வெண்காடுமேவியவிகிர்தன்
பேய்அடையா, பிரிவுஎய்தும்
பிள்ளையினோடுஉள்ளநினைவு
ஆயினவேவரம்பெறுவர்,
ஐயுறவேண்டாஒன்றும்,
வேய்அனதோள்உமைபங்கன்
வெண்காட்டுமுக்குளநீர்
தோய்வினையார்அவர்தம்மைத்
தோயாவாம்தீவினையே
என்பதுஞானசம்பந்தர்பாடியதேவாரப்பதிகத்தில்ஒருபாட்டு. பாட்டுநல்லசுவையானது. மயங்கிநையும்உள்ளத்துக்குத்தெம்புகொடுக்கும்பாட்டு. இந்தப்பாட்டைச்சுற்றிஒருவரலாறு. வரலாறுஇதுதான். பெண்ணாகடத்திலேநல்லசைவவேளாளராகவசிக்கிறார்அச்சுதகளப்பாளர். நீண்டகாலமாகஅவருக்கும்அவர்மனைவிக்கும்ஒருகுறை, புத்திரப்பேறுஇல்லையேஎன்று. ஆதலால்திருத்துறையிலேவசித்ததனதுகுலகுருவாகியஅருணந்திசிவாச்சாரியாரிடம்விண்ணப்பித்துத்தம்குறைநீங்கவேண்டிஇருக்கிறார். அவருக்குத்திருமுறைகளிடத்துநிரம்பநம்பிக்கை. ஆதலால்திருமுறைஏட்டைஎடுத்துஅதற்குப்பூசனைசெய்துஅதில்கயிறுசாத்துகிறார். கயிறுசாத்துதல்என்றால், ஏட்டைஅவிழ்த்துஇறைவனைநினைத்துஏட்டின்கயிற்றைஏதாவதுஒருபக்கம்வரும்படிஇழுப்பது. அப்படிஇழுத்தபக்கத்தில்இருக்கிறபாடலைப்படிப்பது. அதில்எதைவேண்டிநின்றோமோ, அதற்குஊன்றுகோலாகஒருகருத்துநிற்கும். அப்படிக்கயிறுசாத்திப்பார்த்ததில்அன்றுவந்தபாட்டுத்தான் ‘பேயடையாபிரிவுஎய்தும்‘ என்றஞானசம்பந்தரதுதேவாரம், அந்தத்திருப்பாட்டிலே ‘பிள்ளையினோடுஉள்ளநினைவுஆயினவேவரம்பெறுவர், ஐயுறவேண்டாஒன்றும்‘ என்றிருக்கவேஅச்சுதகளப்பாளர்மிகுந்தமகிழ்ச்சியோடு, திருவெண்காட்டுக்குவருகிறார்தம்மனைவியுடன். அங்குள்ளசுவேதவனஈசுவரரதுகோயிலில்நுழைகிறார். அங்குள்ளசூரியதீர்த்தம், அக்னிதீர்த்தம்எல்லாவற்றிலும்முழுகிஎழுகிறார். வெண்காடரையும்பிரம்மவித்யாநாயகியையும்வழிபடுகிறார்.
சிலநாட்கள்சென்றதும்ஒருநாள்இரவில், இறைவன்அச்சுதகளப்பாளரின்கனவில்தோன்றி, ‘இப்பிறவியில்மகப்பேறுஎய்தும்பாக்கியம்உனக்கில்லையே‘ என்கிறார். அச்சுதகளப்பாளரும் ‘பரவாயில்லை , புத்திரப்பேறுஅரசர்களுக்குத்தான்மிகமிகஅவசியம். என்போன்றாருக்குஅவ்வளவுமுக்கியமில்லைதான். என்றாலும், பெரியநாயகியின்திருமுலைப்பாலுண்டுஅருள்ஞானம்பெற்றஆளுடையபிள்ளையின்திருவாக்குஅடியேன்வினைகாரணமாகப்பொய்த்துப்போகிறதேஎன்றுதான்வருந்துகிறேன்‘ என்கிறார். அவ்வளவுதான்; சுவேதவனஈசுவரருக்குரோசம்வந்துவிடுகிறது. அச்சுதகளப்பாளரதுபழவினைகளைக்களைகிறார். அவர்மனைவிகருவுற்றுநல்லதொருஆண்மகனைப்பெற்றெடுக்கிறாள். மெய்கண்டார்என்னும்தீக்ஷாநாமம்பெற்றுசைவசித்தாந்தத்தின்தலையாயநூலானசிவஞானபோதத்தையேஇயற்றுகிறார்.
இத்தகையபெருமகனைப்பெறுவதற்குகாரணமாகிஇருந்ததுஞானசம்பந்தர்தேவாரம். அந்ததேவாரத்தில்சிறப்பாகஇருப்பதுமுக்குளநீர்; அந்தமுக்குளம்இருப்பதுவெண்காடர்கோயில். அந்தகோயிலுக்கேசெல்கிறோம்நாம்இன்று.
இந்ததிருவெண்காடுசீகாழிக்குத்தென்கிழக்கேஏழுஎட்டுமைல்தூரத்தில்இருக்கிறது. சிகாழியிலிருந்தும், வைத்தீசுவரன்கோயிலில்இருந்தும்காரிலோ, பஸ்ஸிலோஇல்லைவண்டியிலோ, எளிதாகச்செல்லலாம். அவகாசம்இருந்தால், செல்லும்வழியிலிருந்துகொஞ்சம்விலகிவிலகிச்சென்று, திருமங்கைஆழ்வார்அவதரித்ததிருஆலித்திருநகரையும்திருநாங்கூர்த்திருப்பதிகளையும்அங்குள்ளபெருமாள், ஆழ்வார்களையும்தரிசித்துவிட்டுச்
வெண்காடுமேலவாசல்
செல்லலாம். இந்தத்திருவெண்காடுமுத்திநகர், ஞானவனம், ஆதிசிதம்பரம், பேரரங்கம், தருமகோடிஎன்றும்இன்னும்எண்ணற்றபெயர்களாலும்அழைக்கப்பட்டுவந்ததுஅந்தநாளில், என்றுதலவரலாறுகூறும். இங்குள்ளசுவேதவனஈசுவரர்கோயிலுக்குமேலவாயில்வழியாகவும்செல்லலாம். கீழவாயில்வழியாகவும்செல்லலாம். இரண்டுவாயிலும்எப்போதும்திறந்தேஇருக்கும். இரண்டுவாயிலிலும்இரண்டுகோபுரங்கள்உண்டு. தாம்வழக்கம்போல், கோயிலைவலம்வந்துகீழவாயில்வழியாகவேநுழைவோம்.
கோயில்பெரியகோயில். கோயில்மதில்கிழமேல் 792 அடிநீளம், தென்வடல் 310 அடிஎன்றால்கொஞ்சம்கற்பனைபண்ணியும்பார்த்துக்கொள்ளலாம்தானே. கோயிலுள்நுழைந்துநீண்டுபரந்துதிறந்தவெளியைக்கடந்ததும்வந்துசேருவது, சமீபகாலத்தில்நாற்பதினாயிரம்ரூபாய்செலவில்உருவானகல்யாணமண்டபந்தான். எல்லாம்ஒரேசிமிண்ட்மயம். வர்ணங்களைவேறேவாரித்தெளித்திருக்கும். அதில்உள்ளவண்ணவிஸ்தாரங்கள்எல்லாம்இருபதாம்நூற்றாண்டுரகத்தைச்சேர்ந்தவை. இங்கேநீண்டநேரம்இருந்துபார்க்கும்கலைஅழகுஇல்லை.
நாம்இங்குவந்ததுமுக்குளநீரில்நம்மைத்தோய்த்துக்கொள்ளவே. அப்படிமுக்குளநீரில்தோய்பவர்களைதோயாவாம்தீவினைஎன்பதுதானேநாம்அறிந்தஉண்மை. ஆதலால் ‘விறுவிறு‘ என்றுகோயிலின்வலப்பக்கத்தில்உள்ளசூரியகுளம், அக்கினிகுளத்திலும்இடப்பக்கம்உள்ளசந்திரகுளத்திலும்இறங்கிமுங்கிமுழுகலாம்.
ஆனால்நமக்குமுன்னமேயேஅந்தஊரில்உள்ளவர்கள்பலரும்எண்ணெய்தேய்த்துக்குளிப்பதற்கும், சோப்புத்தேய்த்துக்குளிப்பதற்கும்இந்தக்குளங்களையேஉபயோகித்துக்கொண்டிருப்பர். அதோடுநிரம்பவும்தாராளமாகக்குடங்களைவிளக்குவர், வேட்டிசேலைகளைத்துவைப்பர். ஆதலால்நம்போன்றோருக்குக்குளத்தில்குளிக்கஉற்சாகம்இராது. ஆகவே, நீரைஅள்ளித்தலைமேல்தெளித்தேநம்தீவினைகளைஅகற்றிக்கொள்ளவேண்டும். இந்தக்குளங்களில்பெரியதுசந்திரகுளம்தான். அக்குளத்தின்கீழ்க்கரையிலேயேமிகப்பெரியவடவிருக்ஷம்அதாவதுஆலமரம்இருக்கிறது. இம்மரத்தடியில்செய்யப்படும்ஜபதபம், தானம், பிதிர்க்கடன்எல்லாம்நல்லபயன்தரும்என்கிறார்கள். இத்தலத்துக்கு, இந்தவடஆலைத்தவிர, அம்மைஆலயத்தின்பக்கம்இருக்கும்வில்வமும், அகோரமூர்த்தியின்பின்புறம்இருக்கும்கொன்றையும்தலவிருட்சங்கள். முக்குளம்உடைத்தாயிருப்பதுபோல, மூன்றுமரங்களையும்உடையதாகஇருக்கிறதுஇக்கோயில்.
இனிஇக்கோயிலினுள்நுழைந்துசுவேதவனப்பெருமாளைவணங்கிவெளியில்வரலாம். வெண்காடரைவணங்கியபின்உட்பிரகாரத்தைஒருசுற்றுச்சுற்றலாம். அங்கேதான்மேலப்பிராகாரத்தில்இத்தலத்துக்கேசிறப்பானஅகோரசிவம்தெற்குநோக்கிநிற்கிறார். அவரைஎதிர்நோக்கியேகாளியம்மைசந்நிதிஇருக்கிறது. இருவருமேநம்உள்ளத்தில்அச்சத்தைஎழுப்புகிறவர்கள்தான். காளியையாவதுமற்றக்கோயில்களில்கண்டுவணங்கியிருப்போம். அகோரசிவனைஇங்குமாத்திரம்தான்பார்க்கிறோம்.
கருநிறமும், மணிமாலைபுனைஅழகும்,
வளைஎயிறும், கவினச்செய்ய
எரிசிகையும், நுதல்விழியும், நடைக்கோல
இணையடியும்இலக, எட்டுக்
கரநிலவமணி, பலகை, வெண்டலைவாள்
கடிதுடிஏர்சூலம்ஏற்று,
வெருவமருத்துவனைஅடர்அகோரசிவன்.
என்றேதலபுராணம்இவரைவர்ணிக்கிறதுஎன்றால்அதிகம்சொல்வானேன். சிவபெருமானைநல்லசாந்தசொரூபியாய்அனுக்கிரஹமூர்த்தியாகத்தான்பலதலங்களிலும்பார்த்திருப்போம். சம்ஹாரமூர்த்தியாகஇருக்கும்போதுகூடமுகத்தில்ஆங்காரம்இருக்குமேதவிர, பயங்கரம்இருக்காது. சாதுமிரண்டால்என்னஆகும்என்றுகேள்விப்பட்டிருப்போம். ஆம்! இங்குசிவனாம்சாதுமிரண்டேஅகோரசிவனாகஇருக்கிறார். அந்தஅகோரசிவன்உருவானவரலாறுஇதுதான். மருத்துவன்என்றுஓர்அசுரன்இறைவனைநோக்கித்தவம்பண்ணி, வரபலமும்வலியுடையசூலாயுதத்தையுமேபெற்றவன். அவன்வழக்கம்போல்தேவர்களுக்குஇடுக்கண்செய்கிறான், தேவர்களோபயந்துதேவர்உலகைவிட்டேஓடிவந்துஇத்தலத்தில்வேற்றுருவத்தில்நின்றுதவஞ்செய்கிறார்கள். அங்கேயும்வந்துதுன்புறுத்தமுனைந்துவிடுகிறான்மருத்துவன். சிவபெருமானோமுதலில்சாந்தமாகமருத்துவனைத்துரத்திவிரட்டரிஷபதேவரையேஅனுப்புகிறார். ஆனால்அவனோசிவபிரானிடம்பெற்ற ‘சூலாயுதத்தினால்ரிஷபதேவரதுகொம்புகளைமுறித்து, காதுகளைஅறுத்துத்துரத்திவிடுகிறான். அவரும்வந்துமுறையிடபிறக்கிறதுகோபம்சிவனுக்கு. அந்தக்கோபமேஅகோரசிவனாகஉருஎடுக்கிறது. மருத்துவன்பேரில்பாய்கிறது; அவனைசம்ஹரிக்கிறது. அப்படிஉருவானஅகோரசிவமேகோயிலுக்குள்மேலப்பிராகாரத்தில்கம்பீரமாகநின்றுகொண்டிருக்கிறார். நல்லசிலைஉருவில், ஏன், உற்சவமூர்த்தமாகச்செப்புச்சிலைவடிவிலுங்கூடநிற்கிறார்.
இந்தஅகோரசிவனுக்குஇடப்பக்கம்உள்ளதாமிரசபையிலேஇருக்கிறார்நடராஜர்சிவகாமியுடன். சிதம்பரத்தில்உள்ளதுபோலவேரகசியம், சபைஎல்லாம்இங்கும்இருக்கிறது. இதுஆதிசிதம்பரம்அல்லவா? நடராஜதரிசனம்செய்தபின்வெளிப்பிராகாரத்துக்கேவரலாம். மேல்வாயிலில்உள்ளகூடகோபுரம்மிகவும்அழகானது. நல்லசுதைவேலைகள்நிரம்பஉடையது. இந்தவெளிப்பிராகாரத்தின்மேற்குக்கோடியிலேஅம்மைபிரம்மவித்தியாநாயகியின்கோயில். இந்தஅம்மையைவணங்கிவெளிவரும்போதுஅம்மைசந்நிதானத்துக்குவடபக்கம்உள்ளபுதனையுமேவணங்கிவிடலாம். இதன்பின்நூற்றுக்கால்மண்டபம்வரைநடந்துஅங்குள்ளஆறுமுகப்
அகோரசிவம்
பெருமானையும்தரிசிக்கலாம் , இவர்களைத்தவிரஇங்குகண்டுவணங்கவேண்டியவர்கள்தலவிநாயகரானபெரியவாரணப்பிள்ளையார், துண்டிவிநாயகர், காட்சிவிநாயகர், காசிவிசுவேசுரர்முதலியவர்கள்எத்தனையோஉண்டு. கோயிலைச்சுற்றும்போதேஇவர்களையும்தரிசித்துவணங்கிவிட்டுவெளியேவரலாம்.
இங்குவெண்காடர்வரப்பிரசித்திஉடையவர்என்பதைமுன்பேகாண்போம். மார்க்கண்டனைப்போல்எட்டுவயதிலேமரணம்என்றிருந்தசுவேதகேதுவுக்காக, யமனுடையவலிமைஅழித்துசுவேதகேதுவுக்குநித்யத்வம்வழங்கியவர்இவர்என்றும், பின்னார்வேதராசிஎன்றபிராமணனைப்பிடித்திருந்தபிரம்மஹத்திநீங்கவகைசெய்தவர்இவர்என்றும்தலவரலாறுகூறும். இவரைப்பூஜித்துஅருள்பெற்றவர்களோ, இந்திரன், ஐராவதம்முதலியோர். இவற்றைஎல்லாம்விரிக்கில்பெருகும். இக்கோயிலுக்குஞானசம்பந்தர்மாத்திரம்தான்வந்தார்என்றில்லை. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்எல்லோருமேவந்திருக்கிறார்கள். வெண்காடரைத்துதித்துப்பாடியிருக்கிறார்கள்.
தூண்டுசுடர்மேனித்தூநீறுஆடி, சூலம்கைஏந்திஓர்சுழல்வாய்நாகம்
பூண்டுபொறிஅரவம்காதில்பெய்து,
பொற்சடைகள்அவைதாழப்புரிவெண்நூலர்
நீண்டுகிடந்துஇலங்குதிங்கள்சூடி
நெடுந்தெருவேவந்துஎனதுநெஞ்சம்கொண்டார்வேண்டுநடைநடக்கும்வெள்ளேறுஏறி வெண்காடுமேவியவிகிர்தனாரே
என்பதுஅப்பர்தேவாரம். சுந்தரருக்கோஇந்தவெண்காடரைக்கண்டதும்சந்தேகத்தின்பேரில்சந்தேகம்எழுந்திருக்கிறது. ஆதலால்கேள்விமேல்கேள்வியாகப்போட்டுத்தள்ளிவிட்டார். ‘விடங்கராகித்திரிவதென்னே? விடைஏறித்திரிவதென்னே? விண்ணுளீராய்நிற்பதென்னே? விடம்மிடற்றில்வைத்ததென்ன?’ என்பதுஅவர்கேட்டகேள்விகளில்சில. இத்தனைகேள்விகளுக்கும்விடைபெறாமலாதிரும்பியிருப்பார்? ‘விருந்தினனாகிவெண்காடுஅதனில்குருந்தின்கீழ்அன்றிருந்தகொள்கையை‘ விளக்கினார்மணிவாசகர். பின்னர்பட்டினத்தார்என்றுபெயர்பெற்றவெண்காடர்இத்தலத்துக்குவந்துசிவபூஜைசெய்யும்பேறுபெற்றார்என்பதுவரலாறு.
இக்கோயிலின்சரித்திரஏடுகளைப்புரட்டினால்இன்னும்என்னஎன்னதகவல்கள்எல்லாமோகிடைக்கும். இக்கோயிலில்சுமார்எண்பதுகல்வெட்டுக்கள்இருக்கின்றன. ராஜராஜன், கங்கைகொண்டசோழன், ராஜாதிராஜன், முதற்குலோத்துங்கன், மூன்றாம்குலோத்துங்கன்முதலியசோழமன்னர்கள், சுந்தரபாண்டியன், குலசேகரபாண்டியன், விக்கிரமபாண்டியன்முதலியபாண்டியகல்வெட்டுக்களில்ஒருகல்வெட்டில் ‘வடகரைநாங்கூர்நாட்டு, நாங்கூர்ஸ்ரீதிருவெண்காடுஉடையதேவர்ஆலயம்‘ என்றுஇக்கோயில்குறிக்கப்பட்டிருக்கிறது. இந்தநாடுராஜாதிராஜவளநாடென்றுபெயர்பெற்றிருக்கிறது. சிலகல்வெட்டுக்கள்ஆடவல்லார், பிச்சதேவர், இடபவாகனதேவர்உருவங்களைப்பிரதிஷ்டைசெய்ததைஅறிவிக்கின்றன. சிலகல்வெட்டுகளிலிருந்துவளத்துவாழவிட்டான்சந்தி, குலசேகரர், தொண்டைமான்சந்திமுதலியகட்டளைகளின்பெயர்கள்புலப்படுகின்றன. ஆடரங்கம், ஆரியக்கூத்துநடந்ததையெல்லாம்இக்கல்வெட்டுக்கள்கூறும். இன்னும்எண்ணிறந்ததகவல்கள்சரித்திரஆராய்ச்சியாளர்க்குக்கிடைக்கும்.இத்தலத்துக்குச்சென்றுமுக்குளநீர்தோய்ந்தால்தோயாதுதீவினைகள்என்பர்சம்பந்தர், ஆனால்அப்பரோ ‘வெண்காடே, வெண்காடேஎன்பீராகில்வீடாதவல்வினைநோய்வீட்டலாமே’ என்றேகூறியிருக்கிறார். நாம்அப்பரோடுசேர்ந்து ‘வெண்காடா!’ என்றுகூவிஅழைத்துநம்வல்வினைகளைநீக்கிவீடுதிரும்பலாம்