சத்ய சாய் – 17

49. ‘துணிகரமான லீலை! (ஷீர்டி டெக்ஸ்டைல்ஸ்!)

ம்பத்தூரில் ஸமிதி செய்யும் நாராயண ஸேவை தவிர, அன்பர்கள் சிலரின் சகாயத்தோடு இன்னொரு நாராயண ஸேவை மாதந்தோறும் நடந்து வருகிறது.* கேட்காமலே அன்பர்கள் பொருள் அளிக்கின்றனர். நான் கேட்காவிட்டாலென்ன? ஷீர்டித் தாத்தா பலரிடம் ஸூக்ஷ்மமாகக் கேட்டு வசூலிக்கிறார்! அவரும் பர்த்தி நாதரும் ஒருவரே எனினும் ஷீர்டியில் அவர் பிச்சை புகுந்துண்டதால் போலும், இந்த ஸேவையில் அவர் ஷீர்டி நாதராகவே மனஸில் மேவுகிறார். ஆயினும் இருவருக்கும் பேதமே இல்லை என்பதால்தான் அவரது லீலையைப் பர்த்தியாரின் அறுபது அத்புதங்களில் சேர்க்கிறேன்.

1981-ல் அன்ன கைங்கர்யம் செய்தது போகவும் கையில் சுமார் ஆயிரம் ரூபாய் மிஞ்சிற்று. அதனால் 1982 ஜனவரி சேவையில் அன்னத்தோடு வஸ்திரமும் கொடுக்க முடிவு செய்தேன். ஜவுளியன்பர் மலிவு விலையில் கொடுத்ததில் இருநூறு துண்டுகள் வாங்கிற்று. ஆனால் அம்மாத சேவைக்கு நூற்று முப்பது நாராயணர்கள்தான் வந்தனர். அவர்களுக்கு அளித்த பிறகும் எழுபது துண்டுகள் மிஞ்சின. “தாத்தா ப்ரஸாதம்என்று அன்பர்களான நாங்களே அதில் பதினாறு துண்டுகளைப் பொருட் காணிக்கை செலுத்தி எடுத்துக் கொண்டோம். மீதமிருந்த ஐம்பத்து நாலை (ஸரியாக அஷ்டோத்தர சதத்தில் பாதியை) ஸ்ரீ கணேஷ் ராவிடம் கொடுத்து கிண்டி பாபா ஆலயத்தில் விநியோகிக்கச் சொன்னேன். உண்மையான ஸாயியடியரான அச்சகோதரர் மத்யதர வகுப்பினரேயாயினும் மாதந்தோறும் முதல் வியாழன் மாலைகளில் தாமே கிண்டியில் நாராயண சேவை செய்து வந்தார். அதற்கு நாற்பது, ஐம்பது நாராயணர்களுக்கு மேல் வருவதில்லை என்று அவர் கூறியதால் அவரிடம் அந்த 54 துண்டுகளை ஒப்புவித்தேன்.

* பிற்பாடு இச்சேவை நிறுவனம் சென்னை, தண்டையார்பேட்டைக்கு மாற்றப்பட்டுவிட்டது. சமிதியின் சேவையிலிருந்து வித்தியாசம் தெரிவதற்காக இதற்குகோவிந்த சேவைஎன்று பெயர்.

நாற்பது ஐம்பதென்ன? நாலைந்து துண்டுக்கு மேல் இன்று செலவாகாது போலிருக்கிறதே!’ என அவர் கவலைப்படுமாறு அம்மாத சேவையன்று நிலவரம் உருவாயிற்று. வழக்கமாக மாலை ஐந்தரைக்கே கிண்டி சென்று சேரும் ராவ் இன்று பல தடங்கல்களால் அங்கே போய்ச் சேரும்போதே ஏழு மணியாகிவிட்டது! இத்தனை நேரம் நாராயணர்கள் காத்திராமல் திரும்பியிருப்பார்களென்பதே அவர் கவலை.’

ஆனால் ஆலய வாசலில் அவர் கண்ட காட்சி! அது இவருக்கு வேறு விதத்தில் கவலையூட்டி விட்டது! வழக்கத்தை விட மிகவும் அதிகமாக நாராயணர்கள் குழுமியிருந்தார்கள்! இரண்டு வரிசைகளாக எதிரெதிரே அமர்ந்திருந்த அவர்களில் ஒரு வரிசையை இவர் எண்ண, அதிலேயே முப்பத்தைந்து பேர் இருந்தனர். ‘அப்படியானால் மொத்தம் எழுபது பேர் இருப்பார்களே! 54 துண்டை வைத்துக்கொண்டு எவருக்குக் கொடுப்பது? எவரை விடுவது? அப்படிச் செய்தால் ஏக ரகளையல்லவோ ஆகும். இவர்களானால் துணி மூட்டையைப் பார்த்து விஷயத்தைப் புரிந்துகொண்டு, மேலும் வேறு தெரிந்தவர்களை இட்டுவர ஓடுகிறார்களே! ஸாயிராம், ஸாயிராம்!’ – கணேஷ்ராவ் மனமார வேண்ட,

மஹா மனஸ்வியான தாத்தா வேண்டுதலைக் கேட்டுவிட்டார்!

கணபதி சேலா லா!” என்பதாகத் துண்டுகளைத் தம்மிடம் கொண்டு வருமாறு தாத்தா மராத்தியில் பிறப்பித்த அருளாணையை ஸ்பஷ்டமாகக் கேட்டார் மராத்தியரான ராவ்!

மூட்டையைத் தூக்கிக்கொண்டு சந்நிதிக்கு ஓடினார். ஆதிப் பிச்சைக்காரன், பிரேம பிக்ஷாண்டிப் பரமேச்வரனான தாத்தனுடைய ஜீவ விக்ரஹத்தின் மீது ஐம்பத்து நான்கில் முதற் துண்டைப் போர்த்தினார்.

எல்லையில்லாத் தெளிவுடன் வெளியே வந்து விநியோகம் தொடங்கினார். தாத்தாவின் கருணா யோக மஹிமையில் 53 துண்டு எழுபதுக்கு மேலாக வளர்ந்தது! ‘அன்ன வஸ்த்ரத*னை வாழ்த்திக்கொண்டு அத்தனை ஏழையரும் குளிரில் துண்டைப் போர்த்திக்கொண்டுஆஹாஎன்று வீடு திரும்பினர்!

* ஸ்வாமி அஷ்டோத்தர சதத்தில் ஒரு நாமம்.

50. ‘துணிகரமான லீலை! (பர்த்தி டெக்ஸ்டைல்ஸ்!)

கிண்டி ஆலயத் திருப்பணி செய்த லோகநாத முதலியாருக்குக் குலதெய்வம் வேங்கடாசலபதி. நம் கதாநாதரிடம் அவர் ஆட்படும் வரையில் அவரது இஷ்ட தெய்வமும் அவனே. செவ்வாழைப் பழம் கண்ணில் பட்டால் போதும், வாங்கிக்கொண்டு இஷ்ட மூர்த்திக்குப் படைப்பதற்காகத் திருப்பதி புறப்பட்டு விடுவார்.

நம் கதாநாதர் அவரை ஆட்கொள்ளும் அளவுக்குப் போகாவிடினும் தம்மிடம் நல்ல பக்தியைக் கொடுத்திருந்த காலத்தில் ஒருநாள். முதலியார் புட்டபர்த்தி சென்றிருந்தார். “ஒரு வாரத்துக்குள்ளேயே ரெண்டு, மூணு தரம் திருப்பதி போறியே! அவரே உங்கிட்ட வரார் பார்என்று கையைச் சுழற்றினார் இளைஞராயிருந்த இறையர். வேங்கடரமணன் விக்ரஹமாய் வந்தான்!

கெட்டி லோஹமான அந்த விக்ரஹத்துக்குள்ளேயே விரலை நுழைத்து, அதற்குள்ளிருந்தே தாயாரின் திருவுருவைக் கொண்டு வந்தார் அற்புத விநோதர். ஸ்ரீநிவாஸனைத் திரு வாழ் மார்பன் என்பார்கள். அவனுக்குள்ளேயே லக்ஷ்மி கரைந்திருப்பதை ஸ்வாமி விளையாட்டாகக் காட்டிவிட்டார்!

அப்போது அவரது நிவாஸமாயிருந்த பாத மந்திரத்தில் பெரிதாக இரு லக்ஷ்மிநாராயண பொம்மைகள் இருந்தன. அவற்றின் பாதத்தில் புதிதாய் ஸ்ருஷ்டித்த தாயார் பெருமாள் உருவங்களை வைத்தார்.

அப்புறம் அவ்விருவருக்கும் திருக்கல்யாணம் என்று ஆனந்த அமர்க்கள உத்ஸவமெடுத்தார், உல்லாஸ உத்ஸாஹர், பாதமந்திரம் பிள்ளை வீடு. கமலம்மா வஸித்த கர்ணத்தின் இல்லம் பெண் வீடு. பிள்ளையழைப்பு, பெண்ணழைப்பு, ஊர்வலம் என்று திமிலோகப்படுத்தினார். மானஸிகமாய்க் காணவே மாதுர்யம் சொட்டுகிறதுதாமே முன்பாடி பஜனையோடு ஊர்வலம் வந்தார்.

முஹூர்த்த வேளை வந்தது. கல்யாணப் பெண்ணுக்குக் கூறைப் புடவை கேட்டார்.

எவருக்கும் புதுச்சேலை எடுக்கவேண்டுமென்று தோன்றவில்லை. ஸ்வாமி கேட்டதும் விழித்தனர்.

இளம் ஸ்வாமியும் குறும்பாய் விழியை உருட்டிக் கரும்பாய்ச் சிரித்தார். ஒரு துண்டை எடுத்து முதலியாரின் மகள் லீலாவிடம் வீசினார். “நுனியைக் கெட்டியா பிடிச்சுக்கோஎன்றார். லீலா அப்படியே செய்ததும் மறு நுனியில் தம் லீலை தொடங்கினார்! த்வாபரயுகத்தில் துச்சாஸனன் இழுக்க இழுக்க வஸ்திரத்தை வளர்த்தினார். கலியுகத்தில், ஸுசாஸனரான தாமே துண்டின் நுனியை இழுக்க இழுக்க, அது நிறத்திலே சிவப்பாகவும், நெசவிலே பட்டும் ஜரிகையுமாகவும் மாறி, பதினெட்டு முழக் கூறைப் புடவையாக நீண்டு நீண்டு உருவெடுத்தது!

***

காயனபடு, கீர்த்தனபடு என்று புகழெடுத்த ஹரிகதை விற்பன்னையான ஸரஸ்வதி பாய் அந்த நாளிலேயே ஸ்வாமியிடம் ஈடுபட்டிருந்தவர். ஒரு முறை அவர் தசராவின் போது பர்த்தியில் ராமாயணம் கதை செய்தார். ஸாயிராமன் அவருக்கு ஒரு பனாரஸ் பட்டுப் புடவை கொடுத்து அனுப்பி வைத்தார்.

அவர் ஊருக்குத் திரும்பியபின் பக்தைகளைப் பார்த்து, “அந்தம்மா கச்சம் போட்டுக் கட்டறவங்களாச்சே! ஒம்பது கெஜம் வேணுமில்லே?” என்றார்.

எட்டு கெஜமாவது அந்த மாதிரிக் கச்சத்துக்கு வேணும்என்று அவர்கள் கூறினார்கள்.

அடாடா! நான் ஆறு கெஜப் புடவை கொடுத்துட்டேனே!” ஏகமாய் வருத்தப்பட்டார் நடிகர் திலகம்.

ஓரிரு நாட்களில் ஸரஸ்வதி பாயிடமிருந்து கடிதம் வந்தது. அவருடைய பார்வைக்கும், கைக்கும் அது ஆறு கெஜச் சேலை என்று தெரிந்துவிட்டதாம். ஆனாலும் ஸ்வாமி ப்ரஸாதமாச்சே என்பதால் பூஜா காலத்தில் மட்டுமாவது அதை ஒரு சுற்றுச் சுற்றிக் கொள்வோம் என்று பிரித்தாராம். ஆம், நாம் எதிர்பார்த்ததுதான்! இல்லை; எதிர் பார்த்ததற்கும் அதிகம்! எட்டு கெஜமே அவரது கச்சத்திற்குப் போதுமாயினும் இச்சேலையோ ஒன்பது கெஜத்துக்கும் அதிகமாக ஒரு சாண் வளர்ந்திருந்ததாம்!

***

இம்மாதிரி எவ்வளவோ சொல்லலாம். ‘சுருங்கச் சொல்லி விளங்க வைக்க இன்னும் ஒன்றே ஒன்று! நாகமணி பூர்ணையா கூறியது. ஷீர்டி பாபாவின் காலத்திலேயே அவரிடம் பக்தி பூண்ட ஓர் அம்மை இருந்தாளாம். அவள் அவருக்காக கஃப்னி தைத்தாள். அவரது காலளவுக்கு ஒரு ஜோடி பாதரக்ஷையும் வாங்கினாள். ஆனால் அவள் அவற்றைக் கொண்டுபோய் ஸமர்ப்பிக்கு முன்பே ஷீர்டி நாதர் மஹாசமாதி கொண்டு விட்டார். அவரது மறுஅவதாரம் பர்த்தியில் ஏற்பட்டதாகப் பல்லாண்டுகளுக்குப் பின் அம்மை அறிந்தாள். “இருக்குமா, இருக்குமா. அப்படியும் இருக்குமா?” என்ற ஐயமும் அவ்வப்போது தலை தூக்க, கஃப்னியோடும் பாதரக்ஷையோடும் பாத மந்திரத்துக்கு வந்தாள்.

தம்முன் சந்தேக வாடையோடு ஸமர்ப்பிக்கப்பட்ட ஆடையையும், ஜோடுகளையும்சும்மாதொட்டார் பாபா ஆஜானுபாஹுத் தாத்தாவுக்குத் தைக்கப்பட்ட கஃப்னி குட்டிக் கோமளனுக்கு அளவெடுத்துத் தைத்தாற் போல் குறுகிற்று! பெரிய திருவடிக்கான பாதுகை சிறிய திருவடிக்கேற்றதாகக் குறுகிற்று!

விளங்கிக்கொள்ள இயலாதது வித்தகன் லீலை எனசுருங்கச் சொல்லி விளங்கவைத்தாச்சோன்னோ?

51. டிக்கெட் கலெக்டர்!

விழிக்கே அருளுண்டு அபிராம வல்லி என்ற மெட்டில் “வழிக்கே அருளுண்டு ஸாயிராம தல்லி என்றும் பாடலாம்! வழித்துணையாய் அவள் வந்தருளும் அற்புதத்தில் சிறிது பார்ப்போம்!

1981 அக்டோபர் 15-ஆந் தேதி பர்த்திபுரியிலேஸ்வாமியின் ஆங்கில ஆக்க முதற்பகுதியை பகவான் ஏற்ற வைபவமும், அப்புறம் அளித்த பேட்டியில் என் உட்புண் ஒன்றை ஆற்றிய மஹா வைபவமும் சொல்லி முடியா ஆனந்த நிகழ்ச்சிகள். மறுநாள் நானும் உடன் வந்த ஸாயி சகோதரரும் பிற்பகல் பஸ்ஸில் பெங்களூர் புறப்பட்டோம். அங்கிருந்து இரவு மெயிலில் சென்னை திரும்ப ஏற்பாடு.

ஏற்பாட்டின்படியே பஸ்ஸில் போய்க்கொண்டிருக்கிறோம். மணியைப் பார்த்தேன். 5-40, அஸ்தமன வேளை கவ்வி வந்தது. காயத்ரீ செய்யலாமென எண்ணினேன். கலி காலமல்லவா? அந்த எண்ணத்தைத் தள்ளிப் போட்டது ஓர் ஆசை, ‘சிக்கபளாப்பூர் இன்னும் சற்று நேரத்தில் வரும். தொண்டைக்குச் சூடாகட்ரிங்க்கேட்பதால் அங்கே ஏதாவது பானம் விழுங்கிவிட்டு அப்புறம் காயத்ரீயை கவனிப்போம்என முடிவு செய்தேன்.

சிக்கபளாப்பூரில் பஸ் நின்றது. டிரைவரும் கண்டக்டரும் இறங்கினார்கள். “எவ்வளவு நேரம் நிற்கும்?” என்று கேட்க, “பத்து நிமிஷம்என்றனர்.

பஸ் ஸ்டாண்ட் ஹோட்டல் ஒன்றில்ஹாட் டரிங்க அருந்திவிட்டு வந்தபோதுஹார்ட்ஒரு விநாடி பதைத்தது! பத்து நிமிஷம் நிற்க வேண்டிய பஸ் ஐந்தே நிமிஷத்தில் போய்விட்டிருந்தது! கையிலிருந்த சிறுதொகை தவிர எங்களுடைய ஸகல உடமையும் அதில்தான் இருந்தது!

அதன்பின் அங்கிருந்து பெங்களூருக்கு பஸ் இல்லையென்றும் மறுநாள் காலைதான் பஸ் பிடிக்க முடியும் என்றும் அங்கிருந்தவர்கள்நல்வாக்குக் கூறினார்கள்.

நாங்கள் ஒன்றும் புரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் போதே, ஏழு மணிக்கு மேலாகி விட்டது.

அப்போது, “என்னாங்கோ ஸார், ப்ராப்ளம்?” என்று அங்கு புதிதாகக் காணப்பட்ட ஒருவர் கேட்டார். முப்பது வயதுக்குட்பட்ட இளைஞர். வெள்ளை பான்ட்டும், கட்டம் போட்ட கோட்டும் அணிந்திருந்தார். தமிழறிந்த கன்னடக்காரரா, கன்னட நாட்டு வாஸத்தினால் அவர்களில் ஒருவரான தமிழரா என்று புரியாதபடி இருந்தது அவரது உச்சாரணம்.

ப்ராப்ளத்தைச் சொன்னோம்.

இவ்வளவுதானே? வாங்கோ ஸார் நம்பளோட!” என்று சொல்லிக்கொண்டுடாக், டாக்கென நடையைக் கட்டினார். அவர் பின்னே விரைந்தோம். தபால் நிலையம் என நினைக்கிறேன். அதனுள் சென்றார். வெறிச் சென்றிருந்த அங்கே இருந்த ஒரே ஒரு ஊழியரிடம் பளிச்சென்று ஏதோ சொல்லிவிட்டு, ஃபோனை எடுத்துட்ரங்க் கால்போட்டார்.

அதுமெச்சூர்ஆகுமுன் எங்களிடம் திரும்பி, பஸ்ஸில் நாங்கள் எந்த ஸீட்களில் உட்கார்ந்திருந்தோம், என்னென்ன சாமான்கள் கொண்டு வந்திருந்தோம், அவற்றை பஸ்ஸுக்குள் எங்கே எங்கே வைத்திருந்தோம் என்ற விவரங்களைக் கேட்டுக்கொண்டார்.

கால்கிடைத்தது. அங்கிருந்து பெங்களூர் போகும் வழியில் அடுத்த ஸ்டாப்பான தேவனஹள்ளி காவல் நிலையத்தினருடன்தான் தொலை பேசினார். அந்தக் காவல் நிலையம் அவ்வூரின் பேருந்து நிலையத்தை ஒட்டியே இருந்தது.

ப்ரெஸன்ஸ் ஆப் மைன்ட்எனும் அபாரமான புத்தி விழிப்போடு செயற்பட்ட அவ்விளைஞர், அந்தக் காவல் நிலையத்தினரிடம், அடுத்த சில நிமிஷங்களுக்குள் அங்கே வரும் பெங்களூர் பஸ்ஸில் இன்ன ஸீட்டின் கீழேயும் மேலேயும் பக்கத்திலேயும் உள்ள இன்ன இன்னதான எங்கள் ஸாமான்களை எடுத்து வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். (‘கேட்டுக் கொண்டார்என்பதைவிடஉத்தரவிட்டார்என்றே சொல்லும்படியிருந்தது அவர் பேசிய தோரணை!) நாங்கள் அச்சாமான்களை அங்கிருந்துகலெக்ட்செய்து கொள்வோமென்றும் சொன்னார்.

அவர் பேசி முடித்தபின், நாங்கள் அங்கு சென்றுகலெக்ட்செய்து கொள்வது மறுநாள் காலைதானே என்று விசாரித்தேன். இங்கே இன்று இந்நேரத்துக்கு மேல் பஸ் கிடைக்காது என்று மற்றவர்களெல்லாம் சொல்லியிருந்தார்களே! ஆனால் அவரோ நம்பிக்கையொளி பாய்ச்சுபவராகஅல்லாம் இன்னக்கே கெடக்கும் ஸார்என்றார்.

ஃபோன் செலவை நாங்கள் கொடுக்க, வேண்டாமென்று மறுத்தார். ஆயினும் அதற்குத் தர எங்களிடம் தொகை இல்லாமற் போகவில்லை என்று நாங்கள் உறுதிப்படுத்திய பின் வாங்கிக் கொண்டார்.

எங்களைப் பற்றி விசாரித்துக்கொண்டே, நாங்கள் பஸ் பிடிப்பதற்கான சாலைக்கு அழைத்து வந்தார்தமதுடாக் டாக்நடையில்.

அவரைப் பற்றிக் கேட்டேன்D.V. நாகராஜன் என்று பெயர் சொன்னார். பெங்களூர் ரயில் நிலையத்தில் தாம் டிக்கெட் கலெக்டர் என்றும் சொன்னார். ‘ஸிடியோ, ‘கன்டோன்மென்ட்டோ இரண்டிலொன்றில் பணிபுரிவதாகச் சொன்னார்.

மற்றவர்கள் சொன்னதற்கு மாறாக, இவரது வாய் முஹூர்த்தப்படியே ஏகப்பட்ட ஸீட்கள் காலியாக ஒரு எக்ஸ்ப்ரெஸ் பஸ் வந்தது. விழுந்தடித்துக்கொண்டு ஓடிச் சாலையைக் கிராஸ் செய்து அதில் ஏறினோம்.

தேவனஹள்ளி ஸ்டாண்டில் இறங்கி, அடுத்தேயிருந்த காவல் நிலையம் சென்றோம். அங்கிருந்த உதவியாளர், “நாங்கள் சாமான்களை எடுத்து வைத்திருந்தால் இது ஒரு போலீஸ் கேஸ் ஆகிவிடும். நாளை காலை நீங்கள் எஸ்..யிட்டருந்துதான் திரும்பப் பெற முடியும் அதோடு இறக்கி ஏற்றுகிற காரியம் வேறே சேரும். அதனால் அந்த பஸ்ஸில் அவை இருப்பதை சரி பார்த்துவிட்டு, அதிலேயே ட்ரைவர் ஸீட் அருகில் எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டேன். பெங்களூர் கலாஸிப்பாளையம் டெர்மினஸில் உங்களுக்காகக் காத்திருந்து அவற்றை ஒப்புவிக்குமாறு ட்ரைவரிடம் சொல்லியிருக்கிறேன்என்றார். இவருடையப்ரெஸன்ஸ் ஆஃப் மைன்ட்டை என்ன சொல்ல? அதோடு உதவியப் பண்பையுந்தான்! அன்றே எங்களுக்கு பஸ் கிடைக்குமென்ற நம்பிக்கை இவருக்கும் எப்படி வந்ததோ?

நாங்கள் வந்த பஸ்ஸிலேயே ஏறி பெங்களூர் சென்று, கலாஸிப்பாளையம் போய், சாமான்களைக் கலெக்ட் செய்துகொண்டோம். திறந்த ப்ளாஸ்டிக் கூடையில் இருந்த பாதி பிரித்த பிஸ்கெட் பொட்டலமும், ஆப்பிள்களும் உள்பட அத்தனை பொருட்களும் பத்திரமாக எங்கள் கை சேர்ந்தன!

அன்றிலிருந்தே, “D.V. நாகராஜன் நிஜமாகவே அப்படிப்பட்ட ஒருவர்தானா? அல்லது? அல்லது?” என்ற கேள்வி என்னுள் எழும்பியது.

உடன் வந்த ஸோதரரே ரயில்வேயில் உயர் அதிகாரியாயிருந்து ஓய்வு பெற்றவராதலால் அப்படியொரு டிக்கெட் கலெக்டர் இருக்கிறாரா என்று அவரே விசாரிக்க முடியும். ஆனால், ‘அது ஸ்வாமியாயிருந்தால் ஃபோனுக்குப் பணம் வாங்கிக் கொண்டிருப்பாரா? சாமான்களைப் போலீஸ் ஸ்டேஷனில் எடுத்து வைத்துக் கொள்ளாமல் பஸ்ஸோடு அனுப்பும் முடிவைத் தாமே செய்யாமல், போலீஸ் உதவியாளர் செய்ய விட்டிருப்பாரா?” என்று சோதரர் கேட்கப் போகிறாரே என்பதால் அவரை விசாரிக்கச் சொல்லவில்லை.

ஆயினும், நாகரூபத்தில் ஸ்வாமி அடிக்கடி என் கனவில் வந்து கொண்டிருந்த அக்காலத்தில் இந்த நபர் நாகராஜன் என்று பெயர் சொல்லிக்கொண்டது மனத்தில் ஆழப்பதிவாயிருந்தது. இனிஷியலோ D.V. என்றார். எந்த ஒரு நிகழ்ச்சி நிரலிலும் ‘D.V.’ போடுவது மேநாட்டு ஆஸ்திக மரபு‘D.V.’ என்பது ‘Deo Volente’ என்பதன் சுருக்கம். ‘God Willing’ – அதாவதுதெய்வ சங்கற்பமிருப்பின்” (இந்நிகழ்ச்சி நடக்கும்) என்பது அதன் பொருள். ‘எங்கள் பயண நிகழ்ச்சியை இனிதே முடித்து வைக்கத் தாம் சங்கல்பித்ததையே D.V. என்று சொல்லிக் கொண்டாரா? நம் வாழ்க்கைப் பயணச் சீட்டையே வாங்கிக் கொள்வதால் டிக்கெட் கலெக்டர் என்றாரா? சாமான்களை கலெக்ட் செய்து கொள்ளவும் இப்போது உதவினாரே!’

இவ்வெண்ணங்களால் மற்றொரு ரயில்வே நண்பரும், என் பிரியமான ஸாயி ஸோதரருள் ஒருவருமான என். நாராயணனை விசாரிக்கச் சொன்னேன். அவர் பெங்களூரில் ரயில்வே அலுவலகங்களில் கேட்டுப் பார்த்து டி.வி. நாகராஜன் எனப்பட்ட ஊழியரெவரும் இல்லை எனச் சொன்னார். ஆயினும்பெர்ஸொனெல்இலாகாவில் ஊழியர் பட்டியல் பார்த்தாலே உறுதியாகுமென்றும். தம்மால் அது இயலவில்லையென்றும் கூறினார்.

சுமார் நாலாண்டுகளுக்குப் பின்சில வாரங்களுக்கு முன்திடீரென்று இவ்விஷயம் மீண்டும் மனத்தில் மூண்டது. ‘நல்ல நண்பராக பெங்களூரில் எஸ்.ஆர். வேங்கடாசலம் இருக்கிறாரே! எல்லா ஸ்தாபனங்களிலும் சாய்கால் உள்ள அவரைக் கொண்டு, நமக்காகக்கால்பேசியவர் ஸாயிதானா என அறியலாமேஎன்று தோன்றிற்று. எஸ்.ஆர்.வி.க்கு எழுதினேன்.

இந்த ஆண்டு அக். 11 தேதியிட்டு அவர் பதில் எழுதியுள்ளார். தாம் தீர விசாரித்து விட்டதாகவும், பெங்களூர் ஸ்டேஷன்கள் எதிலும் கடந்த பல வருஷங்களாக டி.வி. நாகராஜன் என ஊழியர் எவரும் இல்லை எனவும் அதில் அவர் அறுதியிட்டு உறுதி கூறியிருக்கிறார்“I am positive it is yet another ‘Sai Leela’” “இது மேலும் ஒரு ஸாயி லீலைதான் என்பது எனக்கு ஸர்வ நிச்சயம்என்று முடித்திருக்கிறார்.தாம் செய்ததாகத் தெரிய வேண்டிய அவசியமில்லை என்ற எளிமையினாலேயே நமது மார்க்க மஹா பந்து மானுட நாடகம் முற்றிலும் மெய்யாகத் தோன்றும் பொருட்டு ஃபோனுக்குப் பணம் ஏற்றாரோ? காவல் பணியாளரின் விவேகத்துக்கு ஒரு முடிவை விட்டாரோ?