மயிலமலைமுருகன்
நீலங்கொள்மேகத்தின்மயில்மீதே
நீவந்தவாழ்வைக்கண்டுஅதனாலே,
மால்கொண்டபேதைக்குஉன்மணம்நாறும்
மார்தங்குதாரைத்தந்துஅருள்வாயே.
வேல்கொண்டுவேலைப்பண்டுஎறிவானே!
வீரங்கொள்சூரர்க்கும்குலகாலா!
நாலந்தவேதத்தின்பொருளோனே!
நானென்றுமார்தட்டும்பெருமாளே! என்பதுஅருணகிரியார்பாடியதிருப்புகழ், முதல்நாலடிகளில், பழையஅகத்துறைப்பாடல்களின்மணம்சிறந்துவீசுகிறது. நீலமயில்வாகனனானமுருகனைக்கண்டுகாதலித்துமயக்கமுற்றுக்கிடக்கும்பேதைப்பெண்ணின்மயக்கம்தெளிவிக்க, அவன்மார்பிலேபுரளும்மாலையையேவேண்டிநிற்கிறாள்தோழி. முருகனைநினைத்தால்மயிலைநினைக்கிறார்; மயிலைநினைத்தால்அவன்ஏந்தியவேலைநினைக்கிறார்கவிஞர். ‘வேலுண்டுவினைஇல்லை. மயிலுண்டுபயமில்லை‘ என்றுதானேமுருகபக்தர்கள்உள்ளத்தில்உரம்பெறுகிறார்கள். மயிலோடும்வேலோடும்முருகனைத்தொடர்புபடுத்திமுதன்முதல்அந்தஅழகனைக்கற்பனைபண்ணியவன்சிறந்தகலைஞனாகஇருந்திருத்தல்வேண்டும்.
இறைவன்படைத்தஇயற்கை, மிக்கஅழகுடையது ‘ என்பதைஅறிவோம். விரிந்துபரந்துகிடக்கும்நீலவானம். அகன்றுஆழ்ந்துகிடக்கும்அக்கருங்கடல், அக்கடலின்அடிவானத்திலேஉதயமாகும்இளஞ்சூரியன், அச்சூரியனிடமிருந்தேஒளியைக்கடன்வாங்கி, அதைஉலகுக்குவழங்கும்குளிர்நிலா. அந்நிலாவோடுபோட்டிபோட்டு, மின்னிமினுக்கும்விண்மீன்கள்எல்லாம்நிரம்பஅழகுவாய்ந்தவையே.
இன்னும்இப்பூமியில்உள்ளமலை, மலையிலிருந்துவிழும்அருவி, ஓடிப்பெருகும்ஆறு, ஆற்றங்கரையில்நின்றுநிழல்தரும்மரங்கள், அம்மரங்களில்பூத்துக்குலுங்கும்பூக்கள், கனிகள், பரந்தவயல்களிலேபச்சைக்கம்பளம்விரித்தால்போலஇலங்கும்நெற்கதிர்கள், புல்பூண்டுகள், ஊர்வன, பறப்பன, நடப்பனஎல்லாம்இயற்கைஅன்னையின்அழகுவடிவங்கள்தாமே. இவைதானேமனிதனால் ‘கைபுனைந்துஇயற்றாக்கவின்பெறுவனப்பு‘. இந்தவனப்பிலேஉள்ளம்பறிகொடுத்துநின்றகவிஞனே ‘முற்றியஆழியிலேஅலைவந்துமோதிஎறிகையிலேகற்றைக்கதிர்எழும்‘ காட்சியைக்கண்டிருக்கிறான். ‘உலகம்உவப்பப்பலர்புகழ்ஞாயிறுகடற்கண்எழும்‘ காட்சியிலே, அழகைக்கண்டிருக்கிறான்; இளமையைக்கண்டிருக்கிறான்; இறைமையைக்கண்டிருக்கிறான்.
விரிந்திருக்கும்நீலவானம்நீலநிறத்தோகையைவிரித்தாடும்மயிலாகக்காட்சிஅளித்திருக்கிறது. அந்தவானில்ஒளிவீசிக்கொண்டுதோன்றும்செஞ்சுடர்த்தேவனாம்இளஞாயிறையேவேலேந்தியகுமரனாகவும்கண்டிருக்கிறான். இன்னும்மேட்டுநிலங்களிலேதினைக்கதிர்விம்மிவிளைந்து, அங்குஒருகாட்டுமயில்வந்துநின்றால்அங்கேயும்கலைஞன்உள்ளத்தில்காதல்விளைந்திருக்கிறது. இப்படித்தான்நீண்டகாலத்துக்குமுன்னாலேயே, ஆம். உலகம்தோன்றி, அதில்மனிதன்தோன்றித்தமிழ்பேசக்கற்றுக்கொண்டஅந்தக்காலத்திலேயே, அவன்கண்டமுதற்கடவுள்முருகனே. உருவமேஇல்லாதகடவுளுக்குஉருவத்தைக்கற்பிக்கமுனைந்ததமிழ்க்கலைஞன்கண்டமுதற்கடவுள், முருகனாக, இளைஞனாக, அழகனாகஉருப்பெற்றிருக்கிறான்.
இதனால்தான்முருகனைநினைத்தால், அவன்ஏறிவரும்மயிலைநினைக்கிறோம். ‘எட்டும்குலகிரிஎட்டும்விட்டோடஎட்டாதவெளிமட்டும்புதையவிரிக்கும்கலாபமயூரத்தன்‘ என்றுகவிஞர்கள்முருகனைஅழைத்திருக்கிறார்கள். இப்படிவிரித்ததோகையோடுகூடியமயில்மேல்வருகிறான்அவன்என்றுஎண்ணினாலும், சிற்பவடிவங்களிலேவிரியாததோகையோடுகூடியமயிலையேவடித்திருக்கிறார்கள். இதனாலேயேஎங்கேயாவதுஒருசிறியகுன்று, ஒருபக்கம்உயர்ந்தும், மறுபக்கம்தாழ்ந்தும்மயில்தோகையைப்போல்படிந்தும்கிடந்தால், அந்தக்குன்றின்பேரிலேமுருகனைப்பிரதிஷ்டைசெய்யத்தமிழர்கள்மறக்கவில்லை . இத்தகையகுன்றுகளில்இரண்டுபிரபலமானவை. ஒன்றுகாரைக்குடியைஅடுத்தகுன்றக்குடி. இரண்டாவதுதென்ஆர்க்காட்டுமாவட்டத்தில்விழுப்புரத்துக்கும்திண்டிவனத்துக்கும்இடையேஉள்ளமயிலம். இரண்டிடத்தும்குன்றுகள்படிந்ததோகையைஉடையமயில்போலவேஇருந்தாலும், பின்னுள்ளதலத்தையேமயிலம்என்றுபெயரிட்டுஅழைத்திருக்கிறார்கள். முருகன்ஊர்ந்துவரும்மயிலோடுதொடர்புபடுத்தியுள்ளதலம்இதுஒன்றுதான்என்றுஅறிகிறோம். இந்தமயிலம்என்றதலத்துக்கேசெல்கிறோம்நாம்இன்று.
தொண்டைநாட்டின்வடகோடியிலுள்ளவேங்கடத்தில்துவக்கியநமதுபயணத்தில், தொண்டைநாட்டின்பலதலங்களையும்பார்த்துவிட்டு, நடுநாட்டுக்குள்நுழைகிறோம்இப்போது, அந்தப்பயணம்மயிலேறும்பெருமாளோடுதுவங்குகிறது, மகிழ்ச்சிக்குரியதே.
இந்தமயிலத்தைஅடைவதுஎளிது. சென்னை, திருச்சி ‘டிரங்க்ரோட்டில்‘ திண்டிவனத்துக்குத்தெற்கேஎட்டாவதுமைல்வரைவந்துபின்புகிழக்குநோக்கிப்பாண்டிச்சேரிசெல்லும்வழியில்திரும்பினால், அந்தரோட்டில்மூன்றாவதுமைலில்நீண்டுயர்ந்தகோபுரத்தோடுகூடியஒருசிறுகுன்றுதோன்றும். கோயிலைநோக்கிக்காரைத்திருப்பினால்முதன்முதல்நாம்காண்பதுஒருதமிழ்க்கல்லூரி. இதைநிறுவியவர்சிவஞானபாலயசுவாமிகள். பொம்மையபுரம்மடாதிபதிஇவர்கள். இவர்களதுமுன்னோர்களேமயிலத்துமுருகன்கோயிலைஉருவாக்கியிருக்கிறார்கள். மலைமீதேகாரைக்கொண்டுசெல்லஒருவழிஅமைத்திருக்கிறார்கள். அதன்வழியேசெல்லலாம்மலைமேலே. இல்லை, முருகன்ஊர்ந்துவரும்மயிலாம்மயிலமலைமீதுநாம்காரில்செல்லுவதாவது? என்றுகருதினால்கல்லூரிவாயிலிலேயேகாரைநிறுத்திவிட்டு, கற்களைப்பரப்பிஅமைத்திருக்கும்பாதைவழியாகவேமலைஏறலாம். இந்தமயிலமலைமிகச்சிறியகுன்றுதான். ஆதலால்ஏறுவதுஒன்றும்சிரமமாகஇராது. இந்தப்பாதைவழியாகக்குன்றின்மீதுவந்துசேர்ந்தால்கோயிலின்தெற்குவாயிலுக்குவந்துசேருவோம். கோயிலின்பிரதானவாயில்கிழக்குநோக்கியிருந்தாலும்அந்தகோபுரவாயில்எப்போதும்அடைத்துவைக்கப்பட்டேஇருக்கும். அதனால்தெற்குவாயில்வழியாகவேகோயிலில்நுழையவேணும்.
இந்தமயிலமலையும், இங்குள்ளகோயிலும்எப்படிஉருவாயிற்றுஎன்றுதெரிந்துகொள்ளவேண்டாமா? முருகனோடுபோர்செய்தசூரபதுமன்முருகன்எடுத்தபேர்உருவைக்கண்டுநல்லறிவுபெறுகிறான்.
கோலமாமஞ்ஞைதன்னில்
குலவியகுமரன்தன்னை
பாலன்என்றிருந்தேன்அந்நாள்,
பரிசுஇவைஉணர்ந்திலேன்யான்,
மால்அயன்தனக்கும்மேலை
வானவர்தனக்கும், யார்க்கும்
மூலகாரணமாய்நின்ற
மூர்த்திஇம்மூர்த்திஅன்றோ!
என்றுபாடிப்பரவுகிறான். இப்படிப்பாடியவன்அப்பெருமான்ஊர்ந்துவந்தமயிலுருவத்திலேயே, தான்அவருக்குவாகனமாகஇருக்கஅருள்புரியஅவரைவேண்டுகிறான். அவ்ரும்தண்தமிழ்நாட்டிலேவராகநதிக்குவடகரையிலேமயில்வடிவம்கொண்டமலையாகநின்றுதவம்செய்தால், அவன்விருப்பம்நிறைவேறும்என்கிறார். அப்படியேமயில்உருவத்தில்மலையாகிசூரபதுமன்தவம்செய்தஇடமேமயிலம்என்னும்மயூராசலம்.
மயிலம்முருகன்கோயில்
இதேசமயத்தில்கணத்தலைவர்களில்ஒருவரானசங்குகன்னர்செய்தஒருதவறுக்காகஇறைவன்அவரைப்பூலோகத்தில்மனிதனாகப்பிறக்கும்படிசபிக்கிறார். சாபவிமோசனம்வேண்டிநின்றபோது, ‘நீபூமியின்கண்அவதரித்துவேதசிவாகமங்களைவிளக்கி, சைவம்நன்குவளரச்செய்து, பலசித்தர்களுக்குஅருள்செய்வாய்; அப்போதுமுருகனோடயேபோர்செய்யும்நிலைவாய்க்கும், அப்போதுமுத்திஅடைவாய்‘ என்கிறார்.
அந்தச்சங்குகன்னராம்கணத்தலைவரே, மயிலைமலைக்குகிழக்கேயுள்ளகடலிலே, பத்துவயதுடையபாலசித்தராக, சடைமுடிகவசகுண்டலம், இட்டலிங்கம், உருத்திராக்கத்துடன்தோன்றுகிறார். மயிலமலைக்கேவந்துதவம்இயற்றுகிறார்முருகனைக்குறித்து. முருகனோஅவர்சிவஅபராதிஎனச்சொல்லித்தரிசனம்தரமறுக்கிறார். பாலசித்தருக்குப்பரிந்துபேசிவெற்றிபெறாதவள்ளிதெய்வானைஇருவரும்கோபித்துக்கொண்டு, பாலசித்தரதுஆசிரமத்துக்கேவந்துஅவருக்குப்பாதுகாப்புஅளிக்கிறார்கள். இனியும்முருகப்பெருமானால்சும்மாஇருக்கமுடியுமா? தன்மனைவியரைத்தேடிக்கொண்டுமயிலமலைக்கேவருகிறார். பாலசித்தரும்வந்திருக்கும்வேட்டுவன்யார்என்றுஅறியாதுஅவரோடுபோர்புரிகிறார்; மல்யுத்தமேசெய்கிறார். பின்னர்பாலசித்தருக்கும்சூரபதுமனுக்கும்முருகன்தம்உருக்காட்டுகிறார். தம்இருமனைவியருடனும், பாலசித்தர்விருப்பப்படியேகல்யாணகோலத்திலேயேஅம்மலைமீதுகோயில்கொள்கிறார். இப்படித்தான்மயிலமலைஎழுந்திருக்கிறதுஇங்கே. அந்தமலைமேல்முருகனும்ஏறிநின்றிருக்கிறான். பாலசித்தரதுஅருளால்அம்மனைஅம்மையார்திருவயிற்றில்அவதரித்தசித்தரே, சிவஞானபாலயதேசிகர், பொம்மையபுரம்திருமடம்நிறுவியவர். இவருடையபரம்பரையிலேபதினெட்டாவதுபட்டத்தில்இருப்பவர்கள்தான்இன்றையசிவஞானபாலயசுவாமிகள்.
இத்தனையும்தெரிந்தபின்கோயிலுள்நுழையலாம். முதலில்விநாயகரைவணங்கிவிட்டுமேலேநடக்கலாம். கோயிலின்தெற்குக்கட்டில்விசுவநாதரும்விசாலாக்ஷியும்இருக்கிறார்கள். பாலசித்தரைத்தன்னோடுஐக்கியப்படுத்திக்கொண்டசிவலிங்கத்திருஉருவேவிசுவநாதர். இந்தவிசுவநாதரைவணங்கிவிட்டு, அடுத்தவடக்குவாயிலின்வழியாகச்சென்றுமேற்குவாயிலில்திரும்பினால், முருகனைக்கண்குளிரக்காணலாம், வள்ளிதெய்வானையுடன், கிழக்குநோக்கியவராய்க்கல்யாணகோலத்திலேயேநிற்கிறார்மூலமூர்த்தி. மலையின்வடதலைஉயர்ந்திருப்பதுபோல, இங்குள்ளமயிலும்வடக்குநோக்கியமுகத்தோடேயேநிற்கிறது. முருகன்நல்லஅழகன், இளைஞன். இந்தமூர்த்தியைத்தரிசித்தபோதுஎனக்குஓர்ஐயம். இந்தஅழகானகுமரனையா ‘குறிஞ்சிக்கிழவன்என்றுஓதுகிறதுகுவலயம்?’ என்று. எப்படியும்இருக்கட்டும்; அந்தக்கிழவனாம்குமரனைத்தரிசித்துவிட்டு, சென்றவாயில்வழியேவெளியேவந்துபிராகாரத்தைச்சுற்றி, ஒன்றுக்குமூன்றாகஇருக்கும்உற்சவமூர்த்திகளையும்வணங்கிவிட்டுவெளியேவரலாம். வெளியில்வந்ததும், தென்பக்கத்தில்உள்ளதிருமடத்தில்இருக்கும்சிவஞானபாலயசுவாமிகளையும்கண்டுநம்வணக்கத்தைத்தெரிவிக்கலாம்.
இந்தத்தலத்தின்பெயருக்குஏற்பஇங்குஒருநல்லஅழகானதங்கமயில்வாகனம்ஒன்றும்செய்துவைத்திருக்கிறார்கள். நிரம்பப்பெரியவாகனம். இந்தத்தங்கமயிலின்மேல்ஆரோகணித்துமுருகன்மலைமேலிருந்துஇறங்கிவரும்போதுகீழேஇருந்துநோக்கினால், ஒருபெரியமயில்உண்மையிலேயேபறந்துவருவதுபோலவேமயிலின்மேல்ஆரோகணித்துமுருகன்மலைமேலிருந்துஇறங்கிவரும்போதுகீழேஇருந்துநோக்கினால், ஒருபெரியமயில்உண்மையிலேயேபறந்துவருவதுபோலவேநமக்குத்தோன்றும். இந்தத்தங்கமயில்வாகனக்காட்சிகாணவேண்டுமானால்தைப்பூசத்தன்றாவதுஅல்லதுபங்குனிமாதம்நடக்கும்பிரமோத்சவத்தில்ஐந்தாம்திருநாளன்றாவதுசென்றுஇரவுபத்துப்பதினோருமணிவரைஅம்மலையிலேயேகாத்துக்கிடக்கவேண்டும். சும்மாகிடைக்குமாமயிலாசலன்பாதம்? இந்தமயில்மேல்வரும்முருகனைத்தரிசித்தால்,
எங்கும்தன்வடிவுஎன
விசுவரூபங்கொண்ட
சிறப்பொடுபிறப்பிலான்,
நம்பிறவிமாற்றவே
ஈசன்ஒருமதலையானோன்,
அங்கைகொண்டுஎட்டிப்
பிடிக்குமுன், முருகனுடன்
அம்புலிஆடவாவே!
அயில்வேலன்மயிலம்வரும்
மயில்வாகனத்தன்உடன்
அம்புலிஆடவாவே!
என்றுசிதம்பரமுனிவருடன்சேர்ந்தேநாமும்பாடலாம். பிள்ளைத்தமிழ்பாடிக்கொண்டேதிரும்பலாம்.