பெரும்பூதூர்உடையவர்
வைஷ்ணவமதஆச்சாரியர்களில்தலைசிறந்தவராகவிளங்குபவர்ஸ்ரீராமாதுஜர். ஆதிசங்கரர்வேதங்கள்உபநிஷதங்கள்ஆகியவற்றுக்கெல்லாம்பாஷ்யங்கள்செய்து, பரப்பிரம்மம்ஆம்இறைவனைஅடையஞானமார்க்கத்தைநமக்குக்காட்டிச்சென்றார்.
ஞானமார்க்கத்தோடுபக்திமார்க்கமும்சேர்ந்தால்தான்பிரம்மத்தைஉணர்வதுஎளிதுஎன்றுஉபதேசித்து, சங்கரரின்வித்வைதசித்தாந்தத்தைக்கொஞ்சம்மாற்றி, விசிஷ்டாத்வைதசித்தாந்தமாகநமக்குஅருளியவர், ஸ்ரீராமானுஜர். இவரதுவாழ்க்கைவரலாறுசுவையுடையது.
சற்றுஏறக்குறையத்தொள்ளாயிரத்துநாற்பத்துஇரண்டுவருஷங்களுக்குமுன்பரமபாகவதர்களானகேசவசோமயாஜி, காந்திமதிஎன்பவர்களின்பிள்ளையாகராமாநுஜர்அவதரிக்கிறார். இவர்அவதரித்ததலம்ஸ்ரீபெரும்பூதூர். இவருக்குத்தாய்தந்தையர்அன்றுஇட்டபெயர்இளையாழ்வார். பாலப்பருவம்கழிந்ததும்காஞ்சியைஅடுத்த
திருப்புட்குழியில்உள்ளயாதவப்பிரகாரத்துகுருகுலத்தில்சேர்த்துவிடுகின்றனர்பெற்றோர்.
இவருக்கோயாதவப்பிரகாசர்சொல்லும்வேதாந்தவிளக்கங்கள்எல்லாம்விபரீதமாய்ப்படுகின்றன. குருவையேதிருத்தமுனைகிறார்அந்தஇளவயதிலேயேஇவர், சிஷ்யர்களால்இவர்இளையபெருமாள்எனஅழைக்கப்படுகிறார்.
தம்மைமிஞ்சிவிடுவான்பையன்என்றுகண்டகுருயாதவப்பிரகாசர், காசியாத்திரைசெய்வதென்றும், அங்குகங்கையில்பயலைமூழ்கடித்துவிடுவதுஎன்றும்திட்டமிட்டுப்பயணம்துவக்குகிறார். ஆனால்இவர்தமிழ்நாட்டுக்குச்செய்யவேண்டியகாரியங்கள்எத்தனையோஇருக்கின்றனவே. பரந்தாமன்சும்மாயிருப்பானா?
விந்தியமலைச்சாரலிலேயேஇளையபெருமாளைச்சந்திக்கிறான். தானும்தன்மனைவியும்வேடன்வேட்டுவச்சிஉருவில்வந்து, யாதவப்பிரகாசர்சிஷ்யகுழாத்திலிருந்துஇளையபெருமாளைக்கூட்டிவந்து, காஞ்சிக்குப்பக்கத்தில்உள்ளசோலையில்விட்டுவிட்டுமறைந்துவிடுகிறான்.
காஞ்சிக்குவந்தஅந்தஇளையபெருமாளுக்குஅங்குள்ளபேரருளாளனுக்குச்சேவைசெய்யஆவல்உண்டாகிறது. அப்படியேகாஞ்சிக்குஇரண்டுமைல்தொலைவில்உள்ளசாலைக்கிணற்றிலிருந்துதினம்தண்ணீர்இறைத்துத்திருமஞ்சனகைங்கர்யத்தைச்செய்துவருகிறார். இந்தச்சமயத்தில்தான்ஸ்ரீரங்கத்திலிருந்துஸ்ரீஆளவந்தார், கச்சிவரதனதுதரிசனத்துக்குவந்தவர், இந்தஇளைஞனைப்பார்க்கிறார். அவனதுதேஜஸைக்கண்டு, தாம்நீண்டநாட்களாகத்தேடிவந்ததுஇவனல்லவாஎன்றுதெரிந்து, இவனைத்தன்னிடம்சேர்க்கஅந்தஅத்திகிரிவரதனிடமேவேண்டிக்கொள்கிறார்.
பெரியநம்பியிடம்சொல்லி, இளைஞனைஸ்ரீரங்கம்கூட்டிவரச்சொல்கிறார். ஆனால்இளைஞன்ஸ்ரீரங்கம்போய்ச்சேருமுன்பே, ஆளவந்தார்திருநாட்டுக்குஎழுந்தருளிவிடுகிறார். அவரைத்திருப்பள்ளிபடுத்திவைத்திருக்கிறார்கள் (திருநாட்டுக்குஎழுந்தருள்வதுஎன்றால், வைஷ்ணவபரிபாஷையில் – இறந்துவிட்டார்என்றும்திருப்பள்ளிபடுத்துதல்என்றால், கிடத்திவைத்திருத்தல்என்றுமேபொருள்).
அப்படிஅவரதுபூதஉடல்இருக்கும்போது, அவரதுவலதுகையில்மூன்றுவிரல்கள்மட்டும்மடங்கியேஇருக்கின்றன. ஆளவந்தார்மனத்தில்இருந்தமூன்றுஅபிலாஷைகளையும்தட்டின்றிநிறைவேற்றுவேன்என்றுஇளையாழ்வார்வாக்குக்கொடுத்தபின்பே, மடங்கியவிரல்கள்நிமிர்கின்றன. இதன்பின்வைஷ்ணவமதப்பிரசாரகராகஇளையாழ்வார்முனைந்துவேலைசெய்கிறார். வீட்டைத்துறக்கிறார். மனைவியைத்துறக்கிறார். சந்நியாசியாகிறார்.
ஸ்ரீராமானுஜர்என்றதிருநாமத்தோடு, ஸ்ரீரங்கம்மேல்கோட்டைதிருநாராயணபுரம்முதலியஇடங்களில்தங்கியிருந்து, வைஷ்ணவமதஸ்தாபகராகத்தம்புகழ்நிறுவுகிறார். கிட்டத்தட்டநூற்றுஇருபதுவயதுவரைவாழ்ந்தஇந்தஆச்சாரியாரையேஇளையாழ்வார், இராமானுஜர், எம்பெருமானார், எதிராஜர், ஸ்ரீபாஷ்யக்காரர், உடையவர்என்றெல்லாம்வைஷ்ணவஉலகம்இன்றும்போற்றுகிறது. இவரதுபுகழையேதிருவரங்கத்துஅமுதனார்இராமானுஜர்நூற்றந்தாதிஎன்றுநூற்றுஎட்டுப்பாடல்களில்பாடிமகிழ்கிறார்.
நாட்டியநீசச்சமயங்கள்மாண்டன், நாரணனைக்
காட்டியவேதம்களிப்புற்றதுதென்குருகைவள்ளல்
வாட்டமிலாவண்தமிழ்மறைவாழ்ந்தது, மண்ணுலகில்
ஈட்டியசீலத்துஇராமானுஜன்தன்இயல்புகண்டே!
என்றபாட்டுநூற்றுஎட்டுப்பாடல்களில்ஒருபாட்டு. நல்லார்பரவும்இந்தஇராமானுஜரதுதெளிவுற்றகீர்த்தியையேமேலும்மேலும்விவரிக்கிறார், திருவரங்கத்துஅமுதனார். இராமானுஜருக்குராமாவதாரத்திலேஅளவுகடந்தஈடுபாடு. படிகொண்டகீர்த்திஇராமாயணம்என்னும்கோயிலாகவேஇராமானுஜரைப்பார்க்கிறோம், அவரதுவாழ்க்கைமுழுதும். இந்தஇராமானுஜரதுஅவதாரஸ்தலமானஸ்ரீபெரும்பூதூருக்கேசெல்கிறோம்இன்றுநாம். –
ஸ்ரீபெரும்பூதூர்சென்னைக்குத்தென்மேற்கேபங்களூர்செல்லும்வழியில்இருபத்துஐந்துமைல்தொலைவில்உள்ளபெரியஊர். செங்கல்பட்டிலிருந்துசிங்கப்பெருமாள்கோயில்வந்து, அங்கிருந்துவடக்குநோக்கித்திரும்பினாலும், இவ்வூர்வந்துசேரலாம்.
இந்தஊருக்குஆதிப்பெயர்பூதபுரிஎன்றுஇருந்திருக்கிறது. மயானஉருத்திரன்சடைவிரித்துஆடியஆட்டம்கண்டு, பூதகணங்கள்சிரித்திருக்கின்றன. அதனால்கோபமுற்றஉருத்திரன்பூதகணங்களைத்தன்சந்நிதியிலிருந்துவிலக்கியிருக்கிறான். கவலையுற்றபூதகணங்கள்ஸ்ரீமந்நாராயணனைப்பிரார்த்தித்திருக்கிறார்கள்.
நாராயணனோஅனந்தனைஅழைத்துஒருசரஸைஅமைக்கச்சொல்லிப்பூதகணங்களைஅந்தஅனந்தசரஸில்முழுகிஎழச்சொல்லிப்பூதகணங்களைத்திரும்பவும்உருத்திரனிடம்சேர்த்திருக்கிறார். இப்படிச்சமாதானம்பண்ணிவைத்தநாராயணன்பெற்ற ‘நோபல்பரிசு‘ தான்இந்தக்கிராமம்.
பூதங்களேநிர்மாணித்ததனால்பூதபுரிஎன்றுகிராமத்துக்கும்பெயர்நிலைத்திருக்கிறது. நாராயணனும்ஆதிகேசவப்பெருமாள்என்றதிருநாமத்தோடுஅங்கேயேகோயில்கொண்டுவிடுகிறான். பூதபுரிதாளடைவில்பூதூர்என்றும், உடையவர்பிறந்தமகிமைகாரணமாகப்பெரும்பூதூர், ஸ்ரீபெரும்பூதூர்என்றெல்லாம்பிரசித்திபெற்றுவிடுகிறது.
அம்பரீஷன்பௌத்திரனானஹரீதரனுக்குநேர்ந்தஒருசாபம், இத்தலத்துக்குஅவன்வந்து. அனந்தசரஸில்நீராடியதால்நீங்கியிருக்கிறது. அதனால்மகிழ்ச்சியுற்றஹரீதரன், ஆதிகேசவப்பெருமாளுக்குக்கோயில்எடுப்பித்து, உத்சவாதிகளையெல்லாம்ஏற்பாடுபண்ணியிருக்கிறான்.
சென்னையிலிருந்துவரும்போதுதூரத்திலேயேகோபுரதரிசனம்செய்யலாம். ரோட்டைவிட்டுவிலகிக்கோயில்வாசலுக்குவந்துசேரலாம். கோபுரவாசலுக்குநேராகஉள்ளதுவஜஸ்தம்பத்துக்குத்தெற்கேஇருக்கும்குதிரைக்கால்மண்டபம்வழியாகமேலேஏறிச்சென்றால், வடபக்கம்இருக்கும்உடையவர்சந்நிதியையம், வாசலுக்குமேற்கேஆதிகேசவப்பெருமாள்சந்நிதி
ஸ்ரீபெரும்பூதூர்கோயில்யையும்காணலாம்.
கூடவரும்அர்ச்சகர்கள்முதலில்நம்மைஉடையவர்சந்நிதிக்கேஅழைத்துச்செல்வார்கள். ஆம்! அருளாளரானஉடையவர்இங்கேஆதிகேசவனைவிடப்புகழ்பெற்றவராயிற்றே. நாமும்அவரையேமுதலில்தரிசித்து, அவர்அருள்பெற்று, அதன்பின்ஆதிகேசவன்அருள்பெறவிரையலாம். உடையவர்சந்நிதியில்மூலவர்தெற்குநோக்கியதிருக்கோலத்தில்இருக்கிறார். அந்தமூலவருக்குஇளையாழ்வார்என்றபிள்ளைத்திருநாமமேநிலைத்திருக்கிறது. இந்தமூலவருக்குமுன்செப்புச்சிலைவடிவில்இருப்பவரேஉற்சவமூர்த்தி. கூப்பியகையுடன்இருக்கும்இந்தஎம்பெருமானாரைத்தமர்உகந்ததிருமேனிஎன்பார்கள். இராமானுஜரதுஜீவியகாலத்திலேயே, அவருடையவடிவத்தைஅழகாகச்சிற்பவடிவங்களாகச்செய்து, அவ்வடிவங்களைஅவரேஆலிங்கனம்பண்ணச்செய்து, பிரதிஷ்டைசெய்ததாகவரலாறு.
அப்படிப்பிரதிஷ்டைசெய்யப்பெற்றவைகளில்மூன்றுபிரசித்தமானவை. இப்படிஸ்ரீரங்கத்தில்பிரதிஷ்டைபண்ணியதுதானானதிருமேனிஎன்றும், மேல்கோட்டையில்பிரதிஷ்டைசெய்ததுதான்உகந்ததிருமேனிஎன்றும், இந்தஸ்ரீபெரும்பூதூரில்பிரதிஷ்டைசெய்யப்பட்டதுதமர்உகந்ததிருமேனிஎன்றும்சொல்லப்படுகின்றன.
தானானதிருமேனியையும்தானுகந்ததிருமேனியையும் : விடத்தமர்உகந்ததிருமேனியேஅழகானது. பிரசித்திஉடையது.
உடையவரின்உறவினரும்சிஷ்யர்களுமானமுதலியாண்டானும், கந்தாடைஆண்டானும்உவந்துபிரதிஷ்டைசெய்தமூர்த்தியானதால், இவரைத்தமர்உகந்ததிருமேனிஎன்கிறார்கள். உடையவரதுதிருவடியின்கீழ்ச்சடகோபம்இருக்கும். இங்குள்ளசம்பிரதாயம்தெரியாமல், சடகோபம்சாதிக்கவேணும்என்றுகேட்கக்கூடாது, அர்ச்சகரை. அப்படிக்கேட்டால்அவர்மிகவும்கோபித்துக்கொள்வார். முதலியாண்டான்சாதிக்கவேணும்என்றேகேட்கவேண்டும். என்றுமேதிருவடிதாங்கஆசைப்பட்டமுதலியாண்டானுக்குஉடையவர்அளித்தகௌரவம்இது.
இந்தஉடையவரைவணங்கிவிட்டுவெளியேவந்தால், துவஜஸ்தம்பமண்டபம்வந்துசேருவோம். இங்குநான்குஸ்தம்பங்களுக்குமேற்பட்டஸ்தம்பங்கள்இருந்தாலும், அவைகளில்நான்கையேபூதங்கள்ஸ்தாபித்துக்கோயிலைக்கட்டியிருக்கின்றன. இங்குதான்உற்சவகாலங்களில்திருமஞ்சனம்முதலியஆராதனங்கள்நடைபெறுகின்றன.
இனிமேற்கேதிரும்பிஆதிகேசவர்சந்நிதிக்குவரலாம். வாயிலிலேயேஜயவிஜயர்என்னும்துவாரபாலகர்கள்கம்பீரமாகஎழுந்துநிற்பார்கள். அவர்களிடம்அனுமதிபெறாமலேயேஉள்ளேநுழையலாம். ஆதிகேசவப்பெருமாள்கிழக்குநோக்கியவராய்நின்றதிருக்கோலத்தில்நமக்குச்சேவைசாதிப்பார். தூக்கியஇரண்டுகைகளில்சங்கும்சக்கரமும். மற்றொருவலதுகைஹஸ்தம்அபயப்பிரதானம்அளிக்கும். மற்றொருஇடக்கையோநீண்டுதாழ்ந்துதொடையில்இருத்தப்பட்டிருக்கும்.
ஆதிகேசவனைச்சென்றுகண்டுவணங்குபவர்களுக்குச்சம்சாரமாகியகடலின்ஆழம்தொடையளவுதான்என்றுகாட்டுவதாகஐதீகம். வலதுமார்பில்ஸ்ரீவத்ஸம். இத்துடன்ஸ்ரீதேவிபூதேவியார்வேறே. இந்தஆதிகேசவருக்குமுன்னாலேகேசவாநந்தனவர்த்தனன்என்னும்உத்சவர். இவரதுதிருஉருமற்றப்படிஆதிகேசவன்திருஉருபோலவேஇருந்தாலும், தாழ்ந்தஇடக்கைமட்டும்ஆகூயவரதமாகஇருக்கிறது. ஆம், மக்கள்எல்லோரையும்வாருங்கள்என்றுஅழைத்துஅருளுகின்றநிலை. (இவருக்குஒருபயம்போலும். பிரபலமானஉடையவர்பக்கத்திலேயேஇருப்பதால், அவரைவணங்கி, விண்ணப்பம்செய்யவேண்டியவைகளைச்செய்துவிட்டுத்தம்மைக்கவனிக்காமலேசேவார்த்திகள்போய்விடுவார்களோஎன்று.) அப்படிஅவசரமாகஓடுபவர்களைக்கூடத்தன்பக்கம்அழைத்துஅருள்செய்யும்அருளாளர்இவர்.
இந்தக்கோயிலின்பெரியபிராகாரத்தில்தென்மேற்குமூலையில்தாயார்சந்நிதியிருக்கிறது. தாயாருடையதிருநாமம்எதிராஜவல்லி. உடையவர்அவதரித்தபின், பெருமாள்அவருடையபெயரோடுதன்பெயரும்இணைந்திருக்கவேண்டுமென்றுவிரும்பி, எதிராஜநாதன்என்றபெயரைஏற்றுக்கொண்டிருக்கிறார். எதிராஜநாதனதுமனைவியாம்லக்ஷ்மியும்தன்பெயரைஎதிராஜவல்லிஎன்றேமாற்றிக்கொள்கிறாள். இத்தனைஈடுபாடுஎதிராஜனிடம், அந்தப்பெருமாளுக்கும், இந்தத்தாயாருக்கும். இவர்சர்வாலங்காரசுந்தரி.
இன்னும்இக்கோயிலில்சக்கரவர்த்தித்திருமகனுக்கு, கருடனுக்குஎல்லாம்தனித்தனிச்சந்நிதிகள்இருப்பதுபோல், நம்மாழ்வாருக்கு, ஆண்டாளுக்கு, திருக்கச்சிநம்பிகளுக்கெல்லாம்தனித்தனிச்சந்நிதிகள்உண்டு. இவைகளில்பிரசித்தமானதுஆண்டாள்சந்நிதியே. ஆண்டாளிடத்து, அவளதுபாசுரங்களிடத்துஉடையவருக்குநல்லஈடுபாடு.
ஆண்டாளுக்குஓர்ஆசை – தான்பாடியநாச்சியார்திருமொழிப்பிரபந்தத்தைத்திருமாலிருஞ்சோலையில்பெருமானுக்குநூறுதடாநிறையஅக்காரஅடிசல்பண்ணி, அத்துடன்சமர்ப்பிக்கவேண்டுமென்று.
அந்தஆசையைநிறைவேற்றிவைக்கிறார், உடையவர். அந்தஆசைநிரம்பியகுதூகலத்தில், ஸ்ரீபெரும்பூதூர்மாமுனியாம்உடையவரை ‘அண்ணா ‘ என்றேஅழைக்கிறாள்ஆண்டாள். இதனாலேயேஇவருக்குக்கோயிலண்ணன், திருப்பாவைஜீயர்என்றெல்லாம்பெயர்கள்வழங்குகின்றன. ஆண்டாளைமங்களாசாஸனம்பண்ணியபெரியவர்கள், ‘பெரும்பூதூர்மாமுனிக்குப்பின்னானாள்வாழியே!’ என்றேவழிபடுகிறார்கள்.
இன்னும்இந்தக்கோயிலில்பார்க்கவேண்டியவைஎவ்வளவோஉண்டு. அத்தனையும்பார்க்கநமக்குநேரம்ஏது? அதிலும்இராமானுஜரை, அவரதுதமர்உகந்ததிருமேனிவடிவழகைக்கண்டபின், கண்கள்மாத்திரம்என்ன, இதயமுமேநிறைந்துவிடுமே.
மற்றவைகளைப்பார்க்க; அவ்வடிவங்களைஉள்ளத்திருத்தஇடம்ஏது? ஆதலால்கோயிலைக்கடந்துவெளியேவருகிறபோது, நாமும்அந்தப்பிள்ளைப்பெருமாள்ஐயங்காருடன்சேர்ந்து,
பிடிக்கும்பரசமயக்குலவேழம்பினிற, வெகுண்டு
இடிக்கும்குரல்சிங்கஏறுஅலையான், எழுபாரும்உய்யப்
படிக்கும்புகழ்எம்இராமானுஜமுனிபல்குணமும்
வடிக்கும்கருத்தினற்கேதிருமாமணிமண்டபமே
என்றுபாடிக்கொண்டேதிரும்பலாம்.
உத்தரமேரூர்சுந்தரவரதன்
இதுஜனநாயகயுகம். மக்களைமக்களுக்காகமக்களேஆளும்முறைஇன்றுஎங்கும்பரவியிருக்கிறது. மக்களுக்காகஅவர்கள்பிரதிநிதிகளைத்தேர்ந்தெடுக்கும்முறையேஎலெக்ஷன்என்றும்தேர்தல்என்றும்சொல்கிறோம். வெள்ளைக்காரர்கள்காலத்தில்இந்தஎலெக்ஷன்முறைஅமலுக்குவந்தது.
அப்போதுமுதலில்வாக்குரிமை, சொத்துடையவர்களுக்கும்கல்விஅறிவில்தேர்ச்சிபெற்றவர்களுக்குமேஇருந்தது. பின்னர்நாளடைவில்எழுதப்படிக்கத்தெரிந்தஎல்லோருக்கும்வாக்குரிமைஉண்டுஎன்றுவந்தது. இந்தநிலையில்கூடவாக்காளர்களில்பெரும்பகுதியினர்க்குத்தங்கள்கையெழுத்தைப்போடத்தெரியுமேஒழிய, பிறர்எழுதியதையோஅச்சடித்ததையோவாசிக்கத்தெரியாது.
ஆதலால்வாக்குரிமைச்சீட்டாம்ஓட்பதிவுசெய்வதில்எவ்வளவோதகராறுகள். இவற்றைத்தவிர்க்க, ஓட்டுப்பெட்டிகளில்பச்சை, சிவப்பு, மஞ்சள்என்றவர்ணக்காகிதங்களைஒட்டி, அந்தவர்ணத்துக்குஉரியபிரதிநிதிகளைத்தேர்ந்தெடுத்தார்கள். மங்களகரமானமஞ்சள்என்பதுபோன்றதேர்தல்முறையிருந்தது, நமதுதலைமுறையிலேயே.
காலம்மாறிற்று. வெள்ளைக்காரனைவிரட்டிஅடித்துவிட்டுநாமேநம்மைஆளும்சுதந்திரம்பெற்றோம். நாமோநம்ஓட்டர்களுக்குஎழுதப்படிக்கத்தெரியவேண்டுவதுஅவசியம்என்றுகருதவில்லை. வயதுவந்தஎல்லாஆண்மகனுக்கும், பெண்மகளுக்கும்வாக்குரிமைஉண்டுஎன்றுநிர்ணயித்தோம்.
இதுகாரணமாக, முன்னர்இருந்ததுபோல், பச்சைமஞ்சள்சிவப்புஎன்பதைக்கூடநமதுவோட்டர்களால்வேறுபடுத்திக்காணவகையில்லை. அவ்வளவுஅறிவுவளர்ச்சி! ஆதலால்இரட்டைக்காளை, கதிர்அரிவாள், ஓலைக்குடிசை, உதயசூரியன், தாமரை, கூஜா, சைக்கிள்என்றெல்லாம்சின்னங்களைஓட்டுப்பெட்டியில்ஒட்டி, அந்தப்பாகுபாட்டைத்தெரிந்தாவதுஓட்டளிக்கச்செய்திருக்கிறோம், நம்ஓட்டர்களை, இந்தமுறையில்கூடஎத்தனையோகுளறுபடிகள். இந்தமுறையெல்லாம்நமதுதாயகமாம்இந்தியாவிலே.
இம்மட்டோடு, மக்களின்பிரதிநிதிகளாகயார்யார்வரலாம்என்பதற்குயாதொருநிர்ணயமும்இல்லை. யார்வேண்டுமானாலும்வரலாம்என்றநிலைவேறே. இப்படித்தான்ஜனப்பிரதிநிதி, ஓட்டர்கள், ஓட்டளிக்கும்முறைஎன்றெல்லாம்நமதுஜனநாயகம்விரிந்திருக்கிறது.
‘இந்தஜனநாயகம்வாழ்க!’ என்றுஊரோடுசேர்ந்துகூவுவதைத்தவிர, வேறுஒன்றும்செய்யஇயலாதவர்களாகஇருக்கிறோம்நம்மில்பெரும்பாலோர். இப்படியெல்லாம்இன்றுநடக்கும்நமதுஅருமைத்தமிழ்நாட்டிலே, அன்று, ஆம், ஆயிரம்வருஷங்களுக்குமுன்இந்தத்தேர்தல்முறைஎப்படிநடந்ததுஎன்றுதெரிந்துகொள்ளவேண்டாமா? இதைத்தெரிந்துகொள்ளவேஇன்றுநாம்உத்தரபேரூருக்குச்செல்கிறோம்.
உத்தரமேரூர்செங்கல்பட்டுஜில்லாவிலேஉள்ளஒருசிறியஊர்தான். இதற்குப்போகச்சென்னை – திருச்சிடிரங்க்ரோட்டிலே, சென்னையிலிருந்துநாற்பதுமைல்வந்து, செங்கல்பட்டு, பாலாற்றுப்பாலம்எல்லாம்கடந்துமாமண்டூர்பக்கம்மேற்குநோக்கிப்பத்தொன்பதுமைல்போகவேணும். இல்லைஎன்றால்சென்னையிலிருந்துகாஞ்சிவந்து, வேகவதி, பாலாறுஎல்லாவற்றையும்கடந்துமாகறல்வழியாகவும்வந்துசேரலாம்.
ஊருக்குள்செல்லும்வழியிலேயேகடைத்தெருவையும்பஸ்ஸ்டாண்டையும்ஒட்டி, ஒருசிறுமாடக்கோயில், மதில்எல்லாம்இடிந்துகிடப்பதால், ஊரில்உள்ளகழுதைகளும், மாடுகளும்இக்கோயில்பிராகாரத்திலேயேநிற்கும். இந்தஅடையாளங்களைவைத்துஎளிதாகக்கோயிலைக்கண்டுபிடித்துவிடலாம்.
இந்தக்கோயிலில்தான்வைகுண்டப்பெருமாள்இருக்கிறார். அவருக்குஎண்னெய், தண்ணீர்கிடைப்பதுமீக்கஅரிதுஎன்றாலும்இந்தக்கோயில்சுவர்களில்தான்ஒருகல்வெட்டு, சோழமன்னர்கள்காலத்துஎலெக்ஷன்எப்படிநடந்ததுஎன்றுகூறுகிறது. இந்தக்கல்வெட்டின்படி, அந்தக்காலத்துமக்கள்வாக்குரிமைச்சீட்டுகளைஓலையில்எழுதி, அதற்கெனவைத்துள்ளஒருகுடத்தில்போடுவார்கள். இப்படிப்போடும்முறையையேகுடவோலைஎன்பார்கள்.
ஏரிவாரியம், தோட்டவாரியத்துக்குப்பிரதிநிதிகளாகவிரும்புபவர்கள்பெயர்களைஓட்டர்கள்எழுதி, இக்குடத்தில்இடுவார்கள். பின்புகுடவோலையைப்பெரியசபைகூட்டிவயதுமுதிர்ந்தநம்பியாரின்முன்னிலையில்ஒருசிறுவனைக்கொண்டு, ஓலைகளைஒவ்வொன்றாய்எடுத்து, ஒருமத்தியஸ்தன்கையில்கொடுப்பார்கள். அவனும்உள்ளங்கையைஅகலவிரித்துக்காட்டிவிட்டுஓலையைவாங்கிவாசிப்பான். அவன்வாசித்தபிறகே, நம்பியாரும்சபையோரும்படிப்பார்கள்.
யாரூடையபெயருக்குஅதிகச்சீட்டுகள்கிடைத்திருக்கின்றனவோ, அவர்களேதோட்டவாரியம்ஏரிவாரியம்முதலியபொதுக்காரியங்களுக்குநியமிக்கப்படுவார்கள். இதையெல்லாம்விளக்கமாகவேகூறும்கல்வெட்டு.
இக்கல்வெட்டுபண்டிதவத்ஸன், வீரநாராயணன், குஞ்சரமல்லன்என்றவிருதுப்பெயர்களைப்பெற்றபராந்தகச்சோழன்காலத்தில்பொறிக்கப்பட்டதுஎன்றுஅறிகிறோம். இவன்ஆட்சிக்காலம்கி.பி. 907 முதல் 950 வரை – நாற்பத்துமூன்றுஆண்டுகள். இக்கல்வெட்டின்ஒருபகுதியைப்படிக்கிறீர்களா?
‘ஸ்வஸ்திஸ்ரீமதுரைகொண்டகோபர
கேசரிவர்மருக்குபாண்டுபதினாலாவது
நாள்பதினாறுகாளியூர்க்கோட்டத்து
தன்கூற்றுஉத்தரமேரூர்சதுர்
வேதிமங்கலத்துஸபையோம்:
இவ்வாண்டுமுதல்எங்களுக்குப்பெரு
மானடிகள்எம்பெருமான்ஸ்ரீவீர
நாராயணன்ஸ்ரீபராந்தகதேவன்
ஸ்ரீமுகம்வரக்காட்ட, ஸ்ரீமுகப்படு
ஆக்ஞையால்சோழநாட்டுப்
புறங்கரம்பைநாட்டு, ஸ்ரீவங்க
நகர், காரநிசைகொண்டயகரமவித்த
பட்டனாசிய, சோமாசிப்பெருமாள்இருந்து
வாரியமாகஆட்டொருகாலும்ஸம்வத்ஸர
வாரியமும்ஏரிவாரியமும்இடுவதற்கு
வியவஸ்தைசெய்தபரிசாவது…….’
குடவோலைகல்வெட்டுள்ளகோயில்
என்ன, போதுமல்லவா! கல்வெட்டுத்தமிழ்என்றால்இப்படித்தான்இருக்கும். இதில்தலைவால்எல்லாம்கண்டுபிடித்துச்சரித்திரம்உருவாக்குவதுஎன்பதுசிரமசாத்தியமானகாரியமே. அதைஎல்லாம்சரித்திரஆராய்ச்சியாளர்களுக்கேவிட்டுவிடலாம்.
இக்குடவோலைக்கல்வெட்டுசாஸனத்தின்படியார்யார்வாரியப்பிரதிநிதிகளாகத்தேர்தலுக்குநிற்கயோக்கியதைஉடையவர்கள், யார்யார்தகுதியற்றவர்கள்என்றும்நாம்அறிகிறோம். எழுபதுவயதுக்குமேற்போகாதவர்களாகவும், முப்பத்தைந்துவயதுக்குக்குறையாதவர்களாகவும்இருத்தல்வேண்டும். தேர்தலுக்குநிற்பவர்கள்சாஸ்திரங்களைக்கற்றுணர்ந்தவர்களாகவும், குணங்களில்குறைபாடு. சுந்தரவரதர்கோயில்
இல்லாதவர்களாகவும்இருத்தல்வேண்டும். வாரியங்களில்வேலைசெய்துகணக்குக்காட்டாமல்இருந்தாரும், அவர்களதுபந்துக்களும்தேர்தலுக்குநிற்கத்தகுதியற்றவர்கள். (இதைவிடக்கடுமையானநிபந்தனைகள்நமதுஇந்தியச்சட்டத்திலும்இருக்கவேசெய்கிறதுஎன்றாலும், அத்தனையையும்சரிக்கட்டிவிட்டு, உண்மையிலேயேதகுதிஇல்லாதவர்கள்பலர்இன்றையத்தேர்தல்களுக்குநின்றுவெற்றிபெறுகிறார்கள்என்பதும்உண்மைதான்). குடவோலையைப்பற்றியகல்வெட்டுத்தகவல்கள்இத்தனையையம்எளிதாகத்தெரிந்துகொண்டீர்கள், ஆனால்இவ்வளவுதகவலையும்வைகுண்டப்பெருமாள்கோயில்சென்றால்தெரிந்துகொள்ளமுடியாது. கோயிலின்முன்பாகம்கடைகளால்மறைக்கப்பட்டிருக்கும். கல்வெட்டுகளைப்படிப்பதுஎன்பதுஇயலாதகாரியம். இடிந்துவிழுந்தகற்களை – கல்வெட்டுஇருந்தகற்களைத்தான் – மக்கள்தங்கள்தங்கள்வீட்டுக்கட்டடம்கட்டஎடுத்துப்போகிறார்கள்என்றும்கேள்வி. புதைபொருள்இலாகாக்காரர்கள்கொஞ்சம்விழிப்போடிருந்துஇதையெல்லாம்தடுக்கவேணும்.
வந்ததோவந்தோம், ஆதலால்படிஏறி, மூடியகதவிடுக்குவழியாகவைகுண்டப்பெருமாளைவணங்கிவிட்டுமேலேநடக்கலாம்.
இந்தஉத்தரமேரூரில்பார்க்கவேண்டியகோயில்கள்இன்னும்இரண்டுஉண்டு. இங்குஅந்தக்காலத்தில்ஏழுகோயில்கள்இருந்ததாகச்சொல்கிறார்கள். இக்கோயில்களில்எல்லாம்பெரியதும்சிறப்புடையதும்சுந்தரவரதராஜசுவாமிகோயில்தான். இதுஅந்தஊரில்உள்ளபெரியதெருவின்மேலக்கோடியில்விமானங்கள்கோபரங்கள்எல்லாம்உடையதாயிருக்கிறது.
இக்கோயில்மூன்றுதளங்களோடுகூடியகோயில், அடித்தளத்தில்இருப்பவர்சுந்தரவரதராஜர். இவர்நின்றகோலத்தில்சேவைசாதிப்பார். இவரைத்தவிர, இந்தஅடித்தளத்திலேயேஅச்சுதவரதன், அநிருத்தவரதன், கல்யாணவரதன், ஆனந்தவல்லித்தாயார், ஆண்டாள்முதலியஎல்லோரையும்தரிசிக்கலாம்.
அடுத்ததளத்தில்இருப்பவர்வைகுண்டவரதர். அவருடன்கிருஷ்ணார்ச்சுனர், யோகநரசிம்மர், லக்ஷ்மிவராகன்எல்லோருமேஇருக்கிறார்கள், இவர்களையும்தரிசித்தபின், மூன்றாவதுதளத்தில்ஏறலாம். அங்குநல்லவசதியாகக்காலைநீட்டிக்கொண்டிருப்பவர்ரங்கநாதவரதர். இக்கோயில்இப்படிமூன்றுதளங்களாகக்கட்டப்பட்டிருந்தாலும், அவைகளில்வீற்றிருக்கும்ஸ்திரபேதங்கள்நேருக்குநேராகஒன்றின்மேல்ஒன்றாகஅமைக்கப்படவில்லை, இப்படிவிமானஅமைப்பும்மூர்த்திகளின்அமைப்பும்கொண்டகோயில்தமிழ்நாட்டில்அதிகம்இல்லை.
இந்தஇடத்தில்உள்ளசுந்தரராஜவரதனைப்பிரும்மாருத்ரன்பூதேவிமார்க்கண்டேயர்முதலியோர்வழிபட்டுமுத்தியடைந்தார்கள்என்பதுதலபுராணவரலாறு. மார்க்கண்டனுக்குஅருள்புரிந்தவர்சிவபெருமான்என்பதுதானேபுராணப்பிரசித்தம். அப்படிஇருந்தும்இந்தவரதனிடம்அவர்ஏன்வந்துசேர்ந்தார்என்றுசந்தேகிப்போம்நாம். தம்சந்தேகத்தைத்தீர்த்துவைக்கநம்மாழ்வாரேவருவார்.
புக்கடிமையினால்தன்னைக்கண்ட
மார்க்கண்டேயன்அவளை
நக்கபிரானும்அன்றுஉய்யக்கொண்டது.
நாராயணன்அருளே
கொக்கலர்நடந்தாழைவேலி
திருக்குருகூர்அதனுள்
மிக்கஆதிப்பிரான்நிற்க
மற்றைத்தெய்வம்விளம்புதிரே!
என்பதுதானேநம்மாழ்வார்விளக்கம்.
இந்தஉத்தரமேரூர்முழுவதையும்இப்படியேவரதர்களும்வைகுண்டவாஸர்களுமேஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறார்கள்என்றில்லை. ஊருக்குமேல்கோடியில்கொஞ்சஇடத்தைக்கைலாசநாதருக்கும்அவருடையகுமாரர்சுப்பிரமணியருக்கும்ஒதுக்கிக்கொடுத்திருக்கிறார்கள்.
சுப்பிரமணியர்கோயில்சமீபத்தில்எழுந்தகோயில். கைலாசநாதர்கோயிலையும்விமானத்தையும்பார்த்தாலேஅதுபல்லவர்காலத்தியகோயில்என்றுதெரியும். அங்குள்ளகல்வெட்டுகளும்அதனையேகூறுகின்றன, நடுவிலேபிரதானமானகோயில், அதைச்சுற்றிச்சின்னஞ்சிறுகோயில்கள்எழுந்திருக்கின்றன. அக்கைலாசநாதர்கோயிலைத்தவிர, கேதாரீசுவரருக்கும்ஒருகோயில்உண்டு. அக்கோயில்சுவரில்உள்ளகல்வெட்டுகள்பழைமையானவை. ஆனால்இன்றுஅதனைப்புதுப்பித்துக்கட்டியிருக்கின்றனர்.
சரித்திரத்தின்ஏடுகளைப்புரட்டினால், ஒருகோட்டைஇருந்ததாகவும், அதில்யமுனைக்கரையிலிருந்துவந்தவிராடராஜன்வசித்ததாகவும்சொல்வார்கள். இக்கோட்டையையேபின்னர்ராஜேந்திரசோழன்கைப்பற்றிக்கொண்டு, இந்தஊருக்கேராஜேந்திரசோழசதுர்வேதிமங்கலம்என்றுபெயரிட்டிருக்கிறான். அவனேஇங்குவேதம்ஓதுதலுக்கும்ஓதுவித்தலுக்கும்நிபந்தங்கள்ஏற்படுத்தி, நிலங்களைத்தானம்வழங்கியிருக்கிறான்.
இவ்வூருக்குஅழகுதருவதுஊரின்மேற்கேயுள்ளஏரி. மிகவும்பெரியஏர்அது. லோகமகாதேவிகுளம்என்றுகணக்குகள்கூறும். எந்தலோகமகாதேவிஎன்றுதெரியவில்லை. சோழமன்னரின்மனைவியரில்எத்தனையோலோகமகாதேவிகள். அவர்களில்யார்பெயரால்இந்தக்குளம்வெட்டப்பட்டதுஎன்பதைஎல்லாம்ஆராய்ச்சியாளர்களுக்கேவிட்டுவிடலாம்நாம். சுந்தரவரதனையம்கைலாசநாதரையும்வணங்கியதிருப்தியோடுஊர்திரும்பலாம். குடவோலைக்கல்வெட்டைத்தாங்கியும்கவனிப்பாரற்றுக்கிடக்கும்வைகுண்டப்பெருமானுக்காகஒருசொட்டுக்கண்ணீரும்வடிக்கலாம்.