அந்தப் பகுதியில் அகத்திய முனிவர் தவம் இருந்ததால் அந்த இடத்திற்கு அகஸ்தியமுனி என்ற பெயர் ஏற்பட்டது. அகத்தியர் ஆராதித்த முருகப்பெருமான், கார்த்திகேய மூர்த்தியாய் அங்குள்ள மலையின் மீது கோயில் கொண்டிருக்கிறாராம்.
பரமசிவன் – பார்வதி திருமணத்திற்காக கூடிய கூட்டத்தின் காரணமாக வடகோடு தாழ்ந்து, தெங்கோடு உயர்ந்தபொது, அதைச் சரிக்கட்டி சமன் செய்ய, குறுமுனியை அல்லவா ஈசுவரன் தென்புலம் அனுப்பி வைத்தார். அந்தத் தமிழ் முனிவர்தான் முதன் முறையாக விந்திய மலையைக் கடந்து தென்னகம் வந்து நம் புண்னிய பாரதத்தை சமய உணர்வாலும், கலாசாரப் பண்பாலும் இணைத்து வைத்தார் என்று புராணங்கள் பறைசாற்றுகின்றன.
ஒரு சமயம் விந்திய மலையைப் பார்த்து நாரதர் “எல்லோரும் சுமேரு பர்வதத்தையும், இமாலயப் பர்வதத்தையும்தானே போற்றுகிறார்கள்! விந்திய பர்வதத்தைப் பற்றி யாருக்குமே தெரியவில்லையே” என்று கூறினாராம். உடனே, விந்தியமலை கோப்ம அடைந்து “எல்லோரையும் ஆட்டிவைக்கிறேன் பார்” என்று சபதம் செய்ததாம்.” பின்னர் அது வளர்ந்து கொண்டேயிருந்ததால் சூரிய சந்திரர்களின் நடமாட்டம் தடைப்பட்டு, தேவர்கள் இருலீள் திண்டாடினார்களாம். அவர்கள் பரமசிவனிடத்தில் போய் முறையிட, அவர் அவர்களைப் பிரும்மாவிடம் அனுப்பி வைத்தாராம். பிரும்மா, தம்மால் ஒன்றும் செய்வதற்கில்லை என்று கூறி அவர்களைத் திருமாலிடம் செல்லும்படி பணித்தாராம். மகாவிஷ்ணுவிடம் அவர்கள் தங்கள் இன்னல்களை முறையிட்டபோது, அவர் அகத்திய முனிவரால்தான் தம் சீடரான விந்திய மலையை வழிக்குக் கொண்டுவர முடியும் என்று கூறி முனிவரிடம் அனுப்பினாராம். பின்னர் எல்லா தேவர்களும் தவத்தில் ஆழ்ந்திருந்த அகத்தியரிடம் சென்று அவரடி பணிந்து முறையிட்டனர். உடனே முனிவர் அங்கு செல்ல, குருவைக் கண்ட விந்திய மலை நமஸ்காரம் செய்தது. சிரம் தாழ்ந்த மலையை அப்படியே இருக்கும்படி கூறிவிட்டு, அகத்தியர் தென்னகம் வந்தாராம்.
அகத்தியர் கோயிலில் நாங்கள் சந்தித்த க்ஷேமானந்த பண்டிட்டிடம் தல மகிமையைப் பற்றிக் கேட்டபோது அவர் மேலே காணும் கதையைக் கூறினார்.
நுழை வாய்லைப் பார்த்தால் ஏதோ ஒரு வீட்டிக்குள் செல்வது போலிருந்தது. உள்ளே சென்றால் ஒரு முற்றம். அங்கு இரண்டு சந்நிதிகள் இருக்கின்றன. ஓர் ஓரமாக பண்டாவின் வீடு இருக்கிறது.
அங்கிருக்கும் கருட பகவானும் நந்திகேசுவரரும் அக்கோயிலின் புராதனத் தன்மைக்குச் சான்று கூறுகின்றனர்.
ஒரு சந்நிதியில் அகஸ்திய ரிஷி முனிவராக இருக்கிறார். மற்றொறில் அகஸ்தீசுவரர் எழுந்தருளியிருக்கிறார். அக்கருவறையில் சலவைக் கல்லாலான லட்சுமிநாராயண மூர்த்தி, பீமசேனன் உருவச்சித்திரங்கல் காணப்படுகின்றன.
அலகநந்தா நம்மை பத்ரிநாத்துக்கு அழைத்துச் செலது பொல், மந்தாகினி நம்மைக் கேதார்நாத்துக்கு அழைத்துச் செல்கிறது. எழிற் கோலத்தோடு ஓடும் அதன் சௌந்தர்யத்தில் லயிக்கும் நம் மனம் உயர்வது போன்றே நாமும் உயர்ந்து கொண்டே போகிறோம்! சாதாரணச் சமவெளியில் பயணம் செய்வது போல்தான் தோன்றுகிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் மந்தாகினிப் பள்ளத்தாக்கைத் திரும்பிப் பார்க்கும் போதுதான், நிமிஷத்துக்கு நிமிஷம் நாம் உயரே போய்க் கொண்டிருக்கிறோம் என்பது புரிகிறது.
பத்ரிநாத்துக்குச் செல்லும் வழியில் இருப்பது போன்ற முக்கியமான சங்கமங்களோ, ஊர்களொ கேதார்நாத் பாதையில் காணப்படவில்லை. வழி நெடுகிலும் பாதையை ஒட்டிச் சில சிற்றாறுகள் இருக்கின்றன. இறங்கி உள்ளே நடந்து சென்றால் பல கிராமங்களைக் காணலாம். அங்கங்கே புராண சம்பந்தமான இடங்களும், புராதனக் கோயில்களும் இருக்கின்றன. அந்தக் காலத்தில் நடந்து சென்றவர்கள் எல்லா இடங்களையும் தரிசிக்கும் பாக்கியம் பெற்றிருந்தார்கள். நாங்கள் இயன்றவரை வழியில் இறங்கி, முக்கியமான இடங்களைப் பார்த்துக் கொண்டே சென்றோம். அகத்திய முனிவர் தவமியற்றிய அகஸ்தியமுனியிலிருந்து இரண்டு மைல்கள் சென்றதுமே கேதார சிகரத் தரிசனம் ஆயிற்று. பனி படர்ந்த அந்த வெண்மலைத் தொடர்ச்சியைக் கண்டதுமே கேதாரேசுவரையையே கண்டது போன்ற ஒரு மகிழ்ச்சி உள்ளத்தில் பொங்கிப் பெருகிற்று.
நான்காவடு மைலில் சந்திரபுரி என்ற சிற்றூர் வந்தது. பாதை ஓரத்திலேயே சிறு கடைவீதி இருக்கிறது. அங்கு அருவிகளிலிருந்து ஓடி வரும் ணீரை வாய்க்கால்கள் மூலம் கொண்டு வந்து பாசனத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்துகிறார்கள். நாங்கள் பல இடங்களில் கண்டதுபோல், இங்கும் மாவரைக்கும் இயந்திரத்திற்கும் அதன் ஓட்டத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
வாய்க்கால் ஓரமாக சற்று நடந்து சென்று, அங்குல்ள சிவாலயத்தை அடைந்தோம். சிறிய ஆலயம்தான்.
சந்திரபுரியில் உறையும் ஈசுவரனின் திருநாமம் சந்திரசேகர மாகாதேவ் என்பதாகும். நம் பகுதிகளில் உள்லது போன்ற சிறு கற்பாறை வடிவில் இருக்கிறது அது. கருவறையில் வேறு மூர்த்திகள் இல்லை. ஆரத்திக் காட்டுவதாற்கு பண்டாவும் இல்லை. சந்திரசேகரரை வழிபட்டு விட்டு, எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.
அந்த ஊரில் சந்திரபாகு என்ற நதி மந்தாகினியுடன் கலக்கிறது. அதனால் அந்த ஊருக்குச் சந்திரபுரி என்ற பெயர் ஏற்பட்டதா, அல்லது சந்திரசேகரர் ஊரைவதால் அப்பெயர் தோன்றியதா என்பது அங்கு இருப்பவர்களுக்கே சரியாகத் தெரியவில்லை.
இரண்டு மூன்று கிலோ மீட்டர் சென்றதும் மந்தாகினிக்கு அக்கரையில் வெண் கோபுரத்துடன் கூடிய ஒரு கோயில் தெரிந்தது. விசாரித்ததில் அது துர்க்கையம்மன் கோயில் என்றும் இந்திரானி தேவி என்பது திருநாமம் என்றும் அறிந்தோம்.
மூன்று மைல்கள் சென்றதும் பிஹிரி என்ற ஒரு கிராமம் இருப்பதாகவும், அங்கு பீமசேனனின் கோயில் இருப்பதாகவும் அந்திரபுரியில் ஓர் அன்பர் கூறவே, அந்த இடம் வந்ததும் காரை நிறுத்தச் சொன்னோம். உள்ளூர் வாசிகள் அந்தக் கிராமத்தை பீரி என் கிறார்கள.
ஆலயத்தின் சிறிய சந்நிதி ஆரையினுள் இருக்கும் பாறையில் செதுக்கப்பட்டுள்ல பீமசேனனினுருவம் மிகவும் புராதனமான சிற்பமாகத் தோன்றியது. பஞ்சபாண்டவர்கள் சஞ்சாரம் செய்த பகுதி. ஆதலா, அவர்களுடைய பராக்கிரமங்களையெல்லாம் செவி வழிவந்த செய்திகளாக அங்கு போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவர்களுடைய வாழ்க்கைச் சரிதங்கள், மலைவாழ் மக்களைத் தியாக சிந்தை உடையவர்களாகவும், அறநெறியோடு மனதிட்பம் உடைய வீரர்களாகௌவ்ம் ஆக்கியிருக்கின்றன. சிறு வயதில் பாட்டிமார்கள் சொல்லும் கதைகளில் நாம் கேள்வியுற்ற கதாநாயகர்கள் வாழ்ந்து, வீரச்ச்செயல்கள் புரிந்த இடங்களை நேரில் காணுமபோது, புராணக் கதைகள் நம் சிந்தையைப் புனிதப்படுத்தும் விந்தையை நினைத்துப் பூரித்துப் போகிறோம்.
அந்தப் பகுதியில் பீரி என்ற ஓர் அசுரனிருந்தானாம். அவன் மக்களுக்கு மிகவும் தொல்லை கொடுத்து வந்தானாம். அப்போது அங்கு வந்த பீமசேனனிடம் ஊர் மக்கள் சென்று முறையிட்டனராம். உடனே பீமசேனன், அவனை தன் இரு கரங்களாலும் தூக்கி கீழே போட்டு, காலால் மிதித்துக் கொன்றானாம். அதனாலேயே அந்த ஊருக்கு பீரி என்ற பெயர் ஏற்பட்டதாம்.
அங்கு இருந்த ஓர் இலைஞன் உற்சாகத்துடன் கூறியதைக் கேட்டபோது, களைப்பெல்லாம் பறந்து, எங்கள் தோள்களும் விம்மிப் புடைத்து நின்றன.
மார்பில் கவசம் அணிந்து அதன் மீது மாலைகள் புரள இடக்காலை மடித்து, வலக்காலைத் தொங்கப் போட்டுக் கொண்டு வெகு கம்பீரமாக அமர்ந்திருக்கிறான் பீமன். அவனது வலக்கரத்தில் கதையும், இடக்கையில் எருமைக்கடா தலையும் வைத்திருக்கிறான். அருகில் விநாயகரைப் போன்ற உருவத்துடன் ஒரு சிறு கல்லும், உருவமே சரியாகப் புரியாத மற்றொரு கல்லும் இருக்கின்றன.
அடுத்து, குண்ட்சட்டி என்ற கிராமம். முன்பு அதுவரையில்தான் பஸ்கள் வந்து கொண்டிருந்தனவாம். அங்கிருந்து மட்டக்குதிரைகளில் ஏறி, முப்பது மைலிலுள்ல கேதார்நாத்துக்குச் செல்வார்களாம். அதைக் கேட்டது, “குண்டு சட்டியில் குதிரை ஓட்டுகிறான்” என்ற பழமொழி எங்களுக்கு நினைவுக்கு வந்தது! வாய் விட்டு சிரித்தோம்.
அதன் அருகிலுள்ல சோனியூர் என்ற இடத்தில்தான் பாணாசுரன் சிவபெருமானைக் குறித்துக் கடும் தவம் இருந்து, பெரும் வலிமையைப் பெற்றானாம்
சற்றுத் தொலைவு சென்றதும் எங்களுக்கு சௌகம்பா மலைச்சிகரம் நன்றாக தரிசனம் ஆயிற்று. தற்போது “வெள்ளிப்பனிமலையின் மீதுலாவுவோம்” என்ற பாரதியின் வாக்கு நினைவுக்கு வந்தது.
அங்கிருந்து மூன்றாவது கிலோமீட்டரில் உள்ல குப்தகாசிக்குக் காலை பதினொன்றரை மணிக்கு வந்து சேர்ந்தோம். கேதார்நாத் அங்கிருந்து சுமார் இருபத்து நான்கு மைல். ருத்ரபிரயாகைக்கும், கேதார்நாத்துக்கும் சம தொலைவில் இருக்கும் குப்தகாசி, சுமார் நாலாயிரத்து ஐந்நூறு அடி உயரத்திலிருக்கிறது.
பஸ் நிலையத்தில் இறங்கி, ஆலயத்தைக் காணச் சென்றோம். அங்கிருந்து சுமார் அரை பர்லாங் ஏறிச் சென்றால் ஊரை அடையலாம். மலைச்சரிவிலேயே வீடுகள் கட்டியிருக்கிறார்கள். எல்லாம் கருங்கல்லாலும், மரத்தாலும், ஓடுகளாலும் ஆன பழங்கால வீடுகள்தான்.
இப்போது காசி விசுவேசுவரர் ஆலயத்தினுள் நுழைந்து கொண்டிருக்கிறோம். உழைந்ததும் சந்நிதிக்கு எதிரே ஓர் அழகிய சிறு குளன்ம் இருக்கிறது. காசியை நினைவுபடுத்துவது போன்று, இதை “மணிகர்ணிகா” என்று அழைக்கிறார்கள். இங்கு இரு ஜலதாரைகள் கொட்டிக் கொண்டிருக்கின்றன. நந்திமுகமுடைய குழாயிலிருந்து கங்கையும், யானை முகமுடைய குழாயிலிருந்து யமுனையும் வருவதாக நம்புகிறார்கள். நல்ல வெயிலில் பயணம் செய்திருந்ததால், களைப்புத்தீர கங்கையின் கீழும், யமுனையின் கீழும் நின்று, தனித்தனியாகவும் நீராடினோம்.
கோயிலுக்கு ஒரே பிராகாரம்தான். சுற்றிலும் திண்ணை இருக்கிறது. புனித நீராடிவிட்டு, சுவாமி தரிசனத்திற்குச் சென்றோம்.
அர்த்த மண்டபத்தில் ஒரு விநாயர் சிலையிருக்கிறது. அழகான வேலைப்பாடுகள் நிறைந்த அமைப்பு. அவருக்கு வலப்புறம் வராகியும் இந்திராணியும் இருக்கிறார்கள். இரண்டுமே கண்கவர் சிற்பங்கள்தான். அங்கு பித்தளையிலான நந்தியும் இருக்கிறது.
கருவறையில் நாம் தாராளமாக நுழையலாம். காசி விசுவேசுவரர் சுயம்புமூர்த்தி. கேதார் லிங்கம் போண்றே அமைப்பு. அதற்கு முகக் கவசம் போட்டிருக்கிறார்கள். ஆவுடையாரில் கங்கை நீர் சுரந்து கொண்டிருக்கிறது.
சுவாமிக்கு நமேலே உள்ள சுவரில் அன்னபூற்ணா தேவி காட்சி தருகிறாள். இருபுறமும் ஸ்படிகம் போன்ற சலவைக் கல்லால் ஆன விநாயகமூர்த்தி, கார்த்திகேயன் இருவரின் சிறு சிலாவடிவங்கல் காணப்படுகின்றன. பார்வதியின் தோழிப்பெண் ஒருத்தியும் அங்கு அமர்ந்திருக்கிறாள்.
அப்போதுதான் ஸ்நானம் செய்துவிட்டு மடியாக வந்த பண்டா, தியானஸ்லோகம் சொல்லி, மந்திரங்களுடன், அபிஷேக ஆராதனைகள் செய்தார்.
பக்கத்திலேயே தனியாக ஒரு சந்நிதி இருக்கிறது. அதில், விருஷபாரூடரான அர்த்தநாரீசுவரர் எழுந்தருளியிருக்கிறார். பக்கத்தில் பார்வதிதேவி காட்சி தருகிறாள்.
பரம்பொருள் தமது பரம ரகசியத்தைக் காட்டி அருளிய திருத்தலமாம் அது. குப்த என்றால் ரகசியம். காசி என்றால் பேரொளி.
பாணாசுரனின் மகள் உஷாதேவி, பார்வதிதேவியைக் குறித்து தவமிருந்து உபதேசம் பெற்றது குப்தகாசியில்தான். பாணினி, பதஞ்சலி, காத்தியாயனர் முதலியோர் தவம் இருந்து பேறு பெற்ற இடம் இது. பக்தர்களின் வேண்டுகோலுக்கு இணங்கி, திருவடி தூக்கி, உடுக்கை அடித்து தத்துவ தரிசனம் தந்தான் பரம ந். ஓம் என்ற நாதவொளி பிறந்தது. தமருகத்திலிருந்து தோன்றிய “கும்” என்ற மூல ஒலியே பாணினி சூத்திரத்திற்கு அடிப்படையாக அமைந்தது. பிரணவ மந்திரமான பரம ரகசியம் இத்தனை வெளிப்படையாகத் தெரிந்து விட்டதே என்று பரமசிவன் கோபம் அடைந்து, உடனே மறைந்து விட்டார். தனிமையில் விடப்பட்ட பார்வதிதேவி, தவம் இருந்தாள். தன்னை விட்டு அகலக்கூடாது என்று நாதனிடம் நெக்குருக வேண்டினாள். பரமன் சிரித்தான். “உன்னை விட்டு நான் போவதா? அப்படியென்றால் உன்னையே நீ புரிந்து கொள்லவில்லை என்றுதான்பொருள். சரியாகப் பார். உன்னில் நான் பாதியாக இருக்கிறேன்” என்ற தத்துவோபதேசம் செய்தார். அதனாலேயே இங்கு பார்வதிதேவி அர்த்தநாரீசுவரர் வடிவில் இருக்கிறாள்.
வசிஷ்ட மகரிஷி இங்குதான் பிரும்ம ரிஷி ஆனாராம். பரமேசுவரன் தேவர்களுக்கும், மகரிஷிகளுக்கும் தம்முடைய ரகசிய ரூபமான சந்திரசேகர வடிவத்தைக் காட்டி அருள்கியதாலும் இது குப்தகாசி என்று அழைக்கப்படுகிறதாம்.