46. தேவதாமூர்த்திகள் – அவதார புருஷர்கள் – பகுதி ஐந்து

அருள் மின்னல்

 ‘ஸ்வாமிஎன்ற பெயர் ஸுப்ரம்மண்யத்துக்கே உரியது என்பதற்கு ஆதரவாக இன்னொரு விஷயமும் தோன்றுகிறது.

திருப்பதியை சுப்ரம்மணியரோடு சம்பந்தப்படுத்திப் பேசுவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். வேங்கடரமண ஸ்வாமியே சுப்ரம்மணியர்தான் என்று நினைக்கிறவர்கள் உண்டு. வேங்கடரமண ஸ்வாமி சகல தெய்வங்களாகவும் இருக்கிற பரமாத்மாவாக இருக்கிறார். அவரே பெருமாள், அவரே பரமேஷ்வரன்அதனால்தான், அங்கே பில்வ அர்ச்சனை நடக்கிறது. அவரே அம்பாள்இன்றைக்கும் சுக்ரவாரத்தில்தான் அவருக்கு அபிஷேகம்! புடவையைத்தான் உடுத்துகிறார்கள். எல்லாத் தெய்வமும் அவரே. அவரை சுப்ரம்மணியமாகச் சொல்பவர்கள் கூறும் காரணம்அவர் மலைமேல் இருக்கிறதுதான். மலைமேல் பொதுவாக சுப்ரம்மணியர்தான் கோயில் கொள்கிற வழக்கம் இருக்கிறது என்கிறார்கள். ‘வேங்கட ரமணாஎன்று சொல்வதில்லை! ஹிந்திக்காரர்கள் அவரை என்னவென்று சொல்கிறார்கள்? ‘பாலாஜி’ ‘பாலாஜிஎன்றே சொல்வார்கள். பாலன், குமரன் என்றால் சிவசக்திகளின் செல்லக் குழந்தையான சுப்பிரமணிய ஸ்வாமியைத்தான் குறிப்பிடும். ‘குமாரதாரைஎன்றே திருப்பதியில் ஒரு தீர்த்தம் இருக்கிறது. இதோடு சேர்ந்து திருப்பதியிலுள்ள திருக்குளத்தின்பேர்ஸ்வாமி புஷ்கரிணிஎன்றிருப்பதைப் பார்த்தால், “ஸ்வாமியேகுமாரன்தான் என்பதற்கு இன்னொரு சான்று கிடைக்கிற மாதிரி இருக்கிறது. திருப்பதி திருக்குளத்துக்குஸ்வாமி புஷ்கரிணிஎன்றே பெயர்.

சகல லோகத்தையும்ஜீவர்களையும் ஜடத்தையும்தன் சகல சொத்தாக (ஸ்வம்) க் கொண்டிருக்கிறவர்தான்ஸ்வாமி’. அந்தப் பெயர் ஏன் சுப்ரம்மணியருக்கு விசேஷமாக வந்தது? அத்தனை பெருமை அவருக்கு ஏன் என்று பார்ப்போம்.

மேகத்தில் மின்னல் பளிச்சிடுகிறது. க்ஷணகாலம்தான்அதற்குள் அது மகாஜோதியை, மகாசக்தியைக் கொட்டி விடுகிறது. எத்தனையோபவர் ஹவுஸ்களில்ஜெனரேட்செய்ய முடியாத அளவுக்கு மின்சாரத்தைப் பாய்ச்சி விடுகிறது. இத்தனை சக்தி இப்போதுதான் மின்னலாகத் தோன்றினாலும், இதற்குமுன் அது இல்லாமல் இல்லை. இல்லாதது எப்படித் தோன்ற முடியும்? ஸயன்ட்டிஸ்ட்கள் மின்சாரம் எப்போதும் எங்கேயும் நிறைந்திருக்கிறது என்கிறார்கள். ஆனால், சாதாரணமாக அது தெரிவதில்லை. பின் எப்போது தெரிகிறது? நீராவி மேகமாக மாறித் திரிகிறபோது, ஒன்றாக இருக்கிற மின்சாரம் சில பகுதிகளில் வல அம்சமாகவும் (பாசிடிவ்), சிலவற்றில் இட அம்சமாகவும் (நெகடிவ்) பிரிந்து நிற்கிறது. பிற்பாடு மழைச் சமயத்தில் மேகங்களில் ஒருவிதமான நெரிசல், குமுறல் உண்டாகிறபோது, வல அம்ச (Positively charged) பகுதிகளும் இட அம்சப் பகுதிகளும் (negatively charged) நெருங்குகிறபோது, இந்த அம்சங்கள் ஒன்றையொன்று சரேலென்று ஆகர்ஷித்துக் கொள்கின்றன. இப்படி அவை தாவிக் கலக்கும்போதுதான், எங்கும் நிறைந்திருக்கிற மின்சாரம், நமக்குத் தெரிகிற மாதிரி, இத்தனை சக்தியுடன் மின்னலாக வெளிப்பட்டுத் தெரிகிறது. எங்கும் ஒன்றாக உள்ளபோது இருப்பதே தெரியாமல் இருந்த மின்சாரம் இரண்டாகப் பிரிந்து, பிறகு மறுபடி ஒன்றாகச் சேருகிற போது பெரிதாக ஜொலிக்கிறது; ஒலிக்கிறது இடியாக; மின்சக்தியை வாரிக் கொட்டுகிறது.

இது ஜடசக்தியான மின்சாரம். இந்த ஜடசக்திக்கு ஆதாரம் இதைப் பிறப்பித்த சித்சக்திஞானசக்தி, அறிவுச் சக்தி. தன் சக்தியை அறிந்து கொள்ளாமலேயே எங்கேயும் பரம்பொருளாக அது முதலில் இருக்கிறது. அப்புறம்பாஸிடிவ்’, ‘நெகடிவ்ஆகப் பிரிகிறது. அதைத்தான் சிவன், சக்தி என்கிறோம். தமிழில்வலது’, ‘இடதுஎன்று மின்சாரத்துக்குச் சொல்கிறோமே இதுதான் ரொம்பப் பொருத்தம். ஏனென்றால், ஈசுவரன் வலப்பக்கமும், அம்பாள் இடப்பக்கமும் இருப்பதுதான் அர்த்தநாரீசுவரக் கோலம். (அம்பாளுக்குப் பதில் இதே இடத்தில்அதாவது இடப்புறத்தில் விஷ்ணு இருந்துவிட்டால் அதுவே சங்கர நாராயணர்) . இரண்டாகப் பிரிந்தால் போதாது. மேகங்கள் உண்டானால் போதாது. மின்னலாக வாழ்விக்கிற சக்தி ஏற்பட வேண்டும். ஒன்றாக இருந்த பிரம்மம் தன்னை அறிந்து, சிவசக்திகளாகப் பிரிந்து, பிரபஞ்சத்தை உண்டுபண்ணி விட்டால் போதாது. பிரபஞ்சத்துக்கு எந்நாளும் அநுக்கிரகம் பண்ணிக்கொண்டிருப்பதாக ஒரு மின்னல் சக்தி பிறக்க வேண்டும். இதற்காகத்தான் இரண்டாக பிரிந்த வல அம்ச சிவனும், இட அம்ச சக்தியும் மறுபடி ஒன்றாகச் சேர்ந்து, மின்னல்போல சக்தி வேலாயுதத்தை பிடித்திருக்கிற சுப்ரம்மண்ய ஜோதியை ஆவிர்பவிக்கச் செய்தார்கள். பிரமத் தன்மையானது லோகாநுக்கிரகத்துக்கெனவே ஒரு மூர்த்தியாகிறபோது, ‘ஸுப்ரமண்யம்ஆகச் சிறப்புப் பெறுகிறது. “ஸுஎன்றால் நல்லது. சிரேஷ்டமானது என்று அர்த்தம். வெறும் பிரம்மம், அநுக்கிரக ஸுப்ரமண்யமாவதால்ஸ்வாமிஎன்றடைட்டில்கிடைக்கும்படியான பெருமையைப் பெறுகிறது.

இந்த ஜோதி உண்டாவதற்கே மூலமான சித்சக்தி பிரிந்து, சேர்ந்தது. பிரிந்தது, அப்புறம் பெரிய ஆகர்ஷண வேகத்தோடு சேருவதற்குத்தான். சேர்ந்தது, இப்படி லோகங்களுக்கெல்லாம் கிருபை செய்கிற மகாசக்திமானாக ஒரு ஜோதிக் குமாரன் உண்டாவதற்குத்தான்.

மேகத்தில் நாம் பார்க்கிற மின்னல் ஜோதி வெளி இருட்டை மாத்திரம் வெகு சிறிது காலத்துக்கு நீக்குகிறது. சுப்ரம்மண்யமோ, அருள் ஒளிஅருட்பெரும்ஜோதி. அது வெளியிருட்டு, உள்ளிருட்டு இரண்டையும் சாசுவதமாக நீக்குவது. மின்சாரம் ஒருத்தரை இழுத்துக்கொண்டால் எவராலும் எதிர்த்துத் தாக்குப் பிடிக்க முடியாது. ‘எலெக்ட்ரோக்யூட்டானால் மரணம்தான். இந்த அருள் மின்சாரம் இழுத்துக் கொண்டாலும் எதிர்த்து நிற்க முடியாது. ஆனால், இது அந்த ஜோதி ரூபமாகவே நம்மையும் ஆக்கி, அமரமாகச் செய்துவிடும். அருணகிரிநாதர்கந்தர் அநுபூதியில் இந்தப் பெரிய அநுபவத்தையே சொல்கிறார். ஒன்று இரண்டாகப் பிரிந்து மறுபடி ஒன்றாய்ச் சேர்ந்தபின், பலவாக நினைக்கிற நம்மையும் இழுத்துக் கடைசியில் அந்த ஒன்றாகவே ஆக்குகிறது.

குமாரன்

அருணகிரிநாதர் ஸுப்ரம்மண்ய ஸ்வாமியிடமிருந்து தமக்குக் கிடைத்த அத்வைத அநுக்கிரகத்தையேகந்தர் அநுபூதியில்விசேஷமாகச் சொல்கிறார்.

அவர் தம்முடைய திருப்புகழ் பாட்டுக்கள் ஒவ்வொன்றையும்பெருமாளேஎன்கிற வார்த்தையுடனேயே முடிக்கிறார். பொதுவாகபெருமாள்என்றால் மகாவிஷ்ணுதான். ஒரு ஊரில்ஈச்வரன் கோயில்’, ‘பெருமாள் கோயில்என்ற போதுபெருமாள் கோயில்என்றால் விஷ்ணு ஆலயம்தான். சிவசக்தியின் பூர்ணதேஜஸாக இருக்கப்பட்ட சுப்ரம்மண்யத்தை இப்படி பெருமாளாகச் சொல்லச் சொல்லி அவர் முடிப்பதும் அழகாகத்தான் இருக்கிறது.

தமிழ்நாட்டிலேயே பொதுவில் இவரை மகாவிஷ்ணுவுடன் சம்பந்தப்படுத்திப் பேசுவது அதிகம். ‘மருகன்என்றும் முருகனைச் சொல்கிறோமே, இது எதனால்? அவர் அம்பாளுக்கு சகோதரராக இருக்கிற மகாவிஷ்ணுவின் மருமகன் என்பதால்தான். ‘மால் மருகன்என்கிறோம். மருமகன் என்றால் மாப்பிள்ளை என்று அர்த்தம். மருமகப்பிள்ளை என்பார்கள். பூர்வத்தில் வள்ளி தேவசேனைகள் மகாவிஷ்ணுவின் புத்திரிகள்தான். அதனால் மாமாவான விஷ்ணு முருகனுக்கு மாமனாராகவும் இருக்கிறார். சிவனுக்கு மகன், மகாவிஷ்ணுவுக்கு மருமகன் என்ற பெருமை இவருக்கே இருக்கிறது. ‘மருகோனேஎன்று அருணகிரிநாதரும் சொல்வார்.

ஆனால், வடதேசத்தில் இந்த மாமனார் சமாசாரமே சுப்ரமணியருக்குக் கிட்டே வரக்கூடாது. அவர் இங்கே எந்நாளும் பிரம்மசாரித் தெய்வம்தான். சில இடங்களில் ஸுப்ரம்மண்யர் கோயிலுக்குள் ஸ்திரீகளை அநுமதிப்பதுகூட இல்லையாம். அத்தனை கடுமை. ‘சுப்ரம்மண்யர்என்ற பெயரும் வடதேசத்தில் பிரசித்தியில்லை. அங்கே அவரைக்கார்த்திகேயஎன்றே சொல்வார்கள்.

பரமேசுவரனின் கண்களிலிருந்து ஆறு பொறிகள் வெளிவந்து, அவை சரவணப் பொய்கையில் தங்கி ஆறுமுகனாக உருக்கொண்டன. அப்போது கார்த்திகைப் பெண்கள்கிருத்திகா தேவதைகள்என்கிற ஆறுபேர் அவரை எடுத்துப் பாலூட்டினார்கள். ஆகாசத்தில் கிருத்திகா நக்ஷத்திரங்கள் என்று ஆறு கூட்டமாக (Constellation) இருக்கின்றனவே, இவற்றின் அதிதேவதை அவர்களே. கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்ததால் அவருக்குக்கார்த்திகேயர்என்று பெயர் வந்தது. தனக்குத் தாயார் மாதிரி இருந்தவர்களின் பெயரை வைத்தே இப்படிப் அவர்களுக்குப் பெருமையாகப் பெயர் கொண்டார். வடக்கே இந்தப் பெயரே வழங்குகிறது. இல்லாவிட்டால்குழந்தைஎன்பதை வைத்துகுமாரன்என்பார்கள். “குமார ஸ்வாமிஎன்று நாம்கூடச் சொல்கிறோம். ‘குமரன்என்று குறுக்கிச் சொல்வது தமிழ் மொழிப் பண்பு. வடக்கேகுமாரன்என்றால் சுப்ரம்மண்யர்தான். சிவசக்திகளின் பிள்ளைசர்வலோக மாதா பிதாக்களின் (விசேஷமான) புத்திரன்இவர்தான். நாம் பிள்ளை (பிள்ளையார்) என்றால் விக்நேசுவரரைத்தான் நினைக்கிறோம். ஆனால், வடக்கே கணேசருக்கு ஏனோகுமாரசப்தத்தைக் காணோம், ஷண்முகரே அங்கே குமாரராக இருக்கிறார். காளிதாசன் செய்திருக்கிற காவியத்தைப் பார்த்தாலும் அதற்கு ‘குமார ஸம்பவம்’ என்றே பெயர் இருக்கிறது.

குமார சம்பவம்என்ற சொற்றொடர் சாக்ஷாத் வால்மீகி ராமாயணத்தில் வருகிறது. பாலகாண்டத்தில் விசுவாமித்திரர் ராம லக்ஷமணர்களுக்கு ஸ்கந்த உற்பத்தி கதையை விரிவாகச் சொல்கிறார். இதன் முடிவில், வால்மீகி சாதாரணமாகஇந்தக் கதை கேட்டதற்கு இந்தப் பலன்என்றுபலச்ருதிசொல்வதில்லைதான் என்றாலும், விதிவிலக்காகசொல்கிறார்: ஸ்ரீ ராமனிடம் விசுவாமித்திரரின் வசனமாகச் சொல்கிறார்: ‘குமார ஸம்பவக் கதையைச் சொன்னேன். இது தனத்தையும் கொடுக்கும். புண்ணியத்தையும் கொடுக்கும், அப்பா, காகுத்ஸா, இந்த லோகத்தில் ஒரு மனுஷ்யன் கார்த்திகேயனிடம் பக்தி வைத்துவிட்டால் போதும். தீர்க்காயுள், புத்திர பௌத்திர சௌபாக்கியம் எல்லாம் அவனுக்குக் கிடைத்துவிடும். முடிவிலோ ஸ்கந்த லோகத்துக்கே போய் அவருடனேயே நித்தியவாசம் செய்யலாம்என்கிறார். (பாலகாண்டம் – 37வது ஸர்க்கம்: சுலோ: 31-32) .

இங்கேகுமார ஸம்பவம்என்று ஆதிகவி சொன்னதைத்தான் மங்கள வாக்காகக் கொண்டு காளிதாஸன் தன் காவியத்துக்கு அதே பெயரைக் கொடுத்தான்.

குமாரன்என்ற பெயரை வைத்துத்தான்கௌமார மதம்என்ற ஸுப்ரம்மண்ய உபாஸனை ஏற்பட்டிருக்கிறது. ஷண்மதங்கள் என்று ஆறைச் சொல்வார்கள்! கணபதியை முழுமுதற் கடவுளாக வழிபடுவது காணபத்தியம்; சூரியனை முழு முதலாகக் கொள்வது ஸெளரம்; அம்பாளையே (சக்தி) பரமதாத்பரியமாகச் சொல்வது சாக்தம்; சிவனைச் சொல்வது சைவம்; விஷ்ணுவைச் சொல்வது வைஷ்ணவம்; இன்னொன்று சுப்பிரம்மணியரையே பரமாத்மாவாக உபாஸிப்பது. இங்கேகுமார வழிபாடுஎன்ற பொருளில்கௌமாரம்என்றே பெயர் உண்டாகியிருக்கிறது.

மேலேஸ்கந்த லோகம்என்று வால்மீகி ராமாயணத்திலிருந்து ஒரு வார்த்தை சொன்னேன். ‘ஸ்கந்தன்என்பதும் சுப்பிரமணியரின் பிரக்யாதி வாய்ந்த பெயர். ‘ஸ்கந்தஎன்கிற தாது (Root) வுக்கு, ‘வெளிப்படுவதுஎன்று அர்த்தம். மேகத்திலிருந்து மின்னல் வெளிப்படுவதுபோல், சிவ ஜோதியிலிருந்து ஆறு பொறிகளாக வெளிப்பட்டுத் தெறித்ததால், ‘ஸ்கந்தஎன்ற பெயர் உண்டாயிற்று. ‘ஸ்கந்தஎன்ற நாமாவை விசேஷமாக வைத்தே புராணத்திற்குஸ்காந்தம்என்ற பெயர் வந்திருக்கிறது. தமிழில் இதைக் காஞ்சிபுரத்தில் இருந்த கச்சியப்ப சிவாச்சாரியார்கந்தபுராணம்என்று செய்திருக்கிறார். ‘ஸ்கந்தன்தமிழில் கந்தனாகிறான்.

இருந்தாலும், தமிழ்நாட்டில் மருமகனாகக் சிறப்புப் பெற்றிருப்பவன் வடதேசத்தில் மகனாகவேகுமாரனாகவேவிசேஷிக்கப்படுகிறான். சகல ஜீவராசிகளும் ஆதி தம்பதியின் குழந்தைகளாயிருக்க, “பிள்ளை என்றால் இவன்தான்என்று சொல்லும்படியாக, முருகனுக்கு இருக்கிற மகிமை என்னவென்று பார்ப்போம்.