம், ஆன்மீக அதிர்ச்சிக்கு ஆளாகிய அற்புதத்தை உணர்ந்தார் அவர்.
தபோவனத்தில் ஞானோபதேசம் பெற்றார்; பூண்டியில் நயன தீட்சை பெற்றாரோ?
௳கானிடம் இரண்டு வார்த்தைகளாவது பேச வேண்டும், அவரது ஆசி மொழிகளைக் கேட்க வேண்டும் என்று துடித்தார் சேதுராமன். ஆனால் பேசுவதற்குத் தைரியம் வரவில்லை.
“சுவாமி, தாங்கள் அடிய்னை ஆசீர்வதிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். முதலில் அதை சுவாமிகள் காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை. எங்கோ நிலைத்து விட்ட பார்வையை சட்டென்று திருப்பிப் பேசினார்.
“காடு, மேடு, நாடு, வீடெல்லாம் தேடித் தேடி ஓடி அலைந்து என்ன பண்னுவது? ஆடிப்பாடியதெல்லாம் அடங்கி ஓரிடத்தில் அமைதியாய், உறுதியாய் அமர்ந்து, நலல்தையே நினைத்து, நல்லதையெ பண்ணிக் கொண்டு வந்தால், நல்லதே நடக்கும்.”
ஆருளாசியுடன் விடை கொடுத்து அனுப்பினார் பூண்டி சுவாமிகள்.
சென்னைக்குத் திரும்பிய சேதுராமன் மகிழ்ச்சிக்கடலில் நீந்திக் கொண்டிருந்தார். திருவண்ணாமலையிலும், திருக்கோயிலூரிலும், பூண்டியிலும் தமக்கேற்பட்ட அனுபவங்களை சாது பார்த்தசாரதியிடம் கூறிக் கூறி திளைத்துப் போனார். “எல்லாமே, நல்லது நடக்கப் போவதற்கான அறிகுறிதான்” என்று சுருக்கமாகப் பதில் கூறினார் சாது.
அமாவாசை (18-1-1969) விடியற்காலை சேதுராமன் ஒரு கனவு கண்டார்.
அவர் வைஷ்னவி தேவியின் சந்நிதியில் நின்று கொண்டிருக்கிறார். சாது பார்த்தசாரதி அனைவருக்கும் பால் பிரசாதம் வழங்கிக் கொண்டிருக்கிறார். சேதுராமனின் அருகில் வந்ததும், அவருக்கும் பால் வழங்கி விட்டு, எல்லோர் காதிலும் விழும்படி “நீ சிவராத்திரி அன்றே ஏன் சந்நியாஸ்ம மேற்கொள்ளக் கூடாது?” என்று ஆங்கிலத்தில் கேட்கிறார். இதை சற்றும் எதிர்பாராத செதுராமனுக்குத் தூக்கிவாரிப் போடுகிறது. “இப்படி திடீரென்று கேட்டால் நான் எப்படி பதில் சொல்ல முடியும்? நான் இதைப்பற்றி உடனே முடிவு செய்ய இயலாது. யோசித்து நிதானமாகப் பதில் சொல்கிறேன்” என்று கூறுகிறார். உடனே கனவு கலைந்து விடுகிறது.
அன்று சாது பார்த்தசாரதியிடம் தாம் கண்ட கனவைப் பற்றிக் கூறினார் சேதுராமன். “உன் தாயாரும், பெரிய தாயாரும் சிவராத்திரியன்று துரியாசிரமம் மேற்கொள்ள வேண்டும் என்று என்னிடம் கேட்டார்கள். வள்லிமலை சுவாமிகளின் படத்தின் முன் காவியுடையை வைத்து, ஆசி பெற்று எடுத்து உடுத்திக் கொள்ளுங்கள்” என்று நான் கூறியிருக்கிறென். அதைப் பற்றி உன்னிடம் அவர்கள் பேசியிருப்பார்கள். அப்போது உன் மனத்தில் எழுந்த எண்ணங்களின் பிரதிபலிப்பாக இந்தக் கனவு தோன்றியிருக்கும்” என்று ஏதோ சமாதானம் கூறி மழுப்பி விட்டார் சாது பார்த்தசாரதி.
சேதுராமனின் மனப் போராட்டம் நாளுக்கு நாள் அதிகமாயிற்று.
தமக்குத் தெரியாமலே பராசக்தி தமக்கொரு வழியை வகுத்து வைத்துக் கொண்டு காத்திருக்கிறாள். நம்மையறியாமலேயே அவ்வழியை நோக்கி நாம் போய்க் கொண்டிருக்கிறோம்.
சிவராத்திரியன்று சேதுராமன் சந்நியாசம் மேற்கொள்ள வேண்டும் என்று வைஷ்ணவி தேவி முடிவு செய்து விட்டாள். தன் முடிவுக்கேற்ப தன் பக்தர் சாது பார்த்தசாரதியை இயக்கிக் கொண்டிருந்தாள் அன்னை.
சந்நியாசம் மேற்கொள்வதற்கு முன் குருநாதராமன் வள்ளிமலை சுவாமிகள் பிறந்த மண்ணை மிதித்துப் புண்ணியம் பெற்று வந்தார் சேதுராமன். ஈரோட்டிற்கருகிலுள்ள பூநாச்சிபுதூருக்குச் சென்று, சுவாமிகள் அவதார ஸ்தலத்தைப் புகைப்படமெடுத்து வரும்படி சேதுராமனி, சாது பார்த்தசாரதி அனுப்பியதற்கு அதுதான் காரணமாக் இருக்க வேண்டும்.
வைஷ்ணவி தேவி பக்தர்களில் ஒருவரான ரஞ்சித் சிங்குடன் பூநாச்சிபுதூருக்குச் சென்று திரும்பி வந்த சேதுராமனின் உள்ளத்தில் பெரும் புயல் வீசத் தொடங்கியது. அமைதிக்கு முன் வீசும் புயலாகவே அது அமைந்தது.
இனி ஒரு கணமும் பொறுக்க முடியாது என்று உணர்ந்தார் சேதுராமன். சாது பார்த்தசாரதியிடம் போய் முறையிட்டார். சந்நியாச ஆசிரமம் மேற்கொள்ள எப்படியாவது தமக்கு அனுமதியளிக்கும்படி மன்றாடிக் கேட்டுக் கொண்டார். அதற்கான வெளை வந்து விட்டது. சாது பார்த்தசாரதியும் தமது சம்மதத்தை அளித்து விட்டார்.
தெவியின் உத்தரவையும் பெற்றுத் தரும்படி சேதுராமன் கேட்டதற்கு, தியானத்தில் ஆழ்ந்த சாது பார்த்தசாரதி, தேவியின் அனுக்ரகப் பூர்வமான பதிலையும் எழுதிக் கொடுத்தார்.
அன்று மாலை ஸ்ரீ சிருங்கேரி சங்கராசாரிய சுவாமிகளைத் தரிசித்து ஆசிரமம் மேற்கொள்வதற்கு முன் அவரது ஆசியையும் பெற்றுக் கொண்டார்.
ஆசிரமம் மஆறப் போகிர செதுராமன், குடும்பத்தாரிடமும், நண்பர்களிடமும் விடை பெற்றுக் கொண்டார். அவர்களை நமஸ்கரித்து ஆசியைப் பெற்றார். அப்போது அவர் நண்பர் “டன்லப்” கிருஷ்ணன் அவருக்கு ஒரு யோசனை கூறினார்.
“சேது, நீ வைஷ்ணவி தேவியின் சந்நிதியில் நின்று அருட்புகழ் பாடு. அவள் உத்தரவு எப்படி அமைகிறதோ, அதன்படி நடந்து கொள்” என்றார்.