தமிழ்நாடு – 29 – திருக்கோவிலூர்

திருக்கோவலூர்திருவிக்கிரமன்

தென்பெண்ணைஆற்றங்கரையிலேஒருசிறியகிராமம். அங்குள்ளவீதிஒன்றில்சிறியவீடுஒன்று. நேரமோஇரவு. அந்தச்சமயத்தில்வீதிவழிவந்தபெரியார்ஒருவர்அந்தவீட்டுக்காரரிடம்இரவுதங்கஇடம்கேட்கிறார். வீட்டுக்காரரோபரமபாகவதர். ஆதலால்வீடுதேடிவந்தபெரியவரிடம்வீட்டில்இருந்தஇடைகழியை (ரேழிஎன்றுசொல்லுகிறோமே, அதைத்தான்) காட்டி, ‘இதில்ஒருவர்படுத்துக்கொள்ளலாம். படுத்துக்கொள்ளுங்கள்என்கிறார். அவரும்இசைந்துஅங்கேபடுத்துக்கொள்கிறார். கொஞ்சநேரம்கழிந்ததும்மழைபெய்கிறது. இரண்டாவதுஆளாகஒருவர்வருகிறார். அவரும்தங்கஇடம்கேட்கிறார். ‘! இந்தரேழியிலேஇருவர்இருக்கலாம், வாருங்கள்என்றுஅவரையும்உள்ளேஅழைத்துக்கொள்கிறார்முதலில்வந்தவர். இன்னும்கொஞ்சநேரம்சென்றதும், மூன்றாவதுஆளாகஒருவர்வருகிறார். அவருமேதங்கஇடம்கேட்கிறார். ‘சரிதான்இந்தரேழியிலேஒருவர்படுக்கலாம், இருவர்இருக்கலாம், மூவர்நிற்கலாம், வாருங்கள், வாருங்கள்என்றுஉபசரித்துஅவரையும்சேர்த்துக்கொள்கிறார்கள். இப்படியே, ஒருசிறியஇடைகழியிலேமூன்றுபேர்கள்நின்றுஇரவைக்கழிக்கிறார்கள். நட்டநடுநிசியில், இவர்களோடுஇன்னொருஆளும்வந்துநின்றுகொண்டுஇடநெருக்கடியைஉண்டுபண்ணுகிறார். இப்படிசொல்லாமல்கொள்ளாமல்வந்துகூடவேநிற்கும்ஆள்யார்என்றுதெரியவில்லை. விளக்குபோட்டுப்பார்க்கவும்முடியவில்லை . முன்வந்தமூவரும்சிறந்தபக்தர்கள். ஆகவே, அவரவர்கள்எண்ணத்தில்எழுந்ததை, ஆளுக்குபாட்டாகபாடுகிறார்கள். முதலில்வந்தபொய்கையாரும், இரண்டாவதுவந்தபூதத்தாரும், ஞானச்சுடர்விளக்கைஏற்றுகிறார்கள், தங்கள்தங்கள்பாட்டால். மூன்றாவதுவந்தபேயரோ, நான்காவதுஆளாகவந்துநெருக்கும்நபர்யாரென்றுகண்டுபிடித்துவிடுகிறார். அதைச்சொல்கிறார்.

திருக்கண்டேன்பொன்மேனிகண்டேன், திகழும்அருக்கன்அணிநிறமும்கண்டேன்செருக்கிளரும்

பொன்ஆழிகண்டேன்புரிசங்கம்கண்டேன்

என்ஆழிவண்ணன்பால்இன்று

என்றஅழகானபாட்டில். ஆம்! மூன்றுபக்தர்கள்கூடியஇடத்தைவிடவந்துஇருந்துகொள்ளவேறுநல்லஇடம்அந்தப்பரந்தாமனுக்குக்கிடைக்கவாபோகிறது? இப்படிப்பெருமானைநெருக்கத்திலேகண்டமூவர்வேறுயாருமில்லை. பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்என்பவர்கள்தான். இவர்களையேதமிழ்உலகம்முதல்ஆழ்வார்கள்என்றுபோற்றிவழிபடுகிறது. இந்தநிகழ்ச்சிநடந்தஇடம்தான்திருக்கோவலூர்என்றதலம். இந்தக்கோவலூரைஉள்ளடக்கியஅந்தநாட்டையே,

பாவரும்தமிழால்பேர்பெறு

பனுவல்பாவலர்பாதிநாள்இரவில்

மூவரும்நெருக்கிமொழிவிளக்கு

ஏற்றிமுகுந்தனைத்தொழுதநன்னாடு

என்றுபாரதம்பாடியவில்லிபுத்தூரார்குமாரர்வரந்தருவார்புகழ்ந்துபாடுகிறார்.

இந்தத்திருக்கோவலூர், பெண்ணையாற்றின்தென்கரையில்இருக்கிறது. விழுப்புரம்திருவண்ணாமலைரயில்வழியில்விழுப்புரத்துக்குமேற்கேஇருபத்தைந்துமைல்தொலைவில்இருக்கிறது. ரயில்வழியாகவும், இல்லைரோடுவழியாகவும்போகலாம். காஞ்சியைப்போல்இந்தஊரும்இரண்டுபிரிவாகஇருக்கிறதுமேலூர், கீழூர்என்று. மேலூரில்கோயில்கொண்டிருப்பவர்திருவிக்கிரமன்என்னும்மகாவிஷ்ணு. கீழூரில்இருப்பவர்வீரட்டேசுரர்என்னும்சிவபெருமான். ஆம்அன்றுகச்சியிலேமுந்திக்கொண்டுஅதிகஇடத்தைவளைத்துக்கொண்டாரேஅந்தஏகம்பன். அதற்குஎதிர்ப்புக்காட்டுவதுபோல்பெருமாள்இங்குமுந்திக்கொண்டு, அதிகஇடத்தைபிடித்துக்கொண்டிருக்கிறார்; பெரியகோயிலைக்கட்டிக்கொண்டிருக்கிறார்; இதையெல்லாம்விடஅந்தச்சிவனைஆற்றங்கரைப்பக்கத்துக்கேஒதுக்கிஇருக்கிறார். ஊரிலேபெரியஉத்சவமெல்லாம்பெருமாளுக்குத்தான். ஆதலால்நாமும்முதலிலேபெருமாளையேதரிசித்துவிடலாம்.

இந்தப்பெருமாளின்சந்நிதி, வீதியின்கீழ்க்கோடியில், ஒருபெரியகோபுரம்பதினொருநிலைகளோடுஉயர்ந்திருக்கிறது. ஆனால்கோயிலின்பிரதானவாயிலில்ஒருசின்னக்கோபுரம்தான். பெரியகோபுரத்தைஎட்டியிருந்துபார்த்துவிட்டே, கோயில்வாசலுக்குவந்துவிடலாம். கோபுரவாயிலைக்கடந்துஉள்ளேநுழைந்தால்மங்கைமன்னன்கட்டியகோபுரவாயில்வரும். அதனையும்கடந்தால்பாண்டியன்மண்டபம், பின்புதான்மூலஸ்தானம். அங்கேதான்நிற்கிறார்உலகளந்ததிருவிக்கிரமன், நல்லநெடியதிருவுருவம். ‘வியந்தவர்வெருக்கொளவிசும்பின்ஓங்கியபெருமாள்அல்லவா? அதனால்விண்ணுறநிமிர்ந்தேநிற்கிறார். மூலவர்திருவுரு, மரத்தால்ஆனவடிவம். முகத்திலேநல்லவசீகரம்என்றாலும், தூக்கியதிருவடிஅவ்வளவுஇயற்கையாகஇல்லை . திருவிக்கிரமன்பத்தினி (திருவிக்கிரமி) மிருகண்டு, மகாபலிஎல்லோரும்காலடியிலேயேஇருக்கிறார்கள். இந்ததிருவிக்கிரமனைவணங்கியபின்கோயிலைச்சுற்றலாம்.

கோயிலின்முதல்பிராகாரத்தின்முகப்பிலேதுர்க்காம்பாள். விக்கிரமன்ஆணையின்பேரில், கோவிலுக்குஅவள்காவல்நிற்பதாகக்கூறுவர். துர்க்கைசிலைஅநேகமாகவிஷ்ணுகோயில்களிலேகாண்பதுஇல்லை. இந்தப்பிராகாரத்திலேயேலக்ஷ்மிநாராயணன், லக்ஷ்மிவராஹன், லக்ஷ்மிநரசிம்மன்மூவருக்கும்தனித்தனிசந்நிதி. இன்னும்ராமர், உடையவர், திருக்கச்சிநம்பி, ஆண்டாள், மணவாளமாமுனிகளின்சந்நிதிகளும்தனித்தனியேஇருக்கின்றன. இரண்டாவதுபிராகாரம்கல்யாணமண்டபம்எல்லாம்கடந்துசென்றால்புஷ்பவல்லித்தாயாரைக்கண்டுசேவிக்கலாம். கோயில்பிரும்மாண்டமானகோயில், கட்டடநிர்மாணத்தைக்கவனித்தால்நாயக்கமன்னர்களேகோயிலின்பெரும்பகுதியைக்கட்டியிருக்கவேண்டும். அதற்கேற்றாற்போல்நாயக்கமன்னர்கள்சிலையும்அங்கேநிறையஇருக்கின்றன. பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்மூவரோடும்திருமங்கைமன்னனும்இந்தத்தலத்தைமங்களாசாஸனம்செய்திருக்கிறார். ‘தீங்கரும்பும்கண்வளரும், கழனிசூழ்ந்ததிருக்கோவலூர்அதனுள்அடியவர்களுக்குஆரமுதம்ஆனான்தன்னைக்கண்டேன்யானேஎன்றுபெருமிதத்தோடுபாடுகிறார்பன்னிருஆழ்வார்களில்ஒருவரானதிருமங்கைஆழ்வார்.

இவ்வளவுதூரம்வந்தநாம், இன்னும்கொஞ்சம்காலைஎட்டிப்போட்டுமேற்கேபத்துமைல்போய்இதேபெண்ணையாற்றங்கரையிலேஉலகளந்தஅலுப்புத்தீரக்காலைநீட்டிநிமிர்ந்துபடுத்துகிடக்கும்திருவரங்கத்தானையுமேபார்த்துவிடலாம். ‘எல்லோரும்தொழநின்றதிருவரங்கம்அந்தபொன்னியாற்றிலேஉள்ளதீவிலேஇருக்கிறதுஎன்றுதானேஅறிவோம். இல்லை, இந்தப்பெண்ணையாற்றங்கரையிலுமேஒருதிருவரங்கம். உண்மையில்இந்தக்கிராமமே, ரெவின்யூகணக்குகளில்திருவரங்கம்என்றுபதிவாகிஇருக்கிறது. இங்குள்ளஅரங்கநாதனேதமிழ்நாட்டில்உள்ளசயனத்திருக்கோலங்களில்அளவில்பெரியவர். அத்துடன்ஒருசிறப்பும்கூட, சீதேவியின்மடியில்தலைசாய்த்துப்பூதேவிஅடிவருடப்பள்ளிக்கொள்கிறார். வலக்கையைத்தலைக்கணைத்து, இடக்கையைஉயர்த்தி, பிரம்மாவுக்குஉபதேசிக்கின்றநிலை. சுதையில்உருவானவரேஎன்றாலும், தைலக்காப்புஎல்லாம்இல்லாமல்அழகாகஇருக்கிறார். உலகளந்தார்நீண்டுவளர்ந்தவர்என்றால்இவர்நீட்டிப்படுக்கஇருபத்துநான்குஅடிநீளம்உள்ளபடுக்கைவேண்டியிருக்கிறது. அத்தனைபெரியவடிவத்தார்அவர்.

இந்தத்திருவரங்கம்பெரியகோயில்என்றாலும், கோயிலின்முன்முகப்பும்பலபாகங்களும்சிதைந்தேகிடக்கின்றன. காவிரித்திருநதியிலேதுயிலும்கருணைமாமுகிலுக்குஅடித்தஅதிர்ஷ்டம்இவர்பங்கில்இல்லை . இங்கும்தாயார்சந்நிதிஉண்டு. ராமர், ஆண்டாள்எல்லாம்நல்லஅழகியவடிவங்கள். இத்தனைஅழகியஆண்டாளைவேறுகோயில்களில்நான்காணவில்லை. ஆனால்அவளோஅங்கு, கேட்பாரற்றுநிற்கிறாள். ஆண்டாளைவணங்கியபின், அங்குநிற்கவேதோன்றாதுநமக்கு. தமிழ்நாட்டில்இவளைப்போல்எத்தனைசிற்பவடிவங்களோ? இன்னும்பழுதுற்றுநிற்கும்கோயில்கள்தான்எத்தனைஎத்தனையோஎன்றநம்சிந்தைஅலையும். ஆதலால்திரும்பவும்திருக்கோவலூருக்கேவந்து, அங்குபார்க்காமல்விட்டுப்போனவீரட்டேசுவரரைத்தரிசனம்செய்துவிட்டுத்திரும்பிவிடலாம்.

திருக்கோவலூர்கீழூரில், ஆற்றங்கரைப்பக்கம்உள்ளகோயிலில்மேற்கேபார்த்துநின்றுகொண்டிருக்கிறார். பிறப்பேஇல்லாதசிவனுடையமூர்த்தங்கள்அனந்தம். அவற்றுள்அறுபத்துநான்கைவகைப்படுத்திஅஷ்டாஷ்டமூர்த்தங்கள்என்றுசிவபராக்கிரமம்கூறும். அந்தமூர்த்தங்களில்சிலசாந்தநிலை, சிலஆடும்தாண்டவநிலை, சிலஅனுக்கிரகிக்கும்நிலை, சிலசம்ஹாரநிலை, சம்ஹாரமூர்த்தங்கள்எட்டு. அந்தமூர்த்தங்களில்சிவனைவழிபடும்தலங்களையேஅட்டவீரட்டம்என்றுசொல்கிறோம். அந்தகாசுரனைச்சம்ஹரித்ததலமேதிருக்கோவலூர். இங்குள்ளமூர்த்தியைஅந்தகாசுரசம்ஹாரமூர்த்திஎன்றுஅழைக்கிறார்கள். மூலவர்லிங்கத்திருவுருவில்தான்இருக்கிறார்மேற்குநோக்கியசந்நிதியில், அந்தக்கோயிலுக்குள்ளேயேசெப்புச்சிலைவடிவில்அந்தகாசுரசம்ஹாரரும்உருவாகியிருக்கிறார். அந்தகாசுரனைக்காலின்கீழ்போட்டுமிதித்துக்கொண்டுஅவன்பேரில்சூலத்தைப்பாய்ச்சுகின்றநிலையில்வடித்திருக்கிறான்சிற்பி, நல்லசோழர்காலத்துச்செப்புப்படிமம். ஓங்கியும், தாழ்ந்தும்சூலம்ஏந்தும்கைகள். அதைஓர்உயிர்ஓவியமாகஆக்கிவிடுகிறது. இந்தக்கோயில்சமீபகாலத்தில்திருப்பணிசெய்யப்பட்டுநல்லஅழகாகவைக்கப்பட்டிருக்கிறது. அம்மையின்பெயர்சிவானந்தவல்லி. அவளதுகோயில், வீரட்டேசுரர்கோயிலுக்குஇடப்புறம்தனித்ததொருகோயில்மேற்குநோக்கிஇருக்கிறது. அம்மையின்வடிவம்அழகானது. இத்தலத்துக்குஞானசம்பந்தரும்அப்பரும்வந்திருக்கிறார்கள். இருவருமேஇந்தவீரட்டானரைப்பாடியிருக்கிறார்கள்.

தலைசுமந்துஇருகைநாற்றி

தரணிக்கேபொறையதுஆகி

நிலையிலாநெஞ்சம்தன்னுள்

நித்தலும்ஐவர்வேண்டும்

விலைகொடுத்துஅறுக்கமாட்டேன்,

வேண்டிற்றேவேண்டிஎய்த்தேன்

குலைகொள்மாங்கனிகள்சிந்தும்

கோவல்வீரட்டன்நீரே,

என்பதுஅப்பர்பாடியதேவாரம். மேலூர்உலகளந்தாரைக்காணச்சென்றவர்கள், திருஅரங்கநாதரையும்தரிசித்துத்திரும்பியதுபோல், கோவல்வீரட்டனாரைக்காணச்செல்பவர்கள்பெண்ணையின்வடகரையில்உள்ளஅறையணிநல்லூர், அறையணிநாதரையும்அவரதுமனைவிஅருள்நாயகியையும்கண்டுவழிபட்டுத்திரும்பலாம். திருக்கோவலூரிலிருந்துஅறையணிநல்லூர்செல்லஆற்றைக்கடக்கும்போதுஆற்றின்நடுவிலே, பாறையிலேஒருசிறியகோயிலைப்பார்க்கலாம். அதனைஇடைச்சிக்குன்றுஎன்பார்கள். பெண்ணையின்நீர்ப்பெருக்கமோபிரசித்திஉடையது. ‘வெண்ணெய்உருகுமுன்பெண்ணைபெருகும்என்பார்கள். எவ்வளவோகாலங்களுக்குமுன்இடைச்சிஒருத்திஅறையணிநல்லூரிலிருந்துகோவலூருக்குச்செல்லஆற்றைக்கடந்திருக்கிறாள். அக்கரையில்இறங்கும்போதுதண்ணீரேஇல்லாதிருந்தஆற்றில், இக்கரைசேருமுன்பெருவெள்ளம்வந்திருக்கிறது. ஆற்றின்நடுவிலேஇருந்தபாறைமீதுஏறிநின்றுதப்பித்திருக்கிறாள். அவளேஅப்பாறையில்ஒருகோயில்கட்டிபடிகளும்அமைத்திருக்கிறாள். அதனையேஇடைச்சிக்குன்றுஎன்றுகூறுகிறார்கள்மக்கள். அங்கேகபிலர்பிரதிஷ்டைசெய்தலிங்கத்திருஉருஇருப்பதாகச்சொல்வார்கள். ஏறிப்பார்க்கவேண்டியதில்லை. ஆனால்ஆற்றைக்கடக்கும்போதுஇக்குன்றைப்பாராமலும்இருக்கமுடியாது.

அறையணிநல்லூரை, மக்கள்அரகண்டநல்லூர்என்கிறார்கள். இங்குதான்திருக்கோவலூர்ரயில்வேஸ்டேஷன், போலீஸ்ஸ்டேஷன்எல்லாம்இருக்கின்றன. ரயில்வேஸ்டேஷனிலிருந்துபோலீஸ்ஸ்டேஷன்வந்துபின்னும்தெற்கேசென்றால், ஒருசிறியகுன்றின்மேல்பெரியகோபுரத்தோடுகூடியகோயில்ஒன்றிருக்கும். கோபுரம்தனித்துத்தென்வாயிலில்இருக்கிறது. அதற்குஒருதொடர்பும்இல்லாமல்மேற்கேபார்த்தசந்நிதியில்அறையணிநாதஈசுவரர்இருக்கிறார். அருள்நாயகியோதனித்தசிறுகோயிலில்கிழக்குநோக்கிநிற்கிறாள். கோயில்வாயிலில்வலம்புரிவிநாயகர்சுவரோடுசுவராகஒட்டிக்கொண்டிருக்கிறார். விரசண்டரிஷிபூசித்ததலம்என்பார்கள். இவர்களையெல்லாம்வணங்கிவிட்டுத்திரும்பலாம். கோயிலுக்குக்கிழக்கிலும்தெற்கிலும்பாறையிலேயேஒருபெருங்குளம்இருக்கிறது. அக்குளக்கரையிலேபஞ்சபாண்டவர்குகைஒன்றும்உண்டு. அதில்ஐந்துஅறைகளும், திரௌபதைக்குஎன்றுஒருசிற்றறையும், ஒருசிறுசுனையும்இருக்கின்றன. ஏதோஜைனமுனிவர்கள்தங்கஅமைத்தகுடைவரைச்சைத்தியமாகஇருக்கவேண்டும். ஐந்தும்ஒன்றும்சேர்ந்துஆறுஅறைகள்இருப்பதனால், பஞ்சபாண்டவர்களின்தொடர்புஏற்படுத்திப்பேசுகிறார்கள்என்றுதோன்றுகிறது. மாமல்லபுரத்தில்ஐவர்ரதம்என்றுகூறுவதுபோல, இங்கும்இக்குகைகள்பஞ்சபாண்டவரோடுதொடர்புஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.

இத்திருக்கோவலூர்ஏதோசமயப்பிரசித்திமட்டும்பெற்றஊரில்லை. நல்லஇலக்கியப்பிரசித்தியும்பெற்றுள்ளஒருபழையநகரம், சங்ககாலத்திலேமலையமான்நாடுமலாடுஎன்றுபுகழுடையதாகஇருந்திருக்கிறது, வள்ளல்பாரிமகளிராம்அங்கவைசங்கவையைமணம்புரிந்ததெய்வீகன்இருந்துஅரசாண்டஇடம். இவன்வழிவந்தவர்களேமெய்ப்பொருள்நாயனார், நரசிங்கமுனையரையர்முதலியோர், இந்தத்தெய்வீகனோமலையமான்திருமுடிக்காரியின்வழித்தோன்றல். இந்தத்திருமணத்தைமுடிப்பதையேதம்கடமையாகக்கொண்டவர்பாரியின்நண்பர்புலவர்கபிலர். திருமணம்முடிந்தபின்னர்இத்திருக்கோவலூரிலேயேஒருபாறைமீதுஎரிவளர்த்துஅதில்வீழ்ந்துமுத்திஎய்தித்தம்ஆருயிர்நண்பர்பாரிசென்றஇடம்சேர்ந்தார்என்பதுவரலாறு. இதைச்சொல்கிறதுஒருகல்லிலேபொறித்தகவிதை.

வன்கரைபொருதுவருபுனல்பெண்ணைதென்கரைஉள்ளதுதீர்த்தத்துறையது

மொய்வைத்துஇயலும்முத்தமிழ்நான்மைத்

தெய்வக்கவிதைசெஞ்சொல்கபிலன்

மூரிவண்தடக்கைப்பாரிதன்அடைக்கலம்பெண்ணைமலையற்குஉதவி

மினல்புகும்விசும்பின்வீடுபேறுஎண்ணிக்

கனல்புகும்கபிலக்கல்.என்பதுகவிதை. இந்தக்கபிலக்கல்லுக்கும்வணக்கம்செலுத்தியபின்னர்நாம்திரும்பலாம், கோவலூரைவிட்டு.