பக்தனின் வாழ்வில் அன்னையின் பிரத்யட்ச பலன்
கோயிலுக்கு சென்று தெய்வத்தை வணங்கும் மனிதன் வானுலகில் உறையும் தெய்வம் வழிபாட்டிற்குரியது என்பதை அறிந்தவன். நாளடைவில் இந்த பழக்கம் வேறூன்றி மனிதன் தெய்வத்திடமிருந்து விலகி மரணத்திற்கு பின் சேர வேண்டிய இடம் இறைவனின் திருவடி எனத் தீர்மானித்த் தன் இக வாழ்வை வழிபாட்டுக்கு உரியதாகக் கொள்கிறான். இதன் விளைவாக தெய்வம் என்பது உலக வாழ்வில் உணர முடியாத ஒன்று என்று நாம் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. உலக மாந்தர் அனைவரும் பக்தியால் உந்தப்பட்டவரானாலும் நடைமுறையைல ஆன்மீகம் பின்னணிக்குப் போய் பூஜையும் விழாவும் நிறைந்த மதச்சடங்குகளே நிதர்சனமாக நிலைக்கின்றன்.
இறைவனின் சக்தியை தவத்தின் மூலம் அறியலாம். எளிய் மனிதன் தெய்வத்தை வழிபடலாம். சக்தி வாய்ந்த இறைவனின் திருவிளையாடல்கள் நமக்க் இல்லை என உலக் மாந்தர் ஏற்றுக் கொள்கின்றனர். எனினும் இதுவே முடிவான ஒன்றில்லை.
ஆபத்து காலத்தில் மனிதன் எழுப்பும் வேதனைக் குரல் அலறலாகி தெய்வத்தின் காதில் விழுந்து அற்புதம் என அறியும் வகையில் தெய்வம் அவனைக் காப்பாற்றுவதுண்டு. இது எப்பொழுதோ அபூர்வமக நிகழககூடிய ஒன்று. மனித்னும தெய்வத்தின் செயலைப் பார்ப்பதுண்டு. ஆனால் அது அன்றாட நிகழ்ச்சியாக அவன வாழ்க்கையில் நிகழ்வதில்லை.
அன்னையை ஏற்றுக் கொண்டு நாம் ஆசிரமத்திற்கு வரும்பொழுது வழிபடும் தெய்வமாகவே அன்னையை புரிந்து கொண்டு கொள்கிறோம். இதனாலாயே அன்னை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி தன் ஒரு சக்தி. இடையறாது இயங்கும் தெய்வீக சக்தி என்று தன் நிலையை விளக்குகிறார். அன்பர்களின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் அவருக்கு ஆச்ச்ரியமா இருக்கின்றன. திகைப்பிலிருந்து மீள்வதற்கு முன் அதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன். அவன் தன் வாழ்க்கையில் புதிய ஒன்றியக் காண்பதாக நினைக்கின்றான். இந்த விஷயமே வேறு விதமாக் இருக்கிறத் என்று அறிகின்றான். எதிர்பாராத நிகழ்ச்சிகள், திடீர் திருப்பங்கள், தொடர்ந்து மனத்தில் சாந்தி நிலவும் ஆன்மீக் உணர்வு போன்ற நிகழ்ச்சிகள் பக்தனை சிந்திக்க வைக்கின்றன. அன்னை வெறும் வழிபாட்டுக்குரிய தெய்வம் மட்டும் அல்ல, ஜீவனுள்ள மகத்தான சக்தி என்பதை அவன் ஏற்றுக் கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்படும். நாளாக நாளாக பக்தன் அன்னையை சக்தியாக காண்பத் குறையும். பின்னர் அது போன்ற நிகழ்ச்சிகள் நடப்பது நின்று விடும். எனினும் முதலில் பக்தன் கண்டவை மனத்தின் ஒரு மூலையில் ஒளிந்து கொண்டிருக்கும்.
இக்கட்டுரையில் அன்னை சக்தி நிறைந்த் தெய்வம், அற்புதங்களை அன்றாடம் நிகழ்த்தும் சக்தி என்பதை எப்படிக் கண்டு கொள்வது? கண்டு கொண்டதை எங்கணம் நிரந்தரமாக நிலைபடச் செய்வது? என்பதை விளக்க முற்படுகிறேன்.
அன்னையைப் பற்றிக் கேள்விப்பட்டு அன்னை தெய்வம் என்றுணர்ந்து அன்னையை ஏற்றுக் கொள்ளும் நேரத்தில் பக்தன் மனித வாழ்க்கையின் மையத்திலிருந்து நகர்ந்து வந்து சூட்சும உலகின் சூழலில் அன்னை உறையும் நிலையை அடைந்து அன்னை தன்னை ஏற்றுக் கொள்ளக் காத்திருக்கும் பொழுது, அன்னையின் ஜோதியிலிருந்து ஒரு பொறி புறப்பட்டு அவன் ஜீவனில் வந்து தங்கி அவனுக்கு அன்னை பக்தன் என்ற ஆன்மீகத் தகுதியை நிரந்தரமாக தருகின்றது. அவனுடைய அகவாழ்வில் ஏற்படும் மாறுதல்கள் அசாதரணமானவை. எவரும் மறுக்க முடியாதவை. இதன் பிரதிபலிப்பாக எதிர்பாராத அளவில் மிகப் பெரிய பெரிய நல்லவை நடக்கின்றன. நாளடைவில் இந்தப் புதுமிய பழகிப் போன காரணத்தால் பழமையாகிறது. ஆரம்ப காலத்தில் ஏற்பட்ட ஜீவனுடைய சிறப்பும், வாழ்க்கிப் பொலிவும் தூசி படிந்து மனிதனுக்குத் தெரியாத வண்ணம் புதைந்து விடுகின்றன.
சிறுபான்மையான ஒரு தரத்தாரின் வாழ்வில் அன்னையிடம் வந்த ஆரம்ப நாள்களில் இதுபோன்ற புதுமைகள் காணப்படுவதில்லை. அதனால், அன்னை சக்தி செயல்படவில்லை என்பதில்லை. செயல்படும் விதம் கண்ணுக்குப் புலப்படாத வகையில் இருக்கும். தீராத வியாதி ஆரம்ப நிலையில் இருக்கிற ஒருவர்ன் அன்னையிடம் வந்தால், ஜோதி அவருள் எந்த அளவில் இறங்கி செயல்பட்டாலும் அதன் திறம் முழுவதும் அந்த வியாதியைக் குணப்படுத்தவே உதவும். அன்ப்ருக்கு அது தெர்வதில்லை. அதனல் ஆரம்ப நிலையில் இருந்த அவருடைய வியாதியை அன்னை குணப்படுத்தியது அவருக்குத் தெரிவதில்லை.
சனி தசையின் ஆரம்ப காலம், பயங்கர நோய், பலத்த கண்டம் வரும் நேரங்களில் அன்பர் புதிதாக் அன்னையை வந்து அடைந்திருந்தால், அன்னையின் அருள் அவர் வாழ்வில் அற்புதங்கள் நிகழ்த்துவதை அவரால் பார்க்க முடியாது. வரும்பொழுதே அருளுக்கு வேலையும் தாங்கி வந்திருக்கிறார். அன்னை, அவர் சனி பகவானுக்கு ஈடு கொடுப்பதையும் வியாதியின் மூலவேரை அரிப்பதையும், கண்டத்தைக் கரைப்பதையும் அருளுக்கு கடமையாக கொண்டு வந்துள்ளார்.
அதே சமயத்தில் மற்றவர்களின் வாழ்க்கையில் கண்டறியாத புதுமைகள் கணக்கின்றி நிகழும் அருளிப பெறும் வகைகள் அனேகம். அருளில் இருந்து தப்பித்து போய், தன் சுபாவத்தின் சுக துக்கங்களை மனிதன் அனுபவிப்பதும் அனேக வழிகள் அவற்றி எல்லாம் நான் விளக்க முற்படவில்லை. பெற்ற அருளின் பெரும் பேறு ஆயுள் முழுதும் நிலைக்க என்ன செய்யலாம்? முதலில் பெற்று, பின்ன்ர் இழந்த அருளை மீண்டும் எப்படிப் பெறலாம் என்பனவற்றை மட்டும் இக்கட்டுரையில் கருதுவோம்.
நாமறிந்த மனித வாழ்வுக்கும், அன்னையை மனிதன் ஏற்றுக்கொண்ட பின் அவனுக்கு அமையும் வாழ்வுக்கும் உள்ள வித்தியாசம் எவரும் மறுக்க முடியாத ஒன்று. அது குருடனுக்கும் புரியும் வகையில் இருப்பதால் கண்ணில் படாமல் இருக்காது. மனத்தில் அழ்ந்த புதிய கருத்தை ஏற்படுத்தத் தவறாது விரைவு, நெகிழ்வு, மகிழ்ச்சி, வெற்றி அழைப்பை ஏற்கும் வேகம் ஆகியவை உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக இருக்கும். திடீரென்று மரியாதி ஏற்படுகிறது. அன்றாடக் காரியங்கள் அபரிமிதமான பல்னை அளிக்கின்றன. புதிதாக புத்திசாலித்தனம் பொங்கி வருகின்றது. நாள் முழுதும் கடுமையாக உழைத்தாலும் களைப்பு ஏற்படுவதில்லை. உற்சாகம் வழக்கத்திற்கும் அதிகமக உற்பத்தியாகிறது. எதுவும் அளவு கடந்து கூடி வருகிறது. மனிதர்களும் நிகழ்ச்சிகளும் நம்மை வரவேற்று பலன் அளிக்க விழைகின்றன்; வாழ்வு பொலிகிறது.