அழல்உருவன்
அண்ணாமலையான்
ஒருபலத்தபோட்டி, பிரம்மாவுக்கும்மகாவிஷ்ணுவுக்கும்தான். ஆம்தந்தையும்மகனுமேதம்மில்யார்பெரியவர்என்றுவாதமிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்தவாதத்தைத்தீர்த்துவைக்கசிவபிரான்வருகிறார். எவ்வளவோசொல்லிப்பார்க்கிறார். இருவரும்கேட்கிறபடியாகஇல்லை. கடைசியாகஅவரேஒருபோட்டியைஏற்பாடுபண்ணிஅந்தப்போட்டியில்யார்வெற்றிபெறுகிறார்களோஅவர்களேபெரியவர்என்றுதீர்மானிக்கலாம்என்கிறார். இருவரும்இசைகிறார்கள்.
அவ்வளவுதான், அவர்வானுறஓங்கிவளரும்ஒருஅழல்பிழம்பாகமாறுகிறார். அந்தஅற்புதஉருவின்அடியையோமுடியையோயார்முதலில்கண்டுவருகிறார்களோஅவர்களேபெரியவர்என்றுபோட்டிஅமைகிறது. மகாவிஷ்ணுவராகஉருவில்அடிதேடப்புறப்படுகிறார். அதலபாதாளங்களையேஊடுருவிச்செவ்கிறார். அன்னஉருவில்பிரம்மாவானுலகில்பறந்துபறந்துசெல்கிறார்முடிகாண, சென்றுகொண்டேஇருக்கிறார்கள்இருவரும். அடியையோமுடியையோகண்டபாடாகஇல்லைஇருவருக்கும். இருவரில்விஷ்ணுகொஞ்சம்யோக்கியமானவர். ஆதலால்அடியைக்காணஇயலவில்லைஎன்றுதன்தோல்வியைஒப்புக்கொண்டுதிரும்பிவிடுகிறார்பூலோகத்திற்கு. பிரம்மாஅப்படித்தோல்வியைஒப்புக்கொள்ளத்தயாராகஇல்லை. ஏதாவதுகுயுக்திபண்ணிஇறைவன்முடியைக்கண்டுவிட்டதாகச்சொல்லவிரும்புகிறார்.
அந்தச்சமயத்தில்ஒருதாழம்பூதலைகீழாகவருகிறது. எங்கிருந்துவருகிறாய்என்றுகேட்டால், இறைவன்முடியிலிருந்துவருகிறேன்அதிலிருந்துநழுவிகற்பகோடிகாலங்கள்ஆகிவிட்டனஎன்றுசொல்கிறதுதாழம்பூ. அதைச்சரிக்கட்டுகிறார்பிரம்மா. தன்னைஇறைவன்முடியிலிருந்துபிரம்மாஎடுத்துவந்ததாகப்பொய்சாட்சியம்சொல்லச்செய்கிறார். இவர்கள்சொல்வதுபொய்என்றுஅறியஎவ்வளவுநேரம்செல்லும்இறைவனுக்கு. பிரம்மாவைப்பூலோகத்தில்சாதாரணமனிதனாகப்பிறக்கும்படிசபிக்கிறார். தாழம்பூதன்னுடையபூசைக்கேஉரியதல்லஎன்றுஇறைவனால்விலக்கப்படுகிறது. விஷ்ணுதன்தோல்வியைஒப்புக்கொண்டதைமெச்சிஅவருக்குத்தன்அடியையும்முடியையுமேகாட்டுகிறார். அதற்காகஅழல்உருவில்இருந்தஇறைவன்மலைஉருவில்குறுகுகிறார். அப்படிப்பொங்கழல்உருவனாகஇருந்தஇறைவனேஅண்ணாமலையானாகமாறிநிற்கிறார்.
இப்படிஒருகதை, அண்ணாமலைஎன்னும்மலைபூவுலகில்தோன்றியதற்கு. இந்தக்கதையைஎல்லாம்இன்றையபகுத்தறிவாளர்கள்ஒப்புக்கொள்வார்களா? கதைக்குப்பின்னால்இருக்கும்தத்துவஉண்மையைச்சொல்லாவிட்டால். தன்னைப்படைத்துக்காத்துஅழிக்கும்தலைவனானஇறைவனைக்காணமனிதன்எவ்வளவோகாலம்முயன்றிருக்கிறான். மக்களுள்இரண்டுபிரிவினர். ஒருவர்செல்வத்தால்சிறந்தசீமான்கள்; மற்றவர்அறிவால்உயர்ந்தஅறிஞர்கள். செல்வத்தால்செய்யமுடியாதகாரியம்ஒன்றுமேஇல்லைஎன்றுசெருக்குடையவர்செல்வந்தர். அறிவால்அறியமுடியாதசெயல்ஒன்றும்இருக்கவேஇருக்காதுஎன்றகர்வம்உடையவர்அறிஞர். உண்மைஎன்னஎன்றால்இவர்கள்இருவராலேயுமேஇறைவனைக்காண்பதுஇயலாதுஎன்பதுதான். செருக்கும்கர்வமும்நிறைந்தஉள்ளத்தால், இறைவன்முடியைஎன்ன. அடியையுமேகாணமுடியாதுஎன்றஉண்மையைத்தான்விளக்குகிறதுஅண்ணாமலையார்கதை.
செல்வராலும்அறிஞராலும்அறியொணாதஇறைவன்பின்னர்யாருக்குஎளியவனாகத்தன்உருவைக்காட்டுகிறான்என்றால், காதலாகிக்கசிந்துகண்ணீர்மல்கும்பக்தர்களுக்குத்தான். பக்திச்சுவைநனிசொட்டச்சொட்டப்பாடியமணிவாசகர், அண்ணாமலையில்அந்தப்பொங்கழல்உருவமானஅண்ணாமலையானைகண்டபோது ‘ஆதியும்அந்தமும்இல்லாஅரும்பெருஞ்சோதி‘ என்றதன்திருவெம்பாவைப்பாடலைஆரம்பிக்கிறார். பத்தொன்பதுபாட்டுப்பாடிமுடிந்ததும்ஆதியாகியமுடிஎங்கேயிருக்கிறது, அந்தமாகியஅடிஎங்கேஇருக்கிறதுஎன்றுகண்டுவிடுகிறார். இறைவன்காண்பதற்குஎளியவனாகஅமைந்துவிடுகிறான்.
ஆதியாம்பாதமலர், அந்தமாம்செந்தளிர்கள்என்றுதானே, திருவெம்பாவைஇருபதாம்பாட்டுகூறுகிறது. ஆம், இறைவனதுஅடியும்முடியும்அவனதுதிருத்தாள்களேஎன்றஉண்மையைப்பக்தனானகவிஞன்எவ்வளவுஎளிதாகக்கண்டுவிடுகிறான். மகாவிஷ்ணுவையும்பிரம்மாவையுமேமண்ணைக்கௌவவைத்துவிடுகிறானேஅவன், ‘விண்ணிறைந்துமண்நிறைந்துமிக்காய்விளக்கொளியாய்எண்ணிறந்துஎல்லைஇலாதானாக‘ இருக்கும்இறைவனைஎவ்வளவுஎளிதாகச்சுட்டிக்காட்டமுடிகிறதுகவிஞனுக்கு. இத்தனைஅரியஉண்மைகளைவிளக்கிக்கொண்டுநிற்கின்றமலைதான்திருஅண்ணாமலை. அந்தமலையின்அடிவாரத்திலேகோயில்கொண்டிருக்கிறவர்தான்அண்ணாமலையார்.
அண்ணாமலையைநினைக்கின்றபோதெல்லாம், இல்லைஅண்ணாமலையானைக்கண்டுதொழுகின்றபோதெல்லாம்இறைவழிபாடுஉலகத்தில்எப்படித்தோன்றிற்று, என்றஉண்மையுமேவிளக்கமுறும். மனிதனுக்குஉண்ணஉணவும்உடுக்கஉடையும்எவ்வளவுஅவசியமோஅவ்வளவுஅவசியம்அவன்வாழ்வதற்குஒளியும்என்றுஅறிகிறோம். சூரியன்இல்லாதபகலும், சந்திரன்இல்லாதஇரவும், நட்சத்திரங்கள்இல்லாதவானும்இருந்தால்எப்படிஇருக்கும்என்றுஎண்ணிப்பார்ப்போம்.
இறைவனதுபடைப்புகளில்எல்லாம்சிறந்தபடைப்புஞாயிறுதானே. அதனிடமிருந்துஎழுகின்றஒளியும்வெம்மையும்இல்லாவிட்டால்உலகமும்உயிர்களும்உய்வதேது? ஆதலால்சிந்திக்கத்தெரிந்தமனிதன்ஞாயிறையே, ஞாயிறுமூலமாகஅதனைஉலகுக்குத்தந்தஇறைவனையேவந்தித்துவணங்கமுற்பட்டிருக்கிறான். இப்படித்தான்எல்லாச்சமயத்தாரிடத்தும்இறைவழிபாடுஒளிவழிபாடாகவேஉருஎடுத்திருக்கிறது. இருள்போக்கும்தன்மையோடு, மருள்நீக்கும்தூய்மையும்,ஆக்கி,காத்துஅழிக்கும்தன்மையும், அருவாய், உருவாய், அருவுருவாய்இயங்கும்இயல்பும், பஞ்சபூதங்களில்ஒன்றானதீயினிடத்தேதான்மிகுந்திருக்கின்றன. இப்படிஅக்கினியின்இயல்பும்இறைவன்இயல்பும்இணைந்திருப்பதன்காரணமாகஒளிவழிபாடேதீவழிபாடாகபரிணமித்திருக்கிறது.
‘இறைவனைஞானச்சுடர்விளக்காய்நின்றவன்என்றுஅப்பர்பாடினால், ஆதிஅந்தம்ஆயினாய், சோதியுள்ஓர்சோதியானாய்என்றுசம்பந்தர்வழிபடுகிறார். சோதியே, சுடரே, சூழ்ஒளிவிளக்கேஎன்றுமாணிக்கவாசகரும், தூண்டாவிளக்கின்நற்சோதிஎன்றுசுந்தரரும்இறைவனைஅழைத்தால், கற்பனைகடந்தசோதி, கருணையேஉருவமாகநிற்கிறான்என்றுசேக்கிழார்பாடிப்பரவிமகிழ்கிறார். பயிலும்சுடர்ஒளிமூர்த்திபங்கயக்கண்ணன்என்றுநம்மாழ்வார்பாற்கடல்சேர்ந்தபரமனைக்குறித்தால், திருத்தக்கத்தேவர்சுடரிற்சுடரும்திருமூர்த்திஎன்றேபாடுவார். இப்படியேஅடியார்களும்கவிஞர்களும்இறைவனைப்பொங்கழல்உருவனாகவேகாண்கிறார்கள். இந்தஅனல்வழிபாடேபின்னர்திருவிளக்குவழிபாடாகமக்களிடையேஇன்றும்நிலைத்திருக்கிறது. இச்சிறியதிருவிளக்குவழிபாடே, பெரியகார்த்திகைத்திருநாளாகஅண்ணாமலையில்கொண்டாடப்படுகிறது.
அண்ணாமலைகார்த்திகைதீபதரிசனம்ஓர்அற்புதமானஅனுபவம். கார்த்திகைமாதம், கார்த்திகைநட்சத்திரத்தன்றுலக்ஷக்கணக்கானமக்கள், ஆண்பெண்பிள்ளைகள்எல்லாம்அண்ணாமலையார்கோயில்பிராகாரத்திலும், நகரின்தெருக்களிலும், வீடுகளின்மாடிகளிலும்குழுமியிருக்கின்றனர். சரியாய்மாலைஆறுமணிக்கு, முழுமதிவானில்எழுந்துகோபுரஉச்சியைத்தடவிநிற்கிறது. அந்தச்சமயத்தில்கோயிலுள்ளேபஞ்சமூர்த்திகளும்மண்டபத்தில்வந்துநிற்கிறார்கள். அதிர்வெடியொன்றுகிளம்புகிறதுவானைநோக்கி. ஐந்துகற்பூரஆரத்தித்தட்டுகளைஉயர்த்துகிறார்கள்அர்ச்சகர்கள். அதேசமயத்தில்அண்ணாமலையின்உச்சியில்உள்ளகற்பூரக்கொப்பறையிலிருந்துசுடர்எழுந்துவான்நோக்கிநிமிர்கிறது. “அரோகரா, அண்ணாமலைக்குஅரோகராஎன்றகோஷம்மக்களிடையேஎழுகிறதுஉச்சஸ்தாயியிலே. பார்ப்பவர்உடல்புல்லரிக்கிறது; உள்ளம்விம்மிப்பெருமிதம்அடைகிறதுபொங்கழல்உருவனைக்காணுவதால்.
இத்தனைஅனுபவத்திற்கும்நிலைக்களனாய்இருப்பதுதான், வடஆர்க்காடுமாவட்டத்தில்உள்ளதிருவண்ணாமலைஎன்னும்தலத்திலேஉள்ளஅண்ணாமலையார்கோயில். இக்கோயில்சுமார்இருபத்து நான்குஏக்கர்விஸ்தீர்ணமுள்ளநிலத்தில்அமைந்திருக்கிறது. கோயிலைச்சுற்றிஉயரமானமதில். மதிலின்நான்குபுறத்தும்நான்குபெரியகோபுரங்கள், கிழக்கேபிரதானவாயிலில்உள்ளராஜகோபுரம்பதினொருநிலைகளும்இருநூற்றுப்பதினேழுஅடிஉயரமும்உடையது. பரதசாத்திரத்தில்உள்ளதாண்டவலட்சணம்என்னும்நாட்டியநிலைகள்நூற்றுஎட்டையும்விளக்கும்சிற்பவடிவங்கள்இருபக்கத்துச்சுவர்களிலும்நிறைந்துஇருக்கும். இந்தவாயிலைக்கடந்தால்முதலில்நாம்சென்றுசேர்வதுகம்பத்துஇளையனார்கோயில். அருணகிரியார்பிரார்த்தனைக்குஇரங்கி, பிரபுடதேவராயருக்குமுருகப்பெருமான்கம்பத்தில்காட்சிஅருளியஇடத்தில்இந்தத்திருக்கோயில்கட்டப்பட்டிருக்கிறது. இங்குவில்லேந்தியவேலன்மயில்மீதுகாலையூன்றிகம்பீரமாகஎழுந்துநிற்கும்நிலைகலையுள்ளம்படைத்தவர்கண்களுக்குஒருபெருவிருந்தாகும்.
இனிசர்வசித்திவிநாயகர், பாதாளலிங்கேசுவரர், கோபுரத்துஇளையனார்முதலியவர்களைத்தரிசித்தபின்நாம்கடக்கவேண்டியதுவல்லாளமகாராஜன்கோபுரம். உடல்நோயால்நலிந்தஅருணகிரியார்தன்உயிரைமாய்த்துக்கொள்ளஇக்கோபுரத்தின்மீதேறிஅங்கிருந்துகுதித்தார்என்றும், அப்போதுமுருகப்பெருமானேஅவரைத்தன்கையில்ஏந்தித்தரைதனில்விட்டார்என்றும், அன்றுமுதல், உடலில்மட்டும்அல்லாமல்உள்ளத்திலேயும்நலிவடையாதவராய்திருப்புகழ்பாடத்துவங்கினார்என்றும்அறிகிறோம். அருணகிரியாரைத்தாங்கியதுபோலநம்மையும்தாங்குவான்என்றநம்பிக்கைமட்டும்இருந்தால்நாமும்கோபுரத்தில்ஏறிக்குதிக்கமுனையலாம். இதன்பின்கிளிக்கோபுரத்தையும்பஞ்சமூர்த்திமண்டபங்களையும்கடந்துசென்றால்அண்ணாமலையாரைக்கண்டுதொழலாம். நல்லலிங்கத்திருவுருவில்அமைந்தவர்அண்ணாமலையார். பொன்போர்த்தநாகாபரணமும்நிறையமலர்மாலைகளும்அணிந்தவராககாட்சிதருவார். இந்தஅண்ணாமலையாரையே ‘லிங்கோத்பவர்‘ என்றுகலையுலகம்உருவாக்கியிருக்கிறது. ராஜராஜனும்அவனுக்குப்பின்வந்தசோழர்களும்கட்டியகோயில்களில்எல்லாம்கோஷ்டவிக்கிரகமாகஇவர்நின்றுகொண்டிருப்பதைநாம்அறிவோம்.
அண்ணாமலையான்ஆலயவெளித்தோற்றம்
அண்ணாமலையாரைவலம்வந்து, பின்னர்அவருக்குஇடப்பக்கத்திலேகோயில்கொண்டிருக்கிறஉண்ணாமுலையம்மையைத்தரிசிக்கப்போகலாம். மகாமண்டபத்தைக்கடந்துஉள்ளேசென்றால்நவசக்திமண்டபம், அங்குஉருவாகியிருக்கும்சக்திகளும், காலசம்ஹாரரும்வீணாதாரரும், இருபதாம்நூற்றாண்டுசிற்பிகளின்கைத்திறன். ஆதலால்அவைகளில்மிக்ககலைஅழகைஎல்லாம்எதிர்பார்த்தல்இயலாது. கர்ப்பக்கிரகத்தில்இருக்கும்அண்ணாமலையாரின்தர்மபத்தினிஉண்ணாமுலையம்மை, கம்பீரமானதிருஉருஅல்லாவிட்டாலும்அழகும்எழிலும்நிறைந்தஉருவம், இந்தஅண்ணாமலையார்கோயிலின்பெரும்பகுதிவல்லாளமகாராஜனால்கட்டப்பட்டதுஎன்றுகர்ணபரம்பரைகூறும்.
இந்தவல்லாளன்சரித்திரபிரசித்திபெற்றவனில்லைஎன்றாலும்இவனைப்பற்றி, இவனதுபக்தியைப்பற்றிஒருகதை, ஒருநாள்அண்ணாமலைஅண்ணல்அடியவர்வடிவந்தாங்கிவல்லாளராஜனிடம்வருகிறார். வந்தவர், ‘அன்றிரவுதன்னுடன்தங்கஒருபெண்வேண்டும்‘ என்கிறார். இல்லைஎன்றுசொல்லஅறியாதவல்லாளன்தேவதாசிகளில்ஒருத்தியைஅனுப்பவிரைகிறார். அவர்கள்ஒவ்வொருவரும்அன்றுபிறர்வயப்பட்டுஇருப்பதாகத்தகவல்வருகிறது. மன்னன்இதைஅறிந்துமயங்கியபோது, மன்னனின்இளையராணிசல்லமாதேவியேஅடியவர்க்குத்தன்னுடலைத்தத்தம்பண்ணமுனைகிறாள். ஆனால்பஞ்சணையில்தூங்கியஅடியவரைத்துயில்எழுப்பஅவர்பாதத்தைச்சல்லமைதீண்டலும்அவர்பச்சைப்பசுங்குழவியாகிவருகிறார். அரசன்அரசியரதுபிள்ளைக்கலிதீர்க்கவந்தஇந்தபிள்ளைப்பெருமான், பின்னர்இடபாரூடராய்க்காட்சிதந்துமறைகிறார். இப்படிவல்லாளன்மகனாகஅவதரித்தஅண்ணாமலையார்இன்றுமாசிமகத்தன்றுபள்ளிகொண்டாபட்டுக்குஎழுந்தருளி, வல்லாளனுக்குவருஷாப்தீகச்சடங்கையெல்லாம்செய்கிறார். இறைவனின்பிள்ளைகளாகமக்கள்இருப்பதைஅறிவோம். இறைவனேபக்தனதுபிள்ளையாகமாறிஅவனுக்குஈமக்கடன்செய்யும்முறையைஇங்கேதான்அறிகிறோம்.
இக்கோயிலில்நூற்றுஆறுகல்வெட்டுக்கள்இருக்கின்றன. உத்தமச்சோழன், பரகேசரிவர்மன், ராஜேந்திரசோழதேவன், திரிபுவனசக்கரவர்த்திராஜராஜதேவன்முதலியசோழமன்னர்களும். மாறவர்மன், குலசேகரன்முதலியபாண்டியமன்னர்களும்ஏற்படுத்தியநிபந்தங்களைக்குறிக்கஎழுந்தவையேஇதில்பெரும்பகுதியானகல்வெட்டுக்கள். கீழ்வாசலில்உள்ளராஜகோபுரத்தைவிஜயநகரமன்னன்கிருஷ்ணதேவராயன்கட்டிமுடித்தான்என்றுஒருகல்வெட்டுகூறுகிறது, இவனேஆயிரக்கால்மண்டபம், சிவகங்கைக்குளம்முதலியவற்றைஉருவாக்கியவன்என்றும்அறிகிறோம். விஜயநகரநாயக்கமன்னர்கள்ஆட்சிக்குஉட்பட்டராஜநாராயணசாம்புவராயன்ஒருகோபுரம்கட்டினான்என்றும்அந்தக்கோபுரத்தில்இருந்தே ‘ஜீரணோத்தாரதாஸகம்‘ என்றகோயில்திருப்பணிவிளக்கநூலைவாமதேவன்எழுதினான்என்றும்ஒருகல்வெட்டுகூறுகின்றது. கோயில்நிரம்பப்புராதனமானகோயில்என்பதும், இக்கோயிலைச்சோழர், பாண்டியர், நாயக்கர், நகரத்தார்எல்லாம்கட்டியும்புதுப்பித்தும், நிபந்தங்கள்ஏற்படுத்தியும், பாதுகாத்திருக்கிறார்கள்என்றும்அறிகிறோம்.
கோயிலைவிட்டுவெளியேவருமுன்உங்களைஓர்அற்புதமானமூர்த்தியின்முன்னர்கொண்டுசென்றுநிறுத்தவிழைகிறேன். ராஜராஜசோழனுக்குமுந்தியசோழமன்னர்கள்கட்டியகோயில்களில்எல்லாம்கர்ப்பக்கிரகத்திற்குவெளியேமேற்கேபார்த்தகோஷ்டத்தில்அர்த்தநாரியின்அழகியசிலாவுருவம்இருக்கப்பார்ப்போம். ஆனால்அற்புதமாகசெப்புச்சிலைவடிவத்தில்நடராஜரையும், திரிபுராந்தகரையும், பிக்ஷாடணரையும்வடித்தெடுத்தசோழநாட்டுச்சிற்பிகள்அர்த்தநாரியைமட்டும்செப்புச்சிலைவடிவில்அமைக்கமறந்துவிட்டிருக்கிறார்கள். இதன்காரணம்யாதோ? திருச்செங்கோட்டுமலையில்உள்ளகோயிலில்அர்த்தநாரிஎன்னும்மாதிருக்கும்பாதியன், கல்லிலும்செம்பிலுமேஉருவாகிஇருக்கிறான்என்றால்அதுசோழர்களுக்குமிகவும்பிந்தியகாலத்தில்தான். ஆனால்அந்தமாதிருக்கும்பாதியனை, பஞ்சின்மெல்லடியாள்பாகனைஅற்புதமானசெப்புச்சிலைவடிவில்பார்ப்பதுஇத்தலத்தில்தான். நல்லசோழர்காலத்துச்செப்புச்சிலை. நிரம்பஅழகுவாய்ந்ததிருஉருவம். அந்தத்திருஉருவின்முன்நின்று,
உண்ணாமுலைஉமையாளொடும்
உடனாகியஒருவன்,
பெண்ணாகியபெருமான்மலை
திருமாமணிதிகழ,
மண்ஆர்ந்தளஅருவித்திரன்
மழலைமுழவுஅதிரும்
அண்ணாமலைதொழுவார்வினை
வழுவாவணம்அறுமே
என்றுநாமும்ஞானசம்பந்தரோடுசேர்ந்துபாடினால்நமதுவினைகளும்அகலும். ஆதலால்தயாராயிருங்கள்அடுத்ததீபத்திருநாளன்றுஅண்ணாமலைசென்றுதொழ.