எல்லாவற்றையும் பார்த்தான பிறகு, ஓய்வெடுப்பதற்காகப் படுத்த போது, மீண்டும் உடல் ஒரு சுமையாகத் தோன்றியது. எங்கோ சென்றிருந்த எனது தலைவலி மீண்டது. அது சாதாரணமாக நமக்கு வரும் தலைவலியிலிருந்தும் மாறுபட்டிருந்தது. “ஆல்ட்டிட்யூட் சிக்னஸ்” அதாவது மலைச்சிகரங்களில் வரும் உபத்திரவம் என்ற வகையைச் சேர்ந்ததாம் அது. மலையேற்றத்தின் போது சிலருக்கு வருமாம் அது. அதற்காக நண்பர் டில்லியிலிருந்து கையோடு கொண்டு வந்திருந்த மாத்திரை கீழே டாக்ஸியிலேயே பத்திரமாக இருந்தது! பசியைத் தணிப்பதற்காக கொஞ்சம் “குளுக்கோஸ்” கரைத்துக் குடித்தேன். அதுவும் வயிற்றில் தங்கவில்லை. அதாற்குப் பிறகு தூக்கமில்லாமல் அவதிப்பட்டென். மறுநாட் காலை எழுந்து மறுபடியும் அத்தனை தூரம் நடந்தாக வேண்டுமெ என்பதை நினைத்த போது, என் வேதனை அதிகமாயிற்று. “பேசாமல் குதிரையிலேயே ஏறி வந்திருக்கலாம்” என்று மனத்திற்குள் எண்ணிக் கொண்டேன். என்னால் அன்றிரவு என் நண்பர்களுக்கும் அரை குறைத் தூக்கம்தான், பாவம்!
விடியற்காலை ஐந்து மணிக்கே அவசர அவசரமாக முகம் கழுவிக் கொண்டு, நட்ககத் தொடங்கினோம். பொழுது புலரும் பொன்னான வேளையில் இமாலயத்தில் நட்ககக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இருபுறமும் கோட்டைச் சுவர்களாக மலைகள் எழும்பியிருக்க, கீழே சில சமயம் கன்னுக்குத் தெரிந்தும், சில சமயம் மரைந்தும் ஓடிக் கொண்டிருக்கும் நதியின் ஆதாரச்சுருதியோடு இழிந்து புள்ளினங்கள் இசைக்கும் இன்னிசையும், வகை வகையான மாங்களும், விதவிதமான கொடிகளும், வண்ண வண்ணப் பூக்களும், வழியெங்கும் பாய்ந்து கொண்டிருக்கும் ஊற்று நீரும், நீலவானத் தொட்டிலில் தவழ்ந்து விளையாடும் முகிற் கூட்டமும், பனி மூட்டமும்…..அப்ப்பப்பா….கவிஞர்களின் சொர்க்க பூமியாகவும், கலைஞனின் சித்திரக்கூடமாகவும் பரந்து விரிந்து நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தும். பேச்சடங்கி, பேரெழிலில் மனத்தைப் பறிகொடுத்து, மெள்ள மெள்ள நடந்து வந்ததில் சிரமமே தெரியவில்லை. மாறாக, உடல் அசதியெல்லாம் மரைந்து புத்துணர்ச்சி பிறந்தது. வீராதி வீரர்களைப் போல் நடந்து கொண்டிருந்தோம். களைப்பு மேலிட்டு, மூச்சுத் திணரி ஏறி வருபவர்கள், “இன்னும் எத்தனை தூரம் இருக்கு?” என்று பரிதாபமாகக் கேட்கும் போதெல்லாம், “இன்னும் கொஞ்சதூரம்தான். கவலைப்படாதீர்கள்” என்று அபயம் அளித்துக் கொண்டு சென்றோம். அவர்கள் சோர்ந்து போய் “ஜம்னாமாய்க்கு ஜெய்” என்று ஈனக் குரலில் கூறும் போது நான் அவர்களை உற்சாகப்படுத்தும் பொருட்டு “ஜம்னா மாய்க்கு ஜெய்”, “கங்கா மாய்க்கு ஜெய்” என்று உரக்கக் குரல் கொடுத்தேன். நேற்று ஏறி வரும்போது நான் திணறியதை நினைத்துப் பார்த்துக் கொண்டேன்.
“ரொம்ப அலட்டிக்காதீங்க சார், இன்னும் கங்கோத்ரி, கோமுக், கேதார்நாத் எல்லாம் இருக்கு. யமுனோத்ரிக்கே டம் வாங்கிட்டீங்க” என்று கேலி செய்தார் கண்ணன்.
“கண்ணா, ஆனைக்கும் அடி சறுக்கும். கேலி பேசாதே” என்று எச்சரித்தேன் நான். ஆனைக்கு அடி சறுக்கிய கதையைப் பின்னால் சொல்கிறேன்!
பத்தரை மணி சுமாருக்கு எங்கள் டாக்சி நின்று கொண்டிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம் எங்களைக் கண்டதும் புஷ்க்கருக்கு ஒரே குஷியாகி விட்டது. பாவம் தன்னந்தனியாக ஒரு நாளெல்லாம் போரடித்துக் கொண்டல்லவா அவர் உட்கார்ந்திருந்தார்.
“எல்லாம் நல்லா தரிசனம் பண்னினீர்களா?” என்று கேட்டார் புஷ்க்கர்.
“ஓ, பிரமாதம், நீங்க வராததுதான் பெரிய குறை” என்றேன் நான்.
அதற்குள் எங்கள் ஜவான், புஷ்க்கரிடம் கடுவாலி இந்தியில் ஏதோ கூறினார். உடனே புஷ்க்கர் என்னைப் பார்த்து சிரித்தார். மலையேறுவதற்கு நாந்திண்டாடியதைப் பற்றி ஜவான் டிரைவரிடம் சொல்லியிருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டேன்.
சேனாசட்டிக்கு வந்து சேர்ந்த போது எல்லோரும் நல்ல பசி; எனக்குக் கூடத்தான். அங்குனல்ல தயிர் கிடைத்தது. அது “பிரிட்ஜி”ள் வைத்தது போல் இருந்தது!
பன்னிரண்டு மணி சுமாருக்கு பர்கோட் வந்து,அ ரசினர் தங்கும் விடுதியில் குளித்து, துணிகளைத் துவைத்து “லா”ணில் உலர வைத்து, சிறிது ஆகாரம் உண்ட களைப்புத் தீர சற்றுப் படுத்துப் புரண்டு விட்டு, மூன்று மணி சுமாருக்கு உத்தரகாசியை நோக்கிப் பயணமானொம். அங்கிருந்து ஐம்பது ஐம்பத்திரண்டு மைல் பயணம். `
நாம் அடுத்து காண வேண்ட்யது கங்கோத்ரி. யம்னோத்ரியிலிருந்து கால்நடையாகச் சென்றால் சுமார் நூறு மைல் ஆகிறது. யமுனோத்ரியிலிருந்து திரும்பி வரும் போது கங்கானியருகிலுள்ல சிம்லியிலிருந்து குறுக்கே நடந்தால் உத்தரகாசி நாற்பத்துமூன்று மைல் ஆகிறது. அங்கிருந்து ஐம்பத்தாறாவது மைலில் கங்கோத்ரி இருக்கிறது. காரிலோ, பஸ்ஸிலோ வருபவர்கள் சேனாசட்டியிலிருந்து பர்கோட் வந்து, அங்கிருந்து தராசு வழியாக உத்தரகாசி செல்ல வேண்டும். நாங்கள் அப்பாதையில் பயணமானோம்.
உத்தரகாசிக்கு முன்னால் ஆறாவது மைலில் நகூரி என்ற கிராமம் இருக்கிறது. அங்கு மலையுச்சியில் ரேணுகா தேவி ஆலயம் இருப்பதாகவும் ஆனால், ஏறிச் செல்வது கடினம் என்றும் கூறினார்கள். ஜமதக்னி முனிவர் தவம் இருந்த புனித இடம் அது.அ வரது மகன் பரசுராமன் “தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்ற பொன்மொழிக்கேற்ப, அவர் வேண்டுகோலின்படி தன் தாயின் தலையைக் கொய்து விட்டார். பின்னர் மகனின் கடமையுணர்ச்சியை மெச்சி, தந்தை “உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டபோது “என் தாயை மீண்டுமுயிர்ப்பிக்க வேண்டும்” என்று கேட்டார். ரேணுகாதேவியும் உயிர் பெற்று எழுந்தாள். இந்தப் புராண நிகாழ்ச்சி நடந்த இடம், நகூரி எங்கிறார்கள். காரை நிறுத்தி, அங்கிருந்தபடியே, மலையுச்சியை நோக்கி ஒரு கும்பிடு போட்டு விட்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.
ஒன்றரை மைலில் மாத்லி என்ற ஊர் இருக்கிறது. முன்பு அப்பகுதியில் கபில மகரிஷியின் ஆசிரமம் இருந்ததாம். தற்போது அங்கு ரானுவ காம்ப் ஒன்று இருக்கிறது. அங்கு சென்று ரிஷிகேசத்திலிருந்து எங்களுடன் வந்த ஜவானை “ரிலீவ்” செய்துவிட்டு, புது ஜவானை அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும். கங்கோத்ரி, கோமுக் பயணத்திற்காக, இதர உபகரணங்களையும் அங்கிருந்துதான் எடுத்துச் செல்ல வெண்டும்.
புராண காலத்திலிருந்து புகழ் பெற்ற புனித தலம் உத்தரகாசி. உத்தரையின் தந்தை விராட மகாராஜனின் பெயரோடு இணைக்கப்பட்டு, இதை “விராட நகரி” என்று புராணம் அழைக்கிறது. இதற்கு சௌம்யகாசி என்ற பெயரும் உண்டு. வடக்கிலுள்ல காய்ஸ்யானதால், உத்தரகாசி என்றும் அழைக்கிறது.
கங்கைக் கரையிலுள்ல காசியைப் போன்று பாகீரதியின் வட கரையிலுள்ல இந்தக் காசியையும் “வாராண, அசி” என்ற இரண்டு உபநதிகள் சூழ்ந்திருக்கின்றன. இங்கும் விசுவநாதர் ஆலயம் இருக்கிறது. இங்குள்ல ஸ்நான கட்டத்திற்கும் “மணிகர்ணிகா” என்ற பெயர் உண்டு.
மலைகளால் சூழப்பட்டுள்ல இந்தச் சமவெளி, மகரிஷிகளின் ஆசிரமங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இருந்ததற்கான சான்றுகள் பல இருக்கின்றன. தன் ராஜ்ஜியத்தைத் துறந்துவிட்டு, பித்தனைப் போல அலைந்து திரிந்த ஞான வள்ளலான ஜடபரதரின் ஆசிரமம் இங்குதான் இருந்ததாம்.
நகரை அடுத்துள்ல வாரணவட மலை உயர்ந்தோங்கி கம்பீரமாக நிற்கிறது. பாண்டவர்களைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டிய துரியோதனன் இம்மலைக்கருகில்தான் அரக்கு மாளிகை கட்டினானாம். அர்ஜுனனுக்கும் வேடன் உருவத்திலிருந்த சிவபெருமானுக்கும் யுத்தம் நடைபெற்றது. இறுதியில் அர்ஜுனனின் வீரத்தை மெச்சிய சிவபெருமான், அவனுக்கு பாசுபதாஸ்திரம் அளித்தப் ஊமி இதுதான் என்றும் கூறப்படுகிறது.
முதல்நாள் மாலையிலிருந்தே விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்தது. உத்தரகாசியிலேயே இப்படி மழை பெய்தால், இன்னும் மேலே போகப் போக நல்ல மழை இருக்கும் என்று கூறினார்கள். அதனால் வழியில் மலைகள் அங்கங்கே சரிந்து, பாதை அடைக்கப்பட்டிருக்கும் என்றும், அப்படிப் பாதை சீராக இருந்தாலும் சில சமயம் காரின் மீது பெரும் பாறைகள் சரிந்து விழக்கூடும் என்றும் சிலர் பயமுறுத்தினார்கள். நாங்கள் அன்று புறப்படுவதா வேண்டாமா என்று தயங்கிக் கொண்டிருந்தோம்.
இரண்டு மணிக்கு மேல் புஷ்க்கர் குளித்துவிட்டு உலர்ந்த துணிகளை உடுத்திக் கொண்டு பளிச்சென்று வந்து எங்கள் எதிரில் நின்றார்.
“புறப்படலாமா, சாமானெல்லாம் கட்டியாகி விட்டதா?” என்று கேட்டார்.
நாங்கள் மழையைப் பற்றிய எங்கள் கவலையைத் தெரிவித்தோம். புஷ்க்கர் சிரித்தார். “இமாலயத்தில் வந்து மழைக்குப் பயப்பட்டால் எப்படி? இதோ வெளுத்துவிட்டது பாருங்கள். கங்கோத்ரியிலிருந்து பஸ்களும் ஜீப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன. பாதை ஒழுங்காகத்தான் இருக்கிறது. கவலைப்படாமல் புறப்படுங்கள். சௌக்கியமாகக் கொண்டு சேர்க்க வேண்டியது என் பொறுப்பு” என்று தைரியம் அளித்தார். பிறகு என்ன/ புறப்பட்டு விட்டோம். திரும்பி வரும்போது விசுவநாதர் கோயிலைத் தரிசிக்கலாம் என்று முடிவு செய்தோம்.
மாத்லி காம்பில் எங்களுடன் சேர்ந்து கொண்ட புதிய ஜவான் “உடனே கிளம்பினால் இரவு கோபாங் காம்பிற்குப் போய்ச் சேர்ந்து விடலாம்” என்று கூறவே, நாங்களும் அவசர அவசரமாக்ப புறப்பட்டோம்.
உத்தரகாசி 4,000 அடி உயரத்திலிருக்கிறது. அங்கிருந்து நாங்கள் சென்ற பாதை ஆயிரம் ஆயிரம் அடியாக உயர்ந்து கொண்டிருந்தது. இதம் தரும் இயற்கையன்னை கோலோச்சும் இணையில்லா இமய சாம்ராஜ்யத்தின் எழிற்கோட்டைக்குள் நாங்கள் முன்னேறிக் கொண்டிருந்தோம். இன்னும் தவச் சிரேஷ்டர்களும், சித்த மகா புருஷர்களும் நம் கண்களிலிருந்து மறைந்து வாழ்வதாகக் கருதப்படும் மலைப்பகுதிகளைக் குடைந்து சென்ற அந்தக் குறுகலான பாதையில் பாகீரதியைத் தரிசித்துக் கொண்டே, அவள் கோலாகலமாகப் போடும் எழிலட்டங்களைக் கண்டு வியந்து கொண்டே, ஒவ்வொரு திருப்பத்திலும் புதுப் புது ஓவியக் காட்சிகளை மனமார ரசித்துக் கொண்டே அன்னை கங்கை பிறந்தகத்தை நோக்கி உள்ளத்தில் புளகிதம் பொங்கப் பயணம் செய்து கொண்டிருந்தோம்.
ஒன்பதவது மைலில் “மனேரி” என்ற இடத்தில் எழும்பிக் கொண்டிருக்கும் பிரமாண்டமான அனைக்கட்டையும், அதற்காக இயங்கிக் கொண்டிருந்த ராட்சஸ இயந்திரங்கலையும், தேனீக்களாகப் பணியாற்றிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான ஊழியர்களையும் பார்த்துக் கொண்டே சென்றோம்.
பாதை ஓரத்தில் பல கேரள, தமிழ் முகங்களைக் கண்டபோது, உண்மையில் உள்ளம் பூரித்தது. தென்கோடி மக்கள் வடகோடி மக்களுடன் தோளோடு தோள் நின்று, நலமிகு நவபாரதத் தேரை முன்னேறப் பாதையில அர்வமுடன் இழுத்துச் செல்லும் அற்புதக் காட்சியைக் கண்டபோது எங்கள் நெஞ்சம் நிமிர்ந்து நின்றது.
பகீரதனின் பெரு முயற்சியால் வான் உலகிலிருந்து பெருகிப் பாய்ந்து, சிவபெருமானின் சிரசில் தங்கிப் புனிதம் பெர்று, மனிதகுலம் புண்ணியம் பெறப் பூமியில் புரண்டோடிக் கொண்டிருக்கும் பாகீரதியை இங்கு தேக்கி, மின்சக்தியை உற்பத்தி செய்யப் போகிறார்களாம். தன் மக்களின் நலனுக்காக, அங்கு அன்னையும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறாள். தன் சக்தி அனைத்தையும் சேய்களுக்காகவே அர்ப்பணித்து அருளும் தியாகச் சுடரல்லவா அன்னை கங்காதேவி!
ஊத்தரகாசியிலிருந்து பதினெட்டு மைல் பிரயாணத்திற்குப் பிறகு, “பட்வாடி” என்ற ஊருக்கு வந்து சேர்ந்தோம். அங்கு நபுலகங்கா என்ற சிற்றாறு, பாகீரதியுடன் கலக்கிறது. மலைப்பாதையிலிருந்து நூறு அடி இறங்கிச் சென்றால் சங்கமத்தருகில் ஒரு சிவன் கோயிலைத் தரிசிக்கலாம். எட்டாவது நூற்றாண்டில் சீலவர்மன் என்ற மன்னனால் கட்டப்பட்ட கோயில் அது.
அத்தலத்தில் சிவபெருமானைக் குறித்து சூரியன் தவம் இருந்ததால் அங்கு உறையும் மூர்த்தியைப் பாஸ்கரேசுவரர் என்று அழைக்கிறார்கள். இந்த இடம் “பாஸ்கர க்ஷேத்ரம்” என்றும் இந்தச் சங்கமம் “பாஸ்கரப் பிரயாகை” என்றும் அழைக்கப்படுகின்றன.
சிவன் கோயிலின் முன்புறம் ஒரு புராதனக் கணபதியின் உருவச் சிலை இருக்கிறது. ஒரு நவீன நந்தியும் அங்கு காணப்படுகிறது.
கருவறையில் இருக்கும் சிறிய சிவலிங்கம் சுயம்பு மூர்த்தியாகக் காணப்படுகிறது. அருகில் மகாதேவனையும் கருடன் மிது அமர்ந்திருக்கும் லட்சுமி நாராயண மூர்த்தியையும் காண் கிறோம. அங்கு கந்தப் பெருமானும், விநாயக் பெருமானும் கூட இருக்கிறார்கள். பிராகாரத்தில் மகிஷாசுரமர்த்தினியும், பீமேசுவரனும் தனிச் தனிச் சந்நிதிகளில் எழுந்தருளியிருக்கிறார்கள்.
பட்வாடி 5,000 அடி உயரத்திலிருக்கிறது. இங்கிருந்து ஒன்பது மைல்கள் சென்றதும், நாம் 6,000 அடி உயரத்திற்கு வந்து விடுகிறோம். அந்த இடத்திற்குக் கங்கனானி என்று பெயர். ஜமுனோத்ரிக்குச் செல்லும் வழியில் இருப்பது கங்கானி; இது கங்கனானி. இந்தப் பகுதியில் வியாச பகவானின் தந்தை பராசரர் தவம் இயற்றியதாகப் புரான வரலாறு கூறுகிறது. அங்கு ஒரு பலகையில் “பராசரர் ஆசிரமம்” என்று எழுதப்பட்டிருப்பதைக் கண்டேன். அந்த ஆசிரமத்திற்கு செல்ல வேண்டுமானால், அன்னை பாகீரதியை ஒரு தொங்கு பாலத்தின் மூலம் கடந்து அக்கரைக்குச் சென்று, ஒரு சிறு மலையின் மீது ஏறிச் செல்ல வேண்டும். கீழிருந்து பார்த்தபோது, குன்றின் மீது ஒரு சிறு குண்டத்திலிருந்து ஆவி வருவது தெரிந்தது. அங்கு இருந்த ஒருவரிடம் அது என்னவென்று விசாரித்தேன். அது ஓர் உஷ்ண குண்டம் என்றும், அது “ரிஷி குண்டம்” என்று அழைக்கப்படுவதாகவும் அவர் கூறினார். அது பராசரரும் மற்ற முனிவர்களும் நீராடிய குண்டமாகத்தான், இருக்க வேண்டும். அங்கு போய் வருவதென்றால், குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும். பிறகு கோபாங் போவதற்குள் பத்து மணியாகி விடலாம். அந்த நேரத்தில் அப்பகுதிகளில் பயணம் செய்வது நலல்தல்ல. எனவே, நாங்கள் ரிஷி குண்டத்தையும், பராசரர் ஆசிரமத்தையும் கீழிருந்தபடியே கும்பிட்டு விட்டு பயணத்தைத் தொடர்ந்தோம். திரும்பி வரும்போது அங்கு ஏறி போய்ப் பார்க்கலாம் என்ற நல்ல எண்ணத்துடந்தான் சென்றோம். ஆனால் எங்கள் திட்டம் நிறைவேற வில்லை. போகும் போது மிக அவசரம், திரும்பும் போது அதிக அலுப்பு.